/* up Facebook

Mar 21, 2014

நாப்கின் - ஆர்த்தி வேந்தன்


இன்றைக்கு அதிகம் விற்பனையாகும் நுகர்வோர் பொருளில் முதலாவதாக இருப்பது சானிடரி நாப்கின். வளர்ந்த நாடுகளில் கூட எந்த ஒரு சானிடரி நாப்கின்னும் பாதுகாப்பானது என்பதற்கு சான்றுகள் இல்லை என்பது வருத்தத்துக்குறியது. 1987 ல் சி பி ஏ சில பிரபலமான நிறுவனங்கள் தயாரிக்கும் சானிடரி நாப்கின்களை சோதனைக்கு உட்படுத்தினர். அதில் 11000 க்கும் மேல் நுண்ணுயிர்கள் இருப்பதாக கண்டறியப்பட்டது. அதாவது இன்டர்நேஷனல் சேப்டி ஸ்டாண்டர்ட் நிர்ணயம் செய்ததை காட்டிலும் 10 மடங்கு அதிகமானது. உற்பத்தி செலவை குறைப்பதற்காக மீள் சுழற்சி செய்யப்பட்ட காகிதங்கள் பயன்படுத்தபடுகின்றன. 

ஓரு பெண் தான் வாழ்நாளில் சராசரியாக 15000 சானிடரி நாப்கின் உபயோகிப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. 15000 பருத்தியை நாம் பயன்படுத்துகிறோம் என்று தான் நாம் நினைத்துகொள்வோம். ஆனால் நம் கண்னுக்கு தெரியாத எத்தனையோ ரசாயனங்கள் இதில் இருப்பது மறைக்கபட்டு வருகிறது. பெரும்பாலான நாப்கின்கள் வண்ணம் போக்கிற ரசாயனங்களும் மீள்சுழற்சி செய்யப்பட்ட காகிதங்களாலும் தயாரிக்கபடுகின்றன. இதில் டயாக்சின் என்ற ரசாயனம் கலக்கபடுக்கிறது. மிகவும் சிறிதளவே இதில் கலக்கபடுவதாக தயரிப்பாளர்கள் கூறினாலும், இது கர்ப்பபையை பாதிக்கும் அளவிற்கு தீங்கானது என்று ஆய்வுகள் கூறுகிறது. சானிடரி நாப்கினில் ஈரத்தை உரிவதற்காக Hxcdf கலக்கபடுகிறது. இந்த ரசயானங்கள் நோய் தடுபாற்றலையும், கருவுதிறனையும் குறைக்ககூடியது. 

நாப்கின் வாங்குவதற்கு முன்பு:

பொதுவாகவே சானிடரி நாப்கின் அசுத்தமான இடங்களில் தான் வைக்கபடுகிறது. (கழிப்பறை ஃசிங்க் அடியில், கழிப்பறை மேசை மீது அல்லது பைக்குள் மற்ற பொருட்களின் நடுவில் குப்பை போல் வீசப்படுகிறது) ஒவ்வொரு பாக்கெட்டும் முறையாக சீல் செய்யபடுவது அவசியமாகும். இன்றைக்கு மார்க்கெட்டில் கிடைக்கும் பெரும்பாலான நாப்கின்கள் பிளாஸ்டிக் கவரில் பேக் செய்யபடுகிறது. ஒருமுறை திறந்தவுடனே இது தூய்மை கேடுக்கு பாதிப்புக்குள்ளாகிறது.

பெரும்பாலான நாப்கின் கவர்கள் ஒருமுறை திறந்தால் மீண்டும் சீல் செய்ய முடியாத நிலையிலே உள்ளது. நன்றாக பேக் செய்யப்பட்ட நாப்கின் பாக்கெட்டுகளை தேர்ந்தெடுத்து வாங்குவது அவசியம்.

மார்கெட்யில் கிடைக்கும் பெரும்பாலான நாப்கின்கள் செயற்கையான மூலதளங்களை கொண்டே செய்யபடுகிறது. இதில் இருக்கும் ரசாயனங்கள் உடல் பாதிப்புகளை விளைவிக்க கூடியது.

முதல் படுகை மிகவும் முக்கியமானதாகும். ஏனென்றால் தோலுடன் நேரடியாக தொடர்புள்ளது. நாப்கினின் முதல் படுகை காட்டனால் செய்யபட்டதே சிறந்ததாகும். பிளாஸ்டிக் அல்லது செயற்கையான மூல பொருட்களை கொண்டுள்ளதை அறவே தவிர்க்க வேண்டும். இதற்கு நாப்கின் பாக்கெட்டின் லேபில்லை சரிபார்த்து கொள்ளுங்கள். சானிடரி நாப்கின் பாக்கெட்டில் அதன் மூல பொருட்களை குறிப்பிடுவதை ஃஎப் டி ஏ கட்டாயம் செய்யவில்லை. இருபின்னும் முதல் படுகை காட்டனால் செய்யபட்டிருந்தால் அதை கண்டிப்பாக தயாரிப்பாளர்கள் குறிப்பிட்டு இருப்பார்கள். இல்லையென்றால் அது அவ்வாறு செய்யவில்லை என்று நாம் எடுத்து கொள்ள வேண்டும். 

நம்முடைய உடல்நலத்திற்கும் சௌகாரியத்திற்கும் மிகவும் முக்கியமான விஷயமாகும். சூடும், ஈரப்பதம் தேக்கமும் நுண்ணுயிர் கிருமிகளை வளர தூண்டும். இதனால் தான் மாதவிடாய்யின் போது தோலில் சொரியும் எரிச்சலும் ஏற்படுகிறது. பெண்களுக்கான நோய்களை விழைவிக்கும். பெரும்பாலான நுண்ணுயிர்கள் நேரடியாக உயிர்வளயில்லாமல் வாழ தக்க உயிர்வகையானது. இதனால் சானிடரி நாப்கின் காற்றோட்ட-மாக இருப்பது அவசியமாகும். இரண்டு மணிநேரத்திற்கு மேல் பயன்படுத்தினால் 107 நுண்ணுயிர்கள் வரை இருப்பதற்கு வாய்ப்புண்டு. 

நடுவில் இருக்கும் படுகைக்கு உரியும் தன்மை அதிகமாக இருத்தல் வேண்டும். உரியும் தன்மையிருந்தால் மட்டுமே தோலில்படாமல் இருப்பதை தடுக்க முடியும் அல்லது மிகவும் அசௌகரியமான உணர்வை ஏற்படுத்தும். 

நாப்கின் பயன்படுத்தும் போது நாம் செய்ய கூடிய தவறுகள் :

புதிய நாப்கினை பயன்படுத்துவதற்கு கைகளை கழுவாமல் உபயோகிப்பது. உபயோகிய நாப்கின்னை எடுத்துவிட்டு கை கழுவாமல் புதிய நாப்கின்னை பாக்கெட்யில் இருந்து எடுப்பது நுண்ணுயிர்களை பரவ செய்யும். 

பெரும்பாலான கழிப்பரைகள் இருட்டாகவும் ஈரமாகவும் இருப்பதால் நுண்ணுயிர்கள் எளிதாக நாப்கின்யில் தொற்றி கொள்ளும்.

காலாவதி தேதியை பார்க்காமல் வாங்குவது & காலாவதி தேதிக்கு நெருக்கமாக இருந்தாலும் அதை பயன்ப்படுத்தாமல் இருப்பது நல்லது. உணவு பொருட்களில் இருப்பது போல் எல்லா நாப்கின் பாகெட்களிலும் காலாவதி தேதி இருப்பதில்லை. இது காட்டன் என்பதால் காலாவதி தேதி அவசியம் இல்லை என்று தயாரிப்பாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் காலாவதி தேதி குறிப்பிட்டிருக்கும் நாப்கினை வாங்வது பாதுகாப்பானது. 

பொதுவாக சிறப்பு விற்பனையில் அல்லது இலவசமாகவோ தள்ளுபடி விலையில் விற்கப்படும் நாப்கின்களால் தரம் குறைந்த மூலபொருட்களை கொன்டு தயாரிக்கப்பட்டதாகும். இது கண்டிபாக சோதனைக்கு உட்படுத்தப்படாத நாப்கின்களாகும். இதை வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

சோதனை முயற்சி அடிப்படையில் பயன்படுத்துவது. புதிய தரவகைகள், புதிய பொருட்கள், புதிய முறைகள், புதிய மூல பொருட்கள் என்று புதியதாக மார்க்கெட்டில் நாப்கின்கள் வந்து கொண்டே தான் இருக்கும். 

வாசனை பொருட்கள் உள்ள நாப்கினை பயன்படுத்துவது& வாசனை பொருட்கள் கலந்த நாப்கின் பொதுவாக மருத்துவர்கள் ஊக்குவிப்பது இல்லை. இது உடல் நலதிற்க்கு பாதிப்பை ஏற்படுத்த கூடியது.

ஒவ்வொரு நாப்கினை இரண்டு மணி நேரத்திற்கு மேல் பயன்படுத்துவது& யுரோப், அமெரிக்கா போன்ற நகரங்களில் இருக்கும் பெண்களை காட்டிலும் ஆசியாவில் இருக்கும் பெண்கள் மாதவிடாய் சுழற்சியின் போது குறைவாகவே பயன்படுத்துகின்றன. உடல் நலத்தை பணயம் வைத்து பணத்தை சேமிப்பது ஆக்கபூர்வமான செயல் அல்ல. 
அதிகமாக உரியும் தன்மையுடைய நாப்கின் என்ற போதும் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்றுவது அவசியமாகும்.

பெரும்பாலான பாக்கெட் ஓரங்களில் ஈரம் பதம் உரியும் தன்மையை விளக்கும் அட்டவனை குறிப்பிட்டிருக்கும். அதற்கேற்றப்படி பயன்படுத்துவது நல்லது. சில நிறுவனங்களில் இரவு நேரங்களில் பயன்படுத்துவதற்கென நாப்கின்களை தயாரிக்கின்றன. அதாவது அதிக நேரம் பயன்படுத்தினாலும் பாதிக்காத வகையில் தயார் செய்யபடுகிறது. மேலும் நீளமான நாப்கின்னை பயன்படுத்தினாலும் கரை ஏற்படாது.

நாப்கின்களை பயன்படுத்துவதை பற்றி தெரிந்து வைத்திருப்பதை போல் அதை அப்புறபடுத்துவதை பற்றி தெரிந்துகொள்வதும் அவசியம். 

உபயோகபடுத்திய நாப்கினை டாய்லெட் பிளஷ்யில் போடுவது மிகவும் தவறான ஒன்றாகும். இதற்கு காரணம் ஒன்று அறியாமை மற்றொன்று வீட்டில் இருப்போர் மற்றவர்கள் குறிப்பாக ஆண்கள் பார்த்திரகூடாது என்பதற்காக இதை செய்கின்றன. மாதவிடாய் என்பது பெண் உடலில் ஏற்படும் இயற்கையானது என்ற எண்ணத்தை வளர்த்தி கொள்ள வேண்டும். உபயோகித்த நாப்கின்னை பேப்பரில் சுற்றி குப்பை தொட்டியில் போடவும். மேலும் குப்பை தொட்டிகளை அகற்றாமல் வைத்திருந்தால் கிருமிகள் தொற்றிகொள்ளும்.

உங்கள் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுங்கள்:

நாப்கின் என்பது நம் பாதுகாப்புக்கும், உடல்நலத்திற்கும்,இதை வாங்குவதற்கு எந்த தயக்கமும் காமிக்க வேண்டாம். காகிதத்தில் எழுதி கொடுப்பதோ அல்லது ஆண்கள் இல்லாத நேரங்களில் வாங்குவதோ அல்லது சத்தமில்லாமல் கேட்டு வாங்குவதையோ தவிருங்கள். உங்களின் பழக்கம் தான் பிள்ளைகளுக்கும் வரும் என்பதை மறவாதீர்கள். எந்த கூச்சமும் இல்லாமல் நாப்கினை வாங்குவதற்கு கற்று கொடுங்கள்.

எத்தனை பாதுகாப்பாக இருந்தாலும் கரை ஏற்படுவது சில சமயங்களில் தவிர்க்க முடியாது என்பதை தெளிவு படுத்துங்கள். இது இயல்பான ஒன்றே அதனால் இதை குறித்து ‘அவமான’ உணர்வு கொள்ள வேண்டாம் என்று நம்பிக்கை தாருங்கள்.

பள்ளிக்கு செல்லும் பிள்ளைகள் அவர்களுக்கு தேவையான நாப்கின்களை எடுத்து செல்லுமாரு பார்த்து கொள்ளுங்கள். தயக்கம் இல்லாமல் ஆசிரியரிடம் கேட்டு கொண்டு நாப்கினை மாற்றி கொள்வதற்கு பழக்கபடுத்துங்கள்.

ஆர்த்தி வேந்தனின் முகநூலிலிருந்து நன்றியுடன் மீள் பதிவுசெய்கிறோம்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்