/* up Facebook

Sep 16, 2014

பதுளையில் கொன்று புதைக்கப்பட்ட தமிழ் ஆசிரியை; நடந்தது என்ன?!

கடந்த இரு வாரங்­க­ளாக காணாமல் போயி­ருந்த பசறை கோண­கலை,தமிழ் மகாவித்­தி­யா­ல­யத்தின் ஆசி­ரியை அ.சரஸ்­வ­தியின் சடலம் மீதும்­பிட்­டிய பிர­தே­சத்தில் உள்ள சந்­தேக நப­ரான பூசா­ரியின் வீட்­டுக்கு முன்னால் இருந்து நேற்று தோண்டி எடுக்­கப்­பட்­டது.பதுளை நீதிவான் நீதி­மன்றின் நீதி­பதி மகே­ஷிகா பிரி­ய­தர்­ஷி­னியின் உத்­த­ர­வுக்கு அமைய அவரும்,பதுளை வைத்­தி­ய­சா­லையின் சட்ட வைத்­திய அதி­காரி, பிர­தே­சத்­துக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­கா­ரி­களின் முன்­னி­லையில் இந்த சடலம் தோண்டி எடுக்­கப்­பட்டு பிரேத பரி­சோ­த­னை­க­ளுக்­காக
பதுளை வைத்­தி­ய­சா­லைக்கு அனுப்­பப்­பட்­டுள்­ளது.

நேற்­றைய தினம் குறித்த புதைக் குழி­யா­னது சந்­தே­க­ந­ப­ரான பூசா­ரியின் வாக்கு மூலத்தை மையப்­ப­டுத்தி நீதிவான் பிறப்­பித்த உத்­த­ர­வுக்கு அமைய தோண்­டப்­பட்ட போது அதனை பார்­வை­யிட மீதும் பிட்­டிய பிர­தே­சத்தில் சுமார் 3000 இக்கும் அதி­க­மான மக்கள் ஸ்தலத்தில் ஒன்­று­கூ­டினர். ஆசி­ரி­யையின் சட­ல­மா­னது புதைக் குழிக்குள் இருந்து பொலி­ஸாரால் தோண்டி எடுக்­கப்­பட்­டதை தொடர்ந்து அங்கு கூடிய மக்கள் , சந்­தேக நப­ரான பூச­கரால் பூஜை­க­ளுக்­காக பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்த மீதும்­பிட்டி வீட்டின் மீது தாக்­குதல் நடத்­தி­யுள்­ளனர். பொது­மக்கள் குறித்த வீட்டின் மீது கல்­வீச்சு தாக்­கு­தலை நடத்­தி­ய­துடன் அதனை முற்­றாக சேத­ம­டையச் செய்­தனர். எனினும் குறித்த கல்­வீச்­சுக்­க­ளையும் தாக்­கு­தல்­க­ளையும் பொலிஸார் கட்­டுப்­பட்­டுக்குள் கொண்­டு­வந்­தனர்.

இதே­வேளை சாந்தி பரிக்­காரம் ஒன்­றினை மேற்­கொள்ள குறித்த ஆசி­ரியை பூச­கரால் பூஜை நடத்­தப்­பட்­டு­வரும் மீதும்­பிட்டி வீட்­டுக்கு சென்­ற­போதே அவர் கொலை செய்­யப்­பட்­டுள்­ள­தாக பசறை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி சிரேஷ்ட பொலிஸ் பரி­சோ­தகர் ரீ.எம்.ரத்­னா­யக்­கவின் ஆலோ­ச­னை­களின் பிர­காரம் மேற்­கொள்­ளப்­பட்­டு­வரும் இந்த சம்­பவம் தொடர்­பான விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அஜித் ரோஹண கேச­ரிக்கு தெரி­வித்தார்.

இந் நிலையில் குறித்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­து­வ­ரு­வ­தா­கவும் பிரேத பரி­சோ­தனை அறிக்கை, சட்ட வைத்­திய அதி­கா­ரியின் அறிக்கை ஆகி­ய­வற்றை வைத்து விசா­ர­ணைகள் புதிய திருப்­பத்தை அடையும் எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.
கடந்த முதலாம் திகதி பாட­சா­லைக்கு கற்­பித்தல் நட­வ­டிக்­கை­க­ளுக்­காக சென்ற ஆசி­ரியை காணாமல் போயுள்­ள­தாக ஆசி­ரி­யை­யான அ.சரஸ்­வ­தியின் கண­வ­ரினால் பசறை பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு அளிக்­கப்­பட்­டது.

இதன் படி அது தொடர்­பான விசா­ர­ணைகள் ஊவா­வுக்கு பொறுப்­பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்­ணான்டோ, பது­ளைக்கு பொறுப்­பான சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் சந்­தன கலப்­பதி, உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ஏ.டி.பிரே­ம­தி­லக ஆகி­யோரின் மேற்­பார்­வையின் கீழ் பசறை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி ரீ.எம்.ரத்­னா­யக்­கவின் ஆலோச்­ச­னை­க­ளுக்கு அமைய உப பொலிஸ் பரி­சோ­தகர் டப்­ளியூ எம். தயா­னத்த உள்­ளிட்ட குழு­வி­னரால் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தது.

இந் நிலையில் காணாமல் போன ஆசி­ரியை அ.சரஸ்­வதி காணாமல் போவ­தற்கு முன்னர் இறு­தி­யாக மீதும்­பிட்­டிய பிர­தே­சத்தில் நாக பூஜை­களை நடத்தும் பூசகர் ஒரு­வ­ருடன் தொலை­பே­சியில் கதைத்­துள்­ளமை நீதி­மன்ற அனு­ம­தி­யுடன் மேற்­கொள்­ளப்­பட்ட அவ்­வா­சி­ரி­யையின் தொலை­பேசி இலக்க ஆய்­வு­க­ளி­லி­ருந்து தெரி­ய­வந்­தது. இந்த நிலையில் குறித்த பூச­கரை பொலிஸ் நிலையம் வரு­மாறும் வாக்கு மூலம் ஒன்று பதிவு செய்­ய­வேண்டும், எனவும் பசறை பொலிஸார் அந்த பூச­க­ருக்கு அறி­வித்­தனர். இதனை அடுத்து பொலிஸ் நிலையம் வரு­வ­தாக குறிப்­பிட்ட பூசகர் அங்கு வரும் வழியில் பஸ் வண்டி ஒன்றின் முன் பாய்ந்து தற்­கொ­லைக்கு முயற்­சித்­துள்ளார்.

இதனை அடுத்து அவரை உட­ன­டி­யாக பதுளை வைத்­தி­ய­சா­லியில் அனு­ம­தித்த பொலிஸார் அவரை கைது செய்­தனர். பூச­க­ரிடம் வைத்­தி­ய­சா­லையில் வைத்து பொலிஸார் விஷேட வாக்கு மூலம் ஒன்றை பதிவு செய்­தனர். அந்த வாக்கு மூலத்தில் ஆசி­ரி­யையை தானே கொன்­ற­தா­கவும் அவரை மீதும்­பிட்­டிய வீட்டின் முன்னால் குழி தோண்டி புதைத்­துள்­ள­தா­கவும் பூசகர் குறிப்­பிட்­டுள்ளார். இதனை தொடர்ந்து விடயம் தொடர்பில் பதுளை நீதிவான் நீதி­மன்­றுக்கு பொலி­ஸாரால் அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்­டது. இத­னை­ய­டுத்து வைத்­தி­ய­சா­லைக்கு சென்ற நீதிவான் தர்­ஷிகா பிரி­ய­தர்­ஷினி பூச­கரை எதிர்­வரும் 27 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ரcவு பிறப்­பித்­ததை அடுத்து சிறை அதி­கா­ரி­களின் பாது­காப்பின் கீழ் அவர் சிகிச்சை பெற்­று­வ­ரு­கின்றார்.

இதன் பின்­னரே அந்த புதை குழியை சனிக்­கி­ழமை தோண்­டு­மாறு நீதிவான் கடந்த வெள்­ளி­யன்று உத்­த­ரவு பிறப்­பித்தார். எனினும் சட்ட வைத்­திய அதி­கா­ரியின் சேவையை பெற்­றுக்­கொள்­வதில் ஏற்­பட்ட சிக்கல் கார­ண­மாக அது நேற்­று­வரை ஒத்­தி­வைக்­கப்­பட்டு நேற்று அந்த நட­வ­டிக்­கைகள் இடம்­பெற்­றன. பொலிஸார் மேற்­கொண்­டுள்ள விசா­ர­ணை­களின் பல­னாக ஆசி­ரியை காணாமல் போன­தாக கூறப்­படும் கடந்த முதலாம் திகதி ஆசி­ரியை அ.சரஸ்­வதி பாட­சாலை முடிந்­ததும் பசறை நக­ருக்கு வந்­துள்­ளமை உறு­தி­யா­கி­யுள்­ளது. இது தொடர்பில் மாணவர் ஒரு­வரும் ஆசி­ரியை ஒரு­வரும் பொலி­ஸா­ருக்கு சாட்­சி­ய­ம­ளித்­துள்­ளனர். பின்­னரே அவர் மீதும்­பிட்­டிய பகு­தியில் உள்ள பூச­கரின் பூஜை­மை­ய­மான வீட்­டுக்கு சென்­றுள்ளார். இது தொடர்பில் பூச­கரின் தாய் பொலி­ஸா­ருக்கு சாட்­சியம் வழங்­கி­யுள்ளார். இதனை அடுத்தே கொலை இடம்­பெற்­றி­ருப்­ப­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். ஆசி­ரியை அணிந்­தி­ருந்த தாலி, மாலை, வலையல் உள்­ளிட்ட நகைகள் மற்றும் பணத்­துக்­காக இந்த கொலை­யினை பூசகர் மேற்­கொண்­டி­ருக்க வேண்டும் என பொலிஸார் சந்­தே­கிக்­கின்­றனர்.

சந்­தேக நப­ரான பூசகர் பசறை 10 ஆம் கட்டை பகு­தியில் உள்ள தந்து வீட்­டி­லேயே மனைவி, பிள்­ளை­யுடன் வாழ்ந்து வந்­துள்­ள­மையும் மீதும்­பிட்­டி­யவில் பூஜை­மை­ய­மா­கவே அந்த வீட்­டினை பயன்­ப­டுத்­தி­யுள்­ளதும் விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது. பூசகர் வசித்த பசறை 10 ஆம் கட்டை பகுதி வீட்­டுக்கு அரு­கி­லேயே ஆசி­ரியை சரஸ்­வ­தியும் வசித்து வந்­துள்ள நிலையில் பூச­கரின் பிள்­ளை­யையும் அவரே பாட­சா­லைக்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர். இந் நிலையில் பூசகரை முன்னரேயே நன்கு அறிந்திருந்த ஆசிரியை தனது ஆறு வயது பிள்ளையின் நோய் ஒன்று தொடர்பில் சாந்தி பரிகாரம் ஒன்றுக்காகவே குறித்த தினம் மீதும்பிட்டிக்கு சென்றுள்ளமையும் அதன் போதே கொலை இடம்பெற்றுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளன. கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கூரிய ஆயுதங்கள், ஆசிரியையினுடையது என சந்தேகிக்கப்படும் கைப்பை, கையடக்க தொலைபேசி உள்ளிட்டவையும் மீதும்பிட்டிய பூஜை வீட்டிலிருந்து பொலிஸாரால் ஏற்கனவே மீட்கப்பட்டன. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

நன்றி  - http://tamilleader.com/?p=41267

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்