/* up Facebook

Aug 7, 2013

அவுஸ்திரேலியாவுக்கு பயணித்த ஒரு தமிழ்ப்பெண்ணின் அனுபவங்கள்பேர்த்திலுள்ள தனது கணவர் பாலமனோகரனுடன் மீள இணைவதற்காக ஆபத்தான கடற் பயணத்தை மேற்கொண்ட செல்வமலர் படகு கவிழ்ந்தபோது எப்படி தனது ஒரே மகன் தர்மித்தனை இழந்தார்

- போல் ரூகேய்

selvamalarமனிதக் கடத்தல்காரர்கள் ஒரு கொடூரமான பொய்யினை அவளுக்கு விற்பனை செய்துள்ளார்கள். இந்தோனசியாவில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு ஒரு ஆடம்பரமான சொகுசுக் கப்பலில் அவள் பயணம் செய்ய இருப்பதாக சொல்லி அவளும் அவளது அழகிய மகன் மற்றும் அவளது சகோதரன் ஆகியோர்கள், தங்கள் புதிய வாழ்க்கையை தொடங்குவதற்காக அவர்களை அவுஸ்திரேலியாவுக்கு ஏற்றிச் செல்லவிருக்கும் கப்பல் என்று ஒரு புகைப்படம் அவளுக்கு காட்டப்பட்டது, அது மூன்றடுக்கு அறைகளைக் கொண்ட ஒரு சிறப்பான கப்பல்.

“நான் அவர்களை நம்பினேன்” என்று அவள் சொன்னாள்.

அவள் கனவு கண்டது வேறொன்றுக்காகவும் இல்லை, ஆனால் தனது கணவருடன் ஒருமித்து வாழவேண்டும் என்பதையே, அவளது கணவன் நான்கு வருடங்களுக்கு முன்னர் தனது மனைவி மற்றும் அவர்களின் முதற் பிள்ளையான இன்னமும் பிறக்காத மகன்  ஆகியோருக்கு பேர்த்தில் ஒரு புதிய வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதற்காக ஒரு படகு மூலமாக அவுஸ்திரேலியாவுக்கு  தப்பிச் சென்றார்.

அவள் ஐந்துமாத கர்ப்பிணியாக இரு;தபோது அவர் ஸ்ரீலங்காவை விட்டுச்சென்றார்.

அவர் புகைப்படங்களை வெட்டி ஒரு படத்தொகுப்பினை உருவாக்கியிருந்தார், அது அவர்களின் குடும்பம் ஒருமித்து இருப்பதைப்போல சித்தரிக்கிறது. அவர் தனது மகனை ஒருபோதும் பார்த்ததில்லை, அவரால் அவனை ஒருபோதும் பார்க்கவும் முடியாது - ஆகக்குறைந்தது அவனது உயிரற்ற உடலைத்தானும்.

சில நாட்களில் காற்று திரும்பவும் வீசியபோது. நாங்கள் கிழக்கு ஜாவாவில் உள்ள, இந்தோனசியாவுக்கும் மற்றும் கிறிஸ்மஸ் தீவுகளுக்கும் இடையில் மிகவும் அருகாமையில் உள்ள இடங்களில் ஒன்றான சிடான் கிராமத்தில் இருந்தோம். இரண்டு ஸ்ரீலங்கா பெண்கள் தங்கள் துயரக்கதையினை சொல்லி அழுது கொண்டிருந்தார்கள் ஆனால் ஒருவரால் மற்றவருக்கு ஆறுதல் சொல்லிக்கொள்ள முடியவில்லை. ஒருவர் தன்னுடைய மூன்று பிள்ளைகளையும் கணவரையும் காணவில்லை, அவர்களை ஏற்றிச்சென்ற கடத்தல் படகு நீரில் மூழ்கியதின் பின்னர் அவர்கள் தொலைந்து போனார்கள் என விளக்கினாள். இரண்டாவது பெண் தனது ஒரே மகனைக் காணவில்லை என்று சொன்னாள்.

யாரோ அந்த இரண்டாவது பெண்ணை பெயர் சொல்லி அழைத்தார்கள். அவள் திகிலுடன் திரும்பிப் பார்த்தாள். அவளுக்கு அந்த குரல் எங்கிருந்து வந்தது என்று தெரியும், மேற்கு ஜாவாவின் தெற்கு கடற்கரைப் பகுதியில் உள்ள மீனவக் கிராமமான சிடானில் அமைந்துள்ள மருத்துவமனையின் தற்காலிக பிணவறையிலிருந்துதான் அந்தக் குரல் வந்தது. மீட்பு பணி செய்பவர்களினால் தண்ணீரிலிருந்து இழுத்துப் போடப்பட்ட ஒரு உடலை ஏற்றிக்கொண்டு ஒரு அம்புலன்ஸ் வாகனம் அப்போதுதான் அங்கு வந்திருந்தது. அந்தப் பெண் ஓடுகிறாள், பின் நிற்கிறாள், அதன் அருகில் செல்ல அவள் விரும்பவில்லை,ஆனால் அப்படிச் செய்யவேண்டிய கட்டாயத்துக்கு அவள் ஆளானாள். சந்தேகமின்றி தான் எதைக் காணப்போகிறோம் என்று அவளுக்கு தெரிந்திருந்தது. அவள் அலற ஆரம்பித்தாள். அவள் விரைந்தோடிச் சென்று தனது சின்னஞ் சிறிய மகனின் வெளிறிய ஈரமான உடலை பற்றிப்பிடித்து வாரியணைத்துக் கொண்டாள். அவளது பொங்கிவரும் புலம்பலை அடக்குவதற்கு அவளால் முடியவில்லை. உள்ளுர் கிராமவாசிகள் அவளது வேதனையை கண்டு அவளைச் சூழ்ந்து கொண்டார்கள். அதன் பின்னர் அவளும் அவளது மகனின் இறந்த உடலும் அங்கிருந்து அகன்றுவிட்டன. அது புதன்கிழமை நண்பகலில் நடந்தது. பெரும்பாலும் ஸ்ரீலங்கா மற்றும் ஈரான் நாட்டை சேர்ந்தவர்கள் எனக் கருதப்படும் 187 பேர்களை சுமந்துகொண்டு சென்ற புகலிடப் படகு செவ்வாய்க்கிழமை காலையில் இந்தக் கிராமத்தை விட்டு கிறிஸ்துமஸ் தீவை நோக்கி புறப்பட்டு விரைவிலேயே உடைந்து மூழ்கியதின் பின்னர், காணாமற் போனவர்களைப் பற்றிக் கிடைத்த கதைகள் ஏராளம். உயிர் தப்பியவர்களைப் பற்றிய குறிப்பிடத்தக்க கதைகளும் உள்ளன. மனிதக் கடத்தல்காரர்கள் மனித உயிர்களைப்பற்றி அக்கறைப்படாமல் அந்த சிறிய மரத்தினாலான சரக்கு கப்பலில் தங்களின் உயர்ந்தபட்ச இலாபமீட்டும் உயிர்த்துடிப்பற்ற ஆவல் காரணமாக, மோசமாக சுமையேற்றிக் கொண்டு பயணம் செய்த போதும் பெரும்பாலான பயணிகள் எப்படியோ தங்கள் உயிர்களை காப்பாற்றிக்கொண்டு தப்பிவிட்டார்கள்.

நாங்கள் விசாரித்தபோது, அலறிய அந்தப் பெண்ணை பற்றிய விவரங்கள் எந்த ஒரு ஸ்ரீலங்கா வாசிக்கும் சரியாகத் தெரியவில்லை. அவளுக்கு ராதா என்கிற புனைபெயரை சூட்டிய அவர்கள் அவள், அவளது மகன், மற்றும் அவளது சகோதரன் ஆகியோர் பயணம் செய்ததாகவும் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் பெருமளவில் உள்ள குழுவில் அவர்கள் இடம்பெறவில்லை என்றும் தெரிவித்தார்கள்.

வியாழன் அன்று காலை அவளை நாங்கள் கண்டுபிடித்தோம். அவள் ஜாவாவின் மறுபுறம் ஜாகர்த்தாவில் காவல்துறை மருத்துவமனையில் இருந்தாள். அவள் தங்கள் ஒருவயதான மகனை இழந்த மற்றொரு இளம் தம்பதியருடன் இருந்தாள். அனர்த்த பாதிப்புக்கு உட்பட்டவர்களின் அடையாளப் பிரிவு இறந்த சிறுவர்களின் டி.என்.ஏ அவர்களது பெற்றோர்களுடன் பொருந்துகிறதா என அறிய விரும்பியது. அந்தப் பெண் ஒரு திகைப்புடன் ஒரு வாயிலால் வெளியே வந்தாள். அவளது பெயர் செல்வமலர். அவளுக்கு 39 வயது. நான்கு வயதான அவளது மகனின் பெயர் தர்மித்தன்.

அவள் புரியக்கூடியளவுக்கு ஆங்கிலம் பேசுகிறாள். காவல்துறையினர் தர்மித்தனைப் பார்ப்பதற்கு தன்னை அனுமதிக்கிறார்கள் இல்லை என்று சொல்கிறாள். முதல் நாள் அவர்கள் அம்புலன்சில் இங்கு வந்தபோதே அவனை அவளிடமிருந்து எடுத்துச் சென்றுவிட்டார்கள்.” எனக்கு என் மகன் வேண்டும்”, “நான் எனது மகனைப் பார்க்கவேண்டும்”என்று அவள் கதறுகிறாள்.

எப்படி இது நடந்தது என்று செல்வமலர் சொல்கிறாள். கடந்த வருடக் கடைசியில் அவள், 25 வயதான அவளது சகோதரன் இராகுலன் மற்றும் தர்மித்தன், ஆகியோர் ஸ்ரீலங்காவின் வடமாகாணத்தை சேர்ந்த வவுனியாவில் உள்ள அவர்கள் வீட்டை விட்டு புறப்பட்டார்கள். அவளது கணவர் பாலமனோகரன் ஒரு தமிழராக இருந்தபடியால் ஸ்ரீலங்காவில் தீவிரமான இன மற்றும் அரசியல் பிரச்சிகைளுக்கு முகம் கொடுக்கவேண்டி இருந்தது என்று அவள் தெரிவிக்கிறாள்.

அவர் இப்போது ஒரு ஐந்து வருட விசாவில் பேர்த்தில் வசிக்கிறார். தான் தனது கணவருடன் சட்டப்படி இணைவதற்கு முயற்சிகள் மேற்கொண்டதாகவும் ஆனால் விசா மறுக்கப்பட்டு விட்டதாகவும் செல்வமலர் சொன்னாள். “அது ஏனென்று எனக்குத் தெரியவில்லை” என்றாள் அவள்.

நவம்பர் நடுப்பகுதியில் வேறு மாற்றீடு எதுவும் இல்லை என உணர்ந்த அவள் பிரச்சினையான நாட்டின் தென்பகுதியை சேர்ந்த காலியில் இருந்து, அவளது மகன், சகோதரன் மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு அகதியாகச் செல்லும் வேறு 43 பேர்களுடன் சேர்ந்து பறப்பட்டாள். இந்தோனசியாவுக்கான பயணக் கட்டணமாக ஒவ்வொருவரும் சமமாக 7200 அமெரிக்க டொலர்களைச் செலுத்தினார்கள். தங்களது 2000 கி.மீ. பயணம் இந்தோனசியாவுக்கு சமீபமாக வந்தபோது அவர்களது படகின் இயந்திரம் நின்றுபோனது.

“நாங்கள் 45 நாட்கள் படகிலேயே இருந்தோம், 25 நாட்களுக்கு பிறகு உணவு எதுவும் கிடைக்கவில்லை. பிறகு ஒரு கப்பல் வழியில் நிறுத்தி எங்களுக்கு உணவு தந்தது. 36 நாட்களுக்குப் பிறகு ஒரு புதிய கப்பலிருந்து எங்களுக்கு நிறைய உணவு கிடைத்தது. நாங்கள் வெறுமே கடலில் மிதந்து கொண்டிருந்தோம். ஜனவரி 1ல் நாங்கள் ஒரு கப்பலால் காப்பாற்றப்பட்டு இந்தோனசியாவுக்கு வந்து சேர்ந்தோம்” என்று செல்வமலர் சொன்னாள்.

அவர்கள் வட சுமத்திராவின் தலைநகரமான மெடானுக்கு கொண்டு செல்லப்பட்டு, ஸ்ரீலங்கன்கள், ஈரானியர்கள், ஆப்கானிஸ்தானியர்கள் மற்றும் பர்மியர்கள் என்று அளவுக்கு அதிகமான பல்வேறு நாட்டு குடியேற்றக்காரர்களையும் தடுத்து வைத்துள்ள தடுப்பு முகாமுக்குள் விடப்பட்டார்கள்.

“ஏப்ரல் 4ல் மியன்மாரை சேர்ந்த எட்டு ரோகிங்கிய (முஸ்லிம்) நபர்கள் சிறையில் வைத்து பௌத்தர்களால் கொல்லப்பட்டார்கள். அது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. அவர்கள் கத்தியால் குத்தப்பட்டார்கள். எனது மகன் இதை கண்டுவிட்டான். அவன் மிகவும் பீதியடைந்தான். நாங்கள் எல்லோருமே அச்சமடைந்திருந்தோம்” என்று செல்வமலர் சொன்னாள்.

மூன்று மாதங்களுக்கு மேல் கடந்த பின்னர், குடியேற்றத்துக்கான சர்வதேச அமைப்பு (ஐ.ஓ.எம்) சமூகத்துக்குள் அவர்களை விடுதலை செய்யும் பாதுகாப்பை வழங்கியது. செல்வமலர் உடனடியாக ஒரு கடத்தல்காரனை கண்டுபிடித்தாள் அவன் ஜாகர்த்தாவுக்கான அவர்களது மூன்று நாள் பயணத்தை படகு மற்றும் பேருந்து வழியாக ஏற்பாடு செய்து கொடுத்தான்.

ஏப்ரல் 22ல் இந்த மூவரும் மேற்கு ஜாவாவின் மத்தியில் உள்ள சிசாருவாவுக்கு வந்தார்கள், அந்த இடத்தில்தான் பெரும்பாலான புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவில் தாங்கள் சட்டப்படி குடியேறலாம், அல்லது கடத்தல்காரர்களுடன் தொடர்பு கொள்ளலாம் என்கிற நம்பிக்கையுடன் யு.என்.எச்.சி.ஆர் இல் தங்களை பதிவு செய்வார்கள்.

ஒரு கடத்தல் வலையமைப்பை சந்திப்பதில் அவளுக்கும் அவளது சகோதரனுக்கும் சிரமம் இருக்கவில்லை. அந்தப் பகுதியின் முக்கியமான கடத்தல் தலைவருக்கு வேண்டி குறைந்தது 40 தரகர்களாவது அங்கு பயணிகளை வேட்டையாடுவதில் இறங்கியிருந்தார்கள். அவர்களுக்கு இடையேயான ஒப்பந்தம், செல்வமலர் மற்றும் அவளது சகோதரன் ஆகியோர் ஆளுக்கு 7200 டொலர்கள் கொடுக்கவேண்டும் என்றும் தர்மித்தனின் பயணம் இலவசம் என்றும் பேசப்பட்டது.

தனக்கு, தன்னை அவுஸ்திரேலியாவுக்கு ஏற்றிச் செல்லவுள்ள படகின் படம் ஒன்று காட்டப்பட்டதாக செல்வமலர் சொல்கிறாள். கடத்தல்காரர்கள் படகு இல்லை அது ஒரு கப்பல் என்று சொன்னார்களாம்.” நாங்கள் ஒரு புகைப்படத்தை பார்த்தோம். அது ஒரு ஆடம்பர கப்பல்” என்று அவள் சொல்கிறாள்.

அதை நம்புவது கடினமாகத் தோன்றியது. நான்கு வருடங்களுக்கு முன்பு அவளது கணவர் ஒரு மரக்கலத்தில்தான் சென்றார் என்பதும் அவளுக்குத் தெரியும் மற்றும் 45 நாட்கள் கடலில் அவள் மேற்கொண்ட பயணமும் அவளுள் சந்தேகத்தை ஏற்படுத்தின. ஆனாலும் தான் அவுஸ்திரேலியாவுக்கு அருகில் வந்துவிட்டதால் சில நல்ல காரியங்கள் நடப்பதாக அவள் நம்பினாள்.

ஜூலை 22 மாலை அவர்கள் சிசாருவாவிலிருந்து வேறு நகரமொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள், அங்கு பெரும் எண்ணிக்கையிலான ஸ்ரீலங்காவாசிகள் குழுமியிருந்ததாக அவள் சொன்னாள். அவர்கள் அனைவரும் கடற்கரையை நோக்கி வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டு செவ்வாய் காலை கடற்கரையை  வந்தடைந்தார்கள்.

“ நாங்கள் படகைப் பார்த்ததும் திடுக்கிட்டுப் போனோம்” என்று அவள் சொன்னாள்.” ஆனால் ஆனால் அந்த படகுதான் எங்களை கப்பலுக்கு அழைத்துச் செல்லவுள்ளது என்று அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள்”

அவர்கள் கடலினுள் இரண்டு மணித்தியாலங்கள் இயந்திரத்தை ஓட்டிச் சென்றார்கள். அங்கு கப்பல் எதுவும் கிடையாது என்று செல்வமலர் உணர ஆரம்பித்தாள். அடியில் உள்ள துவாரத்தினூடாக விரைவில் தண்ணீரை உள்ளிழுக்கும் ஒரு படகில் அவர்கள் ஏற்றப்பட்டிருந்தார்கள். “நாங்கள் மிகவும் பயந்து போனோம். படகு ஆபத்தில் சிக்கியிருந்தது” என்றாள் அவள்.

படகின் கப்டன் மக்களின் இறைஞ்சலுக்கு செவி சாய்த்து படகினை ஜாவா நோக்கி திருப்பினார், படகு சிதைந்து வேகமாக மூழ்கும்வரை படகு மூன்று மணித்தியாலங்கள் பாதி சக்தியுடன் தத்தளித்து ஓடியது.

செல்வமலர் மிகவும் அதிசயமான ஒனறைப்பற்றிச் சொன்னாள், ஆனால் அதை நாங்கள் மற்றும் சிலரிடமிருந்தும் கேள்வியுற்றோம், மக்கள் மூழ்கித் தத்தளித்துக் கொண்டிரு;த இடத்துக்கு சுமார் 50 மீற்றர் தொலைவில் மிகவும் நவீனமான ஒரு பெரிய படகு சென்று கொண்டிருந்ததாம். “அவர்கள் எங்கள் படகை கவனித்துக் கொண்டிருந்தார்கள்” என்று சொன்ன அவள்,” நாங்கள் தயவு செய்து எங்களை காப்பாற்றுங்கள் என்று அவாகளிடம் கேட்டோம். எங்கள் உயிர்காப்பு அங்கிகளை கழற்றி அசைத்துக் காட்டினோம், எங்களை பாதுகாக்க அவர்கள் முன்வரவில்லை. அவர்கள் பார்த்துக்கொண்டேயிருந்தார்கள். எங்களுக்கு உதவுங்கள் எங்கள் உயிர்களைக் காப்பாற்றுங்கள் என்று அழைத்தோம். அவர்கள் உதவவேயில்லை” செல்வமலர் தனது உரையை முறித்துக்கொண்டு “நான் என்னுடைய குழந்தையை பார்க்கவேண்டும். உங்களால் உதவ முடியுமா” எனக் கேட்டாள். செல்வமலருக்கு வேண்டி நாங்கள் விசாரித்தபோது, தடயவியல் காவல்துறையினர், தங்கள் கடமையில் தலையிடாமல் விலகிச் செல்லும்படி பணிவுடன் சொன்னார்கள்.

கடலில் என்ன நடந்தது என்று அவள் மேலும் சொல்லலானாள், அவள் தனது சகோதரனிடமிருந்து பிரிந்துவிட்டாள் (அவர் உயிர் தப்பியிருக்க வேண்டும்) மற்றும் தர்மித்தனைப் பிடித்தவாறே மிதந்து கொண்டிருந்தாள். இருவரிடம் உயிர்காப்பு அங்கிகள் இருந்தன ஆனால் எப்படி நீந்துவது என்று அவளுக்குத் தெரியவில்லை. மேலும் தனது மகனுடன் கடலில் தொடர்ந்து மிதப்பதை அவள் விரும்பவில்லை.

“ஒரு மனிதன் வந்து எனது மகனை எடுத்துக் கொண்டான்இ ஒரு ஸ்ரீலங்கா மனிதன். அவனால் நீந்தக் கூடியதாக இருந்தது. நான் எனது மகனை பாதுகாப்பாக கரைக்கு எடுத்துச் செல்வதற்காக அந்த மனிதனிடம் அவனைக் கொடுத்தேன். ஆனால் தர்மித்தன் பிணமாகத்தான் கரைக்கு வந்தான்” என்றாள் செல்வமலர்.

என்ன நடந்தது?” எனக்குத் தெரியாது, எனக்குத் தெரியாது” திரும்பவும் கண்ணீருடன் கதறுகிறாள் அவள். புதன் கிழமை எனது மகனை நான் சடலமாகப் பார்க்கிறேன். மிகவும் அழகான பையன். மிகவும் அழகான பையன்”.

அவளது மகனை வாங்கிய மனிதன் கரைக்கு வந்து சேர்ந்தானா என்பது அவளுக்குத் தெரியாது. அவளது மகனின் உயிர்காப்பு அங்கியை யாராவது திருடினார்களா என்பதும் அவளுக்குத் தெரியாது.

காவல்துறை மருத்துவமiயில் வைத்து நாங்கள் செல்வமலருடன் பேசுகையில், யாரோ அவளுக்கு ஒரு தொலைபேசியை கொடுத்திருப்பதாகவும் எனவே தான் தனது கணவரை அழைத்து தர்மித்தன் பற்றிய செய்தியை அவரிடம் சொல்லமுடியும் என்று சொன்னாள். அவர் தனது மனைவியுடன் வந்து ஜாகர்த்தாவில் இருப்பதற்காக அவசரமாக கடவுச்சீட்டு பெற முயற்சித்துக் கொண்டிருக்கிறாராம்.

செல்வமலரால் அதை அப்படியே விட்டுவிட முடியவில்லை. தனது மகன் இறந்துவிட்டான் என்பதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

“எனது குழந்தை நல்ல ஒரு நடனக்காரன், நல்ல ஒரு பாட்டுக்காரன்” என்கிறாள் செல்வமலர். “ஒவ்வொரு நாளும் அம்மா நான் எனது அப்பாவை பார்க்கவேண்டும். எப்பொழுது நான் எனது அப்பாவை பார்ப்பேன்? எப்பொழுது நாங்கள் அப்பாவிடம் போகப்போகிறோம்” என்று கேட்பான்.

“எனது மகன் எப்போதும் அம்மா அழவேண்டாம்,அழவேண்டாம் என்றே என்னிடம் சொல்வான். அவன் மிகவும் அழகானவன், அவன் மிகவும் அழகானவன். அவனை விமான ஓட்டியாக்க வேண்டும் என நான் விரும்பினேன் அவன் மிகவும் புத்திசாலி, மிகவும் புத்திசாலி”.

இனி என்ன நடக்கப்போகிறது என்று அவளுக்குத் தெரியாது.”நான் அவுஸ்திரேலியாவுக்கு போக விரும்பவில்லை. எனது வாழ்க்கை எனது குழந்தை. எனது எதிர்காலம் எனது குழந்தை. எனக்கு எனது குழந்தை வேண்டும். நான் எனது குழந்தையை பார்க்கவேண்டும்”

கெவின் றூட் பற்றி கேள்விப்பட்டதுண்டா என்று கேட்டபோது, தலையை அசைதBalamanoharan்த செல்வமலர் அது என்ன? எனக் கேட்டாள். அரசாங்கத்தின் பப்புவா நியுகினியா கொள்கைகள் பற்றி அவளுக்கு எதுவும் தெரியாது, ஆனால் அவளது கடத்தல்காரர்கள் நிச்சயமாக அதைப்பற்றி அறிவார்கள்.

மனிதக் கடத்தல்காரர்கள் பற்றி அவள் என்ன நினைக்கிறாள் எனக் கேட்டபோது, அவர்கள் மிகவும் ஏமாற்றுக்காரர்கள். உயிர்களைப்பற்றி அவர்களுக்கு புரியாது, குழந்தைகள் கர்ப்பிணிப் பெண்கள், என்று எதைப்பற்றியுமே அவர்கள் அறிய மாட்டார்கள், என்று அவள் சொன்னாள்.

தான் குடியுரிமை கிடைப்பதை எதிர்பார்ப்பதால் அடுத்த வருடமளவில்தனது மனைவியையும் குழந்தையையும் அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துவர திட்டமிட்டிருந்ததாக பாலமனோகரன் தெரிவித்தார். “இங்கேயே எனது மனைவி மற்றும் மகனுடன் வாழும் ஒரு வாழ்க்கையையே நான் விரும்புகிறேன். நல்ல எதிர்காலம் மற்றும் நல்ல வாய்ப்புகள் இங்கே உள்ளது” என்றார் அவர்.

இப்போது தான் ஒருபோதும் பார்த்திராத தனது மகனை பார்ப்பதற்கு அவர் விரும்புகிறார்.” நான் எனது மகனின் முகத்தை பார்க்க விரும்புகிறேன், ஏனென்றால் அவனை நான் ஒரு போதும் பார்த்ததில்லை” என்றார் அவர். “என்னை இந்தோனசியாவுக்கு செல்ல அனுமதிக்கும்படி நான் அவுஸ்திரேலியா அரசாங்கத்தை கேட்கிறேன். என்னை இந்தோனசியாவுக்கு அனுப்புங்கள். நான் எனது மனைவியையும் மற்றும் மகனையும் பார்க்க வேண்டும்.என்னால் அதை செய்ய முடியாவிட்டால் தயவு செய்து எனது மனைவியையும் மகனையும் சில வாரங்களாவது என்னோடு சேர்ந்திருப்பதற்காக இங்கு கொண்டுவர அனுமதியுங்கள், பின்னர் எனது மனைவியை ஸ்ரீலங்காவுக்கு திருப்பி அனுப்பிவிடுங்கள். எனக்கு வேண்டியதெல்லாம் வெறும் இரண்டு வாரங்களாவது எனது மனைவி மற்றும் மகனுடன் சேர்ந்திருப்பதுதான்”.

நன்றி:ஹெரால்ட்சண்
தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

நன்றி - தேனீ

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்