தனது மகளைப் பாலியல் வல்லுறவு புரிந்து பெண்பிள்ளை ஒன்றுக்குத் தாயாக்கிய தந்தை ஒருவருக்கு மட்டக்களப்பு மேல்நீதிமன்றத்தில் 20 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 50,000 ரூபா தண்டமும் விதித்துத் தீர்ப்பளிக்கப் பட்டுள்ளது. மட்டக்களப்பு மேல்நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் இத் தீர்ப்பை
வழங்கினார். மட்டக் களப்பு மாவட்டத்திலுள்ள பாவக்கொடிச் சேனை எனும்
பின்தங்கிய பிரதேசச் சேர்ந்த முத்துலிங்கம் பாலசுந்தரம் எனும் 47 வயது
நபருக்கு எதிராகத் தொடர்ரப்பட்ட மேற்படி வழக்கில் எதிரியான மேற்படி நபர்
குற்றத்தை ஏற்றுக் கொண்டதை யடுத்தே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
எதிரியான முத்துலிங்கம் பாலசுந்தரம் தனது மனைவி கூலி வேலைக்குச் சென்ற
பின்னர் பாலியல் வல்வுறவுக்குள்ளாக்கி கர்ப்பம் தரிக்க
வைத்துள்ளார். அவரது மகள் 6 மாதக் கர்ப்பிணியாக இருக்கும்போது சட்ட வைத்திய அதிகாரியின்
அறிக்கையுடன் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் அவரது தந்தைக்கு எதிராக
வழக்குத் தொடரப்பட்டு பின்னர் அது மட்டக்களப்பு மேல்நீதிமன்றுக்கு
மாற்றப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது
மட்டக்களப்பு மேல்நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் இறுதியாக விசாரணை
நடைபெற்றபோது, எதிரியான முத்துலிங்கம் பாலசுந்தரம் தம்மீது சுமத்தப்பட்ட
குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து எதிரிக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனையும் 50,000ரூபா தண்டமும்
விதித்து நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் தீர்ப்பளித்தார். 50,000 ரூபா தண்டம் செலுத்தத் தவறினால் மேலும் இரு வருடங்கள் கடூழிய சிறைத்
தண்டனை அனுபவிக்க வேண்டுமெனவும் நீதிபதி தீர்ப்பில் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment