/* up Facebook

Nov 5, 2014

உசிலம்பட்டி சாதிக் கொலை ஒரு - அ.மார்க்ஸ்


(உசிலம்பட்டியில் அக் 1 இரவு விமலாதேவியின் உடல் எரித்துக் கொல்லப்பட்ட து குறித்த விரிவான கட்டுரையின் ஒரு பகுதி)

விமலா தேவி
ஒரு காதல் கதைஇப்படி சாதி வெறியால் தீய்க்கப்பட்ட வரலாற்றைச் சுருக்கமாக இப்படிக் காலக் கோடிடலாம்.

உசிலம்பட்டிதாலுகாவில் உள்ள போலிப்பட்டி என்பது ஒரு பள்ளர் சாதிக் கிராமம். சுமார் 110குடும்பங்கள் அங்கு உள்ளன. சுற்றிலும் சாதி உணர்வுக்குப் பெயர்போன காள்ளர்கிராமங்கள். சாதிப் பெருமையும், சாதி உணர்வும் இம் மக்கள் மத்தியில் சமீபகாலங்களில் இறுக்கமாக்கப்பட்டு வருவதை விளக்க வேண்டியதில்லை. போலிப்பட்டியைச்சேர்ந்த பாலச்சந்திரன் என்பவரின் மகன் திலீப்குமார் (21) அதே வட்டத்தைச் சேர்ந்தபூதிபுரம் 'சேம்பர்' எனப்படும் பகுதியில் செங்கற் சூளை ஒன்றின் உரிமையாளர்வீரண்ணன் என்பவரிடம் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். பூதிபுரம் முழுக்க கள்ளர்சாதியினர். வீரண்ணன் தேனம்மாள் தம்பதியின் மகள்தான் விமலா. ஆசிரியர் பயிற்சிமுடித்திருந்தார். இருவருக்கும் இரண்டாண்டுகளாகப் பழக்கம். இந்தக் காதல் வீரண்ணன்வீட்டாருக்குத் தெரியவந்தவுடன் பிரச்சினை தொடங்கியது.

ஜூலை 20,2014:விருதாசலத்திலிருந்து இப்பகுதியில் திருமணமாகி வந்து வசிக்கும் ஒரு பெண்ணின்ஆலோசனைப்படி திலீப் விமலாவை அழைத்துக்கொண்டு விருதாச்லம் வருகிறார்.

ஜூலை 22: இருவரும் விருதாசலத்திலுள்ள விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் அவர்களாகவே மாலை மாற்றிக்கொண்டு திருமணம் செய்துகொள்கின்றனர். விமலாவுக்கு திலீப் ஒரு தாலியையும்அணிவிக்கிறார். எனினும் அது பதிவு செய்யப்படவில்லை. திலீப் - விமலா தம்பதிதங்களின் திருமணத்திற்கு ஆதாரமாக தங்கள் செல் போனில் கூட ஒரு படம் எடுத்துக்கொள்ளவில்லை. (எதிர் காலத்தில் இதுபோல சாதியை மறுத்துக் காதல் திருமணம் புரியும்இளையோர் கவனத்தில் கொள்ள வேண்டிய அனுபவம் இது.) அன்றே புது மண இணையர்பாலக்காட்டுக்கு அருகில் உள்ள பட்டாம்பிக்குச் சென்று அங்குள்ள தெரிந்தவர் வீட்டில்புகல் அடைகின்றனர்.

ஜூலை 23:சாதிப் பெருமை குலைந்ததாகக் குமுறிய வீரண்ணன் (விமலாவின் தந்தை) விஷம் அருந்திமருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். இதற்கிடையில் விமலாவை திலீப் கடத்திச்சென்று விட்டதாக உசிலம்பட்டி காவல் நிலையத்தில் வழக்கொன்றும் பதியப்படுகிறது. போலிப்பட்டியில்வசிக்கும் பள்ளர் சமூகத்தினர் மத்தியில் அச்சம் தலை எடுக்கிறது.

ஜூலை 24:சுற்றியுள்ள ஆதிக்க சாதியினரை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டிய நிலையில் உள்ளஊராட்சிமன்றத் துணைத் தலைவரும் பள்ளர் சாதியைச் சேர்ந்தவருமான மதிவாணன் என்பவரைஅழைத்துக் கொண்டு உசிலம்பட்டிக் காவல்துறையினர் பட்டாம்பியை அடைகின்றனர். விமலா,திலீப் இருவரும் 19 வயதைத் தாண்டியவர்கள். மனம் ஒப்பி திலீபுடன் வெளியேறியவிமலாவைக் கடத்திச் சென்றதாக வழக்குப் பதிவு செய்ய இயலாது எனவும் அதனால் அவர்களைஉசிலம்பட்டிக் காவல்துறையினருடன் அனுப்ப இயலாது எனவும் பட்டாம்பியிலுள்ளமார்க்சிஸ்ட் கட்சித் தோழர்கள் மறுத்துள்ளனர். எனினும் காவலர்களும் மதிவாணனும்வழக்கொன்று தொடுக்கப்பட்டுள்ளதால் தாங்கள் இருவரையும் அழைத்துச் செல்ல வேண்டிஉள்ளதெனவும், நேராகச் சென்று, நீதிமன்ற நடுவர் முன் அவர்களை நிறுத்துவதாகவும்வாக்களிக்கின்றனர், நடுவர் முன் இருவரும் வயது வந்தவர்கள், விமலா முழுச்சம்மதத்துடன் திலீப்புடன் சென்றுள்ளார் என்பது தெரிவிக்கப்பட்டவுடன் அவர்களைப்பாதுகாப்புடன் அனுப்பி வைப்பதாகவும் கூறி அவர்கள் இருவரையும் அழைத்துச்செல்கின்றனர்.

ஜூலை 25;வாக்களித்தபடி இருவரையும் மாஜிஸ்ட்ரேட் முன் கொண்டு சென்று நிறுத்தாமல்உசிலம்பட்டி காவல்துறை டி.எஸ்.பி அலுவலகத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர். பொறுப்பிலிருந்தடி.எஸ்.பி சரவணகுமாரின் ஒப்புதலுடன் அன்றிரவு 7.45 வரை கட்டப் பஞ்சாயத்துநடைபெற்றுள்ளது. கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த சுமார் 300 பேர் திரண்டுள்ளனர். திலீப்பின்நியாயங்களைப் பேச அங்கு யாருமில்லை. உசிலம்பட்டி பகுதியில் சாதிவெறியைப் பரப்பிவரும் முருகன்ஜி, பார் கவுன்சிலைச் சேர்ந்த சுமார் 20 வழக்குரைஞர்கள் முதலானோர் திலீப்- விமலா இணையரைப் பிரிப்பதில் முன்னணியில் இருந்துள்ளார். சட்டத்தைக் காக்கவேண்டிய வழக்குரைஞர்கள் சாதியைக் காக்க வெறியுடன் திரண்டிருந்துள்ளனர். விமலாதன்னந்தனியாக அத்தனை பேருடனும் வாதிட்டுள்ளார். இத்தனை பேர் சேர்ந்து என் கணவரைத்தனியாக வைத்து மிரட்டுகிறீர்களே என வழக்குரைஞர்களிடம் கொதித்துப் பேசியுள்ளார்.இன்னொரு பக்கம் திலீப் கடுமையாக மிரட்டப்பட்டுள்ளார். இறுதியில் விமலாவின்கழுத்தில் திலீப் அணிவித்திருந்த தாலி கழற்றப்பட்டுள்ளது. அதற்குப் பின்னும் கூடஉடனடியாக அவர்கள் இருவரும் மாஜிஸ்ட்ரேட் முன் கொண்டு செல்லப்படவில்லை. தனியேபிரிக்கப்பட்ட விமலாவிடம் இரவு முழுவதும் அவரது அப்பா விஷம் அருந்திமருத்துவமனையில் இருப்பதெல்லாம் கூறப்பட்டு அவர் மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளார்.

ஜூலை 26: காலை9.45 மணி அளவில் அவர்களின் சாதிச் சுற்றம் சூழக் கொண்டு செல்லப்பட்ட விமலாமாஜிஸ்ட்ரேட் முன் நிறுத்தப்பட்டுள்ளார். அம்மாவுடன் செல்வதாக அவர் அங்கு கூற நேர்ந்துள்ளது.திலீப்பிடம் இருந்து பிரிக்கப்பட்ட விமலா, விரண்ணனின் வீட்டிற்கு அவரது சாதிக்காரர்களுடன்அனுப்பப்பட்டுள்ளார். இத்தனையும் டி.எஸ்.பி சரவணகுமார் அறிந்தே நடைபெற்றுள்ளது.

ஜூலை 27 -செப்டம்பர் 21: திலீப்குமாரை மதிவாணன் அழைத்துச் சென்றுள்ளார். இதற்கிடையில்திலீப்பின் கிராமமான போலிப் பட்டியில் தண்ணீர், மின்சாரம் முதலியன நிறுத்தப்பட்டு,ஒரு வீடு தீ வைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. கடும் கண்காணிப்புகள் இருந்தும்விமலா தொடர்ந்து திலீப்புடன் பேசிக்கொண்டும், வாய்ப்புக் கிடைக்கும்போதுவந்துவிடுவதாகவும் சொல்லிக் கொண்டு இருந்துள்ளார். திலீப்பிற்கு தீண்டாமை ஒழிப்புமுன்னணியின் மாவட்டச் செயலர் தோழர் செல்லக்கண்ணும் அவரது மனைவியும் ஜனநாயக மாதர்சங்கத்தின் மாவட்டச் செயலருமான தோழர் முத்துராணியும் ஆதரவாக இருந்துள்ளனர். விமலாவின்வீட்டில் இப்படி எல்லோருக்கும் தெரிய "சாதிப் பெருமை" குலைவதற்குக்காரணமான பெண்களை என்ன செய்வார்களோ அது விமலாவுக்கும் நடந்துள்ளது. விமலா அவர்சாதிக்குள் மறுமணத்திற்குக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். இரு குழந்தைகளுக்குத்தந்தையான தேனி வருச நாட்டைச் சேர்ந்த சதீஷ் குமார் என்பவருக்கு விமலாவை 50 பவுன்சீருடன் திருமணம் செய்விக்க ஏற்பாடுகள் நடந்துள்ளன. விமலாவும் அதற்கு ஒத்துழைப்பதுபோல நடித்து எப்படியாவது அவர்களின் பிடியில் இருந்து வெளியேற முடிவு செய்து இதைஇரகசியமாக திலீப்பிற்கும் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 22,2014: சதீஷுக்கும் விமலாவுக்கும் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.

செப் 23: விமலா'இணங்கி வருவதை'க் கண்ட அவரது பெற்றோர் இருவரையும் துணிமணி எடுத்து வர வத்தலகுண்டுஅனுப்பியுள்ளனர். பயணத்தில் இருந்த போதே சதீஷின் செல் போனில் திலீப்பைத் தொடர்புகொண்ட விமலா, அவரை வத்தலகுண்டு கடைத்தெருவுக்கு வரச் சொல்லியுள்ளார். திலீப்பைக்கண்டவுடன் ஓடிச் சென்ற விமலா அவருடன் கைகோர்த்துக் கொண்டு, "இவர்தான் என்கணவர். நான் இவருடன்தான் போவேன். உன்னோடு வர முடியாது" என எல்லோரும் அறிய சதீஷிடம்உரைத்துள்ளார். சதீஷ் அவரை இழுக்க, திலீப் அதைத் தடுக்க, அங்கு ஒரு கைகலப்புஉருவாகி அவர்கள் அருகிலிருந்த வத்தலகுண்டு காவல் நிலையத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். அங்கு பணியில் இருந்த எஸ்.ஐ.ஆனந்தி கள்ளர் சாதியைச்சேர்ந்தவர். மிக்க சாதி வெறியுடன் அவர் சதீஷுக்கு ஆதரவாக திலீப்பையும் விமலாவையும்திட்டியுள்ளார். திலீப்பை ஆடைகளைக் களைந்து வெறும் உள்ளாடையுடன் உட்காரவைத்துள்ளார். சாதி சொல்லித் திட்டியுள்ளார். இதற்கிடையில் செய்தி அறிந்தமார்க்சிஸ்ட் கட்சியின் உள்ளூர்த் தலைவரும் செல்லக்கண்ணுவின் சகோதரருமான காசிமாயன்சில தோழர்களுடன் சென்று தலையிடவே, வேறு வழியின்றி ஆனந்தி, விமலாவின் உடலில் இருந்தஅனைத்து நகைகளையும் கழற்றி வாங்கிக் கொண்டு திலீப்புடன் அவரை அனுப்பியுள்ளார்.மோட்டார் சைக்கிளில் சென்ற அவர்கள் சற்றுத் தொலைவில் மறிக்கப்பட்டு மீண்டும்வத்தலக்குண்டு காவல் நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர். விமலாவை திலீப்பிடமிருந்துபிரித்த எஸ்.ஐ ஆனந்தி அவரை மதுரை ஊமைச்சிகுளத்திலுள்ள அரசு பெண்கள் விடுதிக்குஅனுப்பியுள்ளார். எந்தக் காரணம் கொண்டும் திலீப்பும் அவருக்கு வேண்டியவர்களும்வந்தால் விமலாவைச் சந்திக்க அனுமதிக்கக் கூடாது என விடுதிக் காப்பாளருக்குஅறிவுறுத்தப்பட்டது.

செப் 24:தோழர்கள் செல்லக்கண்ணும் முத்துராணியும் காப்பகத்திற்குச் சென்று விமலாவைச்சந்திக்க அனுமதி கோரியுள்ளனர். சன்னல் வழியாக அவர்களைக் கைகாட்டி அழைக்க விமலாமுயன்றும் உறவினர் அல்லாத யாருடனும் பேச அனுமதிக்க முடியாது எனச் சொல்லி அவர்களை விடுதிக்காப்பாளர் அகற்றியுள்ளார்.

செப் 25:செல்லக்கண்ணும் திலீப்பும் காப்பகத்திற்குச் சென்று விமலாவைச் சந்திக்க அனுமதிகோரியுள்ளனர். தான் விமலாவின் கணவன் எனக் கோரி திலீப்  அனுமதி வேண்டியுள்ளார். நீ கணவன் என்பதற்கு என்னஆதாரம் வைத்துள்ளாய், ஒரு பதிவுச் சான்றிதழ் அல்லது திருமணப் புகைப்படம் ஏதாவதுஒன்றைக் காட்டு எனக் காப்பாளர் கோரியபோது திலீப் திகைத்துள்ளார். செல்லக்கண்ணும்திலீப்பும் ஏமாற்றத்துடன் விமலாவைப் பார்க்காமலேயே திரும்பினர்.

செப் 26:ஊராட்சிமன்றத் தலைவர் அமைதி என்பவர் உட்பட விமலாவின் சாதிக்காரர்கள் விமலாவை அவரதுவீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

செப் 26 - செப்30: வீட்டில் விமலா சிறை வைக்கப்பட்டுள்ளார். சதிஷுக்கும் அவருக்கும் திருமணஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றன. திருமண அழைப்பிதழ் அச்சாகி வந்தது. அடுத்த நாள்முதல் வினியோகம் செய்யப்பட ஏற்பாடாகியது. அரசு அளிக்கும் திருமண உதவித் தொகைக்கும்மனுச் செய்யப்பட்டது. எல்லாம் சிறை வைக்கப்பட்ட விமலாவின் கண்முன் நடந்தன.திலீப்புடன் அவர் தொடர்பு கொள்ள இயலாமல் எந்ந்நேரமும் கண்காணிக்கப்பட்டார்.இதற்கிடையில் திலீப்பின் செல்பேசி தொலைந்து போக அவருக்கு செல்லக்கண்ணு புதிய செல்ஒன்றை புது எண்ணுடன் வாங்கித் தந்துள்ளார். விமலாவின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்என ஊகித்த செல்லக்கண்ணு மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறைக்கண்காணிப்பாளர் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு விமலாவைக் காப்பாற்றக்கோரி பதிவுத் தபால்கள் அனுப்பியுள்ளார்.

அக்டோபர் 1: நள்ளிரவில் வீரண்ணன் மற்றும்உறவினர்கள் அங்குள்ள பிணம் எரிப்பவர்களை வரவழைத்து  இரவோடிரவாக விமலாதேவியின் உடலை தூக்கிச் சென்றுஅங்குள்ள சுடுகாட்டில் எரித்துச் சாம்பலாக்கினர். விமலா மின் காற்றாடியில்தூக்கிலிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகச் செய்தி பரப்பப்பட்டது

நன்றி - அ.மார்க்ஸ்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்