/* up Facebook

Aug 2, 2013

தமிழ் சமூகத்தில் பெண்கள் அதிகாரத்திற்கு வருவதற்கான இடைவெளி அவசியம் -ஞான சக்தி ஸ்ரீதரன்.


எதிர்வரும் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி சார்பில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியுடன் இணைந்து  பொதுஜன முன்னணியின் வேட்பாளராக நான் போட்டியிடுகிறேன். 30 வருடங்களுக்கு மேலாக அரசியல் சமூக தளத்தில் செயற்பட்டிருக்கின்றேன்.
1970 களின் பிற்பகுதியில் தமிழ் மகளிர் பேரவை, பின்னர் 1980 களின் முற்பகுதியில் ஈழ மாணவர் பொது மன்றம் ஆகியவற்றினூடாக எனது அரசியல் பிரவேசம் நிகழ்ந்தது.
 • இலங்கையில் ஜனநாயகத்திற்காகவும் இனங்களின் உரிமைகளுக்காகவும் 1980களின் முற்பகுதியில் முற்போக்கான பெண்கள் இயக்கம் நடத்திய ஆர்பாட்டத்திலும் சர்வதேச பெண்கள் தினத்திலும் பங்குபற்றி உரையாற்றியமை
 • ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைமை வழிகாட்டலின் கீழ் கிராமப் புறங்களில் உழைக்கும் வர்க்க பெண்களின் மத்தியில் வேலைகளை முன்னெடுத்தமை
 • பால்நிலை சமத்துவத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு கருத்தரங்குகளை சக தோழர்களுடன் இணைந்து நிகழ்த்தியது.
 • தேசிய விடுதலைக்காக போராடுவதாக கூறிக்கொண்ட இயக்கங்களிடையே ஜனநாயகத்தையும், ஐக்கியத்தையும் வலியுறுத்தியது,
 • கிராமப்புறங்களில் பெண்களின் ஊதியத்தில் நிலவிய பாராபட்சம், அநீதிகளுக்கெதிராக போராடியது,
 • மது ஒழிப்பு பிரச்சாரங்களை மேற்கொண்டது.
 • பெண்கள் சொந்தக்காலில் நிற்பதற்கான நிலைமைகளை கண்டறிய முயற்சித்தது,
 • பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுத்தது
 • 1985, 86 இல் சகோதர படுகொலைகள் ஆரம்பித்த போது இவற்றை எதிர்த்து வீதிக்கு வந்து போராட்டம் நடத்தியது
 • படுகொலைகளுக்கெதிராக நெருப்பு தினம் என்ற எதிர்பியக்கத்தை நgnana former nepc memberடாத்தியது
 • 1988 இல் வடக்கு கிழக்கு மாகாணசபை அமைந்த போது முதலமைச்சரின் பொதுசன தொடர்பு அதிகாரிகளில் ஒருவராக செயற்பட்டது.
 • பின்னர் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வடக்கு - கிழக்கு மாகாணசபை உறுப்பினராக அங்கத்துவம் வகித்தது.
 • 1990 தொடக்கம் 1994 வரை நான்கு வருடங்கள் தமிழகத்தில் கழிந்தது. அக்காலத்தில் தமிழகத்தின் முற்போக்கான பெண்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி செயற்பட்டேன்
 • அகதி முகாம்களில் வாழும் பெண்களுடன் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள முடிந்தது.
 • அகதி – தலைமறைவு வாழ்க்கையாகத்தான் எமது பெரும்பாலான காலம் அமைந்தது.
 • 1994ம் ஆண்டுக்குப் பிறகு நாடு திரும்புதல்
 • சந்திரிகா அவர்களின் பதவிகாலத்தின் பின்னர் ஒரு சமூக ஜனநாயக இடைவெளி இருந்தது. பயத்திலிருந்து விடுபட, அதிகார பகிர்வு, யுத்த எதிர்ப்பு ஆகிய நடவடிக்கைகளில் பங்குபற்றியது,
 • குறுகிய காலத்தில் மீண்டும் யுத்தம் ஆரம்பித்து தீவிரமடைந்தது.
 • இக்காலத்தில் கொழும்பில் தலைமறைவு வாழ்க்கை,
 • நாளும் பொழுதும் கொலைகள் என்ற நிலை,
 • மனித உரிமை அமைப்புக்கள், பெண்ணிய அமைப்புக்களுடன் தொடர்புகள்,
 • அன்றாடம் நிகழ்ந்த மரணங்களை எதிர்ப்பதும், மரணச்சடங்குகளில் பங்குபற்றலும்,
 • மரணச்சடங்குகளில் பங்குபற்றுவது, அநியாய மரணங்களை எதிர்ப்பது உயிராபத்தான காலம்,
 • பெண்கள் தாங்கள் பகிரங்கமாக கலந்துரையாட முடியாதவொரு நிலை,
 • ஆனாலும் அபாயங்களை தாண்டி சந்திப்புக்களை மேற்கொண்டோம்.
 • 2002- 2004 சமாதான காலகட்டம் என்று சொல்லப்பட்டதும் சிறப்பானதாக இருக்கவில்லை. கொலைகள் உச்சம் பெற்ற காலமாக இருந்தது.
 • 2009 இற்குப் பிந்திய சூழலில் மீண்டும் மெதுவாக பெண்கள், சமூக மத்தியில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது,
 • கிராமப்புறங்களில் பெண்களுடனான சந்திப்புக்கள், பிரச்சினைகளை அறிந்து கொள்ளல், அவற்றுக்கான தீர்வு
 • 2013 இல் பெண்கள் விழிப்புணர்வு அரங்கத்தை ஏற்படுத்தி மகளிர் தினம் நிகழ்வு .
 • இலங்கையின் தேசிய இன விடுதலை இயக்கங்களிலோ சமூக மாற்றத்துக்கான இயக்கங்களிலோ பெண்களுக்கு இன்றுவரை குறிப்பிடத்தகுந்த முக்கியத்துவம் இருக்கவில்லை.
 • பெண்கள் அரசியல் ஆளுமையுடையவர்களாக  வர வேண்டிய தேவை இருக்கின்றது. அரசியல் அதிகாரம்- இன சமூகங்களிடையே சமத்துவமாக நிகழ வேண்டுமென்று நாம் எவ்வாறு வலியுறுத்துகிறோமோ அவ்வாறே பெண்களின் உரிமைகளும் இருக்க வேண்டும்.
 • பெண்களை இரண்டாம் பட்சமாக நடத்தும் சமூகத்தின் விடுதலை பற்றிய கோரிக்கை முழுமை பெற்றதில்லை. எமது சமூகத்தில் மதம், சாதி நிலமானிய சமூக மரபுகள் என்பன பெண்களை அடக்கி ஒடுக்குவதற்கு உதவிகரமாக இருக்கின்றது.
 • இந்நிலை மாற அதிகார மட்டத்தில் பெண்களின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும்.

வட மாகாணசபைத் தேர்தலில் எமது நிலைப்பாடு

 • பெண் உரிமை தொடர்பில் ஒரு ஜனநாயக புரட்சி நிகழ வேண்டும்.
 • இனப்பிரச்சனைக்கு  அரசியல் தீர்வு, 13வது திருத்த மூலம் முழுமை பெற்றதாகவோ அதனை செழுமைப்படுத்துவதகவும் அமைய வேண்டும்.
 • இலங்கை பல்லினங்களின் நாடு என்ற இலக்கை பூரணப்படுத்துவதாக அமைய வேண்டும்.
 • ஜனநாயக நிறுவனங்கள் மனித உரிமை கட்டமைப்புக்கள் பலப்படுத்தப்படல் வேண்டும்.
 • இதற்காக இடதுசாரி ஜனநாயக சக்திகளுடன் இணைந்து செயற்படுவது.
 • இனவாதம், தீண்டாமை, மதவாதம் போன்றவற்றுக்கு எதிராக இடையறாத விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வது.
 • உண்மைகளை கண்டறியும் குழுவின் அறிக்கையை முழுமையாக அமுல் செய்வதற்காக குரல் கொடுப்பது
 • கடந்த கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக அகதிகளாக வாழும் மக்கள் தமது சொந்த நிலங்களில்  மீள் குடியேறுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பது
 • விளிம்பு நிலை மக்களின் முகத்தை முன்னிறுத்துவது.
 • மக்களின் அன்றாட விடயங்களான உள்ளுர் வீதிகள், அடிப்படை சுகாதார வசதிகள், போக்குவரத்து, கல்வி, மின்சாரம், பாதுகாப்பு போன்ற விடயங்களில் சிறப்பான நிலைமை ஏற்படுத்துவது.
 • அதிகார வர்க்கத்தின் மக்களுடனான கெடுபிடியான உறவுமுறைகளை மாற்றியமைப்பது
 • பெரும்பாலான உள்ளுராட்சி சபைகளின் கையாலாகாதனத்தையும் நிர்வாக சீர்குலைவுகளையும் செப்பனிடுவதற்கான விழிப்புணர்வு செயற்பாடுகளை மேற்கொள்வது
 • சாதாரண மக்களுக்கு நட்பான நிர்வாக அரச கட்டமைப்பொன்றை ஏற்படுத்துவதற்கு பாடுபடுவது
 • எனது தெரிவின் மூலம் இவற்றுக்காக அர்ப்பணித்து செயற்படுவது எனது நோக்கமாகும்.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்