/* up Facebook

May 9, 2013

அறமில்லாக் காதலை சித்திரமாக்கிய டால்ஸ்டாயின் “அன்னா கரீனினா” - கேஷாயினி எட்மண்ட்


ரஷ்ய நாவலாசிரியர் லியோ டால்ஸ்டாய் உலக இலக்கிய மேதை. அவருடைய இலக்கியங்களை ஆராயாத விமசகர்களே இல்லை. ரஷ்யா புரட்சிக்குத் தயாராகிக்கொண்டிருந்த காலத்தில் வாழ்ந்தவர் (1825 - 1918) பிரபு குடும்பமொன்றில் பிறந்தவர். நிலப்பிரபுக்களின் சர்வதிகாரம் நீடித்த அந்த காலகட்டத்தில் சாதாரண விவசாயிகளைக் கூட நேசித்த ஒரு மனிதர். டால்ஸ்டாயின் படைப்புகள் ஒருகாலகட்டத்தில் ரஸ்யாவின் மனச்சாட்சியாகி சாட்டையடிகளைக் கொடுத்திருந்தது. இவரது படைப்புகளுள் “அன்னா கரீனினா” மிகவும் பிரபலமானது. தன் வாழ்வில் சந்தித்திருந்த ஒரு பெண்ணை தன் படைப்பின் நாயகியாக்கி அன்றைய பிரபுவத்துவ வாழ்க்கை முறைகளை உலகிற்கு காட்டியதொரு படைப்பு. 

“தன்னுடைய அண்ணன் (ஸ்டீபன் அர்க்காதியோவிச்) வேலைக்காரியுடன் கொள்கின்ற தகாத உறவு அவனது மனைவிக்கு (டாலி) தெரியவருகிறது. இதனால் சீர்குலைகின்ற இவர்களது குடும்ப வாழ்க்கையினை சீர்ப்படுத்த ஸ்டீவின் தங்கை அன்னா கரீனினா தமையனின் அரண்மனைக்கு வருகிறாள். இவள் உயரதிகாரி ஒருவரின் மனைவி. திருமணமாகி ஒன்பது ஆண்டுகள் கடந்த நிலையிலும் திருப்தியற்றதான வாழ்க்கை இவளுடையது. ஆனாலும் தன் ஒரே மகனுக்காக சகித்து வாழ்கிறாள். தமையனின் வீட்டிற்குகு வரும் போது தன்னோடு பயணிக்கும் பெண்மணியின் மகன் இவளை கண்டு இவள் அழகில் மயங்கி காதல் கொள்கின்றான். கரைகடந்த காதலால் இருவரும்சேர்கின்றனர். ஆனாலும் அவள் மனதில் சந்தோஷமில்லை. தன் புதிய காதலன் மேல் சந்தேகம் கொள்கிறாள். இதனால் ஏற்பட்ட பிரிவில் மீண்டும் அவன் திரும்ப மாட்டான் என்ற செய்தியை கேட்டு வண்டி சக்கரத்தினுள் பாய்ந்து தற்கொலை செய்து கொள்கிறாள்.” இவ்வாறு அமைகிறது இதன் கதைச்சுருக்கம். 

பிழை செய்த ஒரு பெண் ஒருத்தி கசப்பு நிரம்பிய வாழ்வின் பாரம் தாங்காது தற்கொலை செய்து கொள்வதை அருவருப்பின்றி சோகம் தளும்புவதாக முடித்து விடுகின்றமையை டால்ஸ்டாயின் தனித்திறமை என்று தான் கூறவேண்டும். அறமில்லாக் காதலை “அக மனது உணர்ச்சிகளை சிறு சம்பவங்களால் தூண்டப்பட்டு வெளிப்படுத்துகின்றது. இதில் குறை சொல்ல முடியாது. இது அன்னா கரீனினாவின் வாழ்க்கைச் சித்திரம்” என்பதாக முடிக்கின்றார்.

இன்றவில் சொல்வதென்றால் இப்பாத்திரங்களை முழுமையாக கற்பனை என்று சொல்லிட முடியாது. இன்று உலகத்தில் இவ்வாறானவர்கள் வாழ்ந்து கொண்டிருப்பதான உயிர்சித்திரங்களே. அன்னா கரீனினாவை நாயகியாக்கி நியாயப்படுத்திவிடுகின்ற டால்ஸ்டாய் வாழ்வின் தத்துவத்தினையும் சொல்ல மறக்கவில்லை என்பதை இங்கே குறிப்பிட்டேயாக வேண்டும். கணவன் துரோகமிழைத்த போதும் தன் குழந்தைகள், குடும்ப கௌரவத்திற்காக அவற்றினையெல்லாம் பொறுத்துக்கொள்கின்றாள் ஒரு பெண். உண்மையில் எந்தப் பெண்ணும் தன்னுடைய கணவன் எவ்வளவு தான் தட்டில் வைத்து தாங்கினாலும் இன்னொருத்தியுடன் அவனை பகிர்ந்து கொள்ள விரும்பமாட்டாள். அல்லது விடின் அவள் ஒழுக்கமற்றவளாக இருப்பாள் அவனை தட்டிக்கேட்க முடியாதளவு. நல்லவளாக இருந்தும் தன்னுடைய குடும்ப நலனுக்காக மௌனமாக வாழும் போது ஏற்படும் சு+டு இருக்கிறதே சொற்களில் எழுதிட முடியாத வெம்மையது. அந்த வெம்மையின் சூடு தான் அவளது கணவனின் தங்கையின் சீர்கேடுகளாக உருவெடுத்து குடும்ப கௌரவத்தையும் , அவள் உயிரையும் பறித்திருக்கின்றது என்ற யதார்த்த உண்மையையும் எழுதியிருக்கின்றார்.

சகித்து வாழும் குடும்ப பெண்களுக்கு ஆறுதலும், வழி தவறி நடக்கும் பெண்களுக்கு சாட்டையடியாகவும் டால்ஸ்டாயின் “அன்னா கரீனினா” காலம் காலமாக அமையும் என்பதில் ஐயமில்லை. இதனால் தான் மொஸ்கோவில் துயிலுகின்ற இந்த இலக்கிய மேதையின் சாதாரண மண்மேடு போன்றதான சமாதிக்கு இயற்கையே குளிர்காலத்தில் பனித்துளிகளும் ஏனைய பருவங்களில் பைன் மரவிலைகளும் தூவி காலத்தால் அழியா கலைஞனுக்கு தன் நன்றியை தெரிவிக்கிறது.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்