/* up Facebook

Dec 7, 2013

ஆணாதிக்க சமூகத்தால் பெண்கள் எதிர் கொள்ளும் சவால்கள் -அகல்யா பிரான்சிஸ்கிளைம்

சர்வதேசே பெண்கள் தினத்தையொட்டிஆணாதிக்க சமூகத்தினால் பெண்கள் மீது சுமத்தப்பட்ட பாலினபாகுபாடு உழைப்பை சுரண்டுதல் கலாச்சாரம் சாதி சமூக பொருளாதார மத சடங்கு சம்பிரதாயங்கள் என பல சவால்களை சந்திக்கிறார்கள். இவைகள் அனைத்தும் பெண்கள் விரும்பி ஏற்றுக் கொள்ளபட்டவையல்ல அவள் மீது திணிக்கப்பட்ட ஓர் சுமையாக உள்ளன. ஆணாதிக்க சமூகதால் பெண்கள் எதிகொள்ளும் சவால்களாக பெண்கள் என்றால் பிள்ளை பெறுதல் வீட்டை கவணித்தல் ஆணின் கீழ் அடங்கி அவனின் தேவைகளை பூர்த்தி செய்பவள் ஆகிய ஆணாதிக்க சிந்தனைகள் மோலோங்கியிருக்கின்றது இத்தகைய கட்டுமானங்களை உடைத்தல் என்பது பெரும் சவாலாக உள்ளது.

பெண்கள் இன்று அதிகம் கல்வி கற்கிறார்கள்  வேலைக்கு செல்கிறார்கள் வாகனங்கள் ஓட்டுகிறார்கள் எனவே பெண்கள் சுதந்திரம் அடைந்து விட்டார்கள் என்று குறுகிய வட்டத்தில் சிந்திக்கும் ஆணாதிக்க வாதிகள் பெண்கள் உட உள சமூக ரீதியாக எதிர் கொள்ளும் பிரச்சனைகள் கருத்தில் கொள்வதில்ல

இன்றும் பல பெண்கள் பொருளாதாரம் மறுக்கப்பட்டு ஆணை சார்ந்து இருக்கும் சூழல் காணப்படுகின்றது. அதாவது திருமணம் செய்த பின்னர் பெண்கள் வேலைக்கு செல்வதை நிறுத்துகிறார்கள் பிள்ளையை பர்க்க வேண்டும் வீட்டை கவணிக்க வேண்டும் என பல காரணங்கள் கூறி. இக் காரணங்கள் எல்லாம் ஆண் பெண் இரண்டு பேரின் கடமை என்பதை ஆணாதிக்க வாதிகள் உணர மறுக்கின்றார்கள்

பெண்களை பாலியல் துஸ்பிராயோகங்கள் செய்யும் போது அதை நியாயப்படுத்த ஆணாதிக்கவாதிகள் பிற்போக்கான பல காரணங்களை முன்வைக்கிறார்கள் பெண்;;கள் தனிய அல்லது இரவில் ஏன்  அவ்விடம் சென்றார்கள் காமத்தை தூண்டும் அளவில் ஆடைகளை ஏன் அணிந்தார்கள் என பல காரணங்கள் கூறுகின்றார்கள். அவ்வாறெனின் பெண்களுக்கு தனிய செல்லும் சுதந்திரமில்லையா இரவு என்பது ஆண்களுக்கு மட்டும் தான் உரியதா? எப்பவும் ஆனைணதான சார்ந்து வாழ வேண்டுமா? ஆவளின் ஆடை ஆண்களுக்கு காமத்தை தூண்டுது என்றால் இவர்களுக்கு காமத்தை தவிர வேறு எண்ணங்கள் இல்லையா 68 வயது சிறுமியில் எந்த காமம் தெரிந்து அவளை வல்லுறவிற்கு உட்படுத்தினீர்கள். 

சமூகம் ஆண் பெண் இருவரும் ஏற்படுத்தி கொள்ளும் உறவில் பெண்ணிளை மட்டும் குடும்பம் கலாச்சாரம் சீதனம் சடங்கு சம்பிரதாயம் என பலவற்றை பேனுபவர்களாக ஒடுக்குகிறார்கள் உறவுகள் கடமைக்காகவும் சமூதாய கட்டமைப்புகளுக்காகவும் தீர்மானிக்கப்படாமல் இருவரின் அன்பின் மூலமாக தீர்மானிக்கப்பட வேண்டும். 

எமது நாட்டில் இடம் பெற்ற பாரிய யுத்ததினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பெண்களே தமது கணவர் பிள்ளைகள் உறவுகள் சொத்துக்கள் என பலவந்றை இழந்து இவ் ஆணாதிக்க மூகத்தில் வாழ முடியாது  சமூக பொருளாதார ரீதியாக பல சவால்களை சந்திக்கிறார்கள் பெண்கள். கணவனை இழந்தவர்களுக்கு விதவைஎன்னும் பட்டத்தை எம் சமூகம் சூட்டி அவர்களை எந்த நற்காரியங்களுக்கும் முன்வைப்பதில்லை அவர்கள் வேறு ஆண்களுடன் கதைத்தால் வேசை ஆடி பட்டம் சூட்டுகின்றார்கள் அவளின் மறுமணத்தை பெரிதும் விரும்பாததாக எம் ஆணாதிக்க சமூகம் விளங்குகின்றது.

இன்று சில ஊடகங்கள் விபச்சாரிகள் வடபகுதிகளில்  அதிகரிக்கிறார்கள்  பெண்கள் இத் தொழிலினையே செய்து வருகிறார்கள் என்று செய்திகளினை அப்பட்டமாக  பரப்புகின்றது இவ் நிiமைக்கு இவர்களினை கொண்டு செல்லும் ஆண்களினை சுட்டி காட்ட தவறுகின்றது பெண்ணை மட்டும் விபச்சாரி என்று கூறுகிறது ஆண்களினை அவ்வாறு ஷநோக்குவதில்லை சில ஆண்களினால் தான் இவ் நிலமைக்கு கட்டாயத்தின் பேரில் தள்ளப்படுகின்றாள் என்பதனை சுட்டி காட்ட தவறுகின்றது. 
 
கணவன் இல்லை என்பதால் இவர்கள் வேலைக்கு செல்ல வேண்டிய நிலையில் உள்ளார்கள். அங்கே பெருளாதார ரீதியாக பாலியல் ரீதியாக பல ஒடுக்கு முறைகளுக்குள்வாங்கப்படுகிறார்கள் மற்றும் நிதிமயமாக்களின் தாக்கத்தினால் அதீத கடன் சுமைகளை சுமந்தபடியுள்ளார்கள. உலக உழைப்பில் அதிகசதவிகிதம் பெண்கள் உழகை;கிறார்கள் ஆனால் அவர்களுக்கு உழைப்பிற்கேற்ப ஊதியம் கிடைப்பதில்லை. வீட்டில் ஊதியம் இல்லாத வேலையாளகவும் பல வேலைகளில் ஆணை விட குறைந்த ஊதியம் பெறுபவளாகவும் விளங்குகிறாள;

வேலை தளங்கள் பொது இடங்கள் கல்வி கற்கும் இடங்கள்  வீடு என பல இடங்களில் பாலியல் தொந்தரவுகளுக்கு பெண்கள் கட்டாயத்தின் பெயரில் உட்படுத்தப்படுகிறார்கள். வேலைத்தளங்களில் முதலாளி சக ஆண் தெழிலாளர்களால் பாலியல் சுரண்டல்களுக்கு ஆளாகிறால் மற்றும் அவள் தன் திறமையினால் பதவி முன்னேற்றம் அடைந்தாலும் ஆணாதிக்க சமூகம் அவள் தன உடளை காட்டித் தான் அப் பதவியை பெற்றுக் கொண்டாள் என்கிறது. பேரூந்தில் கூட ஆண்களுடன் பெண்கள் சுதந்திரமாக பயணிக்க முடியேலா நிலை காணப்படுகின்றது 

இன்று பெரும் பாலான ஆண்கள் பெண் விடுதலை சீதனம் தொடர்பாக பல எழுத்துக்கள் கதைகள் கதைக்கிறார்கள் ஆனால் அவர்கள் திருமணம் செய்யப்போகும் பெண்கள் மட்டும் அவர்களுக்கு அடங்கி நடப்பவர்களாக தெரிவு செய்கிறார்கள் மற்றும்  அதிக சீதனம் வாங்குகிறார்கள் அவர்களின் எழுத்துக்கள் கதைகள் எல்லாம் புகழ்ச்சிக்காகவும் தொழிலுக்காகவும் மடடுமே தவிர உண்மையான பெண்விடுதலையை நோக்கியல்ல

பெண்களினை எப்பவும் ஒடுக்கி தமக்கு கீழ் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக ஆணாதிக்க வாதிகளினால் எழுதப்பட்ட இலக்கியங்கள் சித்தாந்தங்கள் சமய கதைகள்; சினிமா படங்கள் பழமொழிகள் நாடகங்கள் எல்லாம் பெண் என்னும் கதாபாத்திரத்திற்கு மாத்திரம் பல போதனைகளை கற்பிக்கின்றது. அதாவது கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் மற்றும் பெண் கற்புக்கரசி பொம்பளை சிரிச்சா போச்சு புகையிலை விரிச்சாபோச்சு குடும்ப கட்டமைப்பை தாங்குபவள் சடங்கு சீதன சம்பிரதாயங்களை பேணிகாப்பவள் ஆணுக்கு எப்பவும் அடங்கி வாழ்பவள் ஆணின் காம இச்சைக்கெல்லாம் இசைந்து போக வேண்டியவல் ஆண்களின் கீழ் தான் எப்பவும் வாழ்பவர்கள் என பல அடக்கு முறைகளை பெண் மேல் இவர்கள் திணிக்கிறார்கள் பெண்கள் மீதான ஒடுக்கு முறையானது உடல் ரீதியாக மட்டுமல்லாமல் கொச்சைப்படுத்தும்  மொழிகளினாலும் தொலைக்காடசிகளில் பெண்ணை காட்டும் போது அவர்களின் நடை உடை பழக்கவழக்கங்கள் போன்றவற்றினை விளக்கும் போது அவர்களின் பொருளாதார பின் தங்கிய நிலையைக் கூட கவர்ச்சிகரமாக தான்  கவர்ச்சி கரமாக தான் காட்டுகிறார்கள் 

தான் கொடுக்கும் பணத்திற்கு அதீத இலாபத்தினை எதிர்பர்க்கும் ஆணாதிக்க முதலாளித்துவத்துவம் பெண்களினை பாலினகவர்ச்சிகளாகமட்டும் பார்க்கின்றது தமது இச்சைகளுக்கும் தம் தேவைகளுக்கும் மட்டும் பயன்படுத்தி கொள்ளுகின்றது அவளுக்கென்று உணர்வுகள் ஆசைகள் ஏதும் அற்ற உயிருள்ள ஓர் பொருளாக மட்டும் ஆணாதிக்கசமூகம் நோக்குகின்றது நோக்குகின்றது.

இன்று ஆணாதிக்கவாதிகள் பலர் காதல் என்ற போர்வையில்; நீ படித்தது போதும் வேலைக்கு போக தேவையில்லை திருமணம் செய்து முடிய நீ வீட்டிலிருந்து என் அம்மாவை பார் என்று சிலர் கூறுகிறார்கள் சிலர் வேலைக்கு போனாலும் வேலை முடிந்தவுடன் வீட்டிற்கு வந்திடு; வேறு ஆண்களுடன் சேர்ந்து திரிதல்  கூட்டங்கள் மேற் படிப்பு தேவையில்லை என்றெல்லாம் கூறி  பெண்களை பொய் காதல் என்னும் மாயையில்  அடிமைகளாக வைத்து கொண்டு  பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்து விட்டோம் என்று கூறுகிறார்கள்.

இவற்றிலிருந்து பெண்கள் விடுதலை அடைவதென்பது பெரும் சவாலாகவுள்ளது. ஆணாதிக்க சிந்தனைகள் ஒழிந்து சமூகப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு விட்டால் யாரையவும் யாரும் பாதுகாக்கப்பட வேண்டியதில்லை. பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் சாதிய ஒடுக்கு முறைகளுக்கு எதிரா குரல் கொடுக்கும் ஆண்கள் பெரும் பாலும் பெண்களின் நிலமைகள் தொடர்பாக குரல் கொடுப்பதென்பது மிகவும் குறைந்தே விளங்குகின்றது. ஆணாதிக்க சமூகம் எப்போதும் பெண்ணுக்கு சுதந்திரத்தை தராது பெண்கள் தமது அடக்கு முறைகளுக் கெதிராக போராடி ஆணாதிக்க சமூக கட்டமைப்பை உடைத்தெறிந்து தம் சுதந்திரத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.

1 comments:

manivannan mani said...

"பெண்ணியம் "என்ற வலைதள இதழில் " ஆணாதிக்க சமூகத்தால் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் "
என்ற தலைப்பில் அகல்யா பிரான்சிஸ் அவர்கள் எழுதிய ஆய்வு கட்டுரை ஒன்றை படித்தேன் .
பொதுவான சமூகம் என்று குறிப்பிடுவது பொதுவானதல்ல ....!
இந்த சமூகம் ஆண்களை மையப்படுத்தி ,ஆண்களுக்கான அதிகாரத்தை நிறுவுகின்ற ,
பெண்ணினத்தின் மீது ஆணாதிக்கத்தை தினிப்பதையே பொதுவான சமூகம் என்று பொதுமை
படுத்துவதை ஏற்கமுடியாது என்பதை கீழே உள்ள வரிகளில் சுட்டிக்காட்டுவதோடு "
பெண்களுக்கு தனியாக செல்லும் சுதந்திரமில்லையா இரவு என்பது ஆண்களுக்கு மட்டும் தான் உரியதா? "
பெண்களுக்கான சுதந்திரம் எதுவரை என்பதை இந்த ஆணாதிக்க சமூகம் வரையறுத்துள்ளதை எளிமையாய் எடுத்தேறிகிறார் .

யுத்தத்தை சந்தித்த சமூகம் பாதிப்பின் சுமையை பெண்ணின் தலையில் திணித்து விபச்சாரிகள்
என்று விளம்பரப்படுத்துவத-"இன்று சில ஊடகங்கள் விபச்சாரிகள் வடபகுதிகளில் அதிகரிக்கிறார்கள்
பெண்கள் இத் தொழிலினையே செய்து வருகிறார்கள் என்று செய்திகளினை அப்பட்டமாக பரப்புகின்றது !"
என்று பதிவு செய்யும் ஊடகம் அதில் தொடர்புள்ள ஆண்களை ஆரவாரமில்லாமல் அங்கீகரிப்பது ஏன் ?
என்ற கேள்வியையும் தொடுத்திருக்கிறார் .பெண்ணினம் விபச்சாரம் என்பதை விரும்பி ஏற்றதல்ல....
இந்த ஆணதிக்க சமூகமும் ,திணிக்கப்பட்டது போரும் நிற்பந்திக்கபட்டவை என்பதை ஊடகம்
மூடி மறைப்பதை சாடுகிறார் .

பெண்ணியம் - வரதட்சணை எதிர்ப்பு பேசுவோரும் ,எழுதுவோரும் ,விளம்பரத்துக்கும்,
தான் ஒரு முற்போக்கானவன் என்றும் காட்டிக்கொள்வதற்குமே தவிர தாம் கடைபிடிப்பதற்கல்ல
என்று மறைந்திருக்கும் வேடதாரிகளை " " இன்று பெரும் பாலான ஆண்கள் பெண் விடுதலை சீதனம்
தொடர்பாக பல எழுத்துக்கள் கதைகள் கதைக்கிறார்கள் ஆனால் அவர்கள் திருமணம் செய்யப்போகும்
பெண்கள் மட்டும் அவர்களுக்கு அடங்கி நடப்பவர்களாக தெரிவு செய்கிறார்கள் மற்றும்
அதிக சீதனம் வாங்குகிறார்கள் அவர்களின் எழுத்துக்கள் கதைகள் எல்லாம் புகழ்ச்சிக்காகவும்
தொழிலுக்காகவும் மடடுமே தவிர உண்மையான பெண்விடுதலையை நோக்கியல்ல ! " என்ற வர்கள் மூலம் தோலுரிக்கிறார்.

வெகு மக்களின் ஊடகமான திரைப்படமும்,தொலைக்காட்சியும் சீர்கேட்டுகிடப்பதையும் சுட்டிக்காட்டுகிறார் . பெண்ணடிமைத்தனத்தை கட்டிகாக்கவே உருவாக்கப்பட்டவைத்தான் பழமொழிகளும் ,இதிகாசங்களும் புராணகளும் என்பதை விளக்கியுள்ளார். நிலபிரபவத்துவ சமூகத்தில் சாதியம் எப்படி கட்டிக்காக்கப்டுகிறதோ ? அப்படியே பெண்ணை போகப்பொருளாக பார்க்கும் நுகர்வு கலாச்சாரமும் விதையூன்றி வளர்க்கபடுகின்றது என்ற மார்க்சிய கண்ணோட்டத்தோடு அணுகிய விதம் பாராட்டப்படவேண்டியதே ! அதோடு பெண் விடுதலை என்பது ஆணாதிக்க சமூகத்தில் போராடித்தான் பெறவேண்டும் என்றும் அதற்கு சமூகம் சார்ந்து பெண்ணைப்பற்றிய சிந்தனையில் மாற்றம் வரவேண்டும் என்றும் சொல்லும் தீர்வு மிகச்சரியானதே .அருமை ....வாழ்த்துக்கள்
----------க. மணிவண்ணன் ... புதுச்சேரி .... இந்தியா ............

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்