/* up Facebook

Jul 30, 2014

பணிப் பெண்ணாக போன என் மகளுக்கு பைத்தியமா? தாய் பதறல்எமது மகளை எவ்­வ­ளவோ சொல்லித் தடுத்துப் பார்த்தோம். கூழோ கஞ்­சியோ ஒன்­றாக இருந்து குடிப்போம். நீ போக­வேண்டாம் என்று தடுத்தோம். ஆனால் முக­வரின் ஆசை வார்த்­தையில் மயங்­கிப்­போன எனது மகள், குடும்­பத்தின் வறுமை நிலையை, தனது தம்பி தங்­கை­யரின் எதிர்­கால வாழ்வை மனங்­கொண்டு தான் போக வேண்டும் என்று அடம்­பி­டித்தாள்.

“கொழும்பு விமான நிலை­யத்­தி­லி­ருந்து ஒரு தொலை­பேசி அழைப்பு எனக்கு வந்­தது. அன்று காலை எட்டு மணிக்கு முன்னர் உனது மகளை நீ வந்த பொறுப்­பேற்­காமல் விட்டால், அவளை நாம் மன­நோ­யாளர் வைத்­திய சாலைக்கு அனுப்பி விடுவோம். உனது மகள் மன­நோய்க்கு ஆளா­கி­யுள்ளார். என்று தெரி­வித்­தனர். இத­னைக்­கேட்டு நான் பத­றிப்­போனேன்”.

இவ்­வாறு மூதூர் லிங்க புரத்தைச் சேர்ந்த தாயா­ரான கோகில நாயகி செல்­வக்­குமார் தெரி­வித்தார். அவர் அது தொடர்பில் விளக்கிக் கூறு­கையில், 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி எனது மகள் துஷாந்­தினி பணிப்­பெண்­ணாக சவூ­திக்குச் சென்­றி­ருந்தார். அவர் திடீரென கடந்த மாதம் ஒன்­பதாம் திகதி (09.06.2014) பண்­டா­ர­நா­யக்கா விமான நிலை­யத்தில் வந்­தி­றங்­கி­யுள்ளார். அப்­போ­துதான் மேற்­படி தகவல் எனக்கு கிட்­டி­யது.

இந்தத் தக­வலைக் கேட்டு நான் அதிர்ந்­து­போனேன். தொலை­பே­சியில் தொடர்பு கொண்­ட­வ­ரிடம் கூறினேன், ” நாங்கள் மூதூர் பிர­தே­சத்தைச் சேர்ந்­த­வர்கள் உடனே வர­மு­டி­யாது அங்கு வரு­வ­தாயின் மாலை ஐந்து மணிக்கு மேலா­கி­விடும் என்று அழுதேன்”. அவர் கூறினார் “உங்கள் மகளை பஸ்­ஸிலோ ரயி­லிலோ கொண்டு போக முடி­யாது” என்று.

நான் ஊர­வரை கும்­பிட்டு மன்­றாடி கடன்­பெற்­றுக்­கொண்டு வேன் ஒன்றை வாட­கைக்கு அமர்த்தி மூன்­று­பேரை துணைக்கு அழைத்­துக்­கொண்டு விமான நிலை­யத்­துக்குப் போனேன். அங்கு எனது மகளைக் காண­மு­டி­ய­வில்லை. எங்கள் ஒரு­வ­ருக்கும் சிங்­களம் தெரி­யாது.
மிகவும் கஷ்­டப்­பட்டு முக­வ­ரியை அறிந்­து­கொண்டு கொழும்­பி­லுள்ள ஒரு இடத்­துக்குச் சென்றோம். எனக்கு இடத்தின் பெயர் தெரி­யாது. அங்கே எனது மகள் சிறைக் கூடத்தில் அடைக்­கப்­பட்­டது போல் வைக்­கப்­பட்­டி­ருந்தாள். அவ­ளுக்கு எங்­களை அடை­யாளம் காண­மு­டி­ய­வில்லை. மயக்க நிலையில் கிடந்தாள். நானும் என்­னுடன் வந்­த­வர்­க­ளு­மாகச் சேர்ந்து மகளை ஏற்­றிக்­கொண்டு உடனே ஊருக்குத் திரும்­பினோம்.

திரு­கோ­ண­மலை பொது வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு 27 நாள் சிகிச்­சையின் பின் சாதா­ரண நிலைக்குத் திரும்­பி­யுள்ளாள் என்று கூறினார். இதனைத் தொடர்ந்து மக­ளிடம் நடந்த சம்­ப­வங்­க­ளைப்­பற்றி விசா­ரித்­த­போது, அவள் கூறி­யது அதிர்ச்­சி­ய­ளிப்­ப­தாக அமைந்­தி­ருந்­தது.

19 வய­தான அந்தப் பெண் கூறு­கையில், “லிங்­க­புரம் பாட­சா­லையில் க.பொ.த. சாதா­ரண தரம் வரை படித்து பரீட்­சைக்கு தோற்­றி­விட்டு முடி­வுக்­காக நான் காத்­துக்­கொண்­டி­ருந்தேன். எனக்கு அப்­போது வயது 17. எனது தந்தை கூலித் தொழிலைச் செய்து வரு­பவர். எனக்கு இரண்டு ஆண் சகோ­த­ரர்­களும், நான்கு பெண் சகோ­த­ரி­களும் உள்ளனர். எல்­லோ­ருக்கும் மூத்­தவள் நான்.

யுத்தம், இடம்­பெ­யர்வு, வீடு­வாசல் இழப்பு, தொழி­லின்மை போன்ற பல்­வேறு கார­ணங்­க­ளினால் சொல்­ல­மு­டி­யாத வறு­மையை எமது குடும்பம் அனு­ப­வித்­துக்­கொண்­டி­ருந்­தது. அவ் வேளை­யில்தான் ஒரு நபர், “நான் கிளி­வெட்­டியைச் சேர்ந்­தவன். வெளி­நாட்­டுக்கு பணிப்­பெண்­களை அனுப்பிக் கொண்­டி­ருக்­கிறேன்” என சொல்­லிக்­கொண்டு மட்­டக்­க­ளப்­பி­லி­ருந்து வந்­தி­ருந்தார். எனது குடும்­பத்தின் வறுமை நிலையை எடுத்துக் கூறி எனக்கு வெளி­நாடு செல்­ல­மு­டி­யுமா என வினா­வினேன். மைன­ராக இருக்கும் என்னை மேஜ­ராக மாற்றி பாஸ்போட் மற்றும் விவ­கா­ரங்­களை செய்ய வேண்டும் என்­ப­தற்­காக எனது பெயரை கிஷாந்­தினி என மாற்றி வய­தையும் 24 என உயர்த்தி சவூ­திக்கு என்னை அனுப்பி வைத்தார் அந்த முகவர் என்றார்”.

இது­பற்றி தாயார் கோகி­ல­நா­ய­கி­யிடம் விசா­ரித்­த­போது, “எமது மகளை எவ்­வ­ளவோ சொல்லித் தடுத்துப் பார்த்தோம். கூழோ கஞ்­சியோ ஒன்­றாக இருந்து குடிப்போம். நீ போக­வேண்டாம் என்று தடுத்தோம். ஆனால் முக­வரின் ஆசை வார்த்­தையில் மயங்­கிப்­போன எனது மகள், குடும்­பத்தின் வறுமை நிலையை, தனது தம்பி தங்­கை­யரின் எதிர்­கால வாழ்வை மனங்­கொண்டு தான் போக வேண்டும் என்று அடம்­பி­டித்தாள். நாங்கள் 22.12.2012 கொழும்புக்கு சென்று விமா­னத்தில் ஏற்­றி­விட்டுத் திரும்­பினோம்.

சவூ­திக்­குப்­போன எனது மகள் மூன்று மாதங்­களின் பின் அறு­ப­தா­யிரம் ரூபாவை அனுப்­பி­யி­ருந்தாள். அடுத்த மூன்று மாதங்­களின் பின் அறு­ப­தா­யிரம் ரூபாவை வெஸ்டன் யூனியன் மூலம் அனுப்­பி­யி­ருந்தாள். மகள் சவூ­திக்குப் பய­ண­மா­கும்­போது, குறித்த முகவர் ஜீவராஜ் 10 ஆயிரம் ரூபாவை முற்­ப­ண­மாகத் தந்து பிள்­ளைக்கு உடுப்­பெ­டுக்­கும்­படி கூறி­யி­ருந்தார். வேறு எந்தப் பணமும் எமக்குத் தரப்­ப­ட­வில்லை.

இறு­தி­யாக, ஜூன் மாதம் 2013 ஆம் ஆண்டு இரண்டாம் முறை­யாக 20 ஆயிரம் ரூபாவை எமக்கு அனுப்பி வைத்­ததன் பின்னர் இவ்­வ­ருடம் (2014) ஜூன் மாதம் வரை எமது மக­ளி­ட­மி­ருந்து எவ்­வித பணமும் வர­வில்லை. நாங்கள் மக­ளுடன் தொடர்­பு­கொள்ள முனைந்தும் எங்களால் முடி­ய­வில்லை. அவர் எங்­க­ளுடன் தொடர்பு கொள்­ள­மு­டி­யுமே தவிர எங்­களால் மக­ளுடன் தொடர்பு கொள்­ளவே முடி­யாது.

சுமார் ஒரு வரு­டத்­துக்கு மேலாக மகளின் தொடர்­பின்­மையால் நாங்கள் மிகவும் பயந்­து­போ­யி­ருந்தோம். அவளின் தம்பி தங்­கையர் ஆசை­யோடு கேட்­பார்கள். ஆனால் எந்த பதி­லையும் எமக்கு சொல்ல முடி­யாமல் இருந்­தது. முகவர் ஜீவ­ரா­ஜிடம் மகளின் நிலை அறி­வ­தற்கு தொடர்பு கொள்ள முயற்சி செய்தோம்.ஆனால் அவரை கண்­டு­பி­டிக்­கவே முடி­ய­வில்லை. என்ன செய்­வது என்று தெரி­யாமல் நாங்கள் ஏங்கிக் கொண்­டி­ருந்தோம்.

பணிப்­பெண்­ணாக சென்ற யுவ­தி­யிடம் சவூ­தியில் என்ன நடந்­தது என்று விசா­ரித்தோம். அவர் விளக்­க­மாக கூறினார். “கொழும்­பி­லி­ருந்து பல­ருடன் பயணம் செய்த நான் விமான நிலை­யத்தில் இறங்­கி­ய­போது சொல்லி வைத்­தது போல் ஒருவர் வந்­தி­ருந்தார். தனது வாக­னத்தில் ஏற்­றிக்­கொண்டு விமான நிலை­யத்­தி­லி­ருந்து தொலை­தூ­ரத்­தி­லுள்ள தனது தாயாரின் வீட்டில் என்னை கொண்­டுபோய் விட்டார். அக்­கு­டும்­பத்­த­வரின் அங்­கத்­தவர் தொகை அதிகம். கடு­மை­யாக வேலை செய்­ய­வேண்­டிய நிலை காணப்­பட்­டது.

இரண்டு தட­வைகள் எனது சம்­ப­ளத்தைத் தந்த பின்பு, பத்து மாதங் களுக்கும் மேலாக சம்பளப் பணம் எனக்குத் தர­வில்லை. எனது குடும்­பத்தின் கஷ்ட நிலையைக் கூறி சம்­ப­ளத்தைக் கேட்டேன். அனுப்பி வைப்­ப­தாகக் கூறி­னார்கள். பல மாதங்கள் சென்ற கார­ணத்­தினால் சம்­பளப் பணம் கிடைக்­கா­ததை எனது பெற்­றோ­ரிற்குச் சொல்ல வேண்டும், போன் பண்ண போன் தாருங்கள் என மன்­றா­டினேன். அங்­கி­ருந்து வாட்­ட­சாட்­ட­மான ஆண் ஒருவர் என்னை தனது காலால் உதைத்தார். வீட்­டி­லுள்ள சட்டம் கொண்டு என்னைத் தாக்­கினார். அவ்­வ­ள­வுதான். நான் மயக்­க­முற்று விட்டேன். மீண்டும் சுய­நி­னைவு வந்­தது என்­பது எப்­போது என எனக்கு சரி­யாகச் சொல்ல முடி­யா­விட்­டாலும், திரு­கோ­ண­மலை வைத்­தி­ய­சா­லைக்கு வந்­த­பின்பே சுய­நி­னைவு வந்­தது என அவர் தெரி­வித்தார்.

அவரின் தாயா­ரிடம் மகளை எவ்­வாறு இலங்­கைக்கு கொண்­டு­வர ஏற்­பா­டுகள் செய்­தீர்கள் என வின­வி­ய­போது, “ எனது மகள் 10 மாதங்­க­ளுக்கு மேலா­கியும் எங்­க­ளுடன் தொடர்பு இல்­லாத கார­ணத்­தினால், அவரின் சிறிய தாயார் ஒருவர் அங்கு உள்ளார். அவ­ருடன் தொலை­பே­சியில் தொடர்பு கொண்டேன். அவர் எனது துன்­பத்­தையும் அவ­லத்­தையும் தெரிந்து கொண்டு சவூ­தி­யி­லுள்ள இலங்கைத் தூத­ர­கத்துடன் தொடர்பை ஏற்­ப­டுத்தி பிள்­ளைக்கு உத­வும்­படி கோரி­யுள்ளார். அவ­ரு­டைய உத­வி­யினால் தூத­ரகம் எனது மகளை ஊருக்குக் கொண்­டு­வர ஏற்­பாடு செய்­தி­ருந்­தது என்று கேள்­விப்­பட்டேன் என அந்தத் தாய் குறிப்­பிட்டார்.

மேலும் அவர் குறிப்­பி­டு­கையில், எனது மகள் எம்­முடன் தொடர்பு கொள்ள வேண்­டு­மாயின், தூர இடத்­திற்கு அழைத்துச் சென்று ‘பூத்தில்’ கதைக்க விடு­வார்கள். வீட்டுத் தொலை­பே­சியோ, கைய­டக்கத் தொலை­பே­சி­யையோ தரு­வ­தில்லை. சம்­ப­ளத்தைத் தாருங்கள் என்று கேட்­ட­தற்­கா­கவே, எனது மகள் வீட்­டுக்­கார எஜ­மானால் கொடூ­ர­மாகத் தாக்­கப்­பட்­டுள்ளார். காருக்­குள்­கூட தூக்கி எறி­யப்­பட்­டி­ருக்­கிறாள். அவ­ளுக்கு திரு­கோ­ண­மலை வைத்­தி­ய­சா­லையில் வைத்து சிறந்த முறையில் சிகிச்சை அளித்­ததன் கார­ண­மா­கவே, மீண்டும் எனது மகள் மறு­பி­றவி எடுத்­துள்ளார் என அந்தத் தாய் கூறினார்.

இப் பெண்­ணுக்கு நேர்ந்த கதி­பற்றி திரு­கோ­ண­மலை மாவட்ட பெண்கள் வலை­ய­மைப்பின் தலை­வியை வினா­வி­ய­போது, திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் இது­போன்ற பல சம்­ப­வங்கள் நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றன. அப்­பாவிப் பெண்கள் ஏமாற்­றப்­ப­டு­கின்­றார்கள். யுத்­தத்­திற்குப் பின் இந்த நிலை­மைகள் அதி­க­ரித்த வண்­ணமே இருக்­கின்­றன. வறுமை, வாழ்­வா­த­ார­மற்ற நிலை, குடும்பத் தலை­வர்­களைப் பறி­கொ­டுத்த பரி­தாபம் போன்ற பல்­வேறு காரணங்களால் மூதூரின் பல கிராமங்களில் இக்கொடுமைகள்
நடந்துகொண்டிருக்கின்றன. முன்னம் போடி வெட்டை என்ற கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் முகவரின் ஆசை வார்த்தைக்கு ஏமார்ந்து கணவருக்குத் தெரியாமலே பாஸ்போட், வீசா எடுத்து தனது நான்கு வயது குழந் தையையும் பரிதவிக்க விட்டு விட்டு ஏதோவொரு நாட்டுக்குப் போய் விட்டார். அவளது கணவன் 10 மாதங்களாகத் தேடிக்கொண்டிருக்கிறார். இதுமாத்திரமல்ல சில கிராமங்களில் 15 வயதுகூட அடையாத சிறுமிகளை குறிப்பிட்ட சில வெளிநாட்டு முகவர் கள் வயதைக் கூட்டி பாஸ்போட் போன்ற வற்றை எடுத்து வெளிநாட்டுக்கு அனுப்பிவைக்கும் கொடுமைகளையும் கேள்விப்படுகிறோம் என பெண்கள் வலையமைப்பின் தலைவி தெரிவித்தார்.


0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்