/* up Facebook

Sep 7, 2016

பெண்கள் பற்றிய‌ இந்த 7 புத்தகங்களை அவசியம் வாசிப்போம்!


1. ஐ நோ வொய் தி கேஜ்டு பேர்ட் சிங்ஸ் (I Know Why The Caged Bird Sings)மாயா ஏன்ஜெலோவின் புகழ்பெற்ற புத்தகம் இது. சிறு வயதில் மாயாவின் தாய் அவரையும் அவர் சகோதரனையும் அவர்களுடைய பாட்டி வீட்டில் வளர அனுப்பிவைக்கிறார். எட்டு வயதில் மீண்டும் தன் அன்னையிடமே வந்து சேரும் மாயா, அப்போது தான் அனுபவித்த துயரங்கள், சென் ஃபிரான்சிஸ்கோவில் அன்பு, கருணை, தன்னம்பிக்கை மிக்கவளாக தன்னை காலம் உருவாக்கிய பயணம் போன்றவற்றை உருக்கமாக எழுதிய புத்தகம், ‘ஐ நோ வொய் த கேஜ்டு பேர்ட் சிங்ஸ்’. பெண்களுக்கு தன்னம்பிக்கை தரும் படைப்பு இது!


2. ஏ ட்ரீ குரோஸ் இன் ப்ரூக்லின் (A Tree Grows in Brooklyn)1943ல் இந்த நூலை எழுதினார் பெட்டி ஸ்மித். இன்றும் இது கொண்டாடப்படக் காரணம், அதில் உள்ள ஜீவன். இதன் நாயகி, புரூக்லினில் உள்ள வில்லியம்ஸ்பர்க்கின் சேரிகளில் வாழும் உணர்ச்சியும் சிந்தனையும் மிகுந்த சுட்டிப் பெண் பிரான்சி நோலன். அந்த இளம் பெண் வாழ்க்கையின் இனிப்பு, கசப்பான வருடங்களை, பல தடைகளைத் தாண்டி மரமாக வளர்ந்த அவளின் கதையைக் கூறும் இந்தப் புத்தகம், விடாமுயற்சியின் தேவையை, தான் ஒரு தூண்டுகோலாகி படிப்பவர்களின் மனதில் பதிக்கிறது!

3. ஹர் (Her)

ஒட்டிப் பிறந்த இரட்டையர்களின் கதை, ‘ஹெர்’. இருவரும் வறுமையில் இருந்து மீண்டு தங்களுக்கான பதையை தேடிக்கொண்டவர்கள். அந்நிலையில் தன் உடன்பிறப்பை இழக்கிறார் இந்நூலின் ஆசிரியர் கிரிஸ்டா பர்ரவானி. ‘இரட்டையர்களில் ஒருவர் இறந்துவிட்டால் மற்றவர் இரண்டு வருடங்களிலேயே இறந்துவிட 50% வாய்ப்புள்ளது’ என்று ஒரு தகவல் கிரிஸ்டாவுக்குத் தெரியவருகிறது.  அவரின் அடுத்தடுத்த நாட்கள் வாழ்வா, சாவா போராட்டத்துக்குத் தள்ளப்படுகிறது. அந்தச் சூழலில், தன் உடன்பிறப்பின் பிரிவைத் தாங்கமுடியாமல் தன் நினைவுகளையும், ஒரு பெண்ணின் அன்பு, ஏக்கம் என்னவென்றும் நெஞ்சை பிளக்கக்கூடிய பதிவாக கிரிஸ்டா தீட்டிய புத்தகம், ‘ஹெர்’.

4. ஐ எம் மலாலா ((I am Malala: The story of the Girl who stood for Education and wasshoot by Taliban)


தாலிபான்கள் பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கை ஆக்கிரமித்தபோது, ஒரு பெண் அதை எதிர்த்துக் குரல் கொடுத்தாள். அதற்காக குண்டுகளைப் பரிசாகப் பெற்றாள். அதில் இருந்து மீண்டு, மீண்டும் குரல் கொடுத்தாள். அந்தக் குரல் அவளை பள்ளத்தாக்கில் இருந்து ஐ.நா சபைக்கே அழைத்துச்சென்றது. அவர்தான் மாலா யூசுப். அவரின் இந்த போராட்டக் கதையை, பல பெண்களுக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் மாலாலா எழுதிய புத்தகம்தான், ‘ஐ எம் மலாலா’!

5. தி கான்ஃபிடன்ஸ் கோடு (The Confidence Code)


கட்டி கே மற்றும் க்லைரெ ஷிவ்மன் எழுதிய புத்தகம், தி கான்ஃபிடன்ஸ் கோடு. ஆண்கள் ஆளும் இடத்தில் இருப்பதற்கும், பெண்கள் ஏன் அந்த இடத்தில் இல்லை என்பதையும் காரசாரமாக விவாதிக்கும் புத்தகம் இது. நுணுக்கமன பல ஆய்வுகள்-, பாலினம், மரபியல் என பல தளங்களில், தங்கள் சொந்த வாழ்வு எடுத்துக்காட்டுகளை கூறியுள்ளனர் நூலின் ஆசிரியர்கள். இறுதியில், நம்பிக்கையே பெண்களை ஆண்களுக்கு நிகராக மாற்றும் சக்தி என்று சொல்லி கைகுலுக்குகிறது இந்நூல்.

6. டைனி பியூட்டிஃபுல் திங்ஸ் (Tiny Beautiful Things)


செரில் ஸ்ட்ரேயடின் இந்நூல், படிப்பவர்களின் வெறுமையைப் போக்கும் வலிமையான பதிவு. ‘உன் வாழ்வில் என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம். நீ அன்பு வைத்தவர்கள் ஏமாற்றியிருக்கலாம். உன் குடும்பத்தினரை நீ இழந்திருக்கலாம். பல துயரங்களைச் சந்தித்திருக்கலாம். எனில், இந்தப் புத்தகம் உனக்குத்தான்’ என்னும் செரில், இந்தப் புத்தகத்தை ‘டியர் சுகர்’ என்ற பெயரில் தான் தரும் அறிவுரைகளின் தொகுப்பாகக் கொடுத்திருக்கிறார்!

7.தி பெல் ஜார் (The Bell Jar)

புகழ்பெற்ற அமெரிக்க கவிஞர் சில்வியா ப்ளாத் எழுதிய ஒரே நாவல், ‘தி பெல் ஜார்’. மிகவும் அதிர்ச்சிகரமான, உண்மைத்தன்மை கொண்ட, உணர்ச்சி பொங்கக்கூடிய ஒரு புத்தகம். பிளாத்தின் மன அழுத்தத்தின் பதிவாக இருக்கும் இந்நூல், வாழ்வின் கருப்புச் சுவையை படிக்கத் தருகிறது. இது 12 மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்

“ஜனநாயக றெக்கை... ஒடிக்கும் ஜெ!” . பச்சமுத்து கரன்சி தந்தையான கதை . “அப்பா, எனக்கு எப்பவுமே ஆச்சர்யம்தான்!” . அயனாவரம் பிளாட்பாரம் டு லண்டன்!

நன்றி - விகடன் 

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்