/* up Facebook

Mar 20, 2015

துன்யா மிகெய்ல்: போர்க்கால சொற்களின் சொந்தக்காரி - நசார் இஜாஸ்


வெடிகுண்டுகள் விளையாடும் வெளிகளில் கண்ணீரும் கவலைகளும் அச்சங்களும் குடி கொண்டிருக்கும். ஒரு சாதாரண மனிதனின் உணர்வுகளுக்கு அப்பால் அவனது மனம் ஆயிரம் செல்சியஸ் டிகிரியில் கொதித்துக் கொண்டிருக்கும்.

சிறார்களின் சின்னக் கண்களுக்குள் பயமும், பரிதவிப்பையும் புகுத்தியிருக்கும். அந்தப் பயத்தையும், பரிதவிப்பையும் ஒரு சின்னப் பரிசுப் பொதியொன்றை வழங்கியாவது சரி செய்து விட முடியுமா? போரின் துயரம் மிகத் துயரமானது. அத்தனை துயரத்தையும் தன் எழுத்துக்களால் அனைவரது மனத்திரையிலும் பதிவு செய்திருக்கிறார் துன்யா மிகெய்ல்.

துன்யா மிகெய்ல் ஈராக்கிய அமெரிக்க கவிஞர்களுள் முதன்மையானவரும் தனித்துவமுடையவருமாவார். 1965 ஆம் ஆண்டு தாயினது கர்ப்பச் சுருளிலிருந்து வெளியுலகினை எட்டிப் பார்த்தார். ஈராக்கின் பக்தாதில் பிறந்த இவர் 1990 இன் நடுப்பகுதியில் ருளு இற்குப் பறந்தார். தற்போது மிக்சிகனில் வசித்து வருகிறார். இருபத்தி ஐந்து வயது வரைக்கும் பக்தாதில் வாழ்ந்து வந்தார். அக்காலப்பகுதியில் ஈராக்கின் தி பக்தாத் ஒப்சேர்வர்’ (வுhந டீயபானயன ழுடிளநசஎநச) என்ற பிரபலமான பத்திரிகையின் ஊடகவியலாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றினார்.

போரின் சொல்லொன்னா துயரங்கள் அத்தனையும் யாருடைய கண்களை உருக்கியதோ இல்லையோ, துன்யா மிகைலின் கண்களை கண்ணீரால் நிரப்பியது. தன் பேனா முனையால் வார்த்தைக் கனைகளை போருக்கெதிரான ஆரம்ப கட்ட விதைகளாகத் தூவினார். அத்தனையும் சர்வதேசத்தின் காதுகளில் துயரங்களைச் சொல்லி வைத்தன.
அவரது எழுத்துக்களுக்கு நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்துக் கொண்டே சென்றது. ஆங்கில மொழியில் இரண்டு தொகுப்புக்களையும் அறபு மொழியில் நான்கு கவிதைத் தொகுப்புக்களையும் வெளியிட்டுள்ளார். அவற்றுள்,


01.          ஈராக்கின் இரவுகள்
02.          போர் கடுமையாக உழைக்கிறது
03.          கடலுக்கு வெளியே வாசிக்கப்படும் அலை

2001 ஆம் ஆண்டு இவருக்கு UN Human Rights Award for Freedom writing என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். 2009இல் Arab American விருதையும் பெற்றுக் கொண்டார். நியூயோர்க் பொது நூலகம் போர் கடுமையாக உழைக்கிறது என்ற நூலை 2005 ஆம் ஆண்டின் சிறந்த 25 நூல்களில் ஒன்றாகத் தெரிவு செய்தது.

ஆக்கிரமிப்பு, அத்துமீறல், இனப்படுகொலை, மனித உணர்வுகள், உரிமை மீறல் மற்றும் பயங்கரவாதம் என மனித குல மனசாட்சியை உலுக்கியெறியும் அத்தனையையும் துன்யா மிகெய்ல் காட்சிப்படுத்தினார். துன்யா மிகெய்லின் பார்வையில் போர் இப்படித்தான் உழைக்கிறது.

போர் கடுமையாக உழைக்கிறது

போர் எவ்வளவு மகத்தானது!
எத்தனை ஆவலும் திறமையும் மிக்கது!
விடியற்காலையில் ஒலியெழுப்பி
அவசர ஊர்தியை பல இடங்களுக்கு அனுப்பி வைக்கிறது
செத்த உடல்களைக் காற்றில் வீசுகிறது
காயமடைந்தோருக்கு ஸ்ட்ரெச்சர்களை உருட்டிச் செல்கிறது
தாய்மார்களின் கண்களில் மழையை வரவழைக்கிறது
சிதைபாடுகளில் இருக்கும் பூமியை ஆழத் தோண்டுகிறது
சிதைபாடுகளில் இருக்கும் பல பொருட்களை இடம் பெயர்க்கிறது
சிலர் வாழ்க்கையற்றும் புண்களோடும்
பலர் வாட்டமும் வலியுடனும்
இது குழந்தைகளின் மனதில் பல கேள்விகளை எழுப்புகிறது
வானத்தில் எரியாயுதங்களையும்
வெடிகளையும் வெடிக்கச் செய்து
கடவுளுக்குப் பொழுது போக்களிக்கிறது
கன்னிவெடிகளை நிலங்களில் விதைத்து
பொத்தல்களையும் கொப்பளங்களையும்
அறுவடை செய்கிறது
குடும்பங்களைப் புலம் பெயரச் செய்கிறது
மதபோதகர்கள் சாத்தானைப் பழிக்கும் போது
அவர்களுடன் நிற்கிறது
இரவு பகவாக போர் தொடர்ந்து உழைக்கிறது
நீண்ட உரை நிகழ்த்த கொடுங்கோலனை ஊக்குவிக்கிறது
படைத்தலைவர்களுக்கு மெடல்களை அணிவித்து கௌரவிக்கிறது
கவிஞர்களுக்கு பல கருக்களை வித்திடுகிறது
செயற்கைக் கால்கள் செய்யும் தொழிற்சாலைகளுக்கு உதவுகிறது
ஈக்களுக்கு உணவளிக்கிறது
வரலாற்றுப் புத்தகங்களின் பக்கங்களைக் கூட்டுகிறது
கொல்லப்பட்டவனுக்கும் கொல்லப்படுபவனுக்குமிடையில்
சமத்துவம் நிலைநாட்டுகிறது
காதலர்களுக்கு கடிதம் எழுதக் கற்றுத் தருகிறது
இளம் பெண்களைக் காத்திருக்கப் பழக்குகிறது
கட்டுரைகளாலும் படங்களாலும் செய்தித்தாள்களைக் கூட்டுகிறது
அநாதைகளுக்குப் புதிய வீடுகளை உருவாக்கித் தருகிறது
சவப்பெட்டி செய்பவர்களுக்கு புத்துணர்ச்சியூட்டுகிறது
சவக்குழி தோண்டுவோருக்கு முதுகில் தட்டிக் கொடுக்கிறது
தலைவரின் முகத்தில் புன்னகையை வரைகிறது
போர் நிகரற்ற சிரத்தையோடு உழைக்கிறது
இருந்தும் எவரும் அதனை ஒரு வார்த்தை கூட புகழுவதில்லை.
(கவிதை நன்றி- வைகறை சஞ்சிகை - ழுஉவழடிநச-னுநஉநஅடிநச 2009)இவர் எழுதிய நூல்களில் போர் கடுமையாக உழைக்கிறது (வுhந றயச றழசமள hயசன) என்ற இவரது கவிதைத் தொகுதி சர்வேதேசத்துக்கு வழங்கப்பட்ட ஆவணம் என சொல்லுமளவுக்கு துன்யா மிகெய்லின் ஒவ்வொரு சொற்களும் ஏதோவொரு விடயத்தை செதுக்கியிருந்தன.

ஈரான் - ஈராக்கிய யுத்தம் ஆரம்பமான காலப்பகுதி அது. படுகொலைகளினல்  பிணங்கள் குவிந்து கொண்டே இருந்தது. பிணங்களை செய்யும் தேசமாக அது மாறிக் கொண்டிருந்தது. 1980இல் ஆரம்பிக்கப்பட்ட ஈரான்- ஈராக் போர் பிணங்களை மீளவும் உற்பத்தி செய்து கொண்டேயிருந்தது. மொத்தத்தில் போர் திரும்பத் திரும்ப சர்ச்சையை ஏற்படுத்துகின்ற ஒன்றாகவே மாறிக் கொண்டிருக்கிறது.

போர் கடுமையாக உழைக்கிறதுஎன்ற கவிதையினால் சதாம் குசைனின் துப்பாக்கி முனைகள் இவரது உயிரை பறிக்கத் தயாராகின. சதாம் குசைனின் எதிரிகள் பட்டியலில் துன்யா மிகெய்ல் தனக்கும் ஓர் இடத்தைப் பெற்றுக் கொண்டார்.

போரின் பேரில் பொறி தெறிக்கும் துன்யா மிகெய்லின் சொற்கள் அவருக்கெதிராக வெறி கொண்டெழுந்தாடியது. தான் எழுதிய போர் கடுமையாக உழைக்கிறதுஎன்ற தனது கவிதை ஈராக் படையினரின் இரத்தக் கொதிப்பை மென்மேலும் அதிகரிக்கச் செய்தது. இவர்களுக்கு ஆத்திரத்தை மூட்டி தன் உயிருக்கான சு+த்திரத்தை தீட்டிக் கொண்டார். அந்தச் சு+த்திரத்தின் கணக்கு எப்போதும் தீர்க்கப்படலாம் என்ற நிலையே இருந்தது.

இதையறிந்த துன்யா மிகெய்ல் அடுத்த கணமே ருளு இல் தஞ்சம் புகுந்தார். தான் இனிமேல் தொல்லைக்குள்ளாகலாம் என்ற எச்சரிக்கை உணர்வும் இதற்குக் காரணமாகலாம். தற்போது அங்கு மிக்சிகனின் ஓக்லன்ட் பலகலைக்கழகத்தில் அறபு மொழி விரிவுரையாளராகக் கடமையாற்றி வருகிறார்.

இதுவரை துன்யா மிகெய்ல் தனது சொந்த நாட்டுக்குத் திரும்ப வில்லை என்பதுதான் மிகத் துயரமானது. அந்தத் துயரத்தினை துன்யா மிகெய்ல் ஏகப்பட்ட மூட்டைகளாக சேமித்து வைத்திருப்பார். தான் புரண்டு விளையாடிய புழுதி மண்ணில் மீண்டும் நடை பயிலும் காலம் துன்யா மிகெய்லுக்கு மிக விரைவில் வந்து சேரலாம். அப்போது அவர் அடையும் சந்தோசத்தை ஓரிரு சொற்களால் ஜோடித்து விட முடியாது.0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்