/* up Facebook

Aug 8, 2013

பெண் ஆளுமையும் சமகால அரசியலும் - பிருந்தா தாஸ்

ஆளுமை (Personality) என்பது ஒருவரின் ஒழுங்கமைந்த, இயங்கியல் பண்புகளையும், அவை தோற்றுவிக்கும் நடத்தைகள், உணர்வுகள் மற்றும் சிந்தனைகள் என்பவற்றைக் குறிக்கிறது. பொதுவாக ஆளுமை என்பது ஒருவரின் வெளித் தோற்றத்தைப் பெரிதும் குறிக்கின்றது. ஆளுமை என்பதைச் சுருக்கமாக சொல்வதென்றால் ஒருவரைத் தனித்துவமானவராக ஆக்கும் எண்ணங்கள், உணர்வுகள், நடத்தைகள் என வரையறுக்கலாம். அத்துடன் ஆளுமை ஒருவரின் உள்ளிருந்து உருவாகி அவருடைய வாழ்க்கைக்; காலம் முழுவதும் சீராக அமைகின்றதும் எனலாம்.

பெண்களின் ஆளுமைகள் விழிப்புறும் விதமும் சமூகத்தில் பெண்ணின் வகிபாகம் பெருகுவதன் தேவையும் அவற்றைத் தூண்டி விடக்கூடிய கூர்மையும் அழுத்தமாகப் பேசப்படுவதற்கும் அதை செயற்படுத்துவதற்குமே பெண்கள் சங்கங்கள் உருவாக்கவும் அல்லது பெண்கள் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்பதற்கான அவசியம் ஏற்படுகிறது. இவ்வாறான நிகழ்வுகளின் மூலமாக தான் பெண்களின் ஆளுமைகள் பற்றிய விழிப்புணர்வுகள் பரிமாணங்கள், நிலைப்பாடுகள் என்பன வளர்ச்சியடையும். இது சமகாலத்தில் பெண்களின் உயர்ச்சிக்கும் பெண்கள் பற்றிய வெற்றி பதிவுகளுக்கும் மிகவும் அவசியமானவைகளாகக் கருதப்படுகின்றன.
காலந்தொட்டு வரும் சமயம், கலாசாரம், பண்பாடு என்பதைக் கொண்டு பெணகளின் ஆளுமைகளை குறைவாக மதிக்கப்படுவதையும் ஆண் ஆளுமைகளே உயர்வாகப் பேசப்படுவதையும் நாம் காணலாம். எனவே தன் முன்னால் உள்ள தடைகளை அறிவுபூர்வமாக உடைத்தெறிந்து தனக்குள் சரியான, முற்போக்குத்தனமான அறிவுசார்ந்த ஆளுமைகளை ஆக்கிக்கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.

பெண் வளர்ச்சி பற்றிய வரலாறுகள் சிந்திக்கப்படுமிடத்து சமூகம் சார்ந்த பெண் ஆளுமைகளை வெகுவாகக் குறைக்கும் சகல காரணிகளையும் கண்டுகொள்ள வேண்டிய தேவைப்பாடும் ஒரு மார்க்சியப் பார்வைக்கே உண்டு. இங்கு தான் ‘பெண் விடுதலை’ என்பதை ஆழமாகப் பேசப்படவும் ஆராயப்படவும் தேவை ஏற்படுகின்றது. ஏனெனில் சமூகத்தின் வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் ஆண் - பெண் இரு பாலாரினதும் சம அளவான பங்களிப்பு அவசியமானவையாக கருதப்படுகின்றது. இத்துடன் இது தனிப்பட்ட குடும்பம் சார்ந்தவையாகவும் அமைகின்றன எனலாம். எனவே சமூக விடுதலை பற்றிப் பேசும் போது, பெண் விடுதலை முக்கியமானதாகும். அது மட்டுமல்லாது அவற்றுக்காகப் போராட வேண்டும் என்ற தேவைப்பாடும் பெண்களின் பலர் இப்போது தான் சிறிது சிறிதாக யோசிக்க ஆரம்பித்துள்ளனார். பெண் ஆளுமைகள் வெற்றியடைவதற்கும் பேசப்படுவதற்கும் அவற்றின் எழுச்சிகள் கூர்மைப்படல் வேண்டும். அத்துடன் பெண் ஆளுமைகள் வெளிப்படுத்தப்பட இயலாமைக்கும் சமூக, அரசியல், பொருளாதாரம் போன்ற காரணிகளின் தாக்கம் அதிகமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பெண் கற்றவளானால் அவளின் தனிப்பட்ட குடும்பத்திற்கு எவ்வளவு முக்கியமோ அதை விட அப்பெண் சமூகத்திற்கு பல படங்கு முக்கியப்படுகிறாள். ஒரு குழந்தை வளர்ச்சியில் ஒரு பெண் எவ்வளவு முக்கியம் செலுத்தி, அவர்களை சிறந்த ஆளுமையுடன் உலகிற்கு அறிமுகப்படுத்துகிறாள் என்பதும் இங்கு கவனத்திற் கொள்ள வேண்டிய அவசியத்தை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அவளின் வழிகாட்டளின் பேரில் உருவான சிறார்கள் சிறந்த சமூதாயத்தினர் ஆவர். அந்த வகையில் சிறந்த சமூதாயம் உருவாகுவதும் சமூகக் கட்டமைப்புகளில் மாற்றங்கள் ஏற்படுவதும் மற்றும்; பெண் ஆளுமைகள் எழுச்சியுறுவதும் பெண்களின் கல்வியிலேயே தங்கியுள்ளது.

பெண் ஆளுமைகளை உயர்த்தும் அடிப்படையான காரணிகள் கலை, கலாசாரம், பண்பாடு; என்பவையாகும். இவற்றுக்கெல்லாம்  பெண்களுக்கு ஆண்கள் பக்கபலமாக இருப்பது அவசியமானதாகும்.

பெண்களும் அரசியலும்


உலகில் அரசியல் கொள்கை, அரசியல் என்பன அனுதினம் பேசப்படும் மிக முக்கியமான செய்திகள் என்பதை பெண்கள் எப்போதும் உணர்ந்து கொள்வது அவசியமாகின்றது. எதிர்த்தல் என்பதையும் வெளிப்படுத்துவதோடு துணிவுடன் செயற்படுத்தும் ஆளுமைத் திறன் அவசியமாகும்.
இவ்வாறு ஆளுமைகளை வெளிப்படுத்துவதற்கு அவளின் அரசியல் ஞானமும் அனுபவமும் அறிவும் ஆழ்ந்த சிந்தனையும் அதனோடு கூடிய மக்களின் ஆதரவும் அவசியமாகின்றன. புதுமையான விடயங்களைச் முன்வைத்தல், புதிய சிந்தனைகளை தோற்றுவித்தல், புரட்சிகரமான கருத்துக்கள், சமூக நலனுக்கான மாற்றம் தொடர்பில் உள்ள ஆளுமைகள்; தான் பெண்களின் அரசியலினூடான புத்திசாலித்தனம் அடக்கியிருக்கிறது. ஆனாலும் அது பெண் சார்ந்ததாக மட்டுமல்ல சமூக அரசியல் சார்ந்த அனைவரின் தேர்ச்சியான வெற்றிக்கும் விடுதலைக்கும் வித்திடச் செய்யும்.

பெண்களின் வாழ்வியலில் அனைத்து தடைகளையும் உடைத்தெறிந்து தனக்குள் சரியான முற்போக்குத்தனமான அறிவு சார்ந்த ஆளுமைகளை உருவாக்கிக்; கொள்ள வேண்டும். அத்துடன் சமூக நிலைக்கேற்ப பெண் தங்களின் ஆளுமையை நெறிப்படுத்திக் கொள்வதென்பது முக்கியமாகின்றது.

எனவே பெண் ஆளுமைகள், மிகச் சிறந்த முறையில் அமைத்துக் கொள்வதற்கான வழிமுறையானது அறிவுபூர்மான சிந்தனைகளும் தனியாக சிந்திக்கும் திறன், உறுதி, நேர்மை, ஒழுக்கம், எதையும் முடிவெடுக்கும் திறன், நம்பிக்கை, திடம் என்பவை காணப்படுவதுடன் புரட்சிகரமான பெண்கள் இவற்றை அறிவுபூர்வமாய் கட்டி எழுப்பும் பணியில் காத்திரமான பங்களிப்பை வழங்க வேண்டும். எனவே பெண்கள் தம் குரலை உயர்த்தி, போராடி தனக்கென ஒரு தனித்துவத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டியது முக்கியமானதொன்றாகும்.


0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்