/* up Facebook

Dec 2, 2013

விடுதலையான காஞ்சி மடாதிபதிக்கு பெண் எழுத்தாளரின் பகிரங்க வாக்குமூலம் சமர்ப்பணம்!


“காவி உடுத்தித் திரியும் காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரன், காவி உடுத்தத் தகுதியற்றவர்” என்கிற அளவுக்கு அவர்மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டிருந்தன. அவற்றில் ஒன்றுதான் சங்கரராமன் படுகொலை தொடர்பான குற்றச்சாட்டு.

நீதிதேவதை எந்த பணப் பெட்டிக்குள் சிறை வைக்கப்பட்டிருக்கிறாளோ தெரியவில்லை… இந்த கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காஞ்சி மடாதிபதிகள் உட்பட அத்தனை பேரும்“நிரபராதிகள்” என்று விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

ஆக, கொலையாளிகள் யார் என்று யாருக்குமே தெரியவில்லை. அவர்கள் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில், நீதி கிடைக்காத சங்கரராமன், இப்போது 2ஆவது முறையாக படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.

இந்த கொலைக் குற்றச்சாட்டு தவிர, ஜெயேந்திரன் மீது பல பாலியல் குற்றச்சாட்டுகளும் கூறப்பட்டிருந்தன. அவற்றின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? விசாரணை நடத்தப்பட்டதா? வழக்குப் பதிவு செய்யப்பட்டதா? ம்…ஹூ..ம்..! எதுவும் நடக்கவில்லை!

அதனால்தான், கொலை வழக்கிலிருந்து விடுதலையாகி, ஆனந்தப் பரவசத்திலிருக்கும் ஜெயேந்திரனின் பாதங்களில், அவருக்கு  எதிராக பிரபல பெண் எழுத்தாளர் அனுராதா ரமணன் அளித்த பகிரங்க வாக்குமூலத்தை சமர்ப்பிக்கிறோம்.

இதோ… அனுராதா ரமணனின் வாக்குமூலம்:
“சில ஆண்டுகளுக்கு முன் சங்கர மடத்திலிருந்து என்னை அழைப்பதாக சங்கர மடத்திற்கு நெருக்கமான ஒரு பெண் என்னை அழைத்தார். காஞ்சி சங்கராச்சாரியார்களை தெய்வமாக நினைக்கும் குடும்பத்திலிருந்து வந்தவள் நான். எனவே தெய்வமே என்னை அழைத்துள்ளதாக எனது தந்தை சந்தோஷப்பட்டார். உடனே செல்லுமாறு என்னைஅனுப்பி வைத்தார். நானும் மிகவும் சந்தோஷமான மன நிலையில் அந்தப் பெண்மணியுடன் காஞ்சிபுரம் சென்றேன்.

“சங்கர மடம் சார்பில் தொடங்கப்படவுள்ள ‘அம்மா’ என்ற பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றுவது தொடர்பாக என்னுடன் ஜெயேந்திரர் பேசினார். அவர் பேசியவற்றில் சிலவற்றை எனது குறிப்பேட்டில் நான் எழுதிக் கொண்டிருந்தேன். தற்செயலாக நான்நிமிர்ந்து பார்த்தபோது, என்னை அழைத்து வந்த பெண்ணுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார் ஜெயேந்திரர்.

“அவர்கள் இருவரும் நெருக்கமாக உட்கார்ந்து கொண்டு செய்த அசிங்கம் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது. அதிலிருந்து நான் சுதாரிப்பதற்குள், ஆன்மீகவாதியாக பேசிக் கொண்டிருந்த ஜெயேந்திரர் ஆபாசமாக பேசத்தொடங்கினார். அருவருப்பான சிரிப்புடன் அவர் என்னிடம் பேசிய வார்த்தைகள் மிகவும் அநாகரீகமானவை.

“அந்தப் பெண்மணியைப் போலவே என்னையும் ஒத்துழைப்பு தருமாறு அவர் கேட்டுக் கொண்டார். அதிர்ந்து போன நான் சட்டென எழுந்து விட்டேன். ‘சீ… நீயும் ஒரு மனுஷனா…?’ என்று வேகமாக கேட்டவாறே அங்கிருந்து கிளம்ப எத்தனித்தேன். உடனே அதிர்ந்த ஜெயேந்திரர், முன்கூட்டியே இவளிடம் (என்னிடம்) எல்லாவற்றையும் கூறவில்லையா என்று அந்தப் பெண்ணிடம் ஆவேசமாக கேட்டார். அவர் இல்லை என்றவுடன், மிகவும் அசிங்கமான வார்த்தைகளால் அந்தப் பெண்மணியை திட்டினார்.

“பின்னர் அதே வேகத்தில் என்னிடம் திரும்பி, ‘என்னுடன் ஒத்துழைத்துப் போனால் நல்லது. இங்கு நடந்தவற்றைவெளியில் கூற நினைத்தால், உனக்கும் 10 ஆண்களுக்கும் தொடர்பு உள்ளதாக கதை கட்டி உன் வாழ்க்கையையே சீரழித்து விடுவேன்’ என்று மிரட்டினார். ‘புருசனை இழந்த நீ என்ன விதவைக் கோலத்திலேயா இருக்கே… பூவும் பொட்டுமாகத்தானே இருக்கே…’ என்று கூறியவாறே என் உடலை வர்ணிக்க ஆரம்பித்துவிட்டார். அந்த அசிங்கத்தில் கூனிக் குறுகிப் போன நான் அங்கிருந்து எப்படியோ திரும்பி விட்டேன்.”

இவ்வாறு எழுத்தாளர் அனுராதா ரமணன் பகிரங்கமாக வாக்குமூலம் அளித்திருந்தார்.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்