/* up Facebook

Jun 9, 2014

போர்க்கால பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் கொடுமைகள் மானிட சீரழிவுகள் - அகங்காரம் ஆதிக்கம் ஆணவம் ஆணாதிக்கம் - பாலா

போரில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் பற்றிய தரவுகள் எமது சமூகத்violence-against-womenதில் குறைவாகவே இருப்பினும் வெளிக்கொணரப்பட்ட உண்மைகள் மனிதாபிமானமிக்க மக்கள் நெஞ்சைப் பிழிவன. பாதிக்கப்பட்டோரினது இன்னல்களும் வேதனைகளும் பாறாங்கல்லென அவர்கள் நெஞ்சில் கனக்கிறது. இன்னும் எவ்வளவு காலம் உயிர் வாழ்வது என்ற அங்கலாய்ப்புடன் இவர்கள் வாழ்க்கை நகர்கிறது. அங்கு ஒன்று இங்கு ஒன்று என நிதமும் நிகழும் தற்கொலைகளுக்குப் பின்னால் இவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் அட்டூழியங்கள் கொடுமைகள் மௌனித்திருக்கும்.

எமது சமூகம் சார்ந்த பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்வாதார முயற்சிகளுக்கும் அவர்களது மன அழுத்தங்களுக்கும் உதவுவது தொடர்பில்; தமது அக்கறையை வெளிப்படுத்தியுள்ளனர். எனினும் பாமர பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கான நீதி கோரலும் தொடர்ந்தும் இவர்கள் மீதான பாலியல் வன்முறை அட்டூழியங்கள் நிகழாதிருப்பதற்கான சட்ட சமூக கட்டுமானங்களை நெறிப்படுதலும் எமது சமூக அரங்கில் அரிச்சுவடிகளாகவேனும் அரிதாகவே உள்ளன. இதனால் இத்தகைய கொடுமைகளைக் புரிந்தவர்கள் தண்டிக்கப் படாததுடன் தொடர்ந்தும் பாலியல் வன்முறைகளில் ஈடுபட முடிகிறது

இதற்கான அவசியத்தினை உணர்ந்த சர்வதேச குரல்கள் இன்று பலமாக ஒலிக்க ஆரம்பித்துள்ளன. பல்வேறு நாடுகளிலும் போர்ப் பின்னணியில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைக் கொடுமைகளின் பாதிப்புகளை சர்வதேச அரங்கம் அக்கறையுடன் கவனிக்க முனைந்துள்ளது. இதன் பிரதிபலிப்பாக இந்த வாரம் போர்க் கால பெண்கள் மீதான பாலியல் வன்முறை கற்பழிப்பு கொடுமைகளை முடிவுக்குக் கொண்டுவரக் கோரும் மூண்று நாள் சர்வதேச மகாநாடு லண்டனில் நடைபெறுகிறது.  புhதிக்கப்பட்ட பெண்கள் குறித்து ஒட்டு மொத்த சமூக கண்னோட்ட மாற்றம் தேவையென இங்கே வலியுறுத்தப்படும் என்பது நம்பிக்கையளிப்பதாக உள்ளது.

எமது சமூக கலாச்சார பண்பாடுகள் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்ட பெண்களின் பாதுகாப்பிற்கு பாதகமானவையாகவே உள்ளன. அவர்கள் துணிவுடன் முன்வந்து தமக்கு நிகழ்ந்ததைக் கூறி நியாயம் தேடின் அவர்களை ஒதுக்கி வைக்கவும் தூற்றவும் கெட்டுப் போனவள் என முத்திரை குத்தவும் எம்மில் பலர் தயார் என்பதனை அறியாதார் உளரோ? இந்நிலையில் இவர்கள் எங்கு எவரிடம் முறையிடுவது? ஓட்டு மொத்த சமூக கண்ணோட்ட மாற்றமின்றி அவர்களுக்கு யார் நீதி வழங்க முடியும்? அதுவே முழுமையான நீதிக்கு ஆதாரமாகும். முதன்மையாகும். எதனையும் இழக்க நேரிடும் யுத்த நெருக்கடிகளில் வன்முறைகளே வழக்கமாகி வார்த்தைகளும் வன்முறை பேசுகையில் பாலியல் வன்முறைகளும் தலைவிரி கோலம் கொள்ளும். அதனைக் கட்டுப்படுத்த பலமான கட்டமைப்பொன்றினாலேயே முடியும். அனைத்து வன்முறைகளுக்கும் நியாயம் கூறிய மனப்பாங்கு பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்கும் நியாயம் சொல்கிற கொடுமையை இன்றைய அரசியல் கொக்கரிக்கிறது. கற்பழிப்புக்கும் கல்யாணத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் சீரழிந்து பிதற்றுகிறது. பாலியல் வன்முறையினால் பாதிக்கப்பட்ட பெண்களைப்பற்றிய கண்ணோட்டத்தில் ஒட்டு மொத்த மாற்றம் தேவையென்பதற்க்கு வேறு என்ன ஆதாரம் தேவை?
 
பாலியல் வன்முறையில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப் படுவதைத் தவிர்க்கவும்; அத்தகைய ஈனச் செயல்களை குற்ற உணர்வின்றி தொடரவும் அல்லவா எமது சமூக நடைமுறைகள் உறுதுனையாகிறது. பாதிக்கப்பட்ட பெண்களைப் பாதுகாக்கவும் அவர்களுக்கு ஆதரவளித்து வாழ உதவுவதை தமது கடமையாகவும் கண்ணியமான செயலாகவும் நாம் கருதும் போதே உண்மைகளை உலகறியும். ஓளிமயமான எதிர்காலம் பிறக்கும். உயிரையும் ஏனைய உறவுகளை பாதுகாக்கவும் நிர்ப்பந்திக்கப்பட்டு வஞ்சிக்கப் பட்டதை சம்மதத்துடன் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தியும்   கற்பழிக்கப்பட்டதற்கான சாட்சியினைக் கேட்டும் பாதிக்கப்பட்ட பெண்களை மேலும் மேலும் சின்னாபின்னமாக்கும் இருட்டறை சட்டங்கள் நீதி கோரும் ஒரு சிலரையும் நடைபிணமாக்கிவிடுகிறது.

இவர்களுக்கும் இன்னும் இருளிலேயே உண்மைகளோடு மௌனமாகிப் போன பலருக்கும் நீதி கிடைக்க வேண்டும். அதுவே இவர்களை மன அழுத்தங்களிலிருந்து விடுவித்து ஆறுதல் தரும். மேலும் மேலும் இத்தகைய அட்டூழியங்கள் நிகழாதிருக்க சட்டங்கள் உறுதி செய்ய வேண்டும். இதனை நடைமுறைப்படுத்த எமது மனங்களில் ஒட்டு மொத்த மாற்றம் தேவை. பாதிக்கப்பட்ட எமது சகோதரிகளின் கண்களில் இருக்கும் சுமைகளைக் குறைப்போம். இதற்கான பொறிமுறைகளை நடைமுறைப்படுத்த லண்டனில் நடைபெறும் பாலியல் வன்முறைக்கெதிரான சர்வதேச மகாநாடு வலுச்சேர்க்க முயலுமென நம்புவோம். பாசமுடன்..

(போர்க்கால பாலியல் வன்முறைகளுக்கெதிரான சர்வதேச மகாநாடு லண்டன் எக்செல் மண்டபத்தில் 10ம் திகதி முதல் 12ம் திகதி வரை பிரித்தானிய வெளிவிவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு கலந்துரையாடல்கள் கலைநிகழ்வுகள் திரைப்படங்கள் பொருட்காட்சிகள் நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொள்ளலாம். இத்தகைய நிகழ்வினை நிகழ்த்தும் பிரித்தானிய அரசு பல்வேறு நாடுகளிலும் பாலியல் வன்முறையால் பாதிப்புற்று தஞ்சம் கோரி வருவோரை புண்படுத்தும் வகையில் நடந்து கொள்கிறது என்ற குற்றச்சாட்டும் உள்ளது 

நன்றி - தேனீ

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்