/* up Facebook

Nov 8, 2015

நான் ஏன் விருதினை திருப்பித் தருகிறேன்? - அருந்ததி ராய்காங்கிரஸ் எதிராக பிஜேபி போன்ற பழைய விவாதங்களில் இருந்து என்னை விட்டுவிடுங்கள். இது அதை எல்லாம் கடந்து சென்று விட்டது.

அருந்ததி ராய்
-------------------------------

விருதுகள் நாம் செய்யும் வேலைகளுக்கான அளவுகோல் இல்லை என்று எனக்கு தெரிந்தாலும், 1989 ஆண்டு எனக்கு கிடைத்த சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதை, விருதுகள் திருப்பி கொடுத்த பட்டியலில் சேர்க்க விரும்புகிறேன். மேலும் நான் ஏன் இந்த விருதை திரும்பி தருவதற்கு விரும்புகிறேன் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். சகிப்புத்தன்மையின்மையை தற்போதைய அரசாங்கத்தால் வளர்த்து எடுக்கப்படுகிறது என்று கூறுவதை கேட்ட பின் அதிர்ச்சி அடைந்து நான் விருதை திருப்பி தரவில்லை. அனைத்தும் விட முதலில் கொலை தாக்குதல், சுட்டுக்கொல்லுதல், எரித்தல் மற்றும் பெரும்திரள் கொலைகளை எல்லாம் சகிப்புத்தன்மையின்மையை என்று கூற முடியாது. இரண்டாவது நமக்கு முன்பே பல முன் அறிவிப்புகளினாலும், அனுபவங்களினாலும் இந்த பெரும்பான்மை அரசாங்கத்தை பற்றி முன்பே தெரிந்த ஒன்றுதான். ஆகையால் நான் அதிர்ச்சி அடைந்ததாக சொல்லி கொள்ள முடியாது. மூன்றாவதாக இந்த கொடூர கொலைகள் அணைத்தும் பிரச்சினை ஆழமாக ஊடுருவி கொண்டு இருப்பதற்கான அறிகுறிதான். வாழ்க்கை நரகமாகி விட்டது. பெரும் மக்கள் தொகையான கோடான கோடி தலித்துகள், பழங்குடி மக்கள், இஸ்லாமியர்கள் மற்றும் கிறித்துவர்கள் எப்போது எங்கிருந்து தாக்குதல் வரும் என்று தெரியாத ஒரு பயங்கரவாத சூழலில் அச்சத்துடன் வாழ நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.

நமது நாட்டில் இன்று வழிப்பறி கொள்ளையர்களும், அரசாங்கத்தின் விசுவாசிகளும், “சட்டவிரோதமாக கொல்கிறார்கள்” என்று கற்பனையான பசுவதை பற்றி புதிய ஒழுங்குகாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள். உண்மையான மனிதர்கள் கொல்லப்படுவதை பற்றி பேசுவதில்லை. இவர்கள் தடயவியல் சோதனைக்காக குற்றம் நடந்த இடத்தில் ஆதாரங்கள் சேகரிப்பை பற்றியும், குளிர்சாதன பெட்டியில் வைத்திருக்கும் உணவை பற்றிதான் பேசுகிறார்களே தவிர, கொடூர தாக்குதலினால் கொலை செய்யப்பட்ட மனிதனை பற்றி அல்ல. நாம் முன்னேறி விட்டதாக சொல்கிறோம். தலித்துகளை கொன்று குவிக்கும் போதும் மற்றும் அவர்களுடைய குழந்தைகளை உயிருடன் எரிக்கும் போதும், எந்த எழுத்தாளர்கள் இன்று பாபா சாகிப் அம்பேத்கர் சொல்வது போல் “தீண்டதகாதவர்களுக்கு இந்து மதம் கொடூரங்களின் மெய்யான கூடம்” என்று சுதந்திரமாக கூறமுடியும்? அப்படி கருத்துகளை வெளிபடுத்தும் போது தாக்குதலுக்கோ, துப்பாக்கி சூட்டுக்கோ, சிறை தண்டனைக்கோ உள்ளாகாமல் வெளிப்படுத்த முடியுமா? சதத் ஹசன் மாண்டோ எழுதியது போல “ அங்கிள் சாம்க்கு கடிதங்கள்” என்று எழுத முடியுமா? நாம் சொல்லப்படுவதை ஏற்கிறோமோ அல்லது மறுக்கிறமோ என்பது விசயமல்ல. நமது கருத்துக்களை சுதந்திரமாக பேசுவதற்கு உரிமை இல்லை என்றால், நாம் நம் சமூகத்தை அறிவுஜீவிகளின் பற்றாக்குறையுடன் அவதிக்குள்ளாக்கி, ஒரு முட்டாள்களின் தேசமாக மாற்றிவிடுவோம். இந்த துணைக் கண்டங்கள் முழுவதும் இது கடைநிலை இனமாக உருவாகிவிடும் - புதிய இந்தியா உற்சாகமாக அதில் ஒன்றாக இணைந்து விடும். இப்போதும் கூட, தணிக்கைத்துறையை வேலை செய்வதற்கு கொடூர கும்பலிடம் கொடுத்துவிட்டது.

என்னால் இந்த ஒரு தேசிய விருதினை திருப்பி கொடுக்க முடிந்ததை கண்டு நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்(எங்கேயோ கடந்தகாலத்தில் இருந்து), காரணம் இந்த நாட்டில் உள்ள எழுத்தாளர்கள், திரைத்துறையினர் மற்றும் கல்வியாளர்களால் துவக்கி வைக்கப்பட்ட இந்த அரசியல் இயக்கத்தில் ஒரு பகுதியாக இதன் மூலம் என்னை ஈடுபடுத்திக் கொள்கிறேன். மேலும் நாம் இந்த தத்துவார்த்தரீதியான அநீதிகளுக்கும் மற்றும் சமூகத்தின் கூட்டு மதிநுட்பத்தின் மீதான தாக்குதலுக்கு எதிராக இப்போது எழவில்லை என்றால் அது நம்மை பிளவு அடைய செய்து மண்ணோடு மண்ணாக புதைத்து விடும். எனக்கு தெரிந்த வரை கலைஞர்கள் மற்றும் அறிவுஜீவிகள் இதற்கு முன்பு இத்தகையை இயக்கத்தில் ஈடுபடவில்லை. இப்படிபட்ட இயக்கம் வரலாற்றில் இடம் பெறவில்லை. இது ஒரு மாற்று அரசியல். நான் இதில் பங்கு கொள்வதற்கு பெருமிதம் அடைகிறேன் மற்றும் இந்த நாட்டில் இன்று நடக்கும் நிகழ்வுகள் குறித்து நான் அவமானகரமாக உணர்கிறேன்.

பின்குறிப்பு: பதிவிற்காக, நான் சாகித்ய அகாடமி விருதை 2005ல் ஏற்க மறுத்தேன். அப்போது காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. ஆதலால் காங்கிரஸ் எதிராக பிஜேபி என்ற பழைய விவாதங்களில் இருந்து என்னை விட்டுவிடுங்கள். இது அதை எல்லாம் கடந்து சென்று விட்டது.

நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ், நவம்பர்- 5,2015

தமிழாக்கம்:

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்