/* up Facebook

Jul 31, 2014

பாலின நோய்கள்

பொதுவாக பாலின நோய்களை தடுப்பதற்கு மருந்து ஏதுவும் கிடையாது. ஆனால், இவைகளை நம் உடம்பில் மேலும் பரவாமல் இருக்க, சில பாதுகாப்பு முறைகளை கையாளலாம். இப்பொழுது உள்ள பாலின நோய்களில், மிகக் கொடுமையானது ‘எய்ட்ஸ்’ சிபிலிஸ், கொனேரியா போன்றவைகள் தான்.எயிட்ஸ் நோய் என்ற மிக நுண்ணிய வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது. இதை ‘ஹெச்ஐவி’ என்றும் அழைக்கலாம். இவைகள் ஒரு கூட்டுக் குடும்பம் போல வாழ்கின்றன. இது நம்முடைய நோய் எதிர்பு சக்தியை அழித்து, பல தொற்று வியாதிகள் நம் உடலில் ஏற்பட காரணமாகிறது. இது தாக்கி, சுமார் 5 வருடம் வரை எந்த அறிகுறியும் ஏற்படாது,பிறகு மெல்ல மெல்ல பல நோயின் ஆரம்பமாகின்றன. இதைத் தடுக்கவோ, அழிக்கவோ இதுவரை மருந்து கிடையாது. வெளிபடையாக நோயின் அறிகுறிகள் ஏற்பட்ட 2-3 ஆண்டுகளில் மரணம் ஏற்படும்.

சிபிலிஸ் என்ற பாலின நோய், ‘ஸ்பைரோசீட்டஸ்’ என்ற நுண்ணிய கிருமிகளால் ஏற்படுவது. இதனுடைய அறிகுறிகள், சாதாலண தோல் வியாதியைப் போல காணப்பட்டு, பிறகு மரைந்து விடும். இதனால் இது பெரும்பாலும் அலட்சியப்படுத்தபடுகிறது.  இது சுமார் 30 ஆண்டு காலம், பல அறிகுறிகளை ஏற்படுத்தி மறைந்து, உடல் உள் உறுப்புகளைத் தாக்கிய வண்ணம் இருக்கும். முற்றிய நிலையில் மரணம் நிச்சயம். ஆரம்ப கட்டங்களில், இதற்கு மருந்துகள் உண்டு. ’கொனோரியா’ என்ற நோய் மிகப் பரவலாகக் காணப்படும் நோய். சுமார் 80 சதம் பெண்கள், எந்தவித அறிகுறியும் இல்லாமல் இதைச் சுமந்தே செல்கின்றனர். ஏனென்றால், இந்த நோய் கண்டவர்களின் படுக்கை, தலையணை, டவல் போன்றவற்றால், இது எளிதில் பிறரிடம் பரவும். இதற்கு மருந்துகள் உண்டு,

பொதுவாக தோலிலேயோ, பாலின உறுப்புகளிலேயோ, எதும் மாற்றம் ஏற்பட்டால், உடனே சரும நோய் டாக்டரிடம் அல்லது பாலின டாக்டரிடமோ காட்ட வேண்டும்,இதைத் தவிர இன்னும் பல பாலின நோய்க்கிருமிகள் உள்ளன. குறிப்பிட்டு சொல்ல முடியாத பல பாலின நோய்களும் உண்டு.
...மேலும்

Jul 30, 2014

பணிப் பெண்ணாக போன என் மகளுக்கு பைத்தியமா? தாய் பதறல்எமது மகளை எவ்­வ­ளவோ சொல்லித் தடுத்துப் பார்த்தோம். கூழோ கஞ்­சியோ ஒன்­றாக இருந்து குடிப்போம். நீ போக­வேண்டாம் என்று தடுத்தோம். ஆனால் முக­வரின் ஆசை வார்த்­தையில் மயங்­கிப்­போன எனது மகள், குடும்­பத்தின் வறுமை நிலையை, தனது தம்பி தங்­கை­யரின் எதிர்­கால வாழ்வை மனங்­கொண்டு தான் போக வேண்டும் என்று அடம்­பி­டித்தாள்.

“கொழும்பு விமான நிலை­யத்­தி­லி­ருந்து ஒரு தொலை­பேசி அழைப்பு எனக்கு வந்­தது. அன்று காலை எட்டு மணிக்கு முன்னர் உனது மகளை நீ வந்த பொறுப்­பேற்­காமல் விட்டால், அவளை நாம் மன­நோ­யாளர் வைத்­திய சாலைக்கு அனுப்பி விடுவோம். உனது மகள் மன­நோய்க்கு ஆளா­கி­யுள்ளார். என்று தெரி­வித்­தனர். இத­னைக்­கேட்டு நான் பத­றிப்­போனேன்”.

இவ்­வாறு மூதூர் லிங்க புரத்தைச் சேர்ந்த தாயா­ரான கோகில நாயகி செல்­வக்­குமார் தெரி­வித்தார். அவர் அது தொடர்பில் விளக்கிக் கூறு­கையில், 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி எனது மகள் துஷாந்­தினி பணிப்­பெண்­ணாக சவூ­திக்குச் சென்­றி­ருந்தார். அவர் திடீரென கடந்த மாதம் ஒன்­பதாம் திகதி (09.06.2014) பண்­டா­ர­நா­யக்கா விமான நிலை­யத்தில் வந்­தி­றங்­கி­யுள்ளார். அப்­போ­துதான் மேற்­படி தகவல் எனக்கு கிட்­டி­யது.

இந்தத் தக­வலைக் கேட்டு நான் அதிர்ந்­து­போனேன். தொலை­பே­சியில் தொடர்பு கொண்­ட­வ­ரிடம் கூறினேன், ” நாங்கள் மூதூர் பிர­தே­சத்தைச் சேர்ந்­த­வர்கள் உடனே வர­மு­டி­யாது அங்கு வரு­வ­தாயின் மாலை ஐந்து மணிக்கு மேலா­கி­விடும் என்று அழுதேன்”. அவர் கூறினார் “உங்கள் மகளை பஸ்­ஸிலோ ரயி­லிலோ கொண்டு போக முடி­யாது” என்று.

நான் ஊர­வரை கும்­பிட்டு மன்­றாடி கடன்­பெற்­றுக்­கொண்டு வேன் ஒன்றை வாட­கைக்கு அமர்த்தி மூன்­று­பேரை துணைக்கு அழைத்­துக்­கொண்டு விமான நிலை­யத்­துக்குப் போனேன். அங்கு எனது மகளைக் காண­மு­டி­ய­வில்லை. எங்கள் ஒரு­வ­ருக்கும் சிங்­களம் தெரி­யாது.
மிகவும் கஷ்­டப்­பட்டு முக­வ­ரியை அறிந்­து­கொண்டு கொழும்­பி­லுள்ள ஒரு இடத்­துக்குச் சென்றோம். எனக்கு இடத்தின் பெயர் தெரி­யாது. அங்கே எனது மகள் சிறைக் கூடத்தில் அடைக்­கப்­பட்­டது போல் வைக்­கப்­பட்­டி­ருந்தாள். அவ­ளுக்கு எங்­களை அடை­யாளம் காண­மு­டி­ய­வில்லை. மயக்க நிலையில் கிடந்தாள். நானும் என்­னுடன் வந்­த­வர்­க­ளு­மாகச் சேர்ந்து மகளை ஏற்­றிக்­கொண்டு உடனே ஊருக்குத் திரும்­பினோம்.

திரு­கோ­ண­மலை பொது வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு 27 நாள் சிகிச்­சையின் பின் சாதா­ரண நிலைக்குத் திரும்­பி­யுள்ளாள் என்று கூறினார். இதனைத் தொடர்ந்து மக­ளிடம் நடந்த சம்­ப­வங்­க­ளைப்­பற்றி விசா­ரித்­த­போது, அவள் கூறி­யது அதிர்ச்­சி­ய­ளிப்­ப­தாக அமைந்­தி­ருந்­தது.

19 வய­தான அந்தப் பெண் கூறு­கையில், “லிங்­க­புரம் பாட­சா­லையில் க.பொ.த. சாதா­ரண தரம் வரை படித்து பரீட்­சைக்கு தோற்­றி­விட்டு முடி­வுக்­காக நான் காத்­துக்­கொண்­டி­ருந்தேன். எனக்கு அப்­போது வயது 17. எனது தந்தை கூலித் தொழிலைச் செய்து வரு­பவர். எனக்கு இரண்டு ஆண் சகோ­த­ரர்­களும், நான்கு பெண் சகோ­த­ரி­களும் உள்ளனர். எல்­லோ­ருக்கும் மூத்­தவள் நான்.

யுத்தம், இடம்­பெ­யர்வு, வீடு­வாசல் இழப்பு, தொழி­லின்மை போன்ற பல்­வேறு கார­ணங்­க­ளினால் சொல்­ல­மு­டி­யாத வறு­மையை எமது குடும்பம் அனு­ப­வித்­துக்­கொண்­டி­ருந்­தது. அவ் வேளை­யில்தான் ஒரு நபர், “நான் கிளி­வெட்­டியைச் சேர்ந்­தவன். வெளி­நாட்­டுக்கு பணிப்­பெண்­களை அனுப்பிக் கொண்­டி­ருக்­கிறேன்” என சொல்­லிக்­கொண்டு மட்­டக்­க­ளப்­பி­லி­ருந்து வந்­தி­ருந்தார். எனது குடும்­பத்தின் வறுமை நிலையை எடுத்துக் கூறி எனக்கு வெளி­நாடு செல்­ல­மு­டி­யுமா என வினா­வினேன். மைன­ராக இருக்கும் என்னை மேஜ­ராக மாற்றி பாஸ்போட் மற்றும் விவ­கா­ரங்­களை செய்ய வேண்டும் என்­ப­தற்­காக எனது பெயரை கிஷாந்­தினி என மாற்றி வய­தையும் 24 என உயர்த்தி சவூ­திக்கு என்னை அனுப்பி வைத்தார் அந்த முகவர் என்றார்”.

இது­பற்றி தாயார் கோகி­ல­நா­ய­கி­யிடம் விசா­ரித்­த­போது, “எமது மகளை எவ்­வ­ளவோ சொல்லித் தடுத்துப் பார்த்தோம். கூழோ கஞ்­சியோ ஒன்­றாக இருந்து குடிப்போம். நீ போக­வேண்டாம் என்று தடுத்தோம். ஆனால் முக­வரின் ஆசை வார்த்­தையில் மயங்­கிப்­போன எனது மகள், குடும்­பத்தின் வறுமை நிலையை, தனது தம்பி தங்­கை­யரின் எதிர்­கால வாழ்வை மனங்­கொண்டு தான் போக வேண்டும் என்று அடம்­பி­டித்தாள். நாங்கள் 22.12.2012 கொழும்புக்கு சென்று விமா­னத்தில் ஏற்­றி­விட்டுத் திரும்­பினோம்.

சவூ­திக்­குப்­போன எனது மகள் மூன்று மாதங்­களின் பின் அறு­ப­தா­யிரம் ரூபாவை அனுப்­பி­யி­ருந்தாள். அடுத்த மூன்று மாதங்­களின் பின் அறு­ப­தா­யிரம் ரூபாவை வெஸ்டன் யூனியன் மூலம் அனுப்­பி­யி­ருந்தாள். மகள் சவூ­திக்குப் பய­ண­மா­கும்­போது, குறித்த முகவர் ஜீவராஜ் 10 ஆயிரம் ரூபாவை முற்­ப­ண­மாகத் தந்து பிள்­ளைக்கு உடுப்­பெ­டுக்­கும்­படி கூறி­யி­ருந்தார். வேறு எந்தப் பணமும் எமக்குத் தரப்­ப­ட­வில்லை.

இறு­தி­யாக, ஜூன் மாதம் 2013 ஆம் ஆண்டு இரண்டாம் முறை­யாக 20 ஆயிரம் ரூபாவை எமக்கு அனுப்பி வைத்­ததன் பின்னர் இவ்­வ­ருடம் (2014) ஜூன் மாதம் வரை எமது மக­ளி­ட­மி­ருந்து எவ்­வித பணமும் வர­வில்லை. நாங்கள் மக­ளுடன் தொடர்­பு­கொள்ள முனைந்தும் எங்களால் முடி­ய­வில்லை. அவர் எங்­க­ளுடன் தொடர்பு கொள்­ள­மு­டி­யுமே தவிர எங்­களால் மக­ளுடன் தொடர்பு கொள்­ளவே முடி­யாது.

சுமார் ஒரு வரு­டத்­துக்கு மேலாக மகளின் தொடர்­பின்­மையால் நாங்கள் மிகவும் பயந்­து­போ­யி­ருந்தோம். அவளின் தம்பி தங்­கையர் ஆசை­யோடு கேட்­பார்கள். ஆனால் எந்த பதி­லையும் எமக்கு சொல்ல முடி­யாமல் இருந்­தது. முகவர் ஜீவ­ரா­ஜிடம் மகளின் நிலை அறி­வ­தற்கு தொடர்பு கொள்ள முயற்சி செய்தோம்.ஆனால் அவரை கண்­டு­பி­டிக்­கவே முடி­ய­வில்லை. என்ன செய்­வது என்று தெரி­யாமல் நாங்கள் ஏங்கிக் கொண்­டி­ருந்தோம்.

பணிப்­பெண்­ணாக சென்ற யுவ­தி­யிடம் சவூ­தியில் என்ன நடந்­தது என்று விசா­ரித்தோம். அவர் விளக்­க­மாக கூறினார். “கொழும்­பி­லி­ருந்து பல­ருடன் பயணம் செய்த நான் விமான நிலை­யத்தில் இறங்­கி­ய­போது சொல்லி வைத்­தது போல் ஒருவர் வந்­தி­ருந்தார். தனது வாக­னத்தில் ஏற்­றிக்­கொண்டு விமான நிலை­யத்­தி­லி­ருந்து தொலை­தூ­ரத்­தி­லுள்ள தனது தாயாரின் வீட்டில் என்னை கொண்­டுபோய் விட்டார். அக்­கு­டும்­பத்­த­வரின் அங்­கத்­தவர் தொகை அதிகம். கடு­மை­யாக வேலை செய்­ய­வேண்­டிய நிலை காணப்­பட்­டது.

இரண்டு தட­வைகள் எனது சம்­ப­ளத்தைத் தந்த பின்பு, பத்து மாதங் களுக்கும் மேலாக சம்பளப் பணம் எனக்குத் தர­வில்லை. எனது குடும்­பத்தின் கஷ்ட நிலையைக் கூறி சம்­ப­ளத்தைக் கேட்டேன். அனுப்பி வைப்­ப­தாகக் கூறி­னார்கள். பல மாதங்கள் சென்ற கார­ணத்­தினால் சம்­பளப் பணம் கிடைக்­கா­ததை எனது பெற்­றோ­ரிற்குச் சொல்ல வேண்டும், போன் பண்ண போன் தாருங்கள் என மன்­றா­டினேன். அங்­கி­ருந்து வாட்­ட­சாட்­ட­மான ஆண் ஒருவர் என்னை தனது காலால் உதைத்தார். வீட்­டி­லுள்ள சட்டம் கொண்டு என்னைத் தாக்­கினார். அவ்­வ­ள­வுதான். நான் மயக்­க­முற்று விட்டேன். மீண்டும் சுய­நி­னைவு வந்­தது என்­பது எப்­போது என எனக்கு சரி­யாகச் சொல்ல முடி­யா­விட்­டாலும், திரு­கோ­ண­மலை வைத்­தி­ய­சா­லைக்கு வந்­த­பின்பே சுய­நி­னைவு வந்­தது என அவர் தெரி­வித்தார்.

அவரின் தாயா­ரிடம் மகளை எவ்­வாறு இலங்­கைக்கு கொண்­டு­வர ஏற்­பா­டுகள் செய்­தீர்கள் என வின­வி­ய­போது, “ எனது மகள் 10 மாதங்­க­ளுக்கு மேலா­கியும் எங்­க­ளுடன் தொடர்பு இல்­லாத கார­ணத்­தினால், அவரின் சிறிய தாயார் ஒருவர் அங்கு உள்ளார். அவ­ருடன் தொலை­பே­சியில் தொடர்பு கொண்டேன். அவர் எனது துன்­பத்­தையும் அவ­லத்­தையும் தெரிந்து கொண்டு சவூ­தி­யி­லுள்ள இலங்கைத் தூத­ர­கத்துடன் தொடர்பை ஏற்­ப­டுத்தி பிள்­ளைக்கு உத­வும்­படி கோரி­யுள்ளார். அவ­ரு­டைய உத­வி­யினால் தூத­ரகம் எனது மகளை ஊருக்குக் கொண்­டு­வர ஏற்­பாடு செய்­தி­ருந்­தது என்று கேள்­விப்­பட்டேன் என அந்தத் தாய் குறிப்­பிட்டார்.

மேலும் அவர் குறிப்­பி­டு­கையில், எனது மகள் எம்­முடன் தொடர்பு கொள்ள வேண்­டு­மாயின், தூர இடத்­திற்கு அழைத்துச் சென்று ‘பூத்தில்’ கதைக்க விடு­வார்கள். வீட்டுத் தொலை­பே­சியோ, கைய­டக்கத் தொலை­பே­சி­யையோ தரு­வ­தில்லை. சம்­ப­ளத்தைத் தாருங்கள் என்று கேட்­ட­தற்­கா­கவே, எனது மகள் வீட்­டுக்­கார எஜ­மானால் கொடூ­ர­மாகத் தாக்­கப்­பட்­டுள்ளார். காருக்­குள்­கூட தூக்கி எறி­யப்­பட்­டி­ருக்­கிறாள். அவ­ளுக்கு திரு­கோ­ண­மலை வைத்­தி­ய­சா­லையில் வைத்து சிறந்த முறையில் சிகிச்சை அளித்­ததன் கார­ண­மா­கவே, மீண்டும் எனது மகள் மறு­பி­றவி எடுத்­துள்ளார் என அந்தத் தாய் கூறினார்.

இப் பெண்­ணுக்கு நேர்ந்த கதி­பற்றி திரு­கோ­ண­மலை மாவட்ட பெண்கள் வலை­ய­மைப்பின் தலை­வியை வினா­வி­ய­போது, திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் இது­போன்ற பல சம்­ப­வங்கள் நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றன. அப்­பாவிப் பெண்கள் ஏமாற்­றப்­ப­டு­கின்­றார்கள். யுத்­தத்­திற்குப் பின் இந்த நிலை­மைகள் அதி­க­ரித்த வண்­ணமே இருக்­கின்­றன. வறுமை, வாழ்­வா­த­ார­மற்ற நிலை, குடும்பத் தலை­வர்­களைப் பறி­கொ­டுத்த பரி­தாபம் போன்ற பல்­வேறு காரணங்களால் மூதூரின் பல கிராமங்களில் இக்கொடுமைகள்
நடந்துகொண்டிருக்கின்றன. முன்னம் போடி வெட்டை என்ற கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் முகவரின் ஆசை வார்த்தைக்கு ஏமார்ந்து கணவருக்குத் தெரியாமலே பாஸ்போட், வீசா எடுத்து தனது நான்கு வயது குழந் தையையும் பரிதவிக்க விட்டு விட்டு ஏதோவொரு நாட்டுக்குப் போய் விட்டார். அவளது கணவன் 10 மாதங்களாகத் தேடிக்கொண்டிருக்கிறார். இதுமாத்திரமல்ல சில கிராமங்களில் 15 வயதுகூட அடையாத சிறுமிகளை குறிப்பிட்ட சில வெளிநாட்டு முகவர் கள் வயதைக் கூட்டி பாஸ்போட் போன்ற வற்றை எடுத்து வெளிநாட்டுக்கு அனுப்பிவைக்கும் கொடுமைகளையும் கேள்விப்படுகிறோம் என பெண்கள் வலையமைப்பின் தலைவி தெரிவித்தார்.


...மேலும்

முதல் மூன்று மாதங்களில் நினைவில்கொள்ள வேண்டியவை:


முதல் மூன்று மாதங்களில் நினைவில்கொள்ள வேண்டியவை:

சளி, காய்ச்சல் என ஏதேனும் நோய் பாதிப்பு ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். 

மகப்பேறு மருத்துவர் அல்லாமல் பொது மருத்துவரிடம் காண்பிக்க நேர்கையில், தான் தாய்மை அடைந்திருப்பதைச் சொல்ல வேண்டும். மருத்துவர் அதற்கேற்றபடி மருந்துகளைப் பரிந்துரை செய்வார்.

நீண்ட நேரம் நின்றுகொண்டு வேலை செய்பவர்கள், அவ்வப்போது உட்கார்ந்து ஓய்வு எடுக்க வேண்டும். உடலை வருத்திக்கொள்ளக் கூடாது.

இரவு நேரப் பணி செய்பவர்கள், பணி நேரத்தை அவர்களுக்குத் தக்கபடி மாற்றிக்கொள்வது நலம்.

முதல் மூன்று மாதங்களில் உடலையும் மனதையும் தேவை இல்லாமல் வருத்திக்கொள்ளக் கூடாது.

முதல் மூன்று மாதங்களில் கம்ப்யூட்டர் முன் நீண்ட நேரம் அமர்வது நல்லது அல்ல. சேரில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்பவர்கள் அடிக்கடி சிறிது தூரம் நடந்துவர வேண்டும்.

வாந்தியைத் தவிர்க்க அடிக்கடி சிறிய இடைவெளிவிட்டுச் சாப்பிட வேண்டும்.

தொலைதூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

சோர்வு ஏற்படுத்தக்கூடிய வேலைகளைச் செய்ய வேண்டாம்.

தாயின் கவனம் முழுக்கக் கருவில் வளரும் தன் குழந்தையின் மீது இருப்பது நலம்.

அடிவயிற்றில் வலியோ, லேசாக ரத்தக் கசிவு அல்லது ரத்தப்போக்கோ இருந்தால், உடனடியாக மகப்பேறு மருத்துவரை அணுக வேண்டும். லேசாகத்தானே இருக்கிறது என்று அலட்சியப்படுத்திவிடக் கூடாது.


...மேலும்

Jul 29, 2014

அரசியலை விரும்பித் தேர்ந்தெடுத்த மத்திய அமைச்சர் நஜ்மா - சரோஜ் நாராயணசுவாமி

1970-ம் ஆண்டில் இந்தியாவில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஒரு இளைஞர் நஜ்மாவின் வீட்டுக்குக் கணக்கெடுப்புக்காக வந்திருந்தார். தகவல்களைச் சொன்னபடியே அந்த இளைஞரைப் பற்றி விசாரித் தார் நஜ்மா. வேதியியலில் முதல் வகுப்பில் அவர் தேறியிருந்தார். நீங்கள் ஏன் இப்படிப்பட்ட தற்காலிக வேலையில் சேர்ந்தீர்கள்? என்று கேட்டபோது, வேலை கிடைக்கவில்லை என்று அந்த இளைஞர் பதிலளித்தார். நன்கு படித்த ஒரு இளைஞரின் இந்த பதில் நஜ்மாவைப் பெரிதும் யோசிக்கவைத்தது. திறமைசாலிகளாக விளங்கும் இளைய தலைமுறையினரை முழுமையாகப் பயன் படுத்திக்கொள்வது நம் முன்னேற்றத்துக்கு முக்கிய மானது என்பது அவருக்குப் புரிந்தது. தீவிர சிந்தனைக்குப் பிறகு இதற்கான செயல் திட்டம் ஒன்றைத் தயாரித்து, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியிடம் வழங்கினார். அப்போது நஜ்மாவின் வயது சுமார் முப்பதுதான்.
 
அரசியல் தேர்வு
இந்திரா, அதைத் தமது பிரதான செயலர் பீ.என். ஹக்ஸரிடம் கொடுக்குமாறு கூறினார். அதைப் படித்துப் பார்த்த ஹக்ஸர், “இது மிகச் சிறந்த திட்டம்” என்று பாராட்டியதோடு அதை உடனே அரசியல்வாதிகளிடம் கொடுக்கச் சொல்லி ஆலோசனை வழங் கினார். அதற்கு நஜ்மா, “நான் அரசியல்வாதிகளுக்குக் கொடுக்கப்போவதில்லை. நானே ஒரு அரசியல்வாதி ஆகப்போகிறேன்” என்று சொல்லியிருக்கிறார். சொன்ன வார்த்தைகளை நிரூபித்தும் விட்டார்.
“1980-ம் ஆண்டு என் நாற்பதாவது வயதில், தேர்தலில் போட்டியிட்டு ராஜ்யசபா உறுப்பினரானேன். 1985-ல், ராஜ்யசபாவின் துணைத் தலைவர் பதவியேற்று ஏறத்தாழ 17 ஆண்டுக் காலம் அந்தப் பதவியில் இருந்தேன்” என்று சொல்லும் நஜ்மா, தற்போது பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கிறார். அமைச்சரவையின் ஒரே முஸ்லிம் பெண்ணான இவர், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகிக்கிறார்.
 
முளைவிட்ட நாட்டுப்பற்று
டாக்டர் நஜ்மா அக்பரலி ஹெப்துல்லா 1960-ம் ஆண்டு விலங்கியல் துறையில் பல்கலைக்கழகத்திலேயே முதலிடம் பெற்ற மாணவியாகத் திகழ்ந்தார். சுதந்திர இந்தியாவின் முதலாவது கல்வித் துறை அமைச்சரான மௌலானா அபுல்கலாம் ஆசாத், இவருடைய தகப்பனார் வழி பாட்டியின் சகோதரர். இவர் குடும்பத்தார் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டிருந்தனர். தேசிய உணர்வும் நாட்டுப்பற்றும் அப்போதே நஜ்மாவையும் தொற்றிக்கொண்டன.
 
கட்சியோடு ஏற்பட்ட முரண்
காங்கிரஸ் ஆட்சியில் பணியாற்றியபோது, பல பொறுப் பான பதவிகளை வகித்துச் சிறப்புடன் பணி யாற்றினார். கட்சியின் பொதுச் செயலராக இருந்தார். மாநிலங்களவையின் துணைத் தலைவராக நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலராக இருந்தார். காங்கிரஸ் கட்சியினரின் செயல்பாட்டு முறைகளோடு ஏற்பட்ட வேறுபாடுகளால் 2004-ம் ஆண்டு கட்சியிலிருந்து விலகி, பா.ஜ.க.வில் சேர்ந்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணி குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் இவரைக் களமிறக்கியது. அதில் தோற் றாலும், 2004-ல் மாநிலங்களவை உறுப்பினரானார். பிறகு பா.ஜ.க.வின் துணத் தலைவராக நியமிக்கப்பட்டார். இவருடைய கணவர் அக்பரலி ஏ. ஹெப்துல்லா, மும்பையில் தொழிலதிபராக இருந்தார். இவரது மூன்று மகள்களும் அமெரிக்காவில் வசிக்கிறனர். நடிகர் ஆமிர் கான் நஜ்மா ஹெப்துல்லாவின் உறவினர் என்பது ஒரு கொசுறுச் செய்தி.
 
தொடரும் பணிகள்
நஜ்மா பல புத்தகங்களை எழுதியுள்ளார். இந்திய - மேற்காசிய உறவுகள், உலகளாவிய நெடுநோக்கு, மகளிருக்கான சீர்திருத்தங்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவின் வளர்ச்சி போன்ற பல தலைப்புகளில் இவரது படைப்புக்கள் பளிச்சிடுகின்றன. தன் 22-வது வயதிலேயே டென்வர் பல்கலைக் கழகத்திலிருந்து கார்டியக் அனாடமி (இதய உள்ளமைப்பியல்) துறையில் டாக்டரேட் பட்டம் பெற்றார். இந்திய அரசின் கவுன்சில் ஆஃப் சைன்டிஃபிக் அண்ட் இண்டஸ்ட்ரியல் கவுன்சிலிலும் விஞ்ஞானிகள் குழுவிலும் பணியாற்றினார்.
 
முகம் நூறு
நஜ்மா பல புத்தகங்களை எழுதியுள்ளார். இந்திய - மேற்காசிய உறவுகள், உலகளாவிய நெடுநோக்கு, மகளிருக்கான சீர்திருத்தங்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவின் வளர்ச்சி போன்ற பல தலைப்புகளில் இவரது படைப்புக்கள் பளிச்சிடுகின்றன. தன் 22-வது வயதிலேயே டென்வர் பல்கலைக் கழகத்திலிருந்து கார்டியக் அனாடமி (இதய உள்ளமைப்பியல்) துறையில் டாக்டரேட் பட்டம் பெற்றார். இந்திய அரசின் கவுன்சில் ஆஃப் சைன்டிஃபிக் அண்ட் இண்டஸ்ட்ரியல் கவுன்சிலிலும் விஞ்ஞானிகள் குழுவிலும் பணியாற்றினார். 1999-ம் ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி, பெர்லினில் நடைபெற்ற இண்டர் பார்லி மெண்டரி யூனியன் - ஐ.பி.யூ. எனும் அமைப்பின், 165-வது கூட்டத் தொடரில் டாக்டர் நஜ்மா, ஐ.பீ.யூ.வின் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உலகின் 140 பார்லிமெண்டுகளைக் கொண்ட இந்த ஐ.பி.யூ. அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்ற முதல் பெண் இவர்தான். ஐ.பி.யூ.வின் ஆயுட்கால கவுரவத் தலைவராக இருந்துவருகிறார். இந்திய - அரபு சங்கத்தின் தலைவராகவும் இந்திய இஸ்லாமிய கலாச்சார மையத்தின் அறங்காவலர்கள் குழு உறுப்பினராகவும் இருக்கிறார். ஐ.நா. வளர்ச்சித் திட்ட அமைப்பான யூ.என்.டி.பி.யின் மனித ஆற்றல் மேம் பாட்டுக்கான தூதர் என இவரது சிறப்புக்கள் தொடர்கின்றன.
 
சர்ச்சைக்கு விளக்கம்
மகளிர் பிரச்சினைகள் குறித்து மிகுந்த ஆர்வமும் அக்கறையும் கொண்டவர் நஜ்மா. 1997-ல் மகளிர் அந்தஸ்து குறித்த ஐ.நா. கமிஷனின் இந்தியப் பிரதிநிதிக் குழுவின் தலைவராகப் பங்கேற்றார். நான்காவது உலக மகளிர் மாநாட்டில் மிகுந்த முனைப்புடன் செயல்பட்டார். 1985-ம் ஆண்டு இந்தியக் குடும்பத் தலைவிகள் சம்மேளனத் தலைவராக இருந்தார். ‘நயி ரோஷ்னி’ (புதிய ஒளி) என்ற திட்டம் ஒன்றை இவர் வகுத்திருக்கிறார். சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை, தொழிற் பயிற்சி, படிப்பு வசதி, மைக்ரோ க்ரெடிட் ஆகியவை இத்திட்டத்தில் அடங்கும்.

“மத்தியப் பிரதேசம், ஜம்மு - காஷ்மீர், பிஹார் ஆகிய மாநிலங்கள் பாரம்பரியக் கைவினைத் தொழில்களுக்குப் பேர்போனவை. இங்குள்ள கைவினைக் கலைஞர்கள் முன்னேற உதவும் ‘உஸ்தாத்’ என்ற திட்டத்தையும் முழு வீச்சில் செயல்படுத்தப் போகி றேன்” என்கிறார் அமைச்சர் நஜ்மா. சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சரான இவர், சமீபத்தில் தெரிவித்த ஒரு கருத்து சர்ச்சைக்குள்ளானது. முஸ்லிம்கள் சிறுபான்மையினர் அல்ல, பார்ஸிகளே சிறு பான்மையினர் என்றார் அவர். பார்ஸிக்கள், கிறிஸ்துவர்கள், ஜைனர்கள், பவுத்தர்கள் மற்றும் சீக்கியர்கள் ஆகியோரே சிறுபான்மையோர் பட்டியலில் அடங்குவர் என்றும் கூறியிருந்தார். தனது அமைச்சகம் முஸ்லிம் விவகாரங்களுக்கானது அல்ல; சிறுபான்மையோர் விவகாரங் களுக்கானது என்கிறார். “சிறுபான்மையோருக்கு சமச் சீரான வாய்ப்பளிப்பதுதான், இப்போதுள்ள அவசியமான அவசரத் தேவை; ஆனால் இதற்கு இட ஒதுக்கீடு ஒரு விடையாகாது” என்று உறுதியாகக் கூறுகிறார்.

“அரசியல் சாசனத்தின் கீழ், மதத்தின் அடிப்படையிலான இடஒதுக்கீடு என்பது, அனு மதிக்க முடியாதது. அது, இந்தப் பிரச்சினைக்கான தீர்வும் அல்ல” என்கிறார். பாரதிய ஜனதா கட்சி தலைமை வகிக்கும் அமைச்சரவையில் இருப்பதாலேயே இவர் இப்படிப் பேசுகிறார் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மொழி உள்ளிட்ட பல்வேறு வகையிலான சிறுபான்மைச் சமூகத்தினர்களும், நாட்டின் வளர்ச்சியிலும் முன்னேற்றத் திலும் பங்கேற்பதன் மூலம், உலகின் முதலிடத்தில் நிற்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியாதிகழ முடியும் என்பது நஜ்மாவின் உறுதியான கருத்து
 
நன்றி - த ஹிந்து
...மேலும்

Jul 28, 2014

உச்ச நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி: வரதட்சணை தடுப்பு சட்டத்தில் மாற்றம் - மத்திய அரசு பரிசீலனை

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் எதிரொலியாக வரதட்சணை தடுப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. வரதட்சணை தடுப்புச் சட்டம், 2009-ன் கீழ் பெண்கள் புகார் அளித்தால் கணவர் மற்றும் மாமனார், மாமியார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சட்டத்தை சில பெண்கள் தவறாக பயன்படுத்தி வருவதாக சமீபத்திய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

சமீபத்தில் வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், “நாட்டில் அதிக அளவில் தவறாக பயன்படுத்தப்படும் சட்டப் பிரிவாக வரதட்சணை தடுப்புச் சட்டம் உள்ளது. இப்பிரிவை பெண்கள் தங்கள் கணவர் மற்றும் கணவர் வீட்டினரை துன்புறுத்துவதற்காக பயன்படுத்துகின்றனர்” என்று கூறியிருந்தது. மேலும், “இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 498 (ஏ)-ன் கீழ் பெண்கள் வரதட்சணை புகார் அளித்தால் போலீசார் தன்னிச்சையாக கைது நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது. புகாரின் தன்மையை ஆய்வு செய்து, கைது செய்ய வேண்டிய அவசியம் உள்ளதா என்பதை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாஜிஸ்திரேட்களும் கைதுக்கான முகாந்திரம் உள்ளதா என்பதை எழுத்து மூலம் பதிவு செய்த பிறகு காவலில் வைக்க உத்தரவிட வேண்டும்” என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

இச்சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதன் அவசியம் குறித்து தேசிய பெண்கள் நல கமிஷனும் மத்திய அரசுக்கு பரிந்துரை அனுப்பியிருந்தது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, வரதட்சணை தடுப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவது குறித்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை ஆலோசித்து வருகிறது. இதுகுறித்து மாதிரி சட்டம் ஒன்றை அந்த அமைச்சகம் தயாரித்து அனுப்பி வைக்க உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

அதன்படி, வரதட்சணை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் அளித்து, விசாரணையில் அது தவறானது என்று தெரிய வந்தால் புகார் அளித்தவருக்கு அபராதம் மற்றும் குறைந்தபட்ச தண்டனை வழங்குவது குறித்தும் பரிந்துரை செய்யப் பட்டுள்ளது. மேலும், வரதட்சணை புகார் விஷயத்தில் திருமணத்தின்போது அளிக்கப்படும் புகார், திருமணம் தொடர்பாக அளிக்கப்படும் புகார், திருமணத்துக்குப் பின்பு அளிக்கப்படும் புகார் என்று மூன்று கட்டங்களாக பிரித்து, அதற்கேற்ப விசாரணை விவரங்களை உள்ளடக்கி மாதிரி சட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன்மீது விவாதம் நடத்தப்பட்டு பின்னர் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நன்றி - த ஹிந்து
...மேலும்

ஆண் டாக்டர்களிடம் செல்லும் பெண் நோயாளிகளின் மிக முக்கிய கவனத்திற்கு

பெண் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது, ஆண் டாக்டர்கள் கடைப் பிடிக்க வேண்டிய மருத்துவ நெறிமுறைகள் தனியாக உள்ளன. தனியார் மருத்துவமனை, தனியார் கிளினிக்கிற்கு சிகிச்சைக்கு வரும் ஒரு பெண் நோயாளியை, ஆண் டாக்டர் பரிசோதிக்கும்போது, அந்த அறையில் பெண் செவிலியர் அல்லது பெண் உதவியா ளர் கட்டாயம் இருக்க வேண்டும். மேலும் பெண் நோயாளியுடன்வரும் பெண் உதவியாளரும் அறையில் இருக்கலாம்.

பெண் நோயாளி தங்களுடைய பிரச்சினையை சொல்லிய பிறகு, இதற்கு என்ன மாதிரியான பரிசோதனைகளை (தொடுதல்) செய்ய போகிறோம் என்பதை முன் கூட்டியே நோயாளியிடம், ஆண் டாக்டர் தெரிவிக்க வேண்டும். அதற்கு பெண் நோயாளி சம்மதம் தெரிவித்த பிறகே, பரிசோதனைகளை டாக்டர் செய்ய வேண்டும்.வயிறுவலி, கல்லீரல், சிறுநீரகம்போன்ற பிரச்சனைகளுடன் பெண்கள் வருவார்கள். இதற்கு வயிற்று பகுதியை தொட்டும் அழுத்தியும் தட்டியும் பார்த்துதான் பிரச்சனையைக் கண்டறிய முடியும்.

இந்த பரிசோதனைகளை செய்ய ஆண் டாக்டர், கண்டிப்பாக பெ ண் நோயாளியின் அனுமதி பெறவேண்டும். அதன்பின்னரே பெ ண் நோயாளியின் வயிற்றை தொட வோ, அழுத்தவோ, தட்டிப்பார்க்க வோ வேண்டும். அப்போது, அதற்கு பெண் நோயாளி ஆட்சேபம் தெரிவி த்தால், ஆண் டாக்டர் உடனடியாக தன்னுடைய கையை எடுத்துவிட வேண்டும். 

புகார் கொடுக்கலாம்:
சிகிச்சைக்கு வரும் பெண் நோயாளியிடம், ஆண் டாக்டர்கள் தவறான தொடுதல் முறையில் சில்மிஷ வேலையில் ஈடுபட்டால்,  மருத்துவக் கவுன்சிலில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளிக்கலாம். அந்த புகாரின் படி விசாரணை நடத்தப்படும். பெண் நோயாளியிடம் சில்மிஷ வேலையில் ஈடுபட்டது உண்மை என்று தெரியவந்தால், அந் த டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
...மேலும்

Jul 27, 2014

உடற்கூறியல் மற்றும் இனப்பெருக்கம்

பாலுணர்வின் போது, மூளை மகிழ்ச்சிகரமான உணர்வுநிலைகளை நரம்பு தூண்டுதல் மூலம் தோலின் உணர்ச்சிகள் மொழிபெயர்க்கின்றன. மேலும் மூளை நரம்புகளையும், தசைகளயும் பாலுணர்வு நடத்தையின் போது கட்டுப்படுத்துகிறது. மூளை இயக்குநீரை சீராக்குவதன் மூலம் பாலியல் ஆசைகளைத் தூண்டும் உளவியல் தோற்றக் காரணியாக நம்பப்படுகிறது. மூளையின் வெளி அடுக்கு (பெருமூளை புறணி (அ)செரிப்ரல் கார்டெக்ஸ்) சிந்தனை மற்றும் பகுத்தறிவைத் தூண்டுதல் மூலம் பாலியல் எண்ணங்கள் மற்றும் கற்பனைகளைத் தோற்றுவிப்பதாக அறியப்படுகிறது. புறணியின் கீழ் அமிக்டலா ஹிப்போகேம்பஸ், சிங்குலேட் மேன்மடிப்பு, இடைச்சுவர் மற்றும் லிம்பிக் அமைப்புகள், உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகள் தொடங்குமிடமாகவும், பாலியல் நடத்தை சீரக்குமிடமாகவும் நம்பப்படுகின்றன.

ஹைப்போதலாமஸ் பாலியல் செயல்பாட்டில் மூளை மிக முக்கியமான பகுதியாக உள்ளது. இந்த லிம்பிக் அமைப்புகளை இணைக்கும் நரம்புத்தொகுதி ஆகும். இது பல குழுக்கள் அடங்கிய மூளையின் அடிப்பகுதியில் உள்ள சிறிய பகுதியாகும். ஹைப்போதலாமஸ் முக்கியக்கூறுகளில் ஒன்று வலது கீழ்ப்புறத்திலுள்ள உள்ள பிட்யூட்டரி சுரப்பி ஆகும். பிட்யூட்டரி சுரப்பி ஹைப்போதலாமஸ் மற்றும் சுய உற்பத்தி ஹார்மோன்களை சுரக்கிறது. சுரக்கும் நான்கு முக்கிய பாலியல் ஹார்மோன்கள் ஆக்சிடோசின், நுண்ணறை ஊக்குவிக்கும் ஹார்மோன்(FSH), ஈஸ்ட்ரோஜன் மற்றும் ஆன்ட்ரோஜன் ஆகும். ஆக்ஸிடோசின் காதல் ஹார்மோன் என அழைக்கப்படுகிறது. இது உடலுறவின் உச்ச நிலையின் போது ஆண் மற்றும் பெண் ஆகிய இருவராலும் வெளியிடப்படுகிறது. இரு ஆக்சிடோசின்களுக்கும் நெருங்கிய தொடர்புள்ளதாக நம்பப்படுகிறது. புரோலாக்டிக் மற்றும் ஆக்சிடோசின் ஆகிய இரண்டும் பெண்களின் பால் உற்பத்தியைத் தூண்டுகிறது. நுண்ணறை ஊக்குவிக்கும் ஹார்மோன் (FSH) முட்டை முதிர்ச்சியைத் தூண்டி பெண்களின் அண்ட விடுபடல் மற்றும் ஆண்களின் விந்து உற்பத்தியையும் தூண்டுகிறது. மேலும், ஒரு முதிர்ந்த முட்டை வெளியீட்டில் இது அண்டவிடுப்பினைத் தூண்டுகிறது.

பெண் உடற்கூறு மற்றும் இனப்பெருக்க முறை
பெண்கள் இனப்பெருக்க மண்டலம் உள், வெளி (பிறப்புறுப்பு) இனப்பெருக்க உறுப்புகள் என இருவகைப்படும். பெண்கள் புற இனப்பெருக்க உறுப்பு (பிறப்புறுப்பு) கூட்டாக பெண்ணின் கருவாய் என அழைக்கப்படுகிறது. பெண்ணின் கருவாய், மேல் உதடு, சிறிய உதடு, பெண்குறிமூலம், யோனி, சிறுநீர்வடிகுழாயின் தொடக்கம் ஆகியவை அடங்கும். பிறப்புறுப்பைத்தூண்டல் பாலுணர்வின் அங்கமாகும். மகளிர் பிறப்புறுப்பு நபருக்கு நபர் அளவு, வடிவம், நிறம் ஆகியனவற்றில் மாறுபடுகின்றன.

புற பெண் உடற்கூறியல்
பெண்குறி மூலம்
மேலுதடு
பெண்குறிக் காம்பு
பார்த்தோலின் சுரப்பி
புணர் புழை (யோனி)
யோனி முகம் அல்லது வெளி இதழ்
 
 உள் பெண் உடற்கூறியல்
சூலகம்
கருப்பை
கருப்பை வாய் (செர்விக்ஸ்)
பாலோப்பியன் குழாய்
இனச்சேர்க்கைத் தடம்

ஆண் உடற்கூறு மற்றும் இனப்பெருக்க முறை
ஆண் இனப்பெருக்க உறுப்பு உள்/வெளி என இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. பெண் மாதவிடாய் சுழற்சி போலல்லாமல், ஆண் இனப்பெருக்கச் சுழற்சியில் அவர்களின் விந்துசுரப்பி தொடர்ந்து தினமும் மில்லியன் விந்தணுக்களை உற்பத்தி செய்கிறது.

புற ஆண் உடற்கூறியல்
ஆண்குறி
லிங்கம்
விந்தகப்பை
முகதுவாரம்
அண்டை சுரப்பி
தண்டுப்பகுதி

உள் ஆண் உடற்கூறியல்
விதைமேற்றிணிவு (எபிடெடிமிஸ்)
துணை சுரப்பிகள் (வாஸ் டெஃபெரன்ஸ்)
விந்து சேகரிப்புப்பை (அக்செசரி சுரப்பி)
விந்துகூழ்ச் சுரப்பி (புராஸ்டேட் சுரப்பி)
சிறுநீர்க்குழாய் மொட்டு சுரப்பிகள் (பல்போயுரித்ரல் சுரப்பி)

பாலியல் பிறழ்ச்சி மற்றும் பாலியல் பிரச்சினைகள்
ஆண்மைக்குறைவு
விரைப்புத்திறன்
விந்தணுக்கள் குறைவு
விருப்பமின்மை
பாலியல் விழிப்புணர்வின்மை
பாலியல் வழிக் கோளாறுகள்
பாலியல் அடிமையாதல்
பாலுறவு வலி
நீண்ட விறைப்புத்தன்மை
பிறப்புறுப்பு வலி

...மேலும்

Jul 25, 2014

பதற வைக்கும் பாலியல் கொடுமைகள் - உ.வாசுகி


மிகப் பெரிய கொடுமை என்னவென்றால், இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட 33707 பாலியல் வல்லுறவு வழக்குகளில் 94 சதவிகித வழக்குகளில், குற்றவாளிகள் பாதிக்கப் பட்டவர்களுக்குத் தெரிந்தவர்கள்

தேசிய குற்றப் பதிவு அமைப்பின் 2013க்கான புள்ளி விவரத்தின் படி, இந்தியாவில் ஒரு நாளைக்கு சராசரியாக 93 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப் படுகிறார்கள். நாடு முழுவதும் 2012ல் 24923 பாலியல் வல்லுறவு வழக்கு கள் பதியப்பட்டன, ஆனால் 2013ல் அது 33707 ஆக உயர்ந்திருக்கிறது. மாநகரம் என்று எடுத்துக் கொண்டால், தில்லி, 1441 வழக்குகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது. மாநிலம் என்றால், மத்திய பிரதேசம் 4335 வழக்குகளுடன் முதல் இடம் பெற்றுள்ளது. இதற்குப் பின்னால், ராஜஸ்தான் (3285), மஹாராஷ்டிரா (3063), உபி (3050) ஆகிய மாநிலங்கள் வருகின்றன.

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

மிகப் பெரிய கொடுமை என்னவென்றால், இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட 33707 பாலியல் வல்லுறவு வழக்குகளில் 94 சதவிகித வழக்குகளில், குற்றவாளிகள் பாதிக்கப் பட்டவர்களுக்குத் தெரிந்தவர்கள். அதாவது, பெற்றவரே செய்தது 539, உறவினர்கள் 2315, அண்டை வீட்டுக்காரர்கள் 10782, மற்றபடி தெரிந்தவர்கள் 18171. பாதிக்கப் பட்ட பெண்களின் வயது என்று பார்த்தால், 8877 பேர் 14-18 வயது வரம்பிலும், 15556 பேர் 18-30 வரம்பிலும் உள்ளனர். மொத்தத்தில் 2854 வழக்குகளில் குற்றவாளிகள் பெற்றவரும், உற்றவரும் தான். முன்னேயும், பின்னேயும் தெரிந்தவர்களே இந்தக் கொடுமையில் ஈடுபடும் போது, முன்ன பின்ன தெரியாதவர்களுடன் பேசாதே என்று அறிவுரை கூறுவதில் என்ன பொருள் இருக்க முடியும்? தஞ்சையில் மாதர் சங்கம் நடத்திய பொதுவிசாரணையில் மேடைக்கு வந்த இளம் பெண் சொன்ன விவரங்கள் நம் ரத்தத்தை உறைய வைத்தன. பெற்றெடுத்த தந்தையே, 3 ஆண்டுகளாக இப்பெண்ணுடன் குடும்பம் நடத்தி, 3 குழந்தைகள் பெற வேண்டிய அவலம்; கடைசி குழந்தை தனக்குப் பிறக்கவில்லை என்று சந்தேகம் வேறு, அதனால் அந்தக் குழந்தைக்குத் தாய் பால் கிடைக்கக் கூடாது என்று பால் கொடுக்கும் இடத்தையே பிளேடால் அறுத்த கொடுமைகளை அந்தப் பெண் விவரிக்கும் போது அரங்கமே அதிர்ச்சியில் விழுந்தது.

போபாலில் 65 வயதானவர், தன் பேத்தியை 5 மாதங்களுக்கும் மேலாகப் பாலியல் உறவுக்குப் பயன்படுத்தி, கர்ப்பமான போது கர்ப்பத்தையும் கலைத்திருக்கிறார். உடுமலையில் தந்தையின் பாலியல் தொந்தரவு தாங்க முடியவில்லை என்று 2 மகள்கள் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.பெண்ணை ரசிக்கிற, ருசிக்கிற, அனுபவிக்கிற போகப் பொருளாகப் பார்க்கும் பார்வை வலுப்பட்டுள்ளது. மனித உறவுகள், மாண்புகள் சீரழிந்துள்ளன. கலாச்சாரம் காணாமல் போய்விட்டது. கலாச்சார காவலர்கள் இவை குறித்தெல்லாம் வாயை இறுக மூடிக் கொள்வது ஏன்? நம்ம சாதி பொண்ணு மேல கை வச்சா, கைய வெட்டு என்றுமுழங்கும் காடுவெட்டிகள் என்ன செய்கிறார்கள்? கலாச்சாரம் கெட்டு விட்டது என்று குஷ்புவை விரட்டியவர்கள் இன்று எங்கே? நீ சுகப்பட்டால் போதும், மற்றதைப்பற்றிக் கவலைப்படாதே என்று கலாச்சார மதிப்பீடுகளைத் திருத்திஎழுதிய உலகமய பொருளாதாரக் கொள்கைகளுக்கு இதில் பங்கில்லையா?

கும்பல் பலாத்காரம்

தமிழகத்தில் 2013ல் 923 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது ஒரு நாளைக்கு 3 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகின்றனர். 2012ல் இந்த எண்ணிக்கை 737 ஆக இருந்து, ஓராண்டில் 19 சதவீதம் அதிகரித்துள்ளது. குழந்தைகள் மீதான வல்லுறவு என்று பார்த்தால் 48 வழக்குகள் 2013ல் பதிவு செய்யப்பட்டுள்ளன. பத்திரிகை செய்தி களைப் பார்க்கும் போது, இந்த விவரம் முழு உண்மையல்ல என்று தோன்றுகிறது. இருப்பினும் இந்த விவரமே சொல்லுவது என்னவென்றால், தினசரி சராசரியாக ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பலாத்காரம் செய்யப்படுகின்றனர்.கும்பல் பலாத்காரம் குறித்த தனி யான பதிவுகள் கிடைக்கவில்லை.

ஆனால் பெரும்பாலும் நாம் பார்க்கும் செய்திகள், இந்தியா முழுதும் இது அதிகரிப்பதாகத் தெரிவிக்கின்றன. சமீபத்தில் கிருஷ்ணகிரியில் ஒரு கல்லூரி மாணவிக்கு நடந்தது, முன்னதாக காரைக்காலில் புத்தாண்டு தினத்தன்று நடந்தது, ஹரியானா, உத்தர பிரதேச நிகழ்வுகள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். யாருக்கும் தெரியாமல் குற்றம் செய்ய வேண்டும் என்ற குறைந்த பட்ச குற்ற உணர்வு கூட அற்றுப் போய்விட்டது. ஏனெனில் இது குற்றம் என்பது போய் ஒரு பொழுதுபோக்காக ஆகிக் கொண்டிருக்கிறது. அனைவரும் சேர்ந்து செய்வதில் ஒரு ஜாலி, அந்தப் பெண் தவிப்பது, அலறுவது, துன்புறுவதைப் பார்ப்பதில் ஒரு அலாதி இன்பம். இந்த உலகம் தனக்கு இழைக்கும் துரோகத்துக்கு, தான் முன்னேறாததற்கு, நினைத்தது கிடைக்காததற்கு என்று எல்லாவற்றுக்குமான பதிலும், நிறை வும் இதில் கிடைத்து விடுகிறது. ஆண்மையின் ஆளுமை வெற்றி பெறுவதான நினைப்பு! வன்முறையைப் பொழுதுபோக்காக்கியதில் சினிமாவுக்கு முக்கிய பங்குண்டு.

காரணங்களைத் தேடு

குடி போதை, வன்முறைக்கு ஒரு பிரதான காரணமாக முன்னுக்கு வரு கிறது. குடிக்காதவர்கள் அப்பாவிகள், குடிப்பவர்கள் குற்றவாளிகள் என்று ஒரு சூத்திரத்தை எழுத முடியாது. ஆனால் வன்முறை செய்வதற்கான துணிச்சலை, போதை உற்பத்தி செய்கிறது. பெரும்பாலான சம்பவங்களில் குற்றவாளிகள் குடித்திருந்தார்கள் என்னும் செய்தி, இதை வெளிப்படுத்துகிறது. தமிழக அரசின் மதுபானக் கொள்கைக்கு இதில் பங்குண்டு. ஊக்கப்படுத்தி ஊற்றிக் கொடுக்கும் வேலையை அரசு செய்ய வேண்டுமா? லாபம் பார்க்கும் பிசினசாக இதைப் பார்த்து, குடி குடியைக் கெடுக்கும் என்று சட்ட ரீதியான எச்சரிக்கையை சிறு எழுத்தில் போட்டு விட்டால் போதுமா? போதை பழக்கத்தைக் குறைப்பதற்கான முயற்சியோ, பிரச்சாரமோ அறவே இல்லையே?அடுத்து, மொபைல் இருந்தாலே போதும், சுலபமாக இணைய தளத்தில், யூடியூபில் ஆபாசத்தைப் பார்த்துவிட முடிகிறது.

பிறகு, பார்ப்பதை எல்லாம் பரீட்சித்துப் பார்க்கத் தோன்றுகிறது. அதற்கு ஒரு பெண் வேண்டும், ஒரு வயதாக இருந்தால் என்ன, 80 வயதாக இருந்தாலென்ன என்கிற மனநிலை ஏற்படுகிறது. இதை எதிர்கொள்வது குறித்து சிந்திக்க வேண்டும். அத்துடன், காவல்துறை விசாரணை, நீதிமன்ற நிகழ்வுகள் போன்றவை எல்லாம், பாதிக்கப்பட்டவர்களை நோகடிப்பதாகவே இருக்கின்றன. காலம் கடந்த நீதி அர்த்தமிழக்கிறது. 25 சதவிகிதம் குற்றவாளிகளுக்கு மட்டுமே தண்டனை கிடைக்கும் யதார்த்தம் தவறு செய்பவர்களுக்கே அனுகூலமாகி விடுகிறது. நிர்பயா வழக்குக்குப் பிறகு புதிதாக வந்த சட்டத் திருத்தத்தில், அரசு அதிகாரி அல்லது காவல் அதிகாரி சட்டப் படி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அவர்களுக்கு 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை தண்டனை என்று உள்ளது.

இந்த இபிகோ பிரிவு 166 ஏ என்பதை அமல்படுத்த அரசு முன்வர வேண்டும். இல்லையேல் பொள்ளாச்சி சம்பவத்தில் தமிழக முதல்வர் வேகம் காட்டியவுடன் செயல்பட்ட அதிகாரிகள், மற்றவற்றில் மெத்தனமாக இருந்து விடும் ஏற்பாடு உள்ளது. எல்லாவற்றிலும் முதல்வர் வேகம் காட்ட வேண்டும் என்பதும் இதிலிருந்து தெரிகிறது. இந்த 166ஏ என்ற பிரிவு வரக் காரணமாக இருந்தது ஜனநாயக மாதர் சங்கம்; இதை வடிவமைத்தது மாதர் சங்கத்தின் அகில இந்திய சட்டப்பிரிவு பொறுப்பாளர் வழக்கறிஞர் கீர்த்தி சிங் என்பது குறிப்பிடத்தக்கது. தப்பு செய்யாத, திருடாத, பொய் சொல்லாத மனிதன்தான் கதாநாயகன் என்பது மாறி, குடிப்பவர்கள், சமூக விரோத செயல்களை செய்பவர்கள், பெண்களைப் பாலியல் சீண்டல் செய்பவர்கள் ஏதோ ஒரு காரணத்துக்காக அதை நியாயப்படுத்தி, கதாநாயகன் பாத்திரமாக உலா வருகிற படங்கள் கணிசமாக வருகின்றன. இவர்கள் இன்றைய சமூகத்திற்கு தவறான முன்மாதிரியாக மாறுகிறார்கள்.

திசை திருப்பக் கூடாது

காரணங்கள் இப்படியாக இருக்கும் போது, பெண்ணின் உடை காரணம், ஆண் நண்பருடன் போனது காரணம், இந்த நேரத்தில் தெருவில் நின்றது காரணம் என்ற அபத்தங்களை ஏன் பேச வேண்டும்? எந்த உடை அணிந்தால், எந்த நேரத்தில், எந்த இடத்தில் இருந்தால் பிரச்சனை வரவே வராது என்று சொல்வார்களா? இப்படிப் பேசுவது திசை திருப்பும் போக்காகும். குற்றத்தை நியாயப்படுத்துவதாகும். மேற்கு வங்கத்தில் மம்தா ஆட்சியில் பாலியல் வல்லுறவு அரசியல் ஆயுத மாகவே பயன்படுத்தப்படுகிறது. தபஸ் பால் இதற்கு ஓர் உதாரணம். ஹரியானா உள்துறை அமைச்சர், பாலியல் வல் லுறவு சில சமயம் சரி, சில சமயம் தவறு என்றார்.

முலாயம் சிங் யாதவ், பசங்க பசங்க தான் என்கிறார். கோவா முதல்வர், ஒரு பெண் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டால் ஒரு இன்ஸ்பெக்டரைத் தான் சமாளிக்க வேண்டும், ஆனால் ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்றால் 26 இன்ஸ்பெக்டர்களை சமாளிக்க வேண்டும் என்று பேசி யிருக்கிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கான நடத்தை விதிமுறைகளில் (Code of Conduct) இப்படிப் பேசுவதையும் தகுதி இழப்புக் கான காரணமாக இணைக்க வேண்டும். மேலும் சாதியும், வர்க்கமும் முக் கிய காரணிகளாக இருக்கின்றன. ஒடுக்கப்பட்டவர்கள் கூடுதலாக வன்கொடுமைக்கு உள்ளாகிறார்கள். மேற்கு வங்கத்திலும், ஜார்க்கண்டிலும் பழி வாங்கும் நடவடிக்கையாக சாதி பஞ் சாயத்தின் தண்டனையாக பாலியல் வன்முறை பயன்பட்டிருக்கிறது.

பொது வெளியில் பெண்கள் வருவதால்தான் வன்முறை நிகழ்கிறது என்று அவர்களைக் கட்டுப்படுத்துவதும், விலக்கி வைப்பதும் பிரச்சனையைத் தலைகீழாகப் பார்ப்பதாகும், பொது வெளியில் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று நீதிபதி வர்மா குழு சொன்னது மிகப் பொருத்தமானது. பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்தும் போது, நிச்சயம் குற் றங்கள் குறையும்.இதற்கு அரசு, நிர்வாகம், காவல் துறை, நீதித்துறை, ஊடகங்களின் நடவடிக்கைகள் நெறிப்படுத்தப்பட வேண்டும். பாடத்திட்டங்கள் பயன்பட வேண்டும். கல்வி, பொறுப்புள்ள குடி மக்களை உருவாக்க வேண்டும். கல்வி வணிகமயமாகும் போது, சமூக நீதிக்கும், சம நீதிக்கும் மதிப்பில்லாமல் போய் விடுகிறது. இதற்கு மத்தியில் நமக்கும் வன்முறை தடுப்பில் முக்கிய பங்குண்டு. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், மக்களை சந்தித்து, ஆற்ற வேண்டிய பங்கு குறித்து விவாதிக்க திட்டமிட்டிருக்கிறது.

பெண்கள், குழந்தை கள் மீதான வன்முறையைத் தடுக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்வு, தமிழகத்தில் ஒரு லட்சம் குடும்பங்களை சந்தித்து நடத்தப்படும். ஆகஸ்டு 10 ஆம் தேதி துவங்கி சுதந்திர தினமான ஆகஸ்டு 15 ஆம் தேதி நிறைவு செய்யப்படும். சாதி மதம் பார்க்காமல், உள்ளூர் வெளியூர் நியாயம் பேசாமல், எவ்விதப் பாகுபாடும் இல்லாமல் பெண்களும், குழந்தைகளும் கண்ணியமாக வாழும் உரிமையைப் பாதுகாக்க உறுதி ஏற்க மக்கள் முன் வர வேண்டும்.
...மேலும்

Jul 23, 2014

பெண்களின் பிறப்புறுப்புக்களை சிதைக்கும் நடைமுறை: கேமரூன் கண்டனம்

உலகெங்கிலும் பெண்களின் பிறப்புறுப்புக்களை சிதைக்கும் நடைமுறைக்கு எதிராக பிரித்தானிய பிரதமர் டேவிட் கேமரூன் குரல் கொடுத்துள்ளார்.அத்துடன் பால்ய வயது திருமணங்களுக்கும் சமகால சந்ததிக்குள் முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் வலியுறுத்தினார்.

இலண்டனில் நடைபெறும் உலக மாநாட்டில் பிரிட்டன் பிரதமர் உரையாற்றினார். இந்த நடைமுறைகளை தடுத்து நிறுத்தும் மாயாஜாலம் பிரிட்டனிடம் இல்லை. எனவே இதற்கு எதிராக சர்வதேச நடவடிக்கை அவசியமென பிரதமர் கெமரோன் தெரிவித்தார். ஐக்கிய ராஜ்ஜியத்தில் பெண்களின் பிறப்புறுப்புக்கள் சிதைக்கப்படுவதை தடுப்பதற்கான பல வழிமுறைகளையும் அவர் அறிமுகம் செய்து வைத்தா
...மேலும்

தீவிரவாதிகளால் மாணவிகள் கடத்தல் - அதிர்ச்சியில் பெற்றோர்கள் உயிரிழப்பு

நைஜீரியாவில் போக்கோ ஹரம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 11 மாணவிகளின் பெற்றோர் மரணமடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை அமைக்க வேண்டுமென போக்கோ ஹரம் என்ற தீவிரவாத அமைப்பு ஆயுதமேந்திய போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது.

நைஜீரியாவில் உள்ள கிருஸ்துவ தேவாலயங்களை தாக்கி அழிக்கும் இத்தீவிரவாதிகள் அப்பாவி பொதுமக்களையும் ஈவிரக்கமின்றி கொன்று குவித்து வருகின்றனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன் கடத்தப்பட்ட மாணவிகளில் சில மாணவிகள் தப்பி வந்த நிலையில் பெரும் எண்ணிக்கையிலானோர் இன்னமும் தீவிரவாதிகளின் பிடியில் தான் சிக்கிக்கொண்டுள்ளனர். இந்நிலையில் மாணவிகள் கடத்தப்பட்ட சோகத்தில் 11 மாணவிகளின் பெற்றோர் மரணமடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் பெரும்பாலானோர் நெஞ்சு வலி மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக கடத்தப்பட்ட இரண்டு பெண்களுக்கு தந்தையானவர் ஒரு வகை கோமாவில் சிக்கி மாணவிகளின் பெயரை தொடர்ந்து கூறிக்கொண்டே இருந்துள்ளார். சில தினங்களுக்கு பின் அவரும் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது. மாணவிகளின் பெற்றோர் இறந்தது குறித்த தகவல் கிடைத்ததும், அந்நாட்டு அதிபர் குட்லக் ஜோனாதன் கடத்தப்பட்டு தப்பிவந்த மாணவிகளையும், கடத்தப்பட்டுள்ள மாணவிகளின் பெற்றோரையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். யாரும் தவறான முடிவெடுக்கவேண்டாம் என அவர் அப்போது கேட்டுக்கொண்டார்

நன்றி - லங்காசிறி நியூஸ்
...மேலும்

பெண்ணாக உணரும் தருணம் எது? - அ.ராமசாமி

1997-ல் ஒரு பொங்கல் மலரில் அச்சாகி இருந்த வாகனம் என்னும் தலைப்பிட்ட சிறுகதை எனக்கு மறந்து போகாமல் இருக்க வலுவான ஒரு காரணம் உண்டு. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு ஆசிரியராக நான் வந்தபோது, டாக்டர் வசந்திதேவி துணைவேந்தராக இருந்தார். ஒருவர் பெண்ணாக இருப்பதாலேயே பெண்ணியவாதியாக ஆக முடியாது. தன்னைப் பெண்ணியவாதியாகக் கருதிக் கொள்ள வேண்டும்; செயல்பட வேண்டும்; செயல்படுத்த வேண்டும்; தன்னோடு உள்ளவர்களைச் செயல்படச் செய்ய வேண்டும் எனக் கருதுபவர் அவர். அவரது மேற்பார்வையில் பல்கலைக்கழகத்தில் முன் வைக்கப்படும் ஒவ்வொரு திட்டமும் பெண்களை எவ்வாறு வளர்த்தெடுக்கும் என்ற நோக்கத்தில் பார்க்கப்பட்டே முன்னெடுக்கப்பட்டது. ஆண்களை வெறுத்து ஒதுக்கிவிட்டுப் பெண் முன்னேற்றம், பெண் உரிமை என்பன சாத்தியம் இல்லை என்பதில் உறுதியாக இருந்தவர் அவர்.

வகுப்பறைக்கும் வெளியே கற்க வேண்டியவை உள்ளன என்பதை உணர்த்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட நாட்டுநலப் பணித் திட்டத்தில் பெரும்பாலும் மாணாக்கர்களை பக்கத்தில் உள்ள கிராமங்களுக்கு அழைத்துச் சென்று புள்ளிவிவரங்கள் சேகரித்தல், தெருக்களைச் சுத்தம் செய்தல், சாலை போடுதல், மரம் நடுதல் போன்ற பணிகளை மேற்கொள்வார்கள். பெருநகரக் கல்லூரிகளாக இருந்தால் போக்குவரத்துக்கு உதவுதல், மருத்துவமனைப் பணிகளுக்கு உதவுதல் போன்ற பணிகளில் ஈடுபடுபவர். உடல் உழைப்பு சார்ந்த தொழில்களையும் மக்களையும் விட்டு விலகிவிடுவதாகக் கல்வி ஆகிவிடக்கூடாது என்ற நோக்கத்தோடு பண்டித நேரு திட்டமிட்டுத் தந்த திட்டம் அது. 

பெண்கள் சைக்கிள் திட்டம் 

மூன்று நாள் முகாம், பத்து நாள் முகாம் எனத் திட்டமிட்டுக்கொண்டு நடத்தப்படும் நாட்டு நலப் பணித் திட்ட முகாம்களில் மக்களை நேரடியாகச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு உண்டு என்பதைத் தாண்டி மாணாக்கர்கள் கற்றுக் கொள்வது என்பது அதிகம் இருக்காது. அதிலும் திருநெல்வேலி போன்ற கிராமப்புறக் கல்லூரிகளில் பயில்பவர்கள் உடல் உழைப்பையும் சேர்த்தே செய்பவர்கள்தான். பல்கலைக்கழகத்திற்குப் படிக்க வரும் மாணாக்கர்களில் பாதிப் பேர் விவசாய வேலைகளில் ஈடுபடுகிறவர்களாகவே இருக்கின்றனர். பெண்களும்கூட தங்கள் பெற்றோருக்கு உதவியாக வீட்டு வேலைகளையும் விவசாய வேலைகளையும் செய்துவிட்டு வருவதையே இன்றும் காண்கிறேன். கல்வியின் காரணமாக அதிகமும் அந்நியமாகாத நிலை, இன்னும் இங்கு தொடரவே செய்கிறது. 

நாட்டு நலப் பணித் திட்டத்தின் சார்பில் பெண்களுக்குச் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுக்கும் பயிற்சி முகாம் ஒன்றை நடத்த வேண்டும் என டாக்டர் வசந்திதேவி எங்களை அழைத்துச் சொன்னார். உடனடியாக அந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டது. பால் கேனைக் கட்டிக்கொண்டு சைக்கிள் விடும் பெண், கணவனைப் பின்னால் உட்கார வைத்து மண் சாலையில் சைக்கிள் ஓட்டிச் செல்லும் பெண், இரு பக்கமும் தண்ணீர்ப் பானைகளைக் கட்டித் தொங்கவிட்டுச் செல்லும் பெண் எனப் புகைப்படங்கள் பெரிய அளவில் புளோ-அப் செய்யப்பட்டு அந்தப் பயிலரங்கில் நிறுத்தப்பட்டன. மூன்று நாளில் ஏறத்தாழ 100 மாணவிகளுக்குச் சைக்கிள் ஓட்டக் கற்றுத் தரப்பட்டது. ஒவ்வொரு பெண்கள் கல்லூரியிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப் பட்டது. கற்றுக்கொண்ட ஒவ்வொரு பெண்ணும் அடுத்த ஆண்டிற்குள் ஒரு பத்துப் பேருக்குச் சைக்கிள் விடக் கற்றுத்தர வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது. இது நடந்தது 1998-ல். 

வாகனக் கதை
 
தனது குடும்ப வெளியில் மட்டுமல்லாது இந்தச் சமூக வெளியும் பெண்கள் வாகனங்களில் பயணம் செய்ய வேண்டியவர்கள் என்பதாகவே கருதுகிறது. அவள் ஒரு குழந்தையாக இருக்கும்போது கூட, ஆண்பிள்ளைக்கு மூன்று சக்கர சைக்கிள் வாங்கித் தரும் உறவினர்கள் பெண் பிள்ளைக்கு அதை வாங்கித்தர வேண்டும் என நினைப்பது இல்லை என்ற மனநிலையிலிருந்து சைக்கிள் ஓட்டுவது, மோட்டார் சைக்கிள் ஓட்டுவது, கார் ஓட்டுவது, குதிரைச் சவாரி செய்வது, கடலுக்குள் படகில் போவது எனப் பெண்களின் விருப்பங்கள் எதுவும் சாத்தியப்படாமல், இவற்றில் எல்லாம் ஆணின் துணையுடன் பயணம் செய்யும் சாத்தியங்கள் மட்டுமே வாய்க்கின்றன என்பதைச் சொல்கின்றது அம்பையின் கதை. திட்டமிட்டுத் திட்டமிட்டு வாகனத்தைச் சொந்தமாக்கிட முயன்ற எல்லா முயற்சிகளுக்குப் பின்னால் எந்தத் திட்டமும் இல்லாமல் ஒரு வாகனம் அவள் வசமாகிறது. கணினியின் மௌஸ் என்னும் மூஞ்சூறு வாகனம் அது. மூஞ்சூறு வாகனம் அவளின் கை வழியாக கற்பனைச் சாலைகளில் தூர தேச நாடுகளுக்குள்ளும் பயணம் செய்கிறது. சினிமா, காதல், புரட்சி எல்லாம் நிரம்பிய பாரிஸ் நகருக்குள்ளும் சென்று வருகிறாள் அந்தப் பெண் என்பதாக முடிகிறது அந்தக் கதை. 

கதையும் நிஜமும்
 
அம்பையின் வாகனம் கதையைத் துணைவேந்தர் வசந்திதேவியும் வாசித்திருப்பாரோ என்று நானே கேட்டுக் கொண்டு, ‘இல்லை ; வாசித்திருக்க மாட்டார்’ என்றும் சொல்லிக் கொண்டேன். காரணம் அம்பையின் கதை வாகனம் ஓட்டும் ஆசையை நினைப்பாகவே நிறுத்திக் கொண்டு, செயலைக் கைவிட்டு விடும் தன்மை கொண்டது. கடைசியில் கணினியின் மூஞ்சூறு வாகனத்தில் பயணம் செய்து, அது தரும் இன்பத்தில் திருப்திப்பட்டுக் கொள்ளும் பாத்திரத்தைப் படைத்திருக்கிறது. ஆனால் வசந்திதேவியின் எண்ணங்கள் இந்த சமூகத்தில் பெண்கள் வாகனங்களைக் கையாளும் சாத்தியங்களை உருவாக்கித் தர வேண்டும் என்பதின் வெளிப்பாடு. ஆம். ஒரு பதினைந்து ஆண்டுகளில் வாகனமோட்டும் பெண்களின் போக்கில் ஏற்பட்டுள்ள மாற்றம் அபரிமிதமானது. சென்னையின் ஒரு முச்சந்தியில் அல்லது நாற்சந்தியில் அவசர நேரம் எனச் சொல்லப்படும் காலை எட்டரைக்கும் பத்துக்கும் இடையிலோ, மாலை ஐந்து மணிக்குப் பிறகோ நின்று வேடிக்கை பார்த்தால் போதும். பெண்கள் வாகனங்களைக் கையாளும் லாகவம் புரியவரும். 

குறிப்பாக இரண்டு சக்கர மோட்டார்களில் பயணிக்கும் பெண்களின் வேகமும், அநாயசமான நோக்கும் இலக்கை எட்டிவிடத்துடிக்கும் மனநிலையும் புரியவரும். மஞ்சள் விளக்கு எரிந்து பச்சை விளக்கு வருவதற்கு முன்பாக உள் நுழைந்து பக்கத்தில் நிற்கும் ஆணைப் பின்னுக்குத் தள்ளி முன்னேறும் வேகத்துடன் அவள் பயணம் செய்கிறாள். இவள் அம்பையின் கதையில் வரும் பாக்கியத்தின் செயல்வடிவம் மட்டும் அல்ல; சிந்தனையின் கருத்துருவமும்கூட. சென்னை நகரச் சாலைகளில் சைக்கிளில் பயணம் செய்யும் பெண்கள் குறைவாக இருக்க இரண்டு சக்கர மோட்டார் வாகனங்களை ஓட்டிச் செல்லும் மொத்தக் கூட்டத்தில் 33 சதவீதம் பெண்கள் இருப்பது உறுதி. ஆனால் ஆண்கள் நிரம்பிய அரசும், பாராளுமன்றமும் அந்த 33 சதவீத இடத்தைத் தருவதற்கு இன்னமும் தயங்கிக் கொண்டிருக்கின்றன. 

பெண்ணாய் உணர்வது 

ஒரு நல்ல சிறுகதைக்கான ஆரம்பம், முடிவு, குறைந்த கால அளவு, குறைவான பாத்திரங்கள் என எதுவும் இல்லாத கதை. ஆனால், ஒரு பெண்ணின் வாகனம் ஓட்டும் விருப்பம் என்ற ஒற்றை மையம் தாவித்தாவிப் பல பருவங்களுக்கும் செல்கிறது என்ற அளவில் அந்தக் கதையைச் சிறுகதை இலக்கணத்திற்குள் அடக்கிவிட முடியும். பெண்ணின் இருப்பு, பெண் விருப்பத்திற்குத் தடை, பெண்ணுக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகளை மறுக்கும் சமூகப் போக்கு, ஆணை முதன்மைப்படுத்தும் அன்றாட நிகழ்வுகள் , ஆண்களே தங்களை உயர்வாகக் கருதிக்கொண்டு பெண்களை விலக்கி வைக்கும் ஆணவ நிலை, அப்படியான சூழலில் தன் நிலையை உணர்த்தும் பெண்களின் மனோபாவம் எனப் பெண்களின் வெளிக்கும் மனநிலைக்கும் முக்கியம் தரும் அம்பை, அதிகமும் சிறுகதை இலக்கணத்திற்கு முக்கியத்துவம் தருவதில்லை. என்றாலும் பெண்ணியம் பேசவும் பெண்ணாக நின்று எழுதவும் ஒரு நூறு பேருக்கு மேல் தமிழில் திரண்டுள்ளனர். அவர்களோடு தோழமை கொண்டு உறவாடவும் உரையாடவும் ஆண்களும் தயாராகவே உள்ளனர். (பெண்கள் என்ன எழுதிக் கிழித்துவிட்டார்கள் எனக் கேட்கும் கூட்டத்தை விட்டுவிடுங்கள்) அம்பையின் கதைகளை வாசியுங்கள்.. பெண்ணாய் உணர்வது எப்படி எனப் பாடம் சொல்லித் தரும். 

நன்றி - த ஹிந்து
...மேலும்

Jul 21, 2014

பெண்களின் பிறப்பு உறுப்பில்

ஒரு பெண்ணின் பிறப்பு உறுப்பிலே (VAGINA) இருந்து திரவம் (நீர்போன்ற) வெளிப்படுதல் எல்லாப் பெண்க ளாலும் உணரப்படும் ஒரு நிகழ்வு. பிறப்பு உறுப்பிலே உள்ள சுரப்பிகள்(GLANDS) இந்த திரவத் தன்மையான பதார்த்தங்களை வெளியிட்டு பிறப்பு உறுப்பிலே ஈரத்தன்மையை பேணும். இவ்வாறு ஈரத்தன்மை பேணப் படுவது அந்த பெண்ணின் உறுப்பு சுகாதாரமாக‌ (HEALTHY AND CLEAN) இருப்பதற்கு அத்தியாவசிய மாகும். மாதவிடாய் நின்ற பெண்களுக்கு இந்த சுரப்பிக ளின் தொழிற்பாடு குறைவதால் அவர்களின் பிறப்பு உறுப்பு உலர் ந்த நிலையை அடைந்து காணப்படும். இதனாலேயே அவர்க ளுக்கு பாலியல் தொடர்பிலும் நாட்டம் குறையும். மேலும் பல அசொகரியங்களை இது கொடுக்கலாம்.

இவ்வாறு சாதாரணமாக வெளிப்படும் திரவமானது, சில பெண்களுக்கு மன ரீதியான உளைச்சலைக்கொடுக்கலாம். தங்களுக்கு ஏதோ நோய் இருக்கிறது அதனாலேதான் இந்நிலை ஏற்படுகின்ற து அவர்கள் கூச்சப்பட்டு வெளியில் சொல்ல முடியாமல் மனதி ற்குள்ளே வருந்திக் கொண்டிருக்கலாம். உண்மையில் பிறப்பு உறுப்பிலே இருந்து வெளிவருகின்ற திரவ ங்கள் பற்றி ஒவ்வொரு பெண்ணும் தெளிவாக அறிந்து வைத்தி ருக்க வேண்டியது அவசியமாகும். ஏனெ றால் சில நோய்களில் கூட இவ் வாறு திரவங்கள் வெளிவரலாம். 

எவ்வாறு நோய்களினால் வெளிவருகின்ற திரவங்களை சாதா ரண திரவங்களில் இருந்து வேறு பிரித்தறிவது?
சாதாரணமாக வெளிவருகிற திரவமானது தெளிவானதாக (CLEAR) எந்த விதமான கெட்ட மனமும் இல்லாததாக இருக்கும். இது அவர்களின் உள்ளாடையில் பட்டு உலரும் போது பால் (MILKY) போன்ற அல்லது தெளிவானதாக இருக்கும். இதுவே வெள்ளை படுதல் என்று நம் பெண்களால் அழைக்கப் படுகிறது.

சாதாரணமாக வெளிவரும் திரவம்
மேலும் இந்த திற வெளிப்பாடானது மாதவிடாயின் போது, உடலு றவின் போது, கர்பம் தரித்திருக்கும் போது போன்ற சந்தர்ப்பங் களில் அதிகரிக்கலாம்.
ஆனால் இவ்வாறு இல்லாமல் திரவமா னது பச்சை அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்குமானால், கெட்ட மனமுடைய தாக இருக்குமானால், அல்லது தயிர் போன்று தடித்த கட்டி(THICK) போன்ற திரவமாக இருக்குமானால் இது குறிப்பிட்ட சில நோய்களின் அறி குறியாக இருக்கலாம். இவ்வாறான சந்தர்பத்தில் வைத்தியரை நாடி தகுந்த மறுத்ததை எடுத்து சில நாட்களுக்கு உட்கொண்டா லே போதும் இந்தப் பிரச்சினை சுகமா கி விடும். இது பொதுவாக கிருமி களின் தொற்றுகளால் ஏற்படும்.மேலும் இந்தத் திரவமானது மிகவும் சகிக்கமுடியாத மனமுடையதாக, அல்லது இடையிடையே ரத்தம் போகும் போது இது புற்றுநோயின் அறிகுறியாக கூட இருக்கலாம். ஆக பெண்ணுறுப்பில்ப்பிலே இருந்து திரவம் வெளிப்படுகின்றது என்றுஅஞ்சினால், முதலில் அதன் தன்மையை அவதானியுங்கள்.

கீழே வரும் மாறன்கள் உங்கள் பிறப்பு வழித் திரவத்தில் இருந் தால் உடனேயே வைத்தியரை நாடுங்கள்.
* தயிர் தன்மையான வெள்ளை கட்டிகள் வெளிவருதல்
* பச்சை அல்லது மங்க்ச்சல் நிறத் திரவம் வெளிவருதல்
* சகிக்க முடியாத மனம் கொண்ட திரவம் வெளிவருதல்
* அதிக ரத்தம் போகுதல் அல்லது மாதவிடாய் அல்லாத நேரத்தில் ரத்தம் போகுதல்

இவை எதுவும் இல்லாமல் சாதரணமான பால் போன்ற அல்லது தெளிவான திரவங் கள் வெளிவந்தால் இது உங்களில் மட்டு மல்ல எல்லாப் பெண்களிலும் உங்கள் பிறப்புறுப்பை சுத்தமாக வைத்தி ருக்க ஏற்படுகின்ற சாதாரணமான நிகழ்வே!
...மேலும்

Jul 20, 2014

அன்று கால்பந்து வீராங்கனை...இன்று பெட்டி கடையில்!


அன்று கால்பந்து வீராங்கனை...இன்று பெட்டி கடையில்!அண்மையில் நடந்து முடிந்த உலக கோப்பை கால் பந்து போட்டியை குதூகலமாக கண்டு களித்தும், கோப்பையை வென்ற ஜெர்மன் அணியின் பெருமைகளை வாய் வலிக்க பேசியும் முடித்தாயிற்று. ஆனால் இத்தகையை பெருமை வாய்ந்த உலக கோப்பை கால்பந்து போட்டிகளில்,  லீக் சுற்றுக்கு கூட இந்தியாவால் நுழைய முடியவில்லையே என்ற ஆதங்கம் அடிமனதில் ஓடியபடிதான் உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டியை கண்டுகளித்திருப்பார்கள் இந்திய ரசிகர்கள்...

ஏற்கனவே இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு அளிக்கப்படுகிற முக்கியத்துவமும், ஊக்கமும், நிதியுதவியும், தனியார் நிறுவனங்களின் ஸ்பான்சர்ஷிப்பும் பிற விளையாட்டுகளுக்கு கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உண்டு. 

அதனை மெய்ப்பிக்கும் வகையிலான மற்றொரு உதாரணம்தான் அகில இந்திய அளவில் பல ஜூனியர், சீனியர் அளவிலான கால்பந்தாட்ட போட்டிகளில்  பங்கேற்று, விருதுகளை வென்று, பின்னர் போதிய நிதியுதவியோ, அரசின் ஊக்கமோ கிடைக்காமல் போய் இன்று வெற்றிலை பாக்கு கடை வைத்து நடத்தி வாழ்க்கையை ஓட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ள ரஷ்மிதாவின் கதை. 

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ரஷ்மிதாவுக்கு தற்போது வயது 23. பள்ளியில் படித்தபோது தனது பள்ளியின் சார்பிலும், ஒடிசா மாநிலத்தின் சார்பிலும் பல ஜூனியர் மற்றும் சீனியர் அளவிலான சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் பங்கேற்று விளையாடி உள்ளார். 2012 ஆம் ஆண்டு தேசிய அளவிலான  கால்பந்தாட்ட போட்டியில் ஒடிசா சார்பில் பங்கேற்று  வெற்றிக்கோப்பையை தட்டி, தான் சார்ந்த மாநிலத்திற்கு பெருமை சேர்த்தவர். 

இத்தகைய திறமை வாய்ந்த கால்பந்தாட்ட வீராங்கனையின் இன்றைய நிலை, வாழ்க்கையை ஓட்ட தனது கிராமத்தில் வெற்றிலை பாக்கு விற்கும் பெட்டிக்கடை வைத்து நடத்தும் அளவிற்கு உள்ளது. இவரது தந்தை ஒரு தினக்கூலி. ஒடிசா மாநிலத்தின் கிழக்கு புவனேஸ்வரில் இருந்து  120 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில்தான் வசிக்கிறார். 

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர்தான் பங்காளதேஷின் டாக்கா நகரில் நடைபெற்ற ஆசிய கோப்பை தகுதி சுற்று போட்டியில் இந்தியாவுக்காக விளையாடி உள்ளார். மேலும் பஹ்ரைனில் நடைபெற்ற சீனியர் அளவிலான தேசிய அணியிலும் பங்கேற்று விளையாடி அணி வெற்றிபெற உதவி உள்ளார். 

ஆனால் தொடர்ந்து விளையாட்டில் பங்கேற்று, மென்மேலும் ஒரு சிறந்த கால்பந்தாட்ட வீராங்கனையாக வேண்டும் என்ற அவரது லட்சியத்தை அடைய முடியாத அளவிற்கு வறுமை அவரை முடக்கி போட்டுவிட்டது. அரசு தரப்பிலிருந்தோ அல்லது வேறு எந்த ஒரு தரப்பிலிருந்தோ ரஷ்மிதாவுக்கு உதவிக்கரம் நீளாத நிலையில், கூலித்தொழிலாளியான அவரது தந்தையும் மகளின் கனவுக்கு உதவ முடியாத கையறு நிலையில் தவிக்க, வேறு வழியில்லாமல் தனது கனவை மூட்டை கட்டிவைத்துவிட்டு தந்தையைப்போன்றே தினக்கூலி வேலை பார்க்கும் ஒருவரை திருமணம் செய்துகொண்டுவிட்டு, குடும்ப வாழ்க்கையில் தனது கவனத்தை திருப்பிக்கொண்டுவிட்டார்.

கணவருக்கும் நிரந்தர வேலை இல்லாத நிலையில் குடும்ப செலவுகளை சமாளிக்க தனது வீட்டின் முன்புறம் சிறிய அளவிலான வெற்றிலை பாக்கு கடை வைத்து நடத்திக்கொண்டிருக்கிறார் ரஷ்மிதா. 

ஆனாலும் அவரிடம் கால்பந்தாட்டம் மீதான பேரார்வம் குறையவில்லை. கால்பந்தாட்டம் குறித்து பேசினாலே ரஷ்மிதா கண்களிலும், முகத்திலும் ஆயிரம் வால்ட்ஸ் பல்பு மின்னுகிறது. 

" கால்பந்தாட்டம் எனது ரத்தத்தில் கலந்துவிட்ட ஒன்று" என இன்னமும் அதன் மீதான ஆர்வம் குன்றாமல் பேசுகிறார் ரஷ்மிதா. அவர் கூறுவது உண்மைதான்..12 வயதிலேயே கால்பந்தாட்டத்தை விளையாட தொடங்கியவர் அல்லவா அவர்.  அவரது திறமையை கண்டறிந்து, சில கோச்சர்கள் தாமாக முன்வந்து கால்பந்தாட்டத்தின் நுணக்கங்களை ரஷ்மிதாவுக்கு முறையாக கற்றுக்கொடுத்து வளர்த்ததன் விளைவாக 2008 ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற AFC U-16 தகுதியாளர்களுக்கான போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று திரும்பினார்.  இந்த போட்டியில் கலந்துகொள்ள சென்றதால், அவரால் தனது 10 ஆம் வகுப்புக்கான தேர்வை எழுத முடியாமல் போய்விட்டது. ஏனெனில் தேர்வு தேதியும், போட்டி தேதியும் ஒன்றாக அமைந்துபோனதுதான் காரணம் என்று அதனை நினைவு கூர்கிறார் ரஷ்மிதா. 

ஆனால் அவரது இந்த தியாகத்திற்கு பலனில்லாமல் போகவில்லை. தனது மாநிலத்தில் நடைபெற்ற ஜூனியர் மற்றும் சீனியர் அளவிலான போட்டிகளில் பங்கேற்று, சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். அதனைத் தொடர்ந்து இந்திய சீனியர் மகளிர் கால்பந்தாட்ட தேசிய அணியிலும் இடம்பிடித்தார். 

ஆனால் விளையாட்டு விடுதியில் தொடர்ந்து தங்கியிருக்க தேவையான பணம் இல்லாத நிலையில், எந்த ஒரு உதவிக்கரமும் நீளாத சூழலில், அவர் அந்த விடுதியிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன் பின்னர் , அவரால் மீண்டும் விளையாட்டுக்கு திரும்ப முடியாமலேயே போய்விட்டது. 

இந்நிலையில் இதுகுறித்த தகவல் ஊடகங்களில் வெளியாகின பின்னர்தான், ரஷ்மிதாவுக்கு உதவுவதாக உறுதியளித்துள்ளார் ஒடிசா மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் சுதம் மராண்டி. தன்னால் மீண்டும் விளையாட்டுக்கு திரும்ப முடியாமல் போனாலும், குறைந்தபட்சம் வறுமையிலிருந்தாவது மீள முடியும் என்ற நம்பிக்கையுடன் அரசின் உதவியை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார் ரஷ்மிதா!  
- பா. முகிலன்
 
...மேலும்

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்