/* up Facebook

Sep 17, 2014

கன்னித் திரை மற்றும் கற்பு நெறி தொடர்பான சர்ச்சைகள்!

இந்திய மக்களின் கலாச்சாரத்தோடு ஒன்றிய ஒரு விளைவாக இந்தக் கன்னி கழிதல், கன்னித் திரை தொடர்பான நம்பிக்கைகள் இன்றும் அதிகமான ஊர்களில் நடை முறையில் அல்லது வழக்கத்தில் உள்ளன. திருமணத்திற்கு முந்தைய உடலுறவு தான் இதற்கான காரணம் என்றும், திருமணத்திற்கு முந்திய உடலுறவில் ஈடுபட்டவளை, நான் எப்படித் திருமணம் செய்து கொள்ள முடியும் எனும் கேள்விகளும், ஆணாதிக்கம் எனும் அடக்கு முறையின் வெளிப்பாடாய் எமது சமூகங்களில் இன்றும் காணப்படுகின்றன.

ஒரு சில இடங்களில் இன்னமும் பெண் கன்னி கழியாமல் இருக்கிறாள் என்பதற்கான மருத்துவச் சான்றிதழ்கள் கொடுத்தே திருமணம் செய்து வைக்க வேண்டிய நிலையில் பெற்றோர்கள் இருக்கிறார்கள். இந்தியாவின் குஜராத், மற்றும் பஞ்சாப் முதலிய மாநிலங்களில் திருமணத்தின் பின் இடம் பெறும் முதலிரவின் போது மணமகன், மணமகள் முதலியோரைத் தனியறையில் விட்டு, கட்டிலில் வெள்ளைத் துணியை விரித்து விடுவார்கள்.

மறு நாள் காலை கட்டிலில் இரத்தம் இருந்தால் தான் பெண் கன்னி கழியாமல் இருக்கிறாள் எனும் நம்பிக்கையில் திருமணத்தின் முக்கிய அம்சமான மாமியார் வீட்டவர்களின் வரவேற்பு, உபசாரம் இடம் பெறும், இல்லை என்றால் எல்லோரும் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு விஜய் படம் பார்த்த ரசிகர்கள் போல சோகத்துடன் தான் இருப்பார்கள். இதனை ஒரு பெரிய பண்டிகை போன்று மணமகளைப் பல்லக்கில் ஏற்றி வீதியுலாவாக அழைத்து வந்து கொண்டாடி மகிழ்வார்கள். இதே நிலமை எமது இலங்கையில் உள்ள சகோதர இனத்தவர்களான சிங்களவர்களிடமும் இன்று வரை நடை முறையில் இருக்கிறது. இஸ்லாமிய உறவுகளிடமும் இந்தப் பண்பாடு இன்றும், காணப்படுகின்றது

ஆசியாவிலுள்ள ஏனைய இன மக்களோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் தமிழர்களிடம் இப்படியொரு பண்பு இல்லை என்றே கூறலாம். கன்னித் திரை தொடர்பான டெஸ்ட்டிங்கில் தமிழர்கள் ஈடுபடுவதில்லை என்பது உண்மை, எங்காவது கிராமப் புறங்களில், இவ் நிகழ்வுகள் இன்றும் நடை முறையில் இருக்கலாம், ஆனால் தமிழர்களிடமும், தமிழ் ஆண்களிடமும் உள்ள மிக, மிக கெட்ட பழக்கம் என்ன தெரியுமா?சந்தேகப்படுவது.

உடலுறவின் போது இரத்தம் வரவில்லை என்றால் திருமணத்திற்கு முன்னரான உடலுறவு தான் இதற்கான காரணம் என்றும், அப் பெண் தவாறன நடத்தை உடையவள்; ஏற்கனவே கெட்டுப் போய் விட்டாள் எனும் வகையில் உளவியல் ரீதியில் குழப்பமடைந்து கற்பனைகளில் மூழ்கி, பெண்ணை வார்த்தைகளால் துன்புறுத்திச் சாகடிப்பது எமது சமூகத்தில் நடக்கும் ஒரு விபரீத நிகழ்வாகி விட்டது இன்று.

ஒரு பெண் பூப்படைந்த காலப் பகுதியின் பின்னர், அவள் சைக்கிள் ஓடுவதால், விளையாட்டுக்களில் பங்கு பற்றுவதால், அல்லது நடனமாடுவதால் கன்னித் திரை கிளிவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனால் எத்தனையோ இடங்களில் இதனை நம்ப மறுத்தவர்களாய், ’நீ ஏற்கனவே கை பட்ட சீடி, நீ பாவிச்ச பொருள் தானே’ என்றெல்லாம் வசை மொழிகளைக் கூறி, பெண்ணைத் திட்டி, வார்த்தைகளால் கொன்று அவளின் வாழ்க்கையினைச் சீரழிக்கும் செயற்பாடுகளில் கணவன், மற்றும் மாமியார் வீட்டுக்காரர் ஈடுபடுவதாக வைத்தியர்கள் கூறுகிறார்கள்.
ஒரு ஆண் மகன் திருமணம் செய்யப் போகும் போது, சும்மா ஒரு தமாசுக்காக ‘மச்சான் உன் ஆளை அந்தப் பையன் கூட ரெண்டு வருசத்திற்கு முன்னாடி கண்டிருக்கிறேன்’ என்று சொன்னாலே போதும், நெருப்பு தானாகவே பற்றிக் கொள்ளும். பெண்ணின் வாழ்க்கையில் அன்று முதல் ஏழரை உச்சத்தில் ஏறி உட்கார்ந்து கொள்ளும்.

இன்றைய கால கட்டத்தில் ஒரு ஆண் மகன், வெளி நாட்டில் ஏற்கனவே திருமணமாகி, விவகாரத்துப் பெற்று இருந்தாலும் பரவாயில்லை, ஆனால் பெண் மட்டும் முதற் தாரமாக அந்த மணமகனை மணம் முடிக்க வேண்டும் எனும் நிலமை தற்போது காணப்படுகிறது, இங்கேயும் பார்த்தால், ஆண் ஏற்கனவே ஒரு பெண்ணைத் திருமணம் செய்தவனாக இருந்தாலும், பெண் மட்டும் மணமாகாதாவளாக இருக்க வேண்டும் எனும் தனி மனித ஆதிக்க உணர்வுகளே முதன்மைப்படுத்தப்படுகின்றன. இந்த தனிமனித ஆதிக்கச் சிந்தனைகள எமது சமூகத்தில் இருந்து இலகுவில் அகற்ற முடியுமா?

உடலுறவின் பின்னர் இரத்தம் வரவில்லை என்பதால் அப் பெண் தவறானவள் எனும் கண்ணோட்டத்தில் எமது சமூகம் ஏன் பார்க்கின்றது? பெண்களின் கன்னித் திரை கிழியாமல் இருந்தாலும், உடலுறவின் போது சிலருக்கு இரத்தம் வராது என்று விஞ்ஞானம் கூறுகின்றது. ஆனால் எமது சமூகத்தில் ஏன் கன்னித் திரையின் அடையாளமாக இரத்தம் வர வேண்டும் என நம்புகிறார்கள்?

ஆண்களின் பார்வையில், அவர்கள் சமூகத்தில் திருமணத்திற்கு முன்னர் எவ்வகையான உறவுகளை வைத்திருந்தாலும் அவற்றை உடலியல் ரீதியாக நிரூபிக்க முடியாது, ஆனால் பெண்களை மட்டும் ஆண்கள் ஏன் பிறிதோர் கண்ணோட்டத்தில் இவள் கெட்டுப் போனவள் எனும் நோக்கோடு பார்க்க வேண்டும்? இயற்கையான காரணிகளை விடுத்து, பெண்ணின் உடலியல் ரீதியான செயற்பாடுகள் தான், அவளின் கன்னித் திரை கிழிவிற்கு காரணம் எனும் நம்பிக்கையில் பெண்களைத் துன்புறுத்தும் ஆண்களை மாற்ற ஏதாவது வழி முறைகள் இருக்கின்றனவா? தெரிந்தால் கூறுங்கள்.

எமது கலாச்சாரத்தில் காணப்படும், கன்னித் திரை தொடர்பான தெளிவில்லாத நம்பிக்கைகளின் பின்னணி என்ன? இதற்கான காரணம் என்ன? ஆண்கள் மட்டும் திருமணத்திற்கு முன்னர் மனதால் ஒரு பெண்ணைக் கூட நினைப்பதில்லையா? ஒரு பெண் பாலியல் உறவின் மூலம் தான் தன் கன்னித் திரையினை இழந்திருக்கிறாள் என்று எமது சமூகத்தவர்கள் மட்டும் ஏன் திடமாக நம்புகிறார்கள்? இந்த தெளிவற்ற நம்பிக்கைகளை சரியான கண்ணோட்டத்தில் அணுகி, சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது சாத்தியமா? ஒரு பெண்ணின் கற்பு என்பதன் அடையாளமாய் கன்னித் திரையினை எம்மவர்கள் கருதுவது சரியா?

நன்றி - மருத்துவ இணையம்

2 comments:

resepan yoges said...

தமிழ் திரைப்பட உலகம் ஆண்களின் உலகம் வெறும் ஆண்கழுக்கான உலகம் ......


பெண் என்றால் அவள் உடல் மற்றும் அழகு மட்டுமே எனக்கு முக்கியம் அதை ரசிப்பேன் மற்றும் அவளுடைய படிப்பு அவழுடைய அறிவு என்னை ஈர்ப்பதில்லை என்று சொல்லும் ஆண்கள் தான் இன்றும் அதிகம். இந்த பார்வை மற்றும் எண்ணம் தமிழ் திரைப் படங்களில் காணலாம். தமிழ் திரைப்படங்களில் கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் மரியாதைக்குரிய கே. பாலச்சந்தர் அவர்களின் படங்களைத்தவிர பெண்கள் வேலைக்குப் போகும் பெண்கள் வருவதே இல்லை. கூடிய அளவுக்கு தமிழ் திரைப் படங்களில் வரும் பெண்கள் பதினாறில் இருந்து இருவது வயதிற்க்கு உட்பட்டவர்கள் மட்டுமே அவர்கள் எங்கே பாடசாலை முடிப்பது வேலை பார்ப்பது மற்றும் அவர்களுக்கு எதற்கு அறிவு என்கின்ற ஒன்று என்று சித்தரிக்க படுகிறார்கள்.

பெண்களுக்கு விளங்காத இரட்டை அர்த்தம் நிறையவே உள்ளது தமிழ் திரைப்படங்களில். கொச்சையாய் பெண்களை பயன் படுத்துவதும் அப்படி பட்ட இழிவான செயலுக்கு ஒரு தமிழ் தெரிந்த பெண் உடன் போக மாட்டாள் என்பதற்காய் வேறு மொழி பேசும் பெண்ணை நடிக்க வைப்பதும் தமிழ் இயக்குனர்களின் வழக்கம். பெண் என்றால் அறிவு கொண்டு சிந்திக்க தெரியாதவள் மற்றும் வெளி உலகம் புரியாதவளாய் இருந்தால்தான் கணவன் எங்கு போகிறான் என்ன செய்கிறான் அவன் இன்னொரு பெண்ணோடு தொடர்பு கொண்டால் கூட கேள்வி கேக்கவோ அல்லது அதை பற்றி அறியவோ முடியாதவளாய் இருக்க வேண்டும் எனது மனைவி என்கிற யதார்த்த வாழ்கையில் உள்ள ஆணாதிக்கம் கொண்ட ஆண்களின் எண்ணம் இங்கே பிரதி பலிக்கப் படுகின்றது.

resepan yoges said...

ஒரு பெண் நடந்து போனால் திருமணம் ஆகும் முன் அவளை கொச்சை வார்த்தையால் வர்ணித்து கிண்டல் செய்வதே ஆண்களின் பொழுது போக்கு. எப்படி பட்ட உத்தமமான ஆணிடமும் இந்த செயல் உள்ளது. இப்படி பட்ட செயலை குறைந்த பட்சம் 10 சதா வீத ஆண்களே தவிர்க்கின்றனர். இதை பிரதி பலிக்கும் வண்ணமே நடிகையை துரத்தி துரத்தி பாடும் பாட்டுக்கான தேவை தமிழ் திரைப் படங்களில் உருவாகின்றது. ஒரு பெண் காதலை ஏற்க்காவிட்டாலும் அவளை துரத்தி காதலித்தால் அவள் ஏற்பாள் என்கிற மடத்தனமும் தமிழ் திரைப்படங்களில் காணலாம். ஒரு பெண்ணின் இரக்க குணத்தை தனது தேவைக்கு பயன் படுத்தும் சுயநலவாதி ஆகிறான் ஆண் இங்கே. தமிழ்த் திரைப்படங்கள் பெண்ணின் காதலுக்கும் இரக்கதுக்கும் வித்தியாசம் இல்லாமல் செய்து விட்டார்கள் ஆனால் நிஜ வாழ்கையில் இந்த பாதிப்பினால் இப்படி திருமணம் செய்து கொண்ட பெண்கள் திருமணத்துக்கு பின் காதல் உணராமல் கஷ்டப் படுகிறார்கள் மற்றும் கணவனை எதிரியாய் பார்த்து அவனை துன் புறுத்தும் நிலைக்கு செல்கிறார்கள். நீ என்னை ஏமாத்தி திருமணம் செய்து கொண்டாய் எனும் பழிவாங்கும் எண்ணம் வருகின்றது பெண்களுக்கு. வயது குறைவான பெண்கள் அதிகம் இப்படியான விடயத்தில் மாட்டிக் கொள்கிறார்கள்.

ஒரு மனைவியின் கனவை அவளுடைய வளர்ச்சியை உயர்த்தி விட்டு அழகு பார்த்த ஆண்கள் மித குறைவே, சூர்யா வம்சம் போன்ற நிகழ்வுகள் பெண்கள் வாழ்வில் வரவே வராது உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் போன்ற திரைப்படங்கள் வெறும் தேடி கண்டு பிடித்தால் மட்டுமே காணலாம்.

ஒரு பெண்ணுடைய அறிவு மட்டந்தட்டியே வைக்க படுகின்றனர். ஒரு பெண் சமுதாய சிந்தனையுடன் இருந்தால் அவள் வாய்க்காரி அவள் குடும்பத்துக்கு ஆகாதவள் என்று பட்டம் கட்டி விடுகின்றனர். பெண்கள் என்றால் ஆணின் ஆசையை பூர்த்தி செய்ய வேண்டும். ஒன்று ஆணின் பிள்ளையை பெத்துவிட்டு அவனின் சேவைகள் செய்ய வேண்டும் இதற்கு பெயர் குடும்ப பாங்கான பெண். இப்படியான கதாபாத்திரங்களில் ஒரு வகை நடிகைகள். ஒரு பெண் ஆணுடைய ஆசைக்கு இண ங்கியவழாய் மற்றும் ஆணின் அஹங்கரத்தை ஊட்டி வழக்க கூடியவளாய் இருந்தால் அவள் குடும்ப பாங்கான பெண் இதை சில பெண்களும் ஆதரிக்கின்றனர் இவர்களை ஆண் ஹோர்மோன்ஸ் கொண்ட பெண்கள் அல்லது ஆணின் வைரஸ் தாக்கிய பெண்கள் என்று கூறலாம். குடும்ப பாங்கான பெண்ண என்றால் அவழுக்கு கோவமே வரக்க கூடாது என்ற பல யதார்த்தத்துக்கு முரண்பாடான ஆண் ஆதிக்கம் கொண்ட பல இனங்கள் திணிக்க படுகின்றனர்.

அடுத்த கதாபாத்திரம் ஆணின் ஆபாச ஆசைக்கு உடையவள் இவளை வெறும் போக பொருளாய் பார்க்கலாம் பயன் படுத்தலாம் அத்தோடு நிப்பாட்ட வேண்டும் இப்படி பட்ட நடிகைகள் ஐடெம் நம்பர் என்று கூறுவார்கள்.

தமிழ் திரைப்படங்களில் ஒரு நடிகை கருப்பாய் இருக்க முடியாது என்றும் ஆனால் ஒரு நடிகன் கருப்பாய் வயதானவனாய் வெள்ளை முடி வந்தால் கூட பருவாய் இல்லை என்கிறது ஆணின் அதிக்கம் நிறைந்த தமிழ் திரை உலகம். ஒரு ஆணுக்கு வயசானாலும் இளம் பெண்ணை திருமணம் செய்யலாம் என்கிற வக்கிர புத்தியை மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் வண்ணமே தமிழ் திரைப்படங்கள் அமைகின்றது. பெண்ணுக்கு அழகு தேவை ஆணுக்கு அது தேவை இல்லை என்று இது வலியுறுத்துகிறதது வெள்ளை தோல் உள்ள நடிகை மட்டுமே நடிக்கலாம் என்கிற எழுதப்படாத ஒரு சட்டம் எப்பொழுதுமே இருந்து வருகிறது.


பெண்களை நக்கல் அடிப்பதும் பெண்களால் ஆண்கள் கஷ்ட படுகிறார்கள் என்று குத்தி காட்டுவதும் வசனங் களாய் இடம்பெறும் போது ஆண்களின் கை தட்டல் விசில் அடிப்பு வரும் பொழுது ஏன் தியேட்டர் வந்தோம் என்று உணர வைக்கும் தருணங்கள் மீண்டும் மீண்டும் வருகின்றது தமிழ் திரைப்படங்களில்.

ஆண்கழின் மனதில் மரியாதைக்குரிய இடத்தை பிடிக்க வேண்டும் என்றால் தாயாக வேண்டும் ஏனைய பெண்கள் மரியாதையை எதிர்பர்காதீர்கள் என்று கூறுவதின் வண்ணமாக அம்மா பாடல்கள். பெண்ண என்றால் அவளின் உடலை வருத்தி ஆணின் தேவைக்கு இணங்க அவனின் தேவையை பூர்த்தி செய்து பின் அவனது கெட்ட செயலை மன்னித்து வந்தால் அவளின் பெயர் தாய். இப்படி பட்ட செயலை செய்வதன் மூலமே ஒரு பெண்ண ஆணின் மரியாதையை பெற முடியும் என்கிறது சுயநலம் கொண்ட ஆணின் எண்ணம் இங்கே காணலாம். ஆனால் பெண்கள் நாம் ஒரு ஆனாய் மதிபதட்க்கு அவன் எம்மை கேட்ட எண்ணத்தில் பார்க்காமல் இருந்தாலே போதும் இது தான் பெண்களின் எதிர்பார்ப்பு.

பெண்கள் சுயநலமாய் யோசிக்க தெரியாதவர்கள் ஆண்காழ் அவர்கழத்து தேவையை மட்டுமே யோசிப்பவர்கள்


Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்