/* up Facebook

Mar 17, 2017

"மாற்றத்திற்காக துணிக!" - மகளிர் தின உரைகள்


சர்­வ­தேச மகளிர் தினத்தை முன்­னிட்டு கொழும்புத் தமிழ்ச்­சங்­கத்தின் 671ஆவது  அறிவோர் ஒன்­று­கூ­டலின் மகளிர் தின நிகழ்­வாக கருத்­தாடல் நிகழ்­வொ­ன்று கடந்த  8ஆம் திகதி மாலை சங்­கத்தின் சங்­க­ரப்­பிள்ளை மண்­ட­பத்தில் இடம்­பெற்­றது. 

தமிழ்ச்­சங்­கத்தின் ஏற்­பாட்டில் இடம்­பெற்ற இந்­நி­கழ்­வுக்கு பொருத்­த­மான பெண் ஆளு­மையே தலைமை வகித்தார். ஆம்!கொழும்பு இரா­ம­நாதன் கல்­லூ­ரியின் அதிபர் திரு­மதி கோதை நகு­ல­ரா­ஜாவின் தலை­மையில்  இடம்­பெற்ற இந்­நி­கழ்வில், நிர்­வாகம்இ சட்டம், ஊடகம், அர­சியல் ஆகிய துறை­களைச் சேர்ந்த இளம் பெண் ஆளு­மைகள் இக்­க­ருத்­தா­டலில் கலந்து கொண்டு தமது கருத்­துக்­களை முன்­வைத்­து நிகழ்­வுக்கு சிறப்பு சேர்த்­தனர். சபை­யி­னரின் கருத்­துக்­களும் இவ்­வாறே அமைந்­தி­ருந்­தன என்­பதும் இங்கு குறிப்­பி­டத்­தக்­கது.

வழ­மை­போல மங்­கல விளக்­கேற்­ற­லுடன் ஆரம்­ப­மான இந்­நி­கழ்வு, சமூ­கத்தில் பெண்­களின் முக்­கி­யத்­துவம் தலை­மைத்­துவம் பற்­றியும் அவர்கள் ஒவ்­வொரு துறை­க­ளிலும் எவ்­வாறு தலை­சி­றந்து விளங்­கு­கி­றார்கள் என்­பது பற்றி நேரான(positive) கருத்துக்களை அதிபர் கோதை நகு­ல­ராஜா தனது தலை­மை­யு­ரையில்  முன்­வைத்தார். 

இவ்­வாண்டின் சர்­வ­தேச மகளிர் தின தொனிப்­பொ­ரு­ளா­னது 'மாற்­றத்­திற்­காக துணிக' என்­ப­தாகும். அத­னையே பிர­தான .தலைப்­பாக கொண்டு உப­பி­ரி­வாக நிர்­வாகம்,  சட்டம்,  ஊடகம், அர­சியல் ஆகிய துறைகள் பற்றி பேசப்­பட்­டது. 

தமிழ்ச்சங்க கவின் கலைக்குழுச்செயலாளர் திரு­மதி. பவானி முகுந்தன் நிர்­வாகம் தொடர்பில் உரை­யாற்­றி­ய­போது, 

ஒரு பெண் வேலைக்குச் செல்­ப­வ­ராயின் அவர் எவ்­வாறு தனது வேலைப் பளு­வுக்கு மத்­தியில் வீட்டு நிர்­வா­கத்தை பொறுப்­பேற்று நடத்திச் செல்­கின்றார். அலு­வ­லக கட­மை­களை ஒரு பெண் தலை­மையை ஏற்று அதன் மூலம் வரும் சிக்­கல்கள், சவால்கள் என்­ப­வற்றை எதிர்த்து நின்று போராடி எவ்­வாறு நிர்­வா­கத்தை முன்­னெ­டுத்துச் செல்­கின்றார் என்­பது பற்றி தனது அனு­பவத்­துடன் கூடி­ய­தான கருத்­துக்­களை முன்­வைத்தார். 

சட்­ட­த்த­ரணி எழில்­மொழி இரா­ஜ­கு­லேந்­திரா உரை­யாற்­று­கையில்,
பல்­வேறு தக­வல்­களை புள்­ள­வி­ப­ரத்­துடன் முன்­வைத்த இவர்,  சட்­டத்­து­றை­யிலே பெண்கள் 18ஆம் நூற்­றாண்டின் இறு­தியில் அல்­லது 19ஆம் நூற்­றாண்டின் ஆரம்­பத்தில் மிகுந்த போராட்­டத்­திற்கு மத்­தி­யிலே நுழைந்­தார்கள். ஆரம்­பத்தில் Person என்ற ஆங்­கில சொல்­லா­னது ஆண்­க­ளையே குறித்­தது. அக்­கா­லத்தில் கன­டாவைச் சேர்ந்த கிளாரா ரெட் மார்டின் என்ற பெண் சட்­டத்­திற்கு நுழைய எத்­த­னித்து சட்­ட­வாக்­கத்தில் Person  என்­பது பெண்­களை குறித்­து­ரைக்­க­வில்லை என தடுக்­கப்­பட்­ட­தனால் அதன் பின்­ன­ரான கனத்த போராட்­டத்தின் வழி­யாக உலகின் முதற் சட்­டத்­த­ர­ணி­யானார். 

இன்று பல்­க­லைக்­க­ழக சட்­ட­பீ­டத்­திலும், சட்­டக்­கல்­லூ­ரி­யிலும் தனியார் கல்வி நிறு­வ­னங்­க­ளிலும் சட்டம் கற்­ப­வர்­களில் 70 –80வீத­மா­ன­வர்கள் பெண்­க­ளாவர் எனினும் அவற்­றி­லி­ருந்து வெளி­யே­றிய பின்னர் சட்­டத்­த­ர­ணி­க­ளாக ஈடு­ப­டு­ப­வர்கள் மிகவும் குறைவு. உல­க­ளா­விய ரீதியில் பார்க்கும் போது கூட 50 வீத­மா­ன பெண்கள்­ சட்­டத்­த­ர­ணி­க­ளாக ஈடு­படும் நாடுகளைக் காண­மு­டி­ய­வில்லை. நீதி­ப­தி­க­ளாகச் செயற்­ப­டு­ப­வர்­க­ளிலும் அவ்­வா­றான நிலை­மையே உள்­ளது. இதற்­கான காரணம் என்­ன­வெனில் நீதி­ப­தி­யாக நிய­மனம் பெறு­வ­தற்கு அதி­க­ள­வான வழக்­கு­களில் தோற்­றிய சிரேஷ்ட வழக்­க­றி­ஞ­ராக இருக்க வேண்டும் என்ற தேவைப்­பா­டொன்று முக்­கி­ய­மா­ன­தாகும். அதனை பெண்கள் பூர்த்தி செய்­ப­வர்­க­ளாக இல்லை என்றே கருத வேண்­டி­யுள்­ளது. அவ்­வா­றா­ன­வர்கள் 5 வீதமே இலங்கை மற்றும் இந்­தி­யாவில் காணப்­ப­டு­கின்­றனர் இலங்­கையின் சட்­டத்­த­ர­ணிகள் சங்கம் 1972ஆம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்­டது. எனினும் இது­வ­ரையில் எந்த பெண்­களும் தலை­வர்­க­ளாக வர­வில்லை என்­ப­துடன் 30 பேரைக்­கொண்ட நிர்­வாக அங்­கத்­தி­ன­ராக 2 பெண்­களே உள்­ளனர். இதற்­கான காரணம் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்கு அவர்கள் முன்­வ­ர­வில்லை என்­பதே.  எனவே பெண்­களின் ஈடு­பா­டின்­மையே இதற்கு கார­ண­மாகும் . இலங்­கையில் இது­வ­ரையில் 45 நீதி­ய­ர­சர்கள் சேவை­யாற்­றி­யுள்­ளார்கள் எனினும் ஒரு­வரே பெண் நீதி­ய­ர­ச­ராக சேவை­யாற்­றி­யுள்ளார். 1801ஆம் ஆண்­டி­லி­ருந்து ஏறத்­தாழ இரண்டு நூற்­றாண்­டு­க­ளுக்கு ஒரு­வரே என்ற விகி­தத்தை கவ­னத்திற் கொள்ள வேண்டும். சர்­வ­தேச நீதி­மன்­றத்தில் கூட 7 வீதத்­திலும் குறை­வா­ன­வர்­களே பெண்­க­ளாவர்.

இந்­நிலை மாற வேண்­டு­மாக இருந்தால் பெண்கள் தம் ஒவ்­வொரு துறை­க­ளிலும் துணிந்து மாற்­றத்தை வேண்டி பய­ணிக்க வேண்டும். இதை இன்றே தொடங்­கு­தலும் வேண்டும்.

ஊட­க­வி­ய­லாளர் செல்வி: ஜீவா சதா­சிவம்  ஊடகம் தொடர்பில் உரை­யாற்­றி­ய­போது,

'மாற்­றத்­திற்காய் துணிவோம்'  என்­பதே இவ்­வ­ரு­டத்தின் தொனிப்­பொருள். அரு­மை­யான தொனிப்­பொருள். ஆனால்இ இந்த மாற்­றத்தை எத்­தனை பேர் விரும்­பு­கின்றனர். இந்த மாற்­றத்தின் மூலம் எத்­தனை பேர் தாம் வெற்­றி­ய­டைய ­வேண்டும் என்ற உத்­வே­கத்­துடன் இருக்­கின்றோம்  என்று ஆராய்ந்தால் மிகக்குறை­வான வீதமே பதி­லாக அமையும். 

பெண்கள் எத்­துறை சார்ந்­த­வ­ர்களாயினும் அவர்­களின் வளர்ச்­சிக்கு காலா­கா­ல­மாக  அச்சு, இலத்­தி­ர­னியல் ஊட­கங்­க­ளே­ த­மது முழு­மை­யான பங்­க­ளிப்­புக்­களை வழங்கி வரு­கின்­றன. 

 தொழில்­நுட்ப வளர்ச்­சியின் பின்னர்  மாற்­றத்தின் வேகம் பல தளங்­க­ளிலும் வியா­பித்­தி­ருப்­பதை அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக இருக்­கின்­றது. நீண்ட கால வர­லாற்றைக் கொண்ட அச்சு, இலத்­தி­ர­னியல் ஊட­கங்கள் கால மாற்­றத்­திற்­கேற்ப பெண்­களின் வளர்ச்­சிக்காக தமது  தொடர்ச்­சி­யான பங்­க­ளிப்பை வழங்கி வரு­கின்­றன.  

 பெண்­க­ளு­டைய வளர்ச்சி, அவர்­களின் அங்­கீ­காரம், கல்­வியில் மாற்றம்  பெண்­களை சமத்­துவ முறையில் உல­குக்கு அதா­வது சமூ­கத்துக்கு வெளிக்­கொ­ணரல்   தொழில் முறையில் மாற்றம் அதா­வது ஒரு தொழிற்று­றையில் தலை­மை ­தாங்­குதல் தீர்­மானம் எடுத்தல் எவ்­வாறு போன்ற பல­த­ரப்­பட்ட விட­யங்­களை முன்­னின்று பெண்­களை ஊக்­கு­விப்­பதில் ஊடகமே இன்று பிர­தான பங்­க­ளிப்பு செய்து வரு­கின்­றன. 

ஒரு பெண் ஊட­க­வி­ய­லா­ள­ராக  இருக்­க­வேண்­டு­மாயின் ஆர்வம்,  துணிச்சல்  இவ்­இ­ரண்­டையும் தன்­ன­கத்தே ஒருங்­கி­ணைத்து வைத்­தி­ருக்க வேண்டும். ஊட­கத்­திற்கு வெளியில் இருந்து அதனை விமர்­சிப்­பதை விட உள்­ளக செயற்­பா­டு­களில் ஈடு­படும் போது ஊட­க­வியல், ஊட­க­வி­ய­லா­ளர்­களின் தன்­மை­யையும் புரிந்து செயற்­பட முடியும். அதனை நான் எனது இந்த பத்து வருட காலப் பகு­தியில் அனு­ப­வித்­துள்ளேன் போன்ற பல கருத்­துக்­களை தன­து­ரையில் கூறினார்.

சட்­டத்­த­ரணி றொஷானி செந்­தில்­செல்வன் அர­சியல் பற்றி பேசி­ய­போது, 
 1931 ஆம் ஆண்டு இலங்­கையில் சர்­வ­ஜ­ன­வாக்­கு­ரிமை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட போது ஆண்­க­ளுக்கும் பெண்­க­ளுக்கும் ஒரே காலத்தில் வழங்­கப்­பட்­டது. ஆங்­கி­லே­யரின் கால­னித்­து­வத்தின் கீழ் இருந்த நாடு­களில் முதன்­மு­தலில் பெண்­க­ளுக்கு வாக்­கு­ரிமை வழங்­கப்­பட்ட நாடு என்­பதில் இலங்கை பெரு­மை­கொள்­கின்­றது. அக்­கா­ல­கட்­டத்தில் வளர்ச்­சி­ய­டைந்த நாடுகள் பல­வற்­றில் கூட பெண்­க­ளுக்கு வாக்­கு­ரிமை வழங்­கப்­ப­ட­வில்லை. இலங்கை நாட்டைப் பொறுத்­த­ளவில் அர­சி­யலில் பெண்­களின் பங்கு என்று பார்க்கும் போது உலகின் முதல் பெண்­ பி­ர­தமர் மற்றும் இலங்­கையின் முதல் பெண் ஜனா­தி­பதி என்ற வரை­ய­றைக்குள் நின்­று­விட்டோம். இவ்­வா­றான வர­லாற்று பாதைகள் இருந்­த­போ­திலும் அர­சி­ய­லுக்­கான சந்­தர்ப்­பத்தை பெண்கள் நழு­வ­விட்டுக் கொண்­டி­ருப்­பது தான் கவ­லைக்­கு­ரிய விட­ய­மாகும். தற்­போது இலங்கைப் பாரா­ளு­மன்­றத்தில் பெண்­ பி­ர­தி­நி­தித்­து­வத்தின் விகி­தா­சா­ர­மா­னது 5.77 சத­வீ­த­மாகக் காணப்­ப­டு­கின்­றது.

அரிசி - இயல்  இணைந்த அர­சி­யலில் பெண்­க­ளுக்கு என்ன பங்கு?; பெண்­களால் அர­சி­யலில் எந்­த­ள­வுக்கு சாதிக்க முடியும்? நீண்ட காலத்­திற்கு அர­சி­யலில் நிலைக்க முடி­யுமா? பல கேள்­விகள் தலை­தூக்­கு­கின்­றன. இலங்­கையில் பெண்கள் அர­சி­யலில் போது­மான பங்­க­ளிப்பை செய்­வ­தற்­கான சூழ்­நிலை இன்­னமும் பல­வீ­ன­மா­கவே காணப்­ப­டு­கின்­றது. கார­ணங்­களை தேட முற்­பட்டால் அர­சியல் கட்­ட­மைப்பு என்­பது இன்­னமும் ஆணா­திக்­கத்தால் சூழப்­பட்ட ஒன்­றாக இருப்­ப­துடன் இலங்கை குடும்ப பின்­ன­ணிகள் இன்றும் பெண்­களை வீட்டை நிர்­வ­கிப்­ப­தற்­கான  ஒரு­வ­ராக மாத்­தி­ரமே அடை­யாளம் கண்­டு­கொள்­கின்­றது.பெண்கள் வீட்டைச் சார்ந்தே சிந்­திக்­கப்­பட வேண்டும் எனவும் மர­புகள் மற்றும் கலா­சா­ரத்தின் பாது­கா­வ­லர்­க­ளாக இருக்க வேண்டும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றார்கள். இங்கு தான் மாற்­றத்­திற்­கான துணிச்­சலின் தொழிற்­பாடு தேவைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது.

எதிர்­வரும் காலங்­களில் அர­சி­ய­லுக்கு மாபெரும் பலத்தை சேர்க்க வேண்டும். பெண்­ அ­ர­சியல் தலை­மைத்­து­வங்கள் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­ட­வேண்­டிய கட்­டாய தேவைப்­பாட்­டிற்கு மூன்றாம் உல­க­நா­டுகள் தற்­போது தள்­ளப்­பட்­டுள்­ளன. அர­சி­யலில் வெற்றி என்­பது தன்­னிலை அறிந்து செயற்­ப­டு­வ­தாகும் போன்ற காத்­தி­ர­மான பல கருத்­துக்­களை முன்வைத்தார். 

இறுதியாக தலைவர் தனது கருத்துக் களை இவ்வாறு முன்வைத்தார். பொதுவாக மகளிர் தினம். என்றால் பெண்ணியத்துடன் தொடர்பு பட்டவர்களே தமது கருத்துக்களை முன்வைப்பார்கள். ஆனால், இங்கு வந்திருக் கின்ற நாம் ஐவரும் அவ்வாறானவர்கள் அல்ல.

அத்துடன் உலக நாடுகளில் உள்ள சில பெண் ஆளுமைகள் மற்றும் தனது அனுபவங்களையும் தான் ஒரு பெண்ணாக இருந்து எவ்வாறு பல விடயங்களில்  வெற்றிக்கொண் டார் என்பதையும் இதன்போது தெரிவித்தார். அது மட்டுமல்ல கருத்துரையாற்றிவர்களுக்கு வாழ்த்துக்க ளையும் இதன்போது  கூறி தனது கருத்துக்களை நிறைவு செய்துக்கொண்டார். 

பெண்களுக்காகவே நடத்தப்பட்ட இந்நிகழ் வில்,  சுமார் 35 பெண்கள் மாத்திரமே மண்டபத் தில் கூடியிருந்தனர். இது மாத்திரமே மனம் வருந்ததத்தக்க விடயம். இவ்வாறான நிலையில் ஐ.நா. வின் மாற்றத்திற்காக துணிக... என்ற தொனிப்பொருள் எவ்வாறு சாத்தியப்படும்...?

சங்க கீதத்துடன் விழா இனிதே நிறைவு பெற்றது. 

தொகுப்பு : 
திருமதி. மகேஸ்வரி விஜயானந்தன்
படப்பிடிப்பு ஏ.கே.விஜயபாலன். 

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்