/* up Facebook

Jan 3, 2014

பெண்சிசு/கரு கொலைகள் அதிகம் நடந்தால் அதன் பெயர் நல்லாட்சியா - பூவண்ணன்


    பெண் சிசுகொலைகள் அதிகம் நடக்கும் மாநிலமே  நல்லாட்சி நடக்கும் மாநிலம் -பரிவாரங்களின் போர் முழக்கம்
    நம் நாட்டின் முக்கியமான 10 குறைகள்,உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரட்சினைகள் என்ன என்று கேட்டால் நூற்றில் ஒருவர் கூட பெண் சிசுகொலைகளை அதில் சேர்க்க மாட்டார்கள்
     குறைந்தபட்ச மனிதத்தன்மை,வருங்காலத்தை பற்றி கவலைப்படும் யாரும் முதலில் வைக்க வேண்டிய பிரச்சினையை ஒரு பொருட்டே அல்ல என்று எண்ணும் நிலையில்  பெரும்பான்மை மக்கள் இருக்க முக்கிய காரணம் மத அடிப்படைவாதமும் அதன் அடிப்படையில் அரசியலில் உருவாகும் முழக்கங்களும்
     பல லட்சம் பெண் சிசுக்களை கருவிலேயே கொலை செய்வதில் முன்னணி வகிக்கும் மாநிலம் தான் நல்லாட்சியின் எடுத்துகாட்டு என்று போர் முழக்கங்கள் உரக்க கொட்ட துவங்கி விட்டன
     பெண் சிசுகொலை பற்றிய கேள்விகளே எழும்பாதவண்ணம் நல்லாட்சி நல்லாட்சி என்ற கூக்குரல்கள் இந்தியா முழுவதும் எழுப்பபடுகின்றது.
      மக்கள் ஆட்சியோ,மன்னர் ஆட்சியோ,சர்வாதிகாரமோ,எந்த ஆட்சியாக இருந்தாலும் ஆட்சியின் அடிப்படையான மக்கள் தொகை வளர்ச்சியில்  இயற்கையாக அமையும் பாலியல் சமநிலையை மாற்றும் செயற்கையாக பாலியல் சமமின்மையை உருவாக்கும்  பாலியல்ரீதியான சிசுகொலைகளை தடுப்பதில் இந்தியாவில் கடைசி இடங்களில் உள்ள ஆட்சி நல்லாட்சி என்று புகழப்படுவதில் இருந்தே சங்க பரிவாரங்கள் பெண்களுக்கு தரும் மதிப்பு என்ன என்பதை புரிந்து கொள்ளலாம்.

மிஸ்டர் சந்திரமௌலி சென்சுஸ் குழு தலைவர் என்ன சொல்றார்னா http://www.actionaid.org/

Only three major States, Gujarat, Bihar and Jammu & Kashmir have shown a decline in the Sex Ratio in Census 2011

 2001 ஒ 2011 ஒ ஆண் பெண் சதவீதத்தில் சில லட்சம் பெண் குழந்தைகள் குறைவதில் என்ன மாற்றமும் இல்லையே
    மோசமான ஆட்சிகள் என்று தூற்றப்படும் மாநிலங்களில் கூட இவ்வளவு பெண் குழந்தைகள் குறைவது இல்லையே.அதுவும் மோடிக்கு மிகவும் ஆதரவு இருக்கும் குஜராத் நகர்ப்புறம் கிராமங்களை விட பெண் சிசுக்களை கொல்வதில் இந்தியாவில் முதலிடத்திற்கு மிகவும் அருகில் தான்
http://censusindia.gov.in/…/profiles/en/IND024_Gujarat.pdf
  ஹிந்துத்வா ஆதரவாளர்கள் எதனால் குஜராத் மிக சிறந்த ஆட்சி நடைபெறும்  முதன்மை மாநிலம் எனும் வாதத்திற்கு ஆதரவாக பல புள்ளி விவரங்களை (உண்மையை பற்றி கவலைப்படாமல்)அள்ளி வீசுவார்கள்
  விஜயகாந்திற்கு பல ஆண்டுகள் முன்பாகவே சங்க பேச்சாளர்கள் புள்ளி விவரங்களை அடுக்குவார்கள்.
இஸ்லாமியர்கள் இவ்வளவு சதவீதம் அதிகரித்து விட்டார்கள் ,கிருத்துவர்கள் இவ்வளவு சதவீதம்,இப்படியே போனால் இன்னும் முப்பது ஆண்டுகளில் ஹிந்துக்கள் அவர்களை விட குறைவான எண்ணிக்கையில் தமிழகத்தில்,சென்னையில்,இந்தியாவில்
இருப்பார்கள் என்று பேசும் போது எவ்வளவு துல்லியமாக ஆராய்கிறார்கள் என்ற பிரமிப்பு வரும்
இன்றும் அதே போல தான் சங்க பரிவாரத்தின் பேச்சாளர்களும்,எழுத்தாளர்களும் பல கோணங்களில் எல்லா பிரட்சினைகளையும் அலசி ஆராய்கிறார்கள்.அனைத்திலும் மதமாற்ற சதியை கண்டுபிடிப்பதில் அவர்களுக்கு நிகர் அவர்களே தான்

  எந்த விஷயத்திலும் காரணங்களை அலசி ஆராயும் பரிவாரம்,அதன் தாக்கம் அதிகம் உள்ள பரிசோதனை கூட மாநிலங்களில்  சில லட்சம் பெண் குழந்தைகள் ஏன் குறைகின்றன என்பதை பற்றி ஏதாவது ஆராய்ந்திருக்கிறதா என்று எவ்வளவு தேடி பார்த்தாலும் ஒன்றும் கிடைக்கவில்லை.
   சில நூறு பெண்கள் வேறு மதத்தை சார்ந்தவர்களை திருமணம் செய்து கொள்வதால் பெரிய இழப்பு என்று கதறும் அறிவுஜீவிகள் ,கருவிலேயே கொல்லப்படும் லட்சக்கணக்கான பெண் குழந்தைகளை பற்றி கவலைபடாததர்க்கு காரணம் என்ன
     பெண்கள் எளிதில் மதம் மாறி விடுவார்கள்,லவ் ஜெஹாதில் விழுந்து விடுவார்கள் என்பதால் பலர் அவர்களை கருவிலேயே கொன்று விடுகின்றார்கள் என்றும் கூட ஹிந்டுத்வர்கள் வாதிடலாம்
   மற்ற மாநிலங்களோடு  ஒப்பிடும் போது/மதமாற்றிகள் வெற்றி பெற்ற மாநிலம் என்று அவர்களால் தூற்றப்படும் கேரளம்,அவர்களின் கைக்கூலிகள் என்று ஏசப்படும் திராவிட கட்சிகளின்  தாக்கம் உள்ள தமிழகத்தில் ஆண்-பெண் சதவீதங்கள் பெண் சிசுகொலைகள் நடக்காத நாடுகளின் சதவீதங்களுக்கு அருகில் இருப்பது எதை காட்டுகிறது  ஹிந்டுத்வத்தின் தாக்கம் குறைவாக இருக்கும் மாநிலங்களோடு ஒப்பிடும் போது ஹிந்துத்வா கட்சிகள்  வலுவாக ஆட்சியை பிடிக்கும் நிலையில்,பல்லாண்டுகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் மட்டும் லட்சகணக்கில் பெண் குழந்தைகள் குறைவது ஏன் என்பதை பற்றி சங்கம் என்று ஆராய்ச்சி செய்யும்.


சங்கத்தில் பெண்களுக்கு இடம் இல்லை என்பதால் பெண்கள் எண்ணிக்கையை பற்றி,பெண் சிசுகொலையை பற்றி சங்கம் கவலைப்படுவது கிடையாதா

  லட்சக்கணக்கில் பெண் கரு/சிசுகொலைகள் நடைபெறும் மாநிலமும்,அதை கண்டு கொள்ளாத ஆட்சியும் தான் சிறந்த மாநிலமும்,நல்லாட்சியுமா
   இந்த நிலை நாடு முழுவதும் ஏற்பட தான் அந்த மாநிலத்தை எடுத்துகாட்டாக எடுத்து கொள்ள சொல்லி கூக்குரல் எழுப்பபடுகிறதா
பெண் கருகொலைகளை பற்றி கவலைப்படாத,லட்சக்கணக்கில் பெண்கள் பிறக்கும் வாய்ப்பே இல்லாமல் அழிக்கபடுவதை தடுக்க இயலாதவர் தான் இந்தியாவை உய்விக்க வாராது வந்த மாமணி என்று வாய்கூசாமல்  போர்குரல் எழுப்ப எப்படி தான் மனசு வருகிறதோ.

நன்றி - திண்ணை

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்