/* up Facebook

Jun 30, 2014

ஆபத்தில் உதவும் 'ஆப்ஸ்' - கௌரி நீலமேகம்


என்னதான் பெண்கள் பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதுமாக இருந்தாலும் பெண்களின் பாதுகாப்பு என்பது இன்றளவும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. பெண்கள் பெரும்பாலும் அவர்கள் பாதுகாப்பை அவர்களே உறுதிசெய்துகொள்ளும் நிலையில்தான் இருக்கிறார்கள். எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறார்கள். அப்படியும் மீறி ஆபத்தில் சிக்கிக் கொள்கிற பெண்களுக்கு சில ஸ்மார்ட் போன் ஆப்ஸ் உதவிக்கரம் நீட்டுகின்றன.

ஃபைட் பேக் (fight back)

இந்த ஆப்ஸ் நீங்கள் ஏதாவது ஆபத்தில் மாட்டிக்கொண்டால் உங்கள் குடும்பத்தினருக்கு பேஸ்புக் மூலமாக எச்சரிக்கை செய்யும். ஒரே ஒரு பட்டனை அழுத்தியவுடன் ஜிபிஎஸ், எஸ்எம்எஸ், மேப்ஸ் போன்ற பல்வேறு வசிதகளைப் பயன்படுத்தித் தகவல்களை அனுப்பும்.

ஐ ஃபாலோ (I follow)

நாஸ் காம் விருது வாங்கியிருக்கும் இந்த ஆப்ஸ், மொபைலை மூன்று முறை அசைத்தால் 5 நொடிக்குள் ஆட்டோமேடிக் வாய்ஸ் காலை உங்களுக்கு வேண்டியவருக்கு அனுப்பிவிடும். ஒருவேளை அந்த நபர் அழைப்பை ஏற்கவில்லையென்றால் உங்கள் எமர்ஜென்சி தொடர்பில் இருப்பவர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பும். இதில் நீங்கள் மூன்று நபர்களைத் தொடர்புகளாக இணைத்துக்கொள்ளலாம்.

நிர்பயா (nirbhaya app)

இந்த ஆண்ட்ராய்டு ஆப்ஸ், ஆபத்து நேரத்தில் நீங்கள் இருக்கும் இடத்தைப் பற்றிய எஸ்ஓஎஸ் செய்திகளை உங்கள் நண்பர்களின் மொபைல்களுக்கும், அவர்களின் பேஸ்புக் பக்கங்களுக்கும் அனுப்பும்.

ஸ்கிரீம் அலார்ம் (Scream alarm)

பட்டனை அழுத்தியவுடன் ஒரு பெண்ணின் குரல் மிகுந்த சத்தத்துடன் கேட்கும். இது உங்களைத் தாக்க வருபவரிடம் இருந்து உங்களைக் காப்பாற்றும்.

சென்டினல் (sentinel app)

ஐபோன் 5 - க்காக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த ஆப்ஸ், உங்கள் ஸ்மார்ட் போனை உடைத்துவிட்டால்கூட உங்கள் நண்பர்களுக்கு எச்சரிக்கை செய்தி அனுப்பும். நீங்கள் ஆபத்தில் இருக்கும்போது எஸ்எம்எஸ், மின்னஞ்சல், தொலைபேசி அழைப்புகள் மூலம் உங்கள் நண்பர்களுக்கு நீங்கள் இருக்கும் இடம் குறித்த தகவலுடன் அனுப்பிவைக்கும்.

Thanks - The hindu
...மேலும்

Jun 29, 2014

சோதனைக் குழாய் குழந்தைகளின் அம்மா - சரோஜ் நாராயணசுவாமி

மகளிர் நோய்க்கான மருத்துவத் துறையில் பல்வேறு சாதனைகள் புரிந்துள்ள டாக்டர் இந்திரா ஹிந்துஜா, ஒரு காலத்தில் வலி பொறுக்க முடியாமல் தற்கொலை செய்துகொள்ள நினைத்தார் என்றால் நம்ப முடிகிறதா? 

“நான் எம்.டி. படிப்பை முடித்ததும் எனக்கு மிகக் கடுமையான முதுகு வலி ஏற்பட்டு பொறுத்துக்கொள்ள முடியாத அளவுக்குத் துடிதுடித்து வேதனைப்பட்டேன். முதுகுத் தண்டு வடத்தில் ஒரு கட்டி இருப்பதாகவும், உள்ளே எலும்பு அரிக்கப்பட்டுவருவதாகவும் டாக்டர்கள் சொன்னார்கள். மூன்றிலிருந்து ஆறு மாதங்களில் கால்களில் பக்கவாதம் ஏற்படலாம் என்றும் சொன்னார்கள். நான் உண்மையிலேயே உடைந்துபோனேன்” என்று அந்த வேதனையான அனுபவத்தை நினைவுகூரும் டாக்டர் இந்திரா ஹிந்துஜா, வேதனை தன்னை வாட்டியெடுத்ததில் பெரும் மனச் சோர்வுக்கு ஆளானதாகக் குறிப்பிடுகிறார்.

இந்தத் தீராத தொல்லையிலிருந்து விடுபடத் தற்கொலை செய்துகொள்வதுதான் ஒரே தீர்வு என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம். முக்கியமாகத் தனது பெற்றோர்களுக்கு ஒரு சுமையாக இருக்க அவர் விரும்பவில்லை. அந்தச் சமயத்தில்தான் மைலோகிராம் என்ற சோதனையைச் செய்துபார்ப்பது என்று டாக்டர்கள் முடிவுசெய்தனர். இவரது தற்கொலை மனநிலையை நன்கு அறிந்திருந்த இவருடைய தோழிகள் இவரை விட்டு நகராமல் கூடவே இருந்தார்கள். 

மைலோகிராம் சோதனையில் கட்டி எதுவும் இல்லை என்றும், உடல் நிலைமையில் கவலைப்படும்படி எதுவும் இல்லை என்பதும் தெரியவந்தது. “சாதாரணமாக அந்த வயதில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய முதுகுவலிதான் என்றும், மருந்துகள், யோகா போன்றவற்றால் குணப்படுத்திவிட முடியும் என்றும் டாக்டர்கள் சொன்னது என் காதுகளில் தேனை ஊற்றியது போல இருந்தது” என்று சொல்லும் ஹிந்துஜா, இந்தச் செய்தியைக் கேட்டவுடன், அவர் தோழிகள் இவரைத் தழுவி முத்தமிட்டு, மகிழ்ச்சி ஆரவாரத்தில் திணறடித்த தருணத்தை மறக்கவே முடியாது என்கிறார். 

“தற்கொலை செய்துகொள்ள நினைத்த என்னை நான் இப்போதும் ஒரு கோழை என்றே நினைக்கிறேன்” என்று சொல்கிறார். இனப்பெருக்க உயிரியல் (Reproductive Biology) பற்றிய துறையில் இவர் எழுதிய 108 அறிவியல் சார்ந்த வெளியீடுகள், பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. ஐம்பதுக்கும் மேற்பட்ட கருத்தரங்குகளிலும் மாநாடுகளிலும் உரையாற்றியிருக்கிறார். 

இந்திரா ஹிந்துஜாவுக்குக் கிடைத்துள்ள ஏராளமான பல விருதுகளும் பாராட்டுகளும் பதக்கங்களும் அவருடைய மருத்துவமனை அலமாரிகளை அலங்கரிக்கின்றன. 2011-ல் இந்திய அரசு இவருக்கு பத்ம விருது வழங்கிக் கௌரவித்தது. மகாராஷ்டிரா ஆளுநர், தன்வந்த்ரி விருது வழங்கிச் சிறப்பித்திருக்கிறார். இந்தியாவின் சோதனைக் குழாய் முறையிலான முதல் குழந்தை பிறப்பிற்கு முன்னோடியாக விளங்கியமைக்காக ரோட்டரி சிறப்புப் பரிசைப் பெற்றுள்ளார். 

கடந்த ஆண்டு கோல்டன் மகாராஷ்டிரா விருதுபெற்றோர் வரிசையில் இடம்பெற்ற இவர், இந்திய ஐ.வீ.எஃப். மற்றும் இன்ஃப்ர்டிலிடி துறையிலான முதல் பெண்மணி என்ற சிறப்புக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ராஜஸ்தான் கட்ச் பகுதியைச் சேர்ந்த மணி சாவ்டா என்ற பெண்மணிக்குச் சோதனைக் குழாய் மூலம் குழந்தை பிறக்கச் செய்திருக்கிறார் இந்துஜா. 

“அந்தப் பிரசவத்திற்காக மணிசாவ்டா கே.ஈ.எம். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நான் அந்தப் பெண்ணுக்கு சிசேரியன் செய்தேன். சர்ஜரி முடிந்து பெண் குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டபோது அது என் காதுகளுக்கு இன்ப கானமாகவே ஒலித்தது. அந்தப் பெண் குழந்தைதான் ஐ.வீ.எஃப். ட்ரான்ஸ்ஃபர் முறையில் உருவெடுத்த முதல் சோதனைக் குழாய் குழந்தை. ஹர்ஷா என்ற அந்தப் பெண் 1986-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதி பிறந்தாள். அது என் வாழ்க்கையில் மறக்க முடியாத பொன்னாள்” என்கிறார் ஹிந்துஜா. 

இந்தச் சாதனையைச் செய்தபோது ஹிந்துஜாவுக்கு வயது 38. தற்போது 68 வயதாகும் டாக்டர் ஹிந்துஜா, மருத்துவத் துறைக்கே தன்னை முழுமை யாக அர்ப்பணம் செய்துகொண்டதால் திருமணம் செய்துகொள்ளவில்லை. “குழந்தை எதையும் தத்து எடுத்து வளர்க்கிறீர்களா?” என்று கேட்டதற்கு, “இங்கு பிறந்துள்ள அத்தனை சோதனைக் குழாய் குழந்தைகளும் என்னுடையதுதானே” என்று பெருமிதத்துடன் சொல்கிறார் ஹிந்துஜா.

1984-ம் ஆண்டு தொடங்கி இதுவரை பத்தாயிரத்திற்கும் அதிகமான சோதனைக் குழாய் குழந்தைகள் பிறப்பதற்கு டாக்டர் ஹிந்துஜா வழிவகுத்துக் கொடுத்திருக்கிறார். சோதனைக் குழாய் குழந்தைகள் பிறப்புக்கான வெற்றி வாய்ப்பு என்பது ஐம்பது சதவீதம்தான் என்றும் இவர் தெரிவிக்கிறார். மருத்துவ ஆராய்ச்சித் துறையில், அளவுக்கு மீறிய ஆர்வமும், அதீதமான ஈடுபாடும் கொண்டுள்ள இவர், இனப்பெருக்க மருத்துவ ஆய்வில் மிகுந்த முனைப்புடன் ஈடுபட்டுள்ளார். மும்பையில் உள்ள ஹிந்துஜா தேசிய மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தில், இன்கஸ் மையத்தில் ஐ.வி.எஃப் பிரிவின் நிறுவநராக இன்றும் பளிச்சிட்டுவருகிறார் டாக்டர் ஹிந்துஜா. 

மருத்துவம் தொடர்பான பல சர்வதேசக் கருத்தருங்குகளில் இவர் கலந்துகொண்டு உரையாற்றிவருகிறார். மகளிர் நோய் மருத்துவம் தொடர்பான பல விஷயங்களையும் தெரிந்துகொள்வதற்காகவே மகளிர் நோய் மருத்துவத் துறை மாணவர்கள் பலர் இவரை அணுகுகிறார்கள். பாகிஸ்தான் சிந்த் மாகாணத்தைச் சேர்ந்தவரான ஹிந்துஜாவின் குடும்பத்தார் இந்தியப் பிரிவினைக்குப் பின் இந்தியாவில் நிரந்தரமாகவே குடியேறிவிட்டனர். மருத்துவப் புத்தகங்களைப் படிப்பது இவரின் முக்கியமான பொழுதுபோக்கு. சித்தார் வாசிப்பதில் இவர் கைதேர்ந்தவர். இனிய இசையை ஆழ்ந்து ரசிப்பவர். 

வலி பொறுக்காமல் உயிரை விட்டுவிட வேண்டும் என்று ஒரு காலத்தில் நினைத்த இந்திரா ஹிந்துஜா, எத்தனையோ உயிர்கள் பிறக்கக் காரணமாக இருந்துவருகிறார். மரணத்தின் விளிம்பைத் தொட்டுத் திரும்பிய இவர், உயிரின் வலிமையையும் மதிப்பையும் உணர்த்தும் வகையில் செயல்பட்டுவருவதில் ஆச்சரியம் என்ன?

(மகளிர் நோய் மருத்துவம் தொடர்பாக இவரிடம் ஆலோசனை கேட்க விரும்புவோர், indirahinduja@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம்.)

நன்றி - முகநூல் பகிர்வு
...மேலும்

Jun 28, 2014

இளம் நோபல் பெண் - ஆர்.கார்த்திகா

மனித உரிமை ஆர்வலர், இதழியலாளர், அரசியல்வாதி எனப் பல முகங்களைக் கொண்டவர் ஏமன் நாட்டைச் சேர்ந்த தவக்குல் கர்மான். பெண்களுக்கென கட்டுப்பாடுகள் நிறைந்த அரபு நாட்டில் பிறந்தாலும் வர்த்தகப் பாடத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அத்துடன் தன் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடாமல் அரசியல் அறிவியலில் முதுகலை பட்டமும், சட்டக்கல்வியில் முனைவர் பட்டமும் பெற்றார்.

மனித உரிமை பாதுகாப்புக்காக 2011-ம் ஆண்டு நடைபெற்ற ஏமனியப் புரட்சியில் அலி அப்துல்லா சாலேவின் அரசுக்கு எதிரான பேரணிக்கு மாணவர்களை ஒருங்கினைத்தார். போராட்டங்களில் பங்கேற்று பல முறை சிறைக்குச் சென்றிருக்கிறார். சிறையில் இருந்து வெளிவந்தாலும் சோர்ந்து போகாமல் மீண்டும் போராட்டங்களைக் கையிலெடுப்பார். பிப்ரவரி மூன்றாம் நாளை ‘பெருங்கோப நாள்’ என்று அறிவித்தார். 

மனித உரிமை பாதுகாப்புக்காக 2011-ம் ஆண்டு நடைபெற்ற ஏமனியப் புரட்சியில் அலி அப்துல்லா சாலேவின் அரசுக்கு எதிரான பேரணிக்கு மாணவர்களை ஒருங்கினைத்தார். போராட்டங்களில் பங்கேற்று பல முறை சிறைக்குச் சென்றிருக்கிறார். சிறையில் இருந்து வெளிவந்தாலும் சோர்ந்து போகாமல் மீண்டும் போராட்டங்களைக் கையிலெடுப்பார். பிப்ரவரி மூன்றாம் நாளை ‘பெருங்கோப நாள்’ என்று அறிவித்தார். 

பெண்களின் பாதுகாப்புக்காக, ‘சங்கிலிகள் இல்லாத பெண் இதழியலாளர்கள்’ என்ற அமைப்பை நிறுவி அதன் தலைவராகவும் இருக்கிறார். பெண்கள் முன்னேற்றத்திற்கு குரல் கொடுத்த அதே நேரத்தில் ஊடகங்களில் பெண்களின் பங்கேற்பு குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார். ஏமன் நாட்டு மக்களால் ‘இரும்புப் பெண்மணி’ ‘புரட்சித் தாய்’ என அழைக்கப்படுகிறார். 2011-ம் ஆண்டு லிபேரியா நாட்டின் எல்லென் ஜான்சன், லேமா குபோவீ ஆகியோருடன் சேர்ந்து பெண்கள் பாது காப்பு, சமாதானத்தைக் கட்டியெழுப்புதல், பெண்கள் உரிமைகளுக்கான வன்முறையற்ற போராட்டம் ஆகியவற்றுக்காக அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார். 

உலகிலேயே நோபல் பரிசு பெறும் முதல் அராபியப் பெண்ணாகவும், இரண்டாவது இஸ்லாமியப் பெண்ணாகவும் வரலாறு படைத்துள்ளார் தவக்குல் கர்மான். உலகிலேயே இளம் வயதில் நோபல் பரிசு பெற்ற பெண்ணும் இவர்தான். தான் பெற்ற நோபல் பரிசை ஏமன் நாட்டு பெண்களுக்கு அர்பணிப்பதாகக் கூறியிருக்கிறார் தவக்குல் கர்மான். 

நன்றி - த ஹிந்து 
...மேலும்

Jun 27, 2014

கௌரவக் கொலைகளை தடுக்க என்ன செய்யலாம்?

மதுரையை சேர்ந்த பவானி என்ற ஒரு மத்திய சாதி பெண் ஒரு தலித்தை மணந்த காரணத்தினால் அவளது சகோதரனால் பிள்ளைகள் முன்னால் வெட்டி கொல்லப்பட்டிருக்கிறாள். கடந்த இரு வருடங்களில் மட்டும் 24 பெண்கள் இது போல் தமிழகத்தில் கௌரவக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாக நடந்து வருகிற ஒரு மௌன அநீதி இது.
சாதி அரசியல் ஆட்சிகளை மாற்றக் கூடியது என்பதால் அரசுகள் என்றுமே இவ்வகை குற்றங்களை தண்டிக்க தயங்குகின்றன. குறிப்பாக தேவர் சாதி ஆதரவு அதிமுகவுக்கு அதிகம் என்பதால் அதை சரிசமமாய் பங்கு போடுவது எப்படி என திமுக இப்போது பரிசீலித்து வருகிறது. இப்படி தமிழகத்தில் எந்த கழகம் ஆட்சிக்கு வந்தாலும் சாதிப்படுகொலைகளோ கௌரவக் கொலைகளோ தடுக்கப்படாது. இதற்காக அத்தனை தேவர்களும் வெறியர்கள் என பொருளில்லை. தேவர் சாதிக்குள்ளும் கௌரவக் கொலைகளை கண்டிக்கிறவர்கள் இருக்கிறார்கள். வெறி பிடித்த ஒரு சிறுபான்மை குழு இது போன்ற ஆதிக்க சாதிகளுக்குள் இருக்கும். இக்குழுக்களை கண்டிக்க அரசுகள் தவறுவது தான் மோசமான சாதிய வன்முறைகளுக்கும் பரஸ்பர சாதிய அனுசரனையின்மை ஏற்படவும் காரணமாகிறது. இது இந்தியா பூராவும் உள்ள பிரச்சனையும் தான். உத்தரபிரதேச சாதிய கொலைகள் ஒரு உதாரணம். அங்கும் இது போல் அரசியல் கட்சிகள் கப் பஞ்சாயத்துகளை மயிலிறகுகளால் வருடி பாதுகாக்கின்றன. தேர்தலின் போது கப் பஞ்சாயத்தின் தலைவர்கள் சாதி ஓட்டுகளை தங்களுக்கு எதிராக திருப்ப கூடாது என அரசியல்வாதிகள் பயப்படுகிறார்கள். இதனால் தான் இந்தியா பூரா கொதித்தெழுந்தும் கப் பஞ்சாயத்துகளை ஒழிக்கவோ அவர்களுக்கு எதிராக சட்டம் இயற்றவோ அரசியல் கட்சிகள் தயாரில்லை. உத்தரபிரதேசத்தில் ஒரு கிராமத்தில் உள்ள சாதி இந்துக்கள் அத்தனை பேரும் தீவிர வெறியர்களாய் இருக்கும் அவசியம் இல்லை. ஆனால் கப் பஞ்சாயத்து ஒன்று நடுநிலையில் இருக்கும் மக்களை தீவிர வெறுப்பு நிலைக்கு தள்ளுகிறது. இந்தியாவில் உள்ள அத்தனை இந்துக்களும் பாபர் மசூதியை இடிக்க சொல்லவில்லை. ஆனால் ஒரு கட்சி நடுநிலை மக்களின் மனங்களை இஸ்லாமிய வெறுப்பு நோக்கி குவிக்கிறது.
சரி சாதிய கலவர கொலைகளில் இருந்து கௌரவக் கொலைகளுக்கு வருவோம். தடுக்க என்ன செய்யலாம். ஜெயிலில் போடுவதால் பயனில்லை. ஏனென்றால் ஒன்று இக்குற்றங்களை செய்கிறவர்களை தங்களை தியாகி போல் நினைத்துக் கொள்கிறார்கள். சாதிக்காக வாழ்க்கையை தியாகம் பண்ண தயாராக இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் சாதிக்குள் குடும்ப கௌரவத்தை காப்பாற்றும் அழுத்தமும் ஒரு காரணமாகிறது. அதாவது சமூக அழுத்தம். சுற்றத்தார், சொந்தக்காரர்கள் தரும் மறைமுக அழுத்தம். மூன்றாவதாய் சொத்து இன்னொரு சாதிக்கு போய் விடக் கூடாது என்கிற ஆவேசம். இக்குற்றத்தை தடுக்கும் வழிமுறை இம்மூன்றையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
எனக்கு தோன்றுவதை இங்கே சொல்லுகிறேன்.
சாதி மறுப்பு செய்பவர்களுக்கு பதிவு செய்து கொள்ள ஒரு அரசு வாரியம் அமைக்க வேண்டும். இவ்வாரிய உறுப்பினர்கள் தலித்துகளாக இருக்க வேண்டும். அரசு பணியாளர்களாக இருந்தால் இன்னும் நல்லது. ஒவ்வொரு மாவட்டத்திலும் சாதி மறுப்பு ஜோடிகளின் பாதுகாப்பு இவர்கள் பொறுப்பு. வருடத்துக்கு ஒருமுறை அவர்களின் நிலையை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாரியத்துக்கு காவல்துறையை கண்காணிக்கும் அதிகாரம் வேண்டும்.
ஒரு ஜோடி சாதி மறுப்பு மணம் செய்தவுடன் காவல்துறை மேல்சாதி பெற்றோர் மற்றும் சொந்தங்களை அழைத்து சமரசம் பேச வேண்டும். எச்சரிக்கை செய்ய வேண்டும். மருமகன்/மருமகளுக்கு தங்களால் எந்த தீங்கும் வராது என எழுதி ஒப்பமிட வைக்க வேண்டும். அதில் அத்தனை சொந்தபந்தங்களும் ஒப்பமிட வேண்டும். இதனால் குற்றத்துக்கு எதிரான ஒரு சமூக அழுத்தத்தை மேல்சாதி குடும்ப ஆண்களிடம் ஏற்படுத்த முடியும். இரண்டு சட்டதிருத்தங்கள் பண்ண வேண்டும்


  • சாதிமறுப்பு திருமண ஜோடிகளில் யாருக்காவது தீங்கு, கொலைமிரட்டல், கொலை நேர்ந்தால் அதற்கு மேல்சாதி பெற்றோர்களும், உடனடி உறவினர்களும் தான் பொறுப்பு. எந்த ஆதாரமும் இன்றி அவர்களை கைது செய்யலாம். கற்பழிப்பு வழக்குகளில் போல் தாம் குற்றம் செய்யவில்லை என குற்றம் சாட்டப்பட்டவர் தான் நிரூபிக்க வேண்டும். ஒரு பாதுகாப்பு பொறுப்பு பத்திரம் தயார் செய்து அதில் மேல்சாதி பெற்றோர் மற்றும் உடனடி சொந்தங்களை ஒப்பமிட வைப்பது போலீசார் பொறுப்பு.
  • ஒப்பமிட்ட பின் சாதிமறுப்பு ஜோடியில் யாராவது கொல்லப்பட்டால் மேல்சாதி குடும்பத்தினர் மற்றும் அவர்களின் உடனடி சொந்த்த்தினரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடைமை ஆக்கப்பட வேண்டும். தம் மேல் குற்றமில்லை என நீரூபித்த பின்னர் மட்டுமே சொத்து திரும்ப அளிக்கப்படும். அதுவரை சொத்துக்களில் இருந்து வரும் வருமானம் அரசுக்கு சொந்தம்.
    சொத்துக்காகவும் கௌரவத்துக்காகவும் தானே இக்கொலைகள் நடக்கின்றன. தான் கொலை செய்தால் தன் சாதி சொந்தபந்தங்களுக்கு நிறைய தொந்தரவுகளும் சட்டசிக்கலும் ஏற்படும் என தெரிந்தால் யாரும் செய்ய மாட்டார்கள். அப்படி செய்தால் அவர் மீது சொந்தபந்தத்தினருக்கு கடும் வெறுப்பு ஏற்படும். இன்னொன்று சொத்து. கொன்றால் தம் சொத்துக்களூம் அதன் வழி குடும்பத்தின் பொருளாதார பத்திரமும் இல்லாமல் போகும் என்றால் அதுவே மிகப்பெரிய மனத்தடையாக கொலையாளிக்கு அமையும். குறிப்பாய் தான் கொலை செய்தால் தன் மனைவி, குழந்தைகள் வீடிழந்து வீதிக்கு வருவார்கள் என்ற எண்ணம்.
இது போன்ற வழக்குகளை தலித் அதிகாரிகள் மட்டுமே விசாரிக்க வேண்டும் எனவும், இவ்வழக்குகளில் காவல் துறை மீதான பொறுப்பும் அதிகாரம் ஒரு உச்சநீதிமன்ற நீதிபதியின் கீழ் தான் இருக்க வேண்டும் எனவும் சட்டமாற்றங்கள் கொண்டு வர வேண்டும்.

...மேலும்

பெண்களின் இரு வேறு உலகங்கள் - கவிதா முரளிதரன்

அவளுக்கு முன் ஒரு உலகம்
இயக்குநர்: நிஷா பஹுஜா
தயாரிப்பாளர்: அனுராக் காஷ்யப்
முற்றிலும் இரு வேறு உலகங்கள், பெண்ணுடல் மீது அவை நிகழ்த்தும் போர்கள், ஏற்படுத்தும் தாக்கங்கள் என்று விரிகிறது The world before her ஆவணப்படம். 2012-ல் வெளியான படம், பல நாடுகளில் திரையிடப்பட்ட பிறகு இப்போதுதான் இந்தியா வந்திருக்கிறது. 

இதுவரை படம்பிடிக்கப்படாத விஸ்வ இந்து பரிஷத்தின் பெண்களுக்கான அமைப்பான துர்கா வாகினியின் வளாகத்தில் பிராச்சி என்கிற பெண்ணுடன் தொடங்குகிறது படம். அவருடனான அறிமுகத்திற்குப் பிறகு மிஸ் இந்தியா அழகிப் போட்டிக்கான பயிற்சி முகாமை அறிமுகப்படுத்துகிறது. இந்து ராஜ்ஜியத்தைக் காப்பாற்றத் தயாராகும் பெண்கள் ஒரு புறம், இந்தியாவின் மிக முக்கியமான அழகிப் போட்டியை வெல்லத் தயாராகும் பெண்கள் மறுபுறம் என்று முற்றிலும் இரு வெவ்வேறான உலகங்களுக்குள் பயணப்படும் இந்தத் திரைப்படம், எந்தப் பாசாங்கும் இல்லாமல் அந்த உலகங்களை முன் வைக்கிறது. 

பரிஷத்திற்கு வேலை பார்க்கத் திருமணத்தை நிராகரிக்கும், இந்துத்வாவிற்காகக் கொலை செய்யத் தயங்காத பிராச்சி, காஷ்மீரைக் கேட்டால் கழுத்தை அறுப்போம் என்று பாடுகிற, முஸ்லிம் நண்பர்களே இல்லையென்று பெருமைப்படுகிற சின்மயி – பெரும்பாலானவர்கள் நுழைந்து பார்க்காத இவர்களது உலகத்திற்குள் இந்தப் படம் நுழைகிறது. ஏழாம் வகுப்பு படிக்கும்போது பொய் சொன்னதற்காகத் தந்தை போட்ட சூட்டைப் பெருமையாகக் காட்டுகிறார் பிராச்சி. “அது அவளுக்கு ஒரு பாடம்” என்று சிலாகிக்கிறார் தந்தை. 

“பிறந்தவுடன் பெண் குழந்தைகளைக் கொல்லும் ஒரு சமூகத்தில் என் தந்தை என்னை வாழ அனுமதித்திருக்கிறார். அதற்கு நான் அவருக்கு நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்” என்று பிராச்சி அழும் கூர்மையான காட்சியில் மிக ஆழமான கேள்விகளை எழுப்புகிறது திரைப்படம். “நான் திருமணத்தை வேண்டாம் என்று சொல்கிறேன், ஆனால் நாளை துர்கா வாகினியில் பயிற்சி பெறும் பெண்களுக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவேன், இந்த முரண்பாடு புரிகிறது. ஆனால் பரிஷத்தான் என் வாழ்க்கை” என்கிறார் பிராச்சி. 

இவர்களது உலகத்திற்கும் மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்கும் பெண்களின் உலகத்திற்கும் என்ன ஒற்றுமை இருந்துவிட முடியும் என்று ஒரு பார்வையாளருக்குத் தோன்றலாம். அந்த எண்ணத்தை அடித்து நொறுக்குகிறார் பூஜா சோப்ரா. 2009-ல் மிஸ் இந்தியாவாகத் தேர்வு செய்யப்பட்ட இவரை இரண்டாவது பெண் குழந்தையாகப் பிறந்ததால் கொல்லச் சொல்லி வற்புறுத்தியிருக்கிறார் தந்தை. அதைச் செய்ய முடியாமல் அவரிடமிருந்து பிரிந்து மகள்களைத் தனியாக வளர்த்து ஆளாக்கியிருக்கிறார் தாய். தந்தையால் நிராகரிக்கப்பட்ட பெண் மிஸ் இந்தியாவாக முடிசூடுகிறார். 

பெண் சக்தி, பெண் முன்னேற்றம் என்று அழகிப் போட்டிகளில் கலந்து கொள்ளும் பெண்கள் பேசினாலும் உண்மையிலேயே அந்தப் போட்டிகளில் அவர்கள் பண்டங்களாக மாற்றப்படுகிறார்கள் என்பதை அந்தப் பயிற்சி முகாமின் வாயிலாகவே அம்பலப்படுத்துகிறது திரைப்படம். ஒரு காட்சியில் அழகிப் போட்டியின் இயக்குனர் சொல்கிறாரென்று முகங்களை மறைத்துக்கொண்டு வெறும் கால்களை மட்டுமே காட்டி பூனை நடை போடுகிறார்கள் போட்டியாளர்கள். தனது சுயமதிப்பிற்கு எதிரான செயல் என்றாலும் செய்ய வேண்டியிருக்கிறது என்கிறார் ஒரு போட்டியாளர். 

ஒன்றோடு ஒன்று முரண்படும் இரு வெவ்வேறு உலகங்கள் எப்படிப் பெண்ணுடல் மீது வெவ்வேறு வடிவங்களிலான தாக்குதல்களைக் கட்டவழித்துவிடுகின்றன என்பதை நுட்பமாக வெளிப்படுத்துகிறது இந்தத் திரைப்படம். எதையும் பூடகமாகச் சொல்லாமல் நேரடியான காட்சிகளாகவே சொல்லும் படம், பெண் மீதான வன்முறைகளின் வேர்கள் பற்றிய தீவிரமான சிந்தனைகளைத் தூண்டுகிறது. இன்று பரவலாக நிகழ்ந்துகொண்டிருக்கும் பாலியல் வன்முறைகள் தாண்டிப் பெண்மீதான வன்முறை எவ்வளவு ஆழமாக எல்லா நிலைகளிலும் எல்லா உலகங்களிலும் விரவியிருக்கிறது, காலம் காலமாக அது எப்படித் தொடர்கிறது, வெவ்வேறு வடிவங்கள் வழியாக சமூக அங்கீகாரம் பெறுகிறது என்று பல சிந்தனைகளை எழுப்புகிறது இந்த ஆவணப்படம். 

படம் எந்த முன்முடிவும் இல்லாமல் தொடங்குகிறது. எந்தத் தீர்ப்பும் எழுதாமல் முடிகிறது. ஆனால் பல கேள்விகளை விட்டுச்செல்கிறது.
...மேலும்

Jun 26, 2014

திரைப்படங்களில் பெண்மை ஒளிர்கிறதா? - அருண். மோ


பொதுவாகத் திரைப்படங்கள் பெண்களைத் தாயாகவும் தெய்வமாகவும் கொண்டாடுகிற மாதிரி மாயையை உருவாக்கினாலும் பெரும்பாலான படங்களில் பெண்கள் கீழ்த்தரமாகவே சித்தரிக்கப்படுகிறார்கள். சமீபத்தில் தமிழில் வெளிவந்த இரண்டு படங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
உன் சமையல் அறையில் திரைப்படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருப்பவரை நோக்கி போடா வாடா என்கிற ஆண்களை அழைப்பதற்கான வார்த்தைகளையே பயன்படுத்தியிருக்கிறார்கள். சமூகத்தின் பொதுப்புத்தியே, ஆணாக இருந்து திருநங்கையாக மாறுபவர்களை நோக்கி மீண்டும் மீண்டும் அவனது ஆண் தன்மையை நினைவுபடுத்தும் விதமாக அவன் இவன் என்று அழைப்பது. தவிர, திருநங்கைகளை டேய் என்று அழைப்பது அவர்களை எவ்வளவு காயப்படுத்தும் என்பதைக்கூடப் புரிந்துகொள்ளாமல் படம் எடுத்திருப்பது பெரிய வருத்தத்தையே கொடுக்கிறது.

ஆடைதான் அடையாளமா?
இரண்டாவது படம் மஞ்சப்பை. பேருந்து நிறுத்தத்தில் நவீன உடையணிந்து நின்றுக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் அங்கங்களை உரசிப்பார்க்க ஒருவன் சேட்டைகளில் ஈடுபட்டுக்கொண்டே இருப்பான். கிராமத்தில் இருந்து நகரத்திற்குக் குடிபெயர்ந்த கதாநாயகனின் தாத்தா உடனே அந்த ஆணை அடித்து விரட்டிவிட்டு, பெண்ணை அழைத்துக்கொண்டு அவளது வீட்டிற்குச் செல்வார். அவளுடைய தந்தையை அழைத்து, அவரது கன்னத்தில் ஒரு அறை விடுவார். அடுத்து பேசும் வசனங்கள்தான் மிக முக்கியமானவை. “காலம் கெட்டுப்போய் கிடக்கிறது, பொம்பள புள்ளைய இப்படிதான் அரைகுறையா டிரஸ் போட்டுக்கிட்டு அலையை விடுவியா?” என்பார்.

இந்தக் காட்சியின் தொடர்ச்சியாக, சில நாட்கள் கழித்து அந்தத் தாத்தாவைப் பார்க்கும் பெண்ணின் தந்தை, “என் கண்ணைத் திறந்துவிட்டீர்கள். தாய் இல்லாத பெண் குழந்தை. அதான் அதுங்க இஷ்டம் போல வளர்த்துவிட்டேன். இப்போ அவங்களே ஒழுங்கா டரெஸ் போடக் கத்துக்கிட்டாங்க” என்கிற அர்த்தத்தில் பேசுவார். நியாயப்படி தாத்தாவின் கன்னத்தில், அந்தப் பெண்ணின் தந்தைதான் அறை விட்டிருக்க வேண்டும். பெண்களுக்கான பாதுகாப்பு அவர்களின் உடையில்தான் இருக்கிறது, அவர்கள் அரைகுறையாக உடையணிந்தால் பார்க்கிற ஆண்களுக்கு அவளை அனுபவிக்கத்தான் தோன்றும் என்கிற பொதுப்புத்தி சிந்தனைக்கு சாமரம் வீசியிருக்கிறது இந்தத் திரைப்படம்.
தொடரும் பெண் அடிமைத்தனம்
ஆண்கள் தங்களுக்கு வசதியான, தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு உடை அணிந்துக்கொள்ளலாம். ஆனால் பெண்கள் எப்போதுமே, எல்லா பாகங்களையும் இழுத்துப் போர்த்திக்கொண்டுதான் உடை அணிய வேண்டும் என்பது காலம்காலமாக இங்கே பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி. நிஜ வாழ்க்கையில் இந்த அநீதியில் இருந்து பெண்கள் கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டுக்கொண்டிருக்கும்போது, அதனைத் தடுக்கும் விதமாக, இந்த மாதிரியான படங்கள் தொடர்ந்து வெளிவருவது தமிழ்ச் சமூகத்தின் சாபக்கேடு. பெண் அடிமைத்தனத்தை ஆதரிப்பதோடு மட்டுமல்லாமல், பெண்களைத் தொடர்ச்சியாகக் கொச்சைபடுத்தும் விதமாகவும் காட்சியமைப்புகளைத் தமிழ் சினிமா தொடர்ந்து உருவாக்கிக் கொண்டே வருகிறது. சில நடிகர்கள், காமெடி என்கிற பெயரில் தொடர்ச்சியாகப் பெண்களைக் கொச்சைப்படுத்தும் விதமாக இரட்டை அர்த்த வசனங்களைப் பேசுவதும், பெண்களை இழிவுபடுத்துவதும் நடந்து வருகிறது.
எதிர்ப்பைப் பதிவு செய்வோம்
மஞ்சப்பை படத்தில், மொபைல் போன் மாற்றுவது மாதிரி, ஆண் நண்பர்களையும் தொடர்ச்சியாக மாற்ற வேண்டும் என்று ஒரு பெண்ணே வசனம் பேசுவது போன்ற காட்சியமைப்பு இருக்கிறது. ஆண்கள் தங்களுக்கு சாதகமான, அதே நேரத்தில் பெண்களுக்கு எதிரான ஒரு சூழலைப் பெண்களை வைத்தே அரங்கேற்றிவருகிறார்கள் என்பது எத்தனை பெரிய அவலம். இந்த மாதிரியான படங்களுக்கு எதிராக, பெண்களும், பெண் படைப்பாளிகளும் தொடர்ந்து போராட வேண்டும். பெண்களைப் பற்றிய மோசமான வசனங்களோ, அவர்களின் அடிமைத்தனத்தை ஆதரிக்கும் வகையிலான காட்சிகளையோ ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. தொடர் போராட்டங்கள் மட்டுமே இப்படியான அவலங்களுக்கு முடிவு கட்டும். இந்தப் போராட்டத்தையும் தாண்டி, திரைப்பட தணிக்கைக் குழுவினரும் பெண்களுக்கு எதிரான இப்படிபட்ட காட்சிகளுக்கு அனுமதி மறுக்க வேண்டும்.
மஞ்சப்பை படத்தில், மொபைல் போன் மாற்றுவது மாதிரி, ஆண் நண்பர்களையும் தொடர்ச்சியாக மாற்ற வேண்டும் என்று ஒரு பெண்ணே வசனம் பேசுவது போன்ற காட்சியமைப்பு இருக்கிறது. ஆண்கள் தங்களுக்கு சாதகமான, அதே நேரத்தில் பெண்களுக்கு எதிரான ஒரு சூழலைப் பெண்களை வைத்தே அரங்கேற்றிவருகிறார்கள் என்பது எத்தனை பெரிய அவலம். இந்த மாதிரியான படங்களுக்கு எதிராக, பெண்களும், பெண் படைப்பாளிகளும் தொடர்ந்து போராட வேண்டும். பெண்களைப் பற்றிய மோசமான வசனங்களோ, அவர்களின் அடிமைத்தனத்தை ஆதரிக்கும் வகையிலான காட்சிகளையோ ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. தொடர் போராட்டங்கள் மட்டுமே இப்படியான அவலங்களுக்கு முடிவு கட்டும். இந்தப் போராட்டத்தையும் தாண்டி, திரைப்பட தணிக்கைக் குழுவினரும் பெண்களுக்கு எதிரான இப்படிபட்ட காட்சிகளுக்கு அனுமதி மறுக்க வேண்டும். 

நன்றி - த ஹிந்து
...மேலும்

Jun 25, 2014

ராகிங் கொடுமையால் மருத்துவ மாணவி தற்கொலை: சீனியர் மாணவி சிறையில் அடைப்பு

தனியார் மருத்துவக் கல்லூரி மாணவி, ராகிங் கொடுமையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக சீனியர் மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளையார்பாளையம் வல்லீஸ்வரர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன். தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரிவு மேலாளராக பணியாற்றுகிறார். இவரது மகள் யோகலட்சுமி(19), சென்னை போரூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவக் கல்லூரியில் பி.எஸ்சி. விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியிலேயே தங்கியிருந்தார். வாரம் ஒரு முறை சொந்த ஊருக்கு சென்று வருவார்.

யோகலட்சுமி கல்லூரியில் சேர்ந்ததில் இருந்தே அவரை சீனியர் மாணவிகள் சிலர் ராகிங் செய்துள்ளனர். 2-ம் ஆண்டுக்கு வந்த பிறகும் 3-ம் ஆண்டு மாணவிகள் சிலர், அவரை தொடர்ந்து ராகிங் செய்துள்ளனர். இதுபற்றி கல்லூரி நிர்வாகத்திடம் யோகலட்சுமி கூறியுள்ளார். ஆனால், அவர்கள் கண்டு கொள்ளவில்லை. பெற்றோரிடம் இதுபற்றி கூறி மாணவி அழுதுள்ளார். அவர்கள் வந்து கல்லூரி நிர்வாகத்திடம் புகார் கொடுத்துள்ளனர். அதன் பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மனவேதனை அடைந்த யோகலட்சுமி, திங்கள் கிழமை மாலை விடுதியில் உள்ள தனது அறையில் மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்ததும் போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி காவல் நிலைய ஆய்வாளர் சார்லஸ் மற்றும் போலீஸார் சென்று மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து போலீஸ் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:
 
யோகலட்சுமியின் தோழிகளிடம் விசாரித்தபோது, ராகிங் கொடுமையால் அவர் தற்கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது. யோகலட்சுமியின் அறைக்கு அருகில் 3-ம் ஆண்டு மாணவி கோட்டீஸ்வரியின் அறை உள்ளது.
அவரும், அவரது தோழிகளும் இணைந்து யோகலட்சுமியை ராகிங் என்ற பெயரில் சித்ரவதை செய்துள்ளனர். ‘எனது தற்கொலைக்கு காரணம் கோட்டீஸ்வரிதான். அவர் செய்த கொடுமையால்தான் தற்கொலை செய்துகொள்கிறேன்’ என்று டைரியில் 16 பக்கத்தில் யோகலட்சுமி எழுதி வைத்திருக்கிறார். அம்மா, அப்பா என்னை மன்னிக்க வேண்டும் என்றும் டைரியில் எழுதியுள்ளார். அவரது அறையில் இந்த டைரி கிடைத்தது. ராகிங் கொடுமையால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் கிடைத்ததால், 3-ம் ஆண்டு மாணவி கோட்டீஸ்வரியை கைது செய்திருக்கிறோம். இவர் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்தவர் என போலீஸார் தெரிவித்தனர். 

பாத்ரூம் செல்ல விடாமல் கொடுமை 
 
யோகலட்சுமியை பாத்ரூம்கூட செல்லவிடாமல் சீனியர் மாணவிகள் சிலர் கொடுமை செய்துள்ளனர். அவர் பாத்ரூம் போக முயன்றால் உடனே சீனியர் மாணவிகள் பாத்ரூமுக்குள் சென்று நின்று கொள்வார்களாம். பாலியல் ரீதியாகவும் அவரை சித்ரவதை செய்துள்ளனர் என்றும் போலீஸ் விசாரணையில் தெரியவந் துள்ளது. 

தண்டனை என்ன? 
 
கல்வி நிறுவனத்தில் இருந்து டிஸ்மிஸ் அல்லது சஸ்பெண்ட் செய்தல், விடுதியில் இருந்து நீக்குதல், தேர்வு முடிவை நிறுத்தி வைத்தல், தேர்வு எழுத தடை விதித்தல், ரூ.25 ஆயிரம் அபராதம் என குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனமே தண்டனை கொடுக்கலாம். காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால், ஓராண்டு முதல் 7 ஆண்டுகள் வரை நீதிமன்றம் மூலம் தண்டனை கிடைக்கும். 

நன்றி - த ஹிந்து 
...மேலும்

கரூரில் பாலியல் பலாத்காரம்: இளம்பெண் கொலை

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். பிச்சம்பட்டி காலனி தெருவைச் சேர்ந்த இளம்பெண் பிளஸ் 2 முடித்து, தனியார் கல்லூரியில் மேல் படிப்புக்கு சேர்ந்திருந்தார். விடுமுறை நாளில் கரூரில் உள்ள கொசுவலை நிறுவனத்தில் வேலைக்கு சென்றுவந்தார்.

இந்நிலையில் திங்கள்கிழமை இரவு 9 மணியாகியும் அவர் வீடு திரும்பாததால், பெற்றோர் அவரை தேடிச்சென்றபோது பிச்சம்பட்டி சாலையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கழுத்து நெரித்துக் கொல்லப்பட்ட நிலையில் அந்த பெண் சடலமாக கிடந்தார். ஆத்திரமடைந்த பெற்றோர், உறவினர்கள் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை இரவு மறியலில் ஈடுப்பட்டனர். 

திருச்சி சரக டிஐஜி செந்தாமரைக் கண்ணன், கரூர் மாவட்ட பொறுப்பு அதிகாரியான திருச்சி காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராஜேஸ் வரி மற்றும் காவல் கண்காணிப் பாளர்கள் ஜியாவுல்ஹக் (அரியலூர்), உமா (புதுக்கோட்டை) ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது. மேலும், சந்தேகத்தின்பேரில் அந்தப் பகுதியைச் சேர்ந்த 7 பேரிடம் மாயனூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
மீண்டும் மறியல்… 
 
கரூர் அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை இளம்பெண் ணின் சடலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டபோது, அவரது பெற்றோர், உறவினர் குற்றவாளி களை உடனே கைது செய்ய வலியுறுத்தி சடலத்தைப் பெற மறுத்து, கரூர் அரசு மருத்துவமனை அருகில் மீண்டும் மறியலில் ஈடுபட்டனர்.
காவல் கண்காணிப்பாளர்கள் ராஜேஸ்வரி, உமா, காவல் துணை கண்காணிப்பாளர் எஸ்.எம்.இளங்கோ, வருவாய் கோட்டாட்சியர் கு.கார்த்திகேயன் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 3 நாள்களில் குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதியளித்ததின் பேரில் சடலத்தை பெற்றுச் சென்றனர். இளம்பெண் பாலியல் பலாத் காரம் செய்யப்பட்டு கொலை யானது உறுதியாகி உள்ள நிலை யில், இதில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனரா என்பது பிரேத பரிசோதனை அறிக்கை முடிவிலும், விசாரணையிலும் தெரியவருமென போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்த சம்பவத் தில் குற்றவாளிகளை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட் டுள்ளதாக குளித்தலை காவல் துணை கண்காணிப்பாளர் ஜமீம் தெரிவித்தார். 

தொடரும் சம்பவங்கள்… 
 
பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகும் சிறுமிகள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர். தாழ்த்தப்பட்ட பெண்களுக்கான பாலியல் வன்கொடுமை காரண மாக கரூர் மாவட்டத்தில் பெண் தற்கொலை, கொலை உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாகி வருவது தொடர்ச்சியாகி வருவதால் இப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், இவற்றை கட்டுப்படுத்த காவல்துறை சிறப்பு கவனம் செலுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

நன்றி - த ஹிந்து 
...மேலும்

என் எல்லா நரம்புகளிலும் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு - வெலிகம ரிம்ஸா முஹம்மத்


கிண்ணியா மண்ணுக்கு பெருமை சேர்க்கும் விதமாக போனா பதிப்பகத்தின் மூலம் 48 பக்கங்களில் 39 கவிதைகளை உள்ளடக்கியதாக வெளிவந்திருக்கிறது ஜே. பிரோஸ்கானின் என் எல்லா நரம்புகளிலும் கவிதைத் தொகுதி. இந்தக் கவிதைத் தொகுதியானது ஜே. பிரோஸ்கானின் நான்காவது கவிதைத் தொகுதியாகும். இவர் ஏற்கனவே இதுவும் பிந்திய இரவின் கனவுதான் (2009), தீ குளிக்கும் ஆண் மரம் (2012), ஒரு சென்ரி மீட்டர் சிரிப்பு பத்து செகன்ட் கோபம் (2013) ஆகிய கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

என் எல்லா நரம்புகளிலும் பயணிக்கின்ற குருதி வார்த்தைகள் என்ற தலைப்பிட்ட தனதுரையில் பிரோஸ்கான் ''என் படைப்புக்கள் சமூகத்தை நெருங்கிவிட நம்பிக்கையூட்டும் அடையாளத்தோடு, என் தலைமீது சுமத்தப்பட்டிருக்கும் மனித உணர்வுகளின் தேடல்களை உண்மைக்கு, உண்மையாய் பகிர்ந்து கொள்வதின் மற்றுமொரு பதிவுதான் என் எல்லா நரம்புகளிலும்'' என்று குறிப்பிடுகின்றார்.

சூழலின் சாயல்களை தன்னுடன் பிணைத்து கவிதை இயக்கத்தை நிர்மாணிக்க முயலும் கவி என்ற தலைப்பிட்டு திரு. கருணாகரன் அவர்கள் தனதுரையில் பின்வருமாரு குறிப்பிடுகின்றார். ''எதிலும் புதியவையும் புதிய முகங்களும் வருவது மகிழ்ச்சியை அளிப்பது. ஜே. பிரோஸ்கான் ஈழத்தமிழ் இலக்கியத்தில் தன்னுடைய கவிதைகளுடன் அப்படி முன்தெரிகிறார். இன்றைய கவியின் ஆர்வத்தோடும் முனைப்போடும், இந்த உலகம் முழுவதையும் நடந்து தீர்த்துவிடத் துடிக்கும் வேட்கையுடன், தன் முதலடிகளை எடுத்து வைக்கும் குழந்தையிடமிருக்கும் ஆவல் பிரோஸ்கானிடமிருக்கிறது. இந்த வேட்கை அவரை உந்தி முன்தள்ளுகிறது. ஒரு குழந்தை நடக்க முயற்சிப்பதும், நடப்பதும் இயல்பானது. அது ஓடுவது கூட இயல்பானதே. ஓட்டத்திலும் பாய்ச்சலிலும் அது முதல்நிலை வகிப்பதே சாதனை. அதிலேயே அதனுடைய முதலடிகளின் பெறுமதி, முனைப்பின் பெறுமானம், வேட்கையின் அடைதல் எல்லாம் தங்கியுள்ளன. இங்கே பிரோஸ்கான் அப்படித்தான் ஒரு ஓட்ட வீரனாகும் வல்லமையுடைய ஆற்றலாளன் என்பதற்குரிய அடையாளங்களைக் காட்டி நம்பிக்கையளிக்கிறார். இந்த ஓட்டம் கவிதைத் துறையிலானது.

ஒரு கவியிடத்தில் எழுச்சியுறும் அகநிலையே படைப்பின் உள்ளீட்டைத் தீர்மானிக்கிறது. இந்த அகநிலையின் விரிவிலும் ஆழத்திலுமே அந்தக் கவியை நாம் அடையாளம் காண்கிறோம். இந்த அகவிரிவு அந்தக் கவியின் அனுபவம், அறிதிறன், புரிதல், மனப்பாங்கு போன்றவற்றினால் ஏற்படுகிறது. பிரோஸ்கானிடம் இந்த அகவிரிவுக்கான தளம் உள்ளது.'' என்கிறார்.

நதியானது மனித வாழ்க்கையோடு ஒன்றிப்போய்விட்டதொரு இயற்கையின் கொடையாகும். பிரோஸ்கான் நதிகள் பற்றிக் குறிப்பிடுகையில் அவை தம்மைப் பற்றிய கதைகளை சொல்வதாக கவிதையை அமைத்திருக்கின்றார். நதி, தன் மன உணர்வுகளை வெளிப்படுத்தும்போது மரமானது பூக்களைச் சொரிந்து ஆறுதல் கூறுவதாக அவரது கவிதை உள்ளம் எண்ணியிருக்கின்றது. மரங்களைப் போன்ற தயாள குணம் வேறு யாருக்குத்தான் வரும் என்று கவிதையின் இறுதியில் தொடுத்திருக்கும் வினா சிந்திக்க வைக்கின்றது. மரங்கள் குறித்துப் பேசும் நதிகள் (பக்கம் 02) என்ற கவிதையின் சில அடிகள் கீழ்வருமாறு:-

நான் இடைவிடாது பயணித்துக் கொண்டிருப்பவை
தடைகள் எனக்கு புதிதல்ல
மேலிருந்து கீழாக குதித்து
விளையாடுவதிலேயே எனக்கு இஷ்டம்
பல தடவை எனக்குள் வேரூன்றியிருக்கும்
மரங்களின் வேர்களை பிய்த்துக் கொண்டு
தொடர்ந்திருக்கின்றேன் என் பயணத்தினை
பாறைகளிலிருந்து தினம் கற்சில்லுகளை
பிரித்து அங்குமிங்குமாக சேர்த்திருக்கிறேன்
இல்லை சிதைத்திருக்கிறேன்
ஒரு நாளும் மரங்களோ பாறைகளோ
என் மீது கோபித்ததில்லை..

கடைசி இரவு (பக்கம் 09) என்ற கவிதை மரணத்தைப் பற்றி பேசுகின்றது. மரணத்தின் பீதி நிலையையும், நடுநிசிப் பயங்களையும் இக்கவிதை படம்பிடித்துக் காட்டுகின்றது. தனிமையில் இரவில் சின்னதொரு சத்தம் கேட்டாலே உடல் வெடவெடத்துப் போகும். அப்படியிருக்க மரணம் பற்றிய பேச்சைப் பேசி.. நரிகளின் ஊளைச் சத்தமும் கேட்டால் அந்த இரவு எந்தளவு பயங்கரமானதாக இருக்கும் என்பதை யாருக்கும் எளிதில் ஊகித்துக்கொள்ள முடியும்.

நீ மரணம் பற்றி அந்த இரவு
முழுவதுமாய் பேசிக்கொண்டேயிருந்தாய்
பயம் எனக்குள் அமிலத்தைப் பரப்பி
சிரித்தது..
உன் முகத்தில் நான் என்றைக்குமே
கண்டிடாத புன்னகையையும்
உன் வார்த்தையின் தெளிவையும் கண்டு
நான் ஒரு நீள் தெருவில் நடப்பதான
எண்ணத்தில் பயணிக்கிறேன்..
நடுநிசியில் நரிகள் ஊளையிடும் சப்தம்
என் கன்னத்தில் அறைதலாகி விழுகிறது
மரணம்... மரணம்... மரணம்...
இப்படியாய் சகோதரி உன் பேச்சு
விகசித்துக் கொண்டிருந்தது..
அப்போது எனக்கும் தெரிந்திருக்கவில்லை..
நீ அறிந்திருந்தாயா?
உனது கடைசி இரவை???

விஷப் பூச்சிகள் தீண்டிய பின் அந்த இடம் சிவந்து வீங்கிவிடும். ஒருவகை நமைச்சல் காணப்படும். அந்த அவஸ்தையைக் கூட கம்பளிப் பூச்சி வரைந்த ரயில் பாதை (பக்கம் 20) என்று கவிதையாக்கியிருக்கிறார் பிரோஸ்கான். கம்பளிப் பூச்சியினால் ஏற்பட்ட தழும்பை குழந்தையின் கிறுக்கல் சித்திரத்துக்கு உவமித்திருக்கும் பாங்கு ரசனைக்குரியது.

என் உடலின் மேலாக
குட்டிக் கம்பளிப் பூச்சியொன்று
ஊர்ந்து உதிர்த்து விட்டுச்சென்ற
மயிர்க்கால்கள் எங்குமாக படர்ந்து
தழும்புகளை ரயில்ப் பாதையாய்
வரைந்து விட்டிருந்தது..
குழந்தையின் கிறுக்கல் சித்திரம் போல..

எதுவும் பேசாத தவாத்மி சுவர்களிடம் எதைத்தான் பேசி இருப்பாய் றிசானா..? (பக்கம் 39) என்ற கவிதை மூதூர் பணிப்பெண் றிஸானாவுக்கானது. உலகத்தையே ஒரு கணம் தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்து, எல்லோர் மனதிலும் புயலை உருவாக்கிவிட்ட சகோதரி றிஸானாவின் மரணதண்டனை இன்று ஒரு சம்பவமாக மட்டுமே இருக்கின்றது. காரணம் அத்தனை பிரச்சனைகள் நிகழ்ந்தலும் கூட தமது வறுமை நிலையைப் போக்க பலர் இப்போதும் வெளிநாட்டுக்கு பணிப்பெண்களாகச் செல்கின்றார்கள். அனுப்பப்படுகின்றார்கள். தூக்குத்தண்டனை கொடுத்தாலும், கழுத்தறுத்துக் கொன்றாலும் நம்மவர்கள் இன்றும் வெளிநாட்டு மோகத்தை விரும்பத்தான் செய்கின்றார்கள். அந்த றிஸானாவுக்கு, பிரோஸ்கான் எழுதிய கவிவரிகள் கண்களில் கண்ணீரை மீண்டுமொருமுறை வரவழைக்கிறது.

நீ வருவாய்
நீ வருவாய்
என்ற பேச்சுக்கள் தான்
நம் ஊர் மண்ணின் புழுதியில்
கூட கலந்திருந்தது
றிசானா உன் மரணத்தின்
முன்னான நாட்களில் பத்திரிகைச்
செய்திகள் சந்தோசிக்கச் செய்தது
நீ வருவாய் வந்துவிடுவாய் என்று..

இப்போ நான் எப்படிச் சொல்வேன்

நீ பாடம் கற்ற பள்ளிக்கூடத்திற்கு
மார்க்கம் கற்ற குர்ஆன்
மத்ரஸாவுக்கு
அந்த அடுப்பங்கரைக்கும்
ஆட்டுப் பட்டிக்கும் 
எப்படிச் சொல்வேன்
நீ இனி வரவே மாட்டாயென்று..

நீயும் சகோதரியுமாய்
ஊஞ்சல் ஆடிய புளியமரமும்
தும்பி பிடித்து விளையாடிய 
அந்தக் கவளப் பற்றைகளும் 
உன்னைத் தேடுமே...

கவிதைகள் மன உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு உன்னதமான இலக்கிய வடிவமாகும். கவிஞனால் மாத்திரமே எல்லாக் கோணங்களில் இருந்தும் சிந்தித்து படைப்புக்களை படைக்க முடிகின்றது. கவிஞனின் ரசனை உலகில் சௌந்தர்யங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றது. பிரோஸ்கானின் கவிதைகளும் அவரது மன வெளிப்பாடுகளை வாசகர்களுக்கு எடுத்தியம்புகின்றன. அவரிடமிருந்தும் இன்னும்; பல காத்திரமான படைப்புகளை எதிர்பார்க்கிறோம். கவிஞர் ஜே. பிரோஸ்கானுக்கு எனது வாழ்த்துக்கள்!!!

நூல் - என் எல்லா நரம்புகளிலும்;
நூல் வகை - கவிதை
நூலாசிரியர் - ஜே. பிரோஸ்கான்
வெளியீடு - பேனா பப்ளிகேஷன்
விலை - 200 ரூபாய்
...மேலும்

Jun 24, 2014

மதங்களும் பெண்களும் - ஓவியா

  
"எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் கேட்கிறார் இது தான் மதம் என்றால் அதனை ஏன் பெண்கள்" தங்கள் தோள்களில் சுமக்க வேண்டும்.?

அவர் கேள்வியில் முதல் வார்த்தைகளான இது தான் மதமென்றால் ... என்பதை விளக்கி ஆம் இது தான் "மதம்" என்று காட்டுவதே இக்கட்டுரையின்
நோக்கமாகும்.

முதலில் மதம் என்பது என்ன? அந்நிறுவனத்தைப் பற்றி நாம் என்ன கருத்து வைத்திருக்கின்றோம்? இன்று மதத்தைப் பற்றி பல புதிய வியாக்கியானங்கள் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மதம் மனித இனத்தின் "ஆன்மா" "இளைப்பாறுதல்" இப்படியாகப் பல…

இவற்றிற்குள் உள்ளே போவதோ இவற்றைப் பரிசீலிப்பதோ நமது நோக்கமன்று. இக்கட்டுரை தனது பயணத்தைத் துவங்குமுன் வரலாற்றில் மதம் வகித்திருக்கும் பாத்திரத்தின் அடிப்படையில் "மதத்தை" வரையறை செய்து கொள்ள விரும்புகிறது.

மதம் என்பது என்ன?
மதத்தின் தலைவன் "கடவுள"காரண கர்த்தாவாகக் கற்பிக்கப்பிட்டிருப்பினும் கடவுள் தான். .இந்தக் கடவுளின் கருவறை ஆதிமனிதனின் அறியாமையும், பயமும் தான.கடவுளின் தொடர்ந்த இருத்தலுக்கு ஆயிரம் காரணத்தைக் கற்பிக்கலாம்.
ஆனால் தோற்றுவாய் இது தான் என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை.
அறியாமை தோற்றுவித்த இந்தக் குழந்தையை "அயோக்கியர்கள்"தத்தெடுத்து வளர்த்தனர். மதம் ஓரு மிகப் பெரிய நிறுவனமானது புரோகித கூட்டங்களின் நன்மைக்காகவே. நமது நாட்டில் மட்டுமல்ல உலகெங்கிலும் இதுவே உண்மையாக உள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளாக இதுவே மதங்களின் வரலாறாக உள்ளது. இந்த நீண்ட வரலாற்றில் இம்மதமானது அரசு, தேசம், இனம், குடும்பம், இலக்கியம் இப்படி மானுடவியலின் அனைத்து அம்சங்களுடனும் இணை பிரியாத் தோழமை பூண்டு விட்டது. மதத்துடனான மோதலிலேயே கருக்கொண்டு உருக்கொண்டு வளர்ந்த அறிவியலுடன் கூட இன்று அது சமரசம் பேசிக் கொண்டு தனது ஆளுமையை நிலை நிறுத்திக் கொள்ள வழி தேடிக் கொண்டு விட்டது. இப்படி அனைத்திலும் ஊடுருவி நிற்கும் மதத்தை எதிர்த்து மக்களிடையே பணி செய்ய முடியாது என்று முற்போக்களார்களும் மயங்கும் காட்சியில் இன்று நாம் நிற்கிறோம்.

நம்மைப் பொறுத்தவரையில் மதத்தின் வரலாற்றுப் பாத்திரத்தையும் அதன் வன்முறை முகத்தையும் மறந்து விட்டு எந்த திரிபுவாத விளக்கங்களுக்குள்ளும் போக விரும்பவில்லை. மதம் இன்று தோற்றம் தருவது போல் வெறும் கருத்தியல் ரீதியான வன்முறையில் மட்டும் ஈடுபட்ட ஢ர் அமைப்பு அல்ல.

ஆயுதந் தாங்கிய வன்முறை எந்தவொரு மதத்திற்கும் விதிவலக்கானதல்ல. அன்பைப் பற்றி பேசுவதற்கு ஓரு சிறிதும் யோக்கியதையேயில்லாத ஓர் அமைப்பு உண்டென்றால் அது மதம் தான் என்று யாரும் துணிந்து கூறலாம்.

வன்முறை வாயிலாக மட்டுமே அனைத்து மதங்களும், முக்கியமாக கிறிஸ்துவம், இஸ்லாம் மற்றும் இந்துமதங்கள் தங்களை நிலைநிறுத்தி வளர்ந்திருக்கின்றன. ஆனால் இன்று மாந்த இனம் தனது அமைதிக்காகவும், சமாதனத்திற்காகவும், இளைப்பாறு தலுக்காகவும் மதத்தை அண்டி வாழ்வது போலதானதொரு தோற்றம் ஏற்பட்டிருக்கிறது அல்லது ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. சரி, எப்படியாயினும் மதம் இன்று நாம் எடுத்துக்  கொண்டிருக்கும் தனித் தலைப்பல்ல.

இக்கட்டுரையைப் பொறுத்த வரையில் குறிப்பாக மதம் பெண்கள் வாழ்வில் வகிக்கும் பாத்திரத்தைப் பற்றி மட்டுமே பார்க்க இருக்கிறோம். இன்று நடைமுறையில் நாம் காணும் பெண்கள் மதத்தின் மீது தீவிர மரியாதையும் ஈடுபாடும் கொண்டு காணப்படுகின்றார்கள்  மதரீதியிலான சடங்குகளில் அதீத ஆர்வம் காட்டுகிறார்கள். அதிலே அவர்களுக்கு எதிர்காலம் பாதுகாக்கப்படுவதாக ஓரு உணர்விருக்கிறது. ஓர் கோணத்தில் அவர்களுக்கு அது நல்லதொரு பொழுதுபோக்காகவும்  இருக்கிறது. தங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் சமூக இருத்தல், அங்கீகாரம் அல்லது மரியாதை இப்படியாக விளங்கியும் விளங்காததமுமான உணர்வுகளும் அவர்களை உந்தித் தள்ளுகின்றன. உள்ளுற இவற்றை கடைப்பிடிக்கத் தவறினால் தாங்கள் தண்டிக்கப்பட்டு விடுவோம் என்ற மத அமைப்பு உருவாக்கி வைத்திருக்கும் உளவியல்   அச்சமும் அவர்களை இயக்குகிறது. ஆக இப்படி பல்வேறு காரணிகளின் கூட்டு  செயற்பாட்டினால் இவ்வமைப்பை சிரமேற் கொண்டு பெண்கள் தாங்கி வருகிறார்கள்.

அடிமை வாழ்வுக்கே உரித்தான தன்மானமின்மையும் பயமும் அருவெறுக்கத் தக்க குறுகிய சுயநலமும் தவிர இதில் பொதிந்திருக்கும் மகோன்னதமான உண்மை என்று எதுவுமில்லை. ஏங்கெல்சு வரலாற்றில் தோன்றிய காலத்துக்குச் சொன்ன வார்த்தைகளை நமது காலமும் சுமந்து கொண்டு நிற்கிறது.

ஆம் பெண்ணினத்தின் மீது ஆணினம் வெற்றி கொண்டு விட்டது. ஆனால் வெற்றி பெற்றவர்களுக்கு முடி சூட்டும் வேலையை தோல்வியுற்றவர்கள் தாராள சிரத்தையுடன் ஏற்றுக் கொண்டு விட்டார்கள் மதம் பெண், ஆண் இருபாலாரையும் வன்முறைக்குட்படுத்திய, உட்படுத்திக் கொண்டிருக்கின்ற ஓரு நிறுவனம் தான். ஆனாலும் நாம் துவக்கத்திலேயே குறிப்பிட்டது போல மதம் யாருடைய நன்மைக்காக வளர்க்கப்பட்டதோ அந்த புரோகிதக் கூட்டத்தார் ஆண்கள் கூட்டமாகவே இருந்தபடியால் (குறிப்பாக ஏடறிந்த வரலாற்றுக் காலத்துக்குப் பிறகு) அது ஆண்களுக்கான அமைப்பாக என்று மட்டுமல்ல ஆண்களுக்காகவே பெண்கள் வாழ்ந்து தீர வேண்டும் என்று வலியுறுத்துகிற கொடுங்கோன்மை அமைப்பாகவும் பரிணமித்து விட்டது.
"சிகாகோவில்"போய் விவேகானந்தர் கூறுகிறார் இந்து மதத்தின் ரிஷிகள் பெண்களாக இருந்தார்கள் என்று. உடனே நாமும் அப்படியா? என்று எப்படிக் கேட்டுக் கொள்வது என்று தெரியவில்லை. அது உண்மையானால் அதனை அந்த எழுத்துக்கள் தான் நிரூபிக்க வேண்டும். மற்றப்படி கடவுள் நிலைதானே ரிஷிகளுக்கும் …. கண்டவர் யார்? விண்டவர் யார்?

கடவுள் ஆணாக இருக்கின்றான்

மதங்கள் அனைத்தின் தலைமைக் கடவுள்களும் ஆண்கள் தான். பெண்ணியச் சிந்தனை என்ற பெயரில் சிலர் இப்போது கடவுளைப் பெண்ணின் உருவாகக் சித்தரிக்க முயற்சி செய்கிறார்கள். இதெல்லாம் பெண்ணினத்தைக் காப்பாற்ற அல்ல மாறாக மதத்தைக் காப்பாற்றவே உதவக்கூடும்.  கடவுள் மட்டுமல்ல தலைமைப் புரோகிதர்களும் எல்லா மதங்களிலும் ஆண்கள் தான். இன்று பெண்கள் சிந்திக்கத் துவங்கியவுடனேயே கடவுளைப் பெண்ணாக சித்தரிக்க அவர்கள் முயல்கிறார்களே …விவேகானந்தர் கூறுவதைப் போல் ஆதிகால இந்து ரிஷிகள் பெண்களாக இருந்திருப்பார்களேயானால் கடவுளை பெண்ணாக  உருவகிக்கத் தானே விரும்பியிருப்பார்கள்?

உலகளாவிய மதங்களாகிய கிறிஸ்துவம், இஸ்லாம் நமது நாட்டின் இந்து மதம் இவை  மூன்றையும் நாம் முகாமையாக எடுத்துக் கொண்டுள்ளோம். ஓவ்வொரு மதமும் பெண்ணின் படைப்பு. இருத்தல், வாழ்க்கை, படைப்பு பற்றிய கோட்பாடு  உலகம் கடவுளால் படைக்கப்பட்டது என்பதே மதத்தின் துவக்கமாகும். தொடர்ந்து மனிதனைப் படைத்தவன் கடவுள் என்ற கருத்தை முன்வைத்தே அது தன் வரலாற்றைத் துவங்குகிறது. இந்த ஆண்டவனின் படைப்பிலேயே ஆணும் பொண்ணும் சமமானவர்களாக இல்லை என்பது தான் ஆணாதிக்க சிந்தனையின் மூலமாகும். ஓவ்வொரு மதமும் படைப்பு பற்றிய தனது கோட்பாட்டை எவ்வாறு முன்வைக்கிறது என்பதை நாம் முதற்கண் ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறோம்…

இன்று வரையிலும் கூட யூதர்கள் தங்களுடைய அன்றாட பிரார்த்தனையில் தங்களை பெண்ணாக படைக்காதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றனர்." இப்படியாகப் படைக்கப்பட்டிருக்கிற ஒரு கடவுளை அந்தக் கடவுளின் பேரால் புனையப்பட்டிருக்கிற மத நிறுவனத்தை எந்தப் பெண்ணாவது ஏற்றுக் கொள்வாளா??

கிறிஸ்த்துவம் - ஆதியாகமம்

18. பின்பு, தேவனுகிய கர்த்தர். மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல. ஏற்றதுணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்.

19. தேவனுகிய காத்தர் வெளியின் சகலவித மிருகங்களையும் ஆகாயத்தின் சகல விதப் பறவைகளையும் மண்ணிலே உருவாக்கி "ஆதாம்" அவைகளுக்கு என்ன பேரிடுவான் என்று பார்க்கும் படி அவைகளை அவனிடத்தில் கொண்டு வந்தார்". அந்தந்த ஜீவஜந்துக்கு ஆதாம் எந்தெந்தப் பேரிட்டானே அதுவே அதற்கு பேராயிற்று.

21. அப்பொழுது தேவனுகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார். அவன் நித்திரையடைந்தான். அவர் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார்.

22. தேவனுகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி அவளே மனுஷனிடத்தில் கொண்டு வந்தார்.

23. அப்பொழுது ஆதாம். இவன் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள். இவள் மனிஷனில் எடுக்கப்பட்டபடியினாலே  "மனுஷி" எனப்படுவாள் என்றான்.

24. இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு தன் மனைவியோடே இசைந்திருப்பான். அவர்கள் ஒரே மாம்சமாயி ருப்பார்கள்?

14. அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து நீ இதைச் செய்தபடியால் சகல காட்டு மிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய் நீ உன் வயிற்றினுள் நகர்ந்து உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்

15. உனக்கும் ஸ்திரீக்கும் உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன். அவர் உன் தலையை நசுக்குவார் நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.

16.அவர் ஸ்திரியை நோக்கி நீ கர்ப்பவதியாருக்கும் போது உன் வேதனையை மிகவும் பெருகப் பண்ணுவேன் வேதனையோட பிள்ளை பெறுவாய் உன் ஆசை உன் புருசனைப் பற்றியிருக்கும் அவன் உன்னை ஆண்டு கொள்ளுவான் என்றார்.

பின்பு அவர் ஆதாமை நோக்கி நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவி கொடுத்து, புசிக்க வேண்டாம் என்று நான் விலக்கின விருட்சத்தின்  கனியை புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும். நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோட அதன் பலனைப் புசிப்பாய்

மேற் கூறிய வார்த்தைகள் பைபிளிருந்து எடுக்கப்பட்டவை நம் அனைவருக்கும் நன்கு அறிமுகமான வார்த்தைகளுமாகும்.

இவ்வாத்தைகள் தெரிவிக்கும் கருத்து என்ன?

1.கடவுளின் படைப்பு வரிசையில் மிருகங்களுக்கு கீழே பெண் வருகிறாள்

2."பெண்" படைப்புக்கான தேவை- ஆணிற்கு ஒரு துணை தேவை என்பது தான் அதில்லாமல் பெண் படைப்புக்கான தேவை வேறு எதுவுமில்லை பெண் இல்லாமலேயே உலகம் படைப்பில் முழுமை பெற்றே இருந்தது. கடவுளின் இரண்டாம் பட்ச சிந்தனையே பெண்ணின் படைப்பு.

3.பெண் உடலியல் ரீதியாக ஆணின் ஒரு விலா எலும்புக்குச் சமமானவள்

4. பாவத்தைக் தூண்டுபவளாக பெண்ணே பணியாற்றிருக்கிறாள்.

அதனால் ஆண்டவனால் சபிக்கப்பட்டு ஆணுக்கு இல்லாத மகப்பேற்று சுமையை விதிக்கப்பட்டிருக்கிறாள் அதாவது கர்ப்பம் பெண்ணுக்குக் கடவுளின் சாபமாகும். இதன் பின் மதத்துக்காக விரிவுரை மற்றும் விளக்கவுரை எழுதியிருக்கும் புனிதத் துறவிகள் இன்னும் மோசமாகச் சென்று மகப்பேறு, மாதவிடாய், குழந்தை வளர்ப்பு, பெண் அடிமையாய் இருக்க வேண்டியது, முக்காடிட்டுக் கொள்ள வேண்டியது இவையெல் லாமே கடவுளின் சாபங்கள் தான் என்று எழுதி வைத்திருக்கின்றனர்.

இன்று வரையிலும் கூட யூதர்கள் தங்களுடைய அன்றாட பிரார்த்தனையில் தங்களை பெண்ணாக படைக்காதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றனர்.

மகப்பேறு வலியைக் குறைக்கும் மருத்துவ கண்டுபிடிப்புகள் கூட ரோமன் கத்தோலிக்க மதகுருமார்களிடம் மோதிதான் அறிவியல் அறிஞர்கள் நமக்குக் கொடுத்திருக்கிறார்கள் என்பது வரலாறு. இன்று நாம் கர்ப்பம், பெண்ணின் உரிமை என்பதை பல்லாண்டுகள் போராட்டத்துக்குப் பின் பேசத் துவங்கியுள்ளோம். ஆனால் நம் தோள்களில் இந்த போராட்டத்தை விதித்திருப்பது இந்த மதம் தான் என்பதை நாம் அடையாளம் காண்பது அவசியம் அல்லவா??

5. மனித இன வீழ்ச்சிக்குக் காரணமாகி மனித இனத்துக்கு மரணத்தை கொண்டு
வந்தவள் பெண். ஆக படைப்பு பற்றிய கோட்பாட்டில் கிறிஸ்த்துவ மதம் எவ்வளவு தூரம் பெண்ணை இழிவுபடுத்தியிருக்கிறது என்பதை நமது வார்த்தைகளில் அதிகம் கூற வேண்டிய தேவையில்லை. இது தவிர மனித இனம் முழுமையுமே கடவுளால் சபிக்கப்பட்டிருக்கிறது. எனவே மனிதர்கள் பாவிகள் பிறக்கும் போதே பாவவிமோசனம் பெறுவதே அவர்களின் வாழ்க்கையின் இலக்கு அதற்கு தேவாலயங்கள் இறைத்தூதர்கள் இதை விட மனித இனத்தின் மீது வேறென்ன கொடுமை  இனிமேல் நிகழத்தப்பட்டு விட முடியும்?

தன்மானமுள்ள எந்தப் பெண்ணாவது இப்படியாகப் படைக்கப்பட்டிருக்கிற ஒரு கடவுளை அந்தக் கடவுளின் பேரால் புனையப்பட்டிருக்கிற மத நிறுவனத்தை ஏற்றுக் கொள்வாளா?? ஆனால் என்ன சோகம் மெழுகுவர்த்தியைக் கொளுத்திக் கொண்டு முக்காடிட்ட தலைகளாய் எத்தனை பெண்கள் தேவாலயங்களின் வாசல்களில்??

மதத்தின் முதல் பலி அறிவார்ந்த உணர்வெழுச்சிதான். தேவனின் வார்த்தைகளுக்கெதிராய் சிந்திப்பது பாவம் என்று பல நூற்றாண்டுகளாக இவர்கள் நம்ப வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்து மதம்

இந்து மதத்தில் கிறிஸ்த்துவ மதத்தில் இருப்பது போல உலகம் படைக்கப்பட்டது குறித்தான வருணணைகள் இல்லை என்றே சொல்லப்படுகிறது. அம்மதத்தைப் பொறுத்த வரை உலகம் இருந்து கொண்டிருக்கிறது பிரளயங்களும் அழிவும் வந்திருக்கிறது ஆனாலும் உலகம் இருக்கிறது இனியும் இருக்கும் இந்த அனுமானத்தின் மீதே அதன் வேதங்கள் பேசுகின்றன. எனவே அம்மதத்தைப் பொறுத்தவரை பெண்கள் என்னவாக சித்தரிக்கப்பட்டார்கள் அவர்களுக்கான வாழ்க்கை விதிகள் எவ்வாறு வகுக்கப்பட்டிருக்கின்றன என்பதை வைத்தே அம்மதத்தை நம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள முடியும்.

இஸ்லாம் மதம்

ஆண், பெண் படைப்பு பற்றிய கோட்பாட்டில் இஸ்லாம் கிறிஸ்த்துவத்திலிருந்து மாறுபட்டதல்ல கிறஸ்த்துவத்தின் மீது வைத்த விமர்சனங்கள் இதற்கும் பொருந்தும் எனக் கொள்வோம். ஆனால் சபிக்கப்பட்ட இடத்தில் வேறுபாடு வருகிறது. இஸ்லாம் பெண்ணை பாவம் செய்யத் தூண்டியவளாக நிறுத்தவில்லை. மாறாக அப்பாவத்தில் ஆண், பெண் இருவரையும் ஒரேவிதமாகப் பார்க்கிறது.

தத்துவார்த்த ரீதியில் இது ஒரு குறிப்பிடத்தக்க வேறுபாடு தான் ஆனால் நடைமுறையில் சாபத்தைத் தந்திருக்கும் கிறிஸ்த்துவ மதத்திலிருந்து வெளியே வந்திருக்கும் பெண்களை விட மோசமான நிலையில் சாபத்தைத் தராத இஸ்லாமிலிருந்து பெண் விடுதலையடைவது இடர் நிநைததாக இருப்பதை என்னவென்று சொல்வது?

உரிமைகளும் கடமைகளும்

இனி அடுத்து இம்மதங்களில் பெண்களுக்கான உரிமைகளும் கடமைகளும் எவ்வாறு வகுக்கப்பட்nடிருக்கின்றன என பார்ப்போம்.

இந்து மதம்

ஒரு பிரிவு அல்லது இனத்தைச் சேர்ந்த மக்களின் உரிமைகளும் கடமைகளும் அவர்களுக்கு அந்த அமைப்பு எந்த இடத்தை அளித்திருக்கிறதோ அதிலிருந்து எழுபவையாகும். கிறிஸ்த்துவ மற்றும் இஸ்லாம் மதத்தில் படைப்பு பற்றிய கோட்பாட்டிலேயே பெண்ணின் நிலை பற்றிய இந்த இருத்தல் நமக்கு புரிந்து விடுகிறது. ஆனால் இந்து மதத்தில் படைத்தல் பற்றிய வருணணைகள் ஆதாரபூர்வமாக இல்லையென்பதால் இந்த இருத்தலை நாம் அதன் இலக்கிய இதிகாசங்களிலிருந்து தேட வேண்டியவர்களாக இருக்கிறோம். முக்கியமாக மகாபாரதம், மனுநீதி, இராமாயணம் இவற்றை எடுத்துக் கொள்ளலாம். ஒரேயொரு சிரமம் அனைத்தையும் எடுத்து வைக்க நேரமும் இடமும் அனுமதி அளிக்காது என்பது தான.; எனவே சான்றுக்கு சில அடிப்படையானவற்றை மட்டும் எடுத்துப் பார்ப்போம்.

மகாபாரதம்

எத்தனையோ அந்நிய படையெடுப்புகளுக்கான பின்னரும், இந்து மதத்தை யாராலும் அழிக்க முடியாததற்குக் காரணம் அது இந்துப் பெண்களின் தூய்மையின் (கற்பு) மீது கட்டப்பட்டிருக்கிறது என்று கூறுகிறார்கள் இந்துத்துவ மதவாதிகள்.
இதிலிருந்து நமக்கு ஏன் கற்பெனும் விலங்கு பெண்ணுக்கு மாட்டப்பட்டிருக்கிறது என்பதற்கு பதில் கிடைத்து விடுகிறது. இப்படியாக தனது மதத்தையும் அது தாங்கி நிற்கும் ஆணாதிக்க சமூகத்தையும், சமூக வளர்ச்சிகளினுடாக பாதிப்பின்றி தொடர்ந்து எடுத்துவர வேண்டுமானால் பெண்ணை கற்புடன் வைத்து நிர்வகிக்க வேண்டிய அவசியம் இந்து மதத்திற்கு
இருந்திருக்கிறது, இருந்து வருகிறது, என்பதையும் இந்த வாhத்தைகள் தெளிவாக நமக்குப் புரிய வைக்கின்றன.

நாம் இந்தக் கட்டுரையின் துவக்கத்திலேயே மதம் என்பது புரோகித கூட்டங்களின் சுயநலத் திட்டம் தான் என்பதை எடுத்துரைத்திருந்தோம். உலகில் ஒரு மதம் மற்ற மதத்தை எதிரியாகப் பார்க்கிற வரலாறு அனைவருக்கும் எளிதாகப் புரிகின்ற ஒன்று. ஆனால் ஒரு மதமானது முதலில் பலி கொள்வது தனது மதத்து மக்களின் சுதந்திர சிந்தனைகளையும் தனிமனித உரிமைகளையும் தான் என்பதை புரிந்து கொள்ள நமக்கு ஓர் ஆய்வுக் கண்ணோட்டம் தேவைப்படுகிறது.

ஓவ்வொரு மதமும் முதன்மையாக அம்மதத்தின் புரோகித வகுப்பின் நலனுக்காக அம்மதத்தின் ஏனைய மக்களின் வாழ்க்கையை திட்டமிடும் ஓர் அமைப்புதான். இந்தத் திட்டத்தில் மற்ற மதங்களிலிருந்து இந்து மதம் மாறுபடும் முக்கியமான இடம், அது பிறவியை அடிப்படையாகக் கொண்டு அதன் திட்டத்தை வகுத்ததும் பெண்ணின் கற்பை தனது மதத்தின் முக்கிய முகமாக தூக்கிப் பிடித்ததும் தான்.

ஆனால் இந்தக் கற்பானது இவர்கள் கூறுவது போல் இந்துவாகப் பிறந்த ஓர் பெண்ணின் (ஓர் இந்துப் பெண்ணாகதான் பிறக்க முடியும்) இயல்பாக இருக்கிறதா இல்லையா என்பதை அம்மதத்திலிருந்தே இப்போது நாம்  தெரிந்து கொள்ளலாம்.

நாரத ரிஷிக்கும் அப்சரஸக்குமிடையே பெண்களின் இயல்பு பிறப்பு மற்றும் தன்மைகள் குறித்து ஒரு முக்கியமான உரையாடல் நடக்கிறது. நாரதர் பெண்ணின் இயல்பை நிலையை எடுத்து விளக்கும்படி அப்சரஸிடம் கேட்க அதற்கு பெண்ணாகிய நானே பெண்ணை இழித்துப் பேச வேண்டியிருக்கிறது. எனினும் அது தான் உண்மையாகும். என்று கூறி பெண் பிறவிலேயே இழிவானவள், எப்போதுமே காவல் மீறி தவறு செய்வதில் இச்சையுள்ளவள், என்ற பொருளில் நிறைய எடுத்துரைக்கிறாள்.

அவை அத்தனையையும் இக்கட்டுரையில் இட்டு நிரப்புவது சாத்தியமில்லை எனவே சாரத்தை மட்டும் விவாதிப்போம் அதன் சாரம்சம் இது தான்.

பெண் பிறவிலேயே இழிவானவள் எப்போதுமே திருப்தியுறாதவள் குறிப்பாக காம இச்சையில் ஓர் ஆணுடன் வாழ்வது அவள் இயல்பன்று. பிரம்மன் படைக்கும் போதே இந்த இழி குணங்களுடன் தான் அவளைப் படைத்தான் எனவே இந்த அம்சங்கள் அவளிடமிருந்து பிரிக்கமுடியாதவை..

மகாபாரதத்தில் மட்டுமல்ல, மனுநீதியில் பெண்ணைப்பற்றி வருகின்ற பல்வேறு சுலோகங்களின் அர்த்தமும் இவ்வாறே அமைவதுடன் அதனால் பெண் காவலில் வைக்கப்பட வேண்டியவள் என்று மிக அழுத்தமாக  எடுத்துரைப்பதுடன்  அந்த அடிப்படையிலேயே பெண் சிறுவயதில் தந்தைக்கும் இளவயதில் கணவனுக்கும் முதுமையில் மகனுக்கும் கட்டுப்பட வேண்டியவள் என்றும் விதித்திருக்கிறது.

ஆக இந்து மதம் என்ன சொல்கிறது பெண் பிறவியில்  ஒழுக்கமில்லாதவள், கற்பில்லாதவள் அவள் கற்போடு இருக்க வேண்டும் என்றால் அவள் வீட்டுக் காவலில் வைக்கப்பட வேண்டும். நாம் குறிப்பிட்டிருக்கும் இந்த ஆதார நூல்கள் எவையும் ஆண் ஒரு பெண்ணோடு மட்டுமே தன் வாழ்நாளில் உடலுறவு கொள்ள வேண்டும் என்று விதி செய்த இலக்pயங்களோ, நீதி நூல்களோ அல்ல அப்படி இருக்க பெண்ணின் காம இச்சையைக் குறி வைத்து அதனை மையப்படுத்தி பெண்ணினம் முழுமையுமே தரந்தாழ்த்தி குறிப்பிட வேண்டிய அவசியம் இவர்களுக்கு எங்கிருந்து வந்தது. என்பது தான் நமக்கு எழும் வியப்புக்குரிய கேள்வியாகும்.

அந்தக் கோணத்திலிருந்து பார்க்கும் போது நமக்கு முன் சில ஆழமான உண்மைகள் விரிகின்றன. இந்து மதத்திற்கு பின்னால் நிற்கின்ற ஆண் மாபெரும் சுதந்திர வெளியில் நின்றிருந்த பெண்ணை இவனுக்கு சாதகமான குடும்ப அமைப்புக்குள் சிறைப்படுத்துகின்ற  தனது சமூகக் கடமையை செய்ய வேண்டியவனாக நின்றிருக்கின்றான்.

இந்து மதத்தின் இந்தக் குரலானது அந்த சூத்திரதாரியான ஆண் தனது சக ஆண்களிடம் நடத்திய உரையாடலேயன்றி வேறல்ல. அவன் சொல்கிறான் இந்தப் பெண் மிகவும் கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட வேண்டியவள் அவள் காட்டும் அன்பின் பேரிலேயோ அல்லது வேறெந்தக் காரணத்தினாலேயும் நீ அவளை நம்பி உன் காவலை தளர்த்தி விடாதே… இது தான் இம் மதத்தின் செய்தியாகும். இது பெண்ணை அடிமை செய்யும் ஆணாதிக்கவாதிகளால் தனது சமூக ஆண்களுக்காக எழுதப்பட்டது.

ஆக இந்த வார்த்தைகள் முதலில் பெண்ணுக்காக எழுதப்பட்டவையல்ல இரண்டாவதாக பெண்ணை மிக மிக இழிவுபடுத்துபவை. மூன்றாவதாக பெண்ணை சிறை வைத்திருக்க வேண்டிய அவசியத்தை அன்றாடப் பணியாக ஆணுக்கு எடுத்துரைத்தவை. இவ்வாறு சிறைப்படுத்திய இந்த அமைப்பின் சமூக இலக்குகளாகத்தான் தனிச் சொத்துரிமையும் வாரிசுரிமையும் நமக்கு புலனாகின்றன. பெண்ணின் மீது எழுப்ப்பட்ட கற்புக் கோட்டை தான் தனிச்சொத்துரிமையும்  ஆண்வழி வாரிசுரிமையும அதன் மீதான ஆண்வழி, அதன்பின் ஆணாதிக்க சமூகத்தையும் அரண் செய்து கட்டமைக்கிறது. பெண்ணின் உடல் சார்ந்த ஆளுமையையும் அவளின் பால்சார்ந்த பிறவி உரிமைகளையும் அடக்குவதற்கான கொடிய ஆயுதங்களாகத்தான் இம்மதத்தின் ஒவ்வொரு வரியும் நமக்கு அறிமுகமாகின்றன. வேதங்களில் அவர்கள் (பெண்கள்)வாழும் பொய்கள் என்றே சொல்லப்பட்டிருக்கிறது அவர்களுக்கென்று வேதங்கள் கிடையாது. அதற்கான தகுதி அவர்களுக்கு கிடையாது. எனவே வேதத்தின் படி அவர்களுக்கென்று தனிக் கடமைகள் கிடையாது. அவர்களின் ஒரே வாழ்க்கைக் கடன் கணவனைச் சார்ந்து இருப்பது தான். பதிவிரதா தர்மா- இதுமட்டுமே பெண்ணிற்கான ஒரே தர்மம். இதற்குப் பிறகும் உரிமைகளைப் பற்றி பேசுகிற தைரியம் யாருக்கும் வராது என்று கருதுகிறோம்.

எனவே மேற்கூறியவற்றிலிருந்து பெண்ணிற்கான கடமையே இந்து மதத்தைப் பொறுத்தவரையில் கணவனுக்காக வாழ்வது தான் அவளுக்குக் கணவன் தான் தெய்வம். அதில் எழுதப்பட்டிருக்கும் அத்தனை ஆயிரம் வார்த்தைகளும் இதைத்தான் மீண்டும் மீண்டும் சொல்கின்றன. இந்து இதிகாசங்களில் பெண் கதாபாத்திரங்கள் வாழ்ந்து காட்டியிருக்கும் நெறிகள் எதுவும் அந்த கதாபாத்திரங்களின் விருப்பத் தேர்வு அல்ல மாறாக அவர்களுக்கு வேதங்கள் விதித்த வாழ்க்கை தான் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். உதாரணமாக நளாயினி குஷ்ட ரோகியாகிய தனது கணவனை சுமந்து கொண்டு தாசி இல்லத்துக்குச் சென்றாள் என்பது கதை. இதில் நளாயினியின் தியாகமென்று எதுவுமில்லை. அவள் அப்படி மட்டுமே செய்ய முடியும். ஏனெனில் கணவனைத் திருப்திப்படுத்தாத பெண்ணுக்கு மோட்சத்தில் இடமில்லை.

மகாபாராதத்தில் அனுசாசனபர்வம் என்ற உரை பெண்ணின் கடமைகளை விவரிக்கிறது. அது மகாதேவனின் கூற்று என்ற வடிவத்தில் அமைந்திருக்கிறது. கணவனுக்கு எப்படி பணிவிடைகள் செய்வது  எனபது தவிர அதில் வோறொன்றும்  இல்லை. அது கூறுவதைக் கேளுங்கள்.

கணவனைத் திருப்திப் படுத்தாத பெண்ணுக்கு மோட்சத்தில் இடமில்லை. அந்தக் கணவன் மிகவும் ஏழையாக இருந்தாலோ அல்லது கடுமையாக நோய்
வாய்ப்பட்டிருந்தாலோ எதிரிகளின் பிடியில் மாட்டியிருந்தாலோ அல்லது ஢ர் பிராமணனின் சாபத்திற்கு ஆளாகியிருந்தாலோ அது விதியின் செயலே என்று
உணர்ந்து அந்தக் கணவன் என்ன தகாத காரியத்தைக் செய்யச் சொல்லி  கேட்டாலும் அதனால் உயிருக்கே ஆபத்து வரும் எனினும் மனைவியாகிய பெண் எவ்விதத் தயக்கமுமின்றி அதனைச் செய்து அவனை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும்.

பெண் தெய்வங்களையும் நாம் வணங்குகிறோமே… அவ்வாறிருக்க பெண்ணுக்கு மதத்தில் பெருமையளிக்கப்படவில்லை என்று எப்படிக் கூற முடியும் என்று கேட்கப்படலாம். இந்த வேதங்களில் இதிகாசங்களின் இந்த வெளிப்படையாகத் தெரியும் குருரமான முகத்தைத் தவிர மென்மையான வேடமணிந்து இன்னொரு முகம் இருக்கிறது. வேதங்களில் பெண் உயர்வாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக, அதனை வைத்தே சிலர் வாதங்கள் எழுப்புகிறார்கள். அந்த முகம் என்ன சொல்கிறது என்றும் பார்த்தும் விடுவோம். பெண் எப்போதும் வணக்கத்துக்குரியவள் அவளை எப்போதும் பாசத்துடனும் பரிவுடனும் நடத்த வேண்டும்.

மகாபாரதம் - அனுசாசனபர்வம்...

எங்கே பெண் கௌரவிக்கப்படுகிறாளோ அங்கே கடவுள்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். எங்கே பெண் கௌரவிக்கப்படவில்லையோ அங்கே எந்தப் புனிதமான சடங்கினாலும் எந்த பயனுமில்லை.

மனுநீதி...

இது போன்ற சில வாசகங்களை எடுத்துக்காட்டி இந்து மதம் பெண்ணுக்கு உயர்வான இடமளித்திருப்பதாக சிலர் வாதிடுகிறார்கள். இதில் அடிப்படையான ஒன்றை நாம் கவனிக்க வேண்டும் ஆண்களை நன்றாக வைத்துக் கொள்ளச் சொல்லி எந்த மதமும் கேட்கவில்லை. ஆனால் எல்லா மதங்களும் பெண்களை நன்றாக வைத்துக்கொள்ளும்படி கேட்கின்றன.  இதன் பொருள் என்ன மதங்கள் பெண்களிடம் பேசவில்லை ஆண்களிடம் பேசுகின்றன. அதனால் தான் நாம் கேட்கிறோம் நமக்காக எழுதப்படாத மதம் நமக்கு எதுக்கு. சரி இவ்வாறு கனிவு காட்டச் சொல்லி கேட்கும் வார்த்தைகளெல்லாம் பெண்ணின் தன்மை, இயல்பு அவள் காவலில் எப்போதுமே வைத்திருக்கப்பட வேண்டிய அவசியம் இவற்றை யெல்லாம் மறுத்தோ அவற்றிகெல்லாம் மாற்றாகவோ சொல்லப்படவில்லை. மாறாக அவற்றின் பின்னிணைப்பாக  நாம் வீட்டில் வைத்து நம்முடைய தேவைகளுக்காக வளர்க்கின்ற மிருகங்களை அவற்றின் இயற்கையான முழு ஆற்றலையும் பயன்படுத்துவதற்காக அவற்றை நடத்த வேண்டிய விதம் குறித்து போதிக்கப்படுகின்ற அதே பாணியில் தான் பெண்ணை கனிவாக நடத்தச் சொல்லி அம்மதம் நமக்கு அறிவுறுத்துகிறது.

நாம் வளர்க்கிற மிருகத்துக்கு பரிவு காட்டாவிட்டால் அது இறந்து விடும் அது நட்டமில்லையா வளர்த்தவருக்கு இந்த பரிவு தேவை தானா பெண்ணுக்கு…?

முக்கியமாகத் தாயாக கௌரவிக்கப்படுகிறாள் பெண் என்ற சிந்தனை முன்வைக்கப்படுகிறது. மேலைநாட்டு பெண்கள் நிலையுடன் நமது பெண்களின் நிலையை ஒப்பிட்டு பேசும் மதவாதிகள் அதில் பெரும் புளகாங்கிதத்தை அடைவதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். மேலைநாட்டு பெண்களிடம் மனைவி என்ற பாத்திரம் தான் முதன்மை வகிக்கிறது. ஆனால் நாம் தாயை முதன்மைப்படுத்தி சமூகத்தை வகுத்திருக்கிறோம் என்று கூறுகிறார்கள். ஆனால் தாய் என்ற பாத்திரமானது மனைவி என்ற சமூக வடிவத்தின் ஆன்மீக வடிவம் தான் என்பதை நாம் முதலில் பரிந்து கொள்ள வேண்டும்.  மனைவியின் கடமைகளை உள்ளடக்கி அதன் மேல் அதின் தொடர்ச்சியாக நிற்பது தான் தாய் என்ற வடிவம். மனைவி தாய் இரண்டும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் தாம். இதில் ஒன்றை மறுத்து அடுத்ததில் நாம் மயங்கி நிற்பதில் அர்த்தமேதுமில்லை. மனைவி என்ற பாத்திரத்தின் மீது கட்டாய பணிவிடையும் சுய மறுப்பும் திணிக்கப்பட்டிருக்கிறது என்றால் தாய் என்ற பாத்திரத்தின் வாயிலாக தியாகம் பெண்ணின் மீது கடமையாக ஏற்றப்பட்டிருக்கிறது. இந்த பாத்திரங்களுக்குள் எல்லாம் பெண் மட்டும் சிறை வைக்கப்படவில்லை. அதற்கெல்லாம் மேலாக அன்பு, காதல், தாய்மை, பரிவு, பாசம் என்ற அனைத்து உணர்வுகளும் கடமைகளாக்கப் பட்ட காரணத்தினாலேயே அவை படுகொலைக்களாகி விட்டன. என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே மாதா, குரு பிதா, தெய்வம் என்ற வரிசைப்படுத்தலில் ஆறுதல் கிடைக்கலாம் ஆனால் அந்த ஆறுதல் உண்மையை மறைத்துத் திரையிடப்படுகிறது. என்பதை நாம் உணரவேண்டியவர்களாக இருக்கின்றோம்.

நாகர் கோவிலைச் சேர்ந்த உளவியல் மருத்துவ நிபுணர் காமராசர் ஒரு முறை குறிப்பிட்டார் நமது நாட்டில் பெண்ணுக்குக் குழந்தைப் பருவமே கிடையாது. அவளை சிறு வயதிலேயே அம்மா என்று அடையாளப்படுத்தி விடுகிறார்கள் என்று.
தாயை முதன்மைப்படுத்தியதன் அடிப்படை சூட்சுமமே பெண்ணுக்கு வேறு ரோல் மாடலே அதாவது பங்களிப்பே இல்லாமல் செய்ததுதான்.

(கட்டுரையை சுருக்க வேண்டிய அவசியத்தின் காரணமாக நான் இக்கருத்துக்களை கோடி காட்டி விட்டு மட்டும் செல்கிறேன்.)

எனவே பெண் தெய்வங்கள் தாயை மனைவியை செல்வத்தைக் கல்வியைத் தருகின்ற … அதாவது யாருக்கு ஆணுக்கு தருகின்ற குறியீடுகள்தானே தவிர பெண்ணை சமூகத்தின் தலைவியாக உயர்த்துபவை அல்ல என்பதை நாம் சிந்தித்துப் பார்த்தால் புரிந்து கொள்ளலாம்.…

சிறுவயதிலிருந்து ஆணுக்குக் கட்டுபட்டு அனைத்து அடிமை விதிகளையும் ஏற்று நடக்கின்ற ஒரு பெண் தான் இந்த ஆணின் வழிபாட்டுக்குரிய தாயாக பரிணமிக்க முடியும். அவன் அந்த தாயைத்தான் வழிபடுகிறானே தவிர பெண்ணையல்ல…

மேலும் ஒன்றை அவசியம் புரிந்து கொள்ள வேண்டும். மேற் கூறியவையெல்லாம் இந்து மதத்தின் காலாவதியாகிவிட்ட கருத்துக்கள் அல்ல. இந்து மதம் என்ற ஒன்று இருக்கும் வரை இந்தக் கருத்துக்களை புதுப்பிக்கும் பணியை அவர்களில் யாராவது செய்து கொண்டுதானிருப்பார்கள்.பெண்கள் வேலைக்கு போவதை எதிர்த்து சங்கராச்சாரியார் விட்ட அறிக்கை பற்றி நமக்கெல்லாம் தெரியும். சில பத்தாண்டுகளுக்கு முன்பு கூட சுவாமி சிவானந்தா என்ற சாமியார் கூறியிருக்கிறார். பெண்கள் இனிமேலும்  ஆண்கள் உலகத்தில் புகுந்து அவர்கள் செய்ய வேண்டிய வேலையைச் செய்வதும் அந்த ஆண்கள் பெண்களின் வேலையை செய்வதும் தகாது. அவர்கள் (பெண்கள்)வீடுகளிலிருந்து வெளியே வந்தால் அதனால் ஏற்படும் விளைவுகள் மிக பயங்கரமானதாக இருக்கும்.

இந்து மதத்தின் குரூர முகத்தை மறைத்துத் திரையிட்டு மென்மைப்படுத்திக் கொடுத்திருக்கும் சாமியார்களில் முக்கியமாக விவேகானந்தரைக் கூறலாம். அவர் பெண்ணைப் பற்றி எடுத்துச் சொல்லியிருக்கும் வார்த்தைகளையும் நான் ஓரளவு படித்துப் பார்த்தேன். எந்த விதத்திலும் அவர் இந்து மதம் பெண்ணுக்கு ஏற்படுத்தியிருக்கும் பாத்திரப் பங்களிப்புக்களை மாற்றி விடவில்லை.

வார்த்தைகளைத் தான் மாற்றியிருக்கிறார். இதிலேயே நமக்கு உடன்பாடில்லை. இருந்த போதிலும் அதனைக் கூட  ஓரளவு ஏற்றுக் கொள்ளலாமென்றால் அறிவார்ந்த இன்னொரு கேள்வி நமக்கு எழுகிறது. அவ்வாறு பெண்ணைப் பெருமைபடுத்தி பேச  முனைந்தவர் நாம் இக்கட்டுரையில் எடுத்தெழுதியிருக்கும் பெண்ணை இழிவுபடுத்தியிருக்கும் வேத உரைகளையும் மகாபாராத உரைகளையும் மனுநீதி சுலோகங்களையும் மறுத்து விட்டல்லவா வேறு வார்த்தைகளை எழுத வேண்டும். அது தானே நேர்மை இவர்கள் தர்மத்தின் பல இடங்களில் விலங்குகளிலும் கேவலமாக அல்லவா பெண் குறிப்பிடப்பட்டிருக்கிறாள். ஏன் இன்று இந்து மதத்தைக் காப்பாற்ற நினைப்பவர்கள் அதில் மனித இனத்துக்கு தேவையான மகோன்னதங்கள் ஒளிந்திருக்கிறது என்று கூறுபவர்கள் அதிலிருக்கும் இந்த இழிவான பக்கங்களை இவர்களே நீக்கி விட்டதாக ஓர் மதரீதியான அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிடத் தயாராக இருக்கிறார்களா?

எவ்வளவு இழிவுபடுத்த முடியுமோ அவ்வளவையும் செய்து விட்டு இந்த வேதங்களைப் படிக்க  பெண்களுக்கு (சூத்திரர்களுக்கு) தகுதியில்லை என்றும் விதி செய்து வைத்திருக்கிற அயோக்கியத்தனத்துக்கு முதலில் பதில் சொல்லிவிட்டு பிறகு என்ன பெருமையைப் பற்றி வேண்டுமானாலும் இவர்கள் பேசட்டும்.
...மேலும்

Jun 23, 2014

உத்தரப்பிரதேசத்தில் சிறுமி பாலியல் பலாத்காரம்: ஒருவர் கைது

உத்தரப்பிரதேசம் மாநிலம் முசாபர்நகரில் 7 வயது சிறுமி ஒருவர் மூன்று பேர் கொண்ட கும்பலால் கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இச்சம்பவம் நடந்துள்ளது. அதிகாலையில், காலைக்கடன் கழிக்கச் சென்ற சிறுமியை மூன்று பேர் கொண்ட கும்பல் ஒன்று அருகில் இருந்த மறைவான பகுதிக்கு கடத்திச் சென்று பலாத்காரம் செய்யப்பட்டனர்.

சிறுமியைத் தேடிச் சென்ற பெற்றோர் அவரை அருகில் இருந்த விவசாய நிலத்தில் மயங்கிய நிலையில் மீட்டுள்ளனர். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த சிறுமியின் நிலைமை சற்று கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.

சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
உத்தரப்பிரதேசத்தில் பதான் மாவட்டத்தில் அண்மையில் இரண்டு சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டு மரத்தில் தூக்கில் தொங்கவிடப்பட்ட சம்பவம் ஐ.நா. சபை அளவில் கண்டனத்துக்கு உள்ளானது. இந்நிலையில், 7 வயது சிறுமி ஒருவர் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
...மேலும்

Jun 22, 2014

பெண் வெறுப்பு என்றொரு நீண்ட படலம் - அம்பை


தமிழில் தற்போது எழுதிவரும் ஆண் எழுத்தாளர்களுக்கு இணையாகப் பொருட்படுத்தக்கூடிய அளவில் பெண் எழுத்தாளர்கள் அதிகம் இல்லை என்று சமீபத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் தனது இணையதளத்தில் எழுதியிருந்தார். அத்துடன், “பெண்களில் பலர் சொல்லும்படி எதுவுமே எழுதாமல் பல வகை உத்திகள் மூலம் ஊடக பிம்பங்களாக ஆனவர்கள். இன்று ஆண்கள் எழுதித்தான் நிற்க வேண்டியிருக்கிறது. பெண்களுக்குப் பெண்களாகத் தங்களை முன்வைத்தாலே இடம் கிடைத்துவிடுகிறது” என்றும் கூறியது தமிழ் இலக்கிய உலகில் பெரும் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் பெண் எழுத்தாளர்கள் சந்திக்கும் விமர்சனங்களை வரலாற்றுப்பூர்வமாக எழுத்தாளர் அம்பை இக்கட்டுரையில் வெளிப்படுத்துகிறார்.

வெகு ஆண்டுகளுக்கு முன்பு ஓர் எழுத்தாளர் (ஆண் எழுத்தாளர்தான்!) ஒரு மூத்த ஆண் எழுத்தாளருக்கு எழுதிய கடிதத்தில் என் கதைகளைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். ‘அம்பையின் கதைகளைப் படிக்கும்போது அவர் உடல் ரீதியாகத் திருப்தியுறாதவர் என்று தெளிவாகத் தெரிகிறது’ என்ற தொனியில் அமைந்திருந்தது அவர் விமர்சனம். கருணை உள்ளம் கொண்ட அந்த மூத்த எழுத்தாளர், அந்தக் கடிதத்தை எனக்கு அனுப்பியிருந்தார் தன் கருத்தொன்றையும் கூறாமல். உடனே அந்தக் கடிதம் எழுதியவர் எழுதியிருந்த கதைத் தொகுப்பு ஒன்றைப் படித்தேன். தாங்க முடியவில்லை. ‘திருப்தியுற்றவர்கள் கதைகளின் தரம் இதுதான் என்றால், நல்லவேளை நான் திருப்தியுறவில்லை’ என்று தோன்றியது.

பெண் எழுத்து குறித்தும், பொதுவாகப் பெண்களைக் குறித்தும் இருக்கும் இந்த நோலாமை தமிழ் இலக்கிய விமர்சன மரபிலும், தமிழ் இலக்கிய உலகிலும் ஒரு தொடர் கண்ணியாக இருந்துவருகிறது. கல்வியை, உரிமைகளை, வெளிப்பாட்டுக்கான நியாயமான இடத்தைக் கோரும் பெண்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் குறையுள்ளவர்கள், அந்தக் குறை பாடுதான் அவர்களை எல்லா வகையிலும் செயல்படத் தூண்டுகிறது என்ற எண்ணம் பல காலமாக இருந்துவருவதுதான்.

இந்தக் குறைகள்தான் என்ன? அழகின்மை, தோற்றப் பொலிவின்மை, ஓர் ஆணின் துணையின்மை, பெண்களுக்கு இருக்கக்கூடாத அதீத காம இச்சைகள் இவைதான் பெண்களை இயக்கும் அடிப்படையான குறைகள்/காரணங்கள் என்ற கருத்து தொடர்ந்து நிலவிவருகிறது. அத்தனையும் பெண் உடல் மேல் கட்டப்பட்டவை. இவை மட்டும் இல்லாதிருந்தால் பெண்ணின் செயல்பாடும் வெளிப்பாடும் வேறு மாதிரி இருந்திருக்கும் என்ற நோக்கு. பெண் மட்டும் ஆண்கள் உவகையுறும் “பெண் தன்மை” கொண்டவளாக இருந்திருந்தால் சரித்திரத்திலும் இலக்கியத்திலும் அவள் பங்கு வேறு வகைப்பட்டிருக்கும் என்ற கணிப்பு.

பாரதி எழுதிய விமர்சனம்

இந்த இலக்கிய நோக்கர்களைப் பொறுத்தவரை பெண்ணின் எழுத்தும் செயல்பாடும் ஒரு மனநோயின் கூறுகள். இத்தகைய சிந்தனை சமீபத்தில் ஏற்பட்டதல்ல. சக்ரவர்த்தினி பத்திரிகையில் பாரதியார் 1906-ல் பெண்கள் அரசியல் உரிமை கோருவதைப் பற்றி எழுதும்போது, இத்தகைய உரிமைகளைக் கோரும் பெண்கள் அழகற்றவர்கள், திருமணமாகாதவர்கள் என்று குறிப்பிடுகிறார். ஒரு முறை தி. ஜானகிராமனின் கதை ஒன்றைக் குறித்து குகப்ரியை விமர்சித்தபோது, “குகப்ரியை மாமி மடியாக எழுதுபவர்” என்று தி. ஜானகிராமன் பதிலளித்தார் என்று குகப்ரியை என்னிடம் குறிப்பிட்டதுண்டு. ஒரு பத்து ஆண்டுகள் தொடர்ந்து ஆபாசமான முறைகளில் எழுத்திலும் செயலிலும் என்னைக் கேவலப்படுத்திய பெரும் கவிஞர் கூறியதெல்லாம், இவள் சுதந்திரமானவள் அதனால் நடத்தை கெட்டவள் (நடத்தை கெட்டவள் எனக் குறிப்பிடும் பெண்கள் இத்தகையவர்கள் கணிப்பில் எப்படிப்பட்டவர்கள் என்ற விளக்கங்களை ஆராய்ச்சி செய்யப் பல பக்கங்களும் அசாத்தியப் பொறுமையும் வேண்டும்) என்பதுதான். சமீபகாலத்தில், திருமணம் செய்துகொள்ளாத அல்லது தனிப் பெண்ணாக வாழும் பெண் எழுத்தாளர்களை “உய்விக்க” வரும் சில ஆண் எழுத்தாளர்கள் வைக்கும் முதல் கட்டுப்பாடு இலக்கியக் கூட்டங்களுக்குப் போகக் கூடாது, கவிதைகள் எழுதக் கூடாது என்பதுதான். ஓர் ஆணின் மேலான துணை கிடைத்த பின் ஒரு பெண்ணுக்கு இவை எல்லாம் தேவையா என்ன? இப்படி உய்விக்கப்பட ஆதரவு தராத பெண்களுக்கு ஊடகங்களிலோ வேறு எங்காவதோ வேலை கிடைத்துவிட்டால் தொலைபேசியில் இரவு கூப்பிட்டு “யாருடன் உறவு கொண்டதால் (அவர்கள் இதற்கு உபயோகிக்கும் விரசமான மொழி வேறு) இந்த வேலை கிடைத்தது?” என்று கேட்கும் ஆண் எழுத்தாளர்களையும், தொடர்ந்து இரவில் தொலைபேசியில் கூப்பிட்டு, விரசமாகப் பல ஆண் எழுத்தாளர்கள் பேசுவதால் இரவு வேளைகளில் தொலைபேசித் தொடர்பையே துண்டித்துவிடும், அஞ்சலட்டைகளில் அருவருக்கத்தக்க படங்களை சிலர் வரைந்து அனுப்பித் தொடர்ந்து செய்யும் இம்சைகளால் வீட்டையே மாற்றிய பெண் எழுத்தாளர்களையும் எனக்குத் தெரியும். இவற்றை எல்லாம் பார்க்கும்போதும், இது குறித்து எங்களுக்குள் நாங்கள் பேசிக் கொள்ளும்போதும், சமீபத்தில் பெண் எழுத்து மற்றும் செயல்பாடுகள் குறித்த விமர்சனங்களை நோக்கும்போதும், பெண் வெறுப்பு என்பது எவ்வளவு தீவிரமான, இன்னும் பெயரிடப்படாத மனநோய் என்பது தெரிகிறது.

இலக்கிய உலகில் பெண்ணுக்கு அளிக்கப்படும் இடம் எந்த வகையிலும் ஆணின் இடத்தைக் குலைக்கக் கூடாது, அது இரண்டாம் நிலையிலேயே இருக்க வேண்டும் என்ற எண்ணமும் தொடர்ந்து இருக்கும் ஒன்றுதான். ராஜம் கிருஷ்ணனின் மலர்கள் நாவலுக்கும், ஜெகச்சிற்பியனின் திருச்சிற்றம்பலம் நாவலுக்கும் முதல் பரிசு ஆனந்த விகடனில் பகிர்ந்து அளிக்கப்பட்டபோது, அவை தொடர்களாக ஆனந்த விகடனில் வெளிவரத் தொடங்கின. தாயற்று, தான் வளரும் உறவுக்காரர்களின் குடும்பத்தில் சிறுமைபடுத்தப்படுவதால் தாழ்வு மனப்பான்மையால் வாடும் ஒரு பெண்ணைப் பற்றிய கதையாகப் பல பக்கங்கள் கொண்ட நாவல் மலர்கள். திருச்சிற்றம்பலம் நாவலைவிட மிகப் பெரியது. மலர்கள் நாவலில் பாதிகூட முடிந்திராதபோது ராஜம் கிருஷ்ணனுக்குக் கடிதம் போயிற்று, ஜெகச்சிற்பியனின் நாவல் தொடர் இன்னும் ஓர் அத்தியாயத்துடன் முடிவதால் மலர்கள் நாவலையும் அடுத்த ஓர் அத்தியாயத்துடன் முடிக்கும்படி. ஒரே பரிசு பெற்ற ஓர் ஆண் எழுத்தாளரின் நாவல் முடியும்போது பெண் எழுத்தாளரின் நாவல் தொடர்ந்து வருவது அவரை அவமானப் படுத்துவதாகும் என்ற நோக்கில் எழுதப்பட்ட கடிதம். சென்னைக்கு வெளியே இருந்த ராஜம் கிருஷ்ணன் விரைந்து வந்து நாவலைத் தேர்ந்தெடுத்தவர்களில் ஒருவரான, கலைமகள் ஆசிரியர் கி.வா. ஜகந்நாதனை அணுகி, தனக்கு நியாயம் கிடைக்கும்படிச் செய்யக் கோரினார். கி.வா.ஜ. எடுத்துக் கூறிய பின்தான் மலர்கள் தொடர்ந்து தொடராக வந்தது.

பெண்களின் பொறுப்பு?

நாற்பதுகளில் குமுதினி திவான் மகள் நாவலை எழுதியபோது அதை வெளியிடப் பத்திரிகைகள் முன்வரவில்லை. காரணம் அதில் கலப்புத் திருமணம் இருந்தது. பிறகு அது தொடராக மணிக்கொடியில் வெளிவந்தது. ஒரு பிரபல பதிப்பாளர் ஒரு முறை ஜவஹர் லால் நேரு பல்கலைக்கழகத்தில் நான் படித்துக்கொண்டிருந்தபோது, என் பேராசிரியரைச் சந்திக்க வந்தார். அப்போது நானும் அங்கே இருந்ததால் என்னைப் பேராசிரியர் அறிமுகப்படுத்தியபோது, சம்பிரதாயத்துக்கு என்னையும் எழுதும்படிக் கூறி, என் எழுத்துக்களை வெளியிட ஆர்வமிருப்பதாகக் கூறினார். கூறிய உடனேயே நம் பண்பாட்டைக் குலைக்காமல் எழுதும் எதையும் தான் வெளியிடத் தயார் என்று சேர்த்துக்கொண்டார். என் எழுத்து பண்பாட்டைக் குலைப்பது என்ற முடிவுக்கு அவர் முதலிலேயே வந்திருந்தார் என்பது தவிர, பண்பாட்டை நிலைநிறுத்துவது பெண்களின் பொறுப்பு என்ற கருத்தும், பண்பாட்டுக்கான விளக்கம் ஒன்றும் அவரிடம் இருந்தது எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. அவர் வெளியிடக்கூடிய புத்தகங்களை நான் எழுதவில்லை என்பது வேறு விஷயம்.

எழுத்துக்கான மரியாதை

எழுத்தை அதன் இலக்கியத் தன்மை கொண்டு அளந்த நல்ல கணங்களும் தமிழ் இலக்கிய வரலாற்றில் இருந்திருக்கின்றன. கௌரி அம்மாள் எழுதிய கடிவாளம் நாவலுக்கு வ.ரா. முன்னுரை எழுதினார். மங்கை என்ற பத்திரிகையைத் தொடர்ந்து நடத்த குகப்ரியைக்கு ஊக்கம் அளிக்கப்பட்டது. குமுதினி, சாவித்திரி அம்மாள், சரஸ்வதி அம்மாள், ராஜம் கிருஷ்ணன், குகப்ரியை, அநுத்தமா, ஆர். சூடாமணி போன்ற எழுத்தாளர்களின் நாவல்களையும் கதைகளையும் மட்டுமல்ல, அவர்கள் ஆங்கிலத்திலிருந்து செய்த பல மொழிபெயர்ப்புகளையும் வெளியிட கலைமகள் போன்ற பத்திரிகைகள் முன் வந்தன. குமுதினி போன்ற எழுத்தாளர்களுக்கு ஆங்கில இலக்கியத்துடன் நல்ல பரிச்சயம் இருந்ததுடன் மொழிபெயர்ப்பின் அவசியத்தையும் நன்கு உணர்ந்தவர்களாக அவர்கள் இருந்தார்கள். ஆங்கில இலக்கியத் தின் பல நல்ல எழுத்துக்களை எனக்கு அறிமுகப்படுத்தியவர் சூடாமணி. எந்த வித சமரசமும் செய்துகொள்ளாமல் எழுதியவர். அப்படி எழுத என்னைத் தூண்டியவர். பல ஆண் எழுத்தாளர்கள் தீபாவளிக் கதைகளை தீபாவளி மலர்களுக்கும், அரைப் பக்க ஒரு பக்கக் கதைகள், மோதிரக் கதைகள் என்று மற்ற பத்திரிகைகளுக்கும் எழுதிக் குவித்துக் கொண்டிருந்தபோது தனக்குப் பிடித்ததை மட்டும் எழுதியதுடன், என் கவனத்தைச் சிறப்பான இலக்கியத்தின்பால் திருப்பியவர்.

இலக்கிய விமர்சனம் என்பது ஒருவரின் ஜனநாயக உரிமை என்பதில் யாருக்கும் மறுப்பேதும் இல்லை. பெண்-ஆண் என்ற இரு பாலாரின் எழுத்துக்களும் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை. ஆனால் அவை பெண்ணின் தோற்றத்தையும், “அளவுக்கு மீறிய” என்று சிலர் கணிக்கும் இச்சைகளையும், அவள் உடல் மற்றும் வாழ்வு குறித்த கற்பிதங்களையும் ஆதாரமாகக் கொண்ட இலக்கிய அபத்தங்களாக இருக்கக் கூடாது. குன்றுபதேசம் செய்வது தமிழ் இலக்கிய மற்றும் பதிப்பு உலகில் காலம்காலமாக இருக்கும் வியாதி. அதற்கு இலக்காகப் பெண்கள் இருந்துகொண்டே இருக்கிறார்கள். யார் வேண்டுமானாலும் பேனாவை எடுத்து எழுதியோ, மேடையில் பேசியோ, வலைதளத்தில் எழுதியோ பெண்கள் உய்வுறப்படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள். எத்தனை கருணை உள்ளம் இவர்களுக்கு!

பெண்கள் என்றால் உருகும் குணம். இத்தகையவர்களுக்குச் சொல்லக்கூடியது ஒன்றே ஒன்றுதான். பெண்கள் தங்கள் வெளிப்பாட்டுக்கான வழிகளையும், தரங்களையும் நிர்ணயிக்க வல்லவர்கள். ஆசான்களைத் தேர்ந்தெடுக்கவும் ஒதுக்கவும் தெரிந்தவர்கள். பெண்களுக்காக இத்தனை சொல்பவர்கள், அவரவர் சொந்த வெளிப்பாடு உய்யும் வழியைப் பார்த்துக்கொண்டால் இலக்கியச் சரித்திரத்தில் இருக்கும் மௌனங்களையும், ஒதுக்கல்களையும் களைய முடியும். அப்படிக் களைய வேண்டியதுதான் இப்போதைய தேவையும்கூட.

இந்த இலக்கிய நோக்கர்களைப் பொறுத்தவரை பெண்ணின் எழுத்தும் செயல்பாடும் ஒரு மனநோயின் கூறுகள். இத்தகைய சிந்தனை சமீபத்தில் ஏற்பட்டதல்ல.

நன்றி தி ஹிந்து
...மேலும்

கர்ப்ப காலத்தில் இரத்தப் போக்கு ஏற்படுவதற்கான காரணங்கள்.!

கர்ப்ப காலம் என்பது பெண்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். இந்த பொழுதை மகிழ்ச்சியுடனும் கவனத்துடனும் அணுக வேண்டும். நம் பெற்றோர்களும், பாட்டிகளும் கர்ப்ப காலத்தில் எப்படி கவனமாக இருக்க வேண்டும் என்பதை நமக்கு சொல்லி இருப்பார்கள். அதன்படியும், மருத்துவர் ஆலோசனையின் படியும் நாம் என்ன தான் பார்த்து கொண்டாலும், சில நேரங்களில் இரத்தப்போக்கு ஏற்படும் ஆபத்து உள்ளது. சில பெண்களுக்கு இரத்தப்போக்கு ஏற்படும். அதற்காக குழந்தைக்கு பாதிப்பு என்று நினைக்க வேண்டாம். ஒவ்வொரு வித இரத்தப்போக்கிற்கும் ஒவ்வொரு காரணம் உண்டு. இதை தெரிந்து கொள்ளாமல், சிலர் இரத்தக் கசிவு ஏற்பட்ட உடனேயே பயந்து விடுகின்றனர்.

இவ்வித பயத்தை போக்க பிரசவ காலத்தில் ஏன் இரத்தப்போக்கு ஏற்படுகின்றது என்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அதோடு விட்டு விடாமல், இரத்தப்போக்கு ஏற்பட்டால் மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்வது அவசியமாகின்றது. இங்கே எதனால் இரத்த போக்கு ஏற்படுகின்றது என்று பார்ப்போம். கருவின் கழுத்து பகுதியில் பாதிப்பில்லாத மாற்றங்கள் நிகழும் போது, சில திசுக்கள் உடைந்து இரத்தப் போக்கு வெளிர் நிறத்தில் வெளியேறும். சில பெண்கள் பிரசவ காலம் முழுவதும் மாதவிடாய் அடைவார்கள். ஆனால் குழந்தை ஆரோக்கியமாகவே இருக்கும். இது மட்டுமின்றி இன்னும் சில காரணங்கள் உள்ளது.

முதல் மாதத்தில் கரு உருவாக ஆரம்பிக்கும் போது, கருப்பையில் மாற்றம் ஏற்பட்டு இரத்த கசிவு ஏற்படலாம். அப்பொழுது இரத்தம் வெளிரிய நிறத்தில் இருக்கும். அதுவும் ஒன்று இரண்டு நாட்களுக்கு மேல் இருக்காது. அதே போல் கர்ப்பமாக இல்லாத போதும், இந்த மாற்றத்தை அனுபவிக்க முடியும். ஆனால் இதை ஸ்கேன் மூலம் கண்டறிய முடியும். குறிப்பாக செக்ஸ் வைத்துக் கொள்வதால், கருப்பையின் வாயில் எரிச்சல் ஏற்பட்டு சிறிது இரத்தம் வடியும். இந்த வகையான இரத்தப்போக்கு உடலுறவுக்கு பிறகு நடக்கும் மற்றும் மிகவும் விரைவாக நின்றுவிடும். 

பிரசவ வலி ஏற்படும் போது கருப்பையின் உள்ள சளி போன்றது உடைந்துவிடும். அப்பொழுது இரத்த கசிவு ஏற்படும். ஒருவேளை இது முன்னரே உடைந்தால், குறிக்கப்பட்ட தேதிக்கு முன்னரே பிரசவம் நடக்க போகின்றது என்று அர்த்தம். நஞ்சுக்கொடி பகுதி கருப்பையின் உள்ளிருந்து வெளிவரும் போது இரத்தப்போக்கு ஏற்படும். கருப்பை மிகவும் இறங்கிய நிலையில் இருந்தாலும், இரத்தக் கசிவு ஏற்படும். இவ்வாறு இருந்தால் கருப்பையின் கனம் தாங்க முடியாமல் இரத்தக் கசிவு ஏற்படும். இவ்வாறு இருப்பின் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். கருமுட்டை கருப்பையின் வெளியே கருத்தரித்தால், இரத்தக் கசிவு ஏற்படும். பொதுவாக ஒரு கருமுட்டை குழாயில் கருத்தரிக்கும் போது, இந்த பாதிப்பு ஏற்படும். அப்பொழுது கடுமையான வயிற்று வலி இருக்கும். இவ்வகை பிரச்சனை இருப்பின், உடனடியாக மருத்துவரை அணுகவும். 

இரத்தப் போக்கு கருச்சிதைவின் அறிகுறியாகவும் இருக்க முடியும். ஆனால் இது மூன்று மாதத்திற்கு பின் ஏற்படாது.
...மேலும்

Jun 21, 2014

பெண்னின் அந்தரங்க உறுப்புகளில் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சனைகள்.

ஆணும் பெண்ணும் பல வழிகளில் உடலமைப்பில் ஒன்று போலவே உள்ளனர். இருவருக்குமே இதயம், சிறுநீரகம், நுரையீரல் என்று பல உறுப்புகள் ஒரே மாதியாகவே உள்ளது. இவர்களுக்கிடையே உள்ள ஒரே வித்தியாசம் இவர்களி ன் பாலியல் மற்றும் இனவிருத் திக்கான உடலுறுப்புகள் வெவேறுவிதமாக அமைந்துள்ளது தான். ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து குழந்தையை உருவாக்க இந்த உறுப்புகள் மூலம்தான் சாத்தியம் ஆகிறது. பெண்க ளின் பல ஆரோக்கியப் பிரச்சினைகள் இந்த உறுப்புகளை பாதிப்பதாய் அமைந்துள்ளது. பாலியலுடன் சம்பந்தப்பட்ட நம் உடலுறுப்புகளை குறித்து பேசுவது சற்று கடினமான காரியம்தான்.

குறிப்பாக நீங்கள் வெட்கப்படுபவராக இருந்தால் இதை குறித்து விவாதிப்பது ரொம்பவே கஷ்டம். உடலின் பல்வேறு இனப்பெருக்க உறுப் புகளின் பெயர்கள் உங்களுக்கு தெரியவில்லை என்றாலும் விவாதிப்பது கஷ்டம்தான். இன விருத்திக்கான உடலுறுப்பு கள் பொதுவாகவே அந்தரங்கமான ஒன்றாகவே எங்கும் கருதப்படு கிறது. நம் உடல் எப்படி இயங்குகிறது என்று நமக்கு தெரிந்தால் நம் உடலை நம்மால் மேலும் நன்றாக பார்த்துக் கொள்ள முடியும்.
பிரச்சினைகள் வரும்பொழுது அதற்கான காரணங் ளை நம்மால் புரிந்து கொள்ள முடியும். அந் த அடிப்படையில் பிர ச்சினையின் காரணத் தை அறிந்து, எது சிற ந்த சிகிச்சை என முடி வெடுக்க முடியும். நம் மைபற்றி மேலும் மேலும் அறியும் பொ ழுது மற்றவர்களின் அறிவுரை (நல்ல தோ, கெட்டதோ எது வாய் இருந்தாலும்)யையும் மீறி நம்மா ல் சொந்த முடிவு எடுக்க முடியும். ஒரு பெண்ணுக்கு பெண் என்பதற்கு அடையாளமான இனவிருத்தி உறுப்புகள் உடலுக்கு உள்ளேயும், வெளியேயும் அமைந்துள்ளன.

இவை பிறப்புறுப்புகள் அல்லது இனவிருத்திக்கான உறுப்புகள் என அழைக்கப்படுகின்றன. வெ ளிப்பாகத்தை உல்வா என்றழைப்ப ர். இந்த பாகம் முழுவதையும் சில ர் யோனி என்றழைப்பதுண்டு. ஆ னால் யோனி என்பது உல்வாவின் திறப்பிலிருந்து உள்ளே கர்ப்பப்பை வரை போகின்ற வழி யாகும். யோனியை சிலநேரங்களில் பிறப்பு வழி என்றும் அழைப்பது ண்டு. கீழேஉள்ள வரைபடத்தில் உல்வா விளக்கப்பட்டுள்ள து. அதன் பல்வேறு பாகங் களின் பெயர்கள் தரப்பட் டுள்ளன. ஆனால், பெண்ணுக்கு பெண் உடல் வித்தியாசப்ப டும். உறுப்புகளின் அளவு, வடிவம் நிறம்கூட வித்தியாசப்படும்.

குறிப்பாக வெளி மற்றும் உள் மடிப்புகள் ஒருவருக்கு ஒருவர் வித்தியாசப்படும். மார்பகங்கள் மார்பகங்கள் எல்லா வடிவி லும் எல்லா அளவிலும் கா ணப்படும். ஒரு பெண்ணுக்கு 10 முதல் 15 வயது ஆகும் போது இது வளர ஆரம்பிக்கி றது. அதாவது சிறுமியாயிரு ந்து பூப்படையும் பருவத்தில் இது வளர ஆரம்பிக்கிறது. க ருத்தரித்த பின் குழந்தைக்கான பால் இங்குதான் உற்பத் தியாகிறது. உடலுறவின் போது இதைத் தொட்டால் பெண் ணின் யோனிக் குழாய் ஈரமாகி பெண்ணை உடலுறவுக்கு தயார்படுத்துகிறது. மார்பகத்தின் உள்பாகம் சுரப்பிகள் : குழந்தைக்கான பாலை உற்பத்தி செய்கிறது. சுரப்பி குழாய்கள் : இவை பாலை மார்புக் காம்புக்கு கொண்டு செல்கிறது. திறவு (Sinuses) : குழந்தை பால் குடிக்கு ம்வரை பால் இங்குதான் சேமித்து வைக்கப்படுகி றது.

மார்புக்காம்பு : இதன் வழியே பால் வெ ளிவருகிறது. சில நேரம் இது விரை த்து வெளியே நீட்டிக் கொண்டிருக்கும். சில நேரம் இது தட்டையாக இருக்கும்.

ஏரியோலா (Areola) : மார்புக்காம்பை சுற்றிய கருத்த மேடான பகுதி. கருவட்டத்தில் உ ள்ளமேடுகள் எண்ணெய் பசை யைஉற்பத்தி செய்கின்றன. அவை மார்புக்காம்பை சுத்தமாகவும் மிரு து வாகவும் வைத்திருக்க உதவுகிறது. பருவமாற்றங்களும் ஹார்மோன்களும் ஹார்மோன்கள் உடலில் சுரக்கும் விஷேச வேதிப்பொருட்க ளாகும். இவை உடல் எப்போது, எப்படி வளர வேண்டும் என்பதை கட்டுப்படுத்துகி றது. ஒரு பெண்ணுக்கு முதல் மாத விடாய்க்கு சற்று முன்பு எஸ்ட்ரோ ஜன் மற்றும் புரோஜெஸ் டெரோன் என்ற இரு ஹார்மோன்கள் சுரக்கின் றன.

இவை இரண்டும் பெண்ணுக் கே உரிய இரு முக்கிய ஹார்மோன் கள். இந்த இரு ஹார்மோன்களால் தான் பெண் பருவமடை கிறாள். பருவமடைந்தபின் மாதவிடாய் நிற்கும்வரை, ஹார்மோன் கள் பெண்ணை ஒவ்வொரு மாதமும் கருத்தரிப்பதற்கான வாய்ப்பிற்கு தயார்படுத்துகிறது. இந் த ஹார்மோன்களின் ஆணைப்படிதான் ஒவ்வொ ரு மாதமும் சினைப்பைகள் ஒரு முட்டையை வெளியி டுகின்றன.

ஒரு பெண் கருத்தரிக்க இந்த ஹார்மோன்கள் முக்கிய காரணமாய் வி ளங்குகின்றன. பல குடும்ப கட்டுப்பாட்டு வழிமுறைக ள் இந்த ஹார்மோன்களை கட்டுப்படுத்துவது மூலம் நடக்கிறது. கருத்தரித்த பின்பும், தாய்பால் ஊட்டும் போதும் கூட ஹார்மோன்கள் பல மாற்றத்தை உண்டாக்குகின்றன. இந்த ஹார்மோன்களால் தான் கர்ப்பமாயிருக்கும் போது மாதவிடாய் வருவ தில்லை. குழந்தை பிறந்த உடனே பால் சுரக்க வைப் பதும் இந்த ஹார்மோன்க ள்தான். ஒருபெண் இனவிருத்தி க் கான கட்டத்தை கடக்கும் பொழுது, இந்த இரு ஹார்மோன்களும் சுரப்பது படிப்படியாக குறையும். சினைப்பைகளும் முட்டையை வெளியிடாது.

அவள் உடலில் கருத்தரித்தலுக்கானநிலை முடிந்து போகும். மாதவிடாய் முற்றிலுமாக நின்று போகும். இதற்கு பெயர்தான் “மாதவிடாய் நின் று விடுதல்” (Menopause) அதைத் தொடர்ந்து பெண் ணின் உட லில் சுரக்கும் ஹார் மோன்களின் தன்மை மற்றும் அளவுக்கேற்ப அவ ளின் மனநிலை, காம உண ர்வு, எடை, உடல்சூடு, பசி மற்றும் எலு ம்பின் சக்தி ஆகிய வற்றிலும் மாற்றம் ஏற்படும். மாதவிடாய் ஒரு பெண் இனவிருத்திக்கான காலக்கட்டத்தில் இருக்கும் பொழுது, ஒவ்வொரு மாதமும் சில நாட் கள் அவளின் கர்ப்பப் பையிலிருந்து இரத்தம் யோனிக்குழாய் வழியாக உடலை விட்டு வெளியேறு கிறது. இதற்கு பெயர்தான் மாதவிடாய். மாதவிடாய் நடப்பது உடல் நல்ல நிலையில் இருப்பதற்கு அடையாளம். இதன் மூலம் உடல் கருத்தரித்தலுக்கு தயாராகிறது. இந்த மாதவிடாயை பல பெண்கள், தங்கள் வாழ்வின் ஒரு அம்சமாக ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் பலநேரங்க ளில் அவர்களுக்கு இது ஏன் நிகழ்கிறது? இந்த மாற்றம் ஏன் ஏற் படுகிறது என்றெ ல்லாம் தெரிவதில்லை. மாதாந்திர சுற்று (மாத விடாய் சுற்று) மாதாந்திரச் சுற்று ஒவ்வொரு பெண்ணுக்கும் வித்தியாசப்ப டும். இரத்தப்போக்கு வரும் முதல் நாள் இது தொடங்குகிற து.பெரும்பாலான பெண்களு க்கு 28 நாட்களுக்கு ஒரு முறை இந்த ரத்தப்போக்கு ஏற்படும். சில பெண்களுக்கு 20 நாட்க ளுக்கு ஒரு முறை கூட இது ஏற்படும். 

சில பெண்களுக்கோ 45 நாட்களுக் கு ஒருமுறைதான் இது நிகழும். மாதவிடாய் சுற்றின் போது, ஒவரியில் சுரக்கும் எஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெ ஸ் டெரான் ஹார்மோன்களின் அளவு மாறிக்கொ ண்டேயி ருக்கும். மாதச்சுற்றின் முதல்பாதியில் பெரும் பா லும் சினை ப்பையில் ஈஸ்ட்ரோஜன்தான் சுரக் கும். இதனால் கருப்பை யின் உட்சுவரில் ரத்தம் மற்றும் திசுக்களாலான மிருதுவான படலம் உரு வாகிறது. ஒரு வேளை பெண் கருத்தரித்தால் உருவாகும் குழந்தை இந்த மிருதுவா ன கூட்டில் சுகமாக இருக்கும். மாதச்சுற்றின் மத்தியில், கருப்பையின் மிருதுவான உட்சுவர் தயார் ஆன உடன், ஏதாவது ஒரு சினைப்பையில் இருந்து முட்டை ஒன்று வெளியேறும். இம்முட்டைஃபெலோப்பி யன் குழாய் வழியாக கருப் பையை அடையும். அப் போது பெண் கருத்தரிக்க ஆயத்த நிலையில் இருப் பாள். அப்போது பெண் உட லுறவுக் கொண்டாள், ஆ ணின் உயிரணு முட்டை யோடு சேர வாய் ப்புண்டு. இதற்கு கருத்தரித்தல் எனப்பெயர். 

அது கர்ப்ப காலத் தின் தொடக்கமும் ஆகும். மாதச்சுற்றின் இரண்டாம் பாகத்தில், அதாவது அவளது அடுத்த மாதவிடாய் தொடங் கும் வரை அவள் உடல் புரோஜெஸ்டொரோன் ஹார்மோனை சுரக்கிறது. இந்த ஹர்மோ னும் கருத்தரிதலுக்கு ஏதுவா க கருப்பையின் மிருதுவான உட்சுவரை உருவாக்குகிறது. பெரும்பாலான மாதங்களில் பெண்ணின் முட்டை கருத்த ரிக்காது. எனவே கருப்பையி ன் சுவர்ப்படலத்துக்கு தே வையிருக்காது. சினைப்பைகளும், ஹார்மோன்கள் சுரப்ப தை நிறுத்தி விடும். இதன் விளைவாய் சுவர்படலமானது உடைந்து சிதையும். உடைந்து சிதைந்த இரத்தக்குழம்பு கருப்பையிலிருந்து மாதவிடாயின் போது, உடலை விட்டு வெளியேறும். இதனோடு கூடவே முட்டையும் வெளியேறும். இது புதியமாதாந்திர சுற் றின் தொடக்கமாகும். மாத விடாய் நின்ற உடன் சினைப் பைகள் சுவர்ப்படலம் உரு வாகும். பெண்களுக்கு வய தாகி, மாதவிடாய் முற்றிலு மாக நிற்பதற்கு முன்பு இரத் தப்போக்கு அடிக்கடி ஏற்பட லாம். இரத்தப்போக்கின் அள வும், இளமையாய் இருந்தபோது உண்டானதைவிட அதிக மாக இருக்கலாம். மாதவிடாய் நிற்கப் போகும் காலத்தில் (மெனோபாஸை நெருங்கும் சமயத்தில்), மாதவிடாய் சில மாதங்கள் நின்று மீண்டும் தொடங்கலாம். பெண்ணின் இனவிருத்தி உறுப்பின் வெளிப்பாகங்கள்

உல்வா : உங்கள் இரு தொடைகளு க்கு இடையே காணப்படும் இனவிருத்தி உறுப்புகள் வெளிமடிப்புகள் : தடித்த சதைப் பகுதி கால்கள் ஒன்றாக இருக்கும்பொழுது இவை மூடிக்கொள் ளும். இது உள் பாகங்களை பாதுகாக்கிறது.

உள்மடிப்புகள் : இது மிருதுவான தோல் பகுதி. இதில் முடி இருக் காது. தொ ட்ட உடனே உணர்ச்சி வரும். உடலு றவின் போது இப்பாகம் விரிவடையும். இதன் நிறம் கருமையாகும்.

யோனிக் குழாயின் திறப்பு : யோனியின் திறப்பு வாயி

ஹைமன் (Hymen) : யோனியின் திறப்பில் உள்ளே அமைந்துள்ள மெல்லிய சதைப் பகுதி. கடின வேலை விளையா ட்டு போன்ற நடவடிக்கைகளின் போது இத்தோல் பகுதி விரிவ டையும் அல்லது கிழிபடலாம். அப்போது லேசாக இரத்தம் வரும். முதன்மு றையாக உடலுறவி ன் போதும் இது கிழிபடலாம். ஒவ்வொரு பெண்ணுக்கும் ஹைமன் வித்தியாசப்படும். சில பெண்களுக்கு ஹைமன் னே இருக்காது.

மோன்ஸ் (Mons) : முடிகள் அடர்ந்த, உல்வா வின் தடித்த மேல் பகுதி. கிளிட்டோரிஸ் : மலர்மொட்டு போன்று சிறு பாகம். உல்வாவின் பாகங்க ளிலேயே மிகுந்த உணர்ச்சி தரக்கூடியது. இதையும் இதைச் சுற்றியு ள்ள பகுதியையும் தேய்த்தால் பெண்ணுக்கு பாலிய ல் வேட் கை அதிகமாகி உச்சக் கட்டத்தை அடைவாள்.

சிறுநீர்த்துவாரம் : சிறுநீர் குழாயின் வெளித்திறவு வா யில். சிறுநீர்ப் பையில் சேமிக்கப்ப ட்டுள்ள சிறுநீர் இக்குழாய் வழியே தான் உள்ளிருந்து வெளியே வருகி றது.

ஆசனவாய் (Anus) : குடல்வாய் திறப்பு, கழிவு (மலம்) இதன் வழியாக வெளியே றும் பெண்ணின் இனவிருத்தி உறுப்புகளின் உட்பாகங்கள்

சினைப்பை: ஒவ்வொரு மாதமும் சினைப்பையிலிருந்து ஒரு முட்டை பெலோப்பியன் குழாய்க்கு அனுப்பப்படுகிறது. ஒரு ஆணின் விந்தணு இதோடு இ ணையும் பொழுது அது குழந்தையாக உருப்பெற துவங்குகிறது. ஒரு பெ ண்ணுக்கு இரு சினைப் பைகள் இருக்கும் கருப் பையின் இரு புறமும் ஒவ்வொன்றும் இருக்கு ம். ஒவ்வொரு சினைப் பையும் ஒரு திராட்சைப்பழ அளவில் இருக்கும்.

கர்ப்பப்பை வாய் : கருப்பையின் வாயைத் தன் கர்ப்பப்பைவாய் என சொல் கிறோம். கருப்பையின் இத்திறப்பு யோனிக்குள் செல்கிறது. ஆணின் உயிரணு கர்ப்பப்பைக் குள் கர்ப்பப்பை வாயில் உள்ள சிறுதுவாரம் வழி யே உள்ளே நுழைகிறது. அதே நேரத்தில் ஆண் குறி போன்ற மற்றவை கருப்பையில் நுழைய முடியாதபடி இதுதடுக்கிறது. குழந் தைப் பிறப்பின்போது, இது திறந்து குழந்தை வெளியே வர உதவுகிறது.

ஃபெலோப்பியன் குழாய்கள் : இக்குழாய்கள் சினைப்பையையும் கர்ப்பப்பையையும் இணைக்கிற து. சினைப்பை ஒரு முட்டையை வெளியிடும் போது, அம்முட்டை இக்குழாயில் பயணம் செய்து கரு ப்பை யை அடைகிறது.

கர்ப்பப்பை : உள்ளே வெற்றிடத் தைக் கொண்ட தசையாலான பகுதி மாத விடாயின் போது இங்கிருந்து தான் இரத்தம் வெளியேறு கிறது. கருத்தரித்த பின் குழந்தை இங்குதான் வளர்கிறது.

யோனிக்குழாய் அல்லது பிறப்புவழி: உல்வா (Vulva)விலிருந்து கர்ப்பப்பை க்கு செல்லும் பாதை தான் யோனிக் குழாய். இதன் தோல் பகுதி விஷேச மானது. உடலுறவின் போதும் குழந் தைப் பிறப்பின்போது இத்தோல் பகுதி சுலபமாக விரிவடை கிறது. இதிலிருந்து வெளிப்படும் திரவம் அல்லது ஈரம் யோ னிக்குழாயை சுத்தமாக வைத்துக் கொள்ள வும், கிருமி கள் தாக்காமலும் பாதுகாக்கிற து. பெண்களின் பாலியல் பிரச்சனைகள் வளர்கின்ற பருவத்தில் பெரும்பாலான பெ ண்களுக்கு காதல் மற்றும் காம உணர்வுக ள் வரத்தான் செய்யும். தாங்கள் யாரையா வது தொடவேண்டும் அல்லது யாராவது தங்களை தொடவேண்டும் என்று அவர்கள் இச்சையுடன் நினைப்பது சாதாரண விஷயம்தான்.

பெண்கள் உடலுறவில் ஈடுபட பல காரணங்கள் உண்டு. சிலர் குழந்தைவேண்டி உடலுறவில் ஈடுபடுகிறார் கள். சில ருக்கு உடலுறவு சந்தோஷம் அளிப்பதாய் உள்ளது. சிலருக்கு அது தே வைப்படுகிறது என்பதனா ல் உடலுறவில் ஈடுபடுகி றார்கள். சிலர், அதில் விரு ப்பம் உண்டோ, இல்லையோ, மனைவி என்ற அடிப்படையி ல், கடமைபோல் அதில் ஈடுபடுகிறார்கள். சிலர்பணத்திற்காக அல்லது வாழ்க்கையில் உயிர் வாழ்வதற்கு தேவையான உணவு அல்லது தனது குழந்தைகளுக்கு உடைகள் வா ங்குவதற்காக அல்லது தங்க இடம் வே ண்டி கட்டாயப்படுத்தப்பட்டு அதில் ஈடுபடுத்தப் படுகிறார்கள்.

மற்ற பெண்கள் தன்னுடைய துணைவ ன் தன்னை அதிகம் நேசிக்கவேண்டும் என்பதற்காக உடலுறவில் ஈடுபடுகிறார்கள். சில நேரங்களில், பெண்ணின் நண்பனோ அல்லது காதலனோ, பெண் தயாராக இல்லாத போது கூட அவனுடன் உடலுறவு கொள்ளவேண் டும் என வலியுறுத்தி அவளை ஏற்றுக்கொள்ளச் செய்கிறான். தான் விரும்பாத பொழுது, எந்த ஒரு பெண்ணும் உட லுறவின் ஈடுபடக்கூடாது. தான் அதற்கு தயார் என்று பெண் ணாகிய நீங்கள் முடிவு செய்த பின்னரே அதில் ஈடுபட வேண்டும். உடலுறவு என்பது, அதில் ஈடுபடும் இருவருக்கு மே மகிழ்ச்சி தரக்கூடிய து.

ஆனால் அதில் பயமோ, வெட்கமோ இருக்கும் பட்சத்தில் அந்த மகிழ்ச்சி கிடைப்பது கடினம். உடலுறவுக்கு நீங்கள் தயாரானவுடன், கருத்த ரித்தல் மற்றும் பால்வி னை நோய்களி லிருந்து உங்களை எப்போதும் பாதுகாத்துக் கொள்ள தயாராக இருக்க வேண்டும். காதலனோடு உடலுறவு வைத்துக் கொள்ள நிர்பந்தம் உலகம் முழுவதும், பல பெண்களும் இளம் பெண்களும் விருப்பமில்லாமல் உடலுறவில் ஈடுபட நிர்பந்திக்கப்படுகிறார்கள். பெரு ம்பாலும் காதலர்கள் என்று சொல்லிக் கொள்ளும் அவர்களின் ஆண் நண்பர்களே இவ்வாறு நிர்ப்பந்திக்கிறார்கள்

சில இடங்களில் இதை ‘காதலனின் பலாத்காரம்’ (Date rape) என்றழைக்கின்றனர். இந்த நிர்ப்பந்தம் உடல் ரீதியானது மட்டுமல்ல. உணர்வுகளாலு ம், வார்த்தைகளாலும் கூட அவர்கள் நிர்ப்பந்திப்பார்கள். விருப் பமில்லாமல் யாரையும், யாரும் பாலுறவுக்கு நிர்ப்பந்திக்கக் கூடாது. உங்கள் குடும்ப உறுப்பினர் யாராவது உங்களோடு உடலுறவு வைத்துக் கொ ள்ள முயற்சித்தால் (முறைக் கெட்ட உறவு) நீங்கள் விரும்பவில்லையெனில் உங் கள் விருப்பத்திற்கு மாறாய், எவ்வளவு நெருக்கமானவராய் இருந்தாலும், அவர் உங்களை தொடக்கூடாது.

அது தவிர உங்களை தந்தை, சகோதரன், மாமா, அல்லது ஒன்றுவிட்ட சகோதரன் போன்ற எந்த குடு ம்ப உறுப்பினரும் உங்களின் பிறப்புறுப்பையோ, அல்லது உடலின் வேறு எந்த பாகத் தையோ, காம உணர்வோ டு தொ டக்கூடாது. அப்படி யாரேனும் தொட்டால், உடனே நீங்கள் உதவி நாட வேண்டும். வெளியே சொ ன்னால் உனக்கு ஆபத்து என்று தொட்டவர் பயமுறு த்தினால் கூட, நீங்கள் நம் பும் ஒருவரிடம், எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக சொல்ல வே ண்டும். இந்த விபரத்தை உங்கள் குடும்பத்திற்கு வெளியே உள்ள ஒருவரிடம் சொன்னால், இன்னமும் நல்லது.

...மேலும்

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்