/* up Facebook

Sep 30, 2013

ஸ்ரீலங்கா ஆண்களும் மற்றும் பாலியல் வல்லுறவும்: ஸ்ரீலங்கா ஊடகங்கள் தவறவிட்டவைகள் - சொலயில் நொயார்


ஐநா மேற்கொண்ட புதிய ஆய்வின்படி ஆசிய பசுபிக் பிராந்தியத்திலுள்ள கால்வாசி ஆண்கள் தாங்கள் பாலியல் வல்லுறவு மேற்கொண்டிருப்பதை ஏற்றுக் கொண்டுள்ளார்களாம், த கார்டியன் பத்திரிகையில் காணப்பட்ட இந்த கட்டுரையை நான் மிகுந்த ஆர்வத்துடன் வாசித்தேன். இந்த ஆய்வில் பங்குபற்றிய நாடுகளில் ஸ்ரீலங்காவும் ஒன்றானபடியால், நான் பல இடங்களில் தேடிப்பார்த்து உள்ளுர் ஊடகங்களில் வெளிவந்த சில கட்டுரைகளைக் கண்டேன், அவற்றில் ஒன்று 14 விகிதமான ஸ்ரீலங்கா ஆண்கள் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுள்ளதை ஒப்புக் கொண்டுள்ளார்கள் என்கிற தலைப்பில் வெளியாகியிருந்தது.

டெய்லி மிரர். சிலோன் ருடே உட்பட்ட பிரதான நீரோட்டத்தில் கலந்துள்ள அச்சு ஊடகங்கள் அந்த கட்டுரையை நேரடியாக பி.பி.சி யில் இருந்தே பிரதி செய்திருந்தன, மற்றும் இந்த பயங்கரமான புள்ளிவிபரங்களை அவை நேரடியாக பெற்றுக்கொள்ள முயற்சிக்காதது எனக்கு ஆச்சரியமளித்தது.

இந்த ஆய்வினை தொடர்ந்து விடயங்களை சேகரிக்க அவர்கள் அக்கறை எடுத்திருந்தால் அவர்களால் புதையுண்டு போயிருந்த மேலும் பல பயனுள்ள தகவல்களை வெளிக் கொணர்ந்திருக்கலாம், மற்றும் இந்த ஆய்வில் மீதமுள்ள தொந்தரவு மிக்க கண்டுபிடிப்புகளைத் தொடர ஏன் முயற்சி மேற்கொள்ளப்படவில்லை என்பதை என்னால் கற்பனை செய்ய முடியவில்லை. பிரதான ஊடகங்கள் பல்வேறு வடிவங்களிலான வன்முறைகளுக்காக நன்கு அறியப்பட்ட குற்றவாளிகளுக்கான ஆரோக்கியமான உணவு போன்ற நேர்காணல்கள் மூலம் நமக்கு அவற்றை அறியத்தருவதுபோல அதற்கு சமமான முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களையும் சமநிலைப்படுத்தி வெளியிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

இந்த ஆய்வில் பிரத்தியேகமான ஸ்ரீலங்கா அறிக்கை ஒன்று காணப்படுகிறது. அது ஸ்ரீலங்காவில் ஆழமாகக் கண்டுபிடிக்கப் பட்டவைகளைப்பற்றி பார்வையிடுகிறது. ஸ்ரீலங்கா அறிக்கையை வாசிக்கும்போது ஐநா பிராந்திய ஆய்வில் உள்ள வெளிப்படையான தவறு தெளிவாகத் தெரிகிறது. இந்த ஐநா ஆய்வு ஒன்பது நாடுகளில் நடத்தப்பட்டது, மற்றும் சில நாடுகளில் தனித்துவமான சில பிரதேசங்களில் மட்டுமே நடத்தப்பட்டது. ஐநா அறிக்கை தெரிவிப்பது அறிக்கையில் தரப்பட்டிருக்கும் கண்டுபிடிப்புகள் ஒன்பது ஆய்வுத் தளங்களை அடிப்படையாக கொண்டவை. இவை தேர்ந்தெடுக்கப்பட்ட தளங்களை பிரதிநிதிப்படுத்தும் மாதிரிகளாக உள்ளன. மாதிரிகள் தேசியமானவைகள் என்பதை தவிர.மற்றும் பெரும்பாலான தளங்கள் தேசிய ரீதியில் பிரதிநிதித்துவப் படுத்தப்படாததுடன் மற்றும் முழு ஆசிய பசுபிக் பிராந்தியத்தையும் பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் வடிவமைக்கப்படவில்லை, இருந்தபோதிலும் மாதிரிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட தளங்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாக உள்ளன. இதன் கருத்து என்னவெனில் சிலநாடுகளில் அந்த ஆய்வு சில குறிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நடத்தப்பட்டுள்ளன மற்றும் அந்த கண்டுபிடிப்புகளை முழு நாட்டுக்கும் அல்லாமல் குறிப்பிட்ட அந்த இடங்களில் மட்டுமே பிரயோகிக்க முடியும்.

ஐநா அறிக்கையில் காணப்படும் ஸ்ரீலங்காவை பற்றிய கண்டுபிடிப்புகள் தேசிய ரீதியானவை என வழங்கப்பட்டுள்ளன, - அதன் கருத்து அந்தக் கண்டுபிடிப்புகள் முழு ஸ்ரீலங்காவுக்கும் பொருத்தமானவை என்னபதாகும். எனவே 14.5 விகிதமான ஸ்ரீலங்கா ஆண்கள் பாலியல் வல்லுறவு புரிந்ததை ஒத்துக்கொண்டுள்ளார்கள் என்பது சரி. எனினும் இதில்தான்; பிரச்சினை தங்கியுள்ளது - ஸ்ரீலங்காவில் ஆய்வு கொழும்பு, அம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, மற்றும் நுவரெலியா ஆகிய நான்கு மாவட்டங்களில் மட்டுமே நடத்தப்பட்டன மற்றும் ஸ்ரீலங்கா அறிக்கை விசேடமாக குறிப்பிடுவது ஷஷஇந்த மாதிரி வடிவத்தில் இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் அந்த நான்கு மாவட்டத்தில் வாழும் 18 மற்றும் 49 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களை உள்ளடக்கிய முழு சனத்தொகைக்கும் பொதுமைப்படுத்த முடியும் எனறு. இந்த ஆய்வு மதிப்புமிக்க நுண்ணறிவை நமது அறிவுக்கு வழங்கிய போதிலும்,ஆண்கள் மற்றும் பெண்களின் நடத்தைகள் மற்றும் பழக்கங்கள் ஆண்மை, பாலினம்,மற்றும் பாலினம் சார்ந்த வன்முறைகள் போன்ற விடயங்களை இந்த தனித்துவமான கண்டுபிடிப்புகள் மூலம் முழு ஸ்ரீலங்கா சனத்தொகைக்கும் சேர்த்து பொதுமைப்படுத்த முடியாது

என்னுடைய வலியுறுத்தல்

ஒரு சிறிய தவறை வைத்துக்கொண்டு நான் பிழை கண்டுபிடிப்பதாக தோன்றக்கூடும், ஆனால் அது அப்படியல்ல – தரவுகளை வழங்குவதில் ஏற்பட்ட மிகப் பெரும் தவறு அது, ஒரு தேசிய தரவாக முழு ஸ்ரீலங்காவுக்கும் அதை பிரயோகிக்க கூடாது. அந்த ஆய்வு முழு 25 மாவட்டங்களிலும் நடத்தப்பட்டிருக்குமானால் 14.5 விகிதமான எண்ணிக்கையானது மிகவும் சுலபமாக உயர்வடையவோ அல்லது சரிவடையவோ முடியும் - மற்றும் இது மிகவும் ஆபத்தானது.

14.5 விகிதம் எனக் கூச்சலிடும் கற்பழிப்பு எண்ணிக்கையில் துரதிருஸ்டவசமாக தொலைந்து போனது அந்த தரவுடன் துணைபோகும் கணிசமானளவு கண்டுபிடிப்புகள். ஸ்ரீலங்கா அறிக்கை ஒரு குழப்பமான ஒன்றாகவும் அதேசமயம் ஒரு பயனுள்ள வாசிப்பாகவும் உள்ளது, ஏனெனில் அது வெளிப்படுத்துவது ஆண் பெண் ஆகிய இருபாலாரினதும் பழக்கவழக்கங்கள் மற்றும் மனப்போக்குகள் நீண்ட காலமாக பாலினத்தை அடிப்படையாக கொண்ட வன்முறைகள் மற்றும் பாலினம் தொடர்பான திட்டங்களில் அலட்சியப்படுத்தப்பட்டு வந்துள்ளதை.

இந்த கண்டுபிடிப்புகள் பிரதானமாகவும் கீழே உள்ளவைகளை உயர்த்திக் காண்பிக்கின்றன.  குற்றம் புரிபவரின் வரலாற்றுடன் உள்ள தொடர்பு, நெருங்கிய பங்காளிகளின் வன்முறை, மற்றும் பெண்களின் பழக்கவழக்கங்கள், மற்றும் சில முக்கிய கண்டுபிடிப்புகளான பாலினத்தை அடிப்படையாக கொண்ட வன்முறைகள் பற்றிய திட்டங்கள் மற்றும் பாலியல் தொடர்பான கொள்கைகள், திட்டங்கள் மற்றும் செயற்பாடுகளும் விவாதிக்கப்பட வேண்டும்.

ஸ்ரீலங்கா பற்றிய சில முக்கியமான கண்டுபிடிப்புகள் உள்ளடக்கியிருப்பவவை:-

இந்த ஆய்வறிக்கையில் கலந்துகொண்ட 17 விகிதமான ஆண்கள் தங்கள் பங்காளிகள் மற்றும் பங்காளிகள் அல்லாத பெண்கள் மற்றும் யுவதிகள் உட்பட பெண்ணினத்துக்கு எதிரான கற்பழிப்பு உட்பட எந்தவொரு பாலியல் வன்முறைகளில் ஈடுபடவில்லை என அறியப்பட்டுள்ளது. 60.5 விகிதமான இந்த ஆண்கள் முதலில் பாலியல் வன்முறையில் ஈடுபடும்போது அவர்கள் 20 – 29 வயதுக்கு இடைப்பட்டவர்களாக இருந்தார்கள். 28 விகிதமானவர்கள் 15 – 19 வயதுக்கு இடைப்பட்டவர்களாக இருந்தார்கள்.

ஐவரில் ஒருவர்(20 விகிதம்) 18 – 49 வயதுக்கு இடைப்பட்ட துணையுள்ள ஆண்கள் தங்கள் நெருங்கிய துணைக்கு எதிராக பாலியல் வன்முறை புரிந்த குற்றவாளிகளாக உள்ளனர்.

மூவரில் ஒருவர் (36 விகிதம்) துணையுள்ள ஆண்கள் உடலியல் ரீதியான அல்லது பாலியல் ரீதியான வன்முறையினை தங்கள் நெருங்கிய துணைகளுக்கு எதிராக புரிந்துள்ளதாக அறியப்படுகிறது.

பாலியல் வன்முறையின் பொதுவான வடிவம் அவளது விருப்பத்துக்கு மாறாக தனது துணையுடன் பாலியல் தொடர்பு கொள்வதை வற்புறுத்துவது ஆகும்.

பாலியல் வன்முறைக்கான ஆண்களின் உள்நோக்கம்? 66.5 விகிதமானவர்கள் அது தங்கள் பாலியல் உரிமை எனத் தெரிவித்தார்கள், 19.6 விகிதமானவர்கள் அது தங்களின் வேடிக்கைக்காக செய்வதாக ஏனெனில் அவர்கள் சலிப்படைந்துள்ளதாக தெரிவித்தார்கள். 13.4 விகிதமானவர்கள் கோபத்தின் வெளிப்பாடாக அல்லது தண்டனை வழங்குவதற்காக செய்வதாக தெரிவித்தார்கள்.

ஆண்கள் சிறு பிராயத்தின்போது உணர்வு பூர்வமாக, பாலியல் மற்றும் உடல் ரீதியாக முறைகேடான அனுபவத்தை பெற்றிருந்தால் அத்தகையான முறைகேடான அனுபவத்தை பெற்றிராத ஆண்களைவிட 1.7 முதல் 2 வரையான மடங்கு அதிகம் தங்கள் நெருங்கிய பெண்துணைக்கு எதிரான வன்முறையில் பழகும் சாத்தியம் உள்ளது.

நெருங்கிய துணைக்கு எதிரான வன்முறை அறிக்கையின் கீழ் - வெறும் 13 விகிதமான பெண்கள், நெருங்கிய துணைக்கு எதிரான வன்முறையை அனுபவித்துள்ளதுடன் 8 விகிதமான பெண்கள் பங்காளிகள் அல்லாத பிற ஆண்களினால் வன்முறைக்கு ஆளாகியுள்ளார்கள். இந்த வன்முறை பற்றி காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

55 விகிதமான ஆண்களுக்கு எதிராக மூன்றில் இரண்டு பெண்கள் மாதிரி; (67 விகிதம்) உறுதிப்படுத்தியுள்ளது எந்த கற்பழிப்பு வழக்கிலும் ஒருவர் கேட்கவேண்டிய கேள்வி பாதிப்புக்கு உள்ளானவர் நம்பிக்கைக்கு உரியவரா அல்லது கெட்ட பெயருடையவரா என்பதையே.

சமூக மற்றும் கலாச்சார நடவடிக்கைகளில் ஆண்களைக் காட்டிலும் பெண்களின் நடவடிக்கைகள் ஒரு ஆழமான ஏற்றுக்கொள்ளலை பிரதிபலிக்கின்றன,அது பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை தோற்றுவிக்கிறது. உதாரணமாக 41 விகிதமான ஆண்களுடன் ஒப்பிடுகையில் 58 விகிதமான பெண்கள் குடும்பத்தை ஒற்றுமையாக வைத்திருப்பதற்காக பெண்கள் வன்முறைகளை சகித்துக்கொள்ள வேண்டும் என நம்புகிறார்கள்.

அதேவேளை இந்த விவரங்கள் ஸ்ரீலங்காவிலுள்ள எல்லா ஆண்களையும் மற்றும் பெண்களையும் பிரதிநிதிப்படுத்தவில்லை, ஆனால் இந்த தரவு பாலியல் அடிப்படையான வன்முறையில் நாங்கள் எங்கே நிற்கிறோம் என்பதைப்பற்றிய ஒரு அனுமானத்தை பெறுவதற்கு அதிக பயனுள்ளதாக இருக்கும் மற்றும் அந்த நடவடிக்கைகள் அதே வழியில் வளர்வதற்கும் மற்றும் தொடர்வதற்கும் அது அனுமதிக்கும். தரவுகள் இயக்கும் ஊடகவியல், மற்றும் தரவுகள் இயக்கும் திட்டங்கள் என்பனவும் மிகவும் அவசியமாக இருப்பதைப்போல பாலியல் அடிப்படையான வன்முறை விடயங்களில் பணியாற்றும் நிறுவனங்களினால் அவை அநேகமாக அலட்சியப்படுத்தப்படுகின்றன.

இந்த தரவு பாலியல் அடிப்படையான வன்முறையை நோக்கிய ஆண்கள் மற்றும் பெண்களின் நடவடிக்கைகள் பற்றி பணியாற்றுபவர்கள் தீர்வு காணவேண்டிய சில முக்கிய கண்டுபிடிப்புகளுக்கான ஒரு அருமையான ஆரம்பப்புள்ளி, பாலியல் மற்றும் அடையாளம், விசேடமாக பாலியல் அடிப்படையான வன்முறைகளுக்கு எதிரான போராட்டத்தில் பணியாற்றும் இளைஞர்கள் மற்றும் பெண்களை நோக்கிய நடவடிக்கைகள்,எந்த வடிவத்திலான து~;பிரயோகத்தினையும் அங்கீகரிப்பதற்கான முக்கியத்துவம் வழங்குவதுடன் மற்றும் பாடசாலை மட்டத்தில் அங்கீகரிக்க மற்றும் தலையீடு செய்யும் விதத்தில் நேரடியாக மாணவர்களின் ஆதரவை பெறத்தக்க உணர்ச்சிபூர்வமான, உடல் அல்லது பாலியல் சம்பந்தமான கல்வியினை செயற்படுத்தல்.

பாலியல் வல்லுறவு புரிந்ததை ஏற்றுக்கொண்ட ஆண்களின் விகிதாச்சாரம் இந்த ஆய்வில் உயர்த்திக் காண்பிக்க வேண்டியளவுக்கு மிகவும் முக்கியமான ஒன்றல்ல மற்றும் அது உண்மையில் ஒரு கருத்துக் கணிப்பின் மூலம் சேகரிக்கப்பட்ட ஒரு தகவல். அதை ஒரு கடினமான தரவாக வழங்கப்படக்கூடாது. முக்கியமானதும் உயர்த்திக் காண்பிக்க வேண்டியதும், கண்டுபிடிப்புகள் அதற்கு துணையான குற்றவாளிகள் - அவர்களின் வரலாறு, அவர்கள் அப்படிச் செய்வதற்கான காரணங்கள், எந்த வயதில் அவர்கள் இத்தகைய பழக்கத்துக்கு ஆளாகும் பலவீனத்துக்கு உட்படுகிறார்கள் என்பதை தெரிந்துகொண்டு அங்கிருந்து நமது கண்டுபிடிப்புகளை ஆரம்பிக்க வேண்டும். இந்த ஆய்வு நாடளவிய ரீதியில் நடத்தப்பட்டால் 14.5 விகிதமான எண்ணிக்கை அநேகமாக மிக மிக அதிகமாக இருக்கும் என நான் அச்சப்படுகிறேன்.

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

நன்ற் - தேனீ

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்