/* up Facebook

Aug 3, 2013

போரின் அனுபவங்கள் - - குமாரி சாமுவேல் மற்றும் சுலானி கொடிகார


போரின் அனுபவத்தை சுமந்த பெண்களில் அநேகர் போருக்கு முன்னர் தாங்கள் வகித்த பாலின பங்களிப்பை போருக்கு பிந்தைய சூழலில் தொடர விரும்பவில்லை

-  குமாரி சாமுவேல் மற்றும் சுலானி கொடிகார

போர் ஒரு பாலினம் தொடர்பான செயல்பாடு. போருக்கு பிந்திய காலத்திலும் அதில் வித்தியாசம் இல்லை. உலகின் மற்றெந்த இடத்தை போலவே ஸ்ரீலங்காவிலும் 30 வருடகால யுத்தத்தின் காரணமாக கண்ணுக்கு புலப்படும் தீங்கான கடும் பாதிப்புகள் பெண்களைத் தாக்கியுள்ளன என்று சொல்லுவதற்கு ஒரு எண்ணம் இருக்கலாம், ஆனால் அதுதான் இன்றைய யதார்த்தம். ஆண்கள் போராளிக்குழுக்களிலும் மற்றும் ஆயுதப்படைகளிலும் இணைந்து, கைது செய்யப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமற் போக்கடிக்கப்பட்டு அல்லது சமூகத்துக்கு வெளியில் அல்லது வெளிநாடுகள் போன்ற பாதுகாப்பான இடங்களுக்கு விமானமேறி சென்றுவிட்ட போதிலும், பெண்கள் உடைந்துபோயுள்ள குடும்பங்கள் மற்றும் சமூகங்களை பேணிப் பாதுகாப்பதற்காக பலமுறை இடப்பெயர்வுக்கும், அந்நியமான  தொலைதூர பகுதிகளிலுள்ள இடம்பெயர் முகாம்கள் அல்லது மீள்குடியேற்றத் திட்டம் போன்றவற்றில் கிடந்து அல்லல் படுகிறார்கள்.

எண்ணற்ற பெண்கள் பெரும்பாலும் தமிழர்கள் (மோதலினால் பாதிக்கப்பட்ட இடங்களில் வாழும் கணிசமான அளவு முஸ்லிம் மற்றும் சிங்களப் பெண்களும் இதில் அடங்குகிறார்கள்) நடைமுறைக்கேற்றபடியும் மற்றும் சட்டத்திற்கு ஏற்றபடியும் இன்று குடும்பத் தலைவர்களாக மாறியுள்ளதுடன், குடும்பத்துக்கு உள்ளேயும் மற்றும் தனியார் களத்துக்கு வெளியேயும் ஆகிய இரு பகுதியினாலும் புதிய பாத்திரங்களாக இயங்குவதற்கு தள்ளப்பட்டுள்ளார்கள். தங்களது குடும்பத்தினது பௌதீக மற்றும் பொருளாதார பாதுகாப்பு மற்றும் உயிர் வாழ்க்கை என்பவற்றுக்கு அவர்கள் பொறுப்பாளர்களாக மாறியுள்ளதுடன், இந்த மோதல் காரணமாக திணிக்கப்பட்டுள்ள மாற்றங்களால் சவாலாக எழுந்துள்ள கலாச்சார கட்டுப்பாட்டு மீறல்களுக்கு எதிராகவும் போராட வேண்டியும் ஏற்பட்டுள்ளது. அதேவேளை போரின் வன்முறை மற்றும் அதனுடனிணைந்த இராணுவவாதம் என்பனவும் பெண்களுக்கு எதிரான வன்முறையின் தன்மை மற்றும் அளவுகளை அதாவது பாலியல் துன்புறுத்தல் முதல் கற்பழிப்பு, பாலியல் சித்திரவதை வரையானவற்;றை அதிகரிப்பதற்கும் தமது பங்களிப்பை நல்குகின்றன, இதன் காரணமாக அவர்கள் போர் மற்றும் வன்முறை என்பவற்றால் வெறுமே பாதிப்புக்குள்ளானவர்கள் ஆகிறார்கள்.

எல்.ரீ.ரீ.ஈ மற்றும் ஸ்ரீலங்கா ஆயுதப்படை ஆகிய இரண்டிலும் ஆண் போராளிகளுடன் இணைந்து பெண்களும் ஆயுதமேந்திப் போராடியுள்ளார்கள். எல்.ரீ.ரீ.ஈ யினால் தற்கொலை குண்டுதாரிகளாக மாறிய தமிழ் பெண்கள், நல்ல தமிழ் பெண்மணி என்கிற ஒரே மாதிரியான கருத்துள்ள பாத்திரத்தின் தன்மையை உடைத்தெறிந்துள்ளார்கள். ஆனால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டவர்கள், சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டவர்கள், பாலியல் வன்கொடுமைக்கு உட்பட்டவர்கள், காணாமற் போனவர்கள் அல்லது மரண தண்டனை பெற்றவர்களைப் போன்ற தங்களின் பிரியப்பட்டவர்களுக்கு சார்பாக அரசியல் மற்றும் இராணுவ நிறுவனங்களுடன் ஈடுபாடுகளை ஏற்படுத்தி பெண்கள் முன்னணி மனித உரிமை பாதுகாவலர்களாகவும் கூட மாறியுள்ளார்கள். பகைமையுள்ள அயலவர்களிடத்து நடுநிலையாளர்களாக பரஸ்பர உடனிருத்தலின் அவசியத்தை வலியுறுத்தி பெண்கள் சமாதான செயற்பாட்டாளர்களாகவும் பங்களிப்பு நல்கியுள்ளார்கள்.

தேசிய மட்டத்தில் அன்னையர் முன்னணி போன்ற அமைப்புகளினtamil-women-army் பகுதியாக மாறி காணாமற்போன, தந்தையர், மகன்கள் மற்றும் சகோதரர்களுக்காக கோரிக்கை விடுத்துள்ளார்கள். மோதலுக்கு அரசியல் பேச்சுவார்த்தை மூலமான தீர்வை முன்வைத்து போரை நிறுத்தும்படியும் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த நடவடிக்கைகளில் ஈடுபடும்படி பெண்கள் பிரச்சாரங்களை மேற்கொண்டதுடன் 2002ம் ஆண்டில் சமாதான நடவடிக்கைகளில் பெண்களையும் உட்புகுத்தி மற்றும் பாலின அக்கறைகளை மேற்கொள்ளும்படி கோரிக்கையும் விடுத்தார்கள். உண்மையில் அப்போதிருந்த அரசாங்கம்  சமாதான நடவடிக்கைகளில் பாலின விடயங்கள் தொடர்பான உப குழுவை அமைப்பதில் பாலின அக்கறையின் அவசியத்தை உட் புகுத்தி அவர்களது கோரிக்கைக்கு  பதிலளித்தது. சமாதான நடவடிக்கைகள் சீர்குலைந்ததால் அந்தக் குழுவினால் தனது பணியை தொடர முடியவில்லை, ஆனால் ஸ்ரீலங்காவில் பெண்களின் நடவடிக்கைகள் தொடர்பான விடயத்தில் அது ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லாக எழுந்து நிற்கிறது.

இந்த மோதல் எண்ணற்ற பெண்களின் வாழ்க்கையை தொட்டதுடன் அதனை உருமாற்றியும் உள்ளது. ஜென்சிலா மஜீத் என்ற பெண்ணின் கதையை எடுத்துக் கொள்வோம். 1990 ல் தனது 20 வதாவது வயதில் முல்லைத்தீவில் வாழ்ந்த முழு முஸ்லிம் மக்களுடனும் ஜென்சிலா அங்கிருந்து எல்.ரீ.ரீ.ஈ யினால் வெளியேற்றப்பட்டார். தான் பெரும்பாலும் ஒரு ஆசிரியையாக மாறவேண்டும் என்று தனக்கு விதிக்கப்பட்டிருந்ததாக அவர் சொல்கிறார். ஒரு உள்ளக இடம் பெயர்ந்தவராக புத்தளத்தில் வாழ்ந்த போதும் தன்னையும் சேர்த்து துரதிருஷ்டமான நிலையில் அங்கு வாழ்ந்த இடம்பெயர்ந்த மக்களி;ன் நிலையை அலட்சியம் செய்வது அசாத்தியமான ஒன்றாக அவளுக்குத் தோன்றியது.

ஐந்து முஸ்லிம் மனிதர்களுடன் சேர்ந்து 1992ல் ஒரு சமூக நம்பிக்கை நிதியத்தை அவள் ஆரம்பித்தாள். அப்போது முதல் அவள், இடம்பெயர்ந்த முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களுடைய நிலையை முன்னிலைப்படுத்தி குறிப்பாக வாழ்வாதாரம், சுகாதாரப் பிரச்சிகைள் மற்றும் பெண்களி;ன் அதிகாரம் என்பனவற்றை பிரதானமாக கவனத்தில் கொண்டு சலிப்பின்றி உழைத்தாள்.

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தால் வழங்கப்படும் சர்வதேச தைரியமான பெண்களுக்கான விருதைப் பெறும் 10 பேரில் ஒருவராக அவள் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அவளது பணிக்கு இந்த வருடம் சர்வதேச அங்கீகாரம் கிட்டியது. எனினும் இங்கே அவளது வீடான ஸ்ரீலங்காவில் அவள் பெரும்பாலும் ஒரு அறிமுகமற்றவளாகவே உள்ளாள்.

அல்லது  யாழ்ப்பாணம் சாவற்கட்டில் உள்ள தாரகா விதவைகள் tamilwomen1உதவி மையத்தின் செயலாளராக உள்ள சைலாவின் கதையை எடுத்துக் கொள்வோம். அவள் தனது எட்டாவது வயதில் தனது தந்தையை யுத்தத்துக்கு பறிகொடுத்தாள், மற்றும் அவளது தாய் தனது ஐந்து குழந்தைகளையும் வளர்க்க போராடினாள். சைலா 17வயதில் திருமணம் செய்து 19 வயதில் ஒரு வயதுள்ள பெண் குழந்தையுடன் விதவையாகினாள். சாந்தியகம் எனும் அமைப்பை சேர்ந்த சமூக உளவியல் பணியாளர்களை சந்திப்பதற்கு முன்னர் விதவைகளை சமூகத்திலிருந்து ஒதுக்கித் தள்ளும் பழக்கத்தினை சமாளிக்க முடியாமல் அடுத்த ஐந்து வருடங்களும் தனது  வீட்டை விட்டு அரிதாகவே வெளியே வரும் பழக்கத்தினையே அவள் கொண்டிருந்தாள். அதன் பின்னர் சைலா ஒரு சமூக உளவியல் பணியாளராகப் பயிற்சி பெற்று தாரகா விதவைகள் உதவி மையத்தில் ஒரு தலைமைத்துவ பாத்திரத்தை வகிக்க ஆரம்பித்தாள். சமூகத்தில் பொருளாதார சுதந்திரம் மற்றும் மதிப்பு என்பவைகளை பெற்றதோடு, 90 விதவைகளைக் கொண்ட அந்த குழுவுக்கு ஒருதலைப்பட்சமான சமூக வேற்றுமைகளுக்கு  எதிராக சவால்விட முடிந்ததோடு தங்கள் வாழ்க்கையையும் மாற்றிக்கொள்ள முடிந்தது. அவர்கள் திருமணங்கள், சுப காரியமான மதச் சடங்குகள் என்பவற்றுக்கு சமூகமளிப்பதுடன், பிரகாசமான நிறங்களுள்ள ஆடைகளை அணிந்து பொது நிறுவனங்களில் பங்கெடுத்து ஆண் அலுவலர்களுடனும் மற்றும் வர்த்தகர்கள் போன்றவர்களுடன் சமமாகப் பழகுகிறார்கள்.

சில பெண்களுக்கு புதிய சமூக, பொருளாதார,அரசியல் வாய்ப்புகளை திறந்து வைப்பதில் தவிர்க்கமுடியாதபடி மோதல்கள், கட்டமைப்பு உருமாற்றங்களை உருவாக்கியுள்ளன, அவை பாலின மரபுகள் மற்றும் பாத்திரங்களை மறு கட்டமைப்பு செய்வதுடன் அவற்றுக்கு எதிராக சவாலும் விடுகின்றன. ஆனால் சாதகமான இந்த பாலின மாற்றங்களை போருக்குப் பின்னான காலத்தில் எப்படி ஒருவரால் காப்பாற்ற முடியும்? அடிக்கடி போரின் முடிவு, போருக்கு முந்தைய பாலின ஆட்சியை ஏற்படுத்தவும் மற்றும் பழைய வழியில் பாலின மீள்கட்டமைப்பு செய்வதற்கும் கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதற்கான சமிக்ஞைகளை வெளிப்படுத்துகின்றன.

ஒரு வழியில் போரின் விளைவுகளினால் பெண்கள் பெற்ற நல்ல வெற்றிகளின் ஒருங்கிணைப்பை பங்களிப்பு செய்வதன் மூலம் போரின் பின்னான முடிவெடுக்கும் நடவடிக்கைகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்ய முடியும்.தென்னாபிரிக்கா,ருவாண்டா,மற்றும் லைபீரியா போன்ற நாடுகளில் கிடைத்த அனுபவங்களின்படி, யுத்தத்தின் போது பெண்கள் பெற்ற பல்வேறு  அனுபவங்கள், போருக்கு பிந்தைய காலப்பகுதியில் பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கு எப்படி கொள்கை மற்றும் சட்ட மறுசீரமைப்பு என்பவனற்றில் பெண்கள் பங்களிப்பு செய்வதற்கு உதவின என்பதை வலியுறுத்தும் சாட்சிகளாக உள்ளன.

எப்படியாயினும் ஸ்ரீலங்காவில் போருக்கு பிந்தைய மீள்கட்டமைப்பு மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளில் பெண்கள் அங்கீகாரமற்றவர்களாகவும் மற்றும் கண்ணுக்கு புலப்படாதவர்களாகவுமே உள்ளார்கள். மே 2009ல் வடபகுதி அபிவிருத்திக்காக நியமிக்கப்பட்ட 19 பேர்களைக் கொண்ட ஜனாதிபதி பணிப்படையில் ஒரு ஒற்றை பெண்மணிகூட இடம்பெறவில்லை. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவில் ஒரு பெண் மட்டுமே இடம்பெற்றிருந்தார். வழக்கமான அரசியல் நிறுவனங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதின் கூட்டான நடவடிக்கையே இது, மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அரசியல் விருப்பம் தொடர்ந்தும் குறைவாகவே உள்ளது. இந்த உயர்மட்ட முடிவெடுக்கும் நடைமுறைகளில் பெண்களின் பங்கு இல்லாமலிருப்பதைக் கண்டு நாங்கள் ஆச்சரியப்படுவது என்னவென்றால் நாடு முழுவதிலுமுள்ள பல்வேறு முகாம்களிலுள்ள முன்னாள் யுவதிகள் மற்றும் பெண் போராளிகளின் மறுவாழ்வு திட்டத்தின் உள்ளடக்கம் எவ்வாறு இருக்கும் என்பதை பற்றியே.

அவர்கள் மீண்டும் நல்லதொரு தமிழ் பெண்ணாக மாறுவதற்காக அவர்களுக்கு மறுபடியும் பயிற்றுவிக்கப் படுகிறதா? விதவைகளுக்கும் மற்றும் பெண் வீட்டுடமை தலைவர்களாக உள்ளவர்களுக்கும் வழங்குவதற்காக முன்மொழியப்பட்டுள்ள வாழ்வாதார திட்டங்களைக் கண்டு நாங்கள் ஆச்சரியப்படுகிறோம்? பெண்களுக்கான பாரம்பரியமற்ற வாழ்வாதாரங்கள் மற்றும் தொழில் பயிற்சி தெரிவுகள் என்பன எந்த அளவுக்கு இந்த நிகழ்ச்சித் திட்டங்கள் உதவப் போகின்றன, கொள்கை வகுப்பாளர்கள் பெண்கள்தான் முதன்மை வருமானமீட்டுபவர்கள்  என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார்களா? அல்லது அவர்கள் வழக்கத்தைபோல பாலின பாரபட்சமான நடவடிக்கைகளை தொடர்ந்தும் மேற்கொள்ளவுள்ளார்களாtamilchildren?

அதேவேளை உத்தியோகபூர்வமான அரசாங்க கொள்கைகள், போருக்கு பிந்தைய காலகட்டத்தில் பெண்களுக்கு பாதுகாப்பான மற்றும் நலம்தரும் அணுகுமுறைகளை பி;ன்பற்றுபவையாகவும் கூட இருக்கி;ன்றன, போரின் தாக்கத்தை முன்னின்று அனுபவித்த அநேக பெண்கள் தங்கள் சமையலறைகளுக்கு திரும்பவும் சென்று போருக்கு முந்தைய தங்கள் பாலின பாத்திரங்களை மீண்டும் தொடர விருப்பமில்லாதவர்களாகவும் இருக்கிறார்கள். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற யாழ்ப்பாண மாகரசபை தேர்தலில் விளக்கப்பட்டபடி இந்த நாட்டில் போரினால் பாதிக்கப்பட்ட இடங்களிலுள்ள பெண்கள் போருக்கு பிந்தைய காலத்தில் தங்கள் சமூகங்களை மீளமைக்கும் சவாலை ஏற்றுக்கொள்ள தயார் என தெரிவித்துள்ளார்கள்.

23 இடங்களுக்கான யாழ்ப்பாண மாநகரசபை தேர்தலில் போட்டியிட்ட மொத்தம் 174 வேட்பாளர்களில் 10 பேர்கள் மட்டுமே பெண்கள். அவர்கள் பல்வேறு அரசியல் கட்சிகளிடமிருந்தும் வேட்பு மனுக்களைப் பெற்றிருந்தார்கள். உயர்ந்த பட்சமாக போட்டியிட்ட 30 விகிதமான பெண்களில் மூன்று பேர் மட்டுமே வெற்றி பெற்றிருந்தார்கள். இந்த புள்ளி விபரங்கள் தேசிய விதிமுறைகளை மீறுவதாக உள்ளன, அங்கு 2 விகிதத்துக்கும் மேற்பட்ட பெண்கள்தான் உள்ளுர் அளவில் வேட்பு மனுக்களைப் பெறுகின்றனர். வெற்றி பெற்றவர்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட விதவையான அந்தோனிப்பிள்ளை மரியம்மாவும் ஒருவர் என்பதை இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

“நான் யாழ்ப்பாண மாநகரசபை தேர்தலில் போட்டியிடுவது எதற்காகவென்றால் இத்தனை வருடங்களாக மறுக்கப்பட்டிருந்த அவர்களின் ஜனநாயக உரிமைகளை பெறுவதற்காக யாழ்ப்பாண மக்கள் முன்வரவேண்டும் என்பதற்காகவே. நான் மேலும் போட்டியிடுவது எதற்காகவென்றால் விதவைகள் வரைமுறைகளுக்கு உட்படுத்தப் பட்டவர்கள் அல்ல என்பதுடன் அவர்கள் பாரபட்சமின்றி நடத்தப்பட வேண்டும் என்பதற்காகவுமே. அரசியல் வன்முறைகளைக் கண்டு எனக்குப் பயமில்லையா என்று என்னிடம் கேட்கப்பட்டது, அதற்கு நான் சொன்னேன் பெண்கள் தேர்தலில் நிற்கும் ஒரே வழிமூலம்தான் எங்கள் அரசியலில் இருந்து வன்முறையை ஓரங்கட்ட முடியும்”; என்று.

போருக்கு பிந்தைய காலத்தில் பாலின நீதியை உறுதிப்படுத்துவது தனிமைப் படுத்துவதால் நடக்க முடியாது. அது பெரும்பாலும் பரந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாகவும் மற்றும் மோதலின் அடித்தளத்துக்கான காரணத்தை விளக்குவதாகவும் உள்ளது,அது இனம், பால்,மதம், அல்லது வேறு வித்தியாசங்கள் எதுவுமின்றி  போருக்கு பிந்தைய புதிய சமூக வரிசையில்; அனைத்து மக்களும் சமத்துவமும் மற்றும் சமூகநீதியும் உள்ளவர்கள் என்பதை பரிந்துரைக்க முயற்சிக்கிறது. எனினும் ஸ்ரீலங்காவில் போருக்கு பிந்தைய மீள்கட்டமைப்பு மற்றும் நல்லிணக்கம் என்பன அத்தகைய நடவடிக்கைகளுக்கு எந்த இலாபமுமின்றி கிட்டத்தட்ட முற்றாக அரசாங்கத்தால் நடத்தபப்படுவனவாகவே உள்ளன. இதனால்தான் ஆண்கள் பெண்கள் என்று எங்கள் அனைவரையும் உட்படுத்தியதான இந்த நாட்டின் அடிப்படை எல்லைக் கோட்டை மீறாமல் ஒரு வழியில் அனைத்து அடையாளக் குழுக்களினதும் உரிமைகளை அங்கீகரிப்பதும் மற்றும் மதிப்பதுமான மீள் கற்பனை செய்யக்கூடியதும் மற்றும் மீள் பேரம்பேசலுக்கு உட்பட்டதுமான ஒரு நடவடிக்கை எங்களுக்கு அவசியம் தேவையாக உள்ளது.

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

நன்றி தேனீ

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்