/* up Facebook

May 8, 2015

இன்றைய இளம் சமுதாயத்தினர் கட்டாய பாலியல் கல்வி அடங்கலான முழுமையான கல்வியினை வேண்டி நிற்கின்றனர். -நிருத்தனி சிவலிங்கம்


சமுகப் பிராணியாகக் கருதப்படும் மனிதன் அடிப்படையிலேயே பகுத்தறிவு என்கின்ற சிறப்பியல்பினைப் பெற்றவனாகவே காணப்படுகின்றான். இப் பகுத்தறிவானது பிறப்பிலேயே அவனுடன் கூடவே உதிக்கின்ற விடயமனறு; . மாறாக அனுபவ ரீதியாகவோ அல்லது கற்றலி னூடாகவோ அதனை பெற்றுக்கொள்கின்றான். வாழ்வியல் மாற்றங்களுக்கேற்ப தக்கணப்பிழைக்கவேண்டிய நிலையில் சரியானவை, தவறாயவை என்கின்ற தார்ப்பரியத்தினைப் பகுத்து விளங்கிக் கொள்வதற்கு அவனுக்குக் கல்வி ஒரு முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக அமைகிறது.
இந்நிலையில் கல்வியினை வேண்டிநிற்பவர்கள் யார?; என்கின்ற கேள்விக்கு விடைகாண முனைவோமானால் ஆரம்பக்கல்வியினை உறுதியான அடித்தளமாகப் பெறவேண்டிய தேவை பிள்ளைகளுக்கு உளள்து. இவ்வடித்தளமானது காலப்போக்கில் அவர்களது பகுத்தறியும் திறனை விருத்திசெய்ய உதவுகிறது.
போதனைகள் சந்தர்ப்பம், காலம், வாழ்க்கைநடப்பு, மனிதத்தேவைகள ;என்பவற்றுக்கு அமைவாக வழங்கப்படுகின்ற போதே அவை விளைதிறன் மிகுந்தவையாக மாறுகின்றன. இன்றைய காலம், சந்தர்ப்ப சூழ்நிலைகள், இன்றைய மனிதத்தேவையி; தன்மை, சமூகக்கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் என்பவற்றினூடாகப் பார்க்கின்ற போது இன்றைய இளம் சமுதாயத்தினர் பாலியல் கல்வியினை வேண்டிநிற்கின்றனர் என்பது கவனத்தில் கொள்ளவேண்டிய ஒரு விடயமாகும்.

 பாலியல் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் இயல்பாகவே அமைந்துளள் உடல், உளம் சார்ந்த ஒரு விடயமாகும். சாதாரணமாக அவனுக்கு ஏற்படுகின்ற அனைத்துவிதமான தேவைகளையும் போலவே பாலியல் தேவையும் தவிர்க்கமுடியாத ஒன்றாகும். இத் தேவையானது ஏற்படுகின்றவேளையில் தகுந்த வழியில், தகுந்தமுறையில், தகுந்ததருணத்தில் அதனை நிறைவுசெய்யக்கூடிய திறனும், அறிவும் இல்லாத சமயத்தில் தன்னையும் தன்னைச் சூழவுள்ளவர்களையும் சிக்கலுக்கு உளள் hககு; கின்றனர். இந்நிலையில் பாலியல் தொடர்பான முறையான அறிவானது கல்வியினூடாகப் புகடட் ப்படுகின்ற வேளை சிக்கல்களைத் தவிர்கக் க்கூடிய சாத்தியக்கூறுகள் ஏராளம். எனவே இக்கல்வியானது பாடசாலையிலிருந்தே புகடட்ப்படவேண்டியது அவசியம்.
“கட்டாயமான  பாலியல் கல்வியானது இளைஞர்களுக்கு அறிவு, திறன், தகுந்த கருவிகள் ஊடான பாலியல் என்பவற்றைச் சித்தப்படுத்த முற்படுகிறது. அத்துடன் அவர்களை உடல்ரதீpயாகவும், உணர்வுரதீ pயாகவும் தனித்தனியாக அல்லது உறவினூடான தகுந்த பாலியலை அனுபவிக்கவேண்டுவதுடன்;;; உடல், உளரதீயான அனைத்து விடயங்களையும் பாலியல் கண்ணோட்டத்தில் பாரக்கிறது”
1. பாலியல் கல்வியானது இளைஞர்கள் மத்தியில் தேவையான ஒன்றாகக் கருதப்படுவதன் அவசியம் என்ன என்பதனையும், அத்தேவை நிறைவேற்றப்படாத சந்தர்ப்பங்களின் விளைவுகள் தொடர்பாகவும் சிந்திக்கவேண்டிய கடப்பாடு உளள்து. இன்றைய சமூகக்கட்டமைப்பு, வாழ்வியல் நடைமுறைகள், அவற்றினூடான மனித உளவியல், மற்றும் உடலியல் தேவைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம், உலகப் பொருளாதார நிலைமை, தொழிநுட்ப வளர்சச் pயின் போக்கு போன்ற இதர காரணங்கள் பாலியல் கல்வியின் அவசியத்தினை வலுப்படுத்துகின்றன. “உலகமக்களில் 1.3 பில்லியனுக்கும் மேலானோரில் ஐந்தில் ஒருவர் என்ற விகிதத்தில் காணப்படும் வயதுவந்தோர் (யுனழடநளஉநவெ யபநன 10-19)”2. இவர்களே சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்துபவர்களாகவும், மாற்றங்களுக்குள் உளவ் hங்கப்படுபவர்களாகவும் உளள் நிலையில் தங்கள்பால் உலகத்தின் கவனத்தினை ஈர்கக்pன்றனர்.

2 பாலியல் கல்வியின் அவசியத்தினை ஸ்திரப்படுத்துகின்ற காரணிகளை மருத்துவரதீ pயாகவும், உளவியல்ரதீ pயாகவும், சமூகவியல்ரதீ pயாகவும், பால்நிலை அடிப்படையிலும் வேறுபடுத்தி நோகக்லாம். அதாவது பாலியல் தேவையின் உந்தலானது அதிகரிக்கின்ற விடலைப் பருவத்தினர் தமது உணர்வின் உந்தலினை நிவர்த்தி செய்யவேண்டும் என்ற மனநிலைக்கு மாத்திரமே உளள் hகின்றனரே தவிர அதனை முறையானவிதத்தில் திறன்மிகுந்த வழியில் செயற்படுத்த முனைவதில்லை. இதனால் பலருடன் உறவினை ஏற்படுத்தும் சந்தர்ப்பத்திலோ, பலதரப்பட்ட வழிகளில் பாலியல் செயற்பாடுகளில் ஈடுபடும் போதோ உடலியல்ரதீ pயான பாலியல் நோய்களுக்க ஆழாக நேரிடும் என்கின்ற அறிவு இவர்கள ; மத்தியிலில்லாமையினால் தாமும் நோய்ககு; ஆழாவதுடன் தம்முடன் உறவுகொளப் வர்களையும் தொற்றுக்குள்ளாக்கின்றனர். இந்நிலையில் பாலியல் உறவின்போதான பாதுகாப்புக் கருவிகள் (நுப:- ஊழனெழஅள) என்பவற்றின் பாவனையின் அவசியம், பாவனை முறைகள் என்பவை தொடர்பான அறிவானது இவர்களுக்கு அவசியமாகிறது. இதனைப் பாலியல் கல்வியினூடாக வழங்கமுடியும்.

மேலும் இளவயதுக் கர்ப்பமாதல் என்கின்ற பிரச்சினை இன்றைய நிலையில் உலகளாவியரதீ pயில் அதிகரித்து வருவதினைக் காணலாம். உலகம்முழுவதும் 15-19 வயது கொண்ட 1.6 கோடிப் பெண்கள் வளரிளம் பருவத்திலேயே கருத்தரிப்பதாகப் புள்ளிவிபரம் கூறுகிறது. இதனாலேயே இவ்வருடத்தின் ஜூலை 11ம் திகதியான உலக சனத்தொகை தினத்தினை “ வளரிளம்பருவக் கருவுறுதலுக்கு எhதிரான விழிப்புணர்வு” என்கின்ற தொனிப்பொருளில் ஐ.நா முனn;னடுத்தது. வளரிளம்பருவக ;கருவுறுதலுக்கு முதன்மைக்காரணமாக அமைவது பாலியல் பற்றிய தெளிவான புரிதலின்மை, கல்வியறிவின்மையே ஆகும். இளம் பருவமானது ஆய்வூக்கம் மிகுந்த பருவம் இதுவரை அறிந்திராத புதியவிடயங்களை  அறிகின்ற சந்தர்ப்பத்தில் அவை குறித்து மேலும் ஆராய்தல், பரீட்சித்துப்பாரத் ;தல் எனப் பல சந்தர்ப்பங்களுக்கு இடமளிக்கின்ற பருவம். இகக் hலகடட் த்தில் பரீட்சியமில்லாத பாலியல் தொடர்பான தகவல்கள,; அவற்றோடு சேர்ந்ததான பருவ மாற்றம் என்பன ஒன்றிணைகின்றபோது பாலியல் செயற்பாடுகளைப் பரிசோதித்துப் பார்க்க முனைகின்றனர். இந்நிலை இளம்பருவப் பெண்களைக் கர்ப்பம் தரிக்கும் நிலைக்கு ஆழாககு; கிறுது. அது மட்டுமல்லாது தமது வயதினைவிடப் பெரியவர்களாலும் பாலியல் நடத்தைகடகு; த் தூண்டப்படுவதுடன் பாலியல் தொடர்பான அறிவின்மையினால் அத்தூண்டல்களின் பால் தாமும் துலங்குகின்ற நிலை இவர்களது இளவயதுக் கற்பத்திற்கு வழிவகுகக்pறது.

இவைமடடமல்லாது வறுமை, பொருளாதார நிலைமை, சமூகப் பின்னணி போன்ற சமூகக் காரணிகளும் பாலியல் கல்வியின் தேவையினைத் தூண்டி நிற்கின்றன. இன்றைய சூழ்நிலையில் உலகிற்குப் பாரிய சவாலாகத் தலை தூக்கி நிற்கின்றது அபரிமிதமான குடித்தொகைப் பெருக்கம். இத்தகைய நிலைமைக்கான காரணம் கல்வியறிவின்மை முக்கியமாகக் குடும்பக் கடடு; ப்பாட்டு முறைகள் தொடர்பில் போதிய அறிவின்மை. இதன் விளைவாகப் பெருகும் குடித்தொகை வறுமைக்கு வழிவகுகக் pறது இதுவே குழந்தைத்தொழிலாளர்களின் பெருக்கம், பாலியல் தொழிலின் பரவல் போன்றவற்றினை ஊக்குவிக்கிறது. இதுவே சிறுவர் துஷ்பிரயோகம், பாலியல் நோய்களின் பெருக்கத்திற்கு வழிவகுக்கிறது.
 
மேலும் இலங்கையினைப் பொறுத்தவரை கடந்த பல ஆண்டுகளாக நிலவிய யுத்தசூழ்நிலை பின்பு அதன் உகக் pரநிலை என்பன ஏற்படுத்திய தாகக் ம் இன்று பாரிய சமூகக்கட்டமைப்புச் சிதைவினை உருவாக்கியுள்ளது. யுத்தசூழலில் பாதுகாப்புக் கருதி இளவயதிலேயே திருமணம் செய்த பெண்கள் போரின் காரணமாகத் தங்கள் கணவனை இழந்த பின்னர் தங்கள் உடலியல், உளவியல், பொருளாதாரத் தேவைகட்காகப் பாலியல் தொழிலினைப் பரிகாரமாகக் நாடுகின்ற  நிலை வடக்கு, கிழக்குப் பகுதிகளில் அதிகரித்து வருகிறது. 

3 இச்சந்தர்ப்பத்தில் பாலியல் அறிவானது முறையாக இல்லாத நிலையில் இவர்கள ; தாங்களும் பாலியல் நோய்த்தொற்று அபாயத்திற்கு உளள் hவதுடன் தம்மோடு உறவுகொள்பவர்களையும் சவாலுக்கு உள்ளாக்குகின்றனர். ஒரு பிள்ளை தனது அடிப்படைக ;கல்வியினைத் தாய்மடிக் கல்வியாகவே பெறுகின்றது. பாலியல் தொடர்பான விளக்கங்களும் அவர்களுக்கு நெருக்கமானவர்களான பெற்றோர்களாலேயே பக்குவமாக வழங்கப்படவேண்டியது அவசியம். மாறாகப் பெற்றோரின் பகிரங்கமான பாலியல் செயற்பாடுகளைப் பாரக்;க நேரிடுகின்ற போதும், இணையத்தில் பாலியல் தகவல்களை அறிகின்ற போதும் உளவியல் ரதீ pயான அசௌகரிய நிலை ஏற்படுவதுடன் உளவியலாளரான ' சிக்மன் ஃப்ராய்ட்” குறிப்பிட்டது போல அது அவனது ஆழ்மனப் பதிவாக மாற்றமடைகிறது. சில பிள்ளைகள் அதனைத் தன் சகஎதிரப் hலாருடனோ அல்லது தம்மில் பெரியவர்களுடனோ பரீட்சித்துப ; பாரக் ;க முனைகின்றனர். இதுவே உளவியல்ரதீ pயான தாக்கமாகவும் வகக்pரமாகவும் மாறுவதுடன் பருவமாற்றங்கட்குட்படுகின்ற இளம் வயதில் அவனைப் பாலியல் வன்முறையாளனாக மாற்றுகிறது. இந்நிலையினைத் தவிர்கக்ப் பாலியல் கல்வி அவசியமாகிறது.

மேலும் இதனை வேறொரு கோணத்திலும் நோக்கவேண்டியது அவசியம். பாலியல் ரதீ pயான சிக்கல்களுக்குப் பால்நிலை வேறுபாடும் காரணமாக அமைகின்றது. பெண், ஆண் பிள்ளைகளை அவர்களின் இலிங்கஉறுப்பு வேறுபாட்டிற்கு அபப்hல் போலியான சில வேறுபாடுகளின் வழியில் வளர்கின்ற நிலைமை ஆண்பிளi; ள அனைத்துவிடயக்களையும் அறியவும் அதன்வழி செயற்படவும் தேவையும் துணிச்சலும் மிக்கவனாகவும், பெண்பிளi; ள தேடுதல், அறிதல், அவைதொடரப் hகப் புரிதலை ஏற்படுத்தல் போன்ற செயற்பாடுகள் மறுக்கப்படட் வளாகவும் வளர்க்கப்படுதல் காலப்போக்கில் ஆண்கள் பருவமாற்றம் அடைந்த பின்னர் அவர்களுக்கு வழங்கப்படட் அபரிபிதமான துணிச்சல் கண்மூடித்தனமானபாலியல் நடத்தைகடகு; வழிவகுகக்pறது. அதேவேளை பெண்கள் பாலியர் தொடர்பாக அறியவேண்டும் என்கின்ற அவசியப்பாட்டினையும் உணராது இருக்கின்றனர் இதுவே காலப்போக்கில் திருமணத்தின் பின்னர் ஏற்படும் பாலியல் சிக்கல்களுக்கு காரணமாகிறது இதற்குப் பரஸ்பரப் பாலியல் அறிவின்மையே காரணமாகிறது. இது விவாகரத்து, குடும்பவன்முறை வரை கொண்டு செல்வதுடன் சமூகக்கட்டமைப்பிலும் சிக்கலினை ஏற்படுத்துகிறது. எனவே பாலியல் ரதீ pயான அறிவானது இளைஞர்கள் மத்தியில் கடட் hயக் கல்வியாக வழங்கப்படுவதன் மூலம் பலதரப்பட்ட சிக்கல்கட்கு விடைகாண்பதுடன் ஆரோக்கியமான உலகினையும் கடடியெழுப்பலாம் என்பது உறுதி.  

நிருத்தனி சிவலிங்கம் 

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்