/* up Facebook

Nov 7, 2013

வடக்கிலுள்ள பெண்களும் சிறுவர்களும்: பாலியல் தொந்தரவுகள், மனக்குறைகள் மற்றும் சவால்கள் -கண்காணிப்பு குழு - பாகம் - 2

குடும்பத்துக்கு தலைமை தாங்கும் பெண்கள் மீதான பாலியல் தொந்தரவுகள்
sexual_crimeமுல்லைத்தீவில் இடம்பெற்ற கீழே குறிப்பிடப்படும் சம்பவம் வன்னியில் உள்ள பெண்கள் எதிர்கொள்ளும் பலவீனம்; மற்றும் பாதுகாப்பின்மையை வெகு தெளிவாக விளக்குகிறது, மற்றும் அவர்களின் சங்கடமான சூழ்நிலையையும் அம்பலப்படுத்துகிறது. செப்டம்பர் மாத நடுப்பகுதியில் 19 வயதான ஒரு பெண் பாடசாலையிலிருந்து வீட்டுக்கு நடந்து செல்லும் வழியில் ஒரு குடிகாரனால் தடுத்து நிறுத்தப்பட்டாள்,அவன் அவளுடைய மார்பகங்களை தொட முயன்றுள்ளான், இந்தச் சந்தர்ப்பத்தில் அவள் தனது செருப்பால் அவனை அடித்ததோடு கூச்சலிட்டு கத்தியுள்ளாள், அவளது அலறல் ஒரு கிராமத்துப் பையனை அந்தக் காட்சிக்கு இழுத்து வந்தது,அவன் அந்த குடிகார விலங்கை துரத்தியடித்துள்ளான். அவள் அதை தனது பாடசாலை அதிபரிடம் முறையிட அதிபரும் தன் பங்குக்கு அவள் சார்பாக காவல்துறையினரிடம் புகார் செய்துள்ளார். பின்னர் அந்தச் சம்பவம் பற்றி விசாரிக்க காவல்துறையினர் ஒரு புலனாய்வு அதிகாரியை அனுப்பியபோதுதான், குடிகார மனிதனும் புலனாய்வு அதிகாரியும் ஒரே ஆள்தான் என்பதை அவளால் அறிய முடிந்தது. தான் ஒவ்வொரு நாளும் பாடசாலைக்கு அதே வழியால்தான் செல்லவேண்டும் என்பதால் இதை வேறு யாரிடமும் சொல்ல அவளுக்கு பயமாக இருந்தது.
மற்றொரு கவலை தரும் போக்கு என்னவென்றால், யுத்த விதவைகள், முன்னாள் பெண் போராளிகள், மற்றும் காணாமற் போயுள்ள ஆண்களின் மனைவிமார்கள் ஆகியோருக்கு இரவு வேளைகளில் வரும் தொலைபேசி அழைப்புகளும் மற்றும் குறுந்தகவல்களும் அதிகரித்து வருவதுடன், பாதுகாப்பு தரப்பினர் அவர்களுடைய வீடுகளுக்கு அடிக்கடி விஜயம் செய்வதும் அதிகரித்து வருகிறது. இந்தப் பெண்கள் புகார் செய்வது என்னவென்றால் வழமையாக அடிக்கடி இரவில் வரும் தொலைபேசி அழைப்புகள் உள்ளுர் காவல் நிலையத்திலிருந்து வெளிப்படுவது தற்போதைய நிலமைக்கு மேலும் அச்சத்தையும் மற்றும் பாதுகாப்பின்மையையும் அதிகரிக்க வைக்கிறது என்று. இந்த அநாமதேய தொலைபேசி அழைப்புகள் பாலியல் வெளிப்பாடுகளை உள்ளடக்கியுள்ளன, மற்றும் இராணுவத்தினரும் மற்றும் புலனாய்வுப் பிரிவினரும் அவர்கள் பகுதிக்கு சமீபத்தில் திரும்பிய உள்ளக இடம்பெயர்ந்தவர்களின் குடும்ப விபரங்கள் மற்றும் தொடர்பு கொள்ளும் விபரங்கள் என்பனவற்றை பதிவு செய்த பின்னரே இது வழக்கமாக ஆரம்பித்துள்ளது. தொலைபேசியில் அழைப்பவர்கள் கொச்சை தமிழில் பேசி பெண்களுக்கு அழைப்பு விடுக்கிறார்களாம். ஒரு பெண், மூன்று பிள்ளைகளின் தாய் அவளது கணவன் மன்னாரில் வைத்து 2008ல் காணாமல் போயுள்ளான், அவள்  உள்ளுர் காவல் நிலையத்திலுள்ள பொறுப்பதிகாரியினால் (ஓ.ஐ.சி)தனக்கு நேர்ந்துள்ள தொந்தரவு பற்றி குறிப்பிடுகையில் தனது வீட்டை அடிக்கடி கடந்து செல்லும் அவர், அவளை வெளியே அழைத்து அவளுடன் உரையாடலில் ஈடுபட முயற்சி செய்யும் வகையில் அவளது திருமண நிலை, மற்றும் உறவுகள் பற்றி விசாரிப்பாராம், அது தன்னை மிகவும் பாதிப்பதாகவும் மற்றும் பொருத்தமற்றதாகவும் இருப்பதாகவும் அவள் தெரிவித்தாள்.
உள்ளுர் பெண்ணுரிமை ஆர்வலர்கள், பிரதானமாக பெண்கள் மற்றும் அங்கவீனர்களாக உள்ளவர்கள் பயனாளிகளாக உள்ள சில இந்திய வீடமைப்பு திட்டங்கள் எப்படி உள்ளன என்று எங்களிடம் தெரிவித்தார்கள். இந்தக் குடியிருப்புகள் குறிப்பாக திருட்டு, குற்றம், மற்றும் விபச்சாரம் என்பன உருவாவதற்கு சாதகமாக உள்ளதாக அவர்கள் சொன்னார்கள். பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் பலவற்றில் அந்தப் பெண்களுக்கு வாழ்க்கை செலவுக்கு போதுமான சம்பாத்தியத்தை தேட முடியாததால் பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுகிறார்கள். ஒரு சில இயலுமான உடல் வலுவுள்ள ஆண்களே இத்தகைய சமூகங்களுக்கு உதவவும் பாதுகாப்பாக வைத்திருக்கவும் இருப்பதால், இந்த சமூகங்கள் குறிப்பாக நலிவடைந்தனவாக உள்ளன. மன்னார் மற்றும் முல்லைத்தீவு பகுதிகளிலுள்ள இத்தகைய குடியிருப்புகள், பாலியல் தொழிலுக்கு உள்ளுரில் மோசமானவை எனப் பெயரெடுத்துள்ளன. இதன் விளைவாக இந்தப் பகுதிகளில் வாழும் பெண்கள் சுரண்டல் மற்றும் தொந்தரவுகளுக்கு எளிதில் இரையாகவேண்டி உள்ளது.
கிளிநொச்சியில் நாங்கள் அறிந்தது இராணுவ வீரர்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்று ஒரு வருடமோ அல்லது சற்று கூடுதலோ கழிந்த பின்பு திரும்பவும் வருவதற்காக, அநேக தமிழ் பெண்கள் தங்கள் பகுதிகளில் உள்ள முகாம்களில் உள்ள இராணுவ வீரர்களை கல்யாணம் செய்யும்படி கட்டாயப்படுத்தப் படுகிறார்கள் என்று.
அதேவேளை ஆர்வலர்கள் தெரிவித்தது இத்தகைய திருமணங்களை தடுப்பது மிகவும் கடினமாக உள்ளது ஏனென்றால் இராணுவ வீரர்களை மணந்த எல்லாப் பெண்களுமே தங்கள் பதின்ம வயதின் முடிவுகளில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு சந்தர்ப்பங்களில் இத்தகைய திருமணங்களை புரிந்த வீரர்கள் ஏற்கனவே திருமணமானவர்கள் ஆக இருந்தார்கள்.
மது பாவனை வன்னியில் மற்றொரு முக்கிய பிரச்சினையாக உள்ளது, இந்தப் பிரதேசத்தில் இருக்கும் அதி உயர் இராணுவ பிரசன்னம் காரணமாக பல மதுபான நிலையங்கள் ஆங்காங்கே முளைத்துள்ளன. எனவே அந்தப் பிரதேசத்தில் வாழும் உள்ளுர்வாசிகளுக்கு மதுபானத்தை பெறுவதற்கு இலகுவான வழிகள் கிடைத்துள்ளன, இதன் விளைவாக, பெண்களுக்கும் மற்றும் சிறுவர்களுக்கும் இந்த சமூகத்தில் பாதுகாப்பற்ற நிலை தோன்றியுள்ளது
.மேலும் அந்தப் பிரதேசத்தில் உள்ள பெண்கள், எப்படி தங்களை கடந்து செல்லும் சிறுவர்களிடம் தங்களுக்கு வேண்டிய மதுபானத்தை வாங்கித் தரும்படி இராணுவத்தினர் பணம் கொடுக்கிறார்கள் என்பதை தெரிவித்தார்கள். தங்கள் பிள்ளைகளுக்கு இளம் வயதிலேயே மதுபானம் போன்ற தீயவைகளின் தொடர்பு ஏற்பட்டால் நாளடைவில் அந்த இளம் வயதிலேயே அவர்கள் மதுபானத்தை நுகரத் தொடங்கிவிடுவார்கள், அது சமுதாயத்தின் சமூக இழைகள் மேலும் சிதைவடைய வழி வகுக்கும் என அவர்கள் அஞ்சுகிறார்கள்.
சர்வதேச நெருக்கடிக் குழுவின் அறிக்கை கூட மதுபான நுகர்வு அதிகரித்து வருவது அந்தப் பிராந்தியத்தில் பாலியல் வன்முறைகள் மற்றும் தொந்தரவுகள் அதிகரிப்பதற்கு கணிசமான பங்களிப்பை செய்துள்ளது என வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இதை எங்களுடன் பேசிய ஆhவலர்களும் வலியுறுத்தினார்கள். சட்டவிரோதமான மதுபானமான கசிப்பு அளவுக்குமீறிக் கிடைப்பதுதான் இத்தகைய சம்பவங்கள் நடப்பதற்கான பிரதானமான காரணம் எனத் தெரிவித்த அவர்கள், மேலும் குறிப்பிட்டது இந்த சட்டவிரோத கசிப்பு விநியோகஸ்தர்களிடம் இருந்து பணம் பெறுபவர்களின் பட்டியலில் இடம்பெறும் காவல்துறையினர், கசிப்பு மறைவிடங்கள் மீது சோதனை நடத்தப்போவதை முன்கூட்டியே இந்த கசிப்பு வியாபாரிகளுக்கு அறிவித்து எச்சரிக்கை செய்துவிடுகிறார்கள் என்று

பாலியல் தொழிலுக்காக ஆட்கடத்தல்
கொழும்பில் மற்றும் மத்திய கிழக்கில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக seuall crime-1சாக்குப் போக்குகள் கூறி வன்னியில் உள்ள பெண்களை கடத்துவது மற்றும் சுரண்டுவது போன்றவைகள் நடத்தப்படுவதாக அறியப்படுகிறது. இதற்காக இடைத் தரகர்கள் அல்லது முகவர்களின் தொலைபேசி எண்கள் கிளிநொச்சியின் கிராம பகுதி பேரூந்துகளில் முக்கியமாக காட்சிப்படுத்தப்படும். ஒரு விண்ணப்பதாரரின் நெருங்கிய குடும்பத்திற்கு 200,000 ரூபா ஸ்ரீலங்கா பணம் (முன்னர் 50,000 ரூபா) வழங்குவதாக வாக்குறுதி வழங்கப்படும். ஒரு சந்தர்ப்பத்தில் கிளிநொச்சி, ஆனைவிழுந்தானை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாய் அப்படியான ஒரு முகவரினால் முச்சக்கர வண்டியொன்றில் அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் அவர் கொழும்பிலிருந்தும் அதற்குப் பிறகு திருகோணமலையிலிருந்தும் தனது வீட்டுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியுள்ளார். அதன்பின் அவர் கிளிநொச்சி காவல்துறையினரால் விபச்சாரக் குற்றத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.
வேலை பெற்றுத் தருவதாக பொய்க்காரணம் கூறும் தொலைபேசி இலக்கங்களில் ஒன்றை அழைத்தபோது, கடவுச்சீட்டு, மற்றும் தேவையான பிற சான்றிதழ்களை பெறுவதற்கு செலவிடப்படும் தொகை இந்த 200,000 ரூபாவிலிருந்து கழித்துக் கொள்ளப்படும், மற்றும் மிகுதிப் பணம் வேலைக்காக நாட்டைவிட்டு வெளியேறுபவரின் அடுத்த நெருங்கிய உறவினரிடம் வழங்கப்படும் என்று எங்களிடம் சொல்லப்பட்டது. எங்களுக்கு மேலும் கொழும்பு, மருதானையில் உள்ள ஒரு அலுவலகத்துக்கு செல்லும் வழி சொல்லப்பட்டு, மேலதிக விபரங்களை அங்குள்ள முகவர் ஒருவரை சந்தித்து அவரிடம் பெறலாம் என்றும் கூறப்பட்டது.
இந்த மாத ஆரம்பத்தில் ஒருங்கிணைந்த பிராந்திய தகவல் வலையமைப்பினால், (ஐ.ஆர்.ஐ.என்) வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில், வடக்கை சோந்த பெண்கள் தங்களுக்கு கிடைக்கும்  மட்டுப்படுத்தப்பட்ட வாழ்வாதார தெரிவுகள் காரணமாக  வியாபார ரீதியான பாலியல் தொழிலில் ஈடுபடுவதற்கு கட்டாயப் படுத்தப்படுகிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் பெண்கள் தலைமையேற்று நடத்தும் குடியிருப்புகளின் எண்ணிக்கை 59,000 என்றும் தரப்பட்டுள்ளது. ஜூலை 2009ல் முன்னாள் உள்ளக இடம்பெயர்ந்தவர்கள் முகாமில் நடைபெறுவதாக கூறப்பட்ட ஒரு விபச்சார மோசடி பற்றிய ஒரு கேள்விக்கு கோபம் கொப்பளிக்கும் பதில், ஐக்கிய நாடுகள் சபையின் ஸ்ரீலங்காவின் நிரந்தரப் பிரதிநிதியும் சமீபத்தில் அதன் ஆறாவது குழுத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி பாலித கோஹன்னவிடமிருந்து வெளிப்பட்டது, அவர் இந்தக் குற்றச்சாட்டுகளை வெறும் குப்பை என்று கூறியதுடன்’’ அவர்கள் (இராணுவம்) விரும்பியிருந்தால் வழியிலுள்ள ஒவ்வொரு பெண் மீதும் பாலியல் வல்லுறவு புரிந்திருக்கலாம்;;;’’ மற்றும் ‘’ஒரு ஒற்றைப் பெண்கூட பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படவில்லை’’ என்றும் குறிப்பிட்டார்.

முன்னாள் பெண் போராளிகள் எதிர்கொள்ளும் மனக்குறைகள்
வன்னியில் உள்ள மதகுரு ஒருவரினால் நடத்தப்படும் இல்லம் ஒன்றில் வாழும், தங்கள் 20 வயதுகளில் இருக்கும் முன்னாள் இளம் பெண்போராளிகளான ஒரு குழுவினருடன் பேசுகையில் நாங்கள் கண்டது அவர்களின் உள்ளடக்கமாக அவர்கள் காண்பது அவர்களின் கூரையின் கீழுள்ள அந்த நான்கு சுவர்களை மாத்திரமே என்று. அவர்கள் தாங்கள் தொந்தரவுகளுக்கும் மற்றும் பலவிதமான கேள்விகளுக்கும் இலக்காகும் சாத்தியம் இருப்பதால் தங்கள் வீடுகளுக்கு சென்றுவர அஞ்சுகிறார்கள்.
ஆரம்பத்தில் 2010ல் அவர்கள் விடுதலையான உடனே, அவர்கள் ஒவ்வொரு மாதமும் உள்ளுர் காவல் நிலையத்தில் கையொப்பமிடுவது, தனிப்பட்ட மற்றும் குடும்ப விபரங்களை கேட்டு புலனாய்வு பிரிவினர் அடிக்கடி வீடுகளுக்கு வருகை தருவது, மற்றும் காவல்துறையினருக்கு சோதனைச் சாவடிகளில் காண்பிப்பதற்காக தாங்கள் விடுதலையானதை நிரூபிக்கும் அத்தாட்சிக் கடிதத்தை எப்போதும் கொண்டு செல்வது போன்ற பலவித சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடக்கவேண்டியவர்களாக இருந்தார்கள். அதேவேளை இந்த நடவடிக்கைகளில் சமீப காலமாக ஒரு தளர்வு தெரிவதாக அவர்கள் தெரிவித்தார்கள், அவர்களது பயணங்கள் மட்டுப்படுத்தப்பட்டதாக உள்ளதுடன் வீட்டுக்குள்ளேயே தாங்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக அவர்கள் உணர்கிறார்கள்.

மக்கள் தொகை கட்டுப்பாடுகளை உட்புகுத்துவது சம்பந்தமான சர்ச்சை
செப்டம்பர் 2013ல், சமூக நிர்மாணிப்பாளர்கள் (ரி.எஸ்.ஏ) கிளிநொச்சியில் உள்ள மூன்று கிராமங்களில் கட்டாய மக்கள் தொகை கட்டுப்பாடு நடந்ததை விபரமாக வெளிப்படுத்தியுள்ளார்கள். இந்த அறிக்கையும் அந்த அறிக்கையை தொடர்ந்து 2013 ஒக்ரோபரில் மேற்கொண்ட ஒரு பின்தொடர்தல் அறிக்கையில், கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வெராவில், வலைப்பாடு மற்றும் கெராஞ்சி ஆகிய கிராமங்களை சேர்ந்த பெண்கள் உற்பத்தி பெருக்கம் மற்றும் பெண்ணுரிமை என்பனவற்றை மீறும் வகையில் மக்கள் தொகை கட்டுப்பாடு உட்புகுத்தல்களை ஏற்றுக்கொள்ளும்படி கட்டாயப்படுத்தப்பட்டார்கள் என்பது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. ரி.எஸ்.ஏ மேலும் தெரிவிப்பது, இந்த கிராமங்களை சேர்ந்த பெண்களுக்கு இந்த உட்புகுத்தலுக்கு முந்திய பராமரிப்பு மற்றும் தகவல்கள் மிகக் குறைந்த அளவிலேயே வழங்கப்பட்டன என்று.
எனினும் உள்ளுர் ஆர்வலர்களை இது விடயமாக சந்தித்த சுகாதார அதிகாரிகள், குறிப்பிட்ட ஒரு இனத்தை சேர்ந்த சமூகத்தையே கட்டுப்படுத்துவதற்காக திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கும் அறிக்கைகளை நிராகரித்துள்ளார்கள். மேலும் இந்த திட்டம் அதற்கே உரிய சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தவில்லை என்பதை ஒப்புக்கொண்ட அதிகாரிகள், போதுமானளவு அலுவலர்கள் இல்லாத காரணத்தால் மிகவும் குறைவான தகுதியுள்ள நிலையில் அவை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்கள். அவர்கள் மேலும் தெரிவிக்கையில் உண்மையில் இது மிகவும் தீவிரமான நிருவாக அக்கறையை கொண்டுள்ளதால் அதற்கான தீர்வு உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும், மற்றும் அது சம்பந்தமாக தொடரவேண்டிய வேலைகளை தாங்கள் உடனடியாக மேற்கொள்வதாக தெரிவித்தார்கள், (அதாவது உள்ளுர் மொழியில் அதன் பக்கவிளைவுகளையும் அதற்காக எடுக்கவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளாக கிடைக்ககூடிய கருத்தடை சாதனங்கள் பயன்படுத்தவதையும் விளக்கி துண்டுப் பிரசுரங்களை அச்சடித்து வினியோகிப்பதுடன், பொது சுகாதார கண்காணிப்பாளர்கள் மற்றும் பொதுசுகாதார மருத்துவமாது ஆகியோர் ஊடாக விழிப்புணர்வு உருவாக்க முயலுவதுடன் ஆண்களையும் தாய் சேய் பாதுகாப்பு வகுப்புகளில் கலந்து கொள்ளச் செய்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது).
ஸ்ரீலங்காவில் யுத்தம் நிறைவடைந்து நான்கு வருடங்கள் கடந்துவிட்ட போதிலும், பெண்கள் மற்றும் சிறுவாகள் முன்னெப்போதும் இல்லாதவாறு மிகவும் பலவீனர்களாகவும் மற்றும் பாதுகாப்பற்றவர்களாகவும் உள்ளனர். அதிக எண்ணிக்கையிலான பெண்கள் தலைமையேற்கும் குடும்பங்களிலுள்ள பெண்கள் (அதாவது யுத்த விதவைகள், காணாமற் போனவர்கள் மற்றும் நீண்ட காலமாக தடுப்புக் காவலில் உள்ளவர்களின் மனைவிமார்,மற்றும் தங்கள் துணைவர்களால் கைவிடப்பட்ட பதின்மவயது தாய்மார் மற்றும் மனைவிகள், போன்றவர்கள்) யுத்தம் காரணமாக வறுமைநிலை மிக மோசமாக அதிகரித்துள்ளதால், குறைகள் மற்றும் கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளார்கள். அரசாங்கம் வெகு சில (அப்படி ஏதாவது இருந்தால்) பொறிமுறைகள் மற்றும் கட்டமைப்புகளையே அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அமைத்துள்ளது, மற்றும் குற்றம் செய்பவர்களை குறிப்பாக அரசாங்கத்துடன் நேரடிப் பங்காளர்களாக உள்ளவர்களை (காவல்துறை, இராணுவம் உள்ளுர் அதிகாரிகள் போன்றவர்கள்) எப்படி உபசரிக்கிறது என்பது, முற்றுமுழுதான தண்டனை விலக்கு உள்ள ஒரு சூழலையும் அரசாங்கமே விதைத்துள்ளது, என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.
நன்றி -தேனீ இணையம்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்