/* up Facebook

May 19, 2015

அருணா சாக்பெக் எத்தனை முறை கொல்லப்படுவாள்? - தமிழச்சி


இந்தியாவில் நேற்று [17.12.2009] உச்ச நீதிமன்றம் ஓர் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளித்திருக்கிறது. ´அருணா சான்பெக்´கை கருணைக் கொலை செய்யும்படி உத்தரவு அளித்திருப்பதை வாசிக்கும் போது அனேகரை இனம் புரியாத உணர்வுகளுடன் நல்ல தீர்ப்பு என சொல்ல வைத்து விடுகிறது.  "குற்றமற்ற ஓர் மனித உயிரை இதர மனிதர்கள் சேர்ந்து சொந்த நலங்காக்கும் கருத்துடன் அழிக்க முற்படுதல் மகா பாவம் என்போம். சமய ரீதியாகவும், சமுதாயச் சட்ட ரீதியாகவும் நம்முடைய அறத்தின் மதீப்பிடு இவை." ஆனால், ´அருணா சாக்பெக்´கை அறிந்தவர்கள் மௌனமான அழுகையின் ஊடாக அங்கிகரிக்கிறார்கள். அவள் கொல்லப்பட வேண்டியவள். அதற்கு பெயர் கருணை கொலையோ, எதுவோ, எதாவதாகவோ இருந்து விட்டுப் போகட்டும் என்கிறார்கள். 


கருணைக் கொலைக்கு எதிராக நாம் விவாதத்தை தொடரவில்லை... 

எமக்கும் கருணைக் கொலைக்கு ஆதரவாக தீர்ப்பு அளித்ததில் உடன்பாடே! இருப்பினும், ´பாவம் ஓரிடம்... பழி ஓரிடம்´ என்பது போல், ´அருணா சாக்பெக்´ நிலை காரணமாகி விட்டேதே என நெஞ்சு தவீக்கிறது. 

அருணா சாக்பெக் நீ ஏன் விழிக்கவில்லை? 

"என்ன நடந்தது என்று எங்களுக்கு சொல்லி இருக்கலாம் அல்லவா?..."

"திருட்டு பொறுக்கியை அம்பலப்படுத்த வேண்டும் என்ற உன் நியாய உணர்வும், உன் போராட்ட குணமும் என்னவாயிற்று?..." 

ஒருமுறை ஒரேஒரு முறை முயன்றுதான் பாரேன்! 

´சோகன்லால் பாரத வால்மீகி´ இப்போது டில்லியில் எந்த குற்றவுணர்வுமற்று வாழ்கிறான். அவன் வாழ நீ ஏன் சாக வேண்டும்? 

நீ வாழக்கூடாதவள் என எது தீர்மானித்தது? 

உன் உடலின் இயக்கமா? நின்று போய்விட்டதாமே? இனி ஒன்றும் செய்ய முடியாதாமே! மருத்துவ உலகம் சொல்லிவிட்டது.... 

சட்டமும், ´கருணை கொலை´க்கு அனுமதி கொடுத்துவிட்டது!

இனி, ´நீ வாழ இலாயக்கற்றவளா?´ 

நீ ஏன் சாக வேண்டும்?

எது சதி செய்தது? 

உன் உடல்கூறா? உன்னுடைய மரபணுக்களா? 

"மரபணுப் பொறி இயலில் மனிதனை திருத்திப் புதுப்பிக்க முடியும், உயிர்பிக்க முடியுமென ஏக வசனம் பேசும் விஞ்ஞானத்திற்கு உன்னை விழிக்க வைக்க முடியாதா?" 

35-வருடங்களை கடந்தும் உன் உடல் ஆண் குரல் கேட்டால் நடுங்குகிறது என்கிறார்களே உண்மைதானா? 

உன் நிலை குறித்து எத்தனையெத்தனை மனிதர்கள் கவலைப்படுகிறார்கள் தெரியுமா? உன்னைப்பற்றி தெரியாதவர்கள் கூட எம் எழுத்துக்களில் உன்னை வாசிக்கும் போது தவீத்துதான் போவார்கள். அதை நீ அறிவாயா? 

இனி, எங்களுக்குள் ´அருணா´ என்ற பேர் ஒலிக்கும் போதெல்லாம் உன் நினைவும் வருவதை தவீர்க்க முடியாது. எத்தனையோ சம்பவங்கள் வாழ்வில் நடக்கின்றன. சில சம்பவங்கள் நம் ஆயுள் வரை தொடரும் அளவுக்கு பாதிப்புக்களை உருவாக்கிவிடுகின்றன. உனக்கு நடந்த சம்பவங்களும் அப்படித்தான்... 

எப்போதாவது ´பிங்கி விரானி´யின் புத்தகம் கண்ணில் படும்போதெல்லாம் ´அருணா எப்படி இருப்பாளோ?´ என்று மனம் பரிதவிக்கும். இனி நீ இல்லை என்பதை மனம் பேசும்.

உண்மைதான், ´உடலை விடுத்தல் மேன்மை நிலை´ என்பார்கள்! ஒவ்வொரு மனித உடலின் முடிவும் அதுதானே! 

2

சரியாக 35-வருடங்களுக்கு முன்பு மும்பையில் இருக்கும் கே.இ.எம் மருத்துவமனையில் [King Edward VII memorial hospital] கர்நாடக மாநிலத்தின் ஹல்திபூரியைச் சேர்ந்த அருணா சான்பெக் நர்ஸ் வேலைக்காக தேர்ந்தெடுக்கப்பட மும்பைக்கு செல்கிறாள். மருத்துவமனையில் இருக்கும் ஆய்வு கூடத்தில் ´அருணா சான்பெக்´கிற்கு வேலை. அதே ஆய்வுகூடத்தில், ´சோகன்லால் பாரத வால்மீகி´ என்பவன் வார்ட் பாஃயாக வேலை செய்கிறான். அருணா சான்பெக் வருவதற்கு முன்பிருந்தே ஆய்வு கூடத்திற்கு சொந்தமான உணவு பொருட்களில் இருந்து திருடும் வழக்கம் இருந்திருக்கிறது. 

அருணா சான்பெக் வேலைக்கு வந்தபின் சோகன்லால் திருட்டை கண்டித்திருக்கிறாள். இருப்பினும் சோகன்லால் திருடுவதை நிறுத்தவில்லை. இதற்கிடையே அருணா சான்பெக்கிற்கும், அதே மருத்துவமனையில் வேலை செய்யும் டாக்டருக்கும் காதல் ஏற்படுகிறது. சோகன்லால் திருட்டு குறித்து தன் காதலனிடம் பலமுறை சொல்லி இருக்கிறாள் அருணா சான்பெக். "அவன் ஏதாவது செய்துவிட்டு போகட்டும். அவன் விஷயத்தில் தலையிடாதே!" என தடுத்திருக்கிறார் டாக்டர் காதலன். 

அருணா சான்பெக் மீது கடும் கோபத்திலிருந்த சோகன்லாலுக்ளுள் பழிவாங்கும் உணர்வு வெறித்தனமாக இருந்தது. அதற்கான சந்தர்ப்பம் 27.11.1973-இல் அமைந்தது. 
வேலை முடிந்ததும் அருணா சான்பெக், தன்னுடைய நர்ஸ் உடையை மாற்றுவதற்காக மருத்துவமனையின் பேஸ்மெண்ட் பகுதியில் உடை மாற்றிக் கொண்டிருந்த போது அவளுக்கு தெரியாமல் உள்ளே மறைந்திருந்த சோகன்லால் அவளின் கழுத்தை இறுக்கி கீழே தள்ளி மூர்க்கத்துடன் பாலீயல் பலாத்தாரம் செய்துவிட்டு அவள் உடலில் இருந்த நகைகளையும் எடுத்துக் கொண்டு சென்றுவிட்டான். மாலை நேரத்தில் இச்சம்பவம் நடந்தது 


அதற்கு பிறகு நடந்த கொடூரங்கள் தான் கொடுமையானவை. 

மயங்கிக் கிடந்த அருணா சான்பெக்கை உடன் பணிபுரிந்த நர்ஸ்சுக்கள் தூக்கிச் சென்றிருக்கிறார்கள். என்ன நடந்ததென்று சரியாக ஊகிக்க முடியாவிட்டாலும் பரிசோதித்த டாக்டர்கள் கழுத்து நெறிக்கப்பட்டதால் மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன என்று கண்டுபிடித்தனர்.  ஓரிரு நாட்களில் ´அருணா சான்பெக்´கிற்கு நினைவு திரும்பக்கூடும் என நம்பினர். ஆனால் சில நாட்கள் பல நாட்களாக சென்று ஆண்டுக்கணக்கில் ஓடி இன்று 35-வது ஆண்டாகி விட்டது. 

ஆண்கள் குரல் கேட்டால் மட்டும் உடல் நடுங்குவதாக சொல்லப்படுகிறது. 
இப்படி 35-ஆண்டுகளாக இன்றும் அருணா சான்பெக் உடல் இருக்கிறது. 

அருணா சான்பெக்கை பாலீயல் பலாத்காரம் செய்து நினைவிழந்து கிடக்கும் அளவுக்கு பலாத்காரத்தை காட்டிய ´சோகன்லால்´ என்ன ஆனான் என்று நினைக்கிறீர்களா? சோகன்லால் மீது பாலீயல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவில்லை. வெறும் திருட்டு குற்றச்சாட்டு மட்டுமே பதிவு செய்யப்பட்டு 6-வருடங்கள் மட்டுமே சிறையில் இருந்தான். விசித்திரமான இக்கொடுமையான சம்பவத்தைக் குறித்து நடந்தது என்ன என்று 1973-இல் மும்பை முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. பல நாளிதழ்கள் பக்கம் பக்கமாக அருணா சான்பெக் பற்றி எழுதியது. படிக்கும் வாசகர்களுக்கு எளிதில் மறக்க முடியாத சம்பவமாக இருந்தது. 

பெண் எழுத்தாளரான ´பிங்கி விரானி´க்குள் அருணா சான்பெக் சம்பவம் பாதிப்பை ஏற்படுத்தியது. உண்மையில் நடந்தது என்ன என்று விசாரணையில் இறங்கிவிட்டார்.
அருணா சான்பெக் குடும்பத்தினர், நண்பர்கள், தெரிந்தவர்கள், சோகன்லால் பாரத வால்மீகி, டாக்டர் காதலன் என அனைவரையும் சந்தித்திருக்கிறார். அதன் மூலம் கிடைத்த பல தகவல்களை தொகுத்து ஒரு  புத்தகமாகவும் வெளியிட்டிருக்கிறார்.

மேலும் பிங்கி விரானி, உச்ச நீதி மன்றத்தில் அருணா சான்பெக்கை கருணை கொலை செய்ய அனுமதிக்குமாறு வழக்கு தொடுத்தார். அதற்கான ஆவணங்களும் மருத்துவ சான்றிதழ்களும் இனி அருணா சாக்பெக்கிற்கு எந்த உணர்வும் திரும்பாது என்பதை உறுதியாக கூறிவிட்ட நிலையில் 35-வருடங்களுக்கு பிறகு நேற்று தீர்ப்பு வந்திருக்கிறது. கருணை கொலைக்கு அனுமதி கிடைத்துவிட்டது.

ஆம்...

அருணா சாக்பெக் இன்னும் எத்தனை முறை கொல்லப்படுவாள்?

தமிழச்சி
18.12.2009
நன்றி - தமிழச்சி

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்