/* up Facebook

Dec 17, 2014

உருமாற்றம்: சாலி வென் மாவோ


நான்கு வயது மைலின் தன்னுடைய பாட்டியின் வரவேற்பு அறையில் உள்ள சுவரில் ஓவியம் ஒன்றை வரைந்து கொண்டிருக்கிறாள். முதலில் அவள் ஒரு மனிதனின் உருவப்படத்தை வரைந்தாள். அதுவொரு ஆணின் முகமாக இருந்தது. அதன் பின் கால்களை வரைந்தாள். அவள் உடலை தவிர்த்துவிட்டாள், ஏனென்றால் அந்த கணத்தில் ஆண்களுக்கு உடல் இருக்கும் என்பதை மறந்து விட்டாள். – மார்புகள், முண்டப்பகுதிகள், தொப்பைகள் என எல்லாவாற்றையும். அவனுடைய தலையை மூடிக்கொள்ள ஒரு தொப்பி ஒன்றை வரைந்தாள். ஒரு இளவரசியை வெண்ணிற திருமண கவுனுடன் வரைந்தாள் – மணமகள். கையில் பலூனை வைத்துக் கொண்டிருக்கும் குழந்தை ஒன்றை வரைந்தாள். ஒரு கோப்பை நிறைய பீச் பழத்தை வரைந்தாள். அதன் பிறகு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை வரைந்தாள். செங்கற்கற்களால் இருந்தது அதற்குக் காரணம் மர வீடுகள் எளிதில் தீப்பற்றி விடும். படிகள் இருந்ததற்கு காரணம் அவள் ஒரு மாடி கொண்ட வீட்டைத் தவிர வேறு எதிலும் குடியிருந்ததில்லை.

அவள் ஓவியம் தீட்ட தன்னுடைய பால்பாயிண்ட் பேனாவை பயன்படுத்தினாள். அதன் கோடுகள் நிலையற்ற தன்மையில் இருந்தது. அவள் தன்னுடைய பாட்டியின் வெள்ளைச் சுவரில் அத்துமீறுகிறாள் என்பதும், விரைவில் அதை கண்டுபிடித்துவிடுவாள் என்பதும், அவளை அதற்கு குற்றவாளியாக ஆக்குவாள் என்பதையும் அறிந்தே இருந்தாள்.
காலடித்தடங்கள் வரவேற்பு அறையின் கீழ் கேட்கத் தொடங்கியது. அவை சத்தமிட்டு, தொப தொபவென்று, சிறு அதிர்வுடன் இருந்தது. மைலினுடைய மணிக்கட்டு ஒரு இடத்தில் நில்லாமல் கெந்தத் தொடங்கியது. அவள் தொடர்ந்து வரைய விரும்பினாள். அந்த இடத்தில் அவர்கள் எல்லோரும் வாழக்கூடிய ஒரு இடத்தை வரைய முயன்றாள். ஒரு குடும்பத்திற்கு மட்டுமே பொருந்திக் கொள்ளக்கூடிய இடம். தாந்தோன்றிகள், நிச்சயமாக முண்டமோ, தொப்பையோ மார்போ இல்லாதவர்கள். ஆனால் இவர்களுக்கு கால்களும் அழகிய சப்பாத்துக்களும் இருக்கிறது. இந்த தான் தோன்றித் தனமானவர்களுக்கு செங்கல்லாலும் பால்பாயிண்ட் பேனாவால் செய்யப்பட்ட மூன்று அடுக்குமாடி குடியிருப்பு இருக்கிறது.

தமிழில் மொழிபெயர்ப்பு : லிவின்
கதவு சத்தமிட்டுத் திறந்தது. அவள் வந்து கொண்டிருக்கிறாள். அவளுடைய பாட்டி சுவரை முழுதாக கூர்ந்து பார்க்கிறாள். அவளுடைய கண்கள் மணப்பெண்ணிலும், குழந்தை மேலும், உடலற்ற தொப்பியணிந்த ஆணையும் சுழற்றி சுழற்றி பார்க்கிறது. இந்த உருக்குலைந்தவர்கள் இறைஞ்சும் வேண்டுகோளுக்கு அவளால் அனுமதி தர இயலாது.

மாலினுக்கு தான் தண்டிக்கப்படப்போவது தெரியும். அவள் கண்களை மூடிக்கொண்டு பாட்டியிடம் வாங்க வேண்டிய அறையின் பொருட்டு காத்திருந்தாள்.. பெரு நகரத்தில் தன் பெற்றோருடன் வாழ்ந்த வீட்டை நினைத்துப் பார்த்தாள் – எப்படி ஒன்றாக மூவரும் தரையில் படுத்து உறங்குவார்கள். வார இறுதி நாட்களில் அவர்கள் சிறு பழக்கோப்பைகளுடன் முற்றத்தில் கூடுவார்கள். அவளால் தன் வீட்டுக்கும் பக்கத்து வீட்டிற்கும் உள்ள மதிலில் இருந்து வரும் சிரிப்பொலிகளை கேட்க முடியும். அந்த மதிலுக்கு அப்பால் வசிக்கு சூசூவுடன் தான் தினம் பள்ளிக்கு பேருந்தில் செல்வாள். அவர்கள் எல்லோரும் ஒன்றாக நாட்டுப்புறத்தில் வசிக்க வேண்டும் என்று விரும்பினாள். அவர்கள் எல்லாரும் இங்கே இருக்கிற நன்னீர்க் கிணற்றில் இருந்து வரும் தண்ணீரையே குடிக்கலாம் என்றும் இங்கே இருக்கிற இனிமையான காற்றையே சுவாசிக்கலாம். இங்கே இருக்கும் பீச் பழங்களைப் போலவே நன்கு பழுத்த பழங்களை சுவைக்கலாம், அவளுடைய ஓவியத்தில் இருந்த அதே மாதிரியான பீச் பழங்களைப் போல, திரட்சிக்கொண்டிருந்த அவளது கோடுகளாலும் முழுவதுமாக பழத்தைக் கைக்கொள்ள முடியவில்லை. ஜியானிங்கில் அவை எல்லாமும் இருந்தன. அவள் கண்களை மூடி மூச்சினை உள்ளிழுத்தாள். தீடீரென அவள் வரைந்த ஓவியம் அவளின் சின்னஞ்சிறு உடலை இன்னும் குறுக்கிக் காட்டியது. அவள் வரைந்த குடியிருப்பு அவள் உடலை நுழைக்கும் அளவு பெரிதாக இருந்தது.

”ஏன் இதை இப்படி செய்தாய்?” பாட்டி மெதுவாகக் கேட்டாள், அடுத்த கணம் அவள் முகம் சாந்தமடைந்து ”இது என்ன? ஏன் இந்த மனிதனுக்கு உடல் இல்லை.”
”ஒரு விபத்தில் உடலை இழந்துவிட்டான். அவனுக்கென்று ஓர் உடல் இல்லை” மைலின் பதில் சொன்னாள்.

urumarram

பல தாசாப்தங்கள் கழித்து, மைலின் ஜியானிங்கிற்கு திரும்பினாள். ஒரு கோப்பை நிறைய பீச் பழங்கள் வழுவழுப்பான அவள் பாட்டியின் படத்திற்கு அருகில் வைக்கப்பட்டிந்தது. மைலின் நறுமணப்புகையை ஏற்றிவிட்டு உடம்பற்ற தொப்பியணிந்த மனிதனை நினைத்துப் பார்த்தாள். அவள் பாட்டி இறந்த படுக்கைக்கு முன்னால் நேரடியாக நின்று கொண்டிருந்திருப்பான். அவள் படுத்தபடுக்கைக்கு போன பின்னர் அவனுடைய படம் அவளை தொந்தரவு செய்திருக்குமோ என்று வியந்தாள். பாட்டியின் எரிச்சலை கற்பனை செய்து பார்த்தாள். ஒருவனை அவனுடைய உடலில் இருந்து விரட்டுவது திகைக்கச் செய்வதாக இருந்திருக்கும். மைலினின் தாய் ஒருமுறை ’நான் என்னுடைய அம்மாவாக இருந்திருந்தால், இந்நேரம் இறந்திருக்க விரும்பியிருப்பேன். படுக்கையை விட்டு அவளால் அசைய முடிவதில்லை. என்ன மாதிரியான வாழ்க்கை அது? அது வாழ்வே இல்லை’ என்பதையும் எண்ணிப்பார்த்தாள்.

இனி வரும் காலத்தில், மைலின் உடலற்றுப்போன எண்ணற்ற ஆண்களை சந்திப்பாள். முண்டங்கள் இல்லை, மார்புகள் இல்லை, தொப்பையும் இல்லை, வெறும் கண்கள் அவளை உற்றுப்பார்க்கும், அவளை ஊடுருவும். ஊடுருவி இயல்பில் இல்லாத அருவருப்பும் நித்தியமும் கொண்டது. மைலின் இந்தக் கூற்றையே தனக்கும் சேர்த்து தன்னை கண்ணாடியின் முன்னிறுத்துப் பார்த்தாள். அவள் உடல் சிதைவுற்று இருந்தது. பீச் பழத்தைப் போல் இல்லாமல் உண்ணத்தகாத விறைப்பான தண்டைப் போல மாறியிருந்தது. அவள் தொடர்ந்து காதலித்தும் அவள் அறியாத உடல்களின் எடையை புறந்தள்ளி வந்தாள் – முண்டங்கள், விலாக்கள், வயிறுக்கு மேல் ஒழுங்கற்றுப் படர்ந்த மயிர்கள்.

அவளுடைய பாட்டி தன்னுடைய மகளுக்கு கிட்டப்பார்வை உள்ளவனையே திருமணம் செய்துகொள்ளும்படி எச்சரித்தாள். ஏனென்றால் அவனுடைய பார்வையால் அதிகம் தொலைவில் பார்க்க இயலாது. தன்னுடைய பார்வையின் புற எல்லைகளை உள்ளுக்குள் மட்டுமே விரித்திருப்பான் – குடியிருப்பு பகுதிகள் அவனால் பார்க்க இயலும் தூரம் மட்டும். ஆனால் மைலினால் அப்படியொரு எதிர்காலத்தை கற்பனை செய்ய இயலவில்லை. சூசூவுக்கும் அவளுக்கும் இருந்த சுவர் இருந்தபோதே வெகு நாட்கள் முன் அவள் அந்நகரை விட்டு வெளிக்கிளம்பி விட்டாள். ஜியானிங்கில் உள்ள பால்பாயிண்ட் குடியிருப்பையும் நீண்ட நாட்களுக்கு முன்னர் விட்டுவிட்டாள். அதில் இருந்த தான் தோன்றிகள் உணவு மேசையைச் சுற்றி நடனமாடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கற்பனையான சிரிப்பொலிகள் வீதிகளை நிறைத்துக் கொண்டிருக்கிறது.
நன்றி - எனில்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்