/* up Facebook

Nov 5, 2013

வடக்கிலுள்ள பெண்களும் சிறுவர்களும்: பாலியல் தொந்தரவுகள், மனக்குறைகள் மற்றும் சவால்கள் - கண்காணிப்பு குழு

செப்டம்பர் 2013ல் கண்காணிப்புக்குழு வன்னிக்குப் பயணம் செய்து, பாலியல் வன்முறைகளினால் தப்பிப் பிழைத்தவர்கள் பெண் உரிமை ஆர்வலர்கள் மற்றும் பெண்கள் குழுக்களின் பிரதிநிதிகள் ஆகியோரை சந்தித்தார்கள். அவர்களுடன் நடத்திய நேர்காணல், வடக்கையும் மற்றும் கொழும்பையும் தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமை அமைப்புகள், மற்றும் அரசாங்க வட்டாரங்கள் என்பனவற்றிலிருந்து பெறப்பட்ட தகவல்களிலிருந்து, இந்த அறிக்கை தயாரிக்கப் பட்டுள்ளது. இந்த குழுக்களுடன் நாங்கள் மேற்கொண்ட பரஸ்பர சந்திப்பின்போது, கடந்த பல மாதங்களாக சிறார்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகிவரும் குழப்பமான போக்கை எங்களால் அறிய நேர்ந்தது. அதற்கு மேலதிகமாக நாங்கள் இராணுவத்தின் கரங்கள் மற்றும் அவர்களின் சொந்த சமூகத்தினர் ஆகியோரால் தொடர்ந்து தொந்தரவுகளுக்கும் துஷ்;பிரயோகங்களுக்கும் ஆளாகிவரும் யுத்த விதவைகள், தனிப் பெண்கள்,மற்றும் முன்னாள் பெண் போராளிகள் ஆகியோருடனும் பேசினோம்.
ஸ்ரீலங்காவின் ஆயுத மோதல்கள் ஒரு முடிவுக்குவந்து இரண்டு வருடங்கள் கடந்த பின்பு, 2011 டிசம்பரில் சர்வதேச நெருக்கடிக் குழு  ‘’ஸ்ரீலங்கா: வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள பெண்களின் பாதுகாப்பற்ற நிலமை’’ என்கிற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கை வன்னிப் பிரதேசத்தில் உள்ள பெண்களின் துர்ப்பாக்கிய நிலை பற்றி மிக விபரமாக விளக்கியிருந்தது, பாலியல் வன்முறைகள், கடத்தல் மற்றும் சுரண்டலுக்கு உள்ளாகும் இளம்பெண்கள், தங்கள் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்காக நடத்தும் போராட்டம், பெண்கள் தலைமையிலான வீட்டுடமைகள், பயம் மற்றும் அச்சுறுத்தல் மிகுந்த சூழலில் வாழும்பெண்கள், பாலியல் வன்முறைக்கு ஆளாகி மீண்டவர்களுக்கான உளவியல் பராமரிப்பு இல்லாமை,மற்றும் அந்தப் பிரதேசத்தில் நிலவும் கலாச்சாரத் தண்டனைகள் போன்றவை அதில் விரிவாக விளக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக சர்வதேச நெருக்கடிக் குழுவின் அறிக்கையில் பிரதானப் படுத்தப்பட்டிருந்த விடயங்கள், அரசாங்கத்தாலும் அதன் முகவர்களாலும் கவனிக்கப்படாமல் போயிருப்பதுடன், அதற்கான சகல பொறுப்புகளும் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளன. மேலும் பெண்கள் மீதான முறையான அடக்குமுறைகள் மற்றும் அவர்களின் பாதுகாப்பு பற்றிய இரக்கமற்ற அலட்சியம் என்பன ஸ்ரீலங்காவின் தென்பகுதியிலுள்ள பிரதான ஊடகங்களினால் தொடர்ந்தும் அடக்கி வாசிக்கப்பட்டே வருகிறது.
சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள்
பாலியல் வன்முறை பற்றிய விடயத்தில் சிறுவர்கள் இலக்கு வைக்கப்படுவது மிகவும் கவலை தரும் போக்காக உள்ளது. 2013 ஜனவரி மற்றும் செப்டம்பர் இடையேயான காலப்பகுதியில் மாத்திரம் கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் 7 – 8 வயதான சிறுமிகள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட நான்கு சம்பவங்கள் நடந்துள்ளன,  இது சமூகத்தின் தண்டனை விலக்கின் அளவு, மற்றும் வடக்கில் வாழும் சிறுவர்கள் மற்றும் பெண்களின் நாதியற்ற தன்மை, மற்றும் அடக்கு முறை, என்பனவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
2013 மே யில்  வவுனியா நெடுங்கேணியை சேர்ந்த ஒரு 7 வயதான சிறுமி தனது பாடசாலையிலிருந்து வீடு திரும்பும் வழியில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டாள். கிராமத்தவர்கள் அவளைக் கண்டபோது, அந்தப்பிள்ளை பலமாகத் தாக்கப்பட்டு அவளது காது மற்றும் வாய் என்பன கடித்துக் குதறப்பட்ட நிலையில் இருந்தாள். அந்தக் குற்றத்துக்காக கைது செய்யப்பட்டவன் வவுனியா கனகராயன்குளம் இராணுவ முகாமைச் சேர்ந்த ஒரு இராணுவ வீரன். அந்தப் பிள்ளையின் தாயாரிடத்தும் மற்றும் கிராமத்தவர்களிடமும்  அந்த இராணுவ வீரன் இதற்கு முன்பும் இவ்வாறான ஒரு சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தார்களாம் மற்றும் முந்தைய சம்பவம் தொடர்பாக அந்த வீரர் பிணையில் விடுதலை செய்யப்பட்டு இருந்ததாக செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அதேவேளை இராணுவ நபர்கள் மற்றும் பாதுகாப்பு விடயங்களுடன் தொடர்புள்ள நபர்கள், அவர்களால் மேற்கொள்ளப்படும் குற்றங்களிலிருந்து பெருமளவில் பாதுகாக்கப்படுகிறார்கள் அல்லது அவர்கள் செய்த குற்றங்களுக்கு தண்டனை பெறாமல் தப்பிக்கிறார்கள், அந்தப் பிரதேசத்தில் நிலவும் தண்டனை விலக்கு காலநிலை காரணமாக குற்றமிழைக்கும் பொதுமகன்கள் கூட மேலும் குற்றம் புரிய ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

2013 செப்டம்பரில் கோணாவில் கிளிநொச்சியை சேர்ந்து ஒரு 7 வயதுச் Women sexual crimeசிறுமி தனது அயலவரால் பாலியல் வல்லுறவுக்கு ஆளான அதேசமயம், கிளிநொச்சி ஜெயந்தி நகரை சேர்ந்த 7 வயதான மற்றொரு சிறுமி தனது சகோதரியின் கணவரானால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகியிருந்தாள். அந்தச் சிறுமி கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாள். உள்ளுர் செயற்பாட்டாளர்களின் கூற்றுப்படி, இந்த இரண்டு சம்பவங்களிலும் தொடர்புடைய குற்றவாளிகள் சில மாதத்துக்குள்ளேயே பிணையில் விடுதலையாகி தொடர்ந்தும் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியிலேயே வாழ்ந்து வருவதாகத் தெரிகிறது. உள்ளுர் ஆர்வலர்கள் மேலும் கூறுகையில் இந்தச் சமூகத்தை சேர்ந்த அநேகம் பேர்கள் வெகு சரளமாக சிங்களம் பேசுவதால், சட்டத்தை நிலைநிறுத்தும் அதிகாரிகளிடம் எந்த வித பாரிய குற்றத்துக்கும் ஆளாகாத வகையில் பேசித் தப்பித்துக் கொள்கிறார்கள் என்று தெரிவித்தார்கள்.
2012ம் ஆண்டு கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஆனைவிழுந்தானை சேர்ந்த 8 வயது சிறுமி நான்கு பேரைக் கொண்ட ஆண்கள் குழு ஒன்றினால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கில்கூட குற்றத்தின் தீவிரத்தை குறைப்பதற்காக காவல்துறையினருக்கு பணம் கொடுத்து குற்றவளிகள் தீவிரமான தண்டனைகளுக்கு ஆளாகாமல் தப்பித்துக் கொண்டார்கள். அந்தப் பெண் பின்னர் ஒரு விடுதியில் சேர்க்கப்பட்டாள், அவள் இன்னமும் அங்குதான் வாழ்ந்து வருகிறாள். ஆனால் அந்த கற்பழிப்பு குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டதுடன், இந்த வழக்கில் மேலும் எந்த முன்னேற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
மார்ச் 2012ல் யாழ்ப்பாண மாவட்டம் நெடுந்தீவை சேர்ந்த ஒரு 13 வயதுச் சிறுமி  ஒரு முன்னாள் ஈ.பி.டி.பி அங்கத்தவரால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டாள். குற்றவாளி இன்னமும்  சிறையில் உள்ளான்.
2013 ஒக்டோபர் 22ல், வவுனியாவில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் ஒரு மதகுருவினால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளான ஒரு பிள்ளையை பற்றிய விரிவான கதை ஒன்றை வீரகேசரி பத்திரிகை வெளியிட்டிருந்தது. அந்தப் பிள்ளை ஒரு ஆண், அவர் 2011ம் ஆண்டு வவுனியாவில் உள்ள அட்டம்பஸ்கன்ட சிறுவர் இல்லத்தில் அனுமதிக்கப்படும்போது அவருக்கு வயது எட்டு. அவர் நான்கு பேர் தன்னை தன்னை பிடித்துக் கொண்டிருக்கும்போது அட்டம்பஸ்கன்ட கல்யாணதிஸ்ஸ தேரர் தன்னை துஷ்பிரயோகம் செய்தார் எனத் தெரிவித்தார். பல தடவைகள் தனது மகனைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டபோது. அந்தப் பிள்ளையின் தாயார் அரசாங்க அதிகாரிகளிடமும் மற்றும் காவல்துறையினரிடமும் முறைப்பாடு செய்ததின் பின்னர், அந்தப்பிள்ளை டிசம்பர் 2012ல் தனது தாயாருடன் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. சிறுநீர் கழிக்கும்போது வலி ஏற்படுவதாக அவர்புகார் கூறியதையடுத்து  அவர் வவுனியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார், அங்குதான் அவர் பரந்த அளவில் துஷ்பிரயோகத்துக்கு உள்ளானது தெரியவந்தது. அந்த தாய் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளது, அந்த துறவி தன்னை கெட்ட வார்த்தைகளால் திட்டியதோடு. இராணுவம்,காவல்துறை, மற்றும் சி.ஐ.டியினர் தனது பக்கம் இருப்பதாக தன்னை அச்சுறுத்தியதாக. அந்த தாயும் அவரது பிள்ளையும் இப்போது  கொழும்பிலுள்ள தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் கவனிப்பில் இருப்பதாக தெரியவருவதுடன் மேற்குறித்த சிறுவர் நிலையத்தை சேர்ந்த மேலும் 27 சிறுவர்கள் மேலதிக பாதுகாப்புக்காக இங்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்தின் கோரிக்கைக்கு முரணாக, எப்பொழுதும் அதிகரித்துவரும் இராணுவத்தின் பிரசன்னம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், சமுதாயங்களின் சமூக இழைகளைச் சிதைப்பதுடன் இந்தப் பிரதேசதங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் போராட்டத்தை மேலும் மோசமடையச் செய்கிறது. இந்த வருடத்தின் முற்பகுதியில் விசேடமாக அறிவிக்கப்பட்ட ஏராளமான பாலியல் குற்றங்கள் யாவும் அத்தகைய குற்றங்களின் வன்முறைத் தன்மையை வகைப்படுத்துகின்றது.
 ஆகஸ்ட் 2013ல் பூனறியானைச் சேர்ந்த பெண் ஒருவர்,காக்கி காற்சட்டையும் பச்சை ரீ சேட்டும் அணிந்திருந்த மனிதர்கள் இருவரினால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு மரணமடையும்படி விட்டுச்சென்றதாகக் கூறப்பட்டது. அந்த மனிதர்களில் ஒருவன் அவளது மார்பின்மீது அமர்ந்திருக்க அதேவேளை மற்ற மனிதன் தொடர்ந்து அவளைக் கற்பழித்ததாக தெரிகிறது. அவள் கிளிநொச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபிறகு,இராணுவ ஆட்கள் அவளை உள்ளுர் முகாமுக்கு அழைத்துச்சென்று அவளுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்கினார்களாம். அந்தப்பெண் பாலியல் வல்லுறவு நடைபெற்று ஒரு மாதத்தின் பின்னர், உள்ளக இரத்தப் போக்கு காரணமாக கிளிநொச்சி வைத்தியசாலையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டதன் பின்னரே, உள்ளுரிலுள்ள சமூக ஆர்வலர்கள் இந்தச் சம்பவம் பற்றி அறிய நேர்ந்தது. தாக்குதலை தொடர்ந்து ,இராணுவம் ஒரு உள்ளுர் மீனவனை இந்த பாலியல் குற்றத்தை புரிந்ததாக குற்றம் சுமத்தி அவனை காவல்துறையினரிடம் கையளித்தது. எனினும் அவளுடைய காயங்களின் தன்மை ஒன்றுக்கு மேற்பட்ட தாக்குதல்காரர்கள் இருந்ததை நன்கு அடையாளப்படுத்துகிறது, அவளது தாக்குதல்காரர்களுடைய ஆரம்ப அடையாளம் பற்றிய விளக்கம் எதையும் கொண்டிராத அந்த மீனவன் தற்போது சிறைக்காவலில் வைக்கப்பட்டுள்ளான்.
2010ல் கிளிநொச்சி மாவட்டம் விஸ்வமடுவில் உள்ள 22 வயதுப் பெண்ணொருவர் 4 இராணுவ ஆட்களால் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளானார். பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்த ஒரு பெண் மலையகத்தை சேர்ந்தவராகையால் நன்கு சிங்களம் பேசக்கூடியவராக இருந்தார், அதனால் இராணுவத்தினர் அடிக்கடி அவர்களது வீட்டுக்கு வந்து அந்தப்பெண்ணுடன் அரட்டையடித்துச் செல்வார்கள்.2010, ஜூன் 6ந்திகதி இரவு, அன்றைய பகல்  வயதான அந்த வாடகைக்கு குடியிருக்கும் பெண்ணுடன் உரையாடல் நடத்த அவர்களது வீட்டுக்கு வந்த சில இராணுவ வீரர்கள் திரும்பவும் மதுபோதையில் சாதாரண உடையில் அவர்களது வீட்டுக்கு வந்தார்கள். அவர்கள் பாதிக்கப்பட்ட யுவதியின் சகோதரனை அடித்தனர். அவளது சகோதரனை வீட்டைவிட்டு துரத்திய பின்னர், இராணுவத்தினர் அந்த 22 வயதுப் பெண்ணை அருகிலிருந்த புதருக்குள் இழுத்துச்சென்று கற்பழித்தார்கள். பின்னர் அவர்கள் அவளை அந்த இடத்திலேயே போட்டுவிட்டு தங்கள் தளத்துக்கு திரும்பிவிட்டார்கள். அது ஒரு மழைநாளாக இருந்தபடியால் முகாமை நோக்கி நடந்திருந்த அவர்களுடைய காலடித்தடங்கள் சேற்றில் தெளிவாகத் தெரிந்தன. ஒரு அடையாள அணிவகுப்பைத் தொடர்ந்து விஸ்வமடு காவல்துறையினர் அந்த 4 மனிதர்களையும் கைது செய்தனர். 6 மாதங்கள் வரை சிறைக்காவலில் வைக்கப்பட்டிருந்த அவர்கள் பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்கள். அந்த குற்றவாளிகளில் ஒருவன் நீதவான் நீதிமன்ற விசாரணை அமர்வுகள் பலவற்றுக்கு வருகை தரவில்லை மற்றும் அவனது இருக்குமிடம் எதுவென்று இன்னமும் தெரியவில்லை.இந்த வழக்கு இப்போது உயர் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தப்பட்டுள்ளதுடன் தீர்ப்பும் வழங்கப்பட உள்ளது.

வெகுசமீபத்தில் வவுனியா மாவட்டம் நெலுக்குளத்தில் இருநViolenceagainstwomen்து இடம்பெயர்ந்த, 47 வயதான ஒரு பெண்ணின் சிதைந்து உருக்குலைந்த உடல் ஒன்று யாழ்ப்பாண நகரத்தில் உள்ள நாச்சிமார்கோவில் தேர்நிறுத்தி வைக்கும் அறைக்குள்ளிருந்து 2013 ஒக்டோபர் 17 ந்திகதி கண்டுபிடிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் உள்ள வைத்தியப் பகுதியினர் அந்தப் பெண் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டபின்னர் அமிலம் ஊற்றப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்கள். அந்தப் பெண் யாழ்ப்பாணம் திருக்குடும்பக் கன்னியர் மடத்தில் வசித்து வந்துள்ளாள் என்றும் மற்றும் போரினால் உளவியல் ரீதியான அதிர்ச்சியினால் பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த வருடம் ஒக்டோபர் மாதம் 3 ந்திகதி யிலிருந்து அவள் காணாமற் போயிருப்பதாகவும் அறியமுடிகிறது.
இந்த வருடம் பெப்ரவரி மாதம் மனித உரிமைகள் கண்காணிப்பகம், தமிழீழ விடுதலைப்புலி அங்கத்தவர்கள் அல்லது ஆதரவாளர்கள் என்கிற சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள காவல் கைதிகள்மீது பாலியல் வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக குறிப்பிட்டு கண்டிக்கத்தக்க ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது.
மார்ச் 2013ல் ’’மோதல்களில் பாலியல் வன்முறைகள்’’ என்கிற தலைப்பில் ஐநா பொதுச் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை ஒன்றினைபற்றி பேசும்போது ஐநா பொதுச் செயலாளர் பாலியல் வன்முறைகள் சம்பந்தமான குற்றங்கள், பாலியல் தொந்தரவுகள் மற்றும் துஷ்பிரயோகங்கள், மற்றும் ஸ்ரீலங்காவின் வடபகுதியில் உள்ள இராணுவ பிரசன்னம் என்பனபற்றி தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டார். எனினும் ஸ்ரீலங்கா அரசாங்கம், ஜனவரி 2007 மற்றும் மே 2012 வரை பாலியல் வன்முறைகள் சம்பந்தமாக 11 சம்பவங்கள் மட்டுமே இராணுவ நபர்களால் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர்கள் அனைவருக்கும் எதிரான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்திருப்பதாகவும் அவர் அங்கு குறிப்பிட்டார்.
இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரூவான் வணிகசூரியா ,சிறுபான்மை உரிமைகள் குழு மற்றும் முன்னைய மனித உரிமைகள் கண்காணிப்பகம் என்பனவற்றின் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருப்பவைகளை முற்றாக நிராகரித்தார். மோதல் நடைபெற்ற சமயத்தில்(ஜனவரி 2007 முதல் மே 2009வரை) பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த ஏழு பேர்கள் பாலியல் வன்முறை சம்பவங்களில் தொடர்புபட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார். மோதலுக்கு பின்னான காலப்பகுதியில் (மே 2009 – மே 2012) பத்து வீரர்கள் பாலியல் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். எனினும் அவரது குறிப்பில் இராணுவ வீரர்கள் ஈடுபட்டிருந்த குறிப்பிட்ட சம்பவங்களையோ, அல்லது அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சட்ட அல்லது  உள்ளக ஒழுங்கு நடவடிக்கைகளின் நிலை பற்றிய விபரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

நன்றி - தேனீ இணையம்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்