/* up Facebook

Mar 31, 2015

புத்தகங்களில் கிடைக்காத பாடம் - கவிதா முரளிதரன்


ஸ்டெல்லா மேரி போன்ற ஒரு கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு அது மிகவும் புதிய, உணர்ச்சிகரமான ஒரு காலைப் பொழுதாகவே இருந்திருக்கும்.

பெண்கள் தினத்தை முன்னிட்டுக் கடந்த வாரத்தில் ஸ்டெல்லா மேரிக் கல்லூரியுடன் இணைந்து பூவுலகின் நண்பர்கள் நடத்திய 'பெண்களும் நிலைபெறு வளர்ச்சியும்' என்கிற தலைப்பிலான கருத்தரங்கம் வழக்கமான கட்டுரைகள் உரைக்கப்படும் கருத்தரங்கமாக இல்லாமல், பங்குகொண்ட பெண்களின் வாழ்வனுபவங்களில் இருந்து மாணவிகள் உண்மைகளை தேடத் தூண்டிய ஒரு அரங்கமாக இருந்தது.

கருத்தரங்கத்தின் முதல் பகுதியாக கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் பேசினார். 88 வயதிலும் தள்ளாடாத குரலில் வள்ளலார் பாடலுடன் தனது உரையைத் தொடங்கியவர், தனது வாழ்க்கைப் பாதையைத் திரும்பிப் பார்க்கும் விதமாகத் தன் உரையை அமைத்துக்கொண்டார். வினோபா பாவேயுடனான பணி, கீழ்வெண்மணியில் செய்த வேலைகள், கணவர் ஜெகநாதனுடன் இணைந்து மேற்கொண்ட பணிகள் என்று பேசிக்கொண்டே போனவர், பாரதியின் பாடல்களை இடையிடையே பாடியதும் மாணவிகளை உற்சாகப்படுத்தியது.

இப்போதும் நிலமற்ற பெண்களுக்காக வீடு கட்டிக்கொடுக்கும் பணியில் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் கிருஷ்ணம்மாள், பல சர்வதேச விருதுகளைப் பெற்றிருக்கிறார். ஆனால், சொந்த வீட்டை அடையும் உழைக்கும் பெண்ணின் புன்னகைக்கு இணையாக இதுவரை ஒரு விருதும் பெற்றதில்லை என்று அவர் சொல்லும்போது அரங்கில் நெகிழ்வுணர்வு நிரம்பியது.

அடுத்து எழுத்தாளரும் வரலாற்று ஆய்வாளருமான வ. கீதா நெறிப்படுத்திய கலந்துரையாடல் தொடங்கியது. அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் இருக்கும் இடிந்தகரை சுந்தரியும் மணல் கொள்ளைக்கு எதிரான போராட்டத்தை நாமக்கலில் முன்னெடுத்த தனலட்சுமியும் போராட்டத்துடன் இயைந்த தங்களது வாழ்க்கையைப் பற்றிப் பகிர்ந்துகொண்டார்கள்.

எட்டாவது வரையே படித்திருக்கும் சுந்தரி, கணவனை இழந்த பெண்களை இழிவுபடுத்தும் சடங்குகளைச் சாடிப் பேசியபோது பலரும் ஆச்சரியப்பட்டிருப்பார்கள். “நாம் என்ன இந்த பொட்டையும் பூவையும் திருமணத்திலிருந்து மட்டும்தானா அணியத் தொடங்கினோம்? அதற்கு முன்பு அணியவில்லையா? கணவரை இழந்துவிட்டால் எதற்கு இவற்றை =யெல்லாம் நாம் இழக்க வேண்டும்?” என்று அவர் கேள்வி எழுப்பியபோது மாணவிகளிடையே பலத்த வரவேற்பு.

2004இல் சுனாமி தாக்கியபோது எட்டு நாட்கள் தனது குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்ததாகச் சொன்னார் சுந்தரி. “சுனாமி தாக்கியவுடன் ஆளாளுக்கு ஒரு திசையில் ஓடினோம். எனக்கு அந்த நொடி எனது கணவரைவிட எனது குழந்தை முக்கியமாகப் பட்டது. அவளைத்தான் முதலில் தேடிக் கண்டடைந்தேன்” என்றார். போராட்டத்தில் தனது கணவரின் பங்களிப்பைவிடத் தனது பங்களிப்பு அதிகமாக இருப்பது குறித்து, அவரது குடும்பத்தினரே கிண்டலடித்தபோதும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுவந்ததைப் பற்றிக் குறிப்பிட்டார்.

மாவட்ட ஆட்சியரைக் கடத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டபோது, தனக்கு நேர்ந்த அனுபவங்களையும் மாணவிகளுடன் பகிர்ந்துகொண்டார்.

“உண்மையில் சிறை ஒரு பல்கலைக்கழகம்போல. பல தரப்பட்ட பெண்களையும் அவர்களது கதைகளையும் அங்கு நான் அறிந்துகொண்டேன். 20களில் இருந்த ஒரு பெண் குடிகாரக் கணவனின் துன்புறுத்தல் தாங்காமல் அவனைக் கொன்றுவிட்டாள். அந்தப் பெண்ணைச் சிறையில் சந்தித்தபோதுதான், சமூகத்தில் பெண்களின் துயரங்களைக் கொஞ்சமாவது உணர்ந்துகொள்ள முடிந்தது.

வாழ்க்கையை அங்கே ஓரளவுக்கு முழுமையாகக் கற்றுக்கொண்டேன் என்று சொல்லலாம். எனக்கு ஏற்பட்ட அவமானங்களையெல்லாம் தாண்டி சிறை ஒரு சிறந்த படிப்பினையைத் தந்தது” என்றார்.

கொலை மிரட்டல்களையெல்லாம் எதிர்கொண்டு, தான் பிறந்து வளர்ந்த காவிரிக் கரையில் மணல் கொள்ளையடிக்கப்படுவதை எதிர்த்து மேற்கொண்ட போராட்டம், சட்டத்தின் துணைகொண்டு அவர்களை வென்றது எனத் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார் தனலட்சுமி.

நிலத்தோடும் நீரோடும் தங்களுக்கு இருந்த உறவை, அது துண்டிக்கப்படுவதற்கான முயற்சிகள் உருவாகும்போது அவர்கள் ஆற்ற வேண்டிய எதிர்வினையை சுந்தரியும் தனலட்சுமியும் வாழ்வனுபவங்கள் மூலம் எளிமையாகப் பதிவுசெய்தார்கள். எந்தப் புத்தகமும் தர இயலாத இந்தப் பாடத்தை மாணவிகள் மிகவும் விரும்பினார்கள் என்பதைக் கருத்தரங்கு முடிந்த பிறகு பேச்சாளர்களிடம் உரையாடியபோது, அவர்கள் காட்டிய நெகிழ்ச்சியின் மூலம் உணர முடிந்தது.
நன்றி - திஹிந்து
...மேலும்

Mar 30, 2015

மகளிருக்கு எதிரான வன்முறை சாதிய ஒடுக்கலே - இராமியா


கடந்த 16.12.2015 அன்று புது தில்லியில் மருத்துவத் துறைப் படிப்பு படித்துக் கொண்டிருந்த மாணவி ஒருத்தி, சில போக்கிரிகளால் பாலியல் வன்முறைத் தாக்குதலுக்கு ஆட்பட்டு மரணம் அடைந்தார். இந்நிகழ்வைப் பற்றிக் கருத்து கூறும் பொழுது, மிக மிக .... மிகப் பெரும்பாலான மக்கள்அந்தப் போக்கிரிகளைக் கண்டித்தனர். ஆனால் காவிக் கும்பலினரில் சிலர் அந்தப் பெண் தன்னைத் தாக்குபவர்களிடம் கைகூப்பித் தொழுது, தன்னை விட்டுவிடும் படி கேட்டுக் கொண்டு இருந்தால், அவளுக்கு இத்துன்பம் நேர்ந்து இருக்காது என்று கூறினர்

mukesh singh nirbaya caseஇந்நிகழ்வு, இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதை உலகம் முழுவதற்கும் உணர்த்தியது. இதைப் பற்றிய உண்மையை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் ஒரு செய்திப் படத்தைத் (documentary film) தயாரிக்க, பிரிட்டிஷ் செய்தி நிறுவனம் (BBC) முனைந்தது. அதற்காக, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர்கள், உறவினர்கள், இவ்வழக்கில் வாதாடும் வழக்கறிஞர்கள், குற்றம் சாட்டப்பட்டுச் சிறையில் இருப்பவர்கள் ஆகியோரைப் பேட்டி காண்பதற்காக 2013ஆம் ஆண்டு மே மாதத்தில் இந்திய அரசிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்தது. இந்திய அரசும் 24.7.2013 அன்று அனுமதி அளித்தது.

அதன் அடிப்படையில் இந்நிகழ்வின் / இவ்வழக்கின் தொடர்பானவர்களைப் பேட்டி கண்ட போது, தங்களுடைய பாலியல் தாக்குதலை அந்தப் பெண் எதிர்த்துப் போராடாமல், அமைதியாக இருந்திருந்தால் இது போன்ற கோரமான முடிவு ஏற்பட்டு இருக்காது என்று அந்தக் குற்றவாளி கூறி இருக்கிறான்.

குற்றவாளி தான் குற்ற மனப்பான்மையுடன் அவ்வாறு கூறி விட்டான்; மற்றவர்கள் அவ்வாறு இருக்க மாட்டார்கள் என்று நினைக்க விரும்பினாலும், அவர்களுக்காக வாதாடும் வாக்கறிஞர்களின் கூற்று மேலும் அதிர்ச்சி அடைய வைக்கிறது. இரவு 8 மணிக்கு ஒரு பெண் வீட்டில் இல்லாமல் வெளியில் இருந்தால் இவ்வாறு நடப்பதைத் தடுக்க முடியாது என்று ஒரு வழக்கறிஞரும், தன் சகோதரியோ, மகளோ இவ்வாறு வீட்டில் இல்லாமல் வெளியில் இருந்தால், அவளை உயிரோடு எரித்து இருப்பேன் என்று இன்னொரு வழக்கறிஞரும் கூறி உள்ளனர்.

இவற்றை எல்லாம் வைத்து ஒரு செய்திப் படத்தைத் தயாரித்து வெளியிட முனைந்த போது, இச்செய்திப் படம் வெளியானால் இந்தியாவின் மானம் போய்விடும் என்று நினைத்த இந்திய அரசு 4.3.2015 அன்று இதற்குத் தடை போட முனைந்தது. ஆனால் அதை நேரடியாகச் செய்யாமல் 5.3.2015 அன்று தில்லி உயர்நீதி மன்றத்தில் தடை உத்தரவை வாங்கியது.

ஆனால் இந்திய அரசு நீதி மன்றத்தில் தடை உத்தரவு வாங்குவதற்கு முன்னாலேயே, பிரிட்டிஷ் செய்தி நிறுவனம் இச்செய்திப் படத்தை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்து விட்டது. தடை உத்தரவு வந்த பின் இந்தியாவில் இணைய தளத்தில் இச்செய்திப் படம் மறைக்கப்பட்டது. ஆனால் உலகம் எங்கும் மக்கள் இதன் மென்படியை (soft copy) இந்தியாவில் உள்ள நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் மின்னஞ்சல் மூலம் அனுப்பி உள்ளனர். இதனால் தில்லி உயர் நீதிமன்றத் தடை உத்தரவு செயலிழந்து விட்டது.

இச்செய்திப் படத்தைத் தயாரித்த லெஸ்லீ உட்வின் (Leslee Udwin) அம்மையார் 8.3.2015 அன்று இப்படம் இந்தியாவில் தடை செய்யப்பட்டதைப் பற்றிக் கூறுகையில், இது போன்ற, மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான ஆவணங்களைத் தடை செய்தால், இதன் திருட்டுப் பிரதிகள் (pirated version) மிக வேகமாக மக்களிடையே போயச் சேரும் என்று கூறி உள்ளார். மேலும் இப்படத்தைத் தயாரித்ததன் நோக்கமே மக்களின் வெவ்வேறு பகுதியினரின் மனநிலையை (mindset) எடுத்துக் கூறுவதும், அதன் மூலம் எந்த இடத்தில் மாற்றத்திற்கான வேலையைத் தொடங்க வேண்டும் என்று உணர்ந்து செயல்படுவதற்கும் தானே ஒழிய, யாரையும் இழிவு படுத்தவோ அல்லது யார் மனதையும் புண்படுத்தவோ அல்ல என்றும் கூறி உள்ளார்.

ஆனால் நமது இந்திய அரசும் சரி; பெரும்பான்மை மக்களும் சரி; அதைப் பற்றிச் சிந்திப்பதாகவே தெரியவில்லை.

பிரிட்டிஷ் செய்தி நிறுவனம் வணிக நோக்த்துடன் தான் இச்செய்திப் படத்தைத் தயாரித்து உள்ளது என்று காவிக் கும்பலினர் கூறுகின்றனர்.

தங்களை முற்போக்குவாதிகள் என்று தாங்களே முத்திரை குத்திக் கொண்டு உள்ள பார்ப்பனர்களும், காவிக் கும்பலினரைப் போலவே கருத்து தெரிவித்து உள்ளனர். இச்செய்திப் படம் உலக அரங்கில் இந்தியாவின் மரியாதையைக் குறைக்கும் நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டு உள்ளது என்றும், முழுக்க முழுக்க மகளிருக்கு எதிராக உள்ளது என்றும் 5.3.2015 அன்று அகில இந்திய முற்போக்கு மகளிர் சங்கத்தின் (All India Progressive Women's Association) செயலாளர் கவிதா சிருஷ்ணன் கூறி உள்ளார்,. மகளிருக்கு எதிரான கொடுமைகள் நடப்பதை வெளியில் தெரிவிப்பது மகளிருக்கு எப்படி எதிரானது ஆகும் என்று தெரியவில்லை.

தில்லியில் 2012 ஆம் ஆண்டில் நடந்த பாலியல் வன்முறைத் தாக்குதலைப் பற்றிக் கருத்து கூறும் பொழுது ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இது போன்ற அடாத செயல்கள் மேற்கத்தியப் பண்பாடு பரவி உள்ள நகர்ப்புறங்களில் தான் நடக்கின்றன என்றும், இந்து மதம் வேர் பிடித்து உள்ள கிராமப்புறங்களில் நடப்பது இல்லை என்றும் கூறினார்.

ஆனால் கிராமப்புறங்களில் தான் தாழ்த்தப்பட்ட மக்கள் கேள்வி முறையே இல்லாமல் பாலியல் தாக்குலுக்கு உள்ளாகின்றனர். ஆண்கள் மட்டும் அல்ல; அறிவிற் சிறந்து விளங்கும் தாழ்த்தப்பட்ட வகுப்புப் பெண்கள் சுடர் விட்டு ஒளிவிடத் தொடங்கினால், பார்ப்பனப் பெண்களே கூட அவர்களைப் பாலியல் வன்முறைத் தாக்குதலுக்கு உட்படுத்துகின்றனர். மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள பரஹ்பதா (Barahbada) என்ற கிராமத்தில், அரசு நடுநிலைப் பள்ளியில் படித்துக் கொண்டு இருந்த இரு தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவிகள் மிகவும் நன்றாகப் படித்துக் கொண்டு இருந்தனர். அதைக் காணப் பொறாத ரேஷ்மா சோனியா, பிரீதி சர்மா என்ற இரு பார்ப்பன ஆசிரியைகள் 15.3.2012 அன்று தேர்வு நடக்கும் பொழுது, தேர்வு எழுதுவதற்குத் துண்டுக் காகிதத்தை (bit) வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லாத அம்மாணவிகள் துண்டுக் காகிதத்தை வைத்துக் கொண்டு இருக்கிறார்களா என்று சோதனை செய்வதாகக் கூறி, தேர்வு அறையில் சுமார் 40 ஆண் மாணவர்களுக்கு முன்னால் உடைகளைக் களைந்து நிர்வாணப் படுத்தினார்கள்.

இக்கொடுமையை எந்த வகையில் சேர்ப்பது? இந்நிகழ்வின் மூலம் நாம் பெற வேண்டிய படிப்பினைகள் என்ன?

இந்தியாவில் பெண்கள் மீதான பாலியல் தாக்குதலுக்கு வலுவான அடித்தளம் வரணாசிரம முறையே.

என்ன குற்றங்களைச் செய்தாலும், உயர் சாதிக் கும்பலினரைக் காப்பாற்ற, காவல் துறை மட்டும் அல்லாது, அனைத்து அரசுத் துறைகளிலும், உயர்நிலைகளிலும், அதிகார மையங்களிலும் உயர் சாதிக் கும்பலினர் கொடூரமான அளவில் நிரம்பி உள்ளனர். ஆகவே எப்படியும் தப்பித்து விடலாம் என்ற மனத் துணிச்சல் தான் கொடூரமான குற்றங்களை எல்லாம் புரியத் தூண்டுகிறது.

ஒடுக்கப்பட்ட மக்கள் தவறு செய்யாத போதும், ஏதாவது சிக்கலில் மாட்டிக் கொள்ள நேர்ந்தால், அவர்களுக்கு உதவி புரிய அதிகார மையங்களில் போதுமான எண்ணிக்கையில் மக்கள் இருப்பது இல்லை. ஆகவே அவர்கள் அளவுக்கு மீறிய தண்டனைகளை அடைகின்றனர்.

அதிகார மையங்களில் உயர் சாதிக் கும்பலினரின் கொடூரமான அளவு ஆக்கிரமிப்பும், அடங்கி நடக்க வேண்டிய இடங்களில் மட்டுமே ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் இருக்க வேண்டி நேர்வதுமான வருண அதர்ம முறை ஒழிந்து, அனைத்து இடங்களிலும் அனைத்து நிலைகளிலும், அனைத்து வகுப்பு மக்களும் அவரவர் மக்கள் தொகையின் விகிதத்திற்கு ஏற்ப இருந்தால், குற்றங்களைச் செய்து தப்பித்து விடலாம் என்ற மனத் தணிச்சல் யாருக்கும் வராது அல்லவா? இப்படி ஒரு மனத் துணிவு வரவில்லை என்றால் மிகப் பெரும் அளவில் இக்குற்றங்கள் குறைந்து விடும் அல்லவா? இக்கருத்தை நாம் முன்னெடுத்து, இக்கொடுமைகளுக்கு முடிவு கட்ட, வேலையை எங்கிருந்து தொடங்க வேண்டும் என்ற விழிப்புணர்வையும் பொதுக் கருத்தையும் உருவாக்கும் பணியை முன்னெடுப்போமா?

நன்றி - கீற்று
...மேலும்

Mar 29, 2015

தாலியைப்பற்றி புரட்சியாளர்அம்பேத்கரின் கருத்தென்ன?


புரட்சியாளர் அம்பேத்கர் அவர் களின் பிறந்த நாளில் (ஏப்ரல் 14) புரட்சிகரமான சிந்தனைகளை அரங் கேற்றுவதுதானே பொருத்தமானது!

தலைவரை மதிக்கிறோம் என் றால் தலைவரின் கொள்கைளை மதிப்பதில்தான் அதனைக் காட்ட வேண்டும்.

தாலியைப்பற்றிய விவாதத் தையே நடத்தக் கூடாது என்று இந்துத்துவாவாதிகள் மிரட்டும் போது, வன்முறையை ஏவும்போது, கருத்துச் சுதந்திரம் என்ற அடிப் படையில் நோக்கினாலும் சரி, பெண் ணுரிமைப் பார்வையில் பார்த்தாலும் சரி, அதனை எதிர் கொண்டு முறி யடிப்பதுதான் முற்போக்குச் சிந்தனை - அதனை வீழ்த்துவதுதானே புரட்சி! அம்பேத்கர் பிறந்த நாளில் தாலியை அகற்றுவதா என்று சில அருமைத் தோழர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆமாம். அண்ணலின் பிறந்த நாளில்தான் அவரின் இந்தப் புரட்சி கரமான சிந்தனையைத்தான் செயல் படுத்த வேண்டும்.

தாலியைப்பற்றி அண்ணலின் கருத்து என்ன? இதோ பாபாசாகேப் பேசுகிறார். சென்னை அரசாங்கத்தின் ஆணைப்படி வெளியிடப்பட்ட மலபார் அஞ்சேங்கோ (Malabar and Anjengo) கெஜட்டின் பதிப்பாசிரியர் சி.ஏ. கின்னஸ் அய்.சி.எஸ். பின்வரு மாறு சொல்கிறார்.

மருமக்கள் தாயம் என்ற முறையையும், மக்கள் தாயம் என்ற முறையையும் கடைப்பிடித்து வந்த எல்லாப் பிரிவு மக்களிடையிலும் வேறொரு திருமணச் சடங்கு முறை காணப்பட்டது. அந்தத் திருமண முறை தாலி கட்டுத் திருமணம் என்று சொல்லப்பட்டது. மலையாளி களின் திருமணப் பழக்கங்களில், இந்தத் தாலி கட்டுத் திருமணம் என்பது தனித்தன்மை வாய்ந்தது. புதுமையானது; வேறுபட்ட தன்மை யுடையது என்றெல்லாம் சொல்லப் படுகிறது. ஒரு பெண் பூப்படைவதற்கு முன் அவள் கழுத்தில் ஒரு தாலியைக் கட்டுவது தான் இந்தப் பழக்கத்தின் அடிப்படையாகும். அந்தப் பெண்ணின் ஜாதி அல்லது அவளைவிட உயர் ஜாதியைச் சேர்ந்த ஒரு மனிதனால் இந்தத் தாலி கட்டப்படுகிறது.

அதற்குப்பிறகுதான் அந்தப் பெண் சம்பந்தம் என்னும் மண ஒப்பந்தம் செய்வதற்குரிய உரிமையைப் பெறுகிறாள். தாலி கட்டுகிறவன்  அல்லது மணவாள னுக்கு அந்தப் பெண்ணுடன் இணையும் உரிமையை வழங்குவ தற்காகத்தான் தாலி கட்டும் திரு மணம் என்னும் சடங்கு நடத்தப் படுகிறது என்று பொதுவாகக் கருதப் படுகிறது. சத்திரியர்கள், அதற்கும் மேலாகப் பூதேவர்கள் என்று சொல் லப்பட்ட பிராமணர்கள் ஆகியோர் கீழ்ஜாதிப் பெண்களை முதலில் அனுபவிப்பதற்காக ஏற்பாடு செய் யப்பட்டதுதான் இந்தச் சடங்கு முறையின் தோற்றுவாயாக இருக்கக் கூடும் என்று சிலர் கருதுகிறார்கள். (தொகுதி (பக்.101)

(டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் எழுதிய காங்கிரசும், காந்தியும் தீண்டத் தகாதவர்களுக்குச் செய்ததென்ன? என்ற நூலின் பக்.205-206)

இதற்கு விளக்கமும் வேண்டுமோ!

அண்ணல் அம்பேத்கர் அவர்கள் எடுத்துக்காட்டிய இந்தக் கருத்துக்கும், தகவலுக்கும் பிறகு இணையதளத்தில் விளையாடும் நமது அருமைத் தோழர்கள் தெளிவு பெறுவார்களாக!

இந்து மதக் கொடுமை என்ற தளையிலிருந்து பெண்களை விடுதலை பெறச் செய்யத்தான் அன்று சட்ட அமைச்சராகவிருந்த டாக்டர் அம்பேத்கர் அவர்கள் இந்துத் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தார். அது நிறைவேற் றப்பட வாய்ப்பு இல்லை என்ற நிலையில் அமைச்சர் பதவியைத் தலையைச்சுற்றித் தூக்கி எறிந்தார்.

இந்தப் பின்புலத்தைப் புரிந்து கொண்ட எவருக்கும் அவர் பிறந்த நாளில் அடிமைத்தளையாம் தாலியை அகற்றுவதன் அவசியமும், பெரு மையும் அருமையாகப் புரியும்.

ஒரு புரட்சியாளர் பிறந்த நாளில் இது போன்ற புரட்சிகரத்தை அரங்கேற்ற வேண்டுமே தவிர - புளியோதரை செய்வது எப்படி? பொரி உருண்டை செய்வது எப்படி? என்பதையா கற்றுத் தர முடியும்?

சிந்திப்பீர்!

இந்த செயல் வெற்றி பெற வீங்கு தோள் கொண்டு எழுவீர்! எழுவீர்!!

- கருஞ்சட்டை

குறிப்பு: பெண்ணடிமைச் சின்னமாம் தாலியை அகற்றும் நிகழ்ச்சிகள் தாலி அறுக்கும் போராட்டம் என்று கொச்சைப்படுத்தும்  சிறுமதிக் கூட்டத்திடம் எச்சரிக்கை யாக இருங்கள் தோழர்களே!!

நன்றி - விடுதலை
...மேலும்

Mar 28, 2015

ஆன் செக்ஸ்டன்: பெண்ணியத்தின் மற்றுமொரு குறியீடு - நசார் இஜாஸ்


ரஷ்யாவின் நகரத் தெருக்களில் பாடசாலைச் சீருடையோடு பள்ளி நாட்களை கடத்த நடையில் சந்தேசத்தை இனிமையாகப் பின்னிக் கொண்டு செல்கிறார் ஆன் செக்ஸ்டன். உயர் தர வகுப்பில் கற்றுக் கொண்டிருக்கும் அழகிய தருணங்கள் அது. தான் படித்துக் கொண்டிருக்கும் காலத்திலிருந்தே எழுத்தின் மீதான அதீத ஆர்வம் ஆன் செக்ஸ்டனை அதன்பால் செதுக்கிக் கொண்டிருந்தது.  எழுத்துக்கள் அத்தனையும் அவளது மனதிலிருந்து காகிதங்களில் சொறியத் தொடங்கியதிலிருந்து அத்தனையும் பால்யத்தின் பாதங்களைக் கட்டுடைத்து ஒரு திசை தெரியாத இலக்கற்ற வெளியை நோக்கி ஒருவரைப் பயணிக்கச் செய்து விடும் வல்லமை கொண்டது.

தனது பத்தொன்பதாவது வயதில் ஆல்பிரட் கேயா என்பவரைக் காதலிக்கத் தொடங்கியவர் ஒரு கட்டத்தில் அவரைத் திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டுச் சென்றார். வாழ்க்கைப் பயணம் தன் போக்கில் செவ்வனே பயணித்துக் கொண்டிருக்கையில் இரண்டு வருடங்கள் வேகமாகக் கடந்தோடின. ஆன் செக்ஸ்டன் இரு குழந்தைகளின் தாயானாள்.

வாழ்க்கைக் கட்டத்தில் தவித்துக் கொண்டிருக்கையில் அவளுடைய கரப்பப் பையை அகற்றியே ஆக வேண்டிய நிலை அவளை ஆட்பறிக்கத் தொடங்கியது. அவளால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. கர்ப்பப்பையை அகற்றுவதென்பது அவளால் இயலாத விடயம். தான் ஒரு போதும் அதை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பதில் உறுதியாக இருந்தாள். எனினும் பின்னர் அதை ஏற்றுக் கொண்ட ஆன் செக்ஸ்டன் தன் உடலில் பாதிக்கு மேல் களவாடப்பட்டு விட்டதாக உணர்ந்தாள். தனது வாழ்க்கையை கசப்பானதாக எண்ணத் தொடங்கினாள்.

குடும்ப வாழ்வு அவளுக்குள் இருண்மையைக் கட்டமைப்பதாய் ஒரு வித்தியாசமான உணர்வு அவளுக்குள் ஏற்படத் தொடங்கியது. வாழ்க்கையே வேறு ஒரு வித்தியாசமான போக்கில் செல்வதாய் உணர்ந்தாள். தாய்மை என்பது பெண்ணுக்குப் பாதுகாப்பைத் தரும் ஒரு விடயம் என எடுத்துக் கொண்ண முடியாது. அது ஒரு பயங்கரமான சித்திரவதை கணவனும், பிள்ளைகளும் பெண்ணின் உடலை களவாடுகின்றனர் என ஆன்செக்ஸ்டன் ஒரு கட்டத்தில் குறிப்பிடுகிறார்.

மன ரீதியாக பாதிப்புகளுக்காளான ஆன் செக்ஸ்டன் அடிக்கடி மனநல மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்று வந்தார். அதற்கும் மேலதிகமாக தனது மன ரீதியான பாதிப்புக்கு சரியான மருந்தாக எழுத்து மாத்திரமே இருக்க முடியும் என அதிகமாக நம்பினார். மனச் சோர்வுக்குப் பின் அவளுடைய எழுத்துக்கள் கர்ப்பப்பையையும், தனக்கேற்பட்ட உடலியல் சிதைவைப் பற்றியுமே கவிதையின் பாடுபொருளாக அமைந்தன. 1967 ஆம் ஆண்டு காலப் பகுதியில் தான் எழுதிய கவிதைத் தொகுப்பொன்றிற்காக புலிட்சர் விருதையும் வென்றார்.

வைத்தியர் தரும் மாத்திரைகளை தொடர்ந்தேர்ச்சையாகப் பாவித்து வந்த ஆன்செக்ஸ்டனின் உடலில் பாரிய மாற்றங்கள் வெளிப்படத் தொடங்கின. உடல் எடை கூடி பருமனாகத் தொடங்கியதை உணரத் தொடங்கினாள் ஆன் செக்ஸ்டன். இந்த வித மாற்றங்கள் அவருக்குள் நெருடலை உண்டு பண்ணிக் கொண்டிருந்தது.

தனது உடல் பருமனாகிக் கொண்டிருப்பதை உணர்ந்த ஆன்செக்ஸ்டன் தனது உடல் எடையைக் குறைப்பதற்காக பலவிதமான முயற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கினாள். எத்தனையோ நாட்கள் பட்டினியில் இருந்தாள். அவைகளும் அவளுக்கு வேதனையை விலை பேசி விற்று விட்டது. பல நாட்கள் பட்டினியாய் இருந்ததற்காக அவளுடைய நரம்பு மண்டலங்கள் பாதிப்படைந்து விட்டன. எனினும் தனக்கேற்பட்டுள்ள உடல் ரீதியான பாதிப்புகளை வெளிக் கொணராமல் கவிதையின் நடைமுறையில் பாரிய மாற்றங்களையும், நவீனத்தின் பின்புலத்தையும் கட்டமைத்துக் கொண்டிருந்தார் ஆன் செக்ஸ்டன். அவை அவருக்கு தொடர்ந்தேர்ச்சையான வெற்றியைக் கொடுத்துக் கொண்டிருந்தது.

கவிதையை வித்தியாசமான பாணியில் விதைத்துக் கொண்டிருந்த ஆன்செக்ஸ்டன் கவிதைகளை இசையோடு பாடத் துவங்கியதோடு அதில் மாற்றங்களையும் ஏற்படுத்த முயன்றார். எனினும் அத்தருணத்தில் தனது கவிதைகளின் கட்டமைப்பையும், நெறிமுறைகளையும் பற்றிய குழப்பம் அதிகரித்துக் கொண்டேயிருந்தது.

ஏதோ ஒரு சிந்தனையில் தூங்கிப் போன ஆன்செக்ஸ்டன் பொழுதுகள் புலர்ந்து ரொம்ப நேரத்திற்குப் பிறகு படுக்கையிலிருந்து போர்வையை விலக்கியபடி எழுந்து கொண்டாள். அவளுடைய சிந்தனைகள் அன்றைய தினமும் நிம்மதியற்றேயிருந்தன. என்ன செய்வதென்று தெரியாத ஒரு கட்டத்தில் அவளுக்கு அழுது விட வேண்டும் போல் இருந்தது. வாழ்க்கையை எவ்வாறு பிரித்தரிவது எனத் தெரியாமல் குழப்பத்தில் மீண்டும் மீண்டும் மிரண்டு போயிருந்தாள்.

எழுந்து கொண்டவள் குளியலறைக்குச் சென்று தன்னைச் சீர்படுத்தி தனது உற்ற நண்பன் மெக்ஸின் குனினை சந்திப்பதற்காக தனது காரையும் எடுத்துக் கொண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்குச் சென்றாள். குறித்த நேரத்தில் அவரை சந்தித்து பல்வேறுபட்ட தளங்களில் பல்வேறுபட்ட தகவல்களைப் பல்வேறு பரிமானங்களில் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். நேரம் கடந்து போன நிலையில் இருவரும் மதிய உணவை ஒன்றாக ஒரே மேசையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
சாப்பிட்டு முடித்தவர்கள் சிறிது நேர ஓய்வின் பின் ஆன் செக்ஸ்டனின் கவிதைகளில் ஒன்றை வாசித்து அது பற்றி விவாதிக்கத் தொடங்கினர். அந்த உரையாடல் அவளுக்குள் ஒரு வித நெருடலை ஏற்படுத்தியிருக்க வேண்டும். திடீரென அவளுடைய மனச்சோர்வு அதிகமாகிப் போவதாக உணர்ந்தாள். நெருடல்கள் நிறைந்த மனநிலையோடு தான் வழமையாக சந்திக்கும் வைத்தியரிடம் ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டு வீடு திரும்பினாள் ஆன்செக்ஸ்டன். அப்போதும் மனச்சோர்வு குறைந்தபாடில்லை.
தனக்கு ஏற்பட்டுள்ள உடற்சிதைவும், தனது கவிதைகளில் ஏற்படும் சிக்கலும், குழப்பமுமே இத்தனைக்கும் காரணம் என்பதை அவள் தெளிவாகப் புரிந்து கொண்டிருந்தாள். தனது உடலைக் கவனித்துக் கொள்வதில் அதிக அக்கறை செலுத்தினாள். ஆன போதிலும் மனச்சோர்வு குறைந்தபாடில்லை.

துயரங்களோடு உறவுகளைப் பேணி நடந்தவள் ஒரு கட்டத்தில் அவளுடைய தாயையும், தந்தையையும் ஒரு கணம் மனக் கண்ணில் மீட்டினாள். அந்த நினைவகள் கண்களில் எதையோ உற்பத்தி செய்து கொண்டிருந்தது. கண்களின் ஓரம் சின்னதாய் ஈரம் கசிந்தது. அவளுடைய தாயை நினைத்து அதிகமாய் வருந்தத் தொடங்கினாள். கண்களில் வழிந்து கொண்டிருந்த கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கண்ணீரை மீளவும் துடைத்துக் கொண்டிருந்தபடி தனது அலுமாரியைத் திறந்து தனது தாயின் நினைவாக தான் அப்போது எடுத்துக் வந்திருந்த தாயின் சட்டையை எடுத்து முக்தோடு அப்பிக் கொண்டு முகர்ந்தாள். பின் அதை அணிந்த கொண்டு மெல்ல தனது கட்டிலில் முடங்குகிறாள். தனது தாயின் சட்டை அவளுடைய தாயுடனான நெருக்கத்தை அவளுக்கு ஏற்படுத்துவதாகவே உணர்ந்தாள்.

அப்படியே சிறிது நேரம் தூங்கி எழுந்தவள் மெல்ல தனது வீட்டின் கார் நிறுத்தியிருக்கும் இடத்தை நோக்கி நடந்தாள். தனது காரினுள் இருக்கும் வானொலிப் பெட்டியை மெல்ல ஒலி பரப்பினாள். காரின் நான்கு கண்ணாடிகளையும் மூடி விட்டு காரை இயங்கச் செய்தாள். ஏனோ கார் கதவைத் திறந்து வெளியே வந்தவள் கார் கதவை சாத்தி விட்டாள். காரும் வானொலிப் பெட்டியும் தத்தம் பணியைத் தொடர்ந்தேர்ச்சையாக செய்து கொண்டிருந்தது.

வெளியே வந்தவள், காரிலிருந்து வெளிவரும் காபன் மொனோக்ஸைட்டு வாயுவை சுவாசிக்கத் தொடங்கினாள். அவளுடைய உடலினுள் புகுத்தப்பட்டிருந்த உயிரை அந்தக் காபன் மொனோக்ஸைட்டு வாயு பறித்து அவளை இன்னொரு உலகுக்கு அனுப்பி விட்டது. வாழ்வியலின் போராட்டங்கள் அத்தனையையும் துணிவோடு எதிர் கொண்டவள் இப்போது தனது உயிரை மாய்த்துக் கொண்டாள். தொடர்ந்தேர்ச்சையான மன அழுத்தமும், உடல் ரீதியாக ஏற்பட்ட சிதைவுகளுமே இவரது மரணத்துக்குக் காரணம் என பத்திரிகைகள் பறை சாட்டிக் கொண்டிருந்தன.
தனக்கும் கவிஞர் சில்வியா சில்வியா ப்ளாத்திற்குமிடையில் நெருங்கிய தொடர்புகள் இருந்தது. எனினும் சில்வியா ப்ளாத் தனியே கேஸ் சிலின்டரின் வாயுவை சுவாசித்து தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதையே ஆன்செக்ஸ்டன், என்னை மட்டும் தனிமையில் விட்டு விட்டு நீ மட்டும் சாவின் வழியில் பயணித்து விட்டாய். சில்வியா நீயொரு திருடி எனத் தன் கவிதையில் குறிப்பெழுதியிருந்தார்.

இப்போது அவளுடைய இரு குழந்தைகளும் அழுது கொண்டிருந்தார்கள். அவள் அவளுக்கு நேர்ந்த தான் அனுபவித்த மனச்சோர்வை பிள்ளைகளுக்குப் பரிசளித்து விட்டுச் சென்று விட்டாள் போலிருக்கிறது. அவர்களும் தற்போது அந்த மனநிலையில்தான் இருக்கிறார்கள்.

...மேலும்

Mar 27, 2015

"கற்பழிப்பு" நியூஸ் எழுதுவது எப்படி? - மு.வி.நந்தினி


"கற்பழிப்பு" என்கிற சொல் பயன்படுத்த எதிர்ப்பு கிளம்பி, சில ஊடகங்கள் அந்தச் சொல்லை பாலியல் வல்லுறவு, பாலியல் வன்செயல் என மாற்றுச் சொற்களோடு பயன்படுத்தி வருகின்றன. ஆனால் தமிழ் மக்கள் அதிகம் படிப்பதாக சொல்லப்படும் தினத்தந்தி, தினமலர் போன்றவை இன்னமும் கற்பழிப்பு என்ற சொல்லையே பயன்படுத்தி வருகின்றன. கற்பழிப்பு என்ற சொல்லில் இவர்கள் கொண்டுள்ள தனிப்பட்ட ஈர்ப்பை புரிந்து கொள்ள, இவர்கள் எழுதும் கற்பழிப்பு செய்திகளை படிப்பது அவசியம். இன்றைய தினத் தந்தியில் நாமக்கல்லில் ஒரு மாணவி பாலியல் வன்செயலுக்கு உள்ளாக்கப் பட்டு கொல்லப்பட்ட செய்தி வந்துள்ளது. செய்தியின் தொடக்கத்தில் மூன்று பேர் அந்தப் பெண்ணை பாலியல் வன்செயலுக்கு உட்படுத்தி கொன்றதாக எழுதப்பட்டுள்ளது. செய்தியின் அடுத்தடுத்த பத்திகளில் மாணவியின் காதலன் குற்றத்தில் ஈடுபடாததும் மற்ற இருவருமே குற்றவாளிகள் என்பதும் தெரிகிறது. மாணவியுடன் பேசிக் கொண்டிருந்த அவள் காதலனையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்திய நிருபரின் இதழியல் தர்மம் இங்கே சுட்டிக் காட்ட வேண்டிய ஒன்று.
மாணவியும் காதலனும் ஜாலியாக இருந்தார்கள் என்று எழுதுகிறது தந்தி. அதாவது இவர்களின் இதழியல் தர்மத்தில் தமிழ் அல்லது இந்திய கலாச்சாரத்துக்கு மாறாக ஒரு ஆணும் பெண்ணும் திருமணத்துக்கு முன் உறவு கொள்வதற்குப் பெயர் ஜாலியாக இருப்பது! இது இதழியல் தர்மமா? இந்து தர்மமா?

டெல்லியில் கூட்டு பாலியல் வன்செயலுக்கு உள்ளாகி, இறந்துபோன அந்தப் பெண்ணின் அடையாளம் தெரிந்துவிடக்கூடாது என்று ‘நிர்பயா’ எனப் பெயர் சூட்டி, உலக பரப்பில் முக்காடு போட்டி தங்கள் மானத்தை காப்பாற்றிக் கொண்டது இந்து அரசாங்கம், அதை காப்பாற்றின இந்து ஊடகங்கள். ஆனால் தமிழகத்தில் பாலியல் வன்செயலுக்கு உள்ளான ஒரு பெண்ணின் பெயர், முகவரி, புகைப்படத்துடன் வெளியிட்டிருக்கின்றன தினத்தந்தி குழும ஊடகங்கள். இது என்ன ஊடக தர்மம்? ஊருக்கு ஊர் ஒரு நியாயமா அல்லது தமிழ்நாடு இந்தியாவில் இல்லையா? ஏன் எந்த தமிழக பெண்ணியவாதியும் இதைப் பற்றி கேள்வி எழுப்புவதில்லை?

செய்தி எழுதும்போதே ஒரு ஃபோர்னோ படத்துக்குரிய திரைக்கதையுடன் செய்தி எழுதும் போக்கை இந்த ஊடகக்காரர்கள் எப்போது மாற்றிக் கொள்வார்கள். சமீபத்தில் இந்தியாவின் மகள் கட்டுரையில் எழுத்தாளர் ஜெயமோகன், இந்தியாவின் மகன்களின் மனநிலையை தெளிவாகச் சொல்லியிருந்தார். அதாவது இந்திய ஆண் மகன்கள் பாலியல் வன்செயல்களில் ஈடுபடுவது இயல்பான செயல் என்று உளவியல் ரீதியாக விளக்கியிருந்தார். தந்தி வகையறா செய்திகளைப் படிக்கும் எந்தவொரு இந்திய, தமிழக மகனும் நிச்சயம் பாலியல் வன்செயல் செய்ய நேரம் பார்த்துக் கொண்டிருப்பான் என்பதில் சந்தேகத்துக்கு இடமில்லை!

...மேலும்

கனடிய பெண்கள்: எதிர்நோக்கும் பிரச்சனைகள் - மீராபாரதி


உயிர்ப்பு – 3 நாடக நிகழ்வின் இறுதியில் நடைபெற்ற நாடகங்கள் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடல் நடைபெற்றாலும் இக் கட்டுரை அல்லது குறிப்பு சிலரின் கேள்விகள் தொடர்பானது மட்டுமே. முதலாவது கேள்வி அணங்கு நாடகம் தொடர்பானது. இந்த நாடகத்தில் பெண்கள் குறிப்பாக தமிழ் பெண்கள் அவர்களது சமூகத்தில் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பான விடயங்கள் அரகேற்றப்பட்டன. தமிழ் சமூகத்தில்; சிதை கண்ணகி மணிமேகலை போன்ற இலட்சிய பெண்களை முதன்மைப்படுத்தியும் அவர்களையே சிறந்த மேன்மையாக பெண்களின் குறியிடாகவும் பயன்படுத்தி, தமிழ் பெண்கள் தமது  வாழ்மை சிரமைக்கவும் பின்பற்றவும் காலம் காலமாக பயன்படுத்தப்பட்டுவருகின்றன. இந்த நாடகம் அவர்களது வாழ்வையும் இலட்சியங்களையும் அப் பாத்திரங்களுக்கு இடையிலான விவாதத்தினுடாக கேள்விக்குள்ளாக்கின்றது. இதன் மூலம் இவ்வாறன இலட்சியப் பெண்களை முதன்மைப்படுத்துவதும் பின்பற்றுவதும் எவ்வாறு தொடர்ந்தும் தமிழ் பெண்களை அடக்கவும் சுரண்டவும் தமிழ் சமூகம் தனது கலாசார விழுமியங்களுடாகப் பயன்படுத்துகின்றது என்பதை இந்த அரங்க நிகழ்வு முன்வைக்கின்றது. இந்த நாடகத்தைப் பார்வையிட்ட ஒரு இளம் ஆண் இறுதியாக நடைபெற்ற கலந்துரையாடலில் கனடாவில் பெண்கள் இவ்வாறன பிரச்சனைகளுக்கு முகம் கொடுப்பதில்லையே. ஏன் தொடர்ந்தும் இவ்வாறான கருத்துக்கள் முன்வைத்து நாடகங்களை இயக்குகின்றீர்கள் என்ற தொனிபட கேள்வியை முன்வைத்தார். இவரது கேள்விக்கு அந்த நிகழ்விலையே பதிலளித்தபோதும் அப் பதிலை ஆவணப்படுத்துவது நல்லது என்பதால் இக் குறிப்பு எழுதப்படுகின்றது.

நாம் முன்னேறிய ஜனநாயக விழுமியங்களை மதிக்கும்(?) நாடு (கனடா) ஒன்றில் வாழ்வதால் இங்கு பல பிரச்சனைகளைப் பற்றி கதைக்கவோ விவாதிக்கவோ தேவையில்லை என்ற வாதத்தை பலர முன்வைக்கின்றனர். ஆனால் நாம் இன்றும் பெரும்மான்மை ஆண்களாலும் அவர்களால் உருவாக்கப்பட்ட சட்டங்களாலும் ஒரு ஆணாதிக்க சமூகத்தல் வாழ்கின்றோம் என்பதை இவர்கள் கண்திறந்து காண்பதற்கும் புரிவதற்கு மறுக்கின்றனர். சில தனிப்பட்ட பெண்களின் செயற்பாடுகளை காரணமாகவும் ஆதாரமாகவும் முன்வைத்து சமூகத்தின் பொதுவான ஒரு விடயத்தை தட்டிக்கழிக்கின்றனர். ஆகவே இக் குறிப்பானது கனடிய சமூகத்தில் பொதுவாக காணப்படுகின்ற பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளையும் மற்றும் அவர்கள் எவ்வாறு சுரண்டப்படுகின்றனர் என்பதையும் புள்ளிவிபரங்களுடன் இங்கு முன்வைக்கப்படுகின்றது. இப் புள்ளி விபரங்கள் வெள்ளையினப் சமூகத்தை பெரும்மான்மையாக (குறிப்பாக பெண்களை)  கொண்ட கனடிய புள்ளிவிபரம் என்பதையும் கவனிக்கவேண்டிய ஒரு வியடம். (இந்தப் புள்ளிவிபரங்களை ஆங்கிலத்தில் பார்க்க விரும்புகின்றவர்களுக்கு இணைப்பு இறுதிப் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது.) ஏனனில் வெள்யையினப் பெண்களின் நிலையே இவ்வாறு ஏனில் கனேடிய தமிழ் பெண்களின் நிலை என்ன என்பதை நாம் விளங்கிக் கொள்வது கஸ்டமானதல்ல.

முதலாவது கனேடிய சமூகத்தில் திருமண பந்தததிற்கு வாழ்கின்ற பெண்களின் நிலை தொடர்பாக கவனிப்போம். திருமண உறவுகளுக்குள் வாழ்கின்றவர்களில் 20-30ம% வீதமானவர்கள் பல விதமான துஸ்பிரயோகங்களும் துன்றுத்தல்களும் முகம் கொடுக்கின்றனர். இதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பது குடும்ப அங்கத்தினர் ஒருவர் (பொதுவாக ஆண்) தனது அதிகாரத்தை குடும்பத்திற்குள் (பொதுவாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது) நிலைநாட்டுவதற்காக இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். உதாரணமாக, இக் குடும்பங்களில் உள்ள அக்கத்தவர்கள் மீது உடல், உணர்வுகள், மற்றும் உளவியல் சார்ந்த வன்முறைகளும், பாலியல் சுரண்டல்களும் துஸ்பிரயோகங்களும், மற்றும் நிதி தொடர்பான சுரண்டல்களும் துன்புறுத்தல்கள் நடைபெறுகின்றன என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. குறிப்பாக 6% வீதமான இருபாலுறவு திருமண பந்தத்திற்குள் இணைந்து வாழும் கனடிய உறவுகளில் உடல் மற்றும் பாலியல் சார்ந்த வன்முறை நடைபெறுவதாக முறையிட்டுள்ளனர். மேலும் 17% வீதமானோர் உணர்வு மற்று நிதி சார்ந்த துன்புறுத்தல்களை அனுபவிப்பதாக குறிப்பிட்டுள்ளனர். இது கனடிய மனிதர்களிற்கிடையே 1:5  என்ற அளவில் நடைபெறுகின்றது. இவ்வாறனா குடும்ப உறவுகளுக்குள் உள்ளான பிரச்சனைகளை பல்வேறு வயதுடையவர்கள் முகம் கொடுத்த போதும் குறிப்பாக 24 இருந்து 34 வயதுக்கு இடைப்பட்டோரில் தான் அதிகம் காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கையானது 45 வயதுக்கு மேற்பட்ட குடும்ப உறவுகளுக்குள் நடைபெறுகின்ற எண்ணிக்கையைவிட மூன்று மடங்கு அதிகமானதாக என அறியப்படுகின்றது. இவ்வாறன பிரச்சனைகளுக்கு இருபாலுறவு திருமண பந்தத்திற்குள் வாழ்கின்ற இருபாலினரும் பொதுவாக பாதிக்கப்பட்டபோதும், ஆண்களைவிட பெண்கள் மூன்று மடங்கு அதிகமான பாதிக்கப்படுகின்றனர். மேலும் குறிப்பாக குடும்ப உறவுகளுக்குள் பாதிப்புக்குள்ளாகின்ற பெண்கள் தமது கடந்தக கால உறவுகளாலையே அதிகம் பாதிப்பட்டோ அல்லது கொல்லப்பட்டோ உள்ளனர். குடும்பங்களினுள் ஆண் பிள்ளைகளை விட நான்கு மடங்கு அதிகமாக பெண் பிள்ளைகள் வீட்டு வன்முறைகளாலும் அதிகார தூஸ்பிரயோகங்களாலும் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.

காவல் துறையினரிடம் இவ்வாறான குடும்ப வன்முறைகள் அதிகார பாலியல் தூஸ்பிரயோகங்கள் தொடர்பான முறையிடு 2004 ஆண்டுடன் (28%) ஒப்பிடும் பொழுது 2009ம் ஆண்டு (22%) குறைந்தளவே காணப்படுகின்றது. இவ்வாறாக முறையிடுகின்றவர்களில் 63% வீதமானோர் ஒரு தடவைக்கு மேற்பட்ட வன்முறையை அனுபவித்த பின்னரே முறையிடுகின்றனர். இதிலும் 28% வீதமானோர்  பத்து தடவைகளுக்கு மேல் அனுபவித்த பின்னரே முறையிடுகின்றனர். இவ்வாறான பிரச்சனைகளை இருபாலினரும் அதிலும் குறிப்பாக அதிகமாக ஆண்கள் முறையிடாமல் இருப்பதற்கான பிரதானமாக மூன்று காரணங்கள் உள்ளன. முதலாவது இது தனிப்பட்ட விடயம் எனக் கருதுவதால். இரண்டாவது வேறு வழிகளில் இப் பிரச்சனையை தீர்க்கலாம் என நம்புவதால். மூன்றாவது இது ஒன்றும் முறையிடுவதற்கு முக்கியமான பிரச்சனை இல்லை எனக் கருதுவதால். பெண்களும் இதே காரணங்களுக்காக முறையிடுவதில்லை. ஆனால் அந்த எண்ணிக்கையானது ஆண்களினதை விட குறைவாகவே உள்ளது. இதைவிட ஆண்களும் பெண்களும் அதிகம் முறையிடாமல் இருப்பதற்கு வேறு பல காரணங்களும் உள்ளன. அவையாவன, காவல் துறையினருடனான தொடர்வை வைத்திருக்க விரும்பாமையும் மற்றும் தமது வாழ்க்கை துணை கைதாகாமல் இருப்பததை தவிர்ப்பதற்காகவுமே. குறிப்பாக அதிகமாக பெண்கள் இவ்வாறன முறைப்பாட்டை தவிர்ப்பதற்கு காரணம் மற்றவர்களுக்கு இப்பிரச்சனைகள் தொடர்பாக வெளிக்காட்ட விரும்பாமையும் ஆகும். இவற்றைவிட காவற்துறையால் ஒன்றும் செய்யமுடியாது என்றும் அல்லது அவர்களால் உதவ முடியாது என்றும் நம்புவதாலும் மற்றும் குற்றம் தொடர்பான நீதி மற்றும் சட்ட முறைமைகளில் நம்பிக்கையில்லாதிருப்பதும் இவ்வாறான பிரச்சனைகளை முறையிடுவதை தவிர்ப்பதற்காக காரணங்களாகும். மேலும்; இவ்வாறான குடும்ப விடயங்கள் பிரபல்யமாவதினால் ஏற்படும் புதிய பிரச்சனைகள் தொடர்பாக உள்ள பயத்தினாலும் ஒருவரும் முறையிடுவதில்லை. குறிப்பாக ஆண்களுடன் ஒப்பிடும் பொழுது அதிகமான (20%மான) பெண்கள் தமது ஆண் துணையின் மீதான பயத்தினால் முறையிடுவதில்லை. ஆண்களைவிட அதிகளவிலான பெண்கள் தமது குடும்பத்திடமும் நண்பர்களிடமும் அயலவர்களிடமும் மற்றும் குடும்ப நல ஆலோசகர்களிடமுமே ;இவ்விடயங்களை அதிகமாக பகிர்ந்துகொள்கின்றனர். மேலும் சட்டவல்லுனர்கள், சக வேலை செய்யும் நண்பர்கள் வைத்தியர் தாதிமார் மற்றும் சமய குருக்களிடமும் பகிர்ந்துகொள்கின்றனர்.

குடும்ப உறவுகளுக்குள் இவ்வாறான பிரச்சனைகள் உருவாவதற்கான காரணங்களாக  குடும்ப வறுமானம், உறவுகளின் தரம், மதுபான பாவனை, குடும்பத்திற்குள் காணப்படும் மனஅழுத்தம் மற்றும் சிறு வயிதிலிருந்து குடும்ப அங்கத்தவர்கள் வன்முறைகளை அனுபவித்தமையும் காரணங்களாக இருக்கின்றன. இவற்றைவிட இவ்வாறான பிரச்சனைக்கான முக்கியமான காரணங்கள் பல உள்ளன. அவையாவன, ஒருவரை கீழ்தரமான சொற்காளால் தாக்குவதும் மற்றவரை தாழ்மையானவரக்குவதுமாகும். மேலும் தமது உறவுகள் பிற ஆண் அல்லது பெண் உறவுகளுடன் கதைப்பதால் ஏற்படுகின்ற பொறாமை உணர்வு மற்றும் ஒருவர் எங்கிருந்தார்? யாருடன் இருந்தார்? இவ்வளவு நேரம் என்ன செய்தார்? என்பதை அறிவதற்கு இருக்கின்ற ஆவல்  என்பவையும் இவ்வாறன முரண்பாடுகள் உருவாவதற்கான பிரதான காரணங்களாக இருக்கின்றன. இதில் கீழ்தரமான சொற்காளால் தாக்கப்படுவதிலும் மற்றவரை தாழ்மையானதாக்குவதிலும் பெரும்பாலும் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். மேலும் பெண்கள்; பின்வரும் காரணங்களினாலும் அதிகளவு பாதிக்கப்படுகின்றனர். அதாவது விதிக்கப்படுகின்ற கட்டுப்பாடுகள் உதாரணமாக உறவுகளுடனும் நண்பர்களுடனும் கதைக்கக் கூடாது போன்றவை, வீட்டின் பொருட்களையும் சொத்துக்களையும் நாசமாக்குதல் அல்லது அழித்தல், வீட்டு வருமானம் தொடர்பான விபரங்களை மறைத்தல் மற்றும் நெருங்கிய உறவுகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்துவதல் என்பனவும் காரணங்களாகின்றன.

 ஆண் பெண் இணைந்து அதாவது இருபாலுறவு குடும்ப உறவுகளிலையே அதிகமான வன்முறையும் அதிகாரத்திற்கான போட்டியும் நிகழ்கின்றது. ஒரே பால் சார்ந்த அதாவது பெண்-பெண் அல்லது ஆண்-ஆண் அதாவது ஒரு பாலுறவு குடும்ப உறவுகளில் இவ்வாறான வன்முறைகளும் போட்டியும் மிகவும் குறைவானதாக இருக்கின்றது. ஏனனில் இவர்கள் தமக்கிடையிலான பொறுப்புகளையும் அதிகாரங்களையும் சம அளவில் பங்குபோட்டுக் கொள்வதே காரணமாக இருக்கின்றது. இதனால் ஒரு பால் உறவில் இருப்பவர்கள் முன்னேறியவர்கள் என்றோ அவர்களுக்கு இடையில் தன மனித பிரச்சனைகளோ இல்லை என்ற கற்பனைக்குள் செல்லத்தேவையில்லை. இக் கட்டுரையின் நோக்கம் ஆண் மற்றும் பெண் பால் இருவருக்கும் இடையிலான வேறுபாடுகளையும் ஆண்களால் பாதிக்கப்படுகின்ற அதிகளவான பெண்களையும் சுட்டிக்காட்டுவதற்காகவே எழுதப்படுகின்றது.

வீட்டுக்குள் செய்யப்படுகின்ற வீட்டுப் பணிகள் அல்லது குடும்ப பொறுப்புகள்pலும் இன்றும் பிரிவினைகளும் புறக்கணிப்புகளும் சுரண்டல்களும் காணப்படுகின்றன. பெண்கள் விட்டில் இருந்தால் அனைத்து வேலைகளையும் பெண்களே செய்ய வேண்டும் என்பது எழுதாத சட்டமாகவே உள்ளது. ஆனால் பெண்கள் ஆண்களுக்கு நிகராக வேலைக்குச் சென்றபோதும் வீட்டுவேலைகளான சமைத்தல் துவைத்தல் துப்பரவாக்கல் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு என்பவற்றை பெண்களே செய்யவேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றனர். இவ்வாறான வீட்டு வேலைகளை ஆண்கள் பகிர்ந்து கொள்வது சில சந்தர்ப்பங்களில் மட்டுமே நடைபெறுகின்றது. ஆதாவது பெண்கள் ஆண்களுக்கு நிகரான அல்லது அதற்கு மேலான வருமானத்தை குடும்பத்திற்கு கொண்டுவரும் பொழுது மட்டுமே வீட்டு வேலைகளை ஆண்கள் அதிகளவில் பகிர்ந்து கொள்கின்றனர். இது மட்டுமின்றி குழந்தைகள் பெருவது மற்றும் குழந்தைகளுக்கு பெயர் வைப்பது போன்ற பல விடயங்களில் ஆண்களின் ஆதிக்கமே அதிகளவில் இருக்கின்றது. பெண் தன்னுடன் வாழுகின்ற ஆணிற்கான வாரிசை உருவாக்கும் ஒரு இயந்திரமாகவும் அந்த வாரிசை(சுகளை)யும் தனது கணவனையும் மற்றும் விட்டையும் பராமரிக்கின்ற ஒரு வேலைக்காரியாகவே பல குடும்பங்களில் பெண்களின் வாழ்க்கை இன்றும் இருக்கின்றது என்பது ஆச்சரியமாதாக பலருக்கு இருக்கலாம். ஆனால் உண்மை நிலை இதுவே. இது தமிழ் சமூகத்தில் மட்டுமல்ல வெள்ளையின சமூகத்திலும் இருக்கின்ற வழமை என்பதை நாம் (குறிப்பாக அன்று கேள்வி கேட்டவர்) புரிந்துகொள்ள வேண்டியவர்களாக உள்ளோம்.

“கற்பு என்பது அகராதியில் இருந்துதான் போய்விட்டது…ஆனா மனசிலயிருந்து இன்னும் போகயில்ல” என அணங்கு நாடகத்தில் ஒரு வசனம் வருகின்றது. ஆனா “மனை யில் வீட்டிருப்பவள் மனைவி” என்கின்ற அர்த்தம் பொதிந்த சொல் இன்றும் பரவலாகவும் பொதுவாகவும் தமது பெண் துணையைக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றது. இந்த சொல் அகராதியில் இருந்து இன்னும் போகவில்லை. திருமணமான பெண் என்பவள்; வீட்டில் (மனையில்)  வெறுமனே ஒன்றும் செய்யாது வீட்டிருப்பவள் அல்ல. அவள் இன்றும் ஆண்களுக்கு முன்பு எழுந்து (விதிவிலக்குகள் உண்டு) இறுதியாகவே படுக்கவும் செல்கின்றாள். அதாவது வீட்டின் அனைத்து அல்லது பெரும்பாலான வேலைகளை செய்கின்ற வேலையாள். மேலும் இன்று பெண்கள் தொழில் துறையிலும் வேலை செய்து வீட்டு வேலைகளுகம் செய்கின்றனர். ஆகவே தமது துணைவியரை இன்றும் மனைவி என அழைப்பது ஆணாதிக்கத்தின் எச்சசொச்சங்களே. கற்வு என்ற சொல்லை அகராதியிலிருந்து எடுத்ததைப் போல மனைவி என்ற சொல்லையும் அகராதியிலிருந்து எடுக்கவேண்டும். அது மட்டுமின்றி இதுபோன்ற ஆணாதிக்க சொற்களை நமது மனதிலிருந்தும் நீக்க வேண்டும். அப்பொழுதுதான் குடும்ப உறவுகள் குறைந்த வன்முறைகளுடனும் பிரச்சனைகளுடனும் ஆரோக்கியமான உறவு கொண்டதாக வளரும்.

கனடிய தொழில் துறையில் பெண்களின் பங்களிப்பும் மற்றும் அவர்கள் மீது மேற்கொள்ளப்படுகின்ற புறக்கணிப்பும் சுரண்டலும் முக்கிய கவனத்திற்குரியவை. 1911ம் ஆண்டு 15% மட்டுமே  இருந்த பெண்களின் தொழிற் பங்களிப்பானது 1951ம ஆண்டு 22.3% மாக அதிகரித்தது. இவ்வாறன பெண்களின் தொழிற் பங்களிப்பிற்கான காரணம் பெண்களது உரிமைகளை ஆற்றலையோ முதலாளித்துவம் மதித்தமை அல்ல. மாறாக இந்த ஆண்டுற்கு முன்பு இரண்டு உலகப் போர்களிலும் பெருமளவு ஆண்களை சமூகம் இழந்து முலாளித்துவ வர்க்கம் தொழிலாளர் பற்றாக்குறையை முகம் கொடுத்ததே பிரதான காரணம். ஆனால் தொழிற்துறையில் பெண்கள் அதிகளவு பங்குபற்றியமையானது அவர்களை பலவகைகளில் முன்னேறவும் தமது ஆற்றல்களை வெளிப்படுத்தவும் அடித்தளமிட்டது. இவ்வாறக பெண்களின் பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்தமைக்கு மேலும் பல காரணங்கள் உள்ளன. அதாவது அதிகளவான பெண்கள் வேலை செய்வதற்கு ஆர்வமாகவும் இருப்பது. அவர்கள் உயர் கல்வி கற்றிருப்பதும் அதனால் வேலை செய்வதற்கான எதிர்பார்பை அதிகரித்திர்ப்பதும் காரணமாகின்றன. இவற்றைவிட இன்றைய பொருளாதார நெருக்கடிகளாலும் நுகர்வுக் கலாசாரத்தாலும்; ஒரு குடும்பத்திற்கு இரண்டு வருமானங்கள் அவசியமாக தேவைப்படுகின்றமையும் முக்கிய காரணமாக இருக்கின்றது. மற்றும் அதிகளவு தொழில்கள் உருவாகியுள்ளமையும், பெண்களுக்கு எதிரான பார்வையில் மாற்றம் ஏற்பட்டமையும் மேலதிக காரணங்களாகும். ஆகவே இன்று (1999 கணக்கிட்டின்படி) தொழிற்துறையில் பெண்களின் பங்களிப்பானது 45.8% இருக்கின்றது. ஆனால் தொழில் துறையிலும் பெண்கள் மீதான புறக்கணிப்பும் சுரண்டலும் தொடர்கின்றது.

தொழில்துறைகளில் தொழில்கள் இன்றும் ஆண்களுக்கு உரியது பெண்களுக்கு உரியது என பிரிக்கப்பட்டும் தரப்படுத்தப்பட்டுமே உள்ளது. உதாரணமாக ஆசிரியர் தொழில் பெண்களுக்கு உரியது என்றே கருதப்படுகின்றது. பொறியியல் துறை ஆண்களுக்கு உரியதாக கருதப்படுகின்றது. அதிகளவான உயர் பதவிகள் ஆண்களாலையே தொடர்ந்தும் நிர்வகிக்கப்படுகின்றன. ஒரே தரத்திலான வேலைகளை ஆண் பெண் இருவர் செய்தாலும் ஆண்களுக்கே அதிக சம்பளம் மற்றும் சலுகைகள் வழங்கப்படுகின்றது. பெண்கள் ஆண்களைவிட குறைவானதையே பெறுகின்றனர். உதாரணமாக பெண்கள் எந்தவிதமான தொழில் செய்தபோதும் அதே தொழில் செய்கின்ற ஆணுக்கு கிடைக்கின்ற வருமானம் ஒரு டொலர் ($1.00) என்றால் பெண்ணுக்கு $0.85 டொலரே வழங்கப்படுகின்றது. இதிலும் பெண்கள் வெள்ளை நிறந்தினராக இல்லாத வேறு நிறத்தவர் எனின் $0.53 டொலரே வழங்கப்படுகின்றது. மேலும் பெண்களே கடைசியாக வேலைகளுக்கு தேர்வு செய்யப்படுவதும் முதலாவதாக வேலை நீக்கம் செய்யப்படுபவர்களுமாவர்.

பெரும்பான்மையாக வெள்ளையின சமூகத்தையும் அதிலுள்ள பெண்களையும் அடிப்படையாக கொண்டதே மேற்குறிப்பிட்ட அனைத்து புள்ளிவிபரங்கள். அவர்களது நிலையே இப்படி ஏனின் கனடிய சமூகத்தில் வாழ்கின்ற தமிழ் பெண்களின் நிலைமையை உணர்ந்து கொள்வது அவ்வளவு கஸ்டமானதல்ல. ஏனனில் நமது ஜனநாயகத்திற்குhன போராட்டங்கள் எல்லாம் குடும்ப நிறுவனத்திற்கு அப்பாற்பட்டது. பொதுவெளிக்கானது மட்டுமே. ஆனால் நமது தமிழ் குடும்பங்களிற்குள் ஆண்களின் அதிகாரம் சட்டம் ஆதிக்கம் அதிகமாகவே இருக்கின்றது. இது புலம் பெயர்ந்த அல்லது கனடிய தமிழ் சமூகங்களில் பெண்களின் நிலை தொடர்பான ஆய்வு ஒன்றை செய்வதன் மூலமே அறியக்கூடியதும். ஆதாரமாக முன்வைக்கக் கூடியதுமாகும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டியவர்களாக உள்ளோம்.

இன்னுமொரு இளம் பெண் சமயங்கள் நல்லவற்றைதானே கூறுகின்றன. மனிதர்கள் விடும் தவறுக்காக மதங்களை ஏன் குறை கூறவேண்டும் என்ற தொனிபடவும் கேள்வியை முன்வைத்தார். இவருக்கான பதிலை நூலகத்தில் இருக்கின்ற “நான் ஒரு பெண்” என்ற கட்டுரைகளின் தொகுப்பு புத்தகத்தில் மதங்களும் பெண்களும் தொடர்பான நான்கு கட்டுரைகள் உள்ளன. அவற்றை வாசிக்கும்படி கேட்டுக்கொள்கின்றேன். இதில் நான்கு பிரதான மதங்களும் அவற்றின் பெண்களுக்கு எதிரான நிலைப்பாடுகளும் தொடர்பான சிறு குறிப்புகள் மொழிபெயர்ப்புகளாக வெளிவந்ததுள்ளது. 

இவ்வாறன கட்டுரைகள் ஆய்வுகளை புத்தகங்கள் தொடர்ந்து வெளிவந்தபோதும் மீண்டும் மீண்டும் இவ்வாறான கேள்விகள் ஏன் எழுகின்றன. நாம் (ஆண்களும் … பெண்களும்) ஒரு ஆணாதிக்க இருபாலுறவு ஆதிக்க சமூகத்தில் வாழ்கின்றோம் என்பதையும் சகல நிறுவனங்களான மதங்கள் பாடசாலைகள் கல்லுரிகள் அரசாங்கங்கள் அரசுகள் எல்லாம் ஆணாதிக்க சிந்தனையை மையப்படுத்தி உருவானவை என்பதையும் ஆணாதிக்க இருபாலுறவு ஆதிக்க சமூகத்தை நியாயப்படுத்தி பாதுகாப்பவை என்பதையும் ஏன் புரிந்துகொள்வதற்கு மறுக்கின்றறோம். ஆல்லது புரிந்துகொள்ள முடியாதிருக்கின்றோம். அல்லது புர்pந்துகொள்வதற்கு தடையாக நம்மிடம் இருப்பது என்ன?

 மேற்குறிப்பிட்ட தகவல்களுக்கும் மேலதிகமான விபரங்களுக்கும் பின்வரும் கனடிய புள்ளவிபர திணைக்கள வலைப்பதிவை நாடவும்.

Family Violence in Canada: A Statistical Profile “நான் ஒரு பெண்” என்ற கட்டுரைகளின் நூலக வலைப்பதிவை


நன்றி - பிரக்ஞை
...மேலும்

Mar 26, 2015

தலிபான்கள் பூமியில்... - எம்.கண்ணன்


மதத்தின் பெயரால் நிகழ்த்தப்பட்ட கொடூரக் கொலைக்கெதிராக ஆப்கானிஸ்தானில் பெண்கள் கிளர்ந்தெழுந்திருக்கின் றனர். ஆப்கானிஸ் தானில் பார்குந்தா என்ற இளம் பெண் புனித நூலை எரித்ததாக கூறி ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதவெறியர்கள் திரண்டு, அந்த பெண்ணை கடுமையாக அடித்து துன்புறுத்தியிருக்கின்றனர். பின்னர் காபூல் ஆற்றங்கரையில் தீ வைத்து எரித்து அப்பெண்ணை கொலை செய்திருக்கின்றனர். இந்தக் கொடூரம் நிகழ்ந்த பின்னரும், பார்குந்தாவின் இறுதிச் சடங்கில் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என அடிப்படைவாத மதவெறியர்கள் மிரட்டியிருக்கின்றனர்.

இதையெல்லாம் கண்டு மனம்வெதும்பிய ஆயிரக்கணக்கான பெண்கள், தங்கள் உயிரையும் துச்சமென மதித்து, பார்குந்தாவின் சவப்பெட்டியை தாங்களே சுமந்து சென்று இறுதிச் சடங்கை செய்திருக்கின்றனர். இதுமத அடிப்படை வாதிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.மேலும் பார்குந்தா குர்ஆனை எரித்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டு பொய்யானது என்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந் திருக்கிறது. பார்குந்தா ஏற்கனவே மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அவர் கிழித்தது பெர்சிய மொழி புத்தகத்தின் சில பக்கங்கள் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் காபூலில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் திரண்டு ஆப்கானில் பெண்களுக்கு சமஉரிமை வழங்க வேண்டும், பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் இறங்கியிருக்கின்றனர். ஒரு காலத்தில் ஆப்கானிஸ்தான் சோசலிச நாடாக இருந்தது. அப்போது பெண்களுக்கு முழுச் சுதந்திரம் இருந்தது. பெண் கல்வி ஊக்குவிக்கப்பட்டது. முகத்தை மூடாமல் பெண்கள் பல்கலைக்கழகம் சென்று பட்டம் பெற்றனர். பலதுறைகளிலும் சிறந்து விளங்கினர். சோவியத் ஒன்றிய படைகள் 1989ல் ஆப்கானை விட்டு வெளியேறியது.

அதன் பின்னர் முஜாகிதீன் குழுக்கள் ஆட்சியை பிடித்தன. இந்த குழுக்கள் மிகவும் பிற்போக்குத்தனமாக பெண்கள் கல்வி கற்பதற்கு தடை விதித்தன. அன்று தொடங்கிய பெண்களுக்கு எதிரான அடக்குமுறையும், அடிமைத்தனமும் இன்றும் கொடூரமாக தொடர்கிறது. அதே நேரம் அங்கு இன்னும் நம்பிக்கை ஒளி பிரகாசித்துக் கொண்டே இருக்கிறது. தலிபான்கள் பெண்களுக்கு எதிராக இழைத்த கொடுமைகளை ஆவணப்படுத்தி தைரியமாக வெளியுலகிற்கு அம்பலப்படுத்தியது இடதுசாரி பெண் போராளி மலாலை ஜோயா தலைமையிலான பெண்கள் புரட்சிகர அமைப்பு.

மலாலை ஜோயா மதப்பழமைவாதத்தை மட்டும் எதிர்க்கவில்லை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்து போராடி வருகிறார். அதனாலேயே இதுவரை 7 முறை அவரை கொலை செய்வதற்கான முயற்சி நடைபெற்றிருக்கிறது. அதிலிருந்து தப்பித்து பெண் அடிமைத்தனம், ஏகாதிபத்தியம், வறுமை, கல்வியறிவின்மை ஆகியவற்றிற்கெதிராக போராடி வருகிறார்.எப்போதும் மரணத்தை சந்திக்கக் கூடும் என்ற நிலையிலும், “எனக்கு மரணத்தைக் கண்டு பயம் இல்லை; அநீதிக்கு எதிராக மவுனம் காக்கப்படுவதை கண்டே நான் அஞ்சுகிறேன். எந்த நேரமும் என்குரலை நசுக்கவும் என்னைக் கொல்லவும் உங்களால் முடியும்.

ஆனால்நான் வாழவே விரும்புகிறேன். ஒரு பூவைப் பிய்த்து எறிய முடிகிற உங்க ளால், வரப் போகும் வசந்த காலத்தைத் தடுத்து நிறுத்த முடியாது’’ என்றுமதப் பழமைவாதிகளின் செவிட்டில் அறைந்தது போல, தனது மன உறுதியை உரக்கச் சொல்லி, களம் கண்டு வருகிறார். அந்த வழியிலேயே இன்றும் ஆப்கானிஸ்தானில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் மதப் பழமைவாத ஆதிக்கத்திற்கு மத்தியில் சமஉரிமை கேட்டு வீதியில் இறங் கியிருக்கின்றனர். இந்த போராட்டம் வீறு கொண்டு எழும்.

எங்கெல்லாம் மதவெறி ஆதிக்கம் செலுத்துகிறதோ, அங்கெல்லாம் மதத்தின் பெயரால் பெண்களை அடிமைப்படுத்தும் கயமைத்தனம் இந்த நவீன யூகத்திலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்திய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, இஸ்லாமிய பழமைவாத கருத்துக்களை விமர்சித்து வருகிறார். அவரை பழமைவாதிகள் விரட்டி வருகின்றனர். அதே போல் சல்மான் ருஷ்டியின் கருத்துக்களை ஆதரித்து பேசிய காரணத்திற்காக தென்ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் மதப் பழமைவாதிகளால், பெண் எழுத்தாளர் சைனுப்பிரியா தாலா தாக்கப்பட்டிருக்கிறார். இதில் இந்தியாவும் விதிவிலக்கல்ல. இந்துமதப் பெண்கள் 10 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என மதத்தின் பெயரால் கட்டளையிடுகின்றனர். நாட்டின் பிரதமரோ கண் மற்றும் காதுகளுடன் வாய்மூடி மவுனியாக இருக்கிறார். அவசரச் சட்டத்திலேயே ஆட்சி நடத்தும் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33 சதவிகித இடஒதுக்கீட்டிற்கு அவசரச் சட்டம் கொண்டு வர மறுக்கிறார். காரணம், அதன் பின்னணியிலும், மதப்பழமைவாதத்துடன் கூடிய பெண்ணடிமைத்தனம்தான் முன்னிலையில் இருக்கிறது. பெண் சாமிகள் இருக்கும் கோவில்களில் கூட பெண் கள் கருவறைக்குள் செல்லமுடியாது என்ற அவலம் இன்றும் தொடர் கிறது.மத பழமைவாதத்தின் பெயரால் பெண்களை அடிமையாக வைத்திருக்கும் சமூக அவலத்திற்கெதிரான போராட்டம் ஆப்கானிஸ் தான், இந்தியா என்ற எல்லை வித்தியாசமின்றி உலகெங்கிலும் பரவிட வேண்டும். தலிபான்களுக்கு எதிராக மட்டுமல்ல, தாலி குறித்துப் பேசவே கூடாது என்பவர்களுக்கு எதிராகவும் போராட வேண்டிய தேவை தற்போது உள்ளது. இதை பெண்கள் மட்டுமல்ல, சமூகம் முழுமையும் சேர்ந்து நடத்த வேண்டியுள்ளது.
...மேலும்

அருந்ததி ராய்: எழுத்துக்களைச் சிதைக்காத சொற்கள் - நஸார் இஜாஸ்


வழமை போன்ற ஆரோக்கியத்துடன் பொழுதுகள் கழிந்து கொண்டிருக்கின்றன. ஒரு தாயின் கர்ப்பச் சுருளிலிருந்து ஒரு பெண் குழந்தை மெல்ல வெளியுலகை எட்டிப் பார்க்கிறது. அப்போது அந்தத் தாய் வெறுமனே குழந்தையாகவே அவளை பார்த்திருக்கலாம். அது இவ்வுலகை மாற்றப் போகும் சக்தியாக இருக்கும் என்று தெரியாமல் இருந்திருக்கலாம். எழுத்தையும், போராட்டத்தையும் அடையாளமாகக் கொள்ளப் போகும் அற்புதம் அந்தக் குழந்தையின் அணுத் திறன்மங்களில் சேகரிக்கப்பட்டிருப்பதை அறியாமல் போயிருக்கலாம்.

கற்பனைத் திறன்களில் வெளிப்படும் எழுத்துக்களையும் தாண்டி யதார்த்தம் பளிச்சிடும் எழுத்துக்களில் ஒரு வித வசீகரம் தோன்றுமே, அதை உற்பத்தி செய்யப் போகின்ற கைகள் அக்குழந்தையின் பிஞ்சு விரல்கள் என்பதை அறியாமல் போயிருக்கலாம். பலமாகக் கட்டமைக்கப்பட்ட சக்தியாக இருக்கும் அவளுடைய தாயிடம் இப்போது சொல்லி வைக்கலாம். இவள் கருவிலேயே கட்டமைக்கப்பட்ட சொற்களின் சொந்தக்காரி. அப்படிப்பட்ட யதார்த்த ஜாலங்கள் அருந்ததி ராயின் சொற்களில் பொதிந்திருக்கின்றன.

அருந்ததி ராய் நாவலாசிரியரும், தீவிர செயற்பாட்டாளருமாவார். இவர் எழுதிய The god of small things என்ற நாவல் மிகப் பிரபலமானது. இந்த நாவலுக்காகத்தான் உலகின் பிரபலமான புக்கர் பரிசை 1997 ஆம் ஆண்டு பெற்றுக் கொண்டார். இந்நாவல் ஒரே மாதத்தில் 21 நாடுகளில் விற்று சாதனை படைக்கப்பட்டது. இந்நாவல் தமிழில் 'கடவுளின் சின்ன விஷயங்கள்' என்ற பெயரில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இந்நாவலுக்குப் பிறகு அவருடைய எந்த நாவலும் வெளிவரவில்லை.

2004 மே மாதம் சமூக செயற்பாடுகளுக்காகவும் ஹிம்சைக்கொதிராக ஆவேசக் குரல் கொடுத்ததற்காகவும் சிட்னி சமாதான விருதைப் பெற்றுக் கொண்டார். 2006 ஆம் ஆண்டு இந்திய அரசு வழங்க சாகித்திய அகாதமி விருதை மறுத்து விட்டார். இதற்கான காரணத்தைப் பின்னர் பார்க்கலாம். கட்டுக் கதையல்லாமல் யதார்த்தங்களை அதன் யதார்த்தம் குன்றாத வகையில் அப்பட்டமாகக் காட்சிப்படுத்தும் இவரது எழுத்துக்களில் பொதிந்திருக்கும் வசீகரம் வாசிப்போரில் ஒரு வித காட்சி பீடத்தினை மனத்திரையில் நிழலாடச் செய்து விடுகிறது.

அருந்ததி ராய் 1961 நவம்பர் 24 மேகலாயாவில் உள்ள ஷில்லாங் எனும் இடத்தில் பிறந்தார். இவருடைய தாய் மேரி கேரள கிறிஸ்டியனும் தந்தை பெங்காளி இந்துவமாவார். அருந்ததி ராயின் தந்தை தேயிலை நடும் தொழில் செய்பவர். காதலித்துத் திருமணம் செய்த இவர்களது திருமண வாழ்வு வளைவு நெளிவுகளோடு பயணிக்கையில் குழந்தை பிறந்த பின் இருவரும் தனிப்பட்ட காரணங்களைச் சொல்லிப் பிரிந்து விட்டனர். இதனால் அருந்ததி ராய் தன் வாழ்வின் பெரும் பகுதியை தனது தாயுடன் கேரளாவின் ஐமனம் எனும் கிராமத்தில் செலவளிக்க வேண்டியிருந்தது.

தனது தாய் அவருக்கு அன்பளிப்புச் செய்யும் ஒரு பொருட்களில் அதிகமானவை புத்தகங்கள்தான். அந்தப் புத்தகங்கள் அவருக்குள் தன்னம்பிக்கையையும், மனோதிடத்தையும் அவருக்குள் பதியமிட்டன. தனது ஐந்தாவது வயதில் தான் படித்த மிஷனரியில் பயின்று கொண்டிருக்கையில் தனது ஆசிரியரால் இழிவு படுத்தப்பட்டார். எப்போதுமே அந்த ஆசிரியரின் வாயிலிருந்து வருகின்ற வார்த்தைகள் இவைதான். உனது கண்ணில் சாத்தான் இருப்பதை நான் அவதானிக்கிறேன். இந்த வார்த்தை அவருக்குள் கோபத்தைக் கிண்டி விட்டது. அதற்கு பதிலடியாக ஒரு குறிப்பை அவர் தனது பயிற்சிப் புத்தகத்தில் பதிவு செய்திருந்தார். அந்தப் பதிவை நான் இப்போது எனது புத்தகத்தில் பதிவு செய்து வைத்திருக்கிறேன் என்று ஒரு குறிப்பில் அருந்ததி ராய் சொல்லியிருக்கிறார்.

அதனாலோ என்னவோ, இவருடைய புத்தகம் அருந்ததியின் சுயசரிதை நூல் என பலர் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்தக் கேள்விக்கு தெளிவான பதிலை அருந்ததி ராயே சொல்லியிருக்கிறர். வார்த்தைகளில் வர்ணிப்புக்கள் இருந்தாலும் கூட அவை ஒவ்வொன்றும் நிஜத்தின் நிகழ் நிலையையே பிரதி பலிக்கிறது. இக்கருத்தை அவர் ஏற்றுக் கொள்கிறார்.

புத்தகங்கள் மீதான அதீத ஆர்வம் அவரை வாசிப்பின் உச்ச கட்டத்துக்குக் கொண்டு சென்றது. புத்தகம் வாங்குவதற்காக அம்மாவைத் தொந்தரவு செய்ய வேண்டாமென்ற எண்ணத்தில் தொழில் செய்து கிடைக்கும் வருமானத்தில் புத்தகங்களை வாங்க நினைத்தார். இதற்காக நட்சத்திர ஹோட்டல்களில் எரோபிக்ஸ் வகுப்பு நடாத்தினார். 

பிற்பாடுகளில் 16 ஆவது வயதில் நியூடெல்லிக்குத் திரும்பிய இவர் தனது எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டும், கட்டிட வடிவமைப்பில் கொண்ட அதீத ஆர்வமும் அவரை கட்டிட வடிவமைப்புத் துறையில் கற்கும் ஆர்வத்தைத் மென்மேலும் அதிகரிக்கச் செய்தது. நியூடெல்லி பாடசாலையில் இணைந்து கட்டிட நிர்மாணக் கலையைப் பயின்றார்.

அங்குதான் தன் வாழ்வை மாற்றப் போகும் அழகிய தருணம் பட்டாம் பூச்சிகளாய் மன அலைகளில் பறந்தோடியது. அந்தப் பட்டாம் பூச்சி தருணங்கள் அழகிய ப்ரியங்களை அவரில் மீளவும் உற்பத்தி செய்து கொண்டே இருந்தது. அங்கு தன்னோடு கட்டிடக் கலை பயில வந்த மாணவனான ஜெரார்ட் டா குன்ஹா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். மெல்லிய பாணியில் சொல்வதாயின் தனக்கு கணவனாக வரப் போகின்றவரை அருந்ததி ராய் முதன் முதலாக அங்குதான் கண்டிருந்தார்.

இருவரின் திருமண வாழ்வும் நான்கு வருடங்கள் இனிமையான புன்னகைகளும் அன்பும் நிறைந்த தேசத்தில் சந்தோசமாக சென்று கொண்டிருக்கையில் தொழில் நிமித்தம் இருவரும் கோவாவுக்குப் புறப்பட வேண்டியிருந்தது. தாம் கற்ற கட்டிட நிர்மானக் கலை இருவருக்குமே ஜீவானோபாய நலனுக்குக் கைகூடியிருக்கவில்லை. ஆதலால் அவர்களுடைய வாழ்க்கையும் மகிழ்ச்சியாக கழிய வில்லை. 

அருந்ததி ராயின் தாய் சமூக செயற்பாடுகளில் தன்னை ஆழமாக உட் செலுத்திக் கொண்டிருந்த ஒருவராவார். அவர் ஒரு பாடசாலையை ஸ்தாபித்திருந்தார். இவரின் சமூகத்தின் மீதிருந்த ஆர்வம் கூட அருந்ததி ராயையும் அதன் பால் ஈர்க்கும் சக்தியாக மாறி அவரையும் இதில் ஈடுபட ஒரு தூண்டு கோலாக அமைந்திருக்கலாம் என்றும் எண்ணத் தோன்றுகிறது.

பொழுதுகள் மெதுவாகக் கழிந்து கொண்டிருக்கையில் அருந்தி ராய் மெல்லிய புன்னகையுடன் எவ்வித ஆராவாரிப்புமின்றி வீதியில் தன் பாதையில் பயணித்துக் கொண்ருக்கிறார். சைக்கிளினை மெதுவாக ஓட்டிக் கொண்டிருக்கிறார். அந்த ஓட்டத்தை ஒருவர் நுணுக்கமாகக் கவனிக்கிறார். அவர் இயக்குனர் பிரதீப் கிருஷ்ணன் என்பதை அருந்ததி ராயினால் இலகுவாக அடையாளம் காணக் கூடியதாக இருந்தது. 

இயக்குனர் பிரதீப் கிருஷ்ணன் அவருடைய 'Massey saab' என்ற திரைப்படத்தில் சிறு பாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பொன்றை வழங்கினார். அருந்ததி ராயும் அதில் நடித்தார். ஒரு கட்டத்தில் பிரதீப் கிருஷ்ணனை மணம் முடித்தார். தன் வாழ்க்கைப் பயணம் செவ்வனே மகிழ்ச்சிப் பாதையில் பயணம் செய்து கொண்டிருக்க மற்றுமொரு வாய்ப்பு அருந்ததி ராய்க்குக் கிடைத்தது. நினைவுச் சின்னங்களைப் புதுப்பிப்பதற்கான புலமைப் பரிசில் பெற்று எட்டு மாதக் கற்கை நெறிக்காக இத்தாலிக்குப் புறப்படுகிறார்.

கற்கை நெறியை முடித்துக் கொண்டு இத்லியிலிருந்து திரும்பிய அருந்ததி ராய் தன் கணவனுடன் இணைந்து பல்வேறு திட்டமிடல்களை மேற்கொள்ளலானார். தொலைக்காட்சி நாடகத்துக்கான 26 கிளைக் கதைகளை எழுதினார். திரைக்கதை வசனங்களும் எழுதினார். 

அருந்ததி ராய் சேகர் கபூருடைய சச்சரவுக்குள்ளான திரைப்படத்துக்கு திரை வசனத்தை அருந்ததி ராய் எழுதினார். இதனால் அவர் நீதி மன்ற வாசலை மிதிக்க வேண்டியிருந்தது. பின் தனது தனிப்பட்ட வாழ்க்கையிலிருந்து ஒதுங்கிக் கொண்டவர் முற்று முழுதாக எழுத்தில் நாட்டம் கொள்ளத் தொடங்கினார். அதன் விதைப்புக்கள்தான் இன்று கடவுளின் சின்ன விஷயங்கள் எனும் பொக்கிஷமாக முளைத்துள்ளது.

அரசியல் ரீதியாக நடுத்தரமமான கருத்துக்களையும் தீவிரமான விமர்சனங்களையும் தன் எழுத்துக்களில் அருந்ததி ராய் தீவிரப்படுத்தினார். மட்டுமன்றி மேதா பக்டர் என்பவருடன் இணைந்து நர்மதா அணைக்கட்டு விவகாரத்தைத் தீவிரமாகக் கவனித்து வந்தார். ஒரு அணைக்காக ஐம்பது இலட்சம் மக்களை ஆடு, மாடு போல் விரட்டியடிப்பது எந்த விதத்தில் நியாயம் என இவரின்; குரல் ஓங்கியெழுந்த போதுதான் பலரது கவனம் நர்மதா அணைக்கட்டின் மீது திரும்பியது.

ஒரு கட்டத்தில் நர்மதா அணை எதிர்ப்பாளர்களே இவருடைய கருத்துக்கள் குறித்து வாதிப் பிரதிவாதங்களை முன் மொழிந்த போது, நான் சத்தமாகப் பேசினால் உறங்கிக் கொண்டிருப்பவர்கள் விழித்து விடுவார்களோ எனச் சிலர் பயப்படுகிறார்கள். நான் அப்படித்தான் பேசுவேன். உறங்கிக் கொண்டிருக்கும் அத்தனை இந்தியர்களும் விழித்துக் கொள்ளட்டும் எனப் பகிரங்க அறிவிப்பை விடுத்து அத்தனை பேரினது வாயையும் அடைத்தார்.

இதனாலேயே நான் மேலே கூறியது போன்று இவர் இந்திய அரசு வழங்க அறிவித்த சாஹித்திய அகாதமி விருதை பெற்றுக் கொள்ள மறுத்து விட்டார். எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் இருந்தால்தான் சுதந்நிரமாக செயற்பட முடியும். தான் இப்பரிசைப் பெற்றிருந்தால் அரசின் கைப்பிள்ளையாக மாறும் நிலைக்கு ஆளாகலாம்; எனக் கூறினார்.

அண்ணா ஹஸாரேவின் இயக்கம், நரேந்திர மோடியின் அரசியல் நகர்வுகள், காஷ்மீர் பிரச்சினை என இவர் நோக்கும் பிரச்சிணைகள் சற்று வித்தியாசமானவை. நீதி, அநீதிகளுக்கிடையில் நாட்டின் தலை விதியை மாற்றியமைக்கக் கூடிய மருந்துப் பொருட்கள் அவை. நல்லவை, தீயவையை நிர்ணயிப்பணயிக்கும் காரணிகள் எனவும் வரையறை செய்யலாம்.

2012 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் திகதி முன்னிரவில் இந்தியாவின் தலை நகரான தில்லியில் நடந்த அகோரச் சம்பவம் இந்தியாவை மட்டுமல்ல. முழு உலகையும் கவலைக்குட்படுத்தியது. 23 வயதான மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பஸ்ஸில் வன் பாலுறவுக்குட்படுத்தப்பட்டார். அதைத் தொடர்ந்து மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூர் மருத்துவமணைக்குக் கொண்டு செல்லப்பட்டார். சிங்கப்பூர் மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வந்த இந்த மாணவியை மரணம் சந்தித்து விட்டது. இந்தவிடயம் யாவரும் அறிந்த ஒன்றே.
இந்நிலையில் இங்கிலாந்தின் சேனல் நான்கு (Channel 4) தொலைக்காட்சிக்காக சேனல் நான்கு தொகுப்பாளர் ஜோன் ஸ்நோ என்பவர் அருந்ததி ராயுடன் ஒரு உரையாடலை மேற்கொண்டிருந்தார். வெறுமனே மூன்று நிமிடங்களே ஒளிபரப்பான அந்த உரையாடல் இந்திய ஊடகங்களில் பாரிய விவாதங்களைத் தூண்டி விட்டது. இது ஆரம்பத்தில் எதிர்க்கப்பட்டாலும் பின்னர் பலரால் ஏற்றுக் கொள்ளப்படத்தான் செய்தது.

அருந்ததி ராய் இங்கு தனிப்பட்ட ஒரு பெண்ணுக்காக மத்திரம் பேசாமல் முழு இந்திய தேசத்தின் நலனையும் கருத்திற் கொண்டே பேசியுள்ளார். பெண்ணிலை வாதத்தின் மிகச்சரியான சொற்களே அவரிலிருந்து வெளிப்பட்டுள்ளது என்பதை இது பற்றி விரிவாகப் பார்க்கையில் புரிந்து கொள்ள முடியும்.

செயலிலும், எழுத்திலும் தனக்கென ஒரு தனித்துவத்தைக் கொண்டு செயற்படும் அருந்ததி ராய் நிகழ்காலத்தின் நிகழ்நிலையை எடுத்துக் காண்பிக்கிறார். ஒரு தேசத்தின் இருப்பிடத்தை, அடையாளத்தை நிலை நாட்டுகிறார். தனது செயலிலும், எழுத்திலும் புதிய பாய்ச்சலை ஏற்படுத்தி வரும் அருந்ததி ராய் எனும் பெண் இந்தியாவிற்குக் கிடைத்துள்ள அறிய வகையான ஆரோக்கிய மருந்தாகும்.

நன்றி - தினக்குரல்
...மேலும்

Mar 25, 2015

ஆணாதிக்க அறிவியலே அழிவு அறிவியல் - பார்பாரா மெக்லின்டாக்


பார்பாரா மெக்லின் டாக், மரபியலின் இரண்டு முக்கியத் திருப்பு முனைகளைச் சாதித்தவர். 1927ல் கார்னல் பல்கலைக்கழகத்தில் தனது அயராத உழைப்பில் குரோமோசோம் விட்டு குரோமோசோம் தாவும் மரபணுக்களின் முக்கியப் பண்பைக் கண்டுபிடித்து வெளியிட்டார். ஒருவகை மரபணு மற்றொரு வகை மரபணுவைக் கட்டுப்படுத்தும் எனும் அடுத்த திருப்புமுனைக் கண்டுபிடிப்பை சோள-தாவர மரபணுக்கள் வழியே அடைந்த மெக்லின்டாக்கின் ஆய்வு முடிவுகளை அன்று 1930களின் விஞ்ஞான உலகம் ஏற்கவில்லை. கிரிகர்மெண்டலுக்கு நேர்ந்ததைப் போலவே தனக்கு, ஆண்களே அதீத ஆதிக்கம் செலுத்திய அறிவியல் உலகால் கிடைத்த அவமானங்களைத் தாங்கமுடியாமல் 1951லிருந்து தனது ஆய்வு முடிவுகள் எதையும் வெளியிடாமல் மெக்லிண்டாக் நிறுத்திக் கொண்டார்.

தாவும் மரபணு (Jumping Gene)  மற்றும் கட்டுப்படுத்தும் மரபணு (Controlling Gene)ஆகிய இரண்டுமே சரிதான் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு, மக்காசோளத்தின் மரபணு வரைபடத்தை (The Genetic Map) 1931ல் அடைந்தார். எக்ஸ்-கதிர்களை (எலும்பு முறிவு போன்றவற்றிற்கு) ஒருவருக்கே அதிகம் பயன்படுத்தும்போது அது செல் பெருக்கத்தை மரபணுக்களில் தூண்டி புற்றுநோய் நோக்கி இட்டுச்செல்லும் என்பதையும் கண்டுபிடித்தார் மெக்லின் டாக். கதிர்வீச்சு இரு குரோமோசோம்களை ஒன்றிணைய வைத்து மரபணுக்களில் தூண்டுதலை மேற்கொள்ளும்போதுதான் புற்றுநோய் தோற்றம் கொள்கிறது எனும் அவரது கண்டுபிடிப்பும் குறிப்பிடத்தக்கது.

உலகெங்கிலும் அவரது இத்தகைய தன்னிச்சையான கண்டுபிடிப்புகளை மறுத்து ஏராளமான கட்டுரைகளை அணுஆயுத ஆதரவுவாதிகள் வெளியிடுவதை அவர் உணர்ந்தார். ஆயுதங்களின் வழியே விஞ்ஞானிகள் சாதிக்கத் துடிக்கும் கதிர்வீச்சு அபாயம் புற்றுநோயைக் கொடுத்து பேரழிவை ஏற்படுத்தும் எனும் அவரது கருத்து அவரைத் தனிமைப்படுத்தியது. ஆனால் உலகப்போருக்குப் பிறகான உலக மனநிலை அவரது எச்சரிப்புகள் எவ்வளவு நியாயமானவை என்பதை உணரத் தவறவில்லை. பின்நாட்களில் தருவிக்கப்பட்ட நவீன கருவிகள், தாவும் மரபணுவும், கட்டுப்படுத்தும் மரபணுவும் உண்மையே என்பதையும் நிரூபித்தபோது 1983ல் மருத்துவத்திற்கான நோபல் பரிசு பார்பாரா மெக்லின்டாக்கிற்கு வழங்கப்பட்டது.

தனி ஒருவராக அப்பரிசைப் பெற்ற முதல் பெண் விஞ்ஞானி ஆனார் மெக்லின்டாக். உலக அமைதிக்காகவும் உணவு உற்பத்தி, மருத்துவம் என அமைதி மற்றும் சமுதாய வளர்ச்சி சிந்தனை வழியிலேயே அறிவியலின் களம் கண்ட இந்த மாமேதை இறுதிவரை திருமணமும் செய்யாமல் அறிவியலுக்கே தனது வாழ்வை அர்ப்பணித்து தனது தொன்னூறாவது வயதில் 1992ல் காலமானார். ஆக்கப்பூர்வ அறிவியலின் தாய் என போற்றப்படும் மெகலின் ஒரு பெண்ணியப் போராளியாகவும் சித்தரிக்கப்படுகிறார். 1987ல் அவரது ஒட்டுமொத்த  ஆய்வுகள் அடங்கிய நூல் The Discovery and Characterization of Transportable Elements; The collected Papers of barbara McClintock வெளியான பின்னணியில் அளித்த விரிவான நேர்காணல் இது.

கே: நோபல் அங்கீகாரம்! இப்போது ஒட்டுமொத்த ஆய்வு முடிவுகளின் அதிகாரப்பூர்வ வெளியீடு. எப்படி உணர்கிறீர்கள் பார்பாரா?
ப: எனது ஆய்வு முடிவுகள் முப்பதுகளிலேயே (1930கள்) ஏற்கப்பட்டிருந்தால் மரபியலின் பாதை பல மைல்களைக் கடந்து இன்று புற்றுநோயை அறவே அழித்துவிட்டிருக்க முடியும் என்று தோன்றுகிறது. உலக மக்கள் பெருக்கத்திற்கு ஏற்ற நமது உணவு உற்பத்தி முறையிலும் இன்று நிறைவு கண்டிருக்கலாம். ஆனால் அவர்கள் யுத்தங்களின் ஆயுதப் பெருக்க சிந்தனையிலேயே காலம் தள்ளிவிட்டார்கள்.

கே: விவசாயக் கல்வியை வாழ்வின் குறிக்கோளாகத் தேர்வு செய்தவர் நீங்கள் உங்களுக்கு இசையில் கொள்ளை ஆர்வம் இருந்தது. ஆனால் மரபியல் பக்கம் எப்படி வந்தீர்கள்?
ப: குடும்பத்தில் படித்தவர்கள் என்று யாருமே கிடையாது. படித்தால் மதசம்பிரதாய பியானோ வகுப்புகள் மட்டுமே படித்தார்கள். நான் பதினாறு வயதில் பள்ளி இறுதிப் படிப்பை முடித்து கார்னல் பல்கலைக்கழக விவசாயத் துறையில் இணைய என் விருப்பத்தை வெளியிட்டபோது இரண்டு வகை எதிர்ப்புகளை எதிர்கொண்டேன். ஒன்று என் தாயினுடையது. அறிவியல் படித்தால் கண்டிப்பாக உன்னைத் திருமணம் செய்ய யாரும் முன்வர மாட்டார்கள் என்று அவர் மிகுந்த கவலை கொண்டார். அப்புறம் பல்கலைக்கழகத்தின் அந்த 1919ல் பெண்கள் யாருமே விவசாயக் கல்வியில் அனுமதிக்கப்படவில்லை. அறிவியல் கற்கவும் அதில் சாதிக்கவும் பெண்களை சமூகம் அனுமதிக்காத அந்த காலகட்டத்தில் என் தந்தை பல்கலைக்கழக அதிகார மையத்தோடு கடும்போராட்டம் நடத்தி எனக்கு இடம் கிடைக்கச் செய்தார். அங்கே கூட அதிகம் அறிவியலில் என்னை அனுமதிக்காமல் ஜாஸ் இசையில் எனது ஆர்வத்தைப் பார்த்து அதில் நான் பயணிக்க நிர்பந்தித்தார்கள். இசை எனக்கு இப்போதும் ஒப்பற்ற துணையாக விளங்குவது உண்மைதான் என்றாலும், எனது ஆர்வம் தாவரஇயலை நோக்கிய ஆய்வுப் பயணமாக மாறியது. 1923ல் பலவகை போராட்டங்களுக்கு மத்தியில் நான் அப்பல்கைலக்கழகத்தின் முதல் பெண் இளஅறவியல் பட்டம் வென்று இறுதித் தேர்வு நாளில் அப்போதைய ஆரம்பகால மரபியல் வகுப்பு ஒன்றில் இணைந்தேன். மரபியலாளர் ஹட்சன் எனது ஆர்வத்தையும் வகுப்பில் என் பங்களிப்பையும் குறித்து அறிந்து தன்னோடு இணைந்து ஆய்வுகளில் உதவுமாறு ஒரு தொலைபேசி அழைப்பு விடுத்தது தான் திருப்புமுனை.

கே.: ஆனால் மரபியலில் உங்களால் முனைவர் பட்ட ஆய்வை முடிக்க முடியவில்லையே. தாவரவியலில் அல்லவா உங்கள் முதுகலை அறிவியல் பட்டமும் முனைவர் ஆய்வும் அமைத்திருந்தது?
ப: 1920களில் உலகஅளவில் கார்னல் பல்கலைக்கழகத்தில் மட்டுமே தாவர-இனப்பெருக்கத்துறை (Plant breeding Department) எனும் மரபியல்துறை இருந்தது. அங்கே மரபியல் – இனப்பெருக்க பாடத்தை முனைவர்பட்ட துறையாக எடுத்துச்செயல்பட பெண்கள் அனுமதிக்கப் படவில்லை.

கே: அங்கே தாவரவியல் விரிவுரையாளராக மரபியல் ஆய்வுக்குழு ஒன்றை நீங்கள் கட்டமைத்தீர்கள் அல்லவா. உயிர்செல்கள் குறித்த கல்வியை (cytology) தாவர வளர்ச்சி இயலோடு இணைந்து மரபணு செல்கல்வியான சைட்டோ ஜெனிடிக்ஸ் (Cyto genetics) துறையை தோற்றுவித்த பின்னணியை விளக்க முடியுமா?
ப:  எங்கள் துறைத்தலைவர் ரோலின்ஸ் ஏ.எமர்சன் எனக்கு அளித்த ஆதரவு ஒரு முக்கிய காரணம். தாவரவியல் இனப்பெருக்க ஆய்வு மாணவர்களை உடல்செல் கல்வியாளர்களோடு இணைந்து செயல்பட வைக்கும் நிர்பந்தம் 1927-ல் ஏற்பட்டது. அப்போது கார்னல் பல்கலைக்கழகம் என்னை ஒரு முழுநேர ஆய்வு மேலாளராக கிட்டத்தட்ட நியமித்தது. ஹரியட் கிரைட்டன், ஜார்ஜ்பீடில், மார்க்வஸ் ரோடஸ் என சிலர் என் முயற்சிகளுக்கு ஆதரவாக என்னிடம் ஆய்வு மாணவர்களாக இணைந்தனர். குறிப்பாக கிரைட்டன் என்னோடு மக்காசோளத்தின் குரோமோசோம் ஆய்வுகளில் முழுமையாக ஈடுபடமுன் வந்தார்.

கே: அங்கே நீங்கள் மேற்கொண்ட ஆய்வு ஒன்றின் முடிவுகள் தாமஸ்மார்கன் நோபல் பரிசு பெற காரணமானது அல்லவா?
ப: மார்கனின் ஈக்களில் குரோமோசோம்கள் ஒன்றிற்கு ஒன்று தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் என்பதற்கான புள்ளிவிபரங்கள் மற்றும் வெற்று அனுமானங்களை எங்கள் மக்காசோளத்தின் குரோமோசோம் மீதான ஆய்வை வைத்து நாங்கள் அறிவியலாக 1929இல் கண்டடைந்தோம். குரோமோ சோம்கள் உடற்கூறியல் அடிப்படையிலேயே இடமாற்றம் பெறுவதை என்னால் நிரூபிக்க முடிந்தது. 1931ல் எனது ஆய்வுமுடிவுகளைக் கொண்டு அவரது கண்டுபிடிப்பு ஊர்ஜிதமாகி 1933ல் மார்கன் நோபல்பரிசு பெற்றார். மரபணுக்களின் நெகிழ்தன்மை குறித்த அப்போதைய அறிவியலின் பழைய புரிதல்கள் மீதான என் முதல் தாக்குதல் அது. அதே கண்டுபிடிப்பு ஒரு செல் உயிரியிலிருந்து மரபணுக்கள் மேலும் சிக்கலான பிற்கால உயிரிகளைப் பரிணாமவியலின் அடிப்படையில் எப்படி உருவாக்கம் செய்தன என்பதை ஆராயவேண்டியிருந்தது ஒருபுறம். மறுபுறம் ஒரேவகை மரபணு ஒரு இடத்தில் தண்டாகவும் மறுஇடத்தில் நிறம் கொண்ட தழையாகவும் எப்படி உருமாற்றம் கொள்கிறது என்பதையும் ஆராய வேண்டியநிலை. ஆனால், நான் கார்னலில் ஒரு மரபியல் ஆய்வகத்தை கட்டமைக்க முயற்சித்தபோது என்னை ஒரு பெண் என்கிற ஒரே காரணத்திற்காக பல்கலைக்கழகம் தூக்கியெறிந்தது.

கே: கார்னலிலிருந்து எப்போது வெளியேறினீர்கள். மக்காசோளமே உங்களது தொடர்ஆய்வுகளின் ஆய்வுப் பொருளாக இருந்து வந்தது ஏன்? பிரத்யேக காரணம் உண்டா?
ப: 1936ல் கார்னல் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டேன். கலிபோர்னியாவில் கொஞ்சகாலம் மார்கனோடு இணைந்து பணியாற்ற முயன்றேன். பிறகு மிசோரி… அப்புறம் ஜெர்மனி. ஆனால் எல்லா இடங்களிலுமே அறிவியல் கண்டுபிடிப்புகளை பெரிய நிறுவனங்களுக்கு ஆதரவாக காசாக்கும் – பணம்கொட்டவைக்கும் – முயற்சிகளுக்கே ஆதரவு இருப்பதைப் பார்த்தேன். இப்போதும் நிலைமை மாறிவிடவில்லை. யாருடனும் இணைந்து செயல்பட முடியவில்லை. போகும் இடங்களில் எல்லாம் ஆய்வகப் பணிகளில் நான் ஒருத்தி மட்டுமே பெண். மணிக்கணக்கில் உருப்பெருக்கிகளோடு காலம்தள்ளி நான் அடையும் முடிவுகளை வைத்து தங்களது ஆய்வுக் கட்டுரைகளை அவர்கள் வெளியிட்டுக் கொள்வதே ஒரு வாடிக்கையாக ஆகிக் கொண்டிருந்தது. ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு மரபணுவியல் ஆபத்தான பாதையில் பயணிக்கத் தொடங்கியபோது நான் மான்ஹாட்டன் அருகே கோல்டு ஃபிரிஸ் ஹார்பர் ஆய்வகத்தில் எனது மக்காசோளங்களுடன் தனித்து விடப்பட்டேன். எனக்கென்று ஒரு ஆய்வகமும் தனியே வேலை செய்ய அனுமதியும் கிடைத்ததற்கு ஏதோ பெண் அரசியலுக்கு கிடைத்த வெற்றி என நினைத்துவிட  வேண்டாம். இரண்டாம் உலகயுத்தம் ஏறக்குறைய எல்லா ஆண்களையும் அறிவியலின் யுத்ததளவாட அழிவு அறிவியலுக்குள் இழுத்துக்கொண்டதால் என் மாதிரி ஒருத்தருக்கு தன்னிச்சையாய் செயல்படும் ஒருவெளி (space) கிடைத்தது. மக்காசோள மரபணுக்களின் மீதான என் ஆய்வுகள் முற்றுப்பெறாமல் தொடர்ந்ததால் நான் அதையே பின்தொடர்ந்தேன். உருப்பெருக்கியில் மக்காசோளத்தின் குரோமோ சோம்களை கச்சிதமாக கண்காணிப்பதில் எனக்கு எல்லாரையும் விட அதிக நிபுணத்துவம் இருந்தாக நான் நம்பினேன்.

கே: ஸ்பிரிஸ் ஹார்பர் ஆய்வகத்தில் பத்தாண்டுகள் மக்காசோளத்தோடு கிரிகர்மெண்டல் பட்டாணிகளை வைத்து உழைத்ததுபோல அயராது பாடுபட்டீர்கள் அல்லவா, மற்றவர்களின் ஆய்வுகளுக்கும் உங்களது ஆய்வுகளுக்குமான வித்தியாசம் என்ன?
ப: என்னை கிரிகர் மெண்டலுடன் ஒப்பிடுவதை நான் விரும்பி ஏற்பதே கிடையாது. நான் நவீன உருபெருக்கிகளோடு ஆய்வுகளை மேற்கொண்டவகை ஹேஷ்யமாக உத்தேச கருத்தாக உருவாகிய ஒன்றை துரத்தியபடியே நான் பயணித்தேன். எனக்கு ஸ்பிரிஸ் ஹார்பரில் தொந்தரவு செய்ய மாணவரோ உதவியாளரோ யாருமே கிடையாது. என் சோளங்களை காப்பாற்றி காக்கைகளை விரட்ட ஒரு தாதியம்மாவை மட்டும் நியமித்தேன். மற்றபடி தனித்தே வாழ்வது என் வாழ்வின் தொடக்கத்திலிருந்தே என் உடன் வந்ததுதான்.சோளத்தில் பிறகும் ஆய்வுகள் மேற்கொண்டிருந்தனர். இரண்டாம் உலகப்போர் மூண்டிருந்த காலகட்டத்தின் ஆணாதிக்க அறிவியல் உலக அழிவு அறிவியலாக உருவெடுத்து வருவதை உணராதவர் இல்லை. ஹென்றி வாலஸ் போன்றவர்கள் சோளமாவு வருவதை உணராதவர் இல்லை. ஹென்றி வாலஸ் போன்றவர்கள் சோளமாவு தயாரிப்பதில் உணவுத் தேவையை முன்வைத்து அதீத ரக புதுவகை ரசாயன விதைப்புகளை ஆராய்ந்தனர். ராக்பெல்லர் நிறுவனம் மூன்றாம் உலக நாடுகளின் விவசாயத்தை தன் லாபங்களுக்காக சூறையாட அப்போதே தனது வேலையைத் தொடங்கிவிட்டிருந்தது. ஏன்.. அமெரிக்க விஞ்ஞானிகள் அணுகுண்டு சோதனைகளின் போது அணுக்கதிர் வீச்சு ஆயுதவிமானங்களில் சோளத்தை வைத்து உணவின் நச்சாக்கத்தை சோதித்து அதற்கு நோபல்பரிசு வரை போகவில்லையா. டார்வின், மெண்டல் என நமது பரிணாமவியல் மரபியல் துறையின் ஆரம்ப ஆசான்கள் கூட சோளத்தில்தான் சிலகாலம் பணிபுரிந்துள்ளனர். இவர்களது ஆய்வுகளிலிருந்து எனது ஆராய்ச்சி முற்றிலும் வேறுபட்டது. குரோமோசோம்களின் நகராததன்மை மார்கனின் முடிவு. நானோ சோள குரோமோசோம்கள் இடம்பெயர்வதை என் உருப்பெருக்கிகளில் துல்லியமாகக் கண்டேன். மரபணுக்கள் ஒரு குரோமோ சோமிலிருந்து மற்றொன்றிற்கு தாவவும் செய்கின்றன. மூளை, குடல் என எல்லா செல்களிலும் ஒரேமாதிரி குரோமோசோம்கள் இருந்தும் அவை முற்றிலும் வேறுவேறுபணிகள் செய்வதை எனது ஆய்வுகள் வழியே ஒரு குறிப்பிட்ட மரபணு தனது பண்புகளில் சிலவற்றை ஒரு மின்சுவிட்ச் போடும்போது  ஒளியேற்றவும் அணைத்துக்கொள்ளவுமான தனிப்பண்பைக் கொண்டுள்ளது என்பதே எனது அசைக்க முடியாத கண்டுபிடிப்பு. பிற மரபணுக்களிடம் என்னால் காணமுடிந்தது.

கே: இந்த முடிவுகள் மரபியலை பரிணாமவியலோடு இணைப்பதாக இன்று நிறுவப்பட்டுள்ளதே, அன்று ஏறக்குறைய நாற்பதாண்டுகளுக்கு முன் இதை நீங்கள் விளக்கிய போது என்ன எதிர்வினை வந்தது?
ப:  கிட்டத்தட்ட பில்லியன் ஆண்டுகளுக்குமுன் சிக்கலான வடிவங்களில் ஒற்றைசெல் உயிரிகளின் தோற்றம் பிறகு  குறிப்பிட்ட பணிகளைச் செய்யும் அல்லது நிறுத்தும் மரபணுக்களின் தோற்றத்தால் சுமார் 550 மில்லியன் வருடங்களுக்கு முன் அடுத்த படி நிலையில் மேலான உயிரி தோற்றவியலை நோக்கி எனது ஆய்வு முடிவுகள் விஞ்ஞான உலகை சிந்திக்கத் தூண்டின. 1951 ஜூன் மாதம் நான் என் முடிவுகளை முப்பதுபக்க ஆய்வுக் கட்டுரையாக வாசித்தளித்து குதித்துத் தாவும் மரபணுக்களை விளக்கிய போது அதை அவர்கள் ஏற்கமறுத்தார்கள். கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால் பரவாயில்லை. மரபணுக்களின் நிலைத்தன்மை கோட்பாட்டை உறுதிசெய்து எனக்கு எதிராகப் பெரிய பிரச்சாரத்தை தொடங்கினார்கள். பெண் என்பதால் அடிப்படைகளை விளங்கிக் கொள்வதில் எனக்கு சிக்கல் இருப்பதாக எல்லாம் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியோடு எழுதியபோது எனக்கு ஏற்பட்ட அவமானங்கள் ஒன்றிரண்டல்ல. நான் அறிவியலாளர்களிடமிருந்து முற்றிலும் விலகுமாறு நிர்பந்திக்கப்பட்டேன். அடுத்த இரண்டு பத்தாண்டுகள் எனது ஆய்வுகள் தொடர்ந்தாலும் முடிவுகளைப் பிரசுரிக்காமல் நான் தனிமைப்படுத்தப்பட்டேன். சகோதரி மெய்ட்னர், மரபணு வடிவயியலை அடைந்த பிராங்கிளின் என என்போல் புறந்தள்ளப்பட்டவர்கள் பலர்.

கே: புற்றுநோய் தொடர்பான உங்களது சில கருதுகோள்களே பிரச்சனைகளின் அடிப்படை என்கிறார்களே.
ப: அங்கேதான் எனது முக்கியமான கண்டுபிடிப்பு புறந்தள்ளப்பட்டது. கியூரியின் கதிர்வீச்சு ரேடியம் புற்றுநோயை குணப்படுத்தட்டும். ஆனால் ஆண்களின் அறிவியல் என்பது சிக்கல்களை உருவாக்கியபின் அதை தீர்ப்பதில் உள்ளது. நாங்கள் சிக்கல்களே தோன்றாத வகைஅறிவியலை முன்மொழிகிறோம். மரபணுக்களின் மீது கடுந்தாக்குதல் நடத்தி அவற்றில் பெருக்கத்தை தூண்டும் எக்ஸ்கதிர் உட்பட அணுக்கருவியலின் கதிர்வீச்சு நச்சாக்கத்தை நேரடியாக மரபியல் முறைப்படி ஆய்வுக்கு உட்படுத்தி இரு குரோமோ சோம்களை இயற்கைக்கு மாறாக ஒன்றிணைய வைத்து புற்றுநோயின் தோற்றுவாயை அணு உலை கதிர்வீச்சுகளும் அணு ஆயுதப்போரின் ஆணாதிக்க அறிவியல் நிரந்தர அழிவுப்பாதையாக விதைத்ததை உலகம் மிகவும் காலம் தாழ்ந்தே யோசித்துள்ளது. மிசோரி ஆய்வகத்தில் எக்ஸ் கதிர்வீச்சுக்கு சோலி குரோமோசோம்களைத் திறந்துவிட்டபோது முனை அறுந்து குரோமோ டைட்ஸ் என அவைமாறி அறுந்த பகுதிகளை இணைக்க எண்டோஸ்பெர்ம் முறையில் செல் பெருக்கம் உடனடியாகத் தூண்டப்படுவதால் புற்றுநோய் தோன்றுவதை நான் நிறுவினேன். இது ஒரு எதேச்சையான (Random) நிகழ்வல்ல என்பதையும் இரண்டாவதாகப் பெருஎண்ணிக்கையில் (Large Scale) தூண்டல் நடைபெற்று செல்பெருக்கம் முற்றிலும் திரும்ப முடியாத பாதையில் முடுக்கிவிடப்பட்டதையும் அப்போதே நிரூபித்தும் பல காரணங்களுக்காக அணு ஆயுத ஆதரவு அரசியல் தலைமை எனது ஆய்வுகளை நான் தொடராமலும் முடிவுகளை வெளியிடாமலும் முடக்கியது என்பது தான் உண்மை.

கே. தற்போதைய அறிவியலின் தேவை என்ன?
ப: அழிவுப்பாதை அறிவியலை முற்றிலும் நிறுத்திடவேண்டியுள்ளது. புவியின் வாழ்வாதாரத்தை ஊர்ஜிதம் செய்யும் அறிவியல் முறையே நமது தேவை. உணவு உற்பத்தி முதல் நோய்தடுப்பு வரை நாம் கவனத்தை திருப்பவேண்டும். கேளிக்கை தொழில்நுட்பமும், அணு ஆராய்ச்சி உட்பட பெருஞ்செலவு அறிவியலை ஆக்கப்பூர்வ முன்னேற்றத்தை நோக்கி செலுத்த வேண்டியுள்ளது. அதற்கு பெண்கள் அறிவியலைக் கையில் எடுக்க வேண்டும்.

...மேலும்

Mar 24, 2015

மனித உரிமை மற்றும் பால்நிலை சமத்துவ செயற்பாட்டாளருமான திருமதி நளினி ரட்ணராசாவின் செவ்வி


...மேலும்

அன்னா அக்மதேவா: எழுதித் தீர்ந்த சொற்கள் -நசார் இஜாஸ்


பிரிட்டனின் பீட்டர்ஸ் பெர்க் நகரமெங்கும் கூதல் பரவிக் கொண்டிருக்கிறது. மெல்லிய பனிக்காற்று உடலை ஆட்பறித்து தூக்கத்தினில் பாதியையும், கனவினில் மீதியையும் தின்று கொண்டிருந்தது. கட்டிலின் மீது போர்வைக்குள் ஒழிந்து கொண்டிருந்தவள் மெல்ல எழுந்து கொள்கிறாள். அவளுடைய பெயர் அன்னா அக்மா தேவா. 

ரஷ்யாவின் மிகச்சிறந்த கவிஞர்களில் உருவரான அன்னா அக்மதேவா 1989.06.11 அன்று மூன்றாவது நபராகப் பிறந்தார். தாத்தாரிய சமூகத்தில் பிறந்தவள். தாத்தாரிய சமூகத்தைச் சார்ந்தவர்களில் ஆண்கள் வீரம் மிக்கவர்களாகவும், பெண்கள் வலிமை கொண்டோர்களாகவும் காணப்படுவர். அந்த வலிமையின் சிறு பாகமாக சோம்பல் முறித்துக் கொண்டவள் வீரிய எழுச்சியுடன் செயற்படுகிறாள். மெழுகுதிரியை சு+டேற்றி அறையில் சுவரோடு சாத்தியிருக்கும் மேசையின் முன்னால் உட்கார்ந்து கொண்டு மேசையில் இருந்த எதையுமே தொடாது தனித்தவளாக உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். முகம் அலம்பிய பின்னும் முகத்தில் இனம் புரியாத சோகம் உறவாடிக் கொண்டிருந்தது. மௌனம் கலைந்தவளாய் மேசையிலிருந்த தனது பழைய குறிப்புகளை எடுத்தவள் எதையோ தேடிக் கொண்டிருக்கிறாள். எதுவுமே கிடைக்காதவளாய் அவற்றை மூடி வைத்து விட்டு வேறொரு குறிப்பில் எதையோ எழுத முனைபவளாய் தனது சிந்தனைகளை மேய்கிறாள். அவளது மண்டைக்குள் அப்போது எழுவுமே இல்லாதது போன்று காட்சியளித்தது. 

அவளுடைய சிந்தனைகள் நதிகளைப் போன்று நீண்டு கொண்டிருக்கிறது. பேனாக்கள் தாள்களில் உருள தவியாய் தவித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அவளுக்கு அப்போது எதை எழுதுவது, எப்படியெழுதுவது என்று வார்த்தைகள் வெளிவராமல் தவித்துக் கொண்டிருக்கிறாள். வார்த்தைகள் எதுவுமே வெளிவராத வெறுமையின் சின்னமாய் சிதறடிக்கப்பட்டவள் போல் அந்தப் பழைய காலத்துக் கதிரையில் அவள் இப்போது உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். 

அன்னா அக்மதேவாவின் வாழ்க்கை துயரங்களை மாலையாகக் கோர்த்து அவளது கழுத்துகளில் குடியமர்ந்து கொண்டு பிரதிஷ்டம் செய்து கொண்டிருக்கிறது. தனது மகன் அரசு எதிர்ப்பாளன் என்ற பொய்க் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு கம்பியெண்ணிக் கொண்டிருக்கிறான். அவள் தற்போது மேசையின் முன்னால் உட்கார்ந்து கொண்டு எதையோ எழுதத் துடித்துக் கொண்டிருப்பதும் அதற்காகத்தான் அல்லது அதைப்பற்றித்தான். 

தனது மகனை சந்திப்பதற்காக அனுமதி கேட்டு சிறைச்சாலை அதிகாரிக்கு வேண்டுகோள் விண்ணப்பமொன்றை எழுதி விட்டு, அத்தோடு அதிபர் ஸ்டாலினை வாழ்த்தி சில கவிதைகளைக் கிறுக்க வேண்டும். கவிதைகளையும் விண்ணப்பப் படிவத்தையும் ஒன்றாக இணைத்து அனுப்பும் பட்சத்தில் ஒரு வேளை அந்தக் கவிதைகளில் அவருடைய மனம் மகிழ்வுறலாம். அவ்வாறு அவரது மனம் மகிழ்வுறும் கணத்தில் சிறையில் மனம் சிதறிக் கிடக்கும் தன் மகனை சந்திக்கும் வாய்ப்புக் கிட்டலாம்.

விடிகின்ற பொழுதுகள் ஒவ்வொன்றும் இவருக்கு இன்றைக்காவது தன் மகனை சந்திக்க வாய்ப்புக் கிடைக்காதா என்ற ஏக்கத்துடனும் எதிர்பார்ப்புடனும்தான் கழிகிறது. அவ்வாறே அந்த இரண்டு வருடங்களையும் கழித்து விட்டாள். 

தன் மகனை இழந்து இவள் தவித்துக் கொண்டிருப்பது போல் பலரும் இவளைப் போலவே தத்தம் அறைகளில் உட்கார்ந்து கொண்டு எதையாவது செய்து கொண்டிருப்பார்கள். 

தனது மேசையில் இருந்த வோட்கா எனும் பானத்தை அருந்தத் தொடங்கினாள் அக்மதேவா. ரொம்ப நேரமாக தனது கண்களை வருடிக் கொண்டிருந்த தூக்கத்திற்கு பதிலளிப்பவளாய் அதே மேசையில் மெல்லத் தலையை சாய்த்து கண்களை மெல்ல மூடுகிறாள். அந்தத் தூக்கம் தனது துயரத்துக்கு சிறிது நேர ஓய்வை வழங்கி வைக்கலாம் என்ற நம்பிக்கை அவளுக்குள் நிரம்பியிருந்தன. 

கவிதையின் மீதான அதீத காதலும், வேட்டையும் அதி வேகத்தில் ஊடுருவியிருந்த நிலையில் 1910ம் ஆண்டு காலப்பகுதியில் அன்னா அக்மதேவாவுக்கும் பிரபல விமர்சகரும், கவிஞருமான நிக்கோலோவ் குமிலேவ்விற்கும் திருமணம் நடந்தேறியது. வாழ்க்கைப் பயணம் அதன் போக்கில் அழகாகப் பயணித்துக் கொண்டிருக்க, நிக்கோலோவ் குமிலேவ் கவிதை இயக்கமொன்றைத் தோற்றுவித்தார். இதன் மூலம் ரஷ்ய கவிதை அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்த முயன்றார். அதற்காகப் பெரிதும் பாடுபட்டார். ரஷ்யாவினுடைய மிக முக்கியமான புரட்சி ஏற்பட்ட காலகட்டமொன்;றில் வசித்து வந்த இவர் அந்தக் கால கட்டத்தில் ஸ்டாலினிய அடக்கு முறையில் சிக்கி வதைக்குட்பட்டடு அதன் தீவிரப்போக்கினையும் உணர்ந்தார். 

ரஷ்ய கவிதைகளை எளிமை நடைக்கு மாற்றும் முயற்சியில் அன்னா அக்மதேவாவின் கவிதைகள் பெரிதும் உதவின. அன்னா அக்மதேவாவின் கவிதைகள் அவருக்கு வலு சேர்த்து கவிதையின் மூலம் புகழ் பெற்று விளங்கினார். ஆதலால் பீட்டர்ஸ் பெர்க் கவிதை வட்டத்தில் முக்கியமானவராகத் திகழ்ந்தார். தொடர்ந்தேர்ச்சையான புகழால் உள்ளம் நெகிழ்ந்தார். அன்னா அக்மதேவா. எனினும் அவரது கணவருக்கு இச்செயல் ஒருவித சலனத்தையும், பொறாமையையும் வளர்த்து விட்டது. அவளை பகைமையால் ஆட்கொள்ளத் தொடங்கிய இவர் பிற்பாடுகளில் அவரை விட்டு பிரிந்து வாழத் தொடங்கினார். 

ஒரு கட்டத்தில் கணவன் நிகோலெவ் குமுலேவ் என்பவரும் அரசு எதிர்ப்பாளராக அடையாளம் காணப்பட்டு அதிகாரிகளால் கைது செய்யப்ட்டு சிறைவாசம் கொண்டார். அப்போது அன்னா அக்மதேவா கணவரை மீட்பதற்காக இருவரும் கணவன் மனைவியாக சேர்ந்து வாழ முடியாது பிரிந்திருந்த கட்டத்திலும் மீட்புக்கான முயற்சிகளில் கரிசணை காட்டினார். மீட்புக்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டும் எவ்விதப் பயனுமில்லை. சைபீரியாவின் முக்கிய சிறைச்சாலையொன்றில் அடைக்கப்பட்டிருந்த நிகோலோவ் குமுலேவ் அச்சிறையிலேயே சித்திரவதைக்காட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
அச்சிறைச்சாலையின் சுவர்களையும், கொன்றவர்களையும் தவிர வேறு எவராலும் அவரது குருதி கொள்ளையடிக்கப்பட்டு உயிர் சு+றையாடப்பட்ட வரலாற்றை விவரிக்க முடியாது. அன்று கணவனை மீட்கப் போராடியவள் இன்று தன் மகனையும் மீட்கப் போராடுவதுதான் கொடுமையின் உச்ச கட்டமாகும்.

நிகலோவ் குமிலேவிற்குப் பின் நிகலோவ் புனின் என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழத் தொடங்கிய அன்னா அக்மதேவாவிற்கு அவ்வாழ்க்கையும் சீராக அமையவில்லை. நிகலோவ் புனினும் கைது செய்யப்பட்டு சைபீரிய சிறைச்சாலையொன்றில் அடைக்கப்பட்டார். எதுவுமே செய்ய இயலாது அவரது கண்களில் கஸல் வடிந்து கொண்டிருந்தது.  

தாய்மை என்பது பிரகாசமான சித்திரவதை. அதற்கு என்னை முழுமையாக ஒப்படைக்க முடியவில்லை என்று அப்போதுதான் குறிப்பொன்றை எழுதி வைக்கிறாள் அக்மதேவா. அவை குறிப்புகளில் தாங்கி நின்றதை விட மனதில் தேங்கி நின்றதுதான் அதிகம்.

1925ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அன்னா அக்மதேவா மீது அரசாங்கத்தின் நெரக்கடிகள் மறைமுகமாக எழுந்து கொண்டிருந்தத. அவரது எழுத்துக்களின் சிறு பகுதி கூட எந்தப் பத்திரிகையிலும் வெளிவராது தடை செய்யப்பட்டது. பிற அடிப்படையான விடயங்களிலும் விலக்களிக்கப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டவர் போல் ஆனார். தனிமையில் பீடிக்கப்பட்டிருந்த இவரை இவர் மீது காதல் கொண்டிருந்த போரிஸ் என்பவர் மணம் கொள்ள விரும்பிய போதிலும் அதை அவர் முற்றாக மறுத்து விட்டார். இன்று தனிமையின் நாட்களை ஏக்கங்களோடு கழித்துக் கொண்டிருக்கிறார். 

அக்மாதேவாவின் மகன் கைது செய்யப்பட்டதற்கான சரியான காரணம் அரசு எதிர்ப்பாளன் என்பதை விடவும், அவனுடைய தாயும் தந்தையும் கவிஞர்களாக இருந்தமைதான். இன்று அதே கவிதையின் மூலமாகவே தன் மகனையும் மீட்பதற்காகப் பேராடிக் கொண்டிருக்கிறாள். எனினும் அதில் எவ்விதப் பயனும் கிடைக்கவில்லை. தன் மகனை சந்திப்பதற்கான வாய்ப்பு அவருக்கு தொடர்ந்தேர்ச்சையாக நிராகரிக்கப்பட்டே வந்தது. 

அக்மதேவாவின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாது அவளை விட்டு ஒதுங்கிச் சென்ற தன்னுடை முதல் கணவன் நிக்கலோவ் குமிலேவ்  செல்லும் போது இரண்டு வயதான தன் மகனையும் நிக்கலோவ் குமிலேவின் பெற்றோர்கள் அவளது மகனை தாங்கள் வளர்ப்பதாகக் கூறி எடுத்துச் சென்று விட்டனர். அப்போது அவளது நியாயத்தையும், எதிர்ப்பையும் அப்போதைய நிலையில் யாருமே செவிமடுக்கவில்லை. அது கூட கைக்கெட்டாத கவலையானது. பத்து மாதம் கர்ப்பச் சுருளில் சுமந்த தனது மகனைப் பார்ப்பதற்காக மாதக் கணக்கில் தனது கணவனின் பெற்றோரின் வாசலின் முன்னால் காத்திருந்தாள். அது சாத்தியமற்றதொன்றாகவே ஆகிவிட்டது. 

அன்று அவர்களின் வீட்டின் முன்னால் காத்திருந்தவள், இன்று சிறைச்சாலை நுழைவாயிலில் காத்துக் கொண்டிருக்கிறாள். அதற்கும் இதற்கும் அவ்வளவுதான் வித்தியாசம்.

ஒரு கட்டத்தில் தாயின் பிரிவும், தன் தாய் பற்றிய நினைவும் அக்மதேவாவின் மகன் லெவ்வின் மனதில் நிலை கொள்ள தனது வாலிபத்தில் அவன் அவனது தாயை நாடி வந்து விட்டான். அப்போது அவளது வாழ்வு முழுமை பெற்று விட்டதாக உணர்கிறாள். அந்த நிலை மாறி அது ஒரு இருண்மையைக் கட்டமைத்து விட்டது.  

தனது மகன் லெவ்வை சிறையில் தவிக்க விடாமல் தடுப்பதற்காய் எத்தனையோ மீட்பு முயற்சிகளில் தொடர்ந்தேர்ச்சையாக செயற்பட்டுக் கொண்டிருந்த அக்மதேவாவிற்கு அதிபர் ஸ்டாலினின் மனைவியின் மரணம் திருப்புமுணையாக அமைந்தது. ஸ்டாலினின் மரணத்தின் பின் அவளது மகன் விடுதலை செய்யப்பட்டான். ஸ்டாலினை வாழ்த்தி அவள் எத்தனையோ கவிதைகளை எழுதிய போதிலும், அவனது அடக்கு முறைகளைப்பற்றியும் மறைமுகமாக எழுதி வந்திருந்தாள். அவை அவனது மரணத்தின் பின் வெளியாகத் தொடங்கியது. அக்மதேவாவின் கவிதைகளை லதா ராமகிருஷ்ணன் என்பவர் தமிழில் மொழி பெயர்த்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அவரை நினைவு கூறவும், பெருமை சேர்க்கும் விதத்திலும் ரஷ்ய அரும் பொருட்காட்சியகத்தில் அவருடைய புகைப்படம் தொங்க விடப்பட்டுள்ளது. மட்டுமன்றி அவரது பிறந்த தினத்தில் பல்வேறு கலாசார நிகழ்வுகள் நடாத்தப்பட்டு அவர் நினைவு+ட்டப்படுகிறார் என்பதோடு அவரது வாழ்க்கையும் படமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
முதற்தடவையாக தன் மகனுடன் நாட்டை விட்டு வெளியேறி லண்டனுக்குச் சென்றார். பிரிட்டனில் தொடர்ந்து அவலங்களையே நிரப்பிக் கொண்டிருந்த அக்மதேவாவிற்கு புத்தூணர்ச்சி ஊட்டப்பட்டது போலிருந்தது லண்டனின் உற்சாக வரவேற்புக்கள். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்து கௌரவித்தது. ஒட்டு மொத்த வாழ்வின் பெரும் பகுதியை துயரங்களோடு பகிர்ந்து கொண்டு, தனது எதிர்பார்ப்புகளில் சிறுபகுதியை மாத்திரம் அடைந்து கொண்ட அக்மதேவா 1966.03.05 ஆம் திகதி தனது 76ஆவது வயதில் பீட்டர்ஸ் பெர்க் நகரில் வைத்து மரணத்தை சுவைத்தாள். அப்போததான் அவரது எழுத்துக்களின் தாற்பரியம் பன்மடங்கு பரவலானது.  


...மேலும்

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்