/* up Facebook

Dec 9, 2016

ஜெயலலிதாவின் மனங்கவர்ந்த நாவல் இதுதான்!‘சந்தியாவின் மகளாய் பிறந்தார்... இந்தியாவின் மகளாய் மறைந்தார்’ என்ற வைரமுத்துவின் வைர வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்து மறைந்தவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா. அவர், மறைந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டபோதிலும்... அவர் செயல்படுத்திய திட்டங்களும், சாதனைகளும் என்றும் மக்கள் மனதைவிட்டு அகலாதவை. அவர், திரை மற்றும் அரசியல் வாழ்க்கையில் மட்டும் கோலோச்சவில்லை. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் என ஐந்து மொழிகளிலும் புலமை வாய்ந்த பெண்மணியாக ஜொலித்த ஜெயலலிதாவுக்கு எழுத்துகள் என்றால் உயிர். தன்னுடைய சிறு வயதிலேயே ஆங்கிலப் புத்தகங்களை அதிகம் புத்தகம் படித்தவர் அவர். இலக்கியத்தின் மீதும், எழுத்துகளின் மீதும் தீராக் காதல் கொண்டிருந்த ஜெ-வின் இன்னொரு பயணம்தான் இந்தக் கட்டுரை. 


‘‘அது வெறும் இலக்கியப் படைப்பு அல்ல!''

சென்னையில் பள்ளியில் படிக்கும்போதே ஜெயலலிதா ஆங்கில காமிக்ஸ் புத்தகங்களை அதிகம் விரும்பிப் படித்தார். தன் மகள் படிப்பதற்காக தாய் சந்தியா ஏராளமான ஆங்கில காமிக்ஸ் புத்தகங்களை வாங்கிக் கொடுப்பார். ஒரே மூச்சில் பல காமிக்ஸ் புத்தகங்களைப் படிக்கும் ஆர்வம் அவருக்கு இருந்தது. தமிழில் வெளியான மூதறிஞர் ராஜாஜி எழுதிய, ‘சக்கரவர்த்தி திருமகன்’ நாவலை அவர் படித்தார். ஜெயலலிதாவுக்குப் பிடித்த இலக்கிய நூல் மகாபாரதம். அதுகுறித்து அவர், ‘‘அது வெறும் இலக்கியப் படைப்பு அல்ல; வாழ்க்கை முறையினை எவ்வாறு அமைத்துக்கொள்ள வேண்டுமென்று உணர்த்தும், வழிகாட்டும் அருள்வாக்கு. பண்பாடு, கலாசாரம், சமூகவியல், அரசியல், யுத்த சாஸ்திரம் உள்பட அனைத்து சாஸ்திர அம்சங்களையும் உள்ளடக்கிய முழுமையான வாழ்க்கைக்குத் தேவையான பொக்கிஷம் அது’’ என்று ஒருமுறை கருத்துத் தெரிவித்திருந்தார்.

ஜெ-வை மிகவும் கவர்ந்த நாவல்!

படப்பிடிப்புத் தளத்தில் ஒரு ஷாட் முடிந்து இன்னொரு ஷாட்டுக்கு தயாராகும் முன்பு, ஆங்கில நாவல்களுடன் மூழ்கியிருப்பார். சார்லன்ஸ் டிக்கன்ஸ், ஜேன் ஆஸ்டேன், ஷிட்னி ஷெல்டன் போன்ற ஆங்கில எழுத்தாளர்கள் எழுதிய நாவல்களை ஜெயலலிதா விரும்பிப் படிப்பார். நாவல்களைப் போலவே கவிதைகளைப் படிப்பதிலும் அவர் ஆர்வம் கொண்டிருந்தார். கவிஞர் சாமர்ஸெட்டின் கவிதைகளையும் விரும்பிப் படிப்பார். படப்பிடிப்புத் தளத்தில் ஒரு நிமிடத்தைக்கூட வீணடிக்கமாட்டார். ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் ஏதாவது ஓர் ஆங்கில நாவலைப் படிக்க ஆரம்பித்துவிடுவார். ‘1960-70-ம் ஆண்டுகளில் அவ்வப்போது வெளிவந்த ஆங்கில நாவல்களைப் படிக்கும் ஒருசில திரை நட்சத்திரங்களில் ஜெயலலிதாவும் ஒருவர். அன்றைய சமயத்தில், ஆங்கிலத்தில் வெளியான திரில்லர், சமூகம், குடும்ப உறவுகள் கலந்த உணர்வு சம்பந்தமான நாவல்களை அதிகம் விரும்பிப் படித்தார். ‘‘புகழ்பெற்ற ஆங்கில நாவலாசிரியரான ஜங் சாங் (jung chang) எழுதிய ‘வைல்டு ஸ்வான்ஸ்: த்ரி டாட்டர்ஸ் ஆஃப் சைனா’ (Wild Swans: Three Daughters of china) என்கிற நாவல்தான் தன்னை மிகவும் கவர்ந்தவைகளில் ஒன்று’’ என ஓர் இதழுக்குப் பேட்டியளித்திருந்தார் ஜெயலலிதா. போயஸ் கார்டனில் உள்ள அவருடைய வீட்டில் ஒரு பெரிய நூலகம் இருக்கிறது. அதில், பெரும்பாலான புத்தகங்கள் எல்லாமே நாவல்கள்தான். அதிலும் ஆங்கில நாவல்கள்தான் அதிகம். அதேபோன்று, கொடநாடு எஸ்டேட்டிலும் ஒரு பெரிய நூலகம் உள்ளது. ஆரம்ப காலத்தில் ஹிக்கின்பாதம்ஸ் போன்ற பெரிய புத்தகக் கடைகளுக்குச் சென்று தனக்கு வேண்டிய ஆங்கில நாவல்களை வாங்கிவந்திருக்கிறார் ஜெயலலிதா.‘‘அழகாக இருக்கும் பெண்கள் புத்திசாலியாக இருக்கமாட்டார்கள்!'' 

ஒருமுறை ஊட்டியில் உள்ள ஹிக்கின்பாதம்ஸுக்கு, ஜெயலலிதாவே நேரில் சென்று புத்தகங்கள் வாங்கிய நினைவலைகளை அந்த நிறுவனத்தாரிடம் பேட்டியெடுத்து ஒரு பத்திரிகை வெளியிட்டது. அவருடைய காரில் உடைகள், பொருட்கள் போன்றவற்றோடு புத்தகங்களும் அதிகம் இருக்கும். ‘‘தன்னை மிகவும் கவர்ந்த எழுத்தாளர்களில் குஷ்வந்த் சிங்கும் ஒருவர்’’ என்று ஜெயலலிதா ஒருமுறை கூறியிருந்தார். 1992-ம் ஆண்டில் சட்டசபை நடவடிக்கைகளை விமர்சித்த ‘இல்லஸ்ட்ரேட்டேட் வீக்லி’ (illustrated weekly) இதழ் குறித்து பேரவையில் பேசிய ஜெயலலிதா, ‘‘ ‘இல்லஸ்ட்ரேட்டேட் வீக்லி’ இதழில் குஷ்வந்த் சிங் பணியாற்றிய வரை தரமானதாக இருந்தது. தற்போது தரம் குறைந்துள்ளதாக எண்ணுகிறேன்’’ என்று விமர்சனம் செய்தார். ஜெயலலிதா எம்.பி-யாக இருந்த காலத்தில் எழுத்தாளர் குஷ்வந்த் சிங்கும் ராஜ்யசபா எம்.பி-யாக இருந்தார். அவர், ‘‘அழகாக இருக்கும் பெண்கள் புத்திசாலியாக இருக்கமாட்டார்கள் என நினைத்தேன். ஆனால், உங்களைப் (ஜெயலலிதாவை) பார்த்தவுடன் அந்தக் கருத்தை மாற்றிக்கொண்டேன்’’ என்று சொன்னது குறிப்பிடத்தக்கது.

எழுத்துகள் உயிரானவை! 

ஜெயலலிதா எழுத்தாளராகவும் கோலோச்சினார். ‘துக்ளக்’ இதழில், ஜெயலலிதா எழுதிய கட்டுரைகளுக்கு வாசகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு. ஆரம்பத்தில் தமிழ்நாட்டு அரசியல் பற்றி கட்டுரையை எழுதத் தொடங்கி, பின்னர் இந்திய அரசியல், சர்வதேச விவகாரங்கள் என அனைத்து விஷயங்கள் குறித்தும் எழுத ஆரம்பித்தார். ‘இந்திய மருத்துவர்களின் அலட்சியம்’, ‘கர்ப்பிணிகளுக்கான இத்தாலிய சட்டம்’, ‘ஜோஸ்யத்தின் சாத்தியம்’ என அவர் ஆழமான கட்டுரைகள் எழுதினார். இது தவிர, ‘குமுதம்’ வார இதழிலும் எழுத ஆரம்பித்தார். ‘தாய்’ பத்திரிகையில், ‘எனக்குப் பிடித்தவை’ என்ற தலைப்பில் வாரம் ஒரு கட்டுரை, ஓராண்டு காலம் எழுதினார். தாய் இதழின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவராக ஜெயலலிதா இருந்தார். ‘பொம்மை’ இதழில் ‘அழகுக்கலை’ பற்றி எழுதினார். 1980-ம் ஆண்டு ‘கல்கி’ இதழில், ‘உறவின் கைதிகள்’ என்ற தொடரை எழுதினார்.

நன்றி - விகடன் 

...மேலும்

Dec 2, 2016

100 பொருட்கள் வாயிலாக பெண்கள் வரலாறு
பொருள் 5: சோளக் கடவுள் கடைசி பனியுகம் முடிவுக்கு வந்துகொண்டிருந்தபோது மனித குலம் ஒரு மாபெரும் சவாலைச் சந்திக்க நேர்ந்தது. திரும்பும் திசையெல்லாம் பனிப் பாலைவனம் மட்டுமே பரவி கிடந்தது. கிளேசியர் எனப்படும் உறைபனிப் படலங்கள் நகர்ந்தும் இடம்பெயர்ந்தும் அச்சுறுத்திக் கொண்டிருந்தன. பிறகு அது உருகத் தொடங்கியபோது தண்ணீர் கடலை நோக்கி விரைந்தது. ஒரு கட்டத்தில் கடல் வழியத் தொடங்கியபோது மேய்ச்சல் நிலங்களும் வனப்பிரதேசங்களும் மூழ்க ஆரம்பித்தன. 

இந்தக் காலகட்டத்தில் மட்டும் 30 உயிரினங்கள் அழிந்துபோயின என்கிறார்கள் ஆய்வாளர்கள். இந்த அழிவில் மனிதர்களுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. வழக்கமாக வேட்டையாடும் விலங்குகள் கிடைக்காத நிலையில் மனிதர்கள் வெவ்வேறு புதிய உயிரினங்களை கொன்று தின்னத் தொடங்கியதன் விளைவு தான் இது. வாழ்விடங்கள் அருகி வந்ததால் மனிதர்கள் நெருக்கியடித்து வாழத் தொடங்கினர். வரலாற்றில் முதல் முறையாக உணவுப் பஞ்சம் மிகப்பெரிய அளவில் தலைதூக்கியது. 

மனிதர்கள் விலங்குகளை வேட்டையாடி அழித்ததைப் போல இயற்கை மனிதர்களை வேட்டையாடத் தொடங்கியது. இது நடந்தது சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு. ஆனால், இயற்கையின் இந்த முயற்சி வெற்றிபெறவில்லை என்பதற்கு நாமெல்லாம் வாழும் உதாரணங்கள். இந்த வெற்றி எப்படிச் சாத்தியமானது? மருத்துவரும் பேராசிரியருமான அஜய் கன்சால் தனது சமீபத்திய நூலில் (தி எவல்யூஷன் ஆஃப் காட்ஸ்) இதனை விவாதித்துள்ளார். கிடைக்கும் மிருகங்களையெல்லாம் கொன்று தின்றுவிட்ட நிலையில் மேற்கொண்டு வேட்டையாட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட ஆண்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தபோது பெண்களே முன்வந்து உணவுப் பஞ்சத்துக்கு ஒரு தீர்வைக் கண்டுபிடித்தார்கள் என்கிறார் அஜய் கன்சால். எப்படி?

ஆண்களும் பெண்களுமாக கும்பல் கும்பலாக உணவு சேகரிக்க காட்டுப் பகுதிக்குச் செல்கின்றனர். நிறைய செடிகளும் கொடிகளும் மரங்களும் படர்ந்திருக்கின்றன என்றாலும், உண்பதற்கு ஏற்ற கனிகளோ காய்களோ கிடைக்கவில்லை. சோகமாக அவர்கள் ஒவ்வொரு நாளும் வீடு திரும்புகின்றனர். கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண் வீட்டிலேயே ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். ஒரு நாள் அவளுக்குக் குழந்தை பிறக்கிறது. படுத்த படுக்கையாக மாறிவிடும் அந்தப் பெண் தான் உண்டது போக மிச்சமுள்ள அல்லது உபயோகமற்ற உணவுப் பொருட்களை குப்பைமேட்டில் வீசியெறிகிறாள். மழை பெய்கிறது. குப்பையும் வளர்கிறது.


ஒரு மாத காலத்துக்குப் பிறகு அந்தப் பெண் உடல் வலு பெற்று தன் வீட்டைவிட்டு வெளியில் வருகிறாள். குப்பைமேட்டைப் பார்த்து ஆச்சரியப்படுகிறாள். அவள் இடுப்பு உயரத்துக்கு சோளங்கள் முளைத்து செழித்திருந்தன. குப்பையோடு குப்பையாக சோளங்களையும் அங்கே தூக்கியெறிந்தது அவள் நினைவுக்கு வருகிறது. உடனே அவள் கூவினாள். ‘யுரேகா! யுரேகா! ஒரு செடியை வளர்க்கும் முறையை நான் கண்டு பிடித்துவிட்டேன்!’ 

விரைவில் பெண்கள் தங்கள் குடியிருப்புக்கு அருகிலுள்ள பகுதிகளில் செடிகளை வளர்க்கத் தொடங்கினார்கள். உண்பதற்கு ஏற்ற தானியங்களை அவர்கள் பரிசோதனை முறையில் கண்டுபிடித்து விதைக்கத் தொடங்கினார்கள். ஆண்கள் வேட்டையில் பொழுதைக் கழித்த நேரங்களில் பெண்கள் இயற்கையை ஆழ்ந்து கற்கத் தொடங்கினர். குழு உறுப்பினர்களின், குழந்தைகளின் உணவுத் தேவையை நிறைவேற்றும் பொறுப்பையே பெண்கள் ஏற்றிருந்தனர் என்பதால், உணவுப் பஞ்சத்தைப் போக்கும் வழியை ஆராய ஆண்களைக் காட்டிலும் பெண்களே தீவிரமாக இருந்தனர். 

இயற்கையின் மர்மத்தை அவர்களாலேயே நுணுக்கமாகப் புரிந்துகொள்ள முடிந்தது. இது வெறுமனே கற்பனைக் கதை அல்ல. சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அநேகமாக அனைவரும் காட்டுணவை மையமாகக் கொண்டே வாழ்ந்ததற்கும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அனைவரும் விவசாயிகளாக மாறியதற்கும் ஆதாரங்கள் உள்ளன என்கிறார் டாக்டர் மார்க் நான் கொஹேன். இந்தப் புரட்சிகரமான மாற்றத்தை நிகழ்த்தியவர்கள் பெண்கள். செடி, கொடிகளை வளர்ப்பதில் பெண்களின் பங்கு தீர்மானகரமானது என்கிறார் அறிஞர் மிர்சியா எலியாத். இவர் மட்டுமல்ல... பெண்களே விவசாயத்தின் முன்னோடி கள் என்பதைப் பல ஆய்வாளர்கள் 
ஒப்புக்கொள்கின்றனர்.

பெரும்பாலும் ஒரு விபத்து போலவே விவசாயம் நிகழ்ந்திருக்க வேண்டும். குழந்தை பிறப்பின்போது பெண்கள் நகர முடியாத நிலையில் இருந்ததால், செடிகளின் வளர்ச்சியை நிதானமாகவும் உன்னிப்பாகவும் ஓரிடத்தில் இருந்தபடி அவர்களால் ஆராய முடிந்தது. இதனால் வாழ்க்கை முறையிலேயே கூட அடிப்படை மாற்றங்கள் நிகழ்ந்தன. குழந்தை பிறப்பு, குழந்தை வளர்ப்பு இரண்டுக்கும் நிரந்தரக் குடியிருப்பு அவசியமாக இருந்ததால், நாடோடி வாழ்க்கை முறையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. மனிதர்கள் நிரந்தரக் குடியிருப்புகளை நாடத் தொடங்கினார்கள். 

இந்த மாற்றம் விவசாய வளர்ச்சியை அதிகப்படுத்தியது. நிலையாக ஓரிடத்தில் குவிந்த குழுக்கள் தங்கள் குடியிருப்புகளுக்கு அருகில் பயிரிடத் தொடங்கினார்கள். ஒரு சில இடங்களில் அல்ல... உலகின் தொன்மையான நாகரிகங்கள் பலவற்றிலும் இந்த வழக்கமே நிலவியது என்கிறார்கள் தொல்லியல் ஆய்வாளர்கள். மனித குலத்தை பஞ்சத்திலிருந்தும் அழிவிலிருந்தும் மீட்டெடுத்த பெண்களை அப்போதைய சமூகம் கடவுளாகவே ஏற்று, மதித்துக் கொண்டாடியது. மெக்சிகோவின் மையப் பகுதியில் 15 முதல் 16ம் நூற்றாண்டு வரை உயிர்த்திருந்த ஆஸ்டெக் நாகரிகத்தில் பல பெண் கடவுள்கள் இடம்பெற்றிருந்தனர். 

சிகோமெகோடல் அவர்களில் ஒருவர். ஊட்டச்சத்தின் தாய் என்னும் அடைமொழியுடன் இவர் அழைக்கப்பட்டார். சிகோமெகோடலை வழிபட்டால் அனைவருக்கும் சத்தான நல்ல உணவு கிடைக்கும் என்று ஆஸ்டெக் மக்கள் நம்பினர். சோளமே அவர்களுடைய பிரதான உணவாக இருந்தது என்பதால் தங்களுக்கு உணவு வழங்கும் கடவுளை அவர்கள் சோளத்தின் அவதாரமாகவே கண்டனர். நமக்குக் கிடைத்திருக்கும் உருவப் படங்களைப் பார்வையிட்டால் சோளங்களே சிகோமெகோடலின் காதுகளாக அமைந்திருப்பதைக் காண 
முடிகிறது.

மாயன் நாகரிக மக்களுக்கும் சோளமே முக்கிய உணவு என்பதால், அவர்களுடைய கடவுளும் ஒரு பெண்ணாகவே இருக்கிறார். அவர்களுடைய 16ம் நூற்றாண்டு இதிகாசங்களை எடுத்துப் பார்த்தால் ஆண்கள் சோளங்களில் இருந்து உதித்தவர்கள் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, ஆண்கள் பெண்களிடம் இருந்தே உருவாகிறார்கள். பெண்கள் சோளத்தின் குறியீடு என்பதால் மனிதர்கள் அனைவருமே சோளத்தின் குழந்தைகளே.

சிகோமெகோடலுக்குப் போட்டியாக செண்டியோல் என்னும் பெயரில் ஆஸ்டெக் மக்கள் ஓர் ஆண் கடவுளை உருவாக்கி வழிபட்டனர். அந்தக் கடவுளுக்கு ஒவ்வோராண்டும் ரத்த பலியெல்லாம் கொடுக்கப்பட்டது. ஆனால், பெண் சோளக் கடவுள்களுக்கு இணையாக ஆண்களால் புகழ்பெற முடியவில்லை. எண்ணிக்கையிலும்கூட ஆண் சோளக் கடவுள்கள் சொற்பமானவர்கள்தாம். சுனி என்னும் பழங்குடி அமெரிக்கர்களின் புராணத்தில் குறிப்பிடத்தக்கவர்கள், எட்டு சோளக் கன்னிகள். 

இவர்கள் நம் கண்களுக்குத் தெரியமாட்டார்கள். ஆனால், இவர்களுடைய அழகான நடனத்தைக் காண முடியும். காற்றில் அசைந்தாடும் சோளக் கதிர்களை உன்னிப்பாகப் பார்த்தால் இந்த எட்டு கன்னிகளும் தென்படுவார்கள். காற்றின் அசைவுக்கேற்ப, சோளக் கதிர்களோடு சேர்ந்து இவர்கள் ஆடுவதை நீங்கள் காணலாம். பிறகு என்ன நடந்ததென்றால், அதே ஊரைச் சேர்ந்த இளம் கடவுள் ஒருவர் இந்த எட்டு பேர்மீதும் ஒரே நேரத்தில் காதல் வயப்பட்டார். இது தெரிந்ததும் கன்னிகள் அங்கிருந்து வெளியேறிவிட்டனர். அவர்கள் வெளியேறிவிட்டதால் நடனம் நின்றுவிட்டது. 

நடனம் நின்றுவிட்டதால் சோளங்கள் விளையவில்லை. பஞ்சமும் பசியும் பெருகத் தொடங்கின. உடனே இளம் கடவுள் ஓடிச் சென்று கையில் காலில் விழுந்து எட்டு கன்னிகளையும் மீண்டும் அழைத்து வந்தார். பழையபடி சோளங்கள் விளையத் தொடங்கின. பயிர்கள் விளைவதற்குக் காரணம் டெமெட்டர் என்னும் பெண் தெய்வம்தான் என்பது பண்டைய கிரேக்கர்களின் நம்பிக்கை. அதனால் நன்றிக்கடன் செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அறுவடைக்குப் பிறகு தயாரிக்கப்படும் ரொட்டியில்  முதலாவதை பயபக்தியுடன் டெமெட்டருக்குப் படைத்துவிடுவார்கள்.

ஒருநாள் ஹேட்ஸ்  என்னும் பாதாளக் கடவுள் டெமெட்டரின் மகள் பெர்சிபோனைக் கடத்திச் சென்று தன் மனைவியாக்கிக் கொண்டுவிடுகிறார். கோபம் கொண்ட டெமெட்டர் உலகைச் சபிக்கிறார். செடி கொடிகள் பட்டுப்போகின்றன. நிலம் காய்ந்துவிடுகிறது. உடனே வான் கடவுளான ஜீயஸ் களத்தில் இறங்கி ஹேட்ஸுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்குகிறார். டெமெட்டரின் மகளைத் திருப்பியனுப்ப ஹேட்ஸ் சம்மதிக்கிறார் என்றாலும், ஒரு சிக்கல் முளைக்கிறது. பாதாள உலகில் இருந்தவரை பெர்சிபோன் அங்குள்ள உணவைத்தான் உண்டிருக்கிறார் என்பதால், அவர் அந்த உலகுக்கும் சொந்தமானவரும்கூட என்றாகிவிடுகிறது.

எனவே, ஓர் ஏற்பாடு செய்யப்படுகிறது. அதன்படி பெர்சிபோன் ஒவ்வோர் ஆண்டும் 4 மாதங்கள் மட்டும் கீழுலகுக்குச் சென்றுவிட வேண்டும். அவ்வாறு அவர் மறைந்துவிடும் வேளைகளில் எல்லாம் டெமெட்டர் வாடியிருப்பார். தானியங்களின் கடவுளான அவர் வாடினால் தானியங்களும் வாடிவிடும் அல்லவா? அதனால்தான் ஆண்டுதோறும் நான்கு மாதங்கள் விளைச்சல் இருப்பதில்லை. அது பனிக்காலம் என்றழைக்கப்பட்டது. தன் மகளுடன் டெமெட்டர் மகிழ்ந்திருக்கும் பொழுதுகள் வசந்த காலமாக செழித்தது.

அரிசி பிரதான உணவாக இருக்கும் இடங்களில் பெண்ணே அரிசியாகவும் கடவுளாகவும் திகழ்ந்தார். உதாரணம், இந்தோனேஷியர்கள். பெண்ணின் உடல்தான் அரிசிப் பயிரை உண்டாக்கியது என்பது அவர்கள் நம்பிக்கை. அறுவடைக்குப் பிறகு கடைசியாக எஞ்சியிருக்கும் கதிர்க் கட்டைக் கொண்டு ஒரு பெண் உருவம் அமைத்து அலங்காரம் செய்யும் வழக்கம் அவர்களுக்கு இருந்தது. பயிரைக் காப்பாற்றி, விளைச்சலைப் பெருக்கி எல்லோருக்கும் உணவு அளிக்கும்படி அரிசிக் கடவுளை அவர்கள் வேண்டிக் கொண்டனர்.

பண்டைய ஐரோப்பியர்களின் உணவு கோதுமையும் பார்லியும் என்பதால் அவர்கள் கோதுமை தாய், பார்லி தாய் இருவரையும் உருவாக்க வேண்டியிருந்தது. அவர்களுக்குப் படையலிட்டு வழிபட வேண்டியிருந்தது. மெசபடோமியர்களின் விளைச்சலுக்காக வழிபட்ட பெண் கடவுளின் பெயர் இஷ்தார். வான் கடவுளின் மகள் என்று இஷ்தாரை அவர்கள் நம்பினர். ரிக் வேதத்தில் காணப்படும் பிரித்வி என்னும் பெண் கடவுள் மண்ணின் வளத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். 

அன்னபூர்னேஸ்வரி உணவின் கடவுளாக இன்றும் வழிபடப்படுகிறார். இவரோடு, உணவுக்கும் விளைச்சலுக்கும் செழிப்புக்கும் மேலும் பல பெண் கடவுள்கள் இந்தியா முழுக்க உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு சமூகமும் தங்கள் உயிர் காக்கும் உணவைப் பெண் கடவுளாக உயர்த்தியதைப் பார்க்கும்போது, தொல்லியல் ஆய்வாளர்களும் மானுடவியலாளர்களும் ஏன் விவசாயத்தைக் கண்டுபிடித்தவர்கள் பெண்கள் என்று கூறுகிறார்கள் என்பது அழுத்தமாகப் புரியும். மேலே விவரிக்கப்பட்டுள்ள இதிகாசக் கதைகளில் காணப்படும் குறிப்புகள் பலவும் முக்கியமானவை. மனிதர்களுக்கு உயிரும் உணவும் அளித்தவர்கள் பெண்கள். 

டெமெட்டர் மகிழ்ச்சியுடன் இருந்தால்தான் உலகம் செழிக்கும், அவர் வாடும் ஒவ்வொரு முறையும் உலகம் வாடுகிறது. இயற்கையோடு பெண்களே நெருக்கமாக இருக்கிறார்கள். இயற்கையைப் போல அவர்களும் புதிய உயிர்களை உருவாக்கு கிறார்கள். பிறப்புக்கும் வளர்ச்சிக்கும் செழிப்புக்கும் உலகம் அவர்களையே நம்பியிருக்கிறது. பெனோப்ஸ்காட் இந்தியர்கள் என்று அழைக்கப்படும் மற்றொரு அமெரிக்கப் பழங்குடி மக்களின் சோளக் கதை நெகிழ்ச்சி யூட்டக்கூடியது. பூமியில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் நிறைந்
திருந்த வேளையில் பஞ்சம் ஏற்பட்டது. 

வேட்டையாடுவதைத் தவிர வேறு எதுவும் தெரியாது என்பதால், ஆண்கள் களைத்துப் போயிருந்தனர். ஒரு விலங்குகூட உயிருடன் இல்லை. அப்போது பூமியின் முதல் தாய் அழத் தொடங்கினார். வீறிட்டு கதறும் தன் குழந்தைகளுக்கு உணவூட்ட முடியவில்லையே என்னும் துயரம் அவரை வாட்டியெடுத்தது. நிதானமிழந்த அந்தத் தாய் தன் கணவனை அழைத்து பின்வருமாறு வேண்டிக் கொண்டார்...  ‘என்னைக் கொன்றுவிடுங்கள். என் குழந்தைகள் என் தங்க நிற தலைமயிரைப் பிடித்துக்கொண்டு தரதரவென்று என் உடலை இழுத்துச் செல்லட்டும். என் எலும்புக்கூட்டிலிருந்து சதையெல்லாம் பிரிந்து வரும் வரை என்னை அவர்கள் இழுத்துச் செல்லட்டும். பிறகு என் எலும்புகளை அவர்கள் புதைக்கட்டும். 7 மாதங்கள் கழித்து அவர்கள் திரும்பி வந்தால் எல்லாருக்கும் உணவு கிடைக்கும்...’

7 மாதங்கள் கழித்து அவர்கள்  தாய் புதைக்கப்பட்ட இடத்தை அடைந்தார்கள். ஆச்சரியமூட்டும் வகையில் அங்கே சோளக் கதிர்கள் வளர்ந்திருந்தன. ஒரு சோளத்தை எடுத்து உரித்துப் பார்த்தார்கள். உள்ளே தங்க நிறத்தில் முதல் தாயின் கேசம் இருப்பதைக் கண்டனர். சோளத்தின் மென்மையான பகுதிகள் தாயின் சதையை ஒத்திருப்பதையும் கண்டார்கள். சோளத் தாய் அல்லது முதல் தாய் தன் வாக்கை நிறைவேற்றினார். தன் கணவனுக்கும் குழந்தைகளுக்கும் மட்டுமல்ல... அந்த ஊருக்கே அவர் பசியாற்றினார்.

19ம் நூற்றாண்டில் அயர்லாந்தை உலுக்கியெடுத்த பஞ்சத்தைப் பற்றி அமண்டா எட்மண்ட் என்னும் பெண் கவிஞர் எழுதிய பாடலில் இருந்து சில வரிகள் இதோ...

‘நான் பசியாலும் குளிராலும் இறந்து கொண்டிருக்கிறேன் அம்மா, எனக்கு மூன்றே மூன்று சோள தானியங்கள் தா! என் அருகில் வா, அம்மா என்னைக் கட்டியணைத்துக்கொள் விரைந்து வா, என்னால் உன்னைக் காணமுடியவில்லை என் சுவாசம் கிட்டத்தட்ட நின்றுவிட்டது அம்மா! அன்பு அம்மா! நான் இறப்பதற்குள் மூன்று சோள தானியங்கள் தந்துவிடு!’ பஞ்சம், பசி, துயரம், மரணம் என்றதும் மனிதர்கள் தவிர்க்கவியலாதபடி இன்றும் ஒரு பெண்ணிடம்தான் இறைஞ்சுகிறார்கள். அமண்டா எட்மண்டுக்கு அந்தப் பெண் ஒரு தாயாக இருக்கிறார். மற்றவர்களுக்கு அவள் ஒரு துணை அல்லது சகோதரி அல்லது தோழி. இப்படி வெவ்வேறாக அழைப்பதற்குப் பதில் பண்டைய மனிதர்கள் சமயோசிதமாக ஒரே பெயரால் பெண்ணை அழைத்தனர்... கடவுள்! 

தானியங்களின் கடவுளான அவர் வாடினால் தானியங்களும் வாடிவிடும் அல்லவா? அதனால்தான் ஆண்டுதோறும் நான்கு மாதங்கள் விளைச்சல் இருப்பதில்லை. அது பனிக்காலம் என்றழைக்கப்பட்டது. தன் மகளுடன் டெமெட்டர் மகிழ்ந்திருக்கும்  பொழுதுகள் வசந்த காலமாக செழித்தது.

அன்னபூர்னேஸ்வரி உணவின் கடவுளாக இன்றும் வழிபடப்படுகிறார். இவரோடு, உணவுக்கும் விளைச்சலுக்கும் செழிப்புக்கும் மேலும் பல பெண் கடவுள்கள் இந்தியா முழுக்க உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு சமூகமும் தங்கள் உயிர் காக்கும் உணவைப் பெண் கடவுளாக உயர்த்தியதைப் பார்க்கும்போது,  தொல்லியல் ஆய்வாளர்களும் மானுடவியலாளர்களும் ஏன் விவசாயத்தைக் கண்டுபிடித்தவர்கள் பெண்கள் என்று கூறுகிறார்கள் என்பது அழுத்தமாகப் புரியும்.

பூமியில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் நிறைந்திருந்த வேளையில் பஞ்சம் ஏற்பட்டது. வேட்டையாடு வதைத் தவிர வேறு எதுவும் தெரியாது என்பதால், ஆண்கள்  களைத்துப் போயிருந்தனர். ஒரு விலங்குகூட உயிருடன் இல்லை. அப்போது பூமியின்  முதல் தாய் அழத் தொடங்கினார். வீறிட்டு கதறும் தன் குழந்தைகளுக்கு உணவூட்ட முடியவில்லையே என்னும் துயரம் அவரை வாட்டியெடுத்தது.

மனித குலத்தை பஞ்சத்திலிருந்தும் அழிவிலிருந்தும் மீட்டெடுத்த பெண்களை அப்போதைய சமூகம் கடவுளாகவே ஏற்று, மதித்துக் கொண்டாடியது.

நன்றி -  குங்குமம் தோழி 

...மேலும்

Nov 28, 2016

நீதியினை அணுகுதலும் முஸ்லிம் பெண்களும் (பாகம் 1) - ஷிரீன் அப்துல் ஷரூர்


இலங்கையில் அமுலிலுள்ள 1951ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க முஸ்லிம் திருமண, விவாகரத்துச் சட்டமானது (MMDA) பல ஆய்வுகளினதும் கற்கைகளினதும் கருப்பொருளாக இருந்து வருகின்றது. எவ்வாறாயினும், மிகவும் மனம் வருந்தத்தக்க வகையில் நடப்பது என்னவென்றால் மறுசீரமைப்பதற்கு எடுக்கப்படுகின்ற சகல முயற்சிகளும் ஏதோ ஒரு குழு மட்டத்தில் அல்லது குழுக்கள் பரிந்துரைகளை விடுப்பதுடன் முடிவடைந்து விடுகின்றன. இவற்றிற்கு அப்பால் எதுவும் நடப்பதில்லை. இதனால், தமது கணவன்மாரினால் முஸ்லிம் பெண்கள் மோசமான துஷ்பிரயோகங்களுக்கு ஆளாவது தொடர்ந்த வண்ணமாகவே உள்ளது. தமது மனைவிமாரை அடித்துத் தண்டிப்பது தமது உரிமை என்று கூட சில கணவன்மார்கள் நினைக்கின்றனர். தற்கொலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை எனும் நிலைக்கு பெண்களைத் தள்ளுமளவிற்கு இத்துஷ்பிரயோகங்கள் கடுமையானவையாக இருக்கின்றன. துஷ்பிரயோகங்கள் மனைவிமாருக்கு மட்டுமல்லாது பிள்ளைகளுக்கும் உடல்ரீதியான தாக்கத்தினையும் மனோரீதியான சித்திரவதையினையும் ஏற்படுத்துகின்றன.

இருப்பினும், பயன்பாட்டிலுள்ள சட்ட முறைமை மூலமாக முஸ்லிம் பெண்களால் பரிகாரம் காண முடியாமையினால் குற்றத்தை நிகழ்த்துபவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து அதிகமான சந்தர்ப்பங்களில் தப்பிவிடுகின்றனர். எனவே, இந்தக் கட்டுரையானது முஸ்லிம் திருமண விவாகரத்துச் சட்டமுறைகளில் நிலைநாட்டப்பட்டு பேணப்பட்டுவருவதில் உள்ள குறைபாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகவும் மௌனமாகத் துயருருகின்ற பெண்கள் முகங்கொடுக்கின்ற பிரச்சினைகளை கோடிட்டுக் காட்டுவதாகவும் உள்ளது. அத்துடன், ஆணாதிக்கத்திற்கு உட்பட்டு மறுசீரமைப்பினைக் கோரி நிற்கின்ற காதி நீதிமன்ற முறைமையிலே பெண்களுக்கு சமமான நீதி கிடைக்காத காரணத்தினால் அவர்கள் முகங்கொடுக்கின்ற பிரச்சினைகளையும் வெளிக்காட்டுகின்ற ஒரு முயற்சியாகவும் உள்ளது.

நற்பண்புடைய மற்றும் நல்ல பதவியினைக் கொண்ட எந்தவொரு ஆண் முஸ்லிமும் காதி நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கான ஏற்பாடுகளை முஸ்லிம் திருமண, விவாகரத்துச் சட்டம் வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவ்வாறு நியமிக்கப்படுகின்ற நீதிபதியின் நியாயாதிக்கமானது பிரதேச ரீதியாக வரையறுக்கப்படுவதுடன், அது குறிப்பிட்ட காலத்திற்கும் வரையறுக்கப்பட்டதாகும். நியமிக்கப்படும் காதி நீதிபதியானவர் ஷரியாச் சட்டத்தினைப் பற்றியோ அல்லது குறிப்பாக முஸ்லிம் திருமண, விவாகரத்துச் சட்டம் பற்றியோ புரிதலைக் கொண்டிருக்கின்றாரா என்பதை வெளிப்படுத்துவதற்கான எந்தத் தேவைப்பாடுகளும் நியமனத்தின்போது கோரப்படுவதில்லை. பெரும்பான்மையான இலங்கையின் காதிகள் முறைசார் சட்டப் பயிற்சியினைக் கொண்டிருப்பதில்லை. காதிமார்களின் தீர்மானங்களுக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்படும்போது அதனை விசாரிப்பதற்காக இச்சட்டமானது காதிச் சபையினை நியமிப்பதற்கான ஏற்பாடுகளையும் வழங்குகின்றது. முஸ்லிம் திருமண, விவாகரத்துச் சட்டத்தின் 4ஆம் பிரிவானது பின்வரும் கோரிக்கைகள் எவற்றினையாவது விசாரித்து அவற்றுக்கு தீர்ப்பு வழங்குவதை உள்ளடக்கும் தன்மை மிக்கதான திருமண நியாயாதிக்கத்தினை காதிக்கு வழங்குகின்றது. அவையாவன:

மகரைப் பெற்றுத் தரக்கோரும் மனைவியின் கோரிக்கை, பராமரிப்பினைப் பெற்றுத் தரக்கோரும் மனைவியின் கோரிக்கை அல்லது மனைவியின் சார்பில் பராமரிப்பினை பெற்றுத் தரக்கோரும் கோரிக்கை அல்லது பராமரிப்பினை பெற்றுத் தருமாறு பிள்ளை விடுக்கும் கோரிக்கை (திருமண பந்தத்திற்குள் பிறந்த அல்லது திருமண பந்தத்திற்கு அப்பால் பிறந்த), பராமரிப்பினை பெற்றுத்தருமாறு பிள்ளையின் சார்பில் விடுக்கப்படும் கோரிக்கை, இத்தா பராமரிப்புக்காக விவாகரத்துப் பெற்ற மனைவி விடுக்கும் கோரிக்கை, இந்தப் பிரிவின் கீழ் கட்டளையிடப்படும் எந்தவொரு பராமரிப்புத் தொகையினையும் அதிகரிக்க அல்லது குறைக்க விடுக்கப்படும் வேண்டுகோள், கைக்கூலிக்கான வேண்டுகோள், கணவன் மனைவிக்கு இடையில் காதியினை மத்தியஸ்த்தம் செய்து வைக்குமாறு கோரும் வேண்டுகோள், திருமணத்தினை வறிதாக்கும்படி கணவன் அல்லது மனைவி விடுக்கும் வேண்டுகோள்.

நியாயமான நீதி விசாரணையினை அணுகிக்கொள்ள முடியாமல் பெண்கள் அதிகமாக முகங்கொடுக்கின்ற பிரச்சினைகள் இச்சமுதாய நீதிமன்ற முறைகளிலேயே ஊசலாடுகின்றன. இச்சமுதாய நீதிமன்றங்கள் ஆணாதிக்கத்திற்கு உட்பட்டிருப்பதுடன் அவை குடும்ப வன்முறைச் சட்டம் உள்ளடங்கலாக பொதுச்சட்டத்தைப் பயன்படுத்தி நீதியினைக் கோருவதை விட்டும் பெண்களை இது அப்புறப்படுத்துகின்றது. மேலும், பெண்களும் சிறுவர்களும் முகங்கொடுக்கின்ற வன்முறையின் தீவிரத்தன்மையினைக் கருத்தில் கொள்வதரிது. அதிகமான சந்தர்ப்பங்களில் குடும்ப வன்முறை நிகழும்போது தங்களது கணவன்மாருடன் செல்லுமாறு பெண்களுக்கு கூறப்படுவதுடன், தனது மனைவிமாரை அன்புடன் நடத்துமாறு கணவன்மாரும் வேண்டப்படுகின்றனர்.

காதி நீதிமன்றங்களில் வழக்குகளைச் சந்தித்துள்ள 26 முஸ்லிம் பெண்களை புத்தளத்திலும் மன்னாரிலும் சந்தித்திருந்தேன். இவர்கள் கூறிய கதைகளில் அதிகமானவை ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவையாக இருந்தது. மேலும், காதி நீதிமன்ற முறைமையானது ஆண்களுக்கு பக்கச்சார்பாக இருந்து வருவதுடன் குடும்பங்களின் நலன்களை குறிப்பாக, சிறுவர்களைப் பாதிக்கின்ற மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையினைத் தூண்டுவதாகவும் இருப்பது அக்கதைகளில் இருந்து தெரியவந்தது. நான் நேர்கண்ட பல பெண்கள் தம் கணவன்மாரினாலும் தம் கணவனின் உறவினர்களாலும் தம்மீது நிகழ்த்தப்படுகின்ற வன்முறையின் தீவிரத் தன்மையினை கருத்தில் கொண்டு விவாகரத்தினை பெற்றுக் கொள்வதை விரும்பாதவர்களாகக் காணப்படுகின்றனர். மாறாக மீளிணக்கத்திற்காக அல்லது பராமரிப்பினைப் பெறுவதற்காகவோ அவர்கள் காதி நீதிமன்றங்களுக்கே செல்கின்றனர். இதற்கான காரணமாவது,

சமுதாயத்தினுள் பாதுகாப்பென்பது சீர்குலைந்திருப்பதும் விவாகரத்தைப் பெற்றவர் என சமூகத்தினால் ஒதுக்கிவைக்கப்படுதலும்
தமது பிள்ளைகளுக்கு ஒரு தகப்பன் தேவையென அவர்கள் நினைக்கின்றனர் (குறிப்பாக பெண் பிள்ளைகளுக்கு சிறந்த கணவன்மாரினைப் பெற்றுக் கொடுப்பதற்கு தமது கணவன்மார் இருக்க வேண்டுமென அவர்கள் நினைக்கின்றனர்).
தான் விவாகரத்தினை முன்னெடுத்தால் பராமரிப்புக்கும் நட்டயீட்டுக்குமான தமது உரிமையினை தாமும் தமது பிள்ளைகளும் இழந்துவிடுவர் என அவர்கள் பயப்படுகின்றனர்.
அதிகமான சந்தர்ப்பங்களில் இவ்வாறான வன்முறைக்கான காரணங்களாக இருப்பனவற்றை பின்வருமாறு குறிப்பிடலாம். கணவன் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் முடிப்பதற்கோ அல்லது தனது திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவினை சட்டபூர்வமானதாக்குவதற்கோ பெண்னையும் பிள்ளைகளையும் அச்சுறுத்துவதேயாகும். பெண்ணின் தரப்பில் இருந்து முறைப்பாடு வருகையில், குறிப்பாக ஆண் வேறொரு பெண்ணை நாடுவது தொடர்பான முறைப்பாடுகளாக இருக்கும் பட்சத்தில் தீர்ப்பினை வழங்குவதில் தாமதங்கள் ஏற்படுவதையே என்னுடைய நேர்காணல்கள் எடுத்துக்காட்டின. தனது இறுதித் தீர்ப்பினை வழங்குவதை காதியார் இழுத்தடிப்பது அல்லது ஆண்களின் இவ்வாறான செயற்பாடுகளை நியாயப்படுத்துவதுதான் பெண்களுக்கு கிடைக்கின்ற அனுபவங்களாக அதிகமான சந்தர்ப்பங்களில் காணப்படுகின்றன.

நட்டஈடு மற்றும் பராமரிப்புடன் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு விவாகரத்தினைப் பெற்றுக்கொள்வதற்கு உதவாமல் கணவனின் பலதாரமணத்தினை ஏற்றுக்கொள்ளுமாறு காதிமார் பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் மீது (பெண்கள் மீது) அழுத்தத்தினை ஏற்படுத்துகின்றனர். இன்னும் சில சம்பவங்களில் பெண்கள் தமக்குரிய கடமைகளை நிறைவேற்றாத காரணத்தினாலேயே ஆண்கள் வேறு பெண்களை திருமணம் முடிக்கின்றனர் எனவும் இது நியாயப்படுத்தப்படுகின்றது. (இவற்றிலே மனைவியின் கடமைகளாக உரிய நேரத்தில் உணவு சமைத்துக் கொடுக்காமை, தனது நோயுற்ற பெற்றோரைப் பார்த்துவிட்டு உரிய காலத்தில் வீடு திரும்பாமை ஆகியவை உள்ளடங்குகின்றன).

சில காதிமார்கள் பராமரிப்புத் தொகையினை எழுத்து மூலமாக கொடுக்காமல் இருக்கின்றனர். இன்னும் சிலர் வழக்கினை நீண்டகாலத்திற்கு நடத்திச் செல்கின்றனர். மேலும், இஸ்லாம் அனுமதிக்கின்றது என்று கூறி மறுமணத்தினை ஏற்றுக்கொள்ளுமாறு பெண்களை நிர்ப்பந்திப்பதன் மூலமும் இதனை சூழ்ச்சிகரமான முறையிலே நிறைவேற்றி வருகின்றனர். தமது கணவன் இன்னுமொரு பெண்ணை அல்லது பல பெண்களை மணப்பதை ஏற்றுக்கொள்வதற்கு பெண்கள் மறுக்கும்போது அவர்களிடம் பாசா விவாகரத்தினை விண்ணப்பிக்குமாறு இவ்வாறான காதிமார்கள பல சந்தர்ப்பங்களில் ஆலோசனை கூறியுள்ளனர். பாசா விவாகரத்தின் மூலம் பெண் ஒருவர் விவாகரத்தினை முன்வைக்கையில் அவருக்கு நட்டஈட்டினைப் பெற்றுக்கொள்வதற்கான தகைமை இல்லாமல் போகின்றது.

இதனால் கணவனுக்கு சாதகமான சமரசம் இங்கே ஏற்படுகின்றது. தனது கணவனின் 2ஆவது அல்லது 3ஆவது திருமணத்தினை ஏற்றுக்கொள்ள ஒரு பெண் விரும்பாவிட்டால், அவளினால் நட்டஈட்டினையோ அல்லது பராமரிப்பினையோ கோரமுடியாது எனக் காதிமார்கள் பகிரங்கமாகக் கருத்துக்கூறி இந்த வாதத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். காதிமாரின் இந்த நடத்தையினால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல காதிமார்கள் தாமே ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை முடித்துள்ளதால் அவர்களின் மூலம் எவ்வாறு தமது கணவன்மாரின் நடத்தைக்கு எதிராக சவால் விடுக்க முடியும் என்கின்ற எதிர் முறைப்பாட்டினையும் முன்வைக்கின்றனர்.

தொடரும்…


நன்றி - மாற்றம் 
...மேலும்

Nov 19, 2016

போராளியின் மனைவியின் முகநூல் பக்கத்திலிருந்து......

முகநூல் நண்பர்கள் கவனத்திற்கு, 

எனது அருகில் இல்லாவிடினும் என்னை வழிநடத்திக் கொண்டிருக்கும் என் கணவருக்கு நன்றிகளை கூறிக்கொண்டு உங்களிடம் இதனை பகிர்ந்து கொள்கிறேன்.


எனது கணவரைப்பிரிந்த இந்த 7 வருடங்களிலும் பல விதமான நபர்களைச் சந்தித்தேன். பல இன்னல்களைச் சுமந்தேன். ஆனால் எந்தச் சந்தர்ப்பத்திலும் என் தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் தளரவிடவில்லை. உறுதியாக இருந்தேன். அதுவே என்னை வெற்றியை நோக்கி பயணிக்க வைத்தது. கணவரை இழந்த பெண் என்ற வகையிலும்பல பிரச்சினைகளிற்கு சமூகத்தில் முகம் கொடுத்தேன்.இதில் மிகவும் கவலைக்குரிய விடயம் எனது கணவருடன் நெருங்கி நின்ற படித்த அறிவுடையவர்களாக நான் மதித்தவர்களின் மிகக் கீழ்த்தரமான முகத்தையும் கண்டேன். ஓரு பெண் பிழையான வழிக்கு உடன்பட்டால் அது வெளியே தெரியாமல் மறைக்கப்பட்டுவிடும். ஆனால் சுய கொளரவத்தை விட்டுக்கொடுக்காமல் அவள் எதிர்த்து நின்றால் எதிர்ப்புக்கள் அதிகமாகும். எந்த அச்சுறுத்தல்களுக்கும் நான் அடிபணிந்து போகவில்லை. இதில் கவலைக்குரிய விடயம் வெளிநாடுகளிலிருந்தும் பிரச்சினை தருவதுதான். சிலர் சமூகத்தில் தம்மை நல்லவர்களாக காட்டிக் கொண்டு ஒரு முகத்திரையை போட்டுள்ளனர். சில ஆதாரங்கள் என்னிடம் உள்ளபோது அதற்காக பயம் கொள்கின்றனர். அதாவது அது எப்போது வெளிவருமோ என்ற பயம் அவர்களுக்கு மனதில் எழுகிறது. இதனால் பல்வேறு அச்சுறுத்தலையும் தந்து அதற்கு அடிபணியாமல் போகவே எனது மகளை கடத்துவதாகவும் அச்சுறுத்தல் தந்து அதற்காக முயற்சிக்கின்றனர். எமது நாட்டில் பாதுகாப்பின்மை மிகப்பெரிய பிரச்சினையாகவே உள்ளதால் அதனை சாதகமாக்கி கொள்ள முனைகின்றனர். ஆனால் இதற்கெல்லாம் முகம் கொடுத்து எதிர்நீச்சல் போட முடியாவிடின் நான் ஒரு கோழை. அவ்வாறு கோழையாக நான் வளர்க்கப்படவில்லை. எனது கணவரை இழந்தபின்னர் எனது ஒவ்வொரு செயற்பாடும் மிகுந்த சிந்தனையின் பின்னரே செய்யப்படும்.எனது இழந்த கல்வியைப்பெற்று என் தொழிலுக்கான அத்திவாரத்தை தேடி என் குழந்தைகளையும் சிறந்தவர்களாகவே வளர்த்து வருகிறேன். . நான் எனது வீட்டில் ஒரு பிள்ளையாக பிறந்ததால் யாருடைய உதவியும் இல்லாது கஷ்டப்பட்டேன். ஆனால் அதுவே என்னை வெற்றியின் பாதையில் தனித்து நின்று செயற்பட உதவியது.தற்போது என்னால் மற்றவர்களுக்கும் உதவ முடிகிறது. இவை எல்லாவற்றிற்கும் காரணம் எனது கணவரும் அண்ணாவும் தான். அதாவது அவர்கள் உயிருடன் இல்லாவிடினும் அவர்கள் என்னை வழிநடத்தியவிதமும் தான்.என் ஒவ்வொரு செயற்பாட்டுக்கு பின்னும் அவர்கள் இருக்கின்றனர் என்ற நம்பிக்கை வளர்த்து முன்னேறுகிறேன்.என்னைப்போல பல பெண்கள் வாழ்வார்கள் என நினைக்கிறேன். ஆனால் எவரும் எந்தச்சந்தர்ப்பத்திலும் துணிவை இழக்காதீர்கள். இவை அனைத்தையும் வலி சுமந்த நிஜங்களாக புத்தகவடிவில் காலத்தின் கோலத்தில் எழுதுவேன்.சர்வதேச ரீதியில் சமூக அந்தஸ்துடன் வாழ்பவர்கள் தமது கௌரவத்துக்கு பங்கம் வந்துவிடுவோ என அச்சம் கொள்கின்றனர். தற்போது அச்சம் கொள்ளாதீர்கள். என் எழுத்துக்கள் பதிலளிக்க காலம் கனியவேண்டும். அதுவரை காத்திருப்புக்கள் அவசியம்

போராளியின் மனைவியின் முகநூல் பக்கத்திலிருந்து 
...மேலும்

நாட்டார் தெய்வ வழிபாட்டில் பெண் தெய்வங்கள்

-தயானி விஜயகுமார் B.A (Hons) M.A (Reading)மலையகத்தில் பெண் தெய்வ வழிபாட்டில் காட்டேறி மாரியம்மன்
நாட்டார் தெய்வ வழிபாட்டில் பெண் தெய்வங்கள்

நாட்டுப்புற மக்களைப் பொறுத்தவரையில் நாட்டார் தெய்வ வழிபாடு என்பது மிக பழங்காலத்திலிருந்தே பின்பற்றப்பட்டு வருகின்ற ஒரு நடைமுறையாக உள்ளது. அவற்றில் பெண் தெய்வ வழிபாடு என்பது அன்று தொட்டு இன்று வரை மிகவும் பிரசித்திப்பெற்ற ஒன்றாக விளங்குகின்றது. 

நாட்டார் தெய்வங்கள் என அழைக்கப்படும் சிறுதெய்வ வழிபாடுகளில் பெண் தெய்வ வழிபாட்டில்  தாய்த் தெய்வங்கள், கன்னி தெய்வங்கள் என இரு பிரிவுகளாக பிரித்து நோக்கப்படுகின்றது. தாய்த் தெய்வங்கள் எனும் வகைக்குள் மாரியம்மன், காளியம்மன், முத்தாலம்மன், சீலைக்காரியம்மன், திரௌபதியம்மன், நாச்சியம்மன், பேச்சியம்மன், கண்டியம்மன், வீருசின்னம்மாள், உச்சிமாகாளி, மந்தையம்மன், சோலையம்மன், ராக்காச்சி, எல்லையம்மன், அங்காளம்மன், பேச்சி, இசக்கி, பேராச்சி, ஜக்கம்மாள் போன்ற தெய்வங்கள் உள்ளடக்கப்படுகின்றன. பெண்ணை தாய்மையின் வடிவமாக பார்த்தமையின் காரணமாகவும், சக்தியின் வடிவமாகவும் கருதுவதால் இத்தெய்வங்கள் அம்மனாக உருவகம் செய்து வழிபடப்படுகின்றது. கன்னி தெய்வங்கள் எனப்படும் போது திருமணம் ஆகாத கன்னிப்பெண்கள் விபத்தினாலோ, கொலை செய்யப்பட்டடோ, தற்கொலை செய்து கொண்டோ இறக்கும் போது இந்த பெண்ணின் குடும்பத்தினர் அவளை கன்னி தெய்வமாக நினைத்து வழிபடும் போக்கு காணப்படுவதோடு அந்த கன்னி தெய்வத்தினை குல தெய்வமாகவும் வழிபடும் போக்கு இன்றும் காணப்படுகின்றது. அத்துடன் வீட்டு தெய்வம் எனப்படும் இல்லுறைத் தெய்வ வழிபாடும் பெண் தெய்வ வழிபாட்டில் முக்கியத்துவம் பெறுகின்றது.

இப்பெண் தெய்வ வழிபாட்டு முறைக்கான அடிப்படையை   தமிழ் இலக்கிய வரலாற்றின் தொடக்க காலமான சங்ககாலத்திலிருந்தே காணலாம். சங்க காலத்தில் வழிபடப்பட்ட கொற்றவை வழிபாட்டினை இதற்கு முன்னோடியாகக் குறிப்பிடலாம். அதனுடைய எச்சமாகவே இன்று வழிபடப்படும் பெண்தெய்வ வழிபாடுகள் அமைகின்றன. இப்பெண் தெய்வங்களை வழிபடும் போது எவ்வித தங்குதடையுமின்றி வழிபட வேண்டும். இல்லாவிட்டால் வேண்டுதல் நிறைவடையாது தெய்வம் கோபமடைந்து தீமை செய்யும் என்ற நம்பிக்கையும் மக்களிடம் நிலவுகின்றது. அத்துடன் இத்தெய்வங்களுக்கு நேர்த்திகடன்கள் செய்யும் நடைமுறையும் பின்பற்றப்படுகின்றது. 
மலையத்தில் பெண் தெய்வ வழிபாடு

மலையகத்தில் பெண் தெய்வ வழிபாட்டில்; தாய்த்தெய்வ வழிபாடே முதலிடம் பெறுகின்றது. அதில் குறிப்பாக, மாரியம்மன் வழிபாடு முக்கியமானதாகும். மலையகத்தில் வழிபடப்படுகின்ற சிறுதெய்வ வழிபாடுகளுள் மாரியம்மன் வழிபாடானது பொதுவாக எல்லா ஊர்களிலும் காணப்படுகின்றது.  மலையகத்தில் வழிபடப்படும் பெண் தெய்வ வழிபாடுகளாவன, காளியம்மன், காட்டேறியம்மன், பன்னீரம்மன், அங்காயி, மாரியம்மன், கன்னிமாரி, பிடாரி, பத்தினியம்மன், பேச்சியம்மன், உதிரக்காளி, ஏழு கன்னிமார், மோகினி  இவை போன்று இன்னும் பல தெய்வ வழிபாடுகளாகும். அரங்க நலங்கிள்ளி என்பவர் “பெண் தெய்வங்கள் அனைத்தும் ஆண் தெய்வங்களின் துணையுடனே படைக்கப்படுகின்றன” என்கின்றார்;. மேலும் இந்தப் பெண் தெய்வங்களை காவல் தெய்வங்கள், ஊர்த் தெய்வங்கள், எல்லை தெய்வங்கள் குலதெய்வங்கள் என இத்தெய்வங்களை வௌ;வேறு நோக்கம் கருதியே வழிபடுகின்றனர்.

மலையத்தில்  பெரும்பாலான ஊர்களில் மாரியம்மன் வழிபாடு முதன்மை பெறுகின்றது. மாரியம்மனை மரத்தடியில் வைத்து வழிபாடும் நடைமுறைக் காணப்படுகின்றது.  மாரியானவள் மழையைத் தருபவளாகவும், செழிப்பைத் தருபவளாhகவும் எண்ணி வழிபடுகின்றனர்.  தற்போது மேல்நிலையாக்க சிந்தனையின் மூலம் மாரியம்மன் பெருந்தெய்வம் என்ற வகையில் வழிபடப்படுவதையும் காணலாம். இதனைப் போன்றே காளியம்மன் அச்சம் தரும் தெய்வமாகவும் பெண்களைத் தொடரும் தெய்வமாகவும் காணப்படுவதால் அதிலிருந்து பாதுகாப்பினைத் தேடும் நோக்கத்துடன் அவற்றுக்கு தேவையானவற்றை படையலாக வைத்து பலி கொடுக்கப்பட்டும்  வழிபாட்டு முறைகளும் பின்பற்றப்படுகின்றன.

இச்சிறுதெய்வங்கள் ஊர் எல்லையிலும், ஊரினுள்ளேயும் வைத்து வழிபடப்படுகின்றன. இப்பெண் தெய்வங்கள் அனைத்தும் அதிகமாக பெண்களை பின் தொடர்ந்து அவர்களை துன்புறுத்துபவையாகவும், அவர்களுக்கு தீமை செய்யக் கூடியதுமாகவே காணப்படுகின்றன. பெண் தெய்வங்களை வழிபடுவதற்கு பெண்களே அச்சமடையும் நிலையும் சமூகத்தில் காணப்படுகின்றது. பெண் தெய்வங்கள் பெரும்பாலும் அச்சம் தரக்கூடியதாகவும் அழிக்கும் ஆற்றல் கொண்டவையாகவும் காணப்படுகின்றன.

இன்றைய காலகட்டத்தினை பொறுத்தவரை ஒரு சில சிறுதெய்வ வழிபாடுகள் வழக்கிழந்தும் போய்விட்டன. பெண் தெய்வ வழிபாட்டில் கிராம தேவதைகளை வழிபடுகின்ற போக்கும் காணப்படுகின்றது. இந்த சிறு தெய்வ வழிபாடுகளில் காணப்படும் பெண் தெய்வங்களில் சில மயானத்திலும் சில நீர் நிலைகளிலும் இன்னும் சில மரத்தடி மற்றும் ஊர் எல்லையில் உறைவதையும் காணலாம்.

சாந்தகுணம் கொண்ட தெய்வங்களை ஊரினுள்ளேயும் அச்சத்தினை தரக்கூடிய தெய்வங்களை ஊருக்கு புறத்தேயும் வைத்து வழிபடுகின்றனர். பெண் தெய்வங்களை அவற்றின் பெயர்களைக் கொண்டே அதனுடைய  இயல்பு தன்மையை அறிந்துக் கொள்ளலாம். மாரியம்மன், பத்தினியம்மன், பன்னீரம்மன் போன்ற தெய்வங்களை அம்மனுடைய அவதாரமாக கருதி ஊரை பாதுகாக்கும் தெய்வங்களாகவும் மக்களுக்கு எவ்வித துன்பமும் இழைக்காத தெய்வங்களாகவும் கருதி ஊரினுள் வைத்து வழிபடுகின்றமையை குறிப்பிடலாம். காளி, உதிரக்காளி, அங்காயி, பிடாரி, காட்டேறி, மோகினி, கிராம தேவதைகள் போன்ற தெய்வங்களை அச்சம் தரக்கூடிய தெய்வங்களாகவும் மக்களுக்கு தீமை செய்பவையாகவும் மந்திரம் மற்றும் சூனியம் என்பவற்றுக்கு துணை நிற்கும் தெய்வங்களாகவும் கருதி ஊரின் காவல் தெய்வமாக  ஊருக்கு வெளியே வைத்து வழிபடுகின்றமையையும் குறிப்பிடலாம்.

காட்டேரி மாரியம்மன்  வழிபாடும் அதனுடன் தொடர்பான புராண கதைகளும்
வழிபாடு
காட்டேறி என்பதன் பொருள் “(காடு + ஏறி) என்பதாகும். அதாவது காட்டுக்கு ஏறியவர்கள் காட்டுக்குச் சென்று குடியேறியவர்கள்” என்று ச.பிலவேந்திரன் குறிப்பிடுகின்றார். உண்மையில் காட்டேறி என்பது சுடுகாட்டில்  உறையும் தெய்வம் என்றே பொருள்படும். பொதுவாக அச்சத்தினைத் தரக்கூடிய தெய்வங்களை உள்;ருக்குள் வழிபடுவதில்லை.  ஆனால் அச்சத்தினை தரக்கூடிய இத்தெய்வத்தினை மக்கள் ஊருக்குள் வழிபடுவதன் காரணமாகவும், மலையகத்தில் நுவரெலியா மாவட்டத்தின் சென்றெகுலஸ் தோட்டத்தில் மாத்திரம் காட்டேறி அம்மனை வழிபடப்படுவதன் காரணமாகவும் பெண்தெய்வ வழிபாட்டில் காட்டேறியம்மன் வழிபாடு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக காணப்படுகின்றது. அத்தோடு இலங்கையில் இரண்டு இடத்தில் மாத்திரம் இவ்வழிபாடு குறிப்பிட்டு கூறக்கூடிய அளவில் இடம்பெற்று வருகின்றது. யாழ்ப்பாணத்தில் தென்மராச்சியிலுள்ள பளை பிரதேசத்திலும் மலையகத்தில் சென்றெகுலஸ் தோட்டத்திலும் வழிபடப்படுகின்றமையை குறிப்பிடலாம்.

காட்டேறியம்மன் அச்சத்தினை தரக்கூடிய தெய்வமாக  காணப்படுவதனால் பெரும்பாலும் பாதுகாப்பு நோக்கிலேயே இவ்வழிபாடு மேற்கொள்ளப்படுகின்றது. காட்டேறியம்மன் வழிபாடானது இந்தியாவில்  சில இடங்களில் வழிபடப்படுகின்றது. குறிப்பாக புதுச்சேரி, திருச்சி, தஞ்சை, ஆந்திராவின் நெல்லூர் மாவட்டம் ஆகிய இடங்களில் இவ்வழிபாடு சிறப்பிடம் பெறுகின்றது. அதனுடைய தொடர்ச்சியாகவே இலங்கையில் சென்றகுலஸ் தோட்டத்தில்  இவ்வழிபாடு இடம்பெறுவதைக் குறிப்பிடலாம்.

காட்டேறியம்மனுடைய இயல்பானது சூலுற்ற தாய்மார் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார் என்போரையும் குழந்தைகளையும் வலிந்து தாக்கும் எனக் குறிப்பிடப்படுகின்றது. காட்டேறியம்மனை குலதெய்வமாகவும், து~;டதெய்வமாகவும் வழிபடுகின்றார்கள். காட்டேறியம்மன் வழிபாடானது நாட்டார்த் தெய்வங்களுக்கே உரித்தான பண்புகளை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். அவையாவன,

 • தனியான ஆலயம் இல்லை. (மரத்தடி, மலையுச்சி, ஊர்எல்லை என்பவற்றில் உறையும்)
 • ஆகம விதிகளுக்கு புறம்பான பூசை முறைகள் நடைபெறல்.
 • மரத்தடியில் முக்கோண வடிவக்கல் போன்ற பதிவு காணப்படல்.
 • ஆடு, கோழி போன்றன பலியிடப்படல்.
 • குலதெய்வமாகவும் காவல் தெய்வமாகவும் வழிபடப்படல்.
 • பிடி மண்ணை அடிப்படையாக கொண்டு பரம்பரை பரம்பரையாக வழிபடப்படல்.இவ்வாறான விடயங்களை அடிப்படையாக கொண்டு நோக்கும் போது காட்டேறியம்மனுக்கான வழிபாடானது முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றது.

காட்டேறியம்மனை திருப்திபடுத்தும் நோக்கில் வருடத்திற்கு ஒரு முறை காட்டேறியம்மனுக்கான சென்றெகுலஸ் விழா நடைபெறுகின்றது. பொதுவாக வெயில் அதிகமாக காணப்படும் பங்குனி மாதத்தின் இறுதி காலப்பகுதியில் ஒவ்வொரு ஊரிலும் திருவிழா இடம்பெறுவது வழக்கமாகும். அதன் போதே சிறுதெய்வ வழிபாடான காட்டேறியம்மனுக்கான விழாவும் இடம்பெறுகின்றது. குறிப்பாக, சென்றெகுலஸ் தோட்டத்தினை பொறுத்தவரை ஊரின் திருவிழா இடம்பெறும் காலப்பகுதியில் இறுதி நாளன்று காட்டேறிக்கான விழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கதாகும்.

1934 ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை வருடம் தோறும் தவறாது காட்டேறியம்மனுக்கான விழா இடம்பெறுகின்றது. இதன் காரணமாக ஆகமம் சாராத பெண் தெய்வ வழிபாட்டிலே காட்டேறியம்மன் போற்றக்கூடிய வழிபாடாக காணப்படுகின்றது. காட்டேறியம்மன் வழிபாட்டினை சில நம்பிக்கைகளின் அடிப்படையிலும் மக்கள் வழிபடுகின்றமையையும் காணக்கூடியதாக உள்ளது. திருமணமான பெண்களின் குழந்தைப்பேறு தொடர்பான நேர்த்திக்கடன்களும் செலுத்தப்படுகின்றன. அதாவது காட்டேறி என்பது து~;ட தெய்வமாக காணப்படுவதால் கருவிலுள்ள குழந்தைக்கு ஆபத்து எதுவும் நிகழாமல் இருப்பதற்கும் தாய்க்கும் எவ்வித துன்பமும் ஏற்படாமல் இருப்பதற்காகவும் நேர்த்திக்கடன் செலுத்தி மக்கள் வழிபடுகின்றார்கள். அத்தோடு நீண்ட காலம் குழந்தைப்பேறு இல்லாதவர்களும் நேர்த்திக்கடன்கள் வைப்பதோடு அது நிறைவேறினால் அதனை செலுத்துவதையும் இங்கு காணக்கூடியதாக உள்ளது.

ஊரின் பாதுகாப்பு தொடர்பான நம்பிக்கைகள் என்னும் போது, ஊரினை எல்லையில் இருந்து பாதுகாக்கும் தெய்வமாக  கருதி வழிபடுகின்றமை குறிப்பிடலாம். காட்டேறியம்மன் காவல் காப்பதால் ஊர் மக்களுக்கு எவ்வித துன்பமும் ஏற்படாது என்று மக்கள் தீவிரமாக நம்புகின்றார்கள். அத்தோடு எல்லா நேரத்திலும் காட்டேறியம்மன் தங்களை பாதுபாப்பதாகவும் எண்ணி அதற்காக காட்டேறியம்மனை திருப்தி படுத்த வேண்டும் என்ற காரணத்தினால் வருடா வருடம் காட்டேறியம்மனுக்கான வழிபாடுகளை நடத்துகின்றார்கள்.

குடும்ப பிரச்சினைகள் மற்றும் உறவுகளுக்கிடையிலான பிரச்சினைகள் என்பன தீர்க்கப்படும் என்ற நம்பிக்கையிலும் இவ்வழிபாடானது இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறான நம்பிக்கைகளுக்காக நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படும் முறைகளாவன, பால், முட்டை, கோழி என்பனவற்றை வழங்குதல், கறுப்பு ஆடை, சலங்கை, வளையல்கள், தலைமுடி என்பவற்றை படையலாக வைத்தல், போன்ற முறைகளை குறிப்பிடலாம். காட்டேறியம்மன் வழிபாட்டின் போது காட்டேறியாக வேடமிட்டு நடித்துக் காட்டும் முறையும் காணப்படுகின்றது. எந்தவொரு சிறுதெய்வ வழிபாட்டிலும் இடம்பெறாத புதிய நடைமுறையாகவும் காரணப்படுவதால் காட்டேறியம்மன் வழிபாடு முக்கியத்துவம் பெறுகின்றது.

இவ்வழிபாட்டின் போது தமிழரின் பாரம்பரிய இசைக்கருவிகளான தப்பு, உடுக்கு என்பன பயன்படுத்தப்படுகின்றன. இந்த தப்பு வாத்தியமானது இந்தியாவிலுள்ள பெரம்பூர் என்னும் இடத்திலிருந்து ஆரம்பக்காலத்தில் கொண்டுவரப்பட்டதாகும். அதனையே இன்றுவரை பயன்படுத்துகின்றார்கள். இவ்வாறான பல வித்தியாசமான அம்சங்களை கொண்டிருப்பதன் காரணமாகவும் மலையகத்தின் பெண் தெய்வ வழிபாட்டில் காட்டேறியம்மன் தனித்துவமான தெய்வமாகவும் முக்கியத்துவம் வாய்ந்த தெய்வமாகவும் காணப்படுகின்றது.

காட்டேறியம்மன் வழிபாட்டை தொடக்கி வைத்த பரம்பரையினரே அதனை தொடர்ந்து கொண்டு நடத்துவதனைக் காணலாம். இதற்கான காரணம் பழைய விடயங்களை பின்பற்ற வேண்டும் என்றும் அதனை கைவிட்டால் துன்பம் ஏற்படும் என்றும் அதன் மீது கொண்ட நம்பிக்கையும் மற்றும் காட்டேறி மீதான பயமும் தொடர்ந்து இவ்வழிபாட்டினை முறையாக கொண்டு நடத்துவதற்கு காரணமாகும்.

இவ்வாறே சென்றெகுலஸ் தோட்டத்திலும் பரம்பரை பரம்பரையாக காட்டேறியம்மன் வழிபாட்டினை கொண்டு நடத்துகின்றனர். அந்தவகையில் இத்தோட்டத்தில் இவ்வழிபாட்டினை தொடக்கி வைத்தவர் கருப்பண்ணன் கவுண்டர் என்பவர் ஆவார். அவருக்கு பின் அவருடைய மகன் செல்லக்குட்டி கவுண்டர் பின்னர் கிட்ணசாமி கவுண்டர் என்போர் தொடர்ந்து இவ்வழிபாட்டினை சிறப்பாக கொண்டு நடாத்தினார்கள். தற்போது காட்டேறியம்மன் வழிபாட்டினை கொண்டு நடத்துபவர்களாக பெரியசாமி கங்காணி, சுப்பிரமணியம் கங்காணி ஆகியோர் விளங்குகின்றனர்.

அத்துடன் காட்டேறியம்மன் வழிபாட்டில் தந்தைக்குப் பின் மகன் என்ற ரீதியில் நடாத்தி வருகின்றமையையும் குறிப்பிடலாம். தொடக்ககாலத்தில் காட்டேறியாக நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பையா என்பவர் நீண்ட காலமாக வேடமேற்று நடித்துவந்தார். இதற்குப் பின் கடந்த பத்து வருடங்களாக மாயழகு புஸ்பராஜ் என்பவர் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கதாகும். மேலும் காட்டேறியம்மன் வழிபாட்டினை தவறாது நடத்துவதற்கு ஊர்மக்களன்  ஒத்துழைப்பும் இன்றியமையாத ஒன்றாக காணப்படுகின்றது.

சிறுதெய்வ வழிபாட்டு நடைமுறைகளிலிருந்தும் காட்டேறியம்மன் வழிபாடு வேறுபடுகின்றமையை குறிப்பிடலாம். பொதுவாக சிறுதெய்வ வழிபாடுகள் அந்தந்த தெய்வங்களின் உறைவிடங்களிலேயே இடம்பெறுவது வழக்கமாகும். அதாவது மரத்தடியில் பந்தல் இடல் ஆற்றங்கரைகளில் வழிபடல், ஊர் எல்லையில் வழிபடல் என்பவற்றை எடுத்துக்காட்டலாம். ஆனால் காட்டேறியம்மன் வழிபாடானது சற்று வித்தியாசமான முறையில் பெருந்தெய்வ ஆலயத்துடன் தொடர்புபடுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இவ்வழிபாட்டில் முனி, அம்மன் ஆகிய தெய்வங்களும் வழிபடப்படுகின்றன. அதாவது காட்டேறியம்மன் வழிபாடானது  முனீஸ்வரனுக்கான பூசையுடன் தொடங்கி அம்மனுக்கான பூசையுடன் முடிவடைகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இதனடிப்படையில் நோக்கும்போது மலையக பெண்தெய்வ வழிபாட்டில் காட்டேறியம்மன் வழிபாடானது அதனுடைய குணாம்சங்கள், பூசை நடைமுறைகள் மற்றும் அதில் காணப்படும் சடங்கு சம்பிரதாயங்கள் என்பவற்றின் அப்படையில் முக்கியத்துவம் வாய்ந்த பழைமையான சிறுதெய்வ வழிபாட்டு முறையாக விளங்குகின்றது எனலாம்.

புராணக் கதைகள்
காட்டேறியம்மன் பற்றி பல்வேறு வகையான கதை மரபுகள் நிலவுகின்றன. அந்தவகையில் காட்டேறி பற்றி வாய்மொழி மரபாக கூறப்பட்டு வருகின்ற கதைகளையும் நூல்களின் வாயிலாக கூறப்பட்டு வந்த கதை மரபுகளையும் காணப்படுகின்றன. ச.பிலவேந்திரன் என்பவர் தன்னுடைய “தமிழ் சிந்தனை மரபு” எனும்   நூலில் காட்டேறி தொடர்பான பல கதைகளை குறிப்பிடுகின்றார். காட்டேறியம்மனை அங்காளம்மனுடைய துணைத் தெய்வமாக கருதும் வழக்கமும் காணப்பட்டதாகவும் இதற்கான காரணம் வல்லாளக் கண்டன் என்ற அரக்கனின் மனைவியான நிசாசினி என்பவளை அவள் குழந்தை பெற்றெடுக்கும் சமயத்தில் அங்காளம்மன் தாயையும், குழந்தையையும் அழித்தார் என பிலவேந்தர் கூறுகிறார். அதாவது வல்லாள கண்டன் என்னும் அரக்கனும் அவனது சகோதரர்களும் அனைத்து தேவர்களையும் கடவுளர்களையும் கொடுமைப்படுத்தி வந்தனர். வல்லாள கண்டன் ஈஸ்வரனே தன்னுடைய மகனாக பிறக்க வேண்டும் என்று வரம் பெற்றிருந்தான். அதன் மூலம் மும்மூர்த்திகளையும் தனக்குப் பணிவிடை செய்ய வைக்க வேண்டும் என்றும் அடிமைப்படுத்த வேண்டும் என்றும் எண்ணியிருந்தான். இத்திட்டத்தினை முறியடிக்க வேண்டும் என்ற நோக்கில் ஈஸ்வரியே அங்காளம்மனாகப் பிறப்பெடுக்கின்றார். அவள் ஒரு மருத்துவிச்சியாக வருகின்றார். அவளே வல்லாள கண்டனின் மனைவி கருவுயிர்க்கும் காலத்தில் மருத்துவம் பார்ப்பதற்கு வருகின்றாள். மருத்துவிச்சி தாயையும் குழந்தையையும் அது பிறக்கும் முன்பாகவே கொன்று அழிக்கின்றாள். இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே காட்டேறி அங்காளம்மனுடன் தொடர்புபடுத்தப்படுகின்றது. இவ்வாறு அவர்களை அழித்த போது அங்கு பெருகிய குருதி வெள்ளத்தினை போக்குவதற்காக அங்காளம்மன் தன்னுடன் துணைக்கு காட்டேறியம்மனை அழைத்துச் சென்றதாகவும் அங்கு பெருகிய இரத்தத்தினை காட்டேறியம்மன் பருகியதாகவும் அங்காளம்மனின் தோற்ற வரலாறு பற்றிய புராணக்கதையில் குறிப்பிடப்படுவதாக இவர் கூறுகின்றார். இந்த கதை மரபும் காட்டேறியின் உண்மை வாழ்வுடன் தொடர்புபடுவதாகவும் பிலவேந்திரன் கூறுகின்றார். அத்துடன் காட்டேறி மீமனித இயல்புகளுடன் தெய்வமாக  தோன்றியதாகவும்  குறிப்பிடுகின்றார்.

இதனைப் போலவே, காட்டேறியம்மனின் தோற்றம் பற்றி மற்றொரு புராண கதையும் நிலவுகின்றது. அதாவது, “காட்டேறி ஒரு காலத்தில் இப்புவியில் பிறந்து வாழ்ந்த ஒரு பெண் என்றும் இப்பெண் கருவுற்றிருந்த காலத்தில் குழந்தையைக் கருவுயிர்க்கும் போது து~;டர்களால் குழந்தையும் அவளும் கொலை செய்யப்பட்டவர்களாவும், இதனால் பூவுலக வாழ்வு இடையிலேயே தடைப்பட்டுக் கொடூரச் சாவு பெற்றவளாக இருந்திருக்கிறாள்.

இதன் காரணமாக நிறைவேறாத ஆசைகளுடன் மீவியல் களத்தில் கோபமுடன் ஓர் ஆவியாக உலவி வருகிறாள்”  என்றும் கூறப்பட்டுள்ளது. இதனடிப்படையில் காட்டேறி மனித நிலையில் வாழ்ந்த பெண் எனக் கொள்ளலாம். இவ்வாறு காட்டேறியின் பூவுலக வாழ்க்கை முழுமையடையாது இடையிலேயே தடைப்பட்டு விட்டதால். மீவியல் களத்தில் கோபத்துடன் திரியும் காட்டேறியை கோபம், சாவு, அச்சம், வெறுப்பு போன்றவற்றின் குறியீடாகவே மக்கள் கருதுகின்றார்கள். பெரும்பாலான பண்பாட்டு விடயங்களில் காணப்படுவது போன்றே தமிழ்ப் பண்பாட்டிலும் கருப்பு நிறம் மேலே குறிப்பிட்ட பண்புகளின் அடையாளமாக காட்டப்படுகின்றது. இதன் காரணமாகவே, காட்டேறியம்மனுக்கான வழிபாட்டில் காட்டேறியாக வேடம் தரிப்பவர் கருப்பு வண்ணத்தைத் தன்மீது பூசிக்கொள்வது குறிப்பிடத்தக்கதாகும். அத்தோடு காட்டேறிக்கான படையல்களும்  கருப்பு நிறத்தில் அமைந்திருக்கின்றது. இவ்வாறான பல விடயங்களை ச.பிலவேந்திரன் தன்னுடைய நூலில் குறிப்பிட்டுள்ளார். 

மேற்கூறிய கதைகளின்  அடிப்படையில் காட்டேறிக்கு தெய்வத் தன்மை அளிக்கப் பெற்று காவல் தெய்வமாக வழிபடப்படுகின்றமையை காணலாம். இதன் காரணமாக து~;ட தெய்வமாகவும், தீங்கு விளைவிக்கும் தெய்வமாகவும் தீயவர்களை அழிக்கும் ஆற்றல் கொண்ட தெய்வமாகவும் கருதி வழிபடுகின்றார்கள் எனலாம். சு.சண்முகசுந்தரம் என்பவர் தன்னுயை நாட்டுப்புற தெய்வக்களஞ்சியம்” எனும் நூலில் “காட்டேறியானது முனீஸ்வரனின் மனைவி என்றும் அத்தோடு கறுப்பு வண்ணத்தில் வீற்றிருக்கும் அம்மன் என்ற தொன்மையான கதையையும்” குறிப்பிடுகின்றார்.

காட்டேறியம்மன் வழிபாடு இடம்பெறுகின்ற இடங்களில் மரபு வழியாக பேணப்படுகின்ற கதைகளும் காணப்படுகின்றன.   யாழ்ப்பாண தென்மராச்சியிலுள்ள பளை பிரதேசத்திலும் காட்டேறி வழிபாடு முக்கியம் பெறுகின்றது. அவர்களை இதனை அரக்கியம்மன் வழிபாடு என்றே கூறுகின்றார்கள். இங்கு பேசப்படுகின்ற கதை மரபானது சற்று வித்தியாசமானதாக உள்ளது. அதாவது உமை அம்மை தினமும் இரவில் சுடுகாட்டுக்குச் சென்று பிணங்களை தின்றதாகவும், அதனை கண்ட சிவபெருமான் இதனை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் உமையம்மை தினமும் செல்லும் வழியில் பெரிய பள்ளம் ஒன்றினை தோன்றி வைத்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது. உமையம்மை செல்லும் வழியில் பள்ளம் இருப்பதனை அறியாது, உமை வழமைப் போலவே தான் சுடுகாட்டுக்கு செல்லும் போது சிவபெருமான் தோன்றிய பள்ளத்தில் விழுந்துவிடுகின்றார். அதன் காரணமாக கோபமடைந்து அந்த பள்ளத்திலேயே தங்கினார் எனவும் கூறப்படுகின்றது. இதனை நினைவு படுத்தும் வகையிலேயே அங்கு அரக்கி அம்மன் வழிபாடு நடைபெறுகின்றது. கதையில் குறிப்பிட்டது போலவே பள்ளம் ஒன்றினைத் தோன்றி அதனை மெழுகி அதனுள்ளே வழிபாடு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இங்கு உமையே காட்டேறியாக கருதப்படுகின்றார்.  அத்துடன் காட்டேறியம்மன் ஊரினைக் காவல் காக்கும் தெய்வமாகவும் மக்களின் குறைகளை நீக்கும் தெய்வமாகவும் வழிபடப்படுகின்றது. இதனை விட சற்று வேறுபட்ட  விதமாக மலையகத்தில் காட்டேறியம்மன் தொடர்பான புராணக்கதை மரபு காணப்படுகின்றது.

மலையகத்தில் நுவரெலியா மாவட்டத்தில் சென்றெகுலஸ் தோட்டத்திலேயெ இவ்வழிபாடு தனித்துவம் பெற்று விளங்குகின்றது. அங்கு மாத்திரமே வழிபடப்பட்டும் வருகின்றது. இங்கு முத்துமாரியம்மனுடைய ஆலயத்தினை அழிக்க து~;டர்கள் பல தடவை  முற்பட்ட போது அதனை பொறுத்துக் கொள்ள முடியாத அம்மன் தன்னுடைய பொறுமையை இழந்து அவர்களை அழிக்க முடிவு செய்கின்றார். இதன் போது அம்மன் து~;டர்களை அழிப்பதற்காக கொடூரமான காட்டேறியாக அவதாரம் எடுக்கின்றார். காட்டேறிக்கு அஞ்சி தப்பி ஓட முனைந்த அத்தனைப் பேரையும் அழித்ததாகவும் அந்த அம்மனே காட்டேறி என்றும் மக்கள் நம்புகின்றார்கள். இவ்வாறு து~;டர்களை அழிக்கும் போது காட்டேறியம்மன் மிகுந்த கோபத்துடனும் ஆவேசத்துடனும் காணப்பட்டமையால் மக்கள் ஒன்றிணைந்து வழிபாடு நடத்தி அதனை சாந்தப்படுத்தியதாகவும் கூறப்படுகின்றது.

இவ்வாறு கூறப்பட்டு வந்த கதை மரபையே மலையகத்தில் நடைபெறுகின்ற காட்டேறியம்மனுக்கான விழாவின் போது செய்து காட்டுகின்றார்கள். இவ்விழாவின் போது காட்டேறியாக ஒருவரும் து~;டர்களாக பதினொரு பேரும் பங்கு பற்றி காட்டேறி அழித்தது போலவே அவர்களை துரத்தி ஊரைச்சுற்றி ஆடி வருவர். இவ்விழாவின் போது காட்டேறியம்மனின் மகிமையையும் அதனுடைய சிறப்பும்  போற்றப்படுவதாக மக்கள் நம்புகின்றனர். மலையகத்தினை பொறுத்தவரை இவ்வழிபாடானது கோபம் கொண்ட காட்டேறியம்மனை சாந்தப்படுத்தவும் திருப்திபடுத்தவுமே வழிபடப்படுகின்றது.

காட்டேறியம்மன் தொடர்பான கதை மரபுகளை வைத்து பார்க்கும் போது ஓரிடத்தில் அங்காளம்மனுடைய துணை தெய்வமாக கருதி காட்டேறியை வழிபடுவதையும், மற்றொரு வகையில்  மானிட பிறவியில் இருந்து தெய்வ நிலை அடைந்த பெண்ணின் மீவியல்பு நிலையை கொண்டதாவும், முனீஸ்வரனுடைய மனைவி என்ற நிலையில் வைத்து வழிபடப்படுகின்ற தன்மையும் காணப்படுகின்றது. அத்தோடு உமையம்மையின் அவதாரமாகவும், அம்மனுடைய அவதாரமாகவும் கருதி வழிபடுகின்றமையையும் குறிப்பிடலாம். 

அத்தோடு பல கதை மரபுகனினுடைய தொன்மமாகவும் காட்டேறியம்மன் காணப்படுகின்றாள். இவ்வாறு காட்டேறியம்மன் தொடர்பாக நிலவுகின்ற வௌ;வேறு கதை மரபுகளின் அடிப்படையில் ஒவ்வொரு இடத்திலும் வேறுபட்ட வகையில் பூசை விழாக்கள் இடம்பெற்று வருவதையும் குறிப்பிடலாம். குறிப்பாக, இலங்கையின் வடபகுதியில் அரக்கியம்மன் வழிபாடு என்ற ரீதியில் வழிபடப்படுவதையும், கிழக்கு பகுதியில் து~;ட தெய்வமாக வழிபடுகின்றமையையும் மலையகத்தில் காவல் தெய்வமாகவும் வழிபடப்படுவதையும் காணலாம். இவ்வாறே காட்டேறியம்மன் வழிபாடும் மற்றும் பெண் தெய்வ வழிபாட்டில் காட்டேறியம்மனின் முக்கியத்துவம் அதனுடன் தொடர்புடைய புராணக் கதைகள்;  என்பன காணப்படுகின்றன.

காட்டேறியம்மன் வழிபாட்டு நடைமுறைகள்
காட்டேறியம்மன் வழிபாட்டில் பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்ற போதிலும் பிரதான ஐந்து அம்சங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
 1. ஊர் பொது மயானத்தில் இருந்து மண் எடுத்து வருதல்.
 2. காட்டேறியாக வேடமிடல்.
 3. ரோதைமுனி வழிபாடு.
 4. காட்டேறியம்மனுடைய ஊர்வலம்.
 5. கோயில் பூசையும், நீராடலும். 


ஊர் பொது மயானத்தில் இருந்து மண் எடுத்து வருதல்.
காட்டேறியம்மனுடைய வழிபாட்டில் முக்கியமான நிகழ்வுகளாக இடம்பெறுபவை காட்டேறி வழிபாட்டுக்கான ஆயத்தங்களாகும். காட்டேறிக்கான வழிபாடு நடைபெறுவது ஊர்த் திருவிழா தொடங்கி அது நிறைவடையும் நாளான செவ்வாய்க்கிழமை ஆகும். அதற்கு முந்திய நாளான திங்கட்கிழமையிலிருந்தே வழிபாட்டிற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதன் போது காட்டேறியாக வேடமிடுபவர் திங்கட்கிழமை நள்ளிரவு பன்னிரண்டு மணியளவில் ஊர் பொது மயானத்திற்கு செல்வார். இவர் அங்கு செல்வதன் நோக்கம் மயான மண் எடுத்து வருவதற்கே ஆகும்.

காட்டேறியம்மன் வழிபாட்டினை பொறுத்தவரை மயான மண்ணானது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. ஏனெனின் மயான மண்ணிலே காட்டேறியம்மனுக்கு சக்தி இருப்பதாக மக்கள் நம்புகின்றார்கள். இதற்கு மற்றொரு காரணமும் உள்ளது. அதாவது காட்டேறியானது மயானத்தில் உறைவதால் மயானக் காளி என்று அழைக்கப்படுகின்றது. இதனால் அவள் உறையும் இடத்தின் மண் காட்டேறியம்மன் வழிபாட்டில் முக்கியத்துவம் பெறுவதாகவும் கருதலாம். மேலும் மயானத்தில் உறைபவளை குறிப்பிட்ட நாளன்று ஊருக்குள் அழைத்து வரும் நிகழ்வாகவும் இதனைக் கொள்ளமுடியும். ஆரம்பக்காலத்தில் காட்டேறியாக வேடமிடுபவர் தனியாக மயானத்திற்குச் சென்று யாருக்கும் தெரியாது மண் எடுத்து வருவது வழக்கமாகும். ஆனால் தற்போது அவருடன் ஊர் பெரியவர்கள் சிலரும் செல்வார்கள். அவ்வாறு செல்பவர்கள் மயானத்தினை அண்மித்ததும் நின்று விடுவார்கள். அவர் தனியாகவே சென்று மண் எடுத்து வருவார்.

அவர் எங்கு மண் எடுக்கின்றார், எப்படி எடுக்கின்றார் என்பதனை இதுவரையில் யாருமே பார்த்தது கிடையாது. காட்டேறியம்மன் து~;டர்களை அழிப்பதற்காக பேய் சக்தியை பெற வேண்டியே மயான மண் எடுத்து வரப்படுவதாகவும், மயான மண்ணிலே காட்டேறி உருக்கொண்டு ஆடுவதாகவும் நம்பப்படுகின்றது. மேலும் இந்தியாவில் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் காட்டேறியம்மன் வழிபாட்டிலும் இதே போன்ற நடைமுறை அம்சங்கள் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறு முதல் நாள் இரவு கொண்டு வரப்பட்ட மண்ணை ஊர் பெரியவர்கள் சிலர் காலையில் ஒன்றாக கூடி அதனை சுத்தப்படுத்தி எடுத்து வைப்பர். காட்டேறியாக வேடமிட்டு ஆடுபவர் அந்த மண்ணை வைத்திருப்பார். காட்டேறியம்மன் வழிபாட்டில் இந்த நடைமுறையானது சிறப்பு வாய்ந்த ஒன்றாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

காட்டேறியாக வேடமிடல்.
காட்டேறியம்மன் வழிபாட்டில் மற்றொரு சிறப்பம்சம் வேடமிடுவதாகும். காட்டேறியம்மன் வழிபாட்டில் காட்டேறியாக ஒருவரும் து~;டர்களாக பதினொரு பேரும் வேடமிடுவார்கள். இவ்வழிபாட்டில் காட்டேறியாக வேடமிடுபவரே பிரதானமாக காணப்படுகின்றார். அவரை முன்னிறுத்தியே காட்டேறியம்மன் வழிபாடு இடம்பெற்று வருகின்றது. காட்டேறியாக வேடமிடுபவர் விரதம் மேற்கொள்வார். வழிபாடு முடிந்த பின்னரே விரதத்தினை இவர் முடிப்பார். இவர் நீண்ட கருப்புத் தலைமுடியை அணிந்திருப்பார். அத்தோடு கருப்பு நிற ஆடையும், பெரிய சலங்கையும்  அணிந்திருப்பார். மேலும் இவர் தன்னுடைய உடல் முழுவதும் கருப்பு நிறத்தினை பூசியிருப்பார்.

அத்தோடு கழுத்தில் தேசிக்காய் மாலை அணிந்திருப்பார். இடுப்பிலும் சலங்கை போன்று கட்டியிருப்பார். ஆட்டின் நாக்கு என்று சொல்லப்படுகின்ற நாக்கு போன்ற ஒன்றினைத் தொங்குவது போன்று வைத்திருப்பார். பார்ப்பதற்கு அச்சம் தருகின்ற தோற்றத்தில் அவர் காணப்படுவார். அவருடைய தோற்றமானது உண்மையில் காட்டேறி இவ்வாறு தான் இருக்கும் என்று எண்ணும் படியாக அமைந்திருக்கும். இவரை மக்கள் பயத்துடனும், பக்தியுடனும் வழிபடுவதனைக் காணலாம். இவ்வாறு வேடமிட்ட இவர் மிகுந்த ஆவேசத்துடன் ஆடி வருவார்.

காட்டேறியம்மன் போன்றே து~;டர்களாக  பதினொரு பேர் வேடமிடுவார்கள். இவர்கள் பார்ப்பதற்கு அரக்கர்களை போன்று தோற்றமளிப்பார்கள். இவர்களும் கருப்பு நிறத்தாலான ஆடைகளையும் பெரும் ஓசை எழுப்புகின்ற சலங்கைகளையும் அணிந்திருப்பார்கள். இவர்களும் தங்களுடைய உடல் முழுவதும் கருப்பு நிறத்தினை பூசியிருப்பதுடன் தலையில் கருப்பு பட்டி ஒன்றையும் கட்டியிருப்பார்கள். உடலில் பூசிய கருப்பு நிறத்தில் வெள்ளை நிற புள்ளிகளையும் வைத்திருப்பார்கள். காட்டேறியாக ஆடுபவர் கையில் முறம்(சுளகு) வைத்திருப்பார். து~;டர்களாக ஆடுபவர்கள் கையில் இடிப்பதற்கு பயன்படும் உலக்கையை வைத்திருப்பார்கள்.

இவர்கள் கையில் உலக்கை வைத்து ஆடுவது அம்மனுடைய ஆலயத்தினை து~;டர்கள் உடைப்பதற்காக சென்றமையை அடையாளப்படுத்துவதாக உள்ளது. காட்டேறியாக ஆடுபவர் கையில் முறம் வைத்து ஆடுவதற்கான காரணம் என்னவெனில் கெட்டவற்றையும் மற்ற தீயசக்திகளையும் விரட்டியடிக்கும் போது முறம் கொண்டு விரட்டுவதற்கான ஓர் அடையாளமாக காட்டேறியும் தீயவர்களை அழிப்பதற்காக முறம் வைத்து ஆடுவதாக கொள்ளலாம். காட்டேறியம்மன் வழிபாட்டில் இவ்வாறு இடம்பெறும் நிகழ்வானது மாதிரிச் செய்தல் என்னும் தன்மையினை வெளிப்படுத்துவதாகவும் கருதமுடியும்.

மேலும் இன்னும் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால் இந்த காட்டேறியம்மனுடைய வழிபாட்டில் வேடமிட்டு ஆடுகின்றவர்கள் அனைவரும் ஆரம்பக் காலத்திலிருந்து பரம்பரை பரம்பரையாக இவ்வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் தந்தைக்கு பின் மகன் என்ற ரீதியில் அவர்கள் பங்குபற்றி வருகின்றார்கள். இந்த வழிபாட்டில் ஈடுபடுபவர்கள் பக்தியுடனும் மிகுந்த சுத்தமாகவும் இருப்பதுடன் வழிபாடு நடைபெறும் நாளன்று சைவ உணவை உண்பவர்களாகவும் இருப்பார்கள்.

ரோதைமுனி வழிபாடு
காட்டேறியம்மன் வழிபாட்டில் ஈடுபடுகின்ற பன்னிரண்டு பேரும் வேடமிட்டதன் பின்னர் முதலில் ஊர் எல்லையில் காணப்படும் ரோதைமுனிக்கான பூசைகளை செய்வார்கள். பொதுவாக ரோதைமுனிக்கான பூசைகள் கோழி, ஆடு என ஏதாவது ஒன்றை பலியிட்டு வழிபாடு நடாத்துவர்.  ஆனால் காட்டேறியம்மன் வழிபாட்டின் போது பலி கொடுக்கப்படமாட்டாது. ஏனெனின் காட்டேறியம்மன் வழிபாட்டில் அம்மனுடைய ஆலயமும் தொடர்புப் படுத்தப்பட்டிருப்பதன் காரணமாக, வெறுமனே தீப ஆராதனை மட்டும் காட்டி பூசை செய்வார்கள்.

காட்டேறியம்மனுடைய வழிபாட்டில் முனிக்கான வழிபாடு முதன்மைப் படுத்தப்படுவதற்கு காரணம் காட்டேறியம்மனைப் போன்று முனியும் அச்சத்தினை தரக்கூடிய சிறுதெய்வமாக மக்களால் வழிபடப்படுகின்றார். மேலும் காட்டேறியம்மனுக்கான வழிபாடு நடைபெறும் போது எவ்விதமான தடங்கல்களும் ஏற்படக்கூடாது என்பதற்காகவும் ஊரின் பிரதான காவல் தெய்வமாக ரோதைமுனி காணப்படுதனால் அனைவரையும் காத்து அருள்புரிய வேண்டும் என்பதற்காகவும் முனி வழிபாடு இடம்பெறுவதாக மக்கள் எண்ணுகின்றார்கள். காட்டேறியம்மன் து~;டர்களை அழிப்பதற்கு தேவையான அதீத சக்தியை பெறவேண்டியும் காட்டேறியம்மன் வழிபாட்டில் முனி வழிபாடு முக்கியத்துவம் பெறுகின்றது.

மேலும் நாட்டார்த் தெய்வங்களுக்கே உரித்தான முறையில்  முனிக்கான வழிபாடுகளும் நடைபெறுகின்றன. காட்டேறி வழிபாட்டில் பங்குபற்றுபவர்கள் ரோதைமுனியை வழிபடும் போது காட்டேறியாக வேடமிட்டவர் அருளாடுவதும் உண்டு. ரோதைமுனி பூசையின் பின்னரே காட்டேறி வழிபாட்டினைத் தொடங்க வேண்டும் என்ற நடைமுறையானது ஆரம்பக்காலத்தில் இருந்து இன்றுவரை எவ்வித வேறுபாடும் இன்றி கடைப்பிடிக்கப்பட்டு வருவதனையும் குறிப்பிடலாம். காட்டேறி வழிபாட்டில் ரோதை முனியை தொடர்புபடுத்துவதற்கான காரணங்களை ஊகிக்க முடிகின்றதே தவிர, அதற்கான சரியான நோக்கத்தினை முழுமையாக அறியமுடியவில்லை. ஊரில் காணப்படுகின்ற ரோதைமுனிக்கான வழிபாட்டிடம் கீழே காட்டப்பட்டுள்ளது.

 சென்றெகுலஸ் தோட்ட ரோதைமுனி ஆலயம்
காட்டேறி அம்மன் ஊர்வலம்
காட்டேறியம்மனுடைய வழிபாட்டில் ரோதைமுனிக்கான பூசை இடம்பெற்ற பின்னர் வேடமிட்டவர்கள் ஊரைச் சுற்றி ஊர்வலமாக ஆடிவருவார்கள். காட்டேறியாக வேடம் தாங்கியவர் கையில் முறம் வைத்துக் கொண்டு ஆவேசமாக ஆடிவருவார். அவருக்கு முன்னால் து~;டர்களாக வேடமிட்ட பதினொரு பேரும் கையில் உலக்கையை வைத்துக் கொண்டு ஆடிவருவர். காட்டேறியாக ஆடுபவர் அருளுடனே ஆடுவார். இவருக்கு முன்னால் ஆடி வருபவர்கள் காட்டேறியை கோபமடைய செய்வது போல ஆடுவார்கள். அவர்கள் கோயிலை இடிப்பது போல உலக்கையால் சைகை செய்து ஆடி வருவார்கள். இதன்போது கோபமடைந்த காட்டேறி அவர்களை   விரட்டிக் கொண்டு ஓடிவார். இதன் போது தன்னுடைய கையில் வைத்திருக்கும் முறத்தால் அவர்களை வீசியடிப்பார். இதன் போது சிலர் அடிவாங்குவதும் உண்டு. காட்டேறியாக ஆடிவருபவரை ஒருவர் பின்னால் பிடித்திருப்பார். இந்த காட்டேறியம்மன் ஊர்வலமானது ரோதைமுனி ஆலயத்திலிருந்து ஆரம்பித்து ஊரினை சுற்றி பின்னர் ஊரிலுள்ள பிரதான அம்மன் ஆலயத்தினை வந்தடைவது குறிப்பிடத்தக்கதாகும்.

ஊரின் மத்தியில் காணப்படும் வெட்ட வெளியில் நின்று நீண்ட நேரம் ஆடுவார்கள். இவ்வழிபாட்டினை கண்டுகளிப்பதற்காக பல ஊர்களில் இருந்தும் பெருந்திரளான மக்கள் கூடியிருப்பார்கள் இவர்கள் ஆர்வத்துடனும் பக்தியுடனும் காட்டேறியம்மனை வழிபடுவதை காணலாம். இங்கு வந்திருப்பவர்களில் பெரும்பாலானோர் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதற்காகவும், இன்னும் சிலர் புதிதாக நேர்த்திக் கடன்களை முன்வைப்பதற்காகவும் கூடியிருப்பார்கள்.     இந்த காட்டேறியம்மனுடைய வழிபாட்டில் பல்வேறு காரணங்களுக்காக நேர்த்திக்கடன்கள் முன்வைக்கப்படுகின்றன.  பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய மனதால் காட்டேறியம்மனை வேண்டி நேர்த்திக்கடன்களை முன்வைக்கின்றார்கள். பொதுவாக நீண்ட நாள் நோய்வாய்பட்டவர்கள் நோய் குணமாக வேண்டியும், குழந்தை பேறு இல்லாதவர்கள் குழந்தை வேண்டியும், திருமணம் கைக்கூடாதவர்கள் விரைவாக நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்றும் காட்டேறியம்மனை வழிபடுகின்றார்கள். முதல் வருடம் நேர்த்திக்கடன்களை முன்வைத்து வழிபட்டால் அடுத்த வருடம் அது நிறைவேறி அதற்கான நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக வருவதாகவும் பொது மக்கள் காட்டேறியை நேர்ந்துக் கொள்கின்றார்கள். காட்டேறியம்மன் ஊர்வலமாக ஆடிவரும் போது நேர்த்தி வைத்தவர்கள் பால், முட்டை, கோழி என்பவற்றை வழங்கி அதனை நிறைவேற்றுவதையும் காணலாம். காட்டேறியாக ஆடிவருபவர் இவற்றை பெற்றுக் கொள்வதுடன் வழிபடுகின்றவர்களுக்கு அருள்வாக்கு கூறி திருநீறு வழங்குவார். இவர் ஆடிவரும் போது ஏதாவது தீய சக்திகள் யாரையாவது பிடித்திருந்தால் அவர்களைத் தேடிப் பிடித்து அவர்களை அடித்து, அவர்களுக்கு திருநீறு வழங்கி ஆசிர்வதிப்பார். காட்டேறியாக ஆடிவருபவரை மக்கள் அம்மனுடைய அவதாரமாக கருதுவதுடன், காளியாகவும் எண்ணி மிகுந்த பயபக்தியுடன் வழிபடுவதையும் காணலாம். இதன் காரணமாகவே காட்டேறியை மயானக்காளி என்றும் ஊர் மக்கள் அழைக்கின்றார்கள். காட்டேறி ஊர்வலமாக ஊரைச்சுற்றி வருவதன் நோக்கம் ஊரையும் ஊர் மக்களையும் பாதுகாக்கவும் எந்த தீயசக்தியும் ஊரினுள் வந்துவிடாமல் அதனை தடுப்பதற்காகவுமே ஆகும்.

மேலும் காட்டேறியை வழிபட்டால் எல்லா நன்மையும் கிடைக்கும் என்று ஊர் மக்கள் மட்டுமன்றி அதனை பார்ப்பதற்காக வருகின்ற மக்களும் தீவிரமாக நம்புகின்றார்கள். இதனை பார்ப்பதற்காக வருகின்ற மக்கள் கூட்டம் வருடத்துக்கு வருடம் அதிகரித்து செல்வதாகவும் ஊர் மக்கள் தெரிவிக்கின்றார்கள். இந்தக் காட்டேறியம்மனுடைய ஊர்வலக் காட்சியை கண்டு களிப்பதற்காக ஆண்,பெண் இருபாலாரும் மிகுந்த மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் கலந்து சிறப்பிப்பதனையும் சென்றெகுலஸ் தோட்டத்தில் காணலாம்.

காட்டேறியம்மனுடைய ஊர்வலத்தின் போது தப்பு வாத்தியம் மட்டுமே இசைக்கப்படும். இந்த தப்பு இசையானது இந்தியாவின் பெரம்பூர் என்னும் இடத்திலிருந்து ஆரம்பக் காலத்தில் கொண்டுவரப்பட்டதாகும். இந்த தப்பு இசைக்கு ஏற்பவே காட்டேறி உருக்கொண்டு ஆவேசமாக ஆடிவருவதனைக் காணலாம். காட்டேறியம்மனுடைய இந்த ஆவேசமானது து~;டர்களின் மீது கொண்ட கோபத்தின் அடையாளமாகவே கொள்ளப்படுகின்றது. ஏனைய பதினொரு பேரும் அதற்கு ஏற்றது போலவே ஆடிவருவார்கள். இவ்வாறாக காட்டேறியம்மன் ஊர்வலமானது ஊரிலுள்ள பிரதான அம்மன் ஆலயத்தினை வந்தடையும். இந்த ஊர்வலத்தில் பெருந்திரளான மக்கள் கலந்துக் கொள்வதையும் காணக்கூடியதாக உள்ளது. இந்த காட்டேறியம்மன் நடைமுறையானது ஆரம்பக் காலம் தொடக்கம் இன்றுவரை எவ்விதமான மாற்றங்களும் இன்றி கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இதனை ஆரம்பக்காலம் தொட்டு இன்றுவரை ஒருகுழுவைக் கொண்டு நடத்துகின்றமையை குறிப்பிடலாம்.

கோயில் பூசையும், வேடமிட்டவர்கள் நீராடலும்
காட்டேறியாக ஊரைச்சுற்றி ஆடிவந்தவர்கள் இறுதியாக, ஊரிலுள்ள அம்மனுடைய ஆலயத்தினை வந்தடைவார்கள். இதன்போது ஆலயத்தினை ஒருமுறை சுற்றி ஆடிவருவார்கள். பின்னர் வேடமிட்டவர்கள் அனைவரும் ஆலயத்தினுள் சென்று அம்மனுக்கு முன்னால் நிலத்தில் வீழ்ந்து வணங்குவார்கள். இதன் போது ஆலயத்தில் அம்மனுக்கான பூசைகள் இடம்பெறும். இந்த ஆலயமானது எண்பது ஆண்டுக்கால பழமை வாய்ந்ததாகும். ஆரம்பக்காலத்தில் எவ்வாறு காணப்பட்டதோ அது போலவே இன்று வரை காணப்படுகின்றது. இவ்வாலயம் சிறிய அளவில் கட்டப்பட்ட ஆலயமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

காட்டேறி வழிபாட்டின் இறுதியில் அம்மன் ஆலயத்தில் பூசைகள் இடம்பெறுவதற்கான காரணம் என்னவெனில் ஆலயத்தினை உடைக்க முற்பட்ட து~;டர்கள் அத்தனை பேரையும் காட்டேறியாக அவதாரம் எடுத்து அம்மன் அழித்ததன் பின்னர் அம்மனுயை கோபத்தினை சாந்தப்படுத்தவும், அவளை திருப்திபடுத்துவதற்காகவுமே இறுதியாக அம்மனுக்கான பூசைகள்;. நடைபெறுகின்றன. அதாவது து~;டர்களை அழித்த அம்மனை புனிதமாக்குவதற்காக இவ்வழிபாடு இடம்பெறுவதாகவும் மக்கள் கருதுகின்றார்கள். பூசை இடம்பெற்று முடிந்ததும் வழிபாட்டில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் விபூதி பிரசாதம் வழங்கப்படும். அத்தோடு காட்டேறியாக வேடமிட்டு ஆடியவரிடத்திலும் மக்கள் விபூதி பெறுவார்கள்

கோயில் பூசை முடிவடைந்ததும் வேடமிட்டவர்கள் அனைவரும் ஊரில் காணப்படும் நீர்நிலையில் நீராடுவார்கள். இதற்கான காரணம் காட்டேறி து~;ட தெய்வம் என்பதனாலும் அது அச்சத்தினை தரக்கூடியதாக இருப்பதனாலும் காட்டேறி பின் தொடரும் என்று அஞ்சியே அவர்கள் விழா முடிந்தவுடன் நீராடுகின்றார்கள். இவ்வாறு நீராடும் போது மயானத்திலிருந்து கொண்டு வரப்பட்ட மண்ணையும் நீரில் கரைத்துவிடுவார்கள். இதன் பின்னர் மீண்டும் ரோதைமுனி ஆலயத்தில் சூடம் ஏற்றி வழிபட்ட பின்னர் காட்டேறியாக வேடமிட்டவரின் வீட்டிற்கு பங்குபற்றிய அனைவரும் செல்வார்கள்.

இதன் போது வேடமிட்டு ஆடியவர்கள் அத்தனைப் பேருக்கும் கண்ணூறு கழித்து ஆரத்தி எடுத்ததன் பின்னரே வீட்டினுள் செல்வார்கள். வீட்டில் சுவாமி படத்தின் முன் சமைத்த உணவை படையல் வைத்து வழிபட்டதன் பின்னர் அனைவரும் உணவு உண்ணுவார்கள். இவ்வாறே காட்டேறியம்மனுக்கான வழிபாடு இடம்பெற்று பின்னர் இனிதே நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இன்றுவரை எவ்விதமான மாற்றமும் இந்த நடைமுறையில் இடம்பெறவில்லை என்பதும் முக்கியமான விடயமாகும்.

முடிவுரை

பாரம்பரிய கலாசார முறைகள் மற்றும் பண்பாடுகள் தற்காலத்தில் அழிந்து வருவதாக கூறப்படுகின்றது. ஆன்மிகம், கலாசாரம், பண்பாடு, பழக்கவழக்கங்கள், விழுமியங்கள் என்பனவற்றினை விடுத்து நவீனத்துவத்திற்கு ஏற்ப தன்னை தயார் படுத்தக்கூடிய நிலைக்கு இளைய சமூகம் தன்னை இசைவாக்கப்படுத்திக்கொண்டிருக்கின்றது. இவ்வாறாதொரு காலக்கட்டத்தில் பாரம்பரியம், பண்பாடு என்பவற்றை தொடர்ச்தேர்ச்சியமாக பின்பற்றி வருகின்றவர்களை விரல் விட்டு எண்ண வேண்டி இருக்கின்றது. அதன் அடிப்படையில் இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை எவ்வித தடங்களுமின்றி இக்காட்டேரி அம்மன் வழிபாட்டை சிறப்பாக நடாத்தி வரும் சென்றெகுலஸ் தோட்ட மக்கள் பெருமைக்குரியவர்கள் என்றே கூறலாம். வரும் காலங்களில் இளையத்தலைமுறையினரும் இவ்வழிபாட்டினை தொடர்ந்தும் முன்னெடுத்து மலையக கலை, கலாசாரங்களை பாதுகாக்க வேண்டும். அத்துடன் அவ்வாறு முன்னெடுத்து செல்பவர்களுக்கு ஊக்கமளித்து தொடர்ந்தும் முன்னெடுத்துச்செல்வதற்கான உற்சாகத்தினை வழங்க வேண்டும்.

ஆரம்ப காலத்தில் காமன் கூத்து, அர்ச்சுணன் தபசு போன்ற கூத்து வகைகள் மலையகத்தில் பெரும்பாலான பாகங்களில் நடைபெற்று வந்தன. ஆனால் இன்று மிகக்குறைவான தோட்டங்களிலே இக்கூத்துக்கள் இடம்பெற்று வருவதை காணலாம். ஒரு இனத்தின் அடையாளம், பண்பாடுகள் கட்டாயம் பாதுகாக்கப்பட வேண்டும். இதனை உணர்ந்து இளைய தலைமுறையினர் செயற்பட வேண்டும்.

நன்றி - உவங்கள்
...மேலும்

Oct 28, 2016

ரிசப்ஷனிஸ்ட் டூ பெப்சிகோ சி.இ.ஓ.! இந்திராவின் நூயியின் வெற்றிக்கதை                             
'இந்திரா நூயி'...உலக வர்த்தக மற்றும் பொருளாதாரத்தில் வலிமைமிக்க குரலாக ஒலித்துக்கொண்டிருக்கும் இவரது பிறந்த நாள் இன்று. உலகின் முன்னணி உணவு மற்றும் குளிர்பானமான நிறுவனமான 'பெப்சிகோ'வின் தலைமைச் செயல் அதிகாரியாகவும், தலைவராகவும் பணியாற்றி வரும் இந்திரா நூயியின் வளர்ச்சி பலருக்கும் முன் உதாரணம். 

'முடிந்தால் முடியாதது ஏதுமில்லை' 'மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் சிறியதே' என அடுக்குமொழி வசனங்களை எளிதாகப் பேசலாம். ஆனால் இதெல்லாம் சாத்தியமில்லை எனச் சொல்வோர்க்கு இவர் ஒரு நிகழ்கால சான்று. 1955-ம் ஆண்டு அக்டோபர் 28-ம் தேதி சென்னையில் பிறந்த இவரது முழுப்பெயர் இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி. இவரின் வளர்ச்சி மிகவும் நிதானமாகவும் ஆரவாரமின்றியே இன்றியே நிகழ்ந்துள்ளது. சென்னை கிறிஸ்டியன் கல்லூரியில் பி.எஸ்ஸி படிப்பும், கொல்கத்தா ஐ.ஐ.எம் கல்வி நிறுவனத்தில் எம்.பி.ஏ படிப்பும் முடித்த கையோடு சிறிது காலம் ஏ.பி.பி என்னும் வர்த்தக நிறுவனத்திலும், பின் 'ஜான்சன் அண்ட் ஜான்சன்ஸ்' நிறுவனத்தில் புராடக்ட் மேனேஜராகவும் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். தொடர்ந்து சென்னை பியர்ட்செல் ஆடை நிறுவனத்தில் பணி செய்தார். தன்னுடைய பணி வெற்றிகரமாக இருந்தாலும் கார்ப்பரேட் உலகில் நிலவும் போட்டியை எதிர்கொள்ள எம்.பி.ஏ படித்தது போதாது தனக்கு நெருங்கிய பலரிடமும் தெரிவித்தார். அதனால் தனது வேலையை விட்டுவிட்டு, அமெரிக்காவின் 'யேல்' பல்கலைக்கழகத்தில் பப்ளிக் மற்றும் பிரைவேட் மேனேஜ்மென்ட் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

தான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயத்திலேயே படிப்பு செலவுக்காக ஒரு நிறுவனத்தில் பார்ட் டைம் ரிசப்ஷனிஸ்டாக பணியாற்றினார். குறிப்பாக தன்னுடைய ரிசப்ஷனிஸ்ட் பணியை எப்போதும் மறக்க முடியாத அளவுக்கு பல தொழில் அனுபவங்களை அப்பணி எனக்குக் கற்றுக்கொடுத்தது  என அடிக்கடி நண்பர்களிடம் பகிர்ந்துகொள்வார். முதுகலைப் பட்டம் பெற்றதும் மோட்டோரோலா, ஏசியா பிரவுன் பொவரி உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு இறுதியாக 1994-ம் ஆண்டு பெப்சி குளிர்பான நிறுவனத்தில் Strategic Planning & Development பிரிவின் துணைத் தலைவராக சேர்ந்தார். பெப்சி நிறுவனத்தில் சேர்ந்த பிறகு இவரது வாழ்க்கையும், அந்நிறுவன வளர்ச்சியும் உலகம் முழுக்கவும் புகழ்பெற்றன. 

பெப்சி நிறுவனத்தில் சேர்ந்ததும், 'தற்போதைய நம் வளர்ச்சியும், முன்னேற்றமும் போதாது. இன்னும் நம் தயாரிப்புகளை உலகின் அனைத்து பகுதிகளுக்கும் எளிதில் கிடைக்கச் செய்ய வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒன்றாக கூட்டு முயற்சியுடன் பணியாற்ற வேண்டும்' என அடிக்கடி சக ஊழியர்களிடம் சொல்வார். சொல்வதோடு மட்டுமில்லாமல் ஊழியர்களுடன் சேர்ந்து தயாரிப்பு, சேகரிப்பு, விற்பனை, கள ஆய்வு போன்ற பல பணிகளை தானே நேரடியாக களம் இறங்கினார். வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்து அதற்கேற்ப பெப்சி மற்றும் இதர விற்பனைப் பொருட்களின் வடிவம், அளவு, தரம் ஆகியவற்றில் பல மாறுதல்களைப் புகுத்தினார். இவரது வருகைக்குப் பிறகு 45 ஆண்டுக்கும் மேலான அந்நிறுவன வளர்ச்சி பெரிய முன்னேற்றப் பாதைக்குச் சென்றது. இதனால் 2006-ம் ஆண்டு அந்நிறுவனத்தின் ஐந்தாவது தலைமைச் செயல் அதிகாரியாக உயர்ந்தார்.

தொடர்ந்து முந்தைய வேகத்தையெல்லாம் விட கூடுதல் உத்வேகத்துடன் உழைத்தார். உலகின் அனைத்து நாடுகளுக்கும் சென்று, பல தொழிலதிபர்களையும், மக்களையும் சந்தித்துப் பேசினார். தான் சி.இ.ஓ-வாக இருந்தாலும் சக ஊழியர்களுடன் தானும் ஓர் ஊழியர் போலவே எளிமையாகப் பழகினார். உலகம் முழுக்க அந்நிறுவன கிளைகள் அதிகமாகவே நிறுவப்பட்டது. ஒவ்வொரு நாட்டிலும், குறிப்பிட்ட மாநிலங்களுக்குள்ளாக அந்த மக்களுக்குப் பரிட்சயமான பிரபலங்களைக் கொண்டு பெப்சி விளம்பரங்களைப் பல வித்தியாசமான முறையில் விளம்பரப்படுத்தினார். இந்தியாவில் முன்னணி விளையாட்டு வீரர்கள், திரைப்பட நட்சத்திரங்களைக் கொண்டு பெப்சி குளிர்பானத்திற்கான விளம்பரங்களை அதிக அளவில் செய்தார். இதனால் உலகம் முழுக்க பெப்சியின் விற்பனை வளர்ச்சி கணிசமாக உயர்ந்தது. குறிப்பாக பெப்சியின் விற்பனை வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு மிக அதிகம். இந்தியாவில் விற்பனையாகும் முதல் ஐந்து குளிர்பானங்களில் பெப்சியும் ஒன்று.

இந்திராவின் திறமைக்கு சி.இ.ஓ பதவியுடன் கூடுதலாக 2007-ம் ஆண்டு அந்நிறுவனத்தின் தலைவர் பொறுப்பும் அவரைத் தேடிவந்தது. ஃபார்ச்சுன் பத்திரிகையின் 2006, 2007, 2008, 2009-ம் ஆண்டுகளின் உலகின் வலிமைமிக்க பெண்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனைப் படைத்தார். அந்தச் சமயங்களில் ஓர் இந்தியப் பெண்மணியாக உலகம் முழுக்க இவரது பணித் திறன் பெருமையாக பேசப்பட்டது.

படிப்பைத் தீவிரமாக காதலிப்பவர்; படித்தால்தான் அனைவருமே பல சாதனைகளை புரிய முடியும். குறிப்பாக பெண்கள் கல்வி கற்பதால் எளிதாக உயர்வடைய முடியும் எனச் சொல்லும் இவரது பிடித்தமான செயல்பாடு ஓய்வு நேரங்களில் பெரும்பாலும் புத்தகங்கள் படிப்பதுதான். மாறிவரும் காலச்சூழலுக்கும் புதுப்புது ரசனைகளுக்கும் மாற்றங்களுக்கும் ஏற்ப தனிப்பட்ட முறையிலும் ஒரு நிறுவனத்தின் தலைவர் என்ற முறையிலும் தன்னை மேம்படுத்தியும், அப்டேட் செய்து கொண்டேயும் இருப்பார். புதுப்புது விஷயங்களைத் தயக்கமின்றி தெரிந்தவரிடம் கற்றுக்கொள்வார். இதனால்தான் ஒன்பது ஆண்டுகளாக தொடர்ந்து பெப்சி நிறுவனத்தின் தலைவராகவும், உலகின் முன்னணி வர்த்தக ஆளுமைப் பெண்மணியாகவும் திகழ்கிறார். குறிப்பாக பெப்சி குளிர்பானங்களைத் தடைசெய்ய வேண்டும் என இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் எதிர்ப்புகுரல் ஒலிக்கும் அதே வேளையில், அப்பிரச்னைகளை தகர்த்து நிறுவனத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்லும் இவரது உறுதியான செயல்பாடு பலரும் பாராட்டும்படியாகவே இருக்கிறது. உலகில் அதிகம் சம்பாதிக்கும் நபர்களில் ஒருவராக கருதப்படும் இந்திரா, ஒரு நிமிடத்திற்கு பல ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

குறிப்பாக இந்திரா நூயின் வழிநடத்தும் திறனும், தொலைநோக்குத் திறனும், உழைப்பும், இலக்கை சரியாக எய்தும் திறனும், பிரச்னைகளை எதிர்கொள்ளும் திறனும், மிகப்பெரிய நிறுவன தலைவராகவும் பெரிய பொறுப்பில் இருக்கிறேன் என்பதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருப்பது இவரது தனிச்சிறப்புகளில் ஒன்று. அத்தகைய குணங்கள்தான் அவரை எளிதாக உயர்வடையச் செய்கிறது என அந்நிறுவன ஊழியர்களும் பல தொழிலதிபர்களும் அடிக்கடி சொல்வார்கள். ஒரு முன்னணி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் தலைவர் பொறுப்புகளுக்கு நீ, நான் என ஆண்களுக்குள்ளே நேரடியாகவும், மறைமுகமாகவும் மோதிக்கொள்ளும் காலச்சூழலில் ஒரு பெண்ணாக பெப்சி நிறுவனத்தை நிர்வகிக்கும் இவரது ஆளுமை வியக்கத்தக்கதே. இதுகுறித்து இவரிடம் கேட்டால், "ஒரு பெண்ணாக இவ்வளவு பெரிய உயரத்தை அடைந்திருக்கிறீர்களே? இது எப்படி சாத்தியம் எனப் பலரும் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். நான் ஓர் ஆணாக இருந்திருந்தால் தற்போதைய வளர்ச்சியை அடைய இதுவரை நான் செலவழித்த உழைப்பில் பாதியை மட்டும் செலவழித்திருந்தாலே போதுமானதாக இருந்திருக்கும். ஆனால் நான் ஒரு பெண்மணியாக இருப்பதால் பல தடைகளைத் தாண்டி ஓர் ஆணை விட இருமடங்குக்கும் அதிகமாகவே உழைத்திருக்கிறேன். என் உழைப்பிற்காக நான் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன். ஆனால் இது ஒரு வியக்கத்தக்க வளர்ச்சி அல்ல. இன்னும் சாதிக்க நிறைய இருக்கிறது. இதைவிட பெரிய உயரத்தை அடைய வேண்டும். அதற்குள்ளாக இந்த வளர்ச்சியையே பெரிதாக பேசினால் எப்படி?" என்கிறார். 

இவரது சிகை அலங்காரமும், ஆடைத்தேர்வுகளும் பலரும் ரசிக்கும் வகையில் தனித்துவமாக இருக்கும். குறிப்பாக இவரது சிரிப்பு பலரையும் வெகுவாக ஈர்க்கும் வகையில் இருக்கும் எனப் பலரும் அவரிடமே தெரிவிப்பார்கள். அப்போது அவரது ரியாக்‌ஷன்.... மீண்டும் ஒருமுறை சிரிப்பது மட்டுமே. இவரது கணவர் ராஜ் கிஷான் நூயி. இவரது பிள்ளைகள், பிரீத்தா மற்றும் டாரா. வணிகத்தில் புகழ்பெற்றது போலவே குடும்பத் தலைவியாகவும், தாயாகவும் தன் பணியை சிறப்போடு செய்துவருகிறார். இந்திரா நூயி...பெண்களைப் புகழும் ஓட்டுமொத்த உலகிற்கான குரல்களில் தவிர்க்க முடியாதது. 'மீண்டும் ஒன்ஸ் அகைன் ஹேப்பி பர்த்டே... இந்திரா நூயி'.

* 2008-ம் ஆண்டில் அமெரிக்க இந்திய வணிகக் கவுன்சில் (USIBC) தலைவரானார்.
* 2007-ம் இந்தியாவின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருதினைப் பெற்றார். 
* போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட 2016-ம் ஆண்டிற்கான உலகின் சக்திவாய்ந்த டாப் 25 பெண்கள் பட்டியலில் 15-ம் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விஷயங்கள்.
                                                                       
நன்றி விகடன்                                                                                                                                 
...மேலும்

பெண்ணியம் தேசியத்தைச் சிதைக்கிறதா? (பகுதி -2) - கேஷாயினி எட்மண்ட்


பெண்ணியம் தமிழ்தேசியத்தினை நோக்கிய பயணத்தினை திசை திருப்புகின்றதா என்கின்ற வினாவிற்கான பதிலாக வரையப்படுகின்ற இக்கட்டுரையின் இரண்டாம் பாகத்தினை சற்றே ஊடக நடுநிலைமை தாண்டி எழுத வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியிருப்பதற்கு முதற்கண் மன்னிப்பு கோரிக்கொண்டு பாகம் இரண்டினை தொடர்கின்றேன். வரலாற்றினை கூறும் போது ஒவ்வொரு நிகழ்விற்கும் பின்னுள்ளவர்கள் அல்லது பின்னின்ற அமைப்புக்கள் குறித்து மேற்கோள்காட்ட வேண்டிய தேவை உள்ள போதும் சிலரை சுட்டுவது தீர்வை தந்துவிடப் போவதில்லை என்பதும் வீண் விவாதங்களை வளர்க்குமே தவிர ஏதாவது வழிசமைக்குமா என்பது கேள்விக்குறியே. அதனாலேயே கடக்கின்றேன்…..

கடந்த பாகத்தில் போராட்ட வரலாற்றில் தடம் பதித்த பெண்கள் குறித்து பார்த்திருந்தோம். ஆனாலும் பெண்ணாளுமைகளை அரசியலுக்கான உதவியாளர்களாக மட்டும் பார்க்கின்ற மனோபாவம், துணைப்பாத்திரங்களாக செயற்பட வைக்கின்ற தன்மை, பெண் அங்கத்தவர்களது பாலியல் ஒழுக்கங்களை கேள்விக்குட்படுத்தல் போன்றதான போக்குகள் அமைப்புகளுக்குள் இருந்தமை மேற்கோள்காட்டத்தக்கன. 

1983 யூலைக்கலவரமானது தமிழ்ப்பெண்களது வாழ்வியலில் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்திய வரலாற்று சம்பவம் எனலாம். பாதிப்புக்கள் பேரதிர்வை ஒரு புறம் ஏற்படுத்தியதென்றால் பல பெண்களது சுய விருப்பத்திலான இயக்க இணைவுகள் தமிழ் சமூகத்தில் மறுபுறம் ஏற்படுத்தியிருந்தது. 1985 இல் தமிழீழத்தின் பல பகுதிகளிலிருந்தும் திரட்டப்பட்ட பெண்கள் பயிற்சிக்காக அனுப்பப்பட்டது, 1987 இன் ஆரம்பகட்டத்தில் “ஒப்பரேஷன் லிபரேஷன்” இல் பெண்கள் பயிற்சி எடுக்க தொடங்கியமை இதன் நீட்சியே. இதே ஆண்டில் ஒக்டோபர் 10 ஆந் திகதி தமிழீழ விடுதலைப்புலி அமைப்பினர் இந்திய இராணுவத்திற்கெதிரான போர்பிரகடனம் செய்தது மட்டுமல்ல தமிழீழப் பெண்கள் மூலம் புதிய வரலாறும் எழுதப்பட்டது. போராளி மாலதி பெண்கள் படையணி இந்திய படைகளை எதிர்கொண்டதில் மாலதியின் வீரமரணம் போராளிப் பெண்களுக்கான புதிய வரலாறினையும் எழுத தொடங்கியது. போராளிப்பெண்கள் உருவாக்கமும் சமூகத்தில் குறிப்பிடத்தக்களவு மாற்றத்தினை ஏற்படுத்தியது. பெண்ணுடல் பலவீனமானது என்கின்ற கண்ணோட்டம் மாற்றமடைந்தமை, சமூகத்தில் அன்று நிலவிய பெண்மைக்குணங்கள் என கொள்ளப்பட்ட பால்நிலை மாறி ஆண்களுக்கு நிகரான பலம் பெண்ணுக்குண்டு என நிரூபிக்கப்பட்டமை, பெண் போராளிகள் என்பவர்களாவது ஆளுமையுடையவர்கள், சுயாதீன முடிவுகளை எடுக்கக்கூடியவர்கள் என்கின்ற கருத்தியல் ஏற்படுத்தப்பட்டமை போன்றன அவற்றிற்கான சில எடுத்துக்காட்டல்கள். ஆயினும் தேச விடுதலையின் பின்னரே பெண்விடுதலை என்கின்ற சிந்தனையை போராளிகளிடமும் பொதுமக்களிடமும் ஆழப்பதிப்பதிலும் தலைமை மிகவும் முனைப்புடன் செயற்பட்டது.

இப்புள்ளியில் தான் ஒரு சமூகப்போராளிக்கும் அமைப்பின் போராளிகளுக்குமிடையான முரண்பாடுகள் தோன்ற ஆரம்பித்து இன்றும் தொடர்கின்றது. ஒருவருடைய சிந்தனைகளையும் போராட்ட பாதைகளையும் தீர்மானிப்பது தனிமனித தாக்கங்களும் சூழ இருப்பவர்களால் தூண்டப்படுகின்ற விடயங்களுமே. அந்த வகையில் பெண்கள் விடயத்தில் மிகவும் கட்டுப்பாடுகொண்டதான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டது மட்டுமல்ல பெண்களுக்கு மதிப்பளிக்கின்ற சூழல் இருந்தது. வன்முறையாளர் ஒரு போராளியான போதும் கடும் தண்டணைகள் வழங்கப்பட்ட சான்றுகளும் உண்டு. அதே போன்று ஆயுதம் தாங்கிய போராளி பெண்களிடம் தமது உடல் மற்றும் சமூக வன்முறைகளை பிரயோகிப்பதற்கான தயக்கம் பிற ஆண்களிடமும் இருந்தது. இது பெண் போராளிகளுக்கான உள்,புற பாதுகாப்பான சூழலினையும் தோற்றுவித்திருந்தது. ஆக பாலின போராட்டங்கள் இவ்வமைப்பினை சார் பெண்களுக்கு இருந்திருக்கவில்லை. இது கூட அவர்களது “தேசிய விடுதலையின் பின்னரான பெண் விடுதலை” கொள்கைக்கு ஏதுவாகவும் அமைந்திருந்தது. அதேவேளை சமூகத்தில் பயணிக்கின்ற பெண்கள் அல்லது சமூகத்தில் பாதிப்புக்குள்ளானவர்களுடன் பயணித்து தத்தமது மட்டங்களில் எதிர்த்துக்கொண்டிருக்கின்ற பெண்கள் எனும் போது அவர்களது சிந்தனை பால்சார் போராட்டங்களையும் கடக்கவேண்டிய நிலை உள்ளது. இத்தகையதான நேரெதிரான போக்குகள் ஆண்கள் உட்பட சில பெண்களுக்குள்ளும் கருத்தியல் விவாதங்களை தோற்றுவித்துள்ளதினை இன்றும் காணலாம். போராட்டத்தில் பங்குகொள்ளாதவர் ஒரு போராளியை விமர்சிப்பது எப்படி உவர்ப்பற்றதோ அதே போன்றதே பெண்ணிய செயற்பாடுகளை சமூக தளத்தில் பயணிக்காத ஒருவர் விமர்சிப்பதுவும். 

ஒரு சமூகம் இணைந்து போராட வேண்டுமாயின் முதலில் சமூகத்திலுள்ள ஒவ்வொரு தனி மனிதனும் தன்னளவிலான நிறைவடையும் போது தான்; சமூகத்தினை பற்றி சிந்திக்க தலைப்படுகின்றான். உள்ளக முரண்களை களையாமல் குவிக்கப்படுகின்ற போராட்டம் மீதான சிந்தனை ஒரு கட்டத்தில் திசைமாறும். ஏனனில் சமூகம் என்பது உணர்வுகளை உள்ளடக்கிய மனங்களை கொண்ட மனிதர்களாலானது. இன அடிப்படையில் ஒடுக்கப்படுகின்றோம் என வாதிடுகின்ற நாம் அதுவே சாதி, பால் அடிப்படையில் பாதிக்கப்படும் போது புறக்கணித்து பயணிக்க வேண்டும் என நினைப்பது எத்தகைய தர்மம் என்பது புரியாத புதிரே…

பெண் விடுதலையை விளங்காமல் பெண்ணிய கருத்தியலை தவறாக புரிந்து கொண்டோர், இதன் தாற்பாpயத்தினையும் சமூகத்தில் இதனாலான தாக்கத்தை அரைகுறையாக விளங்கிக்கொண்டோர், பெண்ணியம் என்றால் என்னவென்றே விளங்காமல் விமர்சிப்பவர்களால்; பிளவுபடாத சமூகமா பெண்ணியவாதிகளால் அல்லது பெண்ணியம் பேசுபவர்களால் புதிதாக பிளவுபட்டுவிடப்போகின்றது? பெண்ணிலான போராட்ட தடங்களை மெச்சிக்கொண்டால் மட்டும் போதாது மேலும் பெண்களின் பங்களிப்பினை அதிகாpத்திட வேண்டிய தேவையும் இன்று ஈழத்து அரசியலுக்கு இருக்கின்றது. அல்லது பெண்ணியம் வேண்டாம் என போர்க்கொடி தூக்குபவர்களுக்கு இன்றைய ஈழப்பெண்களுக்கு வழிசமைக்கின்ற பொறிமுறையாவது தொpந்திருக்க வேண்டும் அதை விடுத்து தேசியத்தினை பெண்ணியம் காயடிப்பு செய்கின்றது என்று சொல்ல மட்டும் தான் முடிகிறது என்றால் அதை விடவும் மந்தைப் போக்கு வேறெதுவும் இல்லை. பால்நிலை விழிப்புணர்வு அற்ற அரசியல் பிரச்சாரங்கள் நமது பங்கிற்கு வெறும் ஆணாதிக்க நிலப்பிரபுத்துவ தேசியத்தினை மட்டும் கட்டியெழுப்புமே தவிர தமிழ்த்தேசியத்தினை கட்டியெழுப்பிவிடப் போவதில்லை.  

ஏனெனில் கருவொன்று அது பெண்ணா ஆணா என தீர்மானிக்கப்படுவதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டு விடுகின்ற விடயங்களில் ஒன்று அதன் இனம். எந்த கருப்பையில் கருக்கொள்கின்றதோ அதனடிப்படையில் இனம் முடிவாகிய பின்னர் தான் அதன் பால் தீர்மானிக்கப்படுகின்றது. ஆக கருவின் அடையாளம் இனம் என்கின்ற ஒன்றிலிருந்து தான் ஆரம்பித்து பாலினை தீர்மானிக்க சாதி சமயங்களை சமூகம் அடையாளப்படுத்துகின்றது. ஆக அதன் போராட்டம் இனம் என்கின்ற ஒன்றிலிருந்து தான் ஆரம்பமாகின்றது. இனத்திலிருந்து ஆரம்பிக்கினற போராட்டம் அந்தப்புள்ளியை சென்றடைய வேண்டுமெனில் முதலில் பாதையிலுள்ள பால்நிலைப்பிரச்சினைகள் நீக்கப்பட வேண்டும். இதற்கான பொறிமுறைகள் பாதையை மாற்றிவிடாதவாறு இருக்க வேண்டுமே தவிர பிரச்சினைகளே இல்லை என சாதிப்பது ஆரோக்கியமற்ற மனநிலையே. நம் வீட்டில் பாலியல் வன்முறைக்குள்ளான குழந்தை, துணையிழந்த சகோதரி, சமூகத்தின் பால்ரிதியிலான இழிபார்வைக்குள்ளான அம்மா,  குடும்பத்தலைமை ஏற்று வேலைக்கு செல்லும் இடத்தில் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாகின்ற அக்கா இருந்தால் ஏன் இவர்களில் ஒருவராவது இருந்து பால் ரிதியாக துன்பப்படும் போது இவர்களை தாண்டி உங்களால் போய் விட முடியுமா? 

பெண் என்பதால் பால் ரிதியில் பாதிக்கப்படுகின்றவர்களை கைதூக்கி விடுவதும் அவர்களும் உரிமையுடன் வாழ வழிசெய்தலுமே நானும் என் சார்ந்தவர்களும் நினைக்கின்ற பெண்ணியம் என்றால் நாம் பெண்ணியவாதிகள் தான்… பெண்ணியம் பேசிக்கொண்டுதானிருக்கப்போகின்றோம். ஆனால் அத்தகைய பெண்ணிய சிந்தனை எவ்வாறான பொறிமுறைகளுடனானதாக இருந்தால் தமிழ்த்தேசியம் நோக்கிய பயணம் பாதைவிலகாமல் பயணிக்கும் என்கின்ற விடயத்தினை அலசவேண்டிய நிர்ப்பந்தமும் எமக்கில்லாமலில்லை…. 
தொடரும்…..

கேஷாயினி எட்மண்ட்

ekeshayinie@gmail.com
...மேலும்

Oct 26, 2016

சமத்துவம் பயில்வோம்: இருவருக்கும் பொதுவில் வைப்போம்
தமிழ்ப் பண்பாட்டில் ‘கற்பு’ என்பது பெண்களின் மீது சுமத்தப்பட்ட ஒழுக்க வரையறை. தமிழ்நாட்டுப் பெண் குழந்தைகள் அருந்ததி, நளாயினி, கண்ணகி, சீதை கதைகளைக் கேட்டு வளர்ந்தவர்கள். ‘கற்பில் சிறந்தவள் கண்ணகியா? மாதவியா?’ என்று மேடை போட்டுப் பட்டிமன்றம் நடத்தப்படுமே தவிர, ‘கற்பில் சிறந்தவர் கோவலனா? கண்ணகியா?’ என்று பேசக்கூட இங்கே யாரும் முன்வருவதில்லை. ‘கணவனையே கண் கண்ட தெய்வமாக வணங்குபவள் வானுலகில் தெய்வமாகக் கொண்டாடப்படுவாள்’ என்பது பெண்களுக்குச் சொல்லப்படும் செய்தி.

கற்புகள் பலவிதம்

கணவன் மாற்றாளிடம் சென்று வந்தால் அதை ஏற்றுக்கொள்வது ‘கடவுள் கற்பு’, கணவன் குற்றமற்றவன் என்று வாதாடி நிரூபிப்பது ‘பத்தினி கற்பு’, கணவன் போருக்காகவோ, கல்விக்காகவோ, பொருள் ஈட்டுவதற்காகவோ நீண்டகாலம் பிரிந்து சென்றால், அவன் திரும்பி வரும்வரை மனத்தையும் உடலையும் பேணிக் காத்திருப்பது ‘முல்லை சான்ற கற்பு’, கணவன் இறந்த செய்தி காதில் விழும்முன் இறப்பது ‘தலையாய கற்பு’, கணவன் சிதையுடன் நெருப்பில் இறங்குவது ‘இடையாய கற்பு’(அவள் ‘சதி மாதா’ என்று போற்றப்படுவாள்), இறந்த கணவனுக்காக, வாழ்நாள் முழுவதும் கைம்மை நோற்று, நாளுக்கு ஒரு வேளை உப்பில்லாமல் உண்பது ‘கடையாய கற்பு’ என்று பெண்ணின் கற்பை இந்தச் சமூகம் அளவிட்டுள்ளது.

ஆணும் பெண்ணும் பகைவர்கள் அல்ல

நம் மூதாதையப் பெண்களும் ‘கற்புக்கரசி’ என்று பெயர்பெற, ஆணாதிக்கச் சமூகம் விதித்த விதிக்கெல்லாம் கட்டுப்பட்டு வாழ்ந்து மறைந்தனர். ஆனால், இந்த ஆணாதிக்கச் சமூகம் கொண்டாடுவது என்னவோ தம் வீட்டுக் கற்புக்கரசிகளை அல்ல; விரல்விட்டு எண்ணக்கூடிய வரலாற்றில் குறிப்பிட்டுள்ள கற்புக்கரசிகளை மட்டும்தான்.

கற்பு என்ற ஒழுக்கம் உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறையே. இதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. ‘ஒருத்திக்கு ஒருவன்’ கோட்பாடு வெற்றி பெற ‘ஒருவனுக்கு ஒருத்தி’ கோட்பாடும் நடைமுறையில் இருக்க வேண்டும் அல்லவா?

உலகில் இயற்கை எல்லாவற்றையும் இரண்டாகப் படைத்துள்ளது, சூரியன் - சந்திரன், பகல் - இரவு, கறுப்பு - வெள்ளை, ஆண் - பெண், கிழக்கு - மேற்கு, நீர் - நெருப்பு என்று இரண்டாக உள்ள இயற்கையை நாம் இணை முரண்களாகப் பார்க்க வேண்டுமே தவிர, பகை முரண்களாகப் பார்க்கக் கூடாது. அதாவது, இரண்டை இரண்டாகப் பார்க்கும் பொதுப் பார்வை வளர வேண்டுமே தவிர, இரண்டையும் பகையாகப் பிரித்துப் பார்க்கக் கூடிய பார்வை கூடாது. ஆணும் பெண்ணும் எதிரெதிரான முரண் இணைகள் தவிர, பகைவர்கள் இல்லை. அதனால்,பெண்ணுக்கு எவையெல்லாம் விதிக்கப்பட்டுள்ளனவோ அவற்றையெல்லாம் ஆண் சமூகமும் தமக்குரியனவாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பாரதியார் பார்வையில்

இருபாலரும் சேர்ந்து வாழும் வாழ்க்கையில், ஒருபாலருக்கு ஒழுக்கக் கட்டுப்பாடும், இன்னொரு பாலருக்குக் கட்டுப்பாட்டில் விதிவிலக்கும் இருந்தால், நடைமுறையில் ஒழுக்கத்தை முழுமையாகக் கடைப்பிடிப்பது சாத்தியப்படுமா? பாரதியார் தம் ‘பதிவிரதை’ என்ற கட்டுரையில், ‘அட பரம மூடர்களே, ஆண் பிள்ளைகள் தவறினால் ஸ்திரீகள் எப்படிப் பதிவிரதைகளாக இருக்க முடியும்? கற்பினைக் கணக்குப் போட்டுப் பார்ப்போம். ஒரு பட்டணத்தில் லட்சம் ஜனங்கள். ஐம்பதினாயிரம் பேர் ஆண்கள்.

ஐம்பதினாயிரம் பேர் பெண்கள். இதில் நாற்பதாயிரம் ஆண்கள் பர ஸ்திரீகளை இட்சிப்பதாக வைத்துக்கொள்ளலாம். குறைந்தபட்சம் நாற்பதினாயிரம் ஸ்திரீகள் பர புருஷர்களின் இச்சைக்கு இடமாக வேண்டும்’ என்று வேடிக்கையாகக் கூறியவர், பெண் கற்பு பேணுவதில் ஆணுக்கும் மிகுதியான பங்கு உண்டு என்று இதன் மூலம் உணர்த்தியுள்ளார். ஒன்றை ஒன்று சிதைக்கும்போதும், ஒன்றை ஒன்று மீறும்போதும் ‘ஒழுக்க விதிகள்’ ‘ஒடுக்க விதி’களாகி விடுகின்றன. கற்பு என்பது இருபாலருக்கும் உரிய ஒழுக்க விதியாக அங்கீகரிக்கப்படும்போதுதான், அது உண்மையில் உயிர்பிக்கப்படும்.

நன்றி / தி இந்து 

...மேலும்

Oct 24, 2016

மதுபாவனையால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பு

விருட்சம் சமூக மேம்பாட்டு அமையத்தால் இன்று நடைபெற்ற மருத்துவமுகாமில் மதுபாவனையால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பு பற்றி விமோச்சனா இல்லம் தலைவி உரையாடல்!

23.10.2016 மட்டக்களப்பு நகரிலிருந்து பலமைல்கள் தூரத்திலுள்ள சகல வளங்களும் புறக்கணிக்கப்பட்ட யுத்தத்தில் பாதிக்கப்பட்ட விளாந்தோட்டம் தமிழ் கிராமத்தில் எந்த பிரதிபலன் அரசியல் சாராத மட்டக்களப்பு தமிழ் சமூதாயத்தின் மேல் அக்கரை கொண்ட இளைஞர்களால் உருவாக்கப்பட்ட விருட்சம் சமூக மேம்பாட்டு மையம் எனும் அமைப்பினால் நடத்தப்பட்ட இலவச மருத்துவமுகாமில் சிகிச்சை ஒருபுறம் மறுபுறம் தங்கும் மண்டபத்தில் காலத்திற்கு ஏற்ற தலைப்பான அதிகரித்துவரும் மதுபாவனையால் ஏற்படும் சமூகசீரழிவு பற்றி கல்லடியில் இயங்கும் விமோச்சனா அமைப்பின் தலைவி திருமதி செல்விகா சகாதேவன் இனால் மிகவும் சிறப்பான முறையில் கிராமத்து மக்களுக்கு விளங்கக்கூடிய முறையில் விரிவாக எடுத்து கூறினார்.

அவர் பல கேள்விகளை எழுப்பி கிராம பெண்களிடம் யோசிக்க வைத்து அவர்களிடமே தீர்வை எடுத்துக்கூறினார். ஆண்கள் மதுபாவனை பாவிப்பதன் நோக்கம்? ?கேள்வி கேட்ட போது பெண்களே பலர் இங்குள்ள ஆண்கள் வயல் வேலை செய்வதால் உடல் வலி குறைக்க பாவிப்பதாக கூறினார்கள்.
அப்படியாயின் பெண்களும் கடினவேலை செய்தால் மதுபாவனை செயற்படுத்தலாமா? என மறு கேள்வி கேட்ட போது அவர்கள் திக்குமுக்காடினார்கள்.  "இங்கு நடைபெறும் மருத்துவமுகாமில் பாவிக்கும் ஆங்கிலேய மருந்து பொருட்களில் சிறிதளவு மதுசாரம் மூலப்பொருள் கலந்துதான் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது எல்லை மீறும் போது போதையாகும்" என எளிமையாக கூறினார்.

இவ் முகாமில் கலந்து கொண்ட ஒரு மதுசாரம் பாவிக்கும் ஐயாவிடம் நீங்கள் ஒருநாளைக்கு மதுசாரம் பாவிக்க எவ்வளவு செலவாகும் என கேட்ட போது 1200 ரூபா என்றார் மதுசாரத்திற்கு சுவையூட்டி புகைத்தல் இதைவிட கூடுதலாக வரும் என்றார். அப்படியாயின் ஒரு நாளை வருமானம் 1000 ரூபா இதைவிட மிதமிஞ்சிய செலவு ஒருமாதம் 30000 இற்கு மேல் மதுபாவனையிற்கு செலவிட வேண்டிவரும். இவ்வளவு காசியும் குடிக்காமல் சேமித்தால் போதும் நீங்கள் பணக்காரர்கள் ஆகிவிடுவீர்கள்  என கூறியபோது அந்த நபரின் முகத்தில் அதிர்ச்சியினை அவதானிக்க முடிந்தது.

அவருடைய மனைவியை பார்த்து  உங்களுக்கு எத்தனை பிள்ளை என கேட்ட போது இரு பெண்களும் மூன்று ஆண்களும் என கூறினார்கள். திருமண வயதில் இருக்கின்ற உங்கள் பெண்களுக்கு பொருள் வீடு வசதி உள்ளதா? என அவர்களிடம் கேட்ட போது அவர்கள் ஆண் பெடியன்கள் இருக்கின்றார்கள் தானே அவர்கள் கவனிப்பார்கள் என்று அவருடைய ஆண்பிள்ளை மூலம் இன்னொரு பெண்பிள்ளையிடம் சீதனம் வாங்கி தன்னுடைய மகள் வாழ்க்கையை தீர்மானிப்பது என முடிவுடன் உள்ளார்கள் இவ்வாறு தான் அநேக பெண்களே பெண்களுக்கு எதிரியாகின்றார்கள்  என  சுவாரசியமாக சலித்து  போகாமல் யதார்த்த பூர்வமான உரையாடல்களை நடத்தினார்  செல்விகா.

இவ் உரையாடல் நடாத்துவதற்கு வசதி செய்த விருட்சம் மேம்பாட்டு அமையத்திற்கு கோடான கோடி நன்றிகள் விளாந்தோட்ட கிராம மக்கள் சார்பாக இவர்களுடைய சேவை தொடரட்டும்.

நன்றி - கரண் 
...மேலும்

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்