/* up Facebook

Dec 1, 2015

பணியிடத்தில் சமத்துவம் – உரையாடலின் துவக்கம் – மு. வி. நந்தினிஆண்களும் பெண்களுமாக சேர்ந்து பணியாற்றத் தொடங்கியிருக்கும் காலகட்டம் இது. 2000ன் ஆரம்பங்களில்கூட இந்தியாவில் பத்திரிகை துறை உள்பட பல துறைகளில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இருந்தார்கள். புலனாய்வுப் பத்திரிகைகள் ‘பாதுகாப்பு’ காரணங்களுக்காக பெண் நிருபர்களை பணியமர்த்த மறுத்தன. இன்றும்கூட தமிழக புலனாய்வுப் பத்திர்கைகளில் ஒரு பெண் நிருபர்கூட இல்லை. இதே பாதுகாப்பை காரணம் காட்டி இராணுவத்தில் பிரச்னைக்குரிய பகுதிகளில் பணியாற்ற பெண் இராணுவ வீரர்கள் தடுக்கப்படுகிறார்கள். இராணுவத்தில் 5% அளவிலேதான் பெண்கள் பணியாற்றுகிறார்கள். அரசாங்கமும் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்லக்கூடிய பத்திரிகைகளுமே, பெண்களின் பங்களிப்பை மறுக்கும்போது பணியிடங்களில் சம வேலைவாய்ப்பு, சமத்துவம் என்கிற பேச்சுகள் துவங்குவது இன்னும் தாமதப்படலாம்.


கிறித்துவ மடாதிபதிகள், இந்துத்துவ மடாதிபதிகள், இஸ்லாமிய குருமார்கள் பெண்களை வீட்டுக்குள்ளே அடைத்து வைக்க வேண்டும் என்று காலம்காலமாக வலியுறுத்தி வருகிறார்கள். ஒரு பெண் வாசல் தாண்டி வெளியேறினால் அவள் ‘மோசமான’ நடத்தை கொண்ட பெண் என்று ஆணாதிக்க அடிப்படை வாதத்துடன் அவர்கள் இப்போதும் கூக்குரலிடுகிறார்கள். இதன் மூலம் வீட்டில் இருக்கும் ஆண்களின் அடிவயிற்றில் பீதியைக் கிளப்புகிறார்கள். சமீபத்தில் தொலைவில் வேலைக்குச் செல்கிறார்கள் என்று காரணம் கூறி பிழைக்க வழியில்லாத 4 சகோதரிகளை ஊரைவிட்டு தள்ளி வைத்தது இந்திய கிராமம் ஒன்று. முன்னேறிய பிரிட்டன் சமூகத்திலும்கூட ஒரு அறிவியலாளர் பெண்களை பணியிடத்தில் ஒதுக்கி வைக்க வேண்டும் என்கிறார். ‘கெட்டுப் போய்விடுவால்’ என்று திருமண வயதை எட்டாத இஸ்லாமிய சிறுமிகள் கைகளில் குழந்தைகளோடு நம்மிடையே வலம் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்நிலையில், பணிபுரியும் இடத்தில் சமத்துவம் என்பது கேள்விக் குறியாகும் ஒன்றாகிறது. பெண்கள் அதிகமாக பணியாற்றும் தனியார் தகவல் தொழிற்நுட்ப நிறுவனங்களில் ஆணுக்கும் பெண்ணுக்குமான சம்பள விகிதாச்சாரம் மாறுபட்டே இருக்கிறது. பெண்கள் கருத்தறிப்பதை நிறுவனங்கள் விரும்புவதில்லை. கருத்தறிக்கும் பெண்கள் பணிநீக்கம் செய்யப்படுவது எழுதப் படாத விதியாக உள்ளது. பெரும்பாலான அரசு நிறுவனங்களில் புடவையைத் தவிர, வேறு உடைகள் அணிய தடை விதிக்கப்படுகிறது.
உடையால் பெண்கள் தடை செய்யப்படுவது பள்ளி, கல்லூரிகளிலேயே தொடங்கிவிடுகிறது. உதாரணத்து கிறித்துவ மிஷனரிகள் நடத்தும் லயோலா கல்லூரியில் பெண்கள் துப்பாட்டா அணியாமல் கல்லூரிக்குள் நுழைய முடியாது. அதேபோல் இந்துத்துவ மடாதிபதிகள் நடத்தும் கல்லூரிகளில் புடவை கட்டாயம், இஸ்லாமிய கல்வி நிறுவனங்களில் புர்கா அணிந்துதான் கல்லூரிக்குள் நுழைய முடியும். அண்மையில் ஒரு இஸ்லாமிய கல்வி நிறுவனம், பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் என்று ஒரு பேனர் விளம்பரம் வைத்திருந்தது. அதில் உள்ள எல்லா முகங்களும் ஒன்றுபோலவே இருந்தன, அவர்கள் எல்லோரும் புர்கா அணிந்திருந்தனர்!மதத்துக்கும் பெண் அடிமைத்தனத்துக்கும் உள்ள உறவை புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த உதாரணங்களை சொல்கிறேன்.

உடை அணிய கட்டுப்பாடு, பேச கட்டுப்பாடு, நடக்கக் கட்டுப்பாடு என ஒவ்வொரு நகர்விலும் பெண்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இந்தக் கட்டுப்பாடுகளை விதிக்கும் ஆண் மனங்களின் மத அடிப்படை வாதத்தை தகர்த்தெறிவதுதான் சமத்துவத்தை நோக்கி நம்மை இட்டுச் செல்லும். அதை எப்படி செயல்படுத்துவது? தாயாக, சகோதரியாக உங்கள் வீட்டு  ஆண் மகன்களிடம் மதத்தை போதிக்காதீர்கள். மதம் விட்டொழிந்தாலும் எல்லாவித அடிப்படைவாதமும் விலகி ஓடும்!

நன்றி - http://fourladiesforum.com/

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்