/* up Facebook

Sep 10, 2014

ராஜனியை நினைவு கூருவோம்!


ராஜனி திராணகம நினைவு நிகழ்வு - செப்டெம்பெர் 2014 - யாழ்ப்பாணம்

டாக்டர் ராஜனி திராணகம ஒரு மனித உரிமை செயற்பாட்டாளர், மருத்துவர், எழுத்தாளர், யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட உடற்கூற்றியல் துறையின் தலைவர். அவர் 1989 ம் ஆண்டு 35 வயதில் தனது வீட்டுக்கு அருகாமையில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். ராஜனியின இறப்பு சமுதாயத்துக்கு நிகழ்ந்த ஒரு துன்பியல் சம்பவம். இறுதியில் பல்லாயிரக்கணக்கான மக்களின் அழிவுக்கு காரணமாகவிருந்த பயங்கரவாதமும் மானுட விழுமியங்கள் அற்றுப்போனதுமானதொரு அரசியல் சூழலுக்கு அவரது மரணம் அவ்வேளை குறியீடாகவமைந்தது. ராஜனியின் மரணம், எமது எதிர்காலத்தை தொடர்ந்து பாழடிக்கும் சமூகத்தின் தார்மீக நெருக்கடி, ஆளுகை, கல்வித்துறைகளில் ஏற்பட்ட நெருக்கடிகளை குறிகாட்டி நிற்கிறது.

வட இலங்கையை சேர்ந்த தமிழ்ப்பெண்ணாகிய இவர் தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்கள அரசியற் செயற்பாட்டாளரைத் திருமணம் செய்திருந்தார்.. தனது கருத்துக்களை வெளிப்படையாக, துணிச்சலாக சொல்லும்போது நேரக்கூடிய அபாயமான விளைவுகள் பற்றி அவர் அறிந்திருந்தபோதிலும், வடபகுதியிலே தன்னுடைய மக்களுடன் சேர்ந்து வாழ்வதையே விரும்பினார். ராஜனி படுகொலை செய்யப்பட்டபோது அவரின் இரண்டு மகள்களும் சிறிய வயதினர். .புகழ் சான்ற மனித உரிமை அமைப்பான மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள், (யாழ்ப்பாணம்) என்ற அமைப்பினைத் தோற்றுவித்தவர்களுள் ஒருவர். ‘முறிந்தபனை’ என்ற அவர்களுடைய நூலின் ஆசிரியர்களிலும் ஒருவர். அந்நூல் இலங்கை இராணுவம், இந்திய அமைதிகாப்புப் படைகள், தமிழீழ விடுதலைப்புலிகள், ஏனைய ஆயுதப் போராட்ட இயக்கங்கள் ஆகியோரால் மக்கள், சமூகம் மீது இழைக்கப்பட்ட வன்முறைகளை,, அநீதிகளை, வெளியுலகுக்கு அறிவித்தது. வட இலங்கையிலே அச்சுறுத்தல், நெருக்கடிகள் நிறைந்த போர்ச்சூழலிலே அநாதரவாகவிடப்பட்ட பெண்களின் நல்வாழ்வுக்காக 'பூரணி' என்கின்ற பெண்கள் இல்லத்தினை யாழ்ப்பாணத்தில் தோற்றுவிப்பதில் ராஜனி முன்னின்று பாடுபட்டார். பெண்ணியல்வாதி, சமூகச்செயற்பாட்டாளர் என்ற வகைகளில் பெண்கள் கூட்டாக இயங்குவதற்கு வேண்டிய தளங்கள், வெளிகள் உருவாவதற்கு ராஜனி தீவிரமாக உழைத்தார். ராஜனி திராணகமவின் படுகொலையின் பின்னர், அவரது நினைவுகளாலும், சமூகசெயற்பாட்டு பற்றுறுதியினாலும் ஈர்க்கப்பட்டு, அவருடன் இணைந்து எழுதிவந்த ராஜன் ஹூல், கோபாலசிங்கம் சிறீதரன், மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏனைய உறுப்பினர்கள் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களைத் தொடர்ந்தும் ஆவணப்படுத்திவந்தனர். ராஜனியின் மறைவின் பின்னர் தலைமறைவாகச் செயற்படுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்ட மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், இலங்கையினைச் சேர்ந்த விரல்விட்டு எண்ணக்கூடிய பக்கச்சார்பற்ற குரல்களில் ஒன்று. உலகளாவிய ரீதியிலே பிரசித்தி வாய்ந்த மாட்டின் என்னல்ஸ் மனித உரிமை விருது 2007 ஆம் ஆண்டிலே அவர்களுக்கு வழங்கப்பட்டது.

ஜனநாயக சமூகங்கள், ஜனநாயக செயற்பாடுகள், சமத்துவமும், நீதியும் நிறைந்த ஒர் உலகம்!
ஜனநாயகத்தையும் நியாயபூர்வமான சமாதானத்தையும் விரும்புகின்ற பலருக்கு ராஜனி ஒரு தூண்டு சக்தியாகவும், நம்பிக்கையின் சின்னமாகவும் விளங்குகிறார். மக்கள் பங்குபற்றக்கூடிய ஜனநாயக செயற்பாட்டுக்கான வெளிகளை நாங்கள் தேடுகிறோம். போருக்குப் பிந்தைய காலம், நீண்டகாலப் போர், போருக்குப் பின் நடைபெறும் மீள்நிர்மாணச் செயற்பாடுகள், அபிவிருத்தி செயற்பாடுகள், இழப்புக்களைச் சந்தித்த சமூகங்களின் தேவைகள், அரசியல் இலக்குகள், (சுய) வெளிப்பாடுகள் ஆகியவற்றைபற்றி கேள்வி எழுப்பக்கூடிய வெளி ஒன்றினைப் எமக்குத் தந்திருக்கிறது. 

ராஜனியின் நினைவில் எதிர்வரும் செப்டெம்பர் 20- 21- இல் ஒரு நிகழ்வினை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளோம். ஜனநாயகத்தின் பேரினாலும் யாழ்ப்பாண மக்களுடனும் ஒன்றித்துச் செயற்பட விரும்பின் இந் நிகழ்விலே நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என அன்புடன் கேட்கிறோம். இந்நாட்டிலே எம் பொதுவான வரலாற்றின் ஒரு முக்கிய கட்டத்தில், ஜனநாயகம் பற்றிய இவ்வுரையாடலில் உங்களைப் பங்கேற்கும்படி அழைக்கிறோம். 

சமாதானத்தை நேசிக்கும் மக்கள் எல்லோருக்கும் ஒன்றித்த ஆதரவு தருவோம்!
ஜனநாயகப்பண்புடைய அரசியல் சமூகநடைமுறைக்கு ஆதரவு நல்குவோம்! 
விளிம்பு நிலையிலுள்ளோருக்கு ஆதரவு வழங்குவோம்! 

நிகழ்வு 

  • 20-செப்டெம்பர்-2014, காலை 9.30: ராஜனி திராணகம ஞாபகார்த்தக் கூட்டமும், யாழ் பல்கலைக்கழகம் மருத்துவபீட அரங்கு
  • 20-செப்டெம்பர்-2014, பி.ப 2: எல்லா ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட மக்களுடனும் இணைந்து சமாதானம், ஜனநாயம், ஒத்துழைப்பு என்பவற்றினை முன்னிறுத்திய ஓர் ஊர்வலம். 
  • 21-செப்டெம்பர்-2014, காலை 9: " நீதியும், ஜனநாயகமும் மிகுந்த சமூகம்" - உரையாடல் களம்.
  • கைலாசபதி அரங்கு, யாழ் பல்கலைக்கழகம்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்