/* up Facebook

Mar 6, 2015

மென்சக்தி, வன்சக்தி, இன்னமும் வெறுஞ்சக்தி - சாந்தி சச்சிதானந்தம்


காலஞ்சென்ற பாராளுமன்ற உறுப்பினர் திரு ரவிராஜ் அவர்களின் ஞாபகார்த்தப் பேருரையினை சமீபத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான திரு சுமந்திரன்  அவர்கள் “தமிழர் அரசியலில் மென் சக்தியின் பொருத்தப்பாடு” என்னும் தலைப்பில் ஆற்றியிருக்கின்றார். மிகவும் கடினப்போக்குள்ள தற்போதைய அரசாங்கம் மாற்றம் பெற்று, இதனுடன் ஒப்பீட்டு ரீதியில் குறைந்த கடினப் போக்குள்ளது என யாவராலும்  புரிந்திருக்கக்கூடிய ஓர் புதிய அரசாங்கம் உருவாக்கப்படும் சாத்தியக்கூறுகள் தென்படுகின்ற நிலையில் அந்நிலைக்;குப் பொருத்தமாக இத்தலைப்பு தெரிவு செய்யப்பட்டதோ எனச் சந்தேகத்தினை இது ஏற்படுத்துகின்றது. புதிய மாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் அணுகுமுறையை மக்களுக்கு விளக்குவதற்காக திரு சுமந்திரன் அவர்கள் இவ்வாய்ப்பினைத் தேர்ந்தெடுத்திருக்கலாம். அது எப்படியிருப்பினும், திரு சுமந்திரனின் “மென் சக்தி” மற்றும் “வன்சக்தி”  (ளுழகவ Pழறநசஇ ர்யசன Pழறநச) பற்றிய விளக்கங்களை ஆழ நோக்கும் கடமை நம்மெல்லாருக்கும் உண்டு. ஏனெனில் இதுதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இனிவரும் அணுகுமுறையாக இருக்குமானால்;, அது நமது எதிர்காலத்தினையும் எமது சந்ததியினரின் எதிர்காலத்தினையும் பாதிக்கும் விடயமாகும்.

ஒரு நாடு தனக்கு பிடித்தமில்லாததோர் நடவடிக்கையினைச் செய்ய வைப்பதற்கு கைக்கொள்ளக்கூடிய வலுவினைத்தான் இவ்வாறு மென்சக்தி, வன்சக்தி என சுமந்திரன் விளக்குகின்றார். இவரது விளக்கத்தின்படி வன் சக்தியானது இராணுவப் பலத்தினாலோ அல்லது பணபலத்தினாலோ ஒரு நாட்டினை குறிப்பிட்ட பாதையில் செலுத்துவது எனவும் மென் சக்தியானது அந்த நாட்டின் விருப்புக்களை மாற்றுவதன் மூலம் குறித்த மாற்றத்தினைக் கொண்டு வருவது என கூறப்படுகின்றது. இரண்டாம் உலக மகா யுத்தத்தின் முன்னர் வன் சக்தியையே நம்பிக் கொண்டிருந்த உலகம், அந்;த யுத்தத்தின் பின்னர் ஒழுக்கத்தின் அடிப்படையிலான மென்சக்தியையே கொண்டு மாற்றங்களைத் தேடுதல் கோள அரசியலின் நடுநாயகமான மூலோபாயமாக உருவாகி விட்டது எனக் கோருகின்றார். ஒரு கருத்து மக்கள் மத்தியில் விதைக்கப்படுவதனால் (அல்லது அவருடைய மொழியில் கூறினால் விற்கப்படுவதனால்) பல மாற்றங்கள் எற்படுத்தப்பட்டிருக்கின்றன என்கிறார். இதற்கு சிறந்த உதாரணமாக, அவர் திபேத் மக்களின் போராட்டத்தினைக் காட்டுகின்றார். அவர்கள் மென் சக்தியைப் பிரயோகித்ததனால் இன்று அவர்களை சர்வதேச சமூகம் அங்கீகரித்திருக்கின்றது என்பது அவர்களின் வெற்றிக்குச் சான்றாகக் காட்டப்படுகின்றது. 

மாற்றங்களை ஏற்படுத்தும் சக்திகளின் வகைகளைப் பார்ப்பதற்கு முன்னர், இங்கு உரையாடப்படும் அந்த அரசியல் மாற்றத்தின் தன்மையைப் பார்ப்பது முக்கியமாகும். மாற்றம் ஏன் தேவையாகின்றது என்பதை இப்படிக் கூறலாம். இந்த உலகின் வளங்கள், மற்றும் வாய்ப்புக்களினை மக்கள் குழுமங்களும் வௌ;வேறு சமூகங்களும் தமக்குள் பகிர்ந்து கொள்ளும்போது, ஏதாவதொரு குழு அல்லது குழுக்களுக்கு பிரதிகூலமான முறையில் அவை பகிர்ந்து கொள்ளப்பட்டால் அங்கு மாற்றம்; தேவைப்படுகின்றது. இந்தப் பிரதிகூலமான முறையில் பகிரப்படுவது என்பது, ஒன்றில் பொதுவாக இருக்கும் வளங்களையும் வாய்ப்புக்களையும் பிரித்தலின் மூலமாகவோ அல்லது ஒரு குழுவினது வளங்களையும் வாய்ப்புக்களையும் மற்றைய குழு அல்லது குழுக்கள் அபகரித்தலின் மூலமாகவோ ஏற்படுத்தப்படலாம். இந்த செயற்பாடு அதிகாரத்துடன் நெருங்கிய தொடர்புடையது.  அதாவது,, எங்கு மாற்றங்களை வேண்டுகின்றோமோ அங்கெல்லாம் மாற்றம் ஏற்படாமல் இருப்பதில் நன்மையடையும் ஓர் குழு அந்த நிலையைப் பேணும் அதிகாரத்தில் இருந்து கொண்டேயிருக்கும். எனவே, பல நன்மைகளைப் பெற்று வாழும் ஓர் குழுவினருக்கு, அவர்கள் இந்நன்மைகளையெல்லாம் இழக்கும் நிலைக்குக் கொண்டு வருவதே மாற்றம் எனக்கூறலாம். இந்தப் புரிதலின் அடிப்படையிலேயே நாம் மென் சக்தியையும் வன்சக்தியையும் பார்க்கலாம் என்று நிpனைக்கின்றேன்.

நன்மை பெறுபவர்கள் எங்குமே தாம் பெறும் எந்த நன்மையையும் தாமாகவே விட்டுக்கொடுப்பது கிடையாது. அதிலும் அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அதன் காரணமாக ஏராளமான அரசியல் சமூக நன்மைகளைப் பெறுவதனால்  உதாரணமாக, உலகமெல்லாம் மதிக்கும் தலைவரான திரு சம்பந்தரை தமிழ் மக்கள் பெற்றிருக்கின்றனர் என சுமந்திரன் புகழாரம் சூட்டுகின்றார். அத்தகைய மரியாதை பெற்ற திரு சம்பந்தர் அவர்களே தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியை இத்தனை வருடங்களில் யாருக்கும் விட்டுக்கொடுத்தாரா? இனியும்தான் விட்டுக்கொடுப்பாரா? அதே போல தமிழ் தேசியக் கூடட்டமைப்பின் ஏனைய தலைவர்களையும் நாம் பார்த்துக் கேட்கலாம். ஒரு மனிதர் தாம் பிரத்தியேகமாக அனுபவிக்கும் நன்மைகளைப் பிறருக்கும் பகிர்ந்து கொள்ள வைக்க வேண்டுமானால், அங்கு ஏதோவொரு எதிர்க்க முடியாத சக்தி பிரயோகிக்கப்படவேண்டும் அல்லது அதற்குரிய கட்டமைப்புக்களும் அவை இயங்குவதற்கான பொறிமுறைகளும்  ஸ்தாபிக்கப்படவேண்டும். இ;ங்கு நாம் எடுத்துக்கொண்ட உதாரணத்தில், தலைமைப்பதவி தானாகவே கிரமமாக மாற்றம் பெறக்கூடிய கட்சி யாப்பு விதிகளும் அதற்குரிய பாரம்பரியங்களும் இல்லாவிடில், அக்கட்சி உறுப்பினர்கள் உக்கிரமாகப் போராடித்தான் அம்மாற்றத்தைப் பெற வேண்டும். “மயிலே மயிலே இறகு போடு என்றால் போடுமா” என்று பழமொழி கூறுவார்கள் நம்முன்னோர்கள். சுருங்கக் கூறினால், ஒரு நிர்ப்பந்தமுமின்றி யாரும் தாம் அனுபவிக்கும் நன்மைகளை இழப்பதற்காக  மாறுவது கிடையாது. அந்த நிர்ப்பந்தத்தினை மென் சக்தியா வன் சக்தியா எற்படுத்த வல்லது என்பதுதான் இப்பொழுது திரு சுமந்திரன் முன்னுள்ள கேள்வி.

இனவாதம் தலைதூக்கியிருந்த காலத்தில் அமெரிக்காவில் மார்டின் லூதர் கிங் அவர்கள் அகிம்சா வழிப் போராட்டத்தினை ஆரம்பித்திருந்தார். அவருடைய போராட்டம் ஒரு புறமிருக்க, மறுபுறம் கறுப்பின மக்கள் அன்றாட ரீதியில் போக்குவரத்திலும் அலுவலகங்களிலும் அவமானங்களை எதிhகொள்ள வேண்டியதாக இருந்தது. இதனால் ஆத்திர மிகுதியால் அவ்வப்போது ஒவ்வொரு சம்பவமும் நடந்தவுடனே கறுப்பு இளைஞர்கள் குமம்பலாக வீதியில் இறங்கி கார்களை அடித்து நொருக்கியும், கடைகளை உடைத்தும் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். இது அந்த நகரங்களில் வாழ்;ந்த வர்த்தக சமூகத்தினருக்கு (அன்று அமெரிக்கா கைத்தொழில் மயப்பட்ட நாடாக வளர்ந்து கொண்டிருந்தது) பெரும் ஊறு விளைவித்தது. அவர்களின் காப்பீட்டுக் கட்டணம் பன்மடங்காக அதிகரிக்கத் தொடங்கி விட்டது. வியாபாரம் இதனால் ந~;டப்படத் தொடங்கி விட்டது. இதனால் வர்த்தக சமூகம் அரசியல்வாதிகளின் மீது அழுத்தத்தினைப் பிரயோகிக்க ஆரம்பித்தனர். அரசியல்வாதிகள் வர்த்தக சமூகத்தினரிடம் தங்கி நிற்பவரன்றோ? பின்னே கறுப்பர்களுக்கெதிரான பல விதிகளை மாற்றத் தொடங்கினர். காகம் உட்காரப் பனம் பழம் விழுந்தது என்பது போல ஏதோ அகிம்சா போராட்டத்தினால்தான் கறுப்பர்களுக்கு உரிமைகள் கிடைக்கப்பெற்றன என்று எழுதப்பட்ட வரலாற்றினை சுமந்திரன் மறுபடியும் எங்களுக்கு வாசிக்கின்றார். தென்னாபிரிக்காவின் சுதந்திர வரலாறும் கூட சர்வதேசப் பொருளாதாரத் தடைகளினால் அங்குள்ள வெள்ளையின வர்த்தக சமூகம்  எதிர்கொண்ட ந~;டங்களுடன் பின்னிப் பிணைந்தது.  திரு சுமந்திரன் திபேத்தினை உதாரணமாக எடுக்கின்றார். மென் சக்தியினைப் பிரயோகித்ததால் அம்மக்கள் சர்வதேச சமூகத்தின் அங்கீகாரத்தினைப் பெற்றிருக்கின்றனராம். இதில் மட்டுமல்லாது அவருடைய பேச்சு முழுவதுமே சர்வதேச சமூகத்தின் அங்கீகாரம் பெறுவது பற்றியே குறியாக இருப்பதைப் பார்க்கலாம், ஏதோ அதுதான் எமது இலக்கு என்பது போல. எப்பொழுதும் தமது சொந்த நலன்களை முன்வைத்து இயங்கும் சர்வதேசத்தின் அங்கீகாரம் பெற்றால்…. பின்பு என்ன? திபேத் மக்கள் இன்று என்னவாயினர்? அந்தப் பரிதாபத்தைப் பற்றி நாம் இங்கு பேசத் தேவையில்லையென்று நினைக்கின்றேன்.

2ம் உலகமகாயுத்தத்திற்குப் பின்னர் மென் சக்தி உலக அரசியலில் கோலோச்சுகின்றது என்கிறார் சுமந்திரன். உண்மையில் 20ம் நூற்றாண்டின் பின்பகுதியில்தான் மனித வரலாற்றின் மிக உக்கிரமான யுத்தங்கள் நடந்திருக்கின்றன. இரண்டு உலக யுத்தங்களில் உபயோகித்த குண்டுகளின் பன்மடங்கு குண்டுகள் வியட்நாமில் மட்டும் அமெரிக்காவினால் பொழியப்பட்டன. இவை தவிர, கொரியன் யுத்தம், டீயல ழக Pபைள ஐnஎயளழைnஇ பனாமா யுத்தம், ஈராக் யுத்தம், ஆப்கானிஸ்தான் எனப் பல போர்கள். கிட்டத்தட்ட ஐம்பது நாடுகளில் ஆட்சி மாற்றத்திற்கான வன்முறையினைக் கிளப்பி விட்டிருக்கின்றது அமெரிக்கா. இதுவரை எத்தனை உள்நாட்டுப் போர்கள், அப்பப்பா! லத்தீன் அமெரிக்க நாடுகள், ஆபிரிக்க நாடுகள், ஆசிய நாடுகள் எவையும் விதி விலக்கல்ல. பிரிவினைப் போராட்டங்கள் இல்லாத நாடே கிடையாது என்கின்ற அளவில் இவை வரலாற்றில் முன்னெப்போதும் காணாத வகையில் மனித உயிர்களைக் குடித்திருக்கின்றன. ர~;யா போன்ற ஐரோப்பிய நாடுகளும் இதிலிருந்து தப்பவில்லை. 1946 முதல் 2012 வரை எண்ணிக் கொள்ள முடியாத நூற்றுக்கணக்கான யுத்தங்கள் நிகழ்ந்திருக்கின்றன என வுhந நுஉழழெஅளைவ வரைபடம் காட்டுகின்றது. சுமந்திரன் எந்த உலகத்திலிருந்து பேசுகின்றார் என்றே கேட்பவர்களுக்குத் தோன்றும்.       

நாம் பிரயோகிப்பது வன் சக்தியோ மென்சக்தியோ, அது எதிரணியினருக்கு ஏதோவொரு முறையில் வலியை ஏற்படுத்த வேண்டும், அவர்களுக்குப் பொருளாதார ந~;டங்களை எற்படுத்த வேண்டும், அவர்களை இயங்க விடாமல் செய்ய வேண்டும். அவர்களுக்கெதிரான சட்ட நடவடிக்கை ஏற்படுத்தப்படும் எனப் பூச்சாண்டி காட்ட வேண்டும். இல்லையெனில் நாம் ஒரு மாற்றத்தையும் கொண்டு வர இயலாது. பேரம் பேசலாம், போராடலாம். ஆனால் என்ன செய்தாலும் அதன் விலை எதிரணிக்கு ஏதாவதொரு இழப்பாக அல்லது வலியாக இருக்கவே வேண்டும்.  நிச்சயமாக, சுமந்திரன் கூறுவது போல, மகிந்த இராஜபக்ச அழைக்கும் போதெல்லாம் “பேசுவதில் என்ன தவறு” என்றுவிட்டு (அப்படித்தான் திரு சம்பந்தர் சென்றாராம்) ஒருவிதமான மூலோபாயமும் இன்றிய முறையில் அவருடன் போய்ப் பேச்சுவார்த்;தைகள் நடத்துவதில் ஒரு நன்மையும் கிடையாது என அடித்துச் சொல்லலாம். இப்படிப் பார்த்தால் மென் சக்தி என்றும் வன் சக்தி என்றும் நாம் பிரித்துப் பார்க்க முடியாது எனப் புரியும். நாம் நோக்கும் விளைபயன் தரக்கூடிய சக்திதான் ஒரே சக்தி. இவருடைய உரையில் உள்ளவற்றைக் கூட்டிக் கழித்துப் பார்த்தால் சுமந்திரன் குறிப்பிடும் இந்த மென் சக்தியானது  சிங்கள ஆட்சியாளர்களுடன் சும்மா பேசிக்கொண்டிருக்கும் வெறுஞ்சக்தி என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ளலாம். ஆட்சி மாற்றம் நிகழ்ந்தவுடன் அதனைத்தான் செய்வதற்கு ஆயத்தப்படுத்துகின்றார் போலும். அதற்கு எங்களைத் தயார்ப்படுத்துவதற்குத்தானோ இந்த உரை?  

ஆட்சி மாற்றம் வரலாம், தமிழ் மக்களுக்கு சாதகமான சில சூழ்நிலைகள் உருவாகலாம். இந்த சந்தர்ப்பங்களை இலாபகரமாக உபயோகித்துக்கொள்வதற்கு தமிழர் மட்டும் தமது மூலோபாயங்களைக் கொஞ்சமேனும் மாற்றிக் கொள்ளாமல் அன்று 1950களில் இருந்தபடியே இருக்கலாமா? ஆனால், தமிழ் தேசியக் கூட்டமைப்பினரிடம் தமிழ் மக்களின் தலைமை இருக்கும்வரை அது அப்படித்தான் இருக்கப் போகின்றது. அவர்களுக்குள் புதிதாக சிந்திக்கக்கூடிய புதிய தலைமுறையினர் இல்லை என்பதுடன், அவர்கள் உள்ளெடுக்கும் நபர்களும் சிங்கள தலைமைகளுடன் கெஞ்சிக் கூத்தாடி ஏதோவொரு உடன்பாடு காண்பவர்களாகவே இருப்பார்கள். தமிழ் மக்கள் தமது நாட்டில் சிறுபான்மையினர், அவர்கள் பொருளாதார வளர்ச்சி கண்ட நாடுகளுக்கு முக்கியமற்ற ஸ்திர நிலையில் இருக்கும் ஒரு நாட்டில் வாழுகின்றனர். இந்த இரு பிரதிகூலங்களையும் கணக்கில் கொண்டு தகுந்த மூலோபாயங்களை முன்னெடுக்கும் தலைமைத்துவத்தினைத் தமிழ் மக்கள் உடனடியாகத் தேடாவிடில்,  இப்பொழுது கட்டியிருக்கும் எமது கோவணத்தினையும் இழக்க வேண்டி நேரிடும்.    

அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்

anusha.sachithanandam@gmail.com

நன்றி - மீட்சி http://www.meedchiuk.com/

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்