/* up Facebook

Mar 31, 2013

"காட்டைக் காப்பது நாட்டில் உள்ளவர்களின் கடமை” - சி.கே. ஜானு

சி.கே.ஜானு

இந்திய வரலாற்றில் எத்தனையோ ஒப்பந்தங்கள் உருவாகி இருக்கின்றன. 'ஏ.கே.அந்தோணி - சி.கே. ஜானு ஒப்பந்தம்’ அவை அனைத்திலும் இருந்து வேறுபட்டது. தனிச் சிறப்பு கொண்டது!

 ஒரு மாநிலத்தின் உச்ச அதிகாரப் பொறுப்பில் இருக்கும் ஒரு முதல்வருக்கும் காட்டின் கடைசிக் குடிசையில் வாழும் ஒரு பழங்குடி பெண்ணுக்கும் இடையில் உருவான ஒப்பந்தம் அது. சுமார் 25 ஆயிரம்  ஆதிவாசி மக்களுக்கு நிலம் பெற்றுத்தந்து மண்ணுரிமையை உறுதி செய்த ஜானு, கேரளப் பழங்குடிகளின் சமரசமற்ற தலைவி!


''திருவனந்தபுரத்தில் உள்ள கேரள அரசின் தலைமைச் செயலகத்தை சுற்றி 1,000 குடிசைகள் அமைத்து அங்கேயே தங்கிவிட்டோம். போலீஸின் அடக்கு முறைகளுக்கு அஞ்சவில்லை. 48 நாட் கள் போராட்டத்துக்குப் பிறகு ஏ.கே.அந்தோணி அந்த ஒப்பந்தத்துக்குச் சம்மதித்தார். அடக்கி ஒடுக்கப் பட்ட கேரளப் பழங்குடிகளின் வரலாற்றில் அது ஒரு முக்கியமான நாள். ஆனால், எங்கள் போராட் டம் அத்துடன் முடியவில்லை. இன்றும் தொடர்கிறது'' உறுதியான குரலில் பேசும் ஜானு, 'முத்தங்கா போராட்டம்’ நடத்தியபோது, இந்தியாவே திரும்பிப் பார்த்தது.

ஏ.கே.அந்தோணி அரசு  அறிவித்தபடி அனைத்து பழங்குடிகளுக்கும் நிலம் வழங்காததை அடுத்து, 2003-ல் முத்தங்கா காட்டுப் பகுதியைக் கைப்பற்றி குடிசை அமைத்தார்கள் பழங் குடி மக்கள். 'இனிமேல் இது தான் எங்கள் நிலம்’ என போர்முழக்கம் செய்தார்கள். பழங்குடிகளுக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சி களும் ஓரணியில் ஒன்றுசேர்ந்தன. போலீஸ் உள்ளே நுழைந்து அடித்து நொறுக் கியது. ஜானு உள்பட சுமார் 3,000 பழங்குடி மக்கள் கொடூரமாகச் சித்ரவதைக்கு உள்ளாகினர். 'உங்கள் கைகளில் ரத்தக்கறை படிந்திருக்கிறது’ என்று அப்போது ஏ.கே.அந்தோணிக்குக் கடிதம் எழுதினார் அருந்ததி ராய். அண்மையில் 'பூவுலகின் நண்பர்கள்’ நடத்திய பெண்கள் தினவிழாவில் கலந்துகொள்ள சென்னை வந்திருந்த ஜானுவைச் சந்தித்தேன்.


''நான் படிக்கவில்லை. ஏழு வயதிலேயே விறகு பொறுக்கவும் கூலி வேலைக்கும் செல்லத் துவங்கினேன். பிறகு, தையல் வேலை பார்த்தேன். எந்த வேலையுமே மூன்று வேளை கஞ்சிக்கு உத்தரவாதம் இல்லாதது. விவரம் தெரியத் தெரிய, அரசியல் கட்சிகள் எங்கள் ஆதிவாசி மக்களை ஏய்த்து பிழைப்பது புரிந்தது. ஊர், ஊராக அலைந்து திரிந்து எங்கள் மக்களைப் போராட அணி திரட்டினேன். 1992-ல் 'ஆதிவாசிகளின் விகாசன பிரவர்த் தக சமிதி’ என்ற அமைப்பை உருவாக்கிப் போராடினோம். 

எத்தனையோ போராட்டங்கள், கைதுகளுக்குப் பிறகு 'கோத்ர மகா சபை’யைத் தொடங்கினோம். எங்கள் மக்கள் எல்லோரும் வந்து சேரத் துவங்கினார்கள். அந்தச் சபை நடத்திய போராட்டங்கள் மூலம் இதுவரை 25 ஆயிரம் பழங்குடி மக்களுக்கு நிலம் பெற்றுத் தந்துள்ளோம். எல்லோரும் இங்கு வந்துவிட்டால் தங்களுக்கு போஸ்டர் ஒட்டவும், கொடி தூக்கவும் ஆள் இல்லாமல் போய்விடும் என்று பயந்த அரசியல் கட்சிகள், உடனே தங்கள் கட்சிகளில் பழங்குடிகள் பிரிவை ஆரம்பித்தார்கள். சி.பி.எம்., சி.பி.ஐ., காங்கிரஸ், பா.ஜ.க. என அனைத்துக் கட்சிகளும் இப்படிச் செய்தன. 

இந்த மக்கள் எல்லாம் ஒரே அணியில் ஒன்றாக இருந்திருந்தால், பிரச்னை முடிந்திருக்கும். அப்படி முடிந்துவிட்டால், இவர்கள் எதை சொல்லி ஓட்டுக் கேட்டு வருவார்கள்? அதனால் ஆதிவாசிகளைப் பிரித்து வைத்து பிரச்னை முடியாமல் பார்த்துக்கொண்டார்கள். அப்படியே தங்கள் கட்சியில் சங்கம் வைத்திருந்தாலும் மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள். அதனால் பெயரளவுக்கு போராட்டங்களை நடத்தினார்கள். இதில் எந்தக் கட்சியும் விதிவிலக்கு இல்லை!''

''ஆனால், நீங்களும் சில காலம் சி.பி.எம்-மில் இருந்தீர்கள் இல்லையா?''
''இருந்தேன். பழங்குடி மக்களுக்கு ஏதேனும் நன்மை நடக்கும் என நம்பினேன். ஆனால், அவர்களிடம் எந்தக் கோரிக்கை வைத்தாலும், 'மேலிடத்தில் கேட்க வேண்டும்’ என்பது மட்டுமே பதிலாக வரும். அவர்கள் ஆட்சியில் இருக்கும்போதும் அதே பதில்தான். காங்கிரஸுக்கும் சி.பி.எம்-முக்கும் போட்டி இருப்பதைப் போல வெளியே தெரியும். ஆனால், பழங்குடி மக்களை ஏமாற்றுவதில்தான் அவர்களுக்கிடையே போட்டி இருந்தது. இந்த உண்மையை உணர்ந்தவுடன், அங்கிருந்து வெளியேறிவிட்டேன்!''  

'' 'வனத்துக்குள் வனத்துறையை அனுமதிப்பது இல்லை. வனவிலங்கு சரணாலயத்தை எதிர்க்கிறீர்கள்’ என வளர்ச்சிக்கு எதிரானவர்களாக உங்களைச் சித்திரிக்கிறார்களே..?''
''பழங்குடி மக்களாகிய எங்களுக்கு காசு, பணம் சம்பாதித்துவைக்க ஆசை இல்லை.ஆனால், இந்த மண்ணின் மீதான உரிமை நாங்கள் சாகும் வரையிலும் எங்களிடம் இருக்கவேண்டும். எனக்கு ஒரு ஏக்கர் நிலம் இருக்கிறது. அது என் சொந்த நிலம் இல்லை. என் வாழ்க்கை முடிந்த பிறகு அது வேறு ஒருவரின் நிலம். ஆனால், வாழும் வரையிலும் அந்த மண்ணின் மீதான எனது உரிமையை நான் ஒருபோதும் விட்டுத்தர மாட்டேன். நாங்கள் இந்த வனத்தையும், இதில் உள்ள மரங்களையும் தெய்வம் என மதிக்கிறோம். 

வனத் துறையோ, மரம் வெட்டிகளுக்குத் துணை போகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சட்டப் பாதுகாப்புடன் மரம் கடத்துவதற்காக உருவாக்கப்பட்ட வனத் துறை, இன்று வரை அதைத்தான் செய்துகொண்டு இருக்கிறது. அதேபோல வன விலங்கு சரணாலயம் என்று சொன்னவுடன், நகர்ப்புறவாசிகள் நல்ல விஷயம் என்று நினைக்கிறார்கள். ஆனால், இப்படி ஓர் அறிவிப்பை செய்து உலக வங்கியிடம் இருந்து கோடிக்கோடியாகப் பணம் பெறுகிறார்கள். அப்படி வாங்கிய பணத்தில் வன விலங்குகளின் பாதுகாப்புக்கு எனச் செலவிடப்படுவதே இல்லை. ஒவ்வோர் ஆண்டும் எத்தனை யானைகள் தந்தத்துக்காக கொல்லப்படுகின்றன என்பது எங்களுக்குத் தெரியும். 

சுற்றுலா என்ற பெயரில் கூட்டம், கூட்டமாக மக்களை வனத்துக்குள் அனுமதித்து... அவர்கள் குடித்துவிட்டுக் கும்மாளம் போடுகிறார்கள். சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறாக இருப்பதால் யானைகளுக்கு உப்புப் போட்ட உணவு வைத்து விரட்டுகிறார்கள். உண்மையில் இந்தச் சட்டங்களும் சரணாலயங்களும் வருவதற்கு முன்பு ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளாக பழங்குடிகளாகிய நாங்கள் இந்த வனத்தில்தான் வாழ்ந்துவருகிறோம். எந்தக் காலத்திலும் ஒரு பழங்குடி, தந்தத்துக்காக யானையை வேட்டையாடியது இல்லை. காய்ந்த மரத்தின் கிளைகளை ஒடிப்பார்களே தவிர, ஒரு காலத்திலும் பழங்குடி மக்கள் பச்சை மரங்களை வெட்டியது இல்லை. இவற்றைச் செய்யும் வனத்துறைதான் வனத்தின் முதல் எதிரியே தவிர... பழங்குடிகள் அல்ல!''

''பழங்குடிகளின் போராட்டத்துக்கு மற்ற மக்கள் ஆதரவு தருகிறார்களா?''
''ஆதரவு தர வேண்டும். ஏனென்றால் நாங்கள் எங்களுக்காக மட்டும் போராடவில்லை. இந்த அறையில் ஏ.சி. ஓடுகிறது என்றால், இதற்குத் தேவையான சக்தி எங்கள் வனத்தில் இருந்துதான் உருவாகிவருகிறது. நீங்கள் குடிக்கும் தண்ணீருக்கும் எங்கோ இருக்கும் காட்டு மரங்களுக்கும் தொடர்பு இருக்கிறது. இந்த இயற்கைதான் காட்டையும் நாட்டையும் இணைக்கிறது. அதனால்,  எல்லா மக்களும் இந்தப் போராட்டத்தில் பங்குபெற வேண்டும். ஏனெனில் இது காட்டுக்கான போராட்டம் மாத்திரம் அல்ல; நாட்டுக்கான போராட்டமும்கூட!''

''தமிழ்நாட்டு பழங்குடி மக்கள் மத்தியிலும் வேலை பார்த்திருக்கிறீர்கள்தானே?''
''ஆம். நீலகிரி, திண்டுக்கல் பகுதியில் உள்ள பழங்குடி மக்களிடம் கொஞ்ச காலம் வேலை பார்த்துள்ளேன். என் மீது திண்டுக்கல் நீதிமன்றத்தில் நிலப் பறிமுதல் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. கேரளாவில் பழங்குடி மக்களை அரசியல் கட்சிகள் பிளவுபடுத்தி வைத்துள்ளன என்றால், தமிழ்நாட்டுப் பழங்குடி மக்களை என்.ஜி.ஓ-க்கள் பிடித்துவைத்துள்ளன. பழங்குடிகளின் வறுமையை வைத்து புராஜெக்ட் போட்டு சம்பாதிக்கிறார்கள். உணர்வுடன் போராட வருபவர்களை உடனுக்குடன் கண்டறிந்து, 'நாங்கள் சம்பளம் தருகிறோம்’ என்று அழைத்து அத்தோடு காலி செய்துவிடுகிறார்கள். சம்பளம் வாங்கிக் கொண்டு போராட முடியாது. போராட்டம் என்பது உணர்வுடன், மக்களிடம் இருந்து வரவேண்டும். என்.ஜி.ஓ-க்களை அப்புறப்படுத்தும் வரையிலும் அது முடியாது!''

''நீங்கள் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை?''
''இதற்கு முன்பு திருமணம் பற்றி சிந்திக்க நேரம் இல்லை. இப்போது எனக்குக் கொஞ்சம் வயதாகிவிட்டது... கொஞ்சம். (வெட்கத்துடன் சிரிக்கிறார்). என் போராட்ட வாழ்க்கைக்கு இடையூறு இல்லாமல் இதை எல்லாம் புரிந்துகொண்ட ஓர் இணை கிடைத்தால் பார்க்கலாம்!''


''செக்கோட்டை என்ற சின்னஞ்சிறிய ஆதிவாசிக் கிராமத்தில் பிறந்த நீங்கள் படிக்கவில்லை. உங்களிடம் பணம் இல்லை. உங்களுக்கு ஆங்கிலம் தெரியாது. இவற்றை ஒரு தடையாக என்றைக்கேனும் நினைத்தது உண்டா?
''இல்லை. போராட வேண்டும் என்ற உறுதியான எண்ணம் மனதில் இருக்க வேண்டும். அது உண்மையாக இருக்க வேண்டும். அவ்வளவு தான். அது மட்டும் இருந்துவிட்டால் போதும். பணம், படிப்பு, மொழி எதுவும் தேவை இல்லை. அவற்றை ஒரு காரணமாகச் சொல்வது, ஏமாற்று வேலை!''

சந்திப்பு: பாரதி தம்பி, 
 படம்: சொ.பாலசுப்ரமணியன்

நன்றி: ஆனந்தவிகடன், 27-03-13
...மேலும்

Mar 30, 2013

புலம்பெயர் ஈழத்து பெண்கவிஞர்களின் படைப்புகளில் போர் எதிர்ப்புக் குரல் - முனைவர் இரா.செங்கொடிமனித இனத்துக்கு எதிராக ஒடுக்குமுறை எந்த வடிவத்தில் வந்தாலும் அதை எரித்துப் போராடுவது மனிதனின் இயல்பு என்பதை உலக வரலாறு காலந்தோறும் நிரூபித்துள்ளது. தொடக்க காலம் தொட்டே சமூகத்தின் சரிபாதியான பெண் இனத்தின் மீதான ஒடுக்குமுறை மனிதகுலத்துக்கே அவமானச் சின்னமாக இன்றுவரை இருந்து வருகிறது. போரின் போது முதலாவது பாதிக்கப்படுவதும் பெண், இரண்டாவது பாதிக்கப்படுவதும் பெண் என்ற ஒரு கருத்து உண்டு. போரின் போது பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுதல் என்பது உலக வரலாறு முழுக்க பதிவாகியுள்ளது. இதை ஹிட்லரின் நாசிப்படைகள் முதற்கொண்டு அண்மைய ஈழப்போர் வரையிலும் காணமுடியும். போர்க்காலங்களில் பெண்களை சிறையில் அடைத்து கொடுமை செய்தல், பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்குதல் உள்ளிட்ட கொடுமைகளைச் செய்வது அன்று முதல் இன்று வரை நடைபெற்ற எல்லா போர்களிலும் இந்நிகழ்வுகள் பதிவாகியுள்ளது.

ஈழத்துப் பெண்களை நோக்கினால், தமிழினத்துக்கு எதிரான சிங்கள அரசின் அடக்குமுறையும், அதன் விளைவான ஆயுதப் போராட்டமும், பெண்களின் வாழ்க்கையை மேலும் கேள்விக்குள்ளாக்கியது. தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து ஈழத்துப் பெண்கள் அனைத்து நிலைகளிலும் தங்களது பங்களிப்பைத் தந்துள்ளனர். இந்திய இராணுவத்தின் ஆதின் ஆக்கிரமிப்பு வெறிக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து மரணம் அடைந்த அன்னை பூபதி முதல் போர்க்களத்தில் மரணம் அடைந்த பெண்போராளிகள் வரை தமது உயிரை ஏராளமான பெண்கள் அர்பணித்துள்ளனர். அண்மையில் நடைபெற்ற தேசியவிடுதலைப் போராட்டம் வரையிலும் தம்மை இணைத்துக் கொண்டு போராடிய பெண் போராளிகள் பலரும் மடிந்து போயுள்ளனர். 1983-இல் உச்சத்தை அடைந்த இலங்கை இனக்கலவரமும், அதன் தொடர்ச்சியாக இலங்கையில் நடைபெற்று வரும் தமிழினத்துக்கு எதிரான அரச அடக்குமுறையும், அதன் விளைவான ஆயுதப் போராட்டமும் பெண்களின் வாழ்வியலை பலநிலைகளிலும் துன்பத்திற்குள்ளாக்கி இருக்கிறது. இத்தகு பிரச்சினைகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு புகலிடம் தேடிவந்த பெண்களுக்கு தாய்மண் சூழலில் மறுக்கப்பட்ட உணர்வுகள், புகலிடச் சூழல் சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பைத் தந்துள்ளது. தாய்நாட்டின் இனப்போராட்டச் சூழல், அது தந்த இழப்பு இந்திய இராணுவத்தின் கொடுமைகள், உள்நாட்டு  இடம்பெயர்வுகள், இவற்றால் அதிகமாகப் பாதிக்கப்படும் பெண்களின் நிலை, போரை எதிர்கொள்ளும் மனநிலை என இப்பாடுபொருள் நீண்டு செல்வதைக் காணமுடிகிறது. ஈழத்துப் பெண்களால் பேசப்படும், படைக்கப்படும் பெண்ணிய இலக்கியம் எவ்விதமான மேற்கத்திய கோட்பாடுகளின் தாக்கமும் இன்றி உண்மையான பெண்விடுதலையைப் பேசுவதாக இருப்பதற்கு காரணம் போரின் வலியை உணர்ந்த அவர்களின் அனுபவமே படைப்பாக வெளிப்படுவதாலேயே ஆகும். இதனாலேயே புகலிட ஈழத்துப் பெண் கவிஞர்களின் கவிதைகள் தனித்த கவனம் பெறுகின்றன.  இலங்கை இராணுவத்தின் வக்கிரமான செயற்பாடுகளை வெளிப்படுத்தியதன் மூலம் பெரிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியது. கலாவின் `கோணேஸ்வரிகள்’ என்ற கவிதை தமிழ்ப்பெண்களே இந்தத் தீவின் சமாதானத்திற்காக எதாவது செய்யவேண்டுமென்று நினைத்தால், உடைகளை கழற்றி நிர்வாணப்படுத்திக் கொள்ளுங்கள். என் தாயே நீயும் தான், சமாதானத்திற்காய் போராடும் புத்தரின் வழிவந்தவர்களுக்காய் உங்கள் யோனிதையத் திறவுங்கள், அவர்களின் வக்கிரங்களைத் தீர்த்துக்கொள்ளப்படும்.

``வீரர்களே வாருங்கள் 
உங்கள் வக்கிரங்களைத் 
தீர்த்துக் கொள்ளுங்கள் 
என் பின்னால் என் பள்ளித் தங்கையும் உள்ளாள் 
தீர்ந்ததா எல்லாம் 
அவ்வளவோடு நின்றுவிடாதீர்கள் 
எங்கள் யோனிகளின் ஊடே 
நாளைய சந்ததி துளிர்விடக் கூடும் 
ஆகவே, வெடிவைத்தே சிதறடியுங்கள் 
இனிமேல் எம்மினம் துளிர்விடாதபடி 
சிங்கள சகோதரிகளே 
உங்கள் யோனிக்கு இப்போது வேலையில்லை’’

இவ்வாறே போர்க்களத்தில் ஒவ்வொரு வீரனிடமும், எதிரியின் தாயை, தாரத்தைத மகளைப் புணரும் விலங்கு மனம் வார்த்தெடுக்கப்பட்டுள்ளது. சிங்கள இராணுவம் இறந்த பெண்ணுடல் மீதான தங்களது பாலியல் வக்கிரங்களைக் கொட்டித்தீர்க்கும் இராணுவமாக அம்பபப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல பாலியல் வல்லுறவு செய்து விட்டு பெண்ணின் பிறப்புறுப்பில் கிரானைட் வைத்துக் கொலை செய்த காட்டுமிராண்டி இராணுவமாகவும் வெளிப்பட்டிருப்பதை இக்கவிதை வரிகள் வெளிப்படுத்துகின்றன. (கர்ப்பிணிப் பெண்களை பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கிய இராணுவமாகவும்) மன்னம்பேரியை நிர்வாணமாக்கி வீதிவீதியாக இழுத்துச் சென்று, பாலியல் சித்ரவதை செய்து, பின் கொலை செய்த வரலாற்று நிகழ்வு இலங்கை இராணுவத்தையே சாரும்.

மணிப்பூர் மாநிலத்தின் பெண்கள் இந்திய இராணுவத்தினால் படுகொலை செய்யப்பட்ட மனோரமாவின் படுகொலைக்குப் பின் இந்திய இராணுவத்தை எதிர்த்து நிர்வாணத்தையே ஆயுதமாக ஏந்தி இந்திய இராணுவத்தின் வெறிச்செயல்களை அம்பலப்படுத்தினர். இதே அனுபவத்தையே கலாவின் `கோடுணஸ்வரிகள், கவிதையிலும் நம்மால் காணமுடிகிறது. புறநானூற்றுத் தாயின் வீரத்தை பெருமிதமாகச் சொல்லி ஆண்படைப்பாளர்கள் பேற்ப்பரணி எழுதியுள்ளனர். கலாவின் `விதைத்தவைகள்’ என்ற தலைப்பிலான கவிதை இன்றைய போர்முனையிலிருக்கும் ஒரு தாயின் வலியைக் கூறுவதாக அமைந்துள்ளது. கசாப்புக் கடைக்காரனின் வாசலில் காத்திருக்கும் ஆடுகளைப் போலக் காத்திருக்கிறோம். நம்மையே பலிகொண்டு ஒரு தேவதையின் ஆட்சியை நிலைநிறுத்துவதாகச் சொல்லுவதை நம்ப வேண்டாம்.

"ஆனால் என் தாய்
மண்டியிட்டுக் கதறுகிறாள்
சிதறுண்டு போன
உடலங்களையாவது
தன்னிடம் தரும்படி
அவள் அழுது புலம்புகிறாள்.
இரத்தத்தில் குளித்து
பிய்ந்து போய் இருக்கும்
உடல்களின் மென் நெற்றி
பொட்டுகளில்முத்தமிட்டு
புதைகுழியில் மூடுவதற்காய்.

இப்போதும் மடுமாதா தன்
வயிற்றிலும் மார்பிலும்
அடித்துக் கதறுகிறாள்.
அந்த 38 பேரின் சாட்சியாக
அவள் உள்ளாள்.

நீங்கள் என் தாயின்
வயிற்றில் விதைத்தவைகள்
அவள் கால்களுக்கிடையால்
இரத்தமாய் கொட்டும்
அப்போது நீங்கள்
அதிர்ச்சியடைய வேண்டாம்"

தாய்நிலம்  தன் பெண்களின் உயிர்குடிக்கும் எமனாகிவிட்டதையும், தமிழ்ப்பெண்களை ஈனப்பிறவியாய் நடத்தும் பேரினவாதிகளின் இழிசெயலையும், அவர்களின் கொலைவெறிச் செயலையும் துக்கம் கலந்த குரலில் வெளிப்படுத்தியிருக்கிறார். இந்நிலையில் உலக அளவில் யுத்தம் பெண்கள் மீது திணித்திருக்கும் அநீதியைப் பின்வரும் புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.

*``யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்களில் பெண்களும், சிறுவர்களுமே அதிகளவு இருக்கிறார்கள். யுத்தம் இடம் பெறும் பகுதிகளில் இருந்து பெண்கள் மற்றும் சிறுமிகள் கடத்திச் செல்லப்படுவது 85 சதவீதமாக இருக்கின்றது. 
*கொங்கோவின் உள்நாட்டுப் போரில் யுவிரா பிரதேசத்தில் 2002 ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு 40 பெண்கள் வீதம் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். 
*உகாண்டாவில் 1994இல் இடம்பெற்ற பாரிய இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளில் 250000 முதல் 500,000 வரையான பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். 
*சியராலியோனில் இடம்பெயர்ந்த பெண்கள் 94 சதவீதத்தினர் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். 
*ஈராக்கில் 2003-இல் இடம்பெற்ற யுத்தத்தின் போதும், அதன் பின்னரும் பெண்களும் சிறுமிகளுமாகக் குறைந்தது 400 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அவ்வாறு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமிகளில் 8வயது நிரம்பிய சிறுமிகளும் அநேகம். 
*கொசோவாவில் 30 முதல் 50 சதவீதம் வரையான பெண்கள் சேர்பிய இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர். 
இவ்வாறாக போர்க் காலங்களில் எதிரித் தரப்பின் பெண்கள் இராணுவப் படையினருக்கு விருந்தாக ஆக்கப்படுவதும், பலருக்கான பாலியல் போகப் பொருளாக, பாலுறவு இயந்திரமாக ஆக்கப்படுவதும், உலகம் முழுவதிலும் நடைபெற்ற அனைத்துப் போரிலும் தெரிய வருகிறது. இதைப் போலவே அண்மையில் முடிவுற்ற இலங்கைப் பேரிலும் பெண்கள் மீது வன்மம் திணிக்கப்பட்டுள்ளது பின்வரும் செய்திகள் உறுதிசெய்கின்றன.

இலங்கை வாழும் தமிழர்களை முற்றாக அழிக்கும் இனவெறி நடவடிக்கைகளை மேற்கொண்ட சிங்கள அரசு போரினால் மட்டும் இன்றி பல்வேறு வழிகளிலும் தமிழ் இனத்தின் வளர்ச்சியை முடக்கியது. இலங்கையில் போர் நடைபெற்ற வன்னிப் பகுதியில் இருந்து வெளியேறி வவுனியாவுக்கு வந்த கருவுற்றிருந்த தமிழ் பெண்களின் கருக்களை கலைக்குமாறு சிங்கள இராணுவ அதிகாரிகளால் வவுனியா மருத்துவமனை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. இது தமிழர்களின் வருங்கால சந்ததியினரும் இலங்கையில் இருக்கக்கூடாது என்பதற்காக திட்டமிட்ட நடவடிக்கையாகும். மேலும் அது ஒரு இனத்தை கருவிலேயே அழித்தொழிக்கும் செயலுமாகும். இத்தகு கொடுமையான மனிதகுலச் சீரழிவையே தன் கவிதைகளின் சுட்டுகிறார் ஆஸ்திரேலியாவில் இருந்து கவிதை எழுதி வருகின்ற பாமதி. அவருடைய `சமாதானம்’ என்ற தலைப்பிலான கவிதை பின்வருமாறு,

``சமாதானப் பறவைகளே 
உங்கள் இறக்கைகள் 
எம் மக்களுக்காய வலுப்பெற வேண்டும். 
விடியாத அகதி முகாமில் 
காத்திருக்கும் சிறுவர்களைப் பார் 
கூட்டுப் புழுக்களானார்கள் பார் 
........................................................... 
உடைமைகளையும் குழந்தைகளையும் 
தொலைத்துவிட்டுச் 
சமாதிகளுக்கு முன் வாய்பொத்தி அழும் 
தாயுடன் நீ பேசு!
சமாதானத்தின் தேவை பற்றி 
ஊதியத்திற்காய் விடை பெற்றான் 
சடலமாய் ஒப்படைக்கப்பட்டான் 
அங்கே தலை அடித்து அழும் 
அந்தச் சிங்களத் தாயுடன் நீ பேசு! 
எங்கள் மண்ணில் 
குதறப்பட்டுக் கிடக்கும் 
இயற்கையின் பாடலைக்கேள் 
அது பேசும்

யுத்தபூமியில் சமாதானத்தின் தேவை பற்றி பார்க்குமிடமெல்லாம் மனித உயிர்கள் அழிக்கப்படுகையில், மனிதநேயமே இப்பூமியில் தொலைந்து விட்டதாக எண்ணிய படைப்புமனம் அமைதி பற்றியும், அமைதியின் தேவை பற்றியும் வலியுறுத்திப் பேசுகிறது.  `யுத்தத்தால் தொலைந்தோம்’ என்ற தலைப்பிலான பாமதியின் கவிதை போரினால் சீரழிந்து கொண்டிருந்த தமிழ்ச் சமுதாயத்தினை அடையாளம் காட்டுகிறது.

``மழலைகளையும் முட்களையும் ஒன்றாகப் புதைத்து 
மூடிய குப்பை மேடுகளுடன் 
என் தேசம் பிணக்காடாகும் 
நானை மனிதர்கள் நடக்கவுள்ள தெருக்களில் 
தேசியக் கொடிகள் மட்டுமே மிஞ்சிக் கிடக்கும் 
ஆயிரக் கணக்கான இந்தச் சமாதிகளிடமா 
விடுதலையைக் கொண்டாட முடியும்? 
விட்டு வையுங்கள் 
யாராவது ஒரு மனிதனையாவது விட்டு வையுங்கள் 
யுத்தத்தால் அடிந்து போன எனது மண்ணையற்றி 
எழுதக் குருதி நிரம்பிய பேனாவையும் 
மனித நேயத்தை 
உணர்த்த விட்டுவையுங்கள்

என்பதாக அமைந்துள்ள வரிகள் போரைத் தமிழ் மக்கள் மீது திணித்தவர்களின் மீதான கோபத்தின் வெளிப்பாடாக அமைந்துள்ளது.

 ``உனது வாழ்வு இனம் மதம் பால்’ 
அடிப்படையின் கீழ் 
இக்கணத்தில் இருந்து நிர்ணயிருக்கப்படும் 
உன் காலங்கள் 
அக முகாம்களிலோ 
ஆயுதங்களுடன் பயிற்சி முகாம்களிலோ? 
நாங்கள் வாழ்வதற்கான அர்த்தத்தைத் 
தொலைத்துப் பல நாட்கள் ஆகின்றன 
எங்களிடம் பகிர்ந்து கொள்ள நம்பிக்கைகளோ 
வசந்தங்களோ இல்லை
நீ உறங்கிக் கொண்டிருக்கும் 
இப்பரப்பில் 
எக்கணமும் குண்டுகள் வீசப்படலாம் என்பதே 
இப்போதெல்லாம் உண்மை’’

என்று ஈழத்தில் பரிதவித்துக் கொண்டிருக்கும் எத்தனையோ ஆயிரம் தாய்மார்களின் உள்ளக்குமுறலை, பதட்டத்தை இக்கவிதை வெளிப்படுத்தியுள்ளது.

தெருவில் போகும் ஒவ்வொரு பெண்ணையும், இச்சையான பார்வையுடன் அலையும் ஆண்களை, நாய்மாதிரி வாலை ஆட்டிக்கொண்டு பெண்களின் பின்ன்hல் சுற்றுபபன், இரத்த வெறியுடன் அலையும் ஓநாய் போன்றவன் என்று பல வகைகளாக பிரித்துக் காட்டுகிறது. ஆழியாளின் `மன்னம்பேரிகள்’ என்ற கவிதை. இக்கவிதையில் வரும் பெண்ணுக்கு தெருவில் உலாவும் தன்னைத் துரத்தும் மிருகங்களைக் கண்டவுடன் மன்னம்மேரியையும், கோணேஸ்வரியையும் துரத்திய மிருகங்கள் நினைவுக்கு வருகிறது.

 ``காலைப் பொழுதுகள் பலவற்றில் 
 வீதி வேலி ஓரங்களில் 
 நாற்சந்திச் சந்தைகளில் 
 பிரயாணங்கள் பலவற்றில் கண்டிருக்கிறேன்.......... 
 அதன் கண்கள் 
 நான் அறியாததோர் 
மிருகத்தின் கண்களைப் பறைசாற்றிற்று 
அவற்றின் பாலைத்தாகம் 
அறியாப் பாஷையை 
எனக்குள் உணர்த்திற்று 
அழகிய மன்னம் பேரிக்கும் 
அவள் கோணேஸ்வரிக்கும் 
புரிந்த வன்மொழியாகத்தான் 
இது இருக்குமென 
அவதியாய் எட்டிக் கடந்து போனேன்’’

(கவிதையில் வருகிற மன்னம் பேரி (22), 1971 ஏப்ரல் 16இல் படையினரால் கைது செய்யப்பட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டவர் என்கிற குறிப்பையும், கோணேஸ்வரி (33) அம்பாறைசென்றல் கேம்ப்-1 ஆம் காலனியைச் சேர்ந்தவன். 1997 மே 17ஆம் நாள் இரவு படையினர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியப் பின்னர் அவளின் பெண்உறுப்பில் கிரனைட் வைத்து வெடிக்கச் செய்துச் சென்றனர்.

போர் எந்த அளவிற்கு ஈழத்து பெண்களின் வாழ்வியலைப் பாதித்துள்ளது என்பதை சோகம் ததும்பவெளிப்படுத்துவதாக வறம்சவத்தினியின் `விசும்பும் வாழ்க்கை’ என்ற தலைப்பிலான கவிதை அமைகின்றது.

``மண்ணில் வேர்விட முடியாத 
வாழ்க்கை விசும்பிற்று 
வேதனைப் புண்களைத் தின்றன 
இழவு வீட்டுக்குள் எப்படிச் சோறாக்குவது? 
என்பதைக் கற்றுக் கொண்டனர் மக்கள் 
இடிவிழுந்த அதிர்வில்தான 
இப்போ எல்லாம் நடக்கிறது 
துலாக்களுக்கும் வளைகளுக்குமாக 
வெட்டப்பட்ட நான்
பதுங்கு குழிகளுக்காகவுந்தான் 
பிணங்கள் (அ) அரிசியை வேகவைப்பதற்கும் 
கால காலத்துக்கும் சபிக்கப்பட்ட 
ஒரு நிலத்தின் மனச்சாட்சியாக 
நான் புலம்பிக் கொண்டிருக்கிறேன்’’

போர்ச்சூழலில் தன் உடமைகளை இழந்து வெட்ட வெளியில் குடும்பம் நடத்தும் நிலையிலும், அடிப்படை வசதிகள் கூட இல்லாத அகதிகள் முகாம்களில் வாழும் நிலையில் பெண்கள் மிக மோசமான சூழலையே அனுபவிக்கக்கூடும். ஒரு பெண் வெட்டவெளியில் நின்று குடும்பம் நடத்துவது அவலமான பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும். இவ்வாறான ஒரு சூழலில்அதனை அனுபவித்தே ஆகவேண்டிய நிலையில் உள்ள அகதியாக்கப்பட்ட ஒரு பெண்ணின் அவலக்குரலாக இக்கவிதை ஒலிக்கிறது.

இவ்வாறில்லாமல் யுத்தங்கள் பலவற்றின் போது தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதற்காக பெண் பாலியல் தொழிலில் தள்ளப்படுகிறாள். இலங்கை அறுராதபுரத்தில் இராணுவத்த்தனரை நம்பியே மிகப்பெரிய அளவில் பாலியல் விடுதிகள் நடத்தப்படுகின்றதாம். எல்லையோர கிராமங்களில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களும், கணவனை இழந்தப் பெண்களும் இதில் ஈடுபடுத்தப்பட்டனர். இவ்வாறான விடுதிகள் இராணுவ அதிகாரிகள் சிலரது சொந்த விடுதிகளாகவும் உள்ளதாக பெண்கள் அமைப்பின் அறிக்கைகள் பலவற்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

இவ்வாறான வாழ்க்கை வாழ்கின்ற பெண்களின் வாழ்வியலுக்கு பாலியல்  தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு உக்ரைனைச் சேர்ந்த 19வயது நிரம்பிய அகதிப் பெண் தமாராவின் கூற்றை இங்கே பதிவு செய்யலாம். இவள் இஸ்ரேலின் பழைய தலைநகரமான ரெரல அவின் மசாச் நிலையம் ஒன்றில் பணிபுரியும் பால்வினைத் தொழிலாளி.

``என்னால் முடிந்தாலும், நான் இப்போது திரும்பிப் போவேன் என்பதில் எனக்கு நிச்சயம் இல்லை. நான் அங்கு போய் என்ன செய்வேன்? ஒரு பாலுக்காக கியூவில் நிற்பது அல்லது எந்த கூலியுமற்று ஒரு தொழிற்சாலையில் வேலை செய்வது’’ இப்படியாக அவளுடைய கருத்துக்கள் வெளிப்படுகின்றன.

புகலிடப் படைப்பாளிகளில் முக்கியமான பெண் படைப்பாளியான லஷ்மி சொல்வதைப் போல, அமெரிக்காவில் செவ்விந்தியர்களுக்குப் பின், ஆப்பிரிக்காவில் நீக்ரோக்களுக்குப்பின், ஜெர்மனியில் யூதர்களுக்குப் பின், இன்னும் இன அழிப்புகளுக்குப்பின், இன்று பெண் இனத்திற்கு எதிரான மானிட அழிப்புகள் என்றும் இல்லாதவாறு மிகப்பெரிய பரிமாணத்தை அடைந்துள்ளது என்று கூறுவது நோக்கத்தக்கது. முடிவாக ஒரு பண்பாட்டின் மனச்சாட்சியாக அமைவது கலையும், இலக்கியமுமே என்ற வகையில் இன்றைய காலச்சூழலில், போருக்கு எதிரான குரலாகப் புகலிட ஈழத்துப் பெண்கவிஞர்களின் கவிதைகளை நோக்க முடிகிறது.

bbaskeey@gmail.com

நன்றி - ஜியோ தமிழ்
...மேலும்

Mar 29, 2013

பெண்ணுடலும் பாலியல் வன்முறையும் - கு.அழகர்சாமிபுதுதில்லியில் 23-வயது நிரம்பிய ஒரு மருத்துவ மாணவியின்(physio therapist) மேல் நடத்தப்பட்ட பாலியல் வன்முறை இந்திய சமூகப் பிரக்ஞையில் அதிர்ச்சியையும், அரசுக்கு இனிமேலும் வெறுமெனக் கைகளைப் பிசைந்து கொண்டிருக்க முடியாது என்ற கட்டாயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதே சமயத்தில் எத்தனையோ பாலியல் வன்முறைகள் கண்டு கொள்ளப்படாமல் போய் விட்டன என்பதையும் மறக்க முடியாது. அவற்றையும் உள்ளடக்கிய தீவிரம், புதுதில்லியில் நடத்தப்பட்ட பாலியல் வன்முறைக்கெதிரான வலுவான எதிர்வினைகளிலும், போராட்டங்களிலும் உட்கிடையாய் இருக்கிறது என்று அரசு எடுத்துக் கொள்வதுதான் சரியானதாக இருக்கும். பெண் உரிமைகள், பாலியல் வன்கொடுமைகள் பற்றிய கருத்தாக்கங்களளைக் கட்டுரைகளிலும், ஊடகங்களிலும் அறிவுஜீவிகள் அலசுவது புதிதல்ல. ஆனால், குறிப்பிடத்தக்கவாறு முதன்முறையாய் நடைமுறையில் பாலியல் வன்முறைக்கெதிரான போராட்டம் மக்களால், குறிப்பாக மத்தியதர வர்க்கத்தால், புதுதில்லியின் ராஜபாட்டைகள் அதிருமாறு நடந்திருக்கிறது. அதே சமயத்தில், பாலியல் வன்முறைகள் ’பெண்ணுடல்’’ என்பதை மட்டும் மையப்படுத்தி இருக்காமல், ஜாதி, பொருளாதார ரீதிகளிலும் தம் உக்கிரத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கின்றன என்பதையும் புதுதில்லியின் பாலியல் வன்முறைக்கெதிரான எதிர்வினைகள் கணக்கில் எடுத்துக் கொள்வதாக இருந்தால் தான் போராட்டத்தின் அதிர்வுகள் பட்டிதொட்டிகளிலும் பரவி தேசியப் பெண்ணிய எழுச்சியாய்ப் பரிணமிக்க முடியும்.

புதுதில்லியில் நடத்தப்பட்ட பாலியல் வன்முறை பற்றிய கருத்துக்கள் பல்தரப்புகளிலிருந்தும் பல்விதமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அந்தக் கருத்துக்களை இப்படி தொகுக்கலாம்.

பெண்கள் தங்கள் உடைகளில் கவனமாக இருக்க வேண்டும். பெண்ணுடல் கவர்ச்சி காட்டும் உடைகள் ஆண்களிடம் பாலியல் வன்முறையைத் தூண்டுகின்றன.

பெண்கள் , குறிப்பாக வேலைக்குப் போகும் பெண்கள், இரவு வேளைக்கு முன்னாலாயே வீடுகளுக்குத் திரும்பி விட வேண்டும்.

பெண்கள் தங்கள் நடத்தைகளில் , ‘இலக்குவன் கோடு/எல்லை’( Lakshman reka) உள்ளது என்பதை மறக்கக் கூடாது.

பெண்கள் ஆபாசமாக தங்கள் உறுப்புக்களை ‘ஐட்டம்’ பாட்டுகள்(Item songs) போன்ற நிகழ்ச்சிகளில் பண்டப்படுத்துவது (commoditisation) காமத்தை உசுப்பி விடுவதாயும், அவர்களுக்கெதிரான பாலியல் வன்முறைகளுக்கு மறைமுகக் காரணமாயும் அமைகின்றன.

பெரும்பாலான இக்கருத்துக்கள் பெண்ணுடலை மையப்படுத்தியதாய், ஆணாதிக்கவாதிகளின்(male chauvinists), பெண்களிலும் சிலரின் ஆணாதிக்கவாதிகளின் கண்ணோட்டத்திலான கருத்துக்களாய் உள்ளன.

இந்திய சமூகத்தில் ’பெண்ணுடல்’ பற்றிய பிரக்ஞை தன்னியல்பாய் இருப்பதாய்த் தோன்றவில்லை. ஒருபுறம் அடி முதல் முடி வரை தேவி ஆராதனையாக இருக்கும். இன்னொரு புறம், பெண் உடல் காமக் கலன் என்று இகழ்ச்சியாக இருக்கும். ஆராதனையானாலும், இகழ்ச்சியானாலும், இந்நிலைகள் ஆணியவாத மையத்திலிருந்து பெண்களை விளிம்பு நிலையில் பார்க்கும் கண்ணோட்டஙகள் தாம். இன்னும் நம் திருமணங்களில் நடப்பது கன்யாதானம் தானே. ஒரு பெண் பிக்குணியை வழிமறித்து ஆணொருவன் பாலியல் கண்ணோட்டத்தில் அணுகிய நிகழ்ச்சிக்குப் பின், புத்தர் பெண் பிக்குணிகள், தனியாய் வழிகளில் செல்வதும், உறங்குவதும் கூடாது என்று விதிமுறையாக்கினார்.(Old Path White Clouds, Thich Nhat Hanh(2011)). கவர்ச்சி உடை அல்லது இலக்குவன் கோடு/எல்லை என்பதெல்லாம் காண்பவரின் கண்ணோட்டம்(perception) தான். சிறுமிகள் கூட பாலியல் பலாத்காரத்துக்கு(rape) உட்படுத்தப்படுகிறார்களே எப்படி? 2011-ல், புகார் செய்யப்பட்ட(reported crimes) 24206 பாலியல் பலாத்காரங்களில், 10 வயதுக்குட்பட்ட சிறுமியரின் எண்ணிக்கை வீதம் 3.6%; 10-14 வயதுக்குட்பட்ட பருவத்தினரின் எண்ணிக்கை வீதம் 7%(National Crime Records Bureau Report,2011). ஒரு ஆணாதிக்கவாதிக்கு இருக்கும் பிரச்சினையே பொதுவெளியில்(public space)ஒரு பெண்ணைப் பெண்ணுடலாய்ப் பார்க்காமல், விகற்பமின்றி சக தோழமையுடன் எதிர்கொள்ளும் பண்பும் பக்குவமும். ஐட்டம் பாட்டுகளில் பெண்ணுடல் ‘பண்டப்படுத்தப்படுவது’ பொதுவெளியில் ஆண்களின் மனக் கட்டுப்பாட்டிற்கு அசெளகரியமானதென்றால், தொன்று தொட்டு வரும் ‘பரத்தமை’ மட்டும் இருட்டில் எப்படி செளகரியமாய்ப் போனது? இது ஆணாதிக்கவாதத்தின் ஒரு இரட்டை நிலை. நம் ஊர்களில் அன்று நடந்து கொண்டிருந்த ‘ரிக்கார்டு டான்ஸ்கள்” தாம் இப்போது ஊடகங்களில் ’ஐட்டம்’ பாட்டுகளாய் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றன. பெண்ணுடலின் கவர்ச்சி பெண்கள் மேலான பாலியல் வன்முறைகளுக்கான தூண்டல்கள் என்றெல்லாம் ஆண்நோக்கில் பேசி தம் பொறுப்பைத் தட்டிக்கழித்து பெண்களுக்கான பொதுவெளியை ஆணாதிக்கவாதிகள் குறுக்கி விட முடியாது. ‘பெண்ணுடல்’ என்பது ஆளப்பட வேண்டியது என்ற ஆணாதிக்கத்தின் பிரக்ஞை தான் அடி சரடாய் உள்ளது. ஏன், பெண்ணுடல் பற்றி பெண்கள் சிலருக்கே பிரக்ஞை இல்லாமல் இல்லை. சில கிராமப் புறங்களிலும், நகர்ப் புறங்களிலும், பேருந்துகளில் பயணம் செய்யும் போது தற்செயலாய் ஆணுடல் பட்டு விட்டாலும் ‘உண்டு இல்லை’ என்று சண்டைக்கு வருகின்ற சில பெண்கள் இல்லாமல் இல்லை. இந்தப் பிரக்ஞை உடை சார்ந்ததல்ல.

சமூகத்தில் , குறிப்பாக கிராமங்களில் ‘நீ ஒரு பெண்ணுடல்’ என்று தான் ஒரு பெண் குழந்தைப் பருவத்திலிருந்து முதுமைப் பருவம் வரை வரையறைப்படுத்தப் படுகிறாள். ஆக, ஒரு பெண்ணுடல், ஆணுடல்களால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படும் போது, அதற்கெதிரான எழுச்சியும் அதிகாரமும் பெண்களின் கைகளில் இருக்க வேண்டும். சராசரித் திரைப்படங்களில், கதாநாயகியின் பெண்ணுடல் வில்லன்களின் ஆணுடல்களால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படும் போது கதாநாயகனின் ஆணுடல் தான் காப்பாற்ற வரும்; அதனாலே கதாநாயகி கதாநாயகனைக் காதல் கொள்வாள்!. இப்படி பெண்ணுடலைச் சுற்றி ஒரு சிலந்தி வலையை ஆண்களே சொல்லிச் சொல்லி பெண்களாகவே பிண்ணிக் கொண்டது போன்ற மாய்மாலம் ஆணாதிக்கவாதிகளால் கட்டமைக்கப்படுகிறது. மிக மோசமானவை பெண்ணுடலை மையப்படுத்தி எழுதப்படும் கணக்கற்ற சினிமாக் காதல் பாடல்கள். கேட்கப் பொறுக்காத இந்த நிலை மாற ,ஒரு பெண் திரைப்படக் கவிஞர் வரக் கூடாதா என்றும் தோன்றுகிறது.

புதுதில்லியில் நடந்த பாலியல் வன்முறையில் , பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட பெண் ஒரு மருத்துவ மாணவி. இரவில் ஆண் துணையில்லாமலும் பேருந்தில் ஏறவில்லை. அவளின் படிப்போ, சமூக நிலையோ, ஒரு ஆண்துணை கூட, இங்கு பேருந்தில் இருந்த ஆணாதிக்க அறுவர்களின் பார்வையில் ஒரு பொருட்டாக இல்லை. இரவில் பயணம் செய்யும் ’ஒரு பெண்ணுடலாய்த்’ தான் அந்தப் பெண்ணை ஆறு ஆணுடல்கள் எதிர்கொண்டிருக்கின்றன; பார்த்திருக்கின்றன. இந்தப் பார்வையும் அணுகுமுறையும், ஆறு ஆண் உடல்களுக்கு ஒரு பெண்ணுடல் இரையானது என்பது எவ்வளவு குரூரமோ அவ்வளவு குரூரமானது; ஏனென்றால், இந்த விதமான பார்வையில் தான் ,அணுகுமுறையில் தான் சராசரி வாழ்க்கை நடை முறைகளில், எத்தனையோ ஆணாதிக்கவாதிகள் பெண்ணுடல்களைக் கண்களால் விழுங்குகிறார்கள். இந்த அணுகுமுறை ஆணாதிக்கவாதிகள் சிலரிடம் வக்கிரமாய்த் துணிச்சல் பெறும்போது வெளிப்படையான பாலியல் வன்முறையாகப் படம் எடுக்கிறது. பல சமயங்களில்,உயர் நிலை, பதவி, அந்தஸ்து, வசதி, ஜாதி- போன்றவற்றில் எதுவொன்றோ அல்லது எல்லாமோ பக்கத் துணையாகும் போது , இந்த வக்கிரத் துணிச்சல் தீயுரசிக் கொழுந்து விட்டெரிகிறது உயர் மட்ட பாலியல் வன்முறைகள்- உதாரணமாக சில அரசியல்வாதிகளின், மடாதிபதிகளின், சமூகத்தில் செல்வாக்குள்ளவர்களின் பாலியல் சீண்டல்கள்- இந்த வகையைச் சேர்ந்தவை தாம். அதே சமயத்தில் சமூகத்தின் மேல்மட்டத்தில் இருக்கின்ற பெண்களுக்கே அவர்களின் பதவி, அந்தஸ்து, வசதி போன்ற நிலைகள் அவர்களைப் பாலியல் சீண்டல்களிலிருந்தோ, வன்முறைகளிலிருந்தோ முற்றும் காக்கும் கவசமாக இருக்க உதவாத போது, கீழ்மட்டத்தில் இருக்கும் பெண்கள் நிலைமையை என்ன சொல்வது? மிகவும் மோசமானது என்னவென்றால், ஆணாதிக்கவாதிகளின் இந்தப் பாலியல் துணிச்சலுக்கு சராசரித் தனமான திரைப்படங்களில் தரப்படும் ஒரு சுழற்சி(spin). ’கழி பெருங்காதல்’ என்று காட்டப்படும் பாலியல் துணிச்சலில், கதாநாயகி தான் தன்னுடைய பெண்ணுடலை கதாநாயகனின் ஆணுடல் மேல் விழுந்து விழுந்து ஆடுவாள். இப்படி பெண்களின் பாலியல் தூண்டல்கள் ஆண்களின் மேல் அவிழ்த்து விடப்பட்டது போன்று கட்டமைக்கப்படும் திரைப்படக் காட்சிகளில் ஆணாதிக்கவாதிகளின் உட்கிடை வக்கிரம் பெண்கள் மேல் சுமத்தப்ப்டும் பொய்மைகள் மலிந்து போய்க் கொண்டிருக்கின்றன.

ஒட்டு மொத்த வெகு ஜனக் கலாச்சாரமும், ஆணாதிக்க சமூகச் சூழலும், இன்னும் பெண்ணுக்குத் தன் உடல் மேலான உரிமையையும், சுதந்திரத்தையும் மறுக்கிறது அல்லது கட்டுப்படுத்துகிறது. அதற்குப் பெண்ணுடலையே காரணமாகக் காட்டும் அபத்தம் தான் புது தில்லியின் பாலியல் வன்முறை குறித்த மேற்சொன்ன பல்வேறு ஆணாதிக்க எதிர்வினைகள் எதிரொலிக்கின்றன. இதற்கான தீர்வு மூன்று கோணங்களிலிருந்து நோக்கப்பட வேண்டியது. ஒரு கோணம் பாலியல் வன்முறைக்கெதிரான சட்டம், தண்டனை என்பவற்றைச் சார்ந்தது. பாலியல் வன்முறைக்கெதிரான சட்டங்களும், தண்டனைகளும் கடுமையாக்கப்பட்டால் ,அவை பாலியல் குற்றங்களுக்கான அச்சுறுத்தலாக(deterrance) இருக்கலாம் என்று ஒரு நம்பிக்கை. ஆனால் பெண்ணுடலைப் பற்றிய ஒரு சரியான புரிதலுக்கு எப்படி இது உதவும்? அடுத்த கோணம், பால்(gender) குறித்த ஒரு புரிந்துணர்வைச் (sensitisation) ஒரு சமூகப் பொறுப்பாகக் கடைப்பிடிப்பதும், வெகுவாகச் சமூகத்தில் எடுத்துச் செல்வதும். இதில் ஊடகங்களின், வணிகக் குழுமங்களின் பங்கு முக்கியமானவை.

அவை பால் நடுநிலையிலான(gender neutral) கருத்தாக்கங்களையும், விளம்பரங்களையும் வரைவித்து, ஊக்குவித்துச் செயல்படுத்துவதில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்த முடியும். மூன்றாவது கோணம் பாதிக்கப்படும் பெண்கள் சமூகத்திடமிருந்து வர வேண்டியது. பெண்கள் தாம் தங்கள் உடல்களுக்கு உரிமையும், சொந்தமும் கொண்டவர்கள் என்பதை எந்தச் சவால்களிலும், இன்னல்களிலும் விட்டுக் கொடுக்காதது முதலில் அவசியம். இதற்கான வழிமுறைகள் என்னவென்று சொல்வது எளிதல்ல. இந்தக் கட்டத்தில் பெண்களை ’ஆளுமைப்படுத்தல்’ (empowerment) என்பதை ’ஆண்மைப்படுத்தல்’ (masculinisation) என்பதோடு குழப்பிவிடக் கூடாது. கராத்தே போன்ற தற்காப்பு பயிற்சிகள் பெண்களுக்குப் பரிந்துரைக்கப்படுகின்றன. ஆனால், கராத்தே எல்லாப் பெண்களுக்கும் சாத்தியமாகுமா? பால் நடுநிலையிலான உடைகள் புது தில்லி போன்ற பெரு நகரங்களில் புதிதல்ல. அப்படியிருந்தும் புது தில்லி “கற்பழிப்பின் தலை நகர்’ என்ற அவப் பெயரை ஏற்க வேண்டியிருக்கிறது. ஏன் பெண்களுக்குப் ‘பெண் பெயர்கள்’ என்று கூடக் கேட்கலாம். பால் நடுவுநிலையிலான பெயர்களைத் தெரிவு செய்யலாமா? சீனாவில் பண்பாட்டுப் புரட்சியின் போது, பால் நடுவுநிலையிலான பெயர்களைப் பெண்கள் பலர் தேர்ந்தெடுத்துக் கொண்டார்களாம். ஆனால் இது ஒரு வெறும் குறியீடாகத்(symbolic) தான் இருக்க முடியும்.

ஆண்மைப்படுத்தும் வழிமுறைகளெல்லாம் பெண்களை ’ஆண்மைப்’ படுத்துவதன் மூலம் பாலியல் வன்முறைகளை முன்தவிர்க்க முடியும் என்ற அனுமானத்தில் சொல்லப்படுபவை. வேண்டுவது பெண்களின் ’ஆண்மைப்’ படுத்தலல்ல. பெண்களின் ஆளுமைப்படுத்தலோடு, ஆணாதிக்கவாதிகளின் சிந்தனையில் ’பெண்மைப்’படுத்தல்- பால் புரிந்துணர்வைப்(gender sensitivity) படிப்பித்தல். பெண்களை இப்படி ‘ஆண்மைப்’ படுத்துவதிலும் ஆணுடல்களின் மற்றும் ஆண்மையின் மேலாண்மை மறைமுகமாய் ஒப்புக் கொள்ளப்படும் நெருடல் இருக்கிறது. ஆளுமையிலும்,அறிவார்த்தத்திலும் ஆண்களுக்கு பெண்கள் நிகராய் இருக்க முடியும் என்று எத்தனையோ பெண்களின் ஆளுமைகள் உதாரணங்களாய் இருக்கும் இந்தக் காலகட்டத்தில் ஆணாதிக்க வாதிகளுக்குப் பயந்து பெண்களை ஆண்மைப்படுத்துவது போல ‘பெண்ணுடல்’ சார்ந்த ஒரு அபத்தம் இதில் தொனிக்கிறது. பெண்களின் அடையாளம்(identity) அவர்களின் உள்ளார்த்தத்திலும், உடலார்த்தத்திலும் மதிக்கப்பட வேண்டியது. இந்த சுயமரியாதையின் அடிப்படையில் தான் பெண்கள் தங்கள் பாலியல் உட்பட்ட உரிமைகளை வென்றெடுத்துக் கொள்ள வேண்டும். புது தில்லியின் பாலியல் வன்முறை பற்றி தொகுத்துரைக்கப்பட்ட மேற்சொன்ன எதிர்வினைகளை ஆதரிப்போரில் பெண்களும், எதிர்ப்போரில் ஆண்களும் இருக்கும் சூழலில் பெண்ணுடல் சார்ந்த கருத்து நிலை பால் நடுவு நிலையிலான கருத்து நிலையாய்- பெண்களால் முன்வைக்கப்படும் பெண்ணியவாதம் என்று மட்டும் குறுக்கி விடாமல்- அடையாளமாகிறது. இந்த நடுவு நிலை பெண் உடல் பற்றிய பொது புத்திக்கு எதிரான வீறும் வீச்சும் கொண்ட சமூக மறுமலர்ச்சிக்கு உரம் கொடுக்க முடியும். பெண்ணியக்கங்களின் வெற்றி ‘பெண்ணுடல்’ சார்ந்த பால் நடுவுநிலையிலான கருத்து நிலையின் பரந்துபட்ட செயலாக்க வெற்றியில் தான் உள்ளது. பால் அசமக் குறியீட்டில்(Gender Inequality Index) 187 நாடுகளில், இந்தியாவின் தரம் 129 என்பது மிகவும் பின்னடைவாக உள்ளது.( Human Development Report(2011)) பால் அசமக் குறியீடு ஆண்களுக்கும், பெண்களுக்கும் சுகாதாரம் (health), ஆளுமைத் திறன்(empowerment), வேலைச் சந்தை(labour market) என்ற மூன்று அளவைகளில் இருக்கும் வேறுபாடுகளை ஒட்டுமொத்தமாய்க் குறிக்கும் ஒரு பன்னாட்டுக் குறியீட்டு எண் (Global Composite Index). பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம், வேலைச்சந்தையில் பெண்களின் பங்கு இந்தியாவில் இன்னும் பின்னடைவாகவே உள்ளது.

பெண்களின் இந்தப் பின்னடைவுக்கும், பாலியல் வன்முறைகள் உட்பட பெண்களின் மேல் இழைக்கப்படும் குற்றங்களுக்கும் தொடர்பு இல்லாமல் இல்லை. புதுதில்லி பாலியல் வன்முறையின் எதிரொலியாக இனி அரசு எடுக்கப் போகும் கொள்கை மற்றும் சட்டவழிமுறைகளில், பாலியல் குற்றத் தடுப்பு மட்டுமன்றி, பெண்களின், முக்கியமாக சமூகத்தின் அடித்தட்டு மற்றும் தாழ்த்தப்பட்ட ஜாதி, பழங்குடிப் பிரிவுகளைச் சார்ந்த பெண்களின், ஒட்டுமொத்தமான சமூகப் பொருளாதார மற்றும் அரசியல் முன்னேற்றத்திற்கும் ஆளுமைக்குமான புதிய கொள்கைகளும், நடவடிக்கைகளும் உள்ளடக்கி இருப்பது அவசியம். அப்போது தான் பெண்கள் மேலான பாலியல் வன்முறைகளுக்கு எதிரான சட்டச் செயல்பாடுகளும், பெண்களைப் பாதிக்கும் மற்ற சமூக நிலைகளின் மாற்றங்களோடு இயைந்து அமைப்பு ரீதியில் நிலை நிறுத்தப்படுவது சாத்தியமாகும்.

...மேலும்

Mar 28, 2013

பாலியல் தாக்குதல்கள் ; ஒரு நகரமும் ஒரு தீவும் - -சிவலிங்கம் சிவகுமாரன்’உன் மகளிடம் வெளியே போகாதே என்று கூறாதே; முதலில் வெளியே ஒழுக்கமாக நடந்து கொள்ளும்படி உன் மகனிடம் கூறு’ 

டெல்லி சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கல்லூரி ஒன்றின் மாணவிகள் இவ்வாறு வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்தனர். 

இந்திய தலைநகர் புதுடெல்லியில் இடம்பெற்ற மருத்துவ கல்லூரி மாணவியான தாமினிக்கு எதிரான பாலியல் தாக்குதல் சம்பவமும் அதற்குப்பிறகு இடம்பெற்ற அம்மாணவியில் மரணமும் ஏற்படுத்திய அதிர்வலைகள் இன்னமும் முடியவில்லை. இந்த சம்பவத்தை தமது அரசியல் இயந்திரத்தை வேகப்படுத்தும் சுப்பர் பெற்றோலாக பயன்படுத்திக்கொண்டவர்கள் தான் அதிகம் எனும் கூறுமளவிற்கும் இதற்கு முன்னர் டில்லியிலோ அல்லது இந்தியாவின் வேறந்த மாநிலங்களிலோ இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றதில்லை என நினைக்குமளவிற்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. பாலியல் வல்லுறவுகளுக்கு காரணமான ஆண்களை அவர்களின் ஆண் தன்மையை இழக்கச்செய்யும் தண்டனை அளிக்க வேண்டும் என்றும் மரண தண்டனை வழங்க வேண்டும் என்றும் பெண்ணியவாதிகள் மத்தியிலிருந்து எதிர்ப்புக்கள் வலுப்பெற்றன. மேலும் ஒரு நாட்டின் தலைநகரில் பட்டப்பகலில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றால் எங்கேயோ ஒரு கிராமத்தின் மூலையில் பெண்களுக்கு எதிராக என்னென்ன சம்பவங்கள் இடம்பெறுமோ என்ற விடயமும் முன்னிலைப்படுத்தப்பட்டது. இறுதியில் மத்திய அரசாங்கம் இந்த சம்பவங்களுக்கு என்ன தண்டனை வழங்கலாம் என ஆராயும் பொருட்டு நீதியரசர் ஜே.எஸ். வர்மா தலைமையில் குழுவொன்றை அமைத்து பரிந்துரைகளை முன் வைக்கச்சொன்னது.

அதன்படி முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் கட்டளைச்சட்டமாக்கப்பட்டு இந்திய அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நாட்டு மக்களுக்கு இவ்விடயத்தை உத்தியோகபூர்வமாக அறிவித்தார். இந்த கட்டளைச்சட்டத்தின் முக்கிய பிரிவு கூறுவதென்னவென்றால் பாலியல் வல்லுறவுக்கும் பெண் ஒருவர் மரணத்தை தழுவினால் அதற்கு காரணமானவருக்கு (குற்றமிழைத்தவர்) மரண தண்டனை வழங்கலாம் என்பதாகும். மேலும் இந்த புதிய கட்டளைச்சட்டம் “பாலியல் வல்லுறவு“ என்ற வார்த்தைக்குப்பதிலாக “பாலியல் தாக்குதல்“ என்ற சொற்பதத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இது உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு ஒன்றின் தலைநகரத்தில் ஏற்பட்ட சம்பவம் ஏற்படுத்திய பிரதிபலிப்புகள். இனி இந்த நாட்டிற்கு அருகாமையில் இருக்கும் தீவான இலங்கையில் ஏற்பட்டுள்ள ஏற்படப்போகும் சம்பவங்கள் எப்படியாக இருக்கும் என நாம் பார்த்தல் அவசியம். 

நாளொன்றுக்கு ஐந்து பாலியல் வல்லுறவு சம்பவங்கள்
இலங்கையைப்பொறுத்தவரை நாளொன்றுக்கு சராசரியாக ஐந்து பாலியல் வல்லுறவு சம்பவங்கள் இடம்பெறுவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது எமக்கு அதிர்ச்சியூட்டும் விடயமல்ல. காரணம் பல சம்பவங்கள் மூடி மறைக்கப்படுகின்றன. இரண்டு வாரங்களுக்கு முன்பு விஜேராம பகுதியில் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட 47 வயது பெண், மற்றும் சிலாபம் பகுதியில் உல்லாசப்பயணியாக வருகை தந்திருந்த 25 வயது ஜேர்மனிய பெண் மீதான வல்லுறவு சம்பவங்களைப்பார்க்கும் போது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் புதிய கட்டளைச்சட்டத்தின் தேவை இலங்கைக்கும் உள்ளது என துணிந்து கூறலாம். இது குறித்து கடந்த வாரம் தமிழ் நாளிதழ் ஒன்று இலங்கைக்குப்பொறுத்தப்பாடானதாக இருக்கும் வர்மா குழுவின் பரிந்துரைகள் என்ற தலைப்பில் ஆசிரியர் தலையங்கம் தீட்டியுள்ளமையையும் சுட்டிக்காட்ட வேண்டும்.

பொலிஸாருக்கு கிடைக்கும் முறைப்பாட்டுக்கு அமைவாகவே நாளொன்று சராசரியாக எமது நாட்டில் ஐந்து பாலியல் வல்லுறவு சம்பவங்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே இந்த தொகைக்கு அதிகமான சம்பவங்கள் இடம்பெறுகின்றன என்பதே யாதார்த்த உண்மை.

அதிகரித்துச்செல்லும் சம்பவங்கள்
இலங்கையைப்பொறுத்தவரை வருடந்தோறும் பாலியல் வல்லுறவு சம்பவங்கள் அதிகரித்தே செல்கின்றன.பொலிஸ் தரப்பு தகவல்களின் படி 2008 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் பதிவான பாலியல் வல்லுறவு சம்பவங்களைப்பார்ப்போம்.

ஆண்டு பெண்கள்மீதான வல்லுறவு 16 வயதுக்குகீழ்ப்பட்ட 
சிறுமியர் மீதான வல்லுறவு மொத்தம் 

2008 1157 425 1582
2009 1228 396 1624
2010 1446 408 1854
2011 1464 408 1920

சட்டங்கள் அமுல்படுத்தப்படுமா? 
இந்தியாவின் டில்லி நகரில் இடம்பெற்ற வல்லுறவு சம்பவம் மற்றும் அதைத்தொடர்ந்து நாடெங்கினும் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் காரணமாக பாலியல் வல்லுறவு சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக புதிய கட்டளைச்சட்டம் அமுல்படுத்தப்பட்டது போது இலங்கையிலும் அவ்வாறான கடுமையான சட்டவிதிகள் கொண்டு வரப்படுமா என்பதே பாதிக்கப்பட்டவர்களின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது. இலங்கையில் இவ்வாறான சம்பவங்களுக்கு எதிராக பல பெண்கள் அமைப்புகள் ,சிவில் சமூகங்கள் குரல் எழுப்பி வந்தாலும் அவற்றிற்கு அரசாங்கம் செவி சாய்க்கின்றதா என்பது முக்கிய விடயம் ஏன் ஊடகவியலாளர்களையும் இங்கு சற்று குறை கூற வேண்டியுள்ளது. விஸ்வரூபம் பட சர்ச்சைகள் தொடர்பில் அமைச்சர்களிடம் கேள்வி எழுப்புபவர்கள் நாட்டில் விஸ்வரூபமெடுத்து நிற்கும் இவ்வாறான பிரச்சினைகள் குறித்தோ அதற்கு அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பது குறித்தோ கேள்விகள் எழுப்புவதில்லை. இதில் உள்ள மற்றுமொரு விடயம் பல பாலியல் வல்லுறவு சம்பவங்களுக்கு பின்னணியில் அல்லது அதோடு தொடர்பு பட்டவர்களாக அரசியல்வாதிகள் இருப்பதாகும்.
கடந்த வருடம் தங்காலைப்பகுதியில் பிரதேச சபை தலைவர் ஒருவர் இக்குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். ஆனால் அவருக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து எவரும் கேள்வியெழுப்பவும் இல்லை அதை மறந்தும் விட்டார்கள். 

அக்கறையின்மை 
சமூகத்தையும் தனிமனிதர்களையும் பல்வேறு விதத்தில் பாதிக்கும் இவ்வாறான சம்பவங்கள் குறித்து எமது நாட்டு மக்களிடம் உணர்வுபூர்வமான எழுச்சிகள் இது வரை தோன்றாதது ஆச்சரியமே. மேலும் தாம் இவ்வாறான சம்பவங்களில் பாதிக்கப்படும் வரை அடுத்தவருக்காக அனுதாபப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு அக்கறையற்ற கலாசாரம் தான் இப்போது இவர்களிடம் உள்ளது. 1990 களில் காக்கை தீவில் இடம்பெற்ற ரீட்டா ஜோன் மீதான வல்லுறவு சம்பவம் அப்போதைய சூழலில் அதிர்ச்சியை ஏற்படுத்தின. பின்னர் இதை ஒரு செய்தி வடிவமாக மட்டும் அனைவரும் பார்த்தனர். இப்போது அதை மறந்தும் விட்டனர். மேலும் மக்கள் பிரதிநிதிகளாக இருப்பவர்கள் எவராவது இவ்வாறான குற்றச்செயல்களுக்கு கடுமையான தண்டனைகளை அறிமுகப்படுத்த வேண்டும் என இது வரையில் குரல் கொடுத்திருப்பார்களா? எதற்கெல்லாமோ சட்டங்கள் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன ஆனால் எத்தனையோ சிறுவர்கள் அப்பாவி பெண்களின் வாழக்கையை பாழாக்கிய வல்லுறவு தொடர்பாக இது வரை எதாவது சட்டங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றனவா? ஆக மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளும் இவ்விடயத்தில் அக்கறையின்றி இருப்பது தெளிவாகின்றது.

உல்லாசப்பயணிகள் தொடர்பான சம்பவங்கள்
உல்லாசப்பயணிகளை அதிகளவில் இலங்கைக்கு வரவழைத்து அந்நிய செலாவணியை பெறுவதற்கான திட்டங்கள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வந்தாலும் அதை சீர்குழைக்கும் வகையில் உல்லாசப்பயணிகளுக்கு எதிராக சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. கடந்த காலங்களில் பல வெளிநாட்டு பெண்கள் பாலியல் வல்லுறவுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கூடுதலாக கரையோரப்பிரதேசங்களில் தமது விடுமுறையை கழிக்க வருகை தந்த ஐரோப்பிய நாடுகளைச்சேர்ந்த பெண்கள் தனி நபர்களினாலோ அல்லது குழுக்களினாலோ பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலைத்தேய நாடுகளின் பெண்கள் மீதுள்ள தப்பான அபிப்ராயமே ஒரு சிலரை இவ்வாறு செய்யத்தூண்டுகிறது என்கிறார் ஒரு சமூக செயற்பாட்டாளர். கடந்த வருடத்தில் கல்பிட்டிய பகுதியில் ஹோட்டல் ஊழியர் ஒருவரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட தென்னாபிரிக்க பெண், மாத்தறைப்பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவரால் துஷ்பிரயோகத்திற்குட்பட்ட ஸ்பெயின் நாட்டுப்பெண், தங்காலையில் பிரித்தானிய ஜோடியை தாக்கி அதில் ஆணை கொலை செய்து விட்டு பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குழுவினர் இப்படி உல்லாசப்பயணிகளுக்கு எதிரான சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன.தமது விடுமுறை பாதிக்கப்படும் என்ற காரணத்தினால் பல சம்பங்கள் குறித்து பொலிஸாரிடம் இவர்கள் முறைப்பாடுகளை மேற்கொள்வதில்லை என்பதே உண்மை. 

சமூக அக்கறை
ஐக்கிய நாடுகள் சபையின் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான தேசிய தொடர்பாடல் தகவல்களின் படி இன்று உலகில் இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோகங்களில் 50 90 வீதமானவை முறைப்பாடுகள் செய்யப்படுவதில்லை என்றும் இதோடு தொடர்பு பட்ட குற்றவாளிகளில் 6 வீதமானோர் தமது வாழ்நாளில் ஒரு நாளையேனும் சிறையில் கழிக்காதவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. ஆசிய மனித உரிமை ஆணைக்குழுவும் இலங்கையில் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் தனது கவலையை வெளியிட்டுள்ளது. அரசாங்கத்திடம் இது தொடர்பில் பொறுப்பு கூறும் தன்மை இல்லை என்பதை அது சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் பொது மக்கள் தமது எதிர்ப்பை உணர்வு பூர்வமாக வெளிக்காட்ட வேண்டும் என்பது முக்கிய விடயம். வருடந்தோறும் அதிகரித்துச்செல்லும் சம்பவங்கள் தொடர்பாக மட்டும் பொலிஸ் தரப்பும் ஏனைய அமைப்புகளும் கவலை வெளியிடாது இதை கட்டுப்படுத்தி தடுக்கும் செயற்றிட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

நன்றி - வீரகேசரி
...மேலும்

Mar 27, 2013

பெண் ஊடகவியலாளர்கள் விடுக்கும் பத்திரிகைச்செய்திவணக்கம்!

பெண்கள் தங்களுக்கு நேர்ந்ததை பொதுவாக வெளியில் சொல்ல அச்சப்படும் சூழல் நிலவும் நிலையில் தன்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தவர்கள் குறித்து புகார்கள் அளிக்கப்படும்போது புகார் அளிப்பவரையே குற்றவாளியாக மாற்றிவிடும் விநோதம் இங்கே நிகழ்கிறது. புகார் அளிக்கும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. அண்மையில் அப்படி புகார் அளித்து தனது மேலதிகாரியின் கைதுக்கு காரணமான சன் டிவி செய்தி வாசிப்பாளர் அகிலாவுக்கு கொலை மிரட்டல் வந்ததாக‌ அவர் தெரிவிக்கிறார். மேலும்அவர் பணியாற்றும் நிறுவனத்திலேயே அவருக்கு செய்தி வாசிக்க வாய்ப்பு வழங்காமல் பழிவாங்கப்பட்டதுடன், அகிலாவை தற்போது இடைநீக்கம் செய்திருக்கிறது சன் டிவி நிர்வாகம். பாலியல்ரீதியாக இணங்க மறுக்கும் பெண்களை திறமை போதவில்லை என்று காரணம் காட்டி, அதிகாரத்தைபயன்படுத்தி ஒடுக்குவது போன்ற மோசமான செயல்பாடுகளிலும் பணியிடத்தில் உள்ள மேலதிகாரிகள் ஈடுபடுவதைத் தடுத்தாகவேண்டும். சன் டிவி நிர்வாகத்தின் இந்த செயலுக்கு பெண் ஊடகவியலாளர்களாகிய நாங்கள் கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறோம். 

1997ல் விசாகா எதிர் இராஜஸ்தான் அரசு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, வேலை செய்யும்இடங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் தொல்லைகளைத் தடுப்பதற்குரிய வழிகாட்டு நெறிகளைநீதிமன்றம் வகுத்தது. இது போன்ற முறையீடுகளை ஆய்வு செய்வதற்கு உள் விசாரணைக் குழுக்களைஅமைக்குமாறு வேலையளிப்போரைக் கேட்டுக் கொள்வதும் இவ்வழிகாடுதல்களில் அடங்கும். ஆனால இதுபெரும்பாலான இடங்களில் இல்லை. இப்படியான ஒரு குழுவை அமைப்பது அவசியம். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கான அவசரச் சட்டம் தற்போது நாடாளுமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் இக்குழுவை கட்டாயமாக அனைத்து பணியிடங்களிலும் அமைத்தாக வேன்டும்.விசாகா குழு வழிகாட்டுதலின்படி பாலியல் குற்றங்கள் கிரிமினல் குற்றங்களாகக் கருதப்படவேண்டும். புகார் அளிக்கும் பெண்கள்தொடர்ந்து நிறுவனத்தில் பணியாற்றும்படியான சூழலையும் உருவாக்க வேண்டும். பாலியல் தொல்லைகொடுத்தவர்களுக்கு ஆதரவு அளித்து, பாலியல் தொல்லைக்குள்ளான பெண்ணை ஒதுக்கி வைக்கும் செயலை பெண்ஊடகவியலாளர்களாகிய நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். 

பெண் ஊடகவியலாளர்களாகிய நாங்கள் விசாகா குழுவை உடனடியாக ஒவ்வொரு நிறுவனத்திலும் அமைக்கும்படிகோருகிறோம்.உச்ச நீதிமன்றம் இந்த விஷயத்தில் மிகவும் முனைப்புடன் இருப்பதால், ஊடக நிறுவனங்களில் இத்தகைய குழு ஒன்றை அமைப்பது மிகவும் முக்கியமானதென்று நாங்கள் கருதுகிறோம். பாலியல்ரீதியாக தொல்லைகள் தருபவர்களை கையாளுவதற்கு இந்தக் குழு மிகவும் உதவிகரமாக இருக்கும். பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளில் எப்பொழுதும் பெண்களின் பக்கம் நிற்கிறோம் நாங்கள் என்பதைஇந்த அறிக்கை மூலம் தெரிவிக்கிறோம்.மேலும் இதுபோன்ற விஷயங்கள் தொடரும்பட்சத்தில், அதிகாரத்தை பயன்படுத்தி அத்துமீறல்களைச் செய்வது தொடர்ந்தால் பாதிக்கப்படும் பெண்களின் பக்கம் நின்று போராட்டங்களை முன்னெடுப்போம் என்றும் அறிவிக்கிறோம்.

இப்படிக்கு
பெண் ஊடகவியலாளர்கள்
தொடர்புக்கு 9841155371, 915948666
...மேலும்

Mar 26, 2013

ஒளி-ஒலி ஊடகங்களும் பெண்முன்னேற்றமும் - லதா ராமகிருஷ்ணன்


கண்ணாடி வீட்டிற்குள்ளிருந்து எத்தனை லாவகமாக, தங்களுக்கு எந்தவிதச் சேதார முமில்லாமல் கல்லெறிந்துகொண்டிருக்கிறார்கள் என்று வெகுஜன ஊடகங்கள், குறிப்பாக, தொலைக்காட்சி நிறுவனங்களைப் பார்த்து வியக்காமலிருக்கமுடியாது. இப்படிச் சொல்வது நிச்சயம் வஞ்சப்புகழ்ச்சி என்பதில் யாருக்கும் சந்தேகம் ஏற்படத் தேவையில்லை. பெண்ணை நுகர்பொருளாகவும் இரண்டாந்தரப் பிரஜையாகவும் 24×7 நேரமும் காட்டி யவாறே, இவ்வாறான பல வழிகளில் பெண்ணிடம் உருவேற்றப் பட்டுள்ள, உருவேற்றப்பட்டுவருகிற பெண்பிம்பங்களுக்காக, பெண்ணைப் பற்றிய எதிர்மறைக் கருத்தாக்கங்களுக்காக பெண்ணுரிமை பற்றியெல்லாம் ஓங்கிக் குரலெடுத்துப் பேசுவதையும் வெகு விமரிசையாக செய்துவருகி றார்கள். 19.08.2012 அன்று நடைபெற்ற விஜய் தொலைக்காட்சியின் நீயா-நானா’ நிகழ்ச்சியைப் பார்த்த போது மேற்படி எண்ணம் மேலும் உறுதிப்பட்டது.

இதற்கு முன்பே ‘பெண் ஏன் மிகையாக ஒப்பனை செய்துகொள்கிறாள்?’ என்று ‘நீயா-நானா’ நவீனப் பட்டிமன்றம் நடத்தினார்கள். இப்பொழுதும் கிட்டத்தட்ட அந்தமாதிரி தலைப்புதான். சாலமன் பாப்பையா, லியோனி, ஞானசம்பந்தன் போன்றவர்களுக்கு பதிலாய் இதில் உளவியல் மருத்துவர் ஷாலினி, எழுத்தாளரும் சமூகப் போராளியுமான ஓவியா ஆகிய இருவரும் சிறப்புவிருந்தினர்களாகக் கலந்துகொண்டார்கள். இதற்கு முன்பு நடத்தப்பட்ட இதே போன்றதொரு நிகழ்ச்சியில் ”அழுத்தமாக உதட்டுச் சாயம் தீட்டிக் கொள்ளப் பிடிக்கும்”என்று ஒரு பெண் கருத்துரைத்தபோது “அவ்வாறு செய்துகொள்வதே I am sexually active என்று தெரியப்படுத்து வதற்காகத்தான்” என்றார் உளவியல் மருத்துவர் ஷாலினி. உளவியலாய்வுக் கல்வி அவ்வாறு நிறுவுவதாகவே இருக்கட்டும். அதற்காக அதை ஒரு பொதுமேடையில் அத்தனை ‘கொச்சையாக’த் தெரியப்படுத்தவேண்டுமா என்று தோன்றியது. ஒருவகையில் “ஆணின் உணர்ச்சிகளைத்தூண்டும் விதமாகப் பெண்கள் உடையணிவதால்தான் பாலியல் பலாத்காரம் நடக்கிறது” என்று பேசும் தொனியை இதிலும் கேட்க முடிகிறதல்லவா. இத்தகைய கருத்தை ஓர் ஆணோ, சாதாரணப் பெண்ணோ கூறியிருந்தால் நிகழ்ச்சித் தயாரிப்பாளரும், நிகழ்ச்சித் தொகுப்பாளரும் அதை அனுமதித் திருப்பார்களா? வடமாநிலங்களில், வெளிநாடுகளில் எத்த னையோ பெண்கள் இயல்பாக அழுத்தமான நிறத்தில் உதட்டுச்சாயம் தீட்டி அறிவார்ந்த பல துறைகளிலும் தங்கள் தனிமுத்திரைகளைப் பதித்த வண்ணம் இருப்பது நடப்புண்மை.

அதேபோல், முதலில் குறிப்பிட்ட அந்த இரண்டாவது ’நீயா-நானா’ நிகழ்ச்சி யிலும் accessories என்று சொல்லப்படும் காதணிவகைகள், முதலான பல் வேறு அலங்காரப்பொருட்களை அணிவது குறித்து பெண்கள் பேசும்போது, “இது ஆண்களைக் கவரவே. உங்களை நீங்களே நுகர்பொருளாக்கிக் கொள் கிறீர்கள்”, என்று உளவியல்மருத்துவர் கூறினார். “நீங்கள் சொல்வதைக் கேட்ட பிறகுதான் இந்தக் கோணத்தில் பார்க்க வேண்டும் என்பதே எனக்கு உறைக்கிறது”, என்று ஒரு பங்கேற்பாளர் கூற, “அதுதான் ‘நீயா-நானா” என்று மார்தட்டிக்கொண்டார் நிகழ்ச்சித் தொகுப் பாளர். அதுவே, நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த இன்னொரு பெண், “அப்படிப் பார்த்தால் அதேவிதமாய் உங்களையும் கூற முடியும். எல்லாம் பார்க்கும் பார்வையில் தான்”, என்று சொல்ல முற்பட்டபோது அவரை மேலே பேசவிடாமல் ‘மைக்’ஐ கைமாற்றிவிட்டார் அவர். “பாண்டிபஜாரில் இத்தகைய ”அலங்காரப் பொருட்களை தேடியலைவதாகச் சொல்பவர் அதற்காய் எத்தனை அருமையான நேரத்தை இழக்கிறார் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்”, என்று கருத்துரைத்தார் ஓவியா. சம்பந்தப்பட்ட பெண் வாரத்தில் ஆறு நாட்கள் அயராது உழைத்து ஏழாவது நாள் ஒரு நான்கு மணிநேரங்கள் தனக்குப் பிடித்த பொருளை வாங்கச் செலவழிப்பதால் அவருக்கு நேரத்தின் அருமை தெரியவில்லை என்று அறவுரைப்பது எவ்வளவு தூரம் சரி? [பொதுவாகவே நிகழ்ச்சித்தொகுப்பாளரும், சிறப்பு விருந்தினர்களும் நாட்டாமைத் தீர்ப்பு வழங்குவதும் பங்கேற்பாளர்களைக் குட்டுவதும் திட்டுவதும் இந்த நிகழ்ச்சியில் நிறையவே நடக்கிறது].

இதில் மிக முக்கியமாக நாம் பார்க்கவேண்டியது எந்த மேடையில் மேற்படி அறிவுரைகளெல்லாம், பெண்ணுரிமைக் கருத்துகளெல்லாம் தரப்படுகிறது என்பதைத்தான். விஜய் தொலைக்காட்சி ‘பெண்கள் சமூகத்தில் நுகர் பொருளாக்கப்படுகிறார்கள், இளந்தலைமுறையினர் அது குறித்த விழிப்பு ணர்வு இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள்’ என்றெல்லாம் விசனப் படுவது எத்தனை வடிகட்டின போலித்தனம்; அயோக்கியத்தனம். அதில் ஒளிபரப் பபடும் நிகழ்ச்சிகளில் முன்வைக்கப்படும் பெண்பிம்பங்கள் எத்தகையவை? சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இடம்பெறும் சிறுமிகளிலிருந்து நிகழ்ச்சிகளைத் தொகுத்தளிக்கும் பெண்கள் வரை பெண்ணின் உடலை நுகர்பொருளாக உருவேற்றும்படியான ஆடைகளையும், ஒப்பனைகளையும், அங்க சேஷ்டைகளையும் தான் முன்னிலைப்படுத்துகிறார்கள். எல்லா விதமான பாடல்களையும் பாடுவதுதான் திறமை என்று சொல்லிச்சொல்லி கேவல மான பாடல்களை, நாட்டிய அடவுகளைக் குழந்தைகளுக்கு திறனாற்றலாக உருவேற்றுகிறார்கள்.

பிற தொலைக்காட்சிசானல்களிலெல்லாம் செய்திவாசிப்புஇடம்பெறுகிறது. ஆனால், விஜய் தொலைக்காட்சியில் அதுவும் கிடையாது. கட்சி ரீதியான சானல் அல்லவென்றாலும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றியெல்லாம் நீயா-நானாவில் விவாதமேஇடம்பெறாது.[ஆனால், அன்னா ஹஸாரேயைக் கோமாளியாக, முட்டாளாகக் காட்டுவதே குறியாய் கட்டாயம் ‘நீயா-நானா’ நடத்தப்படும்]. கடுங்கோடையிலும் கோட்டு-சூட் அணிந்தபடிதான் விஜய்தொலைக்காட்சி ஆண்-தொகுப்பாளர்கள் காட்சியளிப்பார்கள். ஆனால்,பெண்தொகுப்பாளர்களின் ஆடையணிமணிகளும், ஒப்பனைகளும் அவர்களைப் பண்டமாகக் கடைவிரித்தபடி. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இடம்பெறும் பெண்கள், ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர்த்து, நடமாடும் வணிக வளாகங்களாக வலம்வரும்படி வகுத்துரைக்கப்பட்டிருக்கிறார்கள். இதுதானே இந்த ஒலி-ஒளி ஊடகங்களின் எழுதப்படாத சட்டமாக இருந்துவருகிறது. இதுபோக, இந்தத் தொலைக்காட்சிச் சானல்கள் நொடிக்கு நூறாக முன்வைக்கும் விளம்பரங்களில் பெண்கள் அலங் காரப் பொருட்களின் ஷோ-கேஸ்கள் தானே. இவ்வாறு இளந்தலை முறையினர் தொலைக்காட்சி சானல்கள் வழியாய் நாளும் மூளைச்சலவை செய்யப் படுகிறார்கள். இதில் கலாச்சாரத்தைப் பற்றியும் கிராமப்புற ‘வெள்ளந்தி மனிதர்களை’ப் பற்றியும் ஆவேசமாகப் புகழ்பாடுவதில் ஒன்றும் குறைச் சலில்லை. முக்கலும் முனகலுமாய், அயல்நாட்டவர்களைவிடக் கேவலமாக மூக்கால் தமிழைப் பேசியவாறு தமிழ்மொழி அழிந்து போகிறதே என்று பிலாக்கணம் பாடுகிறார்கள். பகுத்தறிவு வளர வேண்டும் என்று பேசிய வாறே மூட நம்பிக்கைகளை வளர்க்கும் அத்தனை முயற்சிகளிலும் ஈடுபடு கிறார்கள். விஜய் தொலைக்காட்சியும் ஒளி-ஒலி ஊடகங்களின் இந்த நியமங்களையெல்லாம் இம்மிபிசகாமல் கடைப்பிடித்து வருகிறது.

இதுபோதாதென்று நடிகரின் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யும் ’பாரம்பரியத்’தின் நவீன வடிவமாய் நடிகர்-நடிகையரை, திரைப்படக் கலைஞர்களை மாமனிதர்களாகக் காட்டி மூளைச்சலவை செய்வதும் மக்கள் தொலைக்காட்சி நீங்கலாக மற்ற தொலைக்காட்சி சானல்களில் இருப் பதைப் போலவே விஜய் தொலைக்காட்சியிலும் இடம்பெறுகிறது. ’குடி குடியைக் கெடுக்கும்’ என்று கூறியவாறே இளைஞர்கள் குடிப்பதை வெகு சகஜமான நடைமுறையாகத் திரும்பத்திரும்ப உருவேற்றும் திரைப் படங் கள், ஈவ்-டீசிங் என்ற பெயரில் வார்த்தைகளாலும் செய்கை களாலும் காதல் என்ற பெயரிலும் ஈவ்-டார்ச்சரிங் செய்யும் கேடுகெட்ட வழக்கத்தை, உயிர் கொல்லி ‘ராகிங்’ என்ற அருவருக்கத்தக்க செயலை மாணவர் சமுதாயத்தின், இளைய தலைமுறையின் இயல்பான நடத்தையாக திரும்பத் திரும்பக் காட்டி உருவேற்றிவரும் திரைப்படங்களும் தொடர்ந்து திரையிடப் படும் நிலையில் பெண் சமுதாயத்தில் நுகர்பொருளாக்கப்படுகிறாள், பண்டமாக, இரண்டாந்தரப் பிரஜையாக பாவிக்கப் படுகிறாள் என்றெல்லாம் இந்த சானல்கள் அங்கலாய்ப்பது எத்தனை பெரிய மோசடி? நீயா-நானா என்றேனும் ‘ஒளி-ஒலி ஊடகங்களில் எத்தகைய பெண்பிம்பம் வைக்கப் படுகிறது என்பது குறித்து விவாதம் நடத்த முன்வருமா? இந்த நிகழ்ச்சியில் சிறப்புவிருந்தினர்களாக தொடர்ந்த ரீதியில் பங்கேற்று எழுச்சிபெற்ற மனத்தினராகப் பெண்விடுதலைக் கருத்துகளை முழங்குபவர்கள் ஒளி-ஒலி ஊடகங்கள் குறித்த அத்தகைய அகல்விரிவான விவா தங்கள் இன்றைய அத்தியாவசியத்தேவை என்ற கருத்தை விஜய் தொலைக்காட்சியிடம் ஏன் முன்வைக்கலாகாது? வலியுறுத்தலாகாது?

முன்பு ஒருமுறை மாநகரப் பேருந்தில் பயணம்செய்துகொண்டிருந்த போது “லேடீஸ் நிக்கறாங்கப்பா, அந்தப்பக்கம் தள்ளிப்போங்கப்பா”, என்று பெண்களின் பாதுகாவலனாகக் குரலெழுப்பியவண்ணம் பெண்கள் பகுதியி லேயே உரசிக் கொண்டு நின்றுகொண்டிருந்த ‘பெரிய மனிதனை’ “முதலில் நீங்கள் தள்ளி நில்லுங்கள்” என்று சொல்லியபோது அவன் முறைத்த முறைப்பு இருக்கிறதே…! விஜய் தொலைக்காட்சி ‘பெண் சமுதாயத் தில் பண்டமாக பாவிக்கப்படுகிறாள்’ என்று பேசக்கேட்டு மேற்குறிப்பிட்ட நிகழ்வு தவிர்க்கமுடியாமல் நினைவுக்கு வந்தது.

தம் முதுகிலுள்ள அழுக்கைப்பற்றிய சொரணையற்றவர்களிடமிருந்து, அதை யார் பார்க்கப்போகிறார்கள் என்ற துணிச்சலில் வெளிப்படும், வியாபார உத்திகளில் ஒன்றாகக்கொள்ளப்படும் சமூகப்பிரக்ஞையும் அக்கறையும் தான் சமூகச்சீர்கேடுகளிலெல்லாம் மிகவும் அபாயகரமானது.

...மேலும்

Mar 25, 2013

பெண்களை காதலித்து ஏமாற்றுபவர்களில் 96 சதவீதத்தினர் சாதி இந்துக்க‌ளே! - ஆ.கதிர்தர்மபுரி - நாயக்கன்கொட்டாய் நத்தம் காலனி கிராமத்தில் கடந்த 07.11.2012 அன்று மாலை சுமார் 4.00 மணியளவில் 1000த்திற்கும் மேற்பட்ட சாதி இந்து வன்கொடுமைக் கும்பல் கத்தி உருட்டுக்கட்டை, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் நாயக்கன்கொட்டாய் – நத்தம் காலனி தலித் குடியிருப்பிற்குள் அத்துமீறி நுழைந்து கொடூரத் தாக்குதல் நடத்தினர். இதே போன்று அண்ணாநகர், கொண்டபட்டி காலனி, செங்கல்மேடு, மரவாடி ஆகிய பகுதிகளிலும் இவ்வன்கொடுமைக் கும்பல் கொடூரத் தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 300 வீடுகள் சேதப்படுத்தப்பட்டும், தீ வைத்து கொளுத்தப்பட்டன. தலித் இளைஞர் இளவரசன் என்பவர் சாதி இந்துப் பெண் திவ்யா என்பவரைக் காதலித்து, திருமணம் செய்து கொண்டதற்காக, சாதி இந்து வன்கொடுமை கும்பல் இக்கொடிய வன்முறையில் ஈடுபட்டது.

தலித்துகள் மீதான இக்கொடிய வன்கொடுமை மாநில அளவிலும் தேசிய அளவிலும் கவனம் பெற்றன. இவ்வன்கொடுமைக்குப் பிறகு சில சாதி இந்துக் கட்சிகள், இயக்கங்கள் தலித்துகளுக்கு எதிராக பல்வேறு பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக "தலித் இளைஞர்கள் சாதி இந்துப் பெண்களை காதலித்து ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு வாழாமல் துரத்தி விடுகின்றனர். பணம் கேட்டு மிரட்டியும் வருகின்றனர்" என்ற குற்றச்சாட்டுகளை சாதி இந்து இயக்கங்கள் பரப்பி வருகின்றன.

இது உண்மையா? என்பதைக் கண்டறிய எமது எவிடன்ஸ் அமைப்பு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் கடந்த ஜனவரி 2009 முதல் டிசம்பர் 2012 வரை 4 வருடங்களில் நடந்த சாதிமறுப்புத் திருமணம் குறித்த வழக்குகளின் விபரத்தை திரட்டியது.

 • சாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்டு கணவரால் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களின் விபரம்
 • கணவரின் குடும்ப உறுப்பினர்களால் சித்திரவதை செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட பெண்கள்
 • திருமணம் செய்த பின்னர் சேர்ந்து வாழ மறுத்து கணவனால் கைவிடப்பட்ட பெண்கள்
 • திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பாலியல் வன்புணர்ச்சியால் பாதிக்கப்பட்ட பெண்கள்


ஆகிய 4 வன்கொடுமை நிலைகளின் அடிப்படையில் இத்தகவல்கள் பெறப்பட்டன‌. இதனடிப்படையில் கடந்த 4 ஆண்டுகளில் சாதிமறுப்புத் திருமணம் குறித்து 94 வன்கொடுமை சம்பவங்கள் நடத்திருப்பது கண்டறியப்பட்டது. வழக்கு பதிவு செய்யப்பட்ட காவல்நிலையங்கள், குற்றஎண், குற்றப் பிரிவுகள், வழக்கின் தற்போதைய நிலை, குற்றவாளிகள் கைது விபரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களும் பெறப்பட்டன.

கோவை, காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருநெல்வேலி, வேலூர் ஆகிய 5 மாவட்டங்களில் தகவல்களைப் பெற முடியவில்லை (தகவல் கேட்டு 2 மாதம் ஆகியும் மேற்குறிப்பிட்ட 5 மாவட்டங்களிலிருந்து உரிய பதிலில்லை). பெறப்பட்ட 24 மாவட்டங்களில் கன்னியாகுமரி, அரியலூர், கரூர், நீலகிரி, சேலம், சிவகங்கை, தேனி ஆகிய மாவட்டங்களில் சாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்டு அதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்த வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை என்று கண்டறிய முடிந்தது.

பாதிக்கப்பட்ட பெண்களின் சாதி விபரம்

கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டிணம், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருச்சி, திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், விருதுநகர், விழுப்புரம் ஆகிய 18 மாவட்டங்களில் 94 பெண்கள் சாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்டு தங்களது கணவராலும், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றப்பட்ட ஆண்களாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் தலித் பெண்கள் 77 (82 சதவீதம்) பேரும், சாதி இந்துப் பெண்கள் 17 (18 சதவீதம்) பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சாதி இந்துப் பெண்களை சாதிமறுப்புத் திருமணம் மற்றும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியதாக குற்றம்சாட்டப்பட்ட 17 சம்பவங்களில் 13 பேர் சாதி இந்துக்களே உள்ளனர். மற்ற 4 நபர்கள் தலித்துகளாக இருக்கின்றனர். ஆகவே 94 வழக்குகளில் சாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்டு சாதி இந்து கணவராலும், ஏமாற்றப்பட்ட ஆண்களாலும் பாதிக்கப்பட்ட 96.4 சதவீத்தினர் தலித் பெண்கள். மற்ற 3.6 சதவீதத்தினர் இதர பெண்கள்.

பாதிக்கப்பட்ட 94 பெண்களில் 77 பெண்கள் தலித் பெண்கள். இவற்றில் 42 பெண்கள் பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். 20 பெண்கள் பள்ளர் சமூகத்தையும், 13 பெண்கள் அருந்ததியர் சமூகத்தையும், 2 பெண்கள் இதர தலித் சமூகத்தையும் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.

இதனடிப்படையில் தமிழகத்தில் சாதிமறுப்புத் திருமணம் சம்பந்தமாக பாதிக்கப்பட்ட பறையர் சமூகத்துப் பெண்களின் எண்ணிக்கை 45 சதவீதம். பள்ளர் சமூகத்துப் பெண்களின் எண்ணிக்கை 21 சதவீதம். அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த பெண்களின் எண்ணிக்கை 14 சதவீதம்.

இதே போன்று சாதிஇந்துக்கள் மற்றும் தலித்துகளால் பாதிக்கப்பட்ட 17 பெண்களில் 3 பேர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள், இருவர் நாடார் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள், கவுண்டர், பிறமலைக் கள்ளர், நாயுடு ஆகிய சமூகங்களைச் சேர்ந்த தலா ஒரு பெண்களும் முதலியார் சமூகத்தைச் சேர்ந்த 2 பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வன்முறையில் ஈடுபட்ட ஆண்களின் சாதி விபரம்

பாதிக்கப்பட்ட 77 தலித் பெண்களை ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கக்கூடிய சாதி இந்துக்களின் பட்டியல் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 23 பேர் (24 சதவீதம்) வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களும், 8 பேர் (8.5 சதவீதம்) நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்களும், 8 பேர் (8.5 சதவீதம்) கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்களும், 6 பேர் (6.3 சதவீதம்) அகமுடையார் சமூகத்தைச் சேர்ந்தவர்களும், 6 பேர் (6.3 சதவீதம்) செட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர்களும், 4 பேர் பிறமலைக் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்களும், 3 பேர் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்களும், இதர சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 19 பேரும் உள்ளனர்.

                சாதிமறுப்புத் திருமணத்தால் பாதிக்கப்பட்ட 17 சாதி இந்துப் பெண்களை ஏமாற்றியதாக குற்றம்சாட்டப்பட்டவர்களின் சாதி விபரம். நான்கு பேர் பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்களும், 3 பேர் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்களும், வன்னியர், அகமுடையார், நாடார், முதலியார் தலா ஒருவரும் உள்ளனர்.

வன்முறையின் வடிவங்கள்

பாதிக்கப்பட்ட 77 தலித் பெண்களில் 4 பெண்கள் கணவரின் வன்முறையாலும், 5 பெண்கள் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வன்முறையாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுமட்டுமல்லாமல் 7 பெண்கள் திருமணத்திற்குப் பிறகு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரால் விரட்டியடிக்கப்பட்டு கைவிடப்பட்டுள்ளனர். மற்ற 62 (64.9 சதவீதம்) தலித் பெண்கள் சாதி இந்து ஆண்களால், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட 17 சாதி இந்து பெண்களில் 13 பெண்கள் சாதி இந்து கணவர்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 6 பேர் கணவரின் வன்முறையாலும், 3 பேர் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வன்முறையாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுமட்டுமல்லாமல் 8 பெண்கள் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். சாதி இந்துப் பெண்களை பாதிப்பிற்குள்ளாக்கிய தலித் ஆண்களில் நான்கு வழக்குகளில் 2 கணவரின் வன்முறையாலும், 2 கணவரின் குடும்பத்தினராலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.     

சம்பவங்களின் பட்டியல் சில…

 1. தர்மபுரி பகுதியைச் சேர்ந்த தலித் பெண் எம்.தீபா. எம்.எஸ்.சி., பி.எட் படித்துள்ளார். தீபாவும், சாதி இந்துவான விஷ்ணுராம் என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருமணத்திற்குப் பிறகு விஷ்ணுராம் தீபாவை பல்வேறு விதங்களில் கொடுமை செய்துள்ளார். தீபாவோடு வாழ மறுத்தும் உள்ளார். இதுகுறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
 2. தர்மபுரி பகுதியைச் சேர்ந்த வேளாங்கன்னி என்கிற 16 வயது தலித் சிறுமியை சாதி இந்துவான நாகராஜ் என்பவர் காதலித்து கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்குப் பிறகு நாகராஜும் அவரது குடும்பத்தினரும் வேளாங்கன்னியை கட்டிப்போட்டு அடித்து சித்திரவதை செய்து வரதட்சணை கேட்டு கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து வழக்கு நிலுவையில் உள்ளது.
 3. ஈரோடு பகுதியைச் சேர்ந்த கஸ்தூரிதேவி என்கிற தலித் பெண்ணை, சாதி இந்துவான சோமசுந்தரம் என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அப்பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார். இச்சம்பவம் பிப்ரவரி 2010 மாதம் நடந்துள்ளது.
 4. கடலூர், விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த சிவசண்முகவள்ளி என்கிற தலித் பெண், அருள்முருகன் என்கிற சாதி இந்து இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்குப் பிறகு அருள்முருகனும், அவரது குடும்பத்தினரும் சிவசண்முகவள்ளியை சாதிய ரீதியாக இழிவாகப்பேசி அடித்து சித்திரவதை செய்துள்ளனர். இவ்வழக்கு மகிளா நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
 5. கிருஷ்ணகிரி மாவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் தலித் பெண் ரூபா. நாகராஜ் என்கிற சாதி இந்து இளைஞரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்குப் பின்பு நாகராஜ், தலித் பெண் ரூபாவை கடுமையாக அடித்து சித்திரவதை செய்து வாழ மறுத்துள்ளார். இதுகுறித்த வழக்கு தேன்கனிக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.


இதுபோன்று பல சம்பவங்கள் நடந்துள்ளன. இத்தகவல்கள் அனைத்தும் அரசிடமிருந்து பெறப்பட்டுள்ளன. தமிழகத்தில் சாதிமறுப்புத் திருமணத்தாலும், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்முறையாலும் 80 சதவீதம் பாதிக்கப்படுவது தலித் பெண்கள்தான். ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 94 சம்பவங்களில் 95.2 சதவீதம் வன்முறையில் ஈடுபட்டிருப்பது சாதி இந்து ஆண்கள். 4.8 சதவீதம் வன்முறையில் ஈடுபட்டிருப்பது தலித் ஆண்கள். இதுதான் உண்மை நிலை.

இதன் உண்மையைப் புரிந்து கொள்ளாமல், தாழ்த்தப்பட்ட சமூகத்து இளைஞர்கள் சாதி இந்துப் பெண்களை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி பணம் பறிக்கின்றனர் என்று கூறப்படுகிற குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.

பல சாதிஇந்து இயக்கங்கள் சாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்டு தலித் இளைஞர்கள் சாதி இந்துப் பெண்களை ஏமாற்றிய வழக்கு 2500 உள்ளது என்றும், 1850 வழக்குகள் உள்ளன என்றும் போகிற போக்கில் புள்ளி விபரங்களை கூறிவருவது ஏற்புடையதல்ல. முதலில் இதுபோன்ற வழக்குகள் தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பது குறைவாகவே உள்ளன. உலக பொது மனித உரிமை சபை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இந்தியாவில் தலித் பெண்கள் மீது நடத்தப்படுகிற வன்கொடுமைகளில் 5 சதவீதம் கூட வழக்காக பதிவு செய்யப்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளது. இதிலிருந்து பார்க்கின்ற போது பல பாதிக்கப்பட்ட தலித் பெண்களின் வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை என்பதும் புலப்படுகிறது.

தர்மபுரி கலவரத்திற்குப் பிறகு சாதி இந்து இயக்கங்களும், கட்சிகளும் சாதிய துவேசத்தை விஷப் பிரச்சாரமாக பரப்பி வருவதனால், தலித் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. தர்மபுரி கலவரத்திற்குப் பிறகு தலித் பெண்கள் மீதான வன்முறைகளின் சில பட்டியலாக‌ இணைக்கப்பட்டுள்ளது)

பரிந்துரைகள்
 1. திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபடுவோர் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க சிறப்பு உத்தரவினை வெளியிட வேண்டும்.
 2. திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தலித் பெண்களை ஏமாற்றி வருகிற சாதி இந்து கும்பல் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 பிரிவு 3(2)(5)ன் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 3. வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 முறையாக நடைமுறைப்படுத்தப்படாததனால் தான் இதுபோன்ற வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. அதுமட்டுமல்லாமல் தற்போதைய வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989ன் கீழ் பல குற்றவாளிகள் எளிதாக தப்பித்து வருகின்றனர். ஆகவே இந்த சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த உரிய மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.
 4. தலித்துகள் மீது வன்முறையில் ஈடுபடுகிற குற்றவாளிகளுக்கு முன்ஜாமீன் கொடுக்கக்கூடாது என்கிற சிறப்பு அம்சத்தை கடுமையாக்கி கட்டாய சிறைவைப்பு என்கிற அடிப்படையில் இதன் சிறப்பம்சத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.
 5. சாதிமறுப்புத் திருமணத்தாலும் மற்ற வன்முறையாலும் பாதிக்கப்படுகிற பெண்களுக்கு நீடித்த, நிலைத்த மறுவாழ்வு திட்டங்களை கொண்டு வர அரசு சிறப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும். மறுவாழ்வில் கல்வி, வேலைவாய்ப்பு, உதவித்தொகை, நிலம் போன்ற மேம்பாடுகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.


தர்மபுரி சம்பவத்திற்குப் பிறகு தமிழகத்தில் நடைபெற்ற கௌவரக் கொலைகளும், தலித் பெண்கள் மீதான தாக்குதல்களும்

 1. கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம், சேத்தியாதோப்பு அருகில் உள்ள கிராமம் சென்னிநத்தம். இக்கிராமத்தில் வசித்து வந்த தாழ்த்தப்பட்ட தலித் இளைஞர் கோபாலாகிருஷ்ணன் (20) த.பெ.மாயகிருஷ்ணன் என்பவ‌ரும் சாதி இந்து பெண் துர்கா என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த துர்காவின் குடும்பத்தினர் கோபாலாகிருஷ்ணனை கடந்த 19.12.2012 அன்று படுகொலை செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து திருமுட்டம் காவல்நிலையத்தில் குற்றஎண்.326/2012 பிரிவுகள் 342, 364, 302 இ.த.ச. மற்றும் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 பிரிவு 3(2)(5) ஆகியற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 2. கடலுர் மாவட்டம் சிதம்பரம் வட்டம், பு.முட்லூர் அருகில் உள்ள கிராமம் சம்பந்தம் காலனி. இக்கிராமத்தில் வசித்து வருகிற தலித் பெண் சந்தியா சிதம்பரத்தில் உள்ள போட்டோ ஸ்டுடியோ ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இப்பெண்ணை போட்டோ ஸ்டுடியோவின் உரிமையாளர் கடந்த 25.12.2012 அன்று பாலியல் வன்புணர்ச்சிக்கு முயற்சி செய்து கொலை செய்துள்ளார் என்று சந்தியாவின் பெற்றோர்கள் கூறுகின்றனர்.
 3. திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், ஆழ்வார்குறிச்சி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கருத்தபிள்ளையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் திரு.முருகன் (39). தாழ்த்தப்பட்ட இந்து ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த முருகனின் 13 வயது மகள் பிரியா 17.01.2013 அன்று மாலை 6.30 மணியளவில் சாதி கிறிஸ்துவரான சினியன் என்கிற 50 வயது நபரால் கொடூரமான முறையில் பாலியல் பலாத்கார வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து ஆழ்வார்குறிச்சி காவல்நிலையத்தில் குற்றஎண்.12/2013 பிரிவுகள் 448, 376, 511 இ.த.ச. மற்றும் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 பிரிவுகள் 3(1)(10), 3(1)(11) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
 4. நாமக்கல் மாவட்டம், நல்லிப்பாளையம் அருகில் உள்ள கிராமம் பெரியஅய்யம்பாளையம். இக்கிராமத்தில் வசித்து வரும் 18 வயது தலித் பெண் கஸ்தூரியை கடந்த 30.12.2012 அன்று கிருஷ்ணன், குமார், சிவா ஆகிய 3 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று சித்திரவதை செய்து பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து நல்லிப்பாளையம் காவல்நிலையத்தில் குற்றஎண்.887/2012 பிரிவுகள் 366, 376 இ.த.ச. தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 பிரிவு 3(2)(5) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 5. கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவில் அருகில் உள்ள குணமங்கலம் கிராமத்தில் வசித்து வருபவர் தலித் பெண் சுகந்தி (21). கடந்த 24.12.2012 அன்று சுகந்தியும் அவரது உறவினர் பாக்கியராஜ் என்பவரும் விருத்தாசலம், மணிமுத்தாறு படித்துறையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தபோது அங்கு 10க்கும் மேற்பட்ட சாதி இந்து வன்கொடுமைக் கும்பல் வந்துள்ளனர். அக்கும்பல் தலித் பெண் சுகந்தியின் ஆடைகளை கிழித்து மானபங்கப்படுத்தியுள்ளனர். பாக்கியராஜ் மீதும் கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து விருத்தாசலம் காவல்நிலையத்தில் குற்றஎண்.812/2012 பிரிவுகள் 147, 341, 506(2), 376 இ.த.ச. மற்றும் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 பிரிவுகள் 3(1)(10), 3(2)(5) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 6. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகில் உள்ள கிராமம் மெதூர். இக்கிராமத்தில் வசித்து வருகிற சாதி இந்து பெண் நந்தினி (21) என்பவர் தலித் இளைஞர் பிரவீன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நந்தினியின் உறவினர்கள் கடந்த 17.01.2013 அன்று நந்தினியை கடுமையாக அடித்து சித்திரவதை செய்து அவரின் கழுத்தை அறுத்துள்ளனர். படுகாயமடைந்த நந்தினி சிகிச்சை எடுத்து வருகிறார். இச்சம்பவம் குறித்து கும்மிடிபூண்டி காவல்நிலையத்தில் குற்றஎண்.31/2013 பிரிவுகள் 341, 307 இ.த.ச. ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
 7. வேலூர் அருகில் எரந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ரோசி. தலித் பெண் ரோசி, கந்தன் என்கிற சாதி இந்துவை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் கந்தனின் குடும்பத்தினரால் ரோசி கடந்த 15.12.2012 அன்று தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
 8. செஞ்சி, தும்பூர் காலனியைச் சேர்ந்த ரீட்டாராணி என்கிற தலித் பெண், மணிமாறன் என்கிற சாதி இந்துவை காதலித்து வந்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தலித் பெண் ரீட்டாராணியை மணிமாறன் பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார். இதுகுறித்து செஞ்சி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 9. கடலூர் மாவட்டம், பென்னடம் பகுதியைச் சேர்ந்த சத்யா என்கிற தலித் பெண்ணை ஆடலரசன் என்கிற சாதி இந்து கடந்த 02.02.2013 அன்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பென்னடம் காவல்நிலையத்தில் குற்றஎண்.50/13 பிரிவுகள் 376 இ.த.ச. மற்றும் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 பிரிவு 3(1)(12) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 10. பொன்னேரி பகுதியில் வசித்து வருகிற தலித் சிறுமி ரேவதி (15) என்பவரை 52 சாதி இந்து ஜெயசீலன் என்பவர் கடந்த 26.01.2013 அன்று கடத்திச் சென்று கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளார். இதுகுறித்து சோழவரம் காவல்நிலையத்தில் குற்றஎண்.80/2013 பிரிவு 376 இ.த.ச. மற்றும் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு 3(1)(10) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
 11. சேரன்மகாதேவி பகுதியைச் சேர்ந்த 16 வயது தலித் சிறுமி இசக்கியம்மாள் என்பவரை சாதி இந்துவான ஞானதுரை என்பவர் கடந்த 27.01.2013 அன்று கடத்திச் சென்று கடுமையாக சித்திரவதை செய்து பாலியல் வன்புணர்ச்சி வன்முறையில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சேரன்மகாதேவி காவல்நிலையத்தில் பிரிவுகள் 366அ, 376 இ.தச. மற்றும் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 பிரிவு 3(2)(5) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
 12. சேலத்தில் 16 வயது தலித் சிறுமி தீபா என்பவரை கடந்த 16.01.2013 அன்று இரண்டு சாதி இந்து வன்கொடுமை கும்பல் கட்டிப்போட்டு அடித்து சித்திரவதை செய்து கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளது. இச்சம்பவம் குறித்து பள்ளப்பட்டி காவல்நிலையத்தில் குற்றஎண்.134/2013 பிரிவுகள் 366அ, 376 இ.த.ச.வின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
 13. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியைச் சேர்ந்த தலித் பெண் ரஞ்சனி (16) என்பவரை சாதி இந்துவான சரவணன் என்பவர் அடித்து சித்திரவதை செய்து பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து செய்யாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் குற்றஎண்.3/2013 பிரிவு 366அ, 376 இ.த.ச. ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 14. திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த தலித் பெண் இளையநிலா என்பவரும் அவரது காதலரும் பேசிக்கொண்டிருந்தபோது 18.12.2012 அன்று அப்பகுதியைச் சேர்ந்த சாதி இந்துக்கள் அவரது காதலனை கடுமையாக தாக்கி இளையநிலாவை பாலியல் வன்புணர்ச்சி செய்ய முயற்சித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மன்னார்குடி காவல்நிலையத்தில் குற்றஎண்.1243/2012 பிரவுகள் 341, 294(b), 323, 365, 506(2) இ.த.ச தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 பிரிவு 3(1)(10), 3(1)(12) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

- ஆ.கதிர், செயல் இயக்குனர், எவிடென்ஸ்

நன்றி - கீற்று

...மேலும்

Mar 24, 2013

வேம்படி மகளிர் விடுதித் தமிழ்ப் பாடசாலை


கற்பவை கசடறக் கற்று அதற்குத்தக நின்று கற்பிக்க வல்ல தமிழ் மகளிர் உருவாக்கக்கூடிய கல்வி நிலையமும் இருந்தமையினால் பிரந்நனை  அதிகமின்றி பாடசாலைகளை நடத்தலாம் என்பதால் வேம்படியில் “மகளிர்
விடுதித் தமிழ்ப் பாடசாலையை“ அரம்பித்தார் வண. பேர்சிவல்.இப்பாடசாலை ஆரம்பமாகிய 1838 ஆம் ஆண்டை வேம்படியார் அடிக்கடி நினைவு கூறுவார்; கொண்டாடுவார்.ஏனெனில் இம்மகளிர் விடுதிப் பாடசாலையே பின்னர் பிரபல வேம்படி மகளிர் கல்லூரியாக வளர்ச்சி பெற்றது. ஆறு யுவதிகளே இப்பாடசாலையின் தொடக்க கால மாணவிகள் இவர்களுக்கு பாடசாலை வசதிகள் மாத்திரமன்றி அவர்களுடனேயே ஒரு தையலாரும் விடுதித் தலைவியாக இருந்தார்.

இந்த வளர்ச்சியை அடைவதற்கு பேர்சிவல் பெருந்தகை எடுத்த முயற்சிகளும் எதிர் நோக்கிய இடர்களும் பற்பல. பெண்கள் எழுத்தறிவு பெறுவதை தாய்மாரே தடுத்தனர் எதிர்த்தனர் “இது எங்களுடைய வழக்கமில்லை;. பெண்கள் படிப்பது ஒழுங்கில்லை; படிப்பதால் என் மகளுக்கு என்ன இலாபம்? அது அவளின் தரத்தைக் குறைக்கும்” இவையே மாணவிகளைச் சேர்க்க முற்பட்ட போது ஏற்பட்ட முதல் எதிர்ப்பு.சபை பாதிரிமாரின் எதிர்ப்பு வேறு இங்கிலாந்தின் நிலைமை ஒன்றும் விஷேசமாய் இருக்கவில்லை. பெண்களுக்கு பேச்சுரிமை இல்லை. சபை குழுக்களில் அங்கம் வகிக்க முடியாது. பொதுச்சேவையில் ஈடுபடக் கூடாது. அவ்வாறு ஈடுபட்டால் அது பெண்மைக்கு எதிரான தன்மை எனக்கருதப்பட்ட காலம் 

எதிர்ப்பு எத்தகையதாக இருந்த போதிலும் வேம்படியில் மகளிர் கல்வி வேரூன்றி விட்டது. இதற்கு இரண்டு காரணங்கள் கூறப்பட்டன. பாடசாலைகள், சபை இல்ல வளவுடன் இருந்தால் பாதிரிமாரின் பில் ஒரு மணித்தியாலம், மகளிர் பாடசாலை மனைவியர் பெண் பாடசாலைகளில் கண்ணும் கருத்துமாக இருக்க நேர்ந்தது. ஒவ்வொரு மணித்தியாலமும் இவர்கள் சென்று மேற்பார்வை செய்தனர். அடுத்ததாக பேர்சிவலின் விடாமுயற்சி அவர் இரண்டு வகுப்புகளுக்கு கற்பித்தார்- ஆண் பாடசாலையில் ஒரு மணித்தியாலம் ஆசிரியரி பயிற்சி வகுப்பில் பல மணித்தியாலங்கள் மொழிபெயர்ப்பும் நூலாக்கமும் அவரது நித்திய கடைமைகளாக இருந்தன. இவற்றோடு சமய பணிகளும் கூடவே தமிழ் பழமொழிகளைச் சேகரிக்கவும் தொடங்கினார் 

பாடசாலைகளுக்கு மாணவர் வந்து செல்வதற்காக வகன வசதி செய்தார். நீதிபதி பிறைசின் மூன்று பிள்ளைகளும் இவ் வாகனத்திலேயே சென்று சாதாரண மக்களுடன் பழக வேண்டுமென நீதிபதி பிள்ளைகளிடம் சொல்லி இருந்தார். வாகன வசதி செய்வதற்குக் கூட சபையில் குறை சொல்லப்பட்டது. நண்பகல் உணவுக்காக வீடு செல்வோர் பிற்பகல் பாடசாலைக்கு வராமல் நின்று விடக் கூடாது என்பதற்காக பாடசாலையில் நண்பகல் உணவு வழங்கினார்.

வேம்படியின் முதலதிபர்

மகளில் விடுதிபி பாடசாலை ஆரம்பித்த ஆண்டிலையை பெண்கல்விக்காக எடுத்திருக்கும் முயற்சிகளையும் திட்டங்களையும் விவரித்து இங்கிலாந்தில்(1834) ஆரம்பிக்கப்பட்ட “சீன இந்திய நாடுகளிற் பெண்கல்வியை முன்னேற்றும்“ சங்கத்திற்கும் கடிதமெழுதினார் பேர்சிவல் இதன் பயனாகக் கொழும்பில் இரு இணைச்சங்கம் தாபிக்கப்பட்டது் பின்னர் வேம்படிப் பாடசாலைக்கு உதவியாகச் செல்வி மெற்கால்வ் அனுப்பி வைக்கப்பட்டார். பேர்சிவல் இங்கிலாந்துச் சங்கத்தைக் கேட்டுக் கொண்டதற் கிணங்க வெஸ்மின்ஸ்ரர் கல்லூரியில் பயிற்றப்பட்டவரும் ஒரு மெதடிஸ்த பாதிரியாரின் மகளுமான செல்வி ரூவீடி அவர்களைச் சங்கம் விடுதிப் பெண் பாடசாலைக்கு அனுப்பி வைத்தது. “வேம்படியின் முதல் அதிபலென வரலாறு பேசுமகிறது“ இரண்டு வருடங்களில் செல்வி ரூவீடி நாகபட்டினம் சென்று திருமதி பச்சலர் ஆனார்.அதன் பின் திருமதி பேர்சிவல் அவர்களே தமது உள்ளுர் உதவியாளர்களுடன் பாடசாலையைக் கவனித்துக் கொள்வதென முடிவு செய்தார்.

1841ஆம் ஆண்டில் ஆபத்தில் உதவும் அன்பர்கள் சங்கத்தை ஆரம்பித்தவர்களில் பேர்சிவலும் ஒருவராயும்இருந்து பல வருடங்கள் அதன் செயலாளராயுமிருந்தார். இச் சஙஙகம் ஒரு வைத்தியசாலையையும் நடாத்தியது. தாம் சேர்ந்து சேகரித்த 2000பழமொழஜகளைத் “திருடாந்த சங்கிரகம்“ என்னும் நூலாக 1843இல் பேர்சிவல் வெளியிட்டார். புகழ் பெற்ற “வினஸ்லோ ஆங்கிலத் தமிழ் அகராதி“ யின் தொகுப்பு வேலைகளை வண.ஜே.நைற் ஆரம்பித்தபொழுது அகராதியின் 220 பேர்சிவல் அகராதியுடன் அச்சிடப்பட்டன.

நாவலர் தமிழில் வேதபுத்தகம்

பாடசாலைகள் ஒருவாறு வேருன்ற மேலதிக வேலைகள் பேர்சிவலைக் காத்திருந்தன. அந்நாள் வரையில் விவிலிய நூலின் ஐந்து தமிழ் மொழி பெயர்ப்புக்கள் கிறிஸ்தவர்களால் உபயோகப்படுத்தப்பட்டு வந்தன. இவைகள் ஐக்கியப்படுத்தும் ஒரு பொழி பெயர்ப்பு அவசியமென இங்கிலாந்திலுள்ள வேதாகம சங்கம் தீர்மானித்துள்ளது 1839ஆம் ஆண்டில் பேர்சிவல் தலைமையில் ஐவர் கொண்ட குழுவை நியமித்து அந்நாளில் ஆறுமுகவர் பேர்சிவலின் நன் மாணாக்கராயிருந்ததுடன் சேனாதிராய முதலியார், சரவணமுத்துப் புலவர், ஆகியோரிடம் தமிழ் இலக்கணவிலக்கியங்களைக் கற்றுப் பேர்சிவல் பாடசாலையிற் தமிழ் கற்றபின் இப்பொழுது பேர்சிவல் தமக்பே ஆறுமுகவரைத் தமிழ்ப் பண்டிதராக்கிக் கொண்டார். ஆறுமுகவர் தாமும் சித்தாந்த சாத்திரங்கள், திருமுறைகள், சமஸ்கிருதம், வேதாகம சிவாகமங்களை உரியவர்களிடம் கற்கலானார். ஆசிரியரும் மாணவர்களும் ஒருவரில் ஒருவர் வைத்திருந்த மதிப்பு மரியாதையால் வேதபுத்தக மொழி பெயர்ப்பாளர்களில் ஆறுமுகவரும் ஒருவராகிவிட்டார். ஆரம்பத்தில் அவ்வப்போது நடைபெற்ற மொழிபெயர்ப்பு வேலைகள் வேதாகம சங்கத்தின் வற்புறுத்தலின் பேரில் துரிதமாக்கப்பட்டு 1846ஆம் ஆண்டிலிருந்து பேர்சிவலும் ஆறுமுகவரும் தினசரி ஆறு மணித்தியாலங்களை மொழி பெயர்ப்புக்காகச் செலவிட்டனர். மொழிபெயர்ப்பதில் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. கிழமைதோறும் மொழிபெயர்ப்புக்குழு சந்தித்து ஆராய்ந்து தீர்மானித்தது. இதனால் ஆறுமுகவருக்கு முப்பெரும் நன்மைகள் ஏற்பட்டன. முதலாவதாக விவிலிய நூல் பற்றிய முழுமையான அறிவு. இரண்டாவதாக குறியீடுகளின் பிரயோகமும் அதன் பயனும் பற்றிய மேலதிக அறிவு. மூன்றாவதாக தமபு சமயத்தை வளர்ப்பதற்கு அவர்கன் கையாண்ட வழிமுறைகள் பற்றிய அறிவு.

இவ்வாறு வேம்படி வளாகத்தில் கிறிஸ்தவ வேதபுத்தகத்தின் தமிழ் மொழி பெயர்ப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கையில் மகளிர் தமிழ் விடுதிப் பாடசாலை எதிர்பார்த்த பயனைத் தரத் தொடங்கியது(1844). ஆண் பாடசாலையில் ஆறுமுகநாவலரைப் போல் மகளிர் விடுதிப்பாடசாலையிற் கல்வி பயின்று வந்த இரண்டு யுவதிகள் மகளிர் பகற்பாடசாலையின் ஆங்கில தமிழ்ப்பகுதிகளிற் கற்பிப்பதற்கு மிகவும் உபயோகமாயிருந்தார்கள். இவ்விதம் கற்பிக்கும் முறைமை சென்னையில் டக்டர் அன்றூஸ் பெல் என்பவரால் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதையே பேர்சிவலும் கையாண்டார். ஆறுமுகநாவலரும் அவ்வாறே செய்தார். 

பேர்சிவல் பெருந்தகையின் கல்விக் கனவு நனவாகத் தொடங்கிவிட்டது. இந் நிலையில் திருமதி பேர்சிவலின் உடல் நலத் தேவைம்மாம அவர் இங்கிலாந்து செல்லச் (1846) சபை அனுமதி வழங்கியது. அவர் தமது இரண்டு பெண் குழந்தைகளையும் அழைத்துச் சென்றார். 

வேம்படி மகளிர் பாடசாலை நிறுவப்பட்டது. 

“ பேர்சிவல் அவர்கள் நிதி சேர்த்து சபைக்காக ஒரு துண்டுக்காணியை (1851 ஆம் ஆண்டில்) கொள்முதல் செய்து அதில் குறிப்பிடத்தக்க அளவினதான பொருத்தமான பாடசாலை அறை யொன்றை மகளிர் பாடசாலைக்காக கட்டினார்“ என வேம்படி வரலாற்று நூல் கூறுகிறது. ஆனால் வரலாற்று புகழ்வாய்ந்த இக் கட்டடம் எவ்விடத்தில் இருந்ததென்பதை வரலாற்று நூல்கள் எதுவும் தெரிவிக்கவில்லை. இதற்கும் ஆறுமுக நாவலரே கைகொடுக்கிறார்.

ஈ.ஜே.றெபின்சன் பாதிரியார் 1847 ஆம் ஆண்டில் வெஸ்லியன் சபையின் சேவைக்காக யாழ்ப்பாணம் வந்தார். பேர்சிவல் பாடசாலையைப் பார்த்தார்.கல்வி வளர்ச்சி கண்ணுற்றார்.“ இவை இங்கிலாந்தின் அதியுயர்ந்த பாடசாலைக்கு சமானம் ” என்றார். இவ்வாண்டின் கடைசி நாளிலே நாவலரின் முதலாவது கிறிஸ்தவ எதிர்ப்பு ஓங்கி ஒலித்தது வண்ணார் பண்ணை சிவன் கோயிலில் பேச்சில் அபிமானம் கொண்டு பின் தொடர்ந்தார் றெபின்சன். பின்னர் தம்மிடம் இருபத்தொன்பது ( 1848 பேச்சுக்களின் சுருக்கம் இருப்பதாக கூறினார். இவர் ஐந்து வருடங்களே யாழ்ப்பாணத்தில் இருந்த போதிலும் மிக விரைவாக தமிழைக் கற்று தமிழ் கதைகளையும் செய்யுள்களையும் ஆங்கில நூல்களாக எழுதினார் ஆறுமுகவரையும் ஏனைய பேச்சாளர்களையும் அவர்களது நடவடிக்கைகளையும் அவதானித்து “ இந்து போதகர்கள் ” என்ற நூலை எழுதினார். இது 1867 இல் இங்கிலாந்தில் வெளியிடப்பட்டது. இந் நூலில் வண. றெபின்சன் எழுதுகிறார். “ பிரதான கட்டடத்தின் தென் பக்கத்தில் இருந்து வெனிசிய கதவு யன்னல்களுடன் கூடிய அறைகள் பின் நோக்கி நீண்டு செல்லுகின்றன. இவை ஒன்றோடொன்று தொடர்ந்து அமைந்து ஆண் பாடசாலையின் வகுப்பறைகளாக உபயோகப்படுத்தப்படுகின்றன.இவற்றுடன் தொடர்ந்து மதிப்பான ஒரு இல்லம் இருக்கிறது. இது மகளிர் விடுதிப் பாடசாலை பேர்சிவல் ஒரு கட்டடகலைஞர் என்ற வேறொரு நூற்றுணுக்கும் இதை உறுதிப்படுத்த துணையாகிறது. முதலாம் குறுக்குத் தெருவும் வேம்படி வீதியும் சந்திக்கும் மூலையில் நிறுவப்பட்டிருந்த இக் கட்டடத்தின் அடித்தளமும் மேற்கு பக்க செங்கற் சுவரும் இன்று தொல்பொருள்களாக காட்சி தருகின்றன. அத்தோடு அந் நாளில் அந்நியர் அமைத்த அகழி அதனருகே அமைந்ததால் ஆறுமுகநாவலர் படித்த பேர்சிவல் வித்தியாசாலையின் அடித்தளம் தப்பிப் பிழைத்து தொல்பொருளாய் இருந்து வேம்படியின் மாண்பை வெளிப்படுத்தயவாறு உள்ளது. இதனால் பேர்சிவல் 
வித்தியாசாலையின் பெண் பிரிவு ( வேம்படி ) பாடசாலைக் கட்டடம் முதலில் ( 1851 ) நிறுவப்பட்டது என்பதும் ஆண் பிரிவு ( மத்திய கல்லூரி ) கட்டடத்திற்கு 1908 ஆம் ஆண்டிலேயே அடிக்கல் நாட்டப்பட்டது என்பதும் கவனிக்கத்தக்கதாகிறது

வேம்படி வளாகம்

அந்நாளைய யாழ்ப்பாணப் பட்டினம் இவ்விடத்தில் ஆரம்பமாகி் தேவாலய வீதி 3ம் குறுக்குத்தெரு கடற்கரை வீதி முற்றவெளி ஆகியவற்றிற்குட்பட்டிருந்தது.இதன் மேற்கில் சற்றத்தொலைவில் நட்சத்திர வடிவான ஒல்லாந்தர் கோட்டை இன்றும் நிலையாயுள்ளது.வடக்கில் இன்றைய ட்றிமர் மண்டபமாயிருக்கும் அன்றைய ஒல்லாந்தத் தளபதியின் வாசஸ்தளமும் வேம்படி மகளிர் தென்பக்க அகளியை அடுத்து இன்று வகுப்பறைகளாயிருக்கும் நீண்டதொரு பாரிய கட்டடத் தொகுதியும் பழமையான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்களாக விளங்கின.இங்கு பாரிய வேப்ப மரங்கள் நன்கு வளர்ந்து குளிர்ச்சியைத் தந்து சுற்றாடலை அழகுபடுத்திய வண்ணம் இருந்தன.வேம்படியின் இக் கட்டிடத் தொகுதி 1817 ஆம் ஆண்டில் பகிரங்க ஏலத்தில் விடப்பட்டபோது ஜேம்ஸ் மூயாட் அவர்களே இதனை கொள்முதல் செய்து ஏழுவருடங்களின் பின் 1824ஆம் ஆண்டில் வெஸ்லியின் சபைக்கு அன்பளித்தார்.இதனால் பழைய அனாதை இல்லத்தில் நடைபெற்று வந்த யாழ் வெஸ்லியன் ஆங்கில பாடசாலை எட்டு வருடங்களின் பின் வேம்படி வளாகப்பிற்கு மாற்றப்பட்டது. யாழ் ஆங்கிலப்பாடசாலையை “வேம்படி வெஸ்லியன் பாடசாலை“ என மக்கள் பெயரிடத்தொடங்கிளர். 

வேம்படியிற் பெண்கள் கல்வி

1823ம் ஆம்ஆண்டில் 42 மாணவர்களே ஆங்கிலப் பாடசாலையிற் கல்வி கற்றதாக மெதடிஸ்த சபை வரலாறு பேசுகிறது.இரண்டாண்டுகளின் பின் இப்பாடசாலை வேம்படி வளாகத்திற்கு மாற்றப்பட்ட முதலாம் ஆண்டிலேயே 40 பெண் பிள்ளைகள்-பெரும்பாலோர் பறங்கியர்-கல்வி கற்றதாயும் பலராலும் மதிக்கப்பட்ட திருமதி ஸ்சாடர் என்ற பறங்கிப் பெண்மணி இவர்களிற்கு ஆசிரியையாயிருந்ததாயும் ஆண்டறிக்கை குறிப்பிடுகிறது. அவர் போர்த்துக்கேய டச்சு மொழிகளைக் கற்பிக்க முடிந்தவராயும் இருந்தார்.ஆகவே 1825ம் ஆண்டிலேயே வேம்படி வளாகத்தில் பெண்கல்வி ஆரம்பமாகி விட்டது. ஆயினும் இதை நெறிப்படுத்தியவர் பேர்சிவல் பெருந்தகை அவர்களே. 

பேர்சிவல் சகாப்தம்

தமிழ் நாட்டிலும் தமது சமயத் தொண்டில் ஈடுபட்டிருந்த சில ஐரோப்பியப் பாதிரிமார் தமிழ் அறிஞர்களாகவும் திகழ்ந்துள்ளனர் இவர்களுள் வீரமா முனிவருக்குப்பின் முதன்மையாகக் கருதப்படுபவர் வண.டக்டர் பீற்றர் பேர்சிவல்.மெதடிஸ்த மார்க்கத்தின் மாபெரு தமிழஅறிஞர்எனச் சபை சார்ந்த விடயங்கள் வலியுறுத்திப் பெருமைப்படுகின்றன.இவர் முப்பெரும் ஆங்கில பாடசாலைகளில் முதன்மையானவர் என வரலாறு பேசுகின்றது. பருத்தித்துறையில் தமது சமயப் பணியை ஆரம்பித்த பேர்சிவல் பாதிரியார் அங்கு நிறுவிய மத்திய ஆங்கில பாடசாலை ஹாட்லிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்காத அக்கால சட்டசபை தலமைபீடம் இதற்குப் பொருள் உதவி செய்யாமையால் “என்னுடைய செலவிலேயே இப் பாடசாலையை நடத்துகிறேன்“ என்று கடிதம் ஒன்றில் எழுதவேண்டியிருந்தது.“பேர்சிவல் பாதிரியார் புதுவாழ்வளித்து நிரந்தரமாக்கிய பாடசாலைகளில் யாழ் மத்திய கல்லுரி முதலிடம் பெறுகின்றது“ என யாழ் மத்திய கல்லுரியின் வரலாறு பெருமைப்படுகின்றது. “இவர்களைப் போலவே வேம்படிப் பெண்களும் வண பேர்சிவல் அவர்களே வேம்படியின் தாபகர் என உரிமை கோருகிறோம்“ என்று வேம்படி மகளிர் கல்லூரியின் நூற்றாண்டு நூல் வற்புறுத்துகின்றது. 

இங்கிலாந்தில் தமிழ் மொழியை ஓர் அளவு கற்றுக்கொண்ட வண.பேர்சிவல் 1826ம் ஆண்டில் யாழ் குடாநாட்டிற்கு வரும் பேற்றை தமிழ் மக்கள் பெற்றனார்.ஆயினும் அடுத்து வருடத்திலேயே அவரது சேவை திருகோணமலையில் தேவைப்பட்டது. மீண்டும் பருத்தித்துறையில் “தமிழிற் போதிப்பதிலே எனக்குச் சற்றுச் சிரமம் தான் இருக்கிறது.மக்களுடன் உரையாடும் பொழுதும் அவர்களைப் போலவே பேசுகிறேன்.“ என்று 25.3.1829 திகதியிட்ட கடிதத்தில் பேர்சிவல் எழுதுகிறார். 1828 -30 ஆண்டுகளில் சபையின் செயலாளராக பேர்சிவல் இருந்தார் எனினும் பின்னர் கல்கத்தாவில் ஒரு வெஸ்லியன் சபையை ஆரம்பிப்பதற்காக அவர் அங்கே அனுப்பப்பட்டார்.அவரது முயற்சி உடனடியாக கைகூடவில்லை மாறாக அங்கே ஸ்கொத்துலாந்துச் சபையாய் டக்டர் அலெக்சாந்தர் டவ் என்பாரை சந்திக்கும் வாய்ப்பை பேர்சிவல் பெற்றார் டக்டர் டவ் ஒரு கல்வியாளர் இவரது கல்வி முயற்சிகள் கல்கத்தாவில் படித்த இளைஞர்களிடம் ஏற்படுத்திய நற்தாக்கங்களையும் பேர்சிவல் அவதானித்தார். இதனால் ஏற்கனவே கல்வியில் ஆர்வம் கொண்டிருந்த பேர்சிவல் கல்வியே முதன்மையானது அது சமய வாழ்வுக்கு உறுதுணையானது என்ற திடமான நம்பிக்கையுடன் 1832 ம் ஆண்டில் மீண்டும் யாழ்ப்பாணம் வந்தார்.

வெஸ்லியன் பாடசாலை

நல்லாசிரியர்களின் திணிணைப் பள்ளிக்கூடங்களில் நம் தமிழ்ச்சிறார்கள் தமிழ் மொழியையும் சைவத் தமிழ் இலக்கியங்களையும் கற்றுத் தேர்ந்து வந்த காலை இவர்கள் ஆங்கில மொழியையும் அறிவியல்களையும் கற்க முதன் முதலில் வழிவகை செய்தவர்கள் இற்றைக்கு 175 ஆண்டுகளிற்கு முன் இங்கிலாந்தில் இருந்து வந்துதென்னிலங்கையிற் அடுத்துள்ள வெலிகாமக் கடற்கரையை அடைந்து யாழ் நகர் சேர்ந்து வேம்படியை ஒரு கல்விக் கருவுலமாக்கிய வெஸ்லியன் சபையினரே.

போர்துக்கேயரதும் ஒல்லாந்தரதும் காலத்தில் எம் மக்களின் கல்விகளை அது கிறிஸ்தவ வேதப் புத்தகத்தை ஓரளவு விளங்கிக் கொள்வதாகவேயன்றி எமது சிறார்களின் அறிவு வளர்ச்சிக்குரிய தாய் இருக்கவேயில்வை.ஆனால் ஆங்கிலேயர் காலத்தில் 1814ஆம் ஆண்டில் இந் நாட்டிற்கு வந்த வெஸ்லியன் சபையார் ஐவரையும் வரவேற்ற தேசாதிபதி சேர் றொடீபட் பிறவுன்றிக் தாம் நிதியுதவி செய்வதாகவும் மாத்தறை காலி மன்னார் மட்டக்களப்பு யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் ஆங்கிலப் பாடசாலைகளை ஆரம்பிக்கும்படியும் கேட்டுக் கொண்டதால் வண. ஜேம்ஸ் லிஞ் வண. தோமஸ் ஸ்குவாணஸ் ஆகியோர் கொழும்பிலிருந்து புற்றட்டுக் காடுகளினூடாகப் பதிது நாட்கள் பயணம் செய்து ஆவணி பத்தாம் நாள் யாழ்ப்பாணப் பட்டினம் வந்து உயர் பதவியிலிருந்த ஜேம்ஸ் மூயாட் என்பவரைச் சந்தித்து அவர்களுடனேயே தங்கினார்.ஆயினும் உடனடியாகப் பாடசாலைகளை ஆரம்பிக்கும் திட்டம் தகுந்த கட்டடம் கிடையாமையாற் பின் போடப்பட்டு இரண்டு வருடங்களின் பின் 1816ஆம் ஆண்டு ஆவணி மாதம் முதலாம் நாளன்று இன்றைய யாழ் மத்திய கல்லூரியின் மண்டபம் இருக்கும் இடத்திலிருந்த பழைய அனாதை இல்ல லூதர் திருச்சபைக் கட்டடத்தைப் பகிரங்க ஏலத்தில் ஜேம்ஸ் லிஞ்ச் அவர்கள் கொள்முதல் செய்து யாழ்ப்பாணத்தில் தமது முதலாவது பாடசாலையை ஆரம்பித்தார். 


வேம்படி மகளிர் கல்லூரியின் முதலதிபர்

உலகியலில் ஈடுபட்டிருப்பவர்களை அருளுலகிற்கு ஈர்ப்பதுவே இறைசெயல். ஆனால் வேம்படியின் ஆளுமையோ அருளுலகில் இருந்தவர்களை உலகிற்கு ஈர்த்தது. முதலில் பேர்சீவல் அவர்களைக் கண்டோம். இப்பொழுது வண்ணார்பண்ணைத் திருச்சபைக்காக வந்த (1907)செல்வி அயசனை வேம்படி தன்னகத்தே ஈர்த்துக்கொண்டது. இருவரும் நீண்ட காலம் வேம்படியை வழிநடத்தியவர்கள். இவர் ஒரு திறமையான கணித ஆசிரியை. இதனால் கைவப் பெண்பிள்ளைகள் பலர் வேம்படியிற் சேர்ந்தனர்.யாழ்ப்பாணத்தின் சரித்திரத்திலேயே முதன் முறையாகப் பெண்பிள்ளைகள் கேம்பிறிச், கல்கத்தா பல்கலைக்கழகங்களின் கனிஷ்ட பரீட்சைகளிற்கு தோற்றினர். இவற்றில் சித்தியெய்திய நால்வரில், இருவரின் திறமைச் சித்திகள் குறிப்பிடத்தக்கவை. இவ்விருவரில் நல்லம்மா தம்பு பின்னர் வேம்படி ஆசிரியையாகிப் பழைய மாணவியர் சங்கத்தின் தலைவியாகவும் இருந்தார். நல்லம்மா வில்லியம்ஸ் முருகேசு என்ற மற்றவர் ஆசிரியையாயிருந்து, பின்னர் (1911) இங்கிலாந்தில் பட்டங்கள் பெற்று வைத்திய கலாநிதியானார். இவரே இலங்கையின் முதற் தமிழ் பெண் வைத்திய கலாநிதி ஒரு வேம்படியாள்; பெண்கள் வாக்குரிமை பெறுவதற்கும் முன்னின்றுழைத்தவர். இக்காலத்தில் விடுதிப்பாடசாலை செல்வி ஸ் ரீபென்சனின் பொறுப்பிலிருந்தது. அவர் வேம்படியில் ஆங்கிலமும் கற்பித்தார். இரு பாடசாலைகளும் ஒல்லாந்தர் மண்டபத்திலேயே குடியேறி இருந்தன. திருமணமாகப் போகும் மகளிர், குடும்பத்தில் தாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், சமயற்பாகம், பரிமாறுதல் என்பவற்றை செல்வி ஸ் ரீபென்சன் கற்பித்தார். இவர் தமிழில் புலமை; பெற்றவர் பதினொரு வருடங்கள் வேம்படியை வழிநடத்திய பின் 1901இல் தாய்நாடு சென்று அடுத்த வருடம் அவ்வுலகம் சென்றார். 

பெண்கள் பாடசாலைகள் இரண்டிற்கும் இரு தலைவிகள் இருக்க வேண்டும் என்பதாயிருந்தும், ஒருவரே இரு பாடசாலைகளையும் அவ்வப்போவது நடாத்தி வந்தனர். குறுகிய செல்வி லிலி ஹால், செல்வி மலின்சன், 1903 இல் ருத் மொஸ்குறெப் பின் வருகை. பழையமாணவியர் ஒன்றுகூடிப் பிரிந்தனர். 

1904 ஆம் ஆண்டு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம். சரித்திரம் பேசுகிறது “மத்திய கல்லூரியை அகற்று“ இது பெண்ஆண் பிள்ளைகளின் ஏகோபித்த குரல்“. இதனால் வேம்படி வளாகத்திலிருந்து ஆண் பாடசாலையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு அதிபர் வண. வில்க்ஸ் முன்னின்றுழைத்தார். இதே காலத்தில் சென்னை, கல்கத்தா பல்கலைக்கழகப் பரீட்சைகளைக் கல்வித்திணைக்களம் தடை செய்தது. இதனால் தமிழ் ஆர்வம் கெட்டுவிடப்போகிறதே என்ற கவலை கல்வியாளரிற்கு ஏற்பட்டது. ஆனாலும் தடுக்க முடியவில்லை. அக்கதியே நேர்ந்தது. செல்வி மொஸ்குறெப் வங்காளத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார் இதனால் உடனடியாகப் பழைய ஆசிரியையும் புரணம் இளைய தளபதியும் பின்னர் செல்வி வட்சனும் பாடசாலைகளைக் கையேற்றனர். 1906 இல் மகளிர் கல்லூரியின் மபணவியர் எண்ணிக்கை 120 ஆனது. அடுத்த ஆண்டில் உடல்நலம் பேணலியல் வகுப்புகள் தொடங்கப்பட்டன. 

1908 ஆம் ஆண்டிலிருந்து அதிபர் பற்றாக்குறை குறையத் தொடங்கியது. செல்விகிளாரா ஹோன்பி இங்கிலாந்திலிருந்து வந்து அதிபரானார். காலம் தாழ்த்தாது கேம்பிரிஜ் கனிஷ்ட வகுப்பை ஆரம்பித்தார். பத்து வருடங்களின் பின் வேம்படிக்கு மேலும் முதற்சித்தி-பரிமளம் சுப்பிரமணியம். ஆசிரியை பயிற்சிப் பாடசாலையின் மாணவியர் எண்ணிக்கை ஏழானது. மூவர் சித்தியடைந்தனர். 

1910 ஆம் ஆண்டு வேம்படி வரலாற்றில் குறிப்பிடத்தக்கதொன்று. மகளிர் கல்லூரியில் மாணவியர் எண்ணிக்கை கூடியது. எட்டு வருடங்கள் இங்கிலாந்திலே தங்கி விட்டு செல்வி அயசன் மீண்டும் விடுதிப்பாடசாலையின் முழுநேர அதிபரானார். அடுத்தது மிக முக்கியமானது. ஆண் பாடசாலை 1910 ஆம் ஆண்டில் வேம்படி வளாகத்தை விட்டகன்று யாழ் மத்திய கல்லூரி வளவிற் குடியேறியது. இதனால் இரு பாடசாலைகளும் வளர்ச்சியடைய வாய்ப்புக்கள் உருவாயின. ஆண் பாடசாலையிலிருந்த கட்டடத்தின் ஒரு பகுதி 140 விடுதி மாணவிகளின் படுக்கைக் கூடமாக்கப்பட்டது. அதையடுத்து முக்கியத்துவம் 1911 ஆம் ஆண்டு தை மாதம் 19 ஆம் திகதி வேம்படி வளாகத்தில் இருந்தவர்களிற்கு மாத்திரமன்றி வேம்படியின் பாரம்பரியத்தைப் பேணுகின்ற எவருக்கும் சாட்சியாய், வளாகத்தின் நடுவே அமைந்துள்ளமகளிர் விடுதிப் பாடசாலை மாடிக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டிய பொன்னாள். இலங்கையின் முதல் பெண. வைத்திய கலாநிதி நல்லம்மா முருகேசு ஸ்கொத்லாந்தில் விஷேச வைத்தியப் படிப்பை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பினார். வேம்படியில் ஆரவாரம்-வரவேற்பு. அத்துடன் மாணவிகளின் எண்ணிக்கையும் 189 ஆக உயர்ந்தது. கேம்பிறிஜ் பரீட்சைக்கு தோற்றிய நால்வரும் சித்தியெய்தினர். பயிற்சிப் பாடசாலையில் விரிவான பாடத்திட்டமும் செயல்முறையும். மூன்று வருடப் படிப்பை 14 மகளிர் கற்றனர். மகளிர் பாடசாலையில் மகளிர் எண்ணிக்கை 196 ஆனது. மேலும் இரு கேம்பிறிஜ் சித்திகள். 

1911 ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்ட மகளிர் விடுதிப் பாடசாலைக் கட்டடம் 1913 ஆம் ஆண்டில் பெரும்பாலம் நிறைவேறியது. இதனை வடிவமைத்து பொறியியல் வேலைகளைக் கவனித்தார் றெமயின் குக். மெதடிஸ்தசபைக் கட்டடங்கள் முழுவதும் இவரது கைவண்ணம். தரைத்தளம் ஒன்று மண்டபமாகவும் மேற்றளம் விடுதி மாணவியரின் படுக்கைக் கூடமாகவும் அமைக்கப்பட்ட இக் கட்டடம் அந்நாளில் பலரது கவனத்தையும் ஈர்த்தது.

பரீட்சைப் பெறுபேறுகளிற்கும் இவ்வாண்டு சிறப்பானதாயிருந்தது. அரசாங்கப் பரீட்சைகளிற்குத் தோற்றிய 58 மாணவிகளில் 52 பேர் சித்தியடைந்தனர் பயிற்சிப் பாடசாலையிலும் 16 பேரில் 15 மங்கையர் சித்தியெய்தினர். மகளிர் கல்லூரியை சிரேஷ்ட பாடசாலைத் தராதரப் பரீட்சை வகுப்புக்களுடன் கூடிய ஆரம்பப் பாடசாலையாகப் பதிவு செய்யக் கடிதத் தொடர்புகள் மேற்கொள்ளப்பட்டன. 1911 கல்வி ஆணைக்குழு பாடசாலைகளில் முக்கியகான காற்றங்களை வலியுறுத்தியது. கேம்பிறிஜ் பரீட்சைகளுக்குத் தமிழ் தேவைப்படாமையால் ஏறக்குறைய தமிழ் அற்றுப்போய் அக்காலக் கல்விப்பணிப்பாளர் டென்காம் கூறிய “மேலும் ஆங்கிலம் மேலான ஆங்கிலம்“ என்றாகிவிட்டது. ஆயினும், தமிழைத் தவறவிட்டது தவறாகிவிட்டது என்பதை விளக்கிக் கொண்ட திணைக்களம் மீண்டும் 1908 ஆம் ஆண்டிலிருந்து தமிழை ஒரு பாடமாக்கியது. 

1912இல் வேம்படி மற்றுமொரு கல்விப்பணியை ஆரம்பித்தது. ஏற்கனவே தமிழ் மூலம் கல்வி கற்றவர்களிற்கு ஆங்கிலமும் கற்பிக்க முற்பட்டனர். இவ்வொழுங்கு பின்னரும் நெடுங்கதலமாகஇருந்து வந்தது ஆனால் அன்னாளில் ஐந்தாம் வகுப்பிலிருந்த இருபது வயதுக்கும் மேற்பட்ட பெண்களுக்குப் பதினேழு வயது மகளிர் ஆசிரியையாயிருந்தார்.இரண்டு பெண்கள் 24 வயதுடையவர்களாயிருந்தனர். அவர்கள் திருமணமாவதற்குச் சில மாதங்களிருக்கையில் “ பெண் ஆங்கிலப் பாடசாலையில் படித்தார் ” என்று சொல்பதற்காகவும் இவ்வாறு நடைபெற்றது. 1913 ஆம் ஆண்டில் 172 மாணவிகள் படித்தனர். இவர்களில் 52 பேர் விடுதி மாணவிகள்.இவ்வாண்டிலே செல்வி ஹோன்பி தாய்நாடு சென்றார். இதனால் செல்வி கேர் மீண்டும் வேம்படி வந்தார். ஆசிரியைகள் மாறியவாறு இருந்தனர். பேலும் ஒரு சுற்றறிக்கை 44 – எவ்வாறுாயினும் வேம்படி முன்னேறியது.

1914 ஆம் ஆண்டில் உலகப் பெரும்போர் மூண்டது. அதன் தாக்கம் இலங்கையிலும் ஏற்பட்டது. வேம்படியின் உதவிகள் செஞ்சிலுவைச் சங்கத்திற்குக் கிடைத்தன. மகளிர் கலலூரியில் பாலர் வகுப்பொன்றை ஆரம்பிக்க செல்வி கேர் முயன்றார். உடனடியாக அது கைகூடவில்லை. ஆண் பாடசாலை வேம்படியை விட்டகன் போதிலும் அதன் வகுப்பறைகள் இவர்கள் உபயோகிக்கக் கூடியதாயிருக்கவில்லை. ஆகவே அடிக்குமேல் அடித்து 1915 ஆம் ஆண்டில் கட்டடங்கள் திருத்தியமைக்கப்பட்டன.

விஸ்தரிக்கப்பட்ட வேம்படியின் அதிபராகசி செல்வி எடித் லைத் அடியெடுத்து வைத்தார். பாலர் வகுப்புப் பதிவு கிடைத்தது பாலர் வகுப்பறை உருவானது. சிறுவர் பகுதியும் பதிவு செய்யப்பெற்று பயிற்சிப் பாடசாலையின் சாதனைப் பாடசாலையாயிற்று. முதல் முறையாக வேம்படியார் இருவருக்கு அரசினர் பயிற்சிக் கல்லூரிற் சேர புலமைப்பரிசில் கிடைத்தது. 

1916 ஆம் ஆண்டியில் பழைய மாணவியர் சங்கம் உதயமானது. முன்னர் ஒரிருதடவை பழைய மாணவியர் ஒன்றுகூடினர் எனினும் இச் சங்கம் அமைக்கப்பட்டது பங்குனி 13 இல். செல்வி ஹாட்லியின் வருகையையொட்டி ஒழுங்கு செய்த அவையில் திருமதி ட்றிமர் வைத்திய கலாநிதி நல்லம்மா ஆகியோர் உரையாற்றினார்கள்.

செல்வி லைத் 1920 ஆம் ஆண்டில் தாயகம் சென்று சில காலத்தின் பின் பாளையங்கோட்டையில் 10 வருட பணியை மேற்கொண்டார்.1915 இல் செல்வி அயசன் மீண்டும் வந்து கல்லூரியின் அதிபராக பொறுப்பேற்றார். செல்வி ஹார்லன்ட் ஒரு வருட காலத்திற்கு விடுதிப் பாடசாலையிற் கடமையாற்றினார் விடுதிப் பாடசாலைக்காக மாடிக் கட்டடத்தின் அருகே மூன்று வகுப்பறைகள் கட்டப்பட்டன.

முப்பது வருடங்களாக வேம்படியை வழி நடத்திய வண.ஜோன்ட்றிமர் 1920 இல் தாயகம் சென்றிருந்த போது அவுலகை எய்தினார்.இதனால் அளப்பரிய சேவையை ஆற்றிய திருமதி ட்றிமறின் வருகையையும் வேம்படி இழந்தது.

1920 ஆம் ஆண்டிலிருந்து பத்து வருட காலத்திற்கு வண.ஏ.லொக்வூட் சபையை நிர்வகித்தார் ஆனால் திணைக்களத்தின் நிபந்தனைகளால் கடமைகள் யாவும் படிப்படியாக அதிபரின் கைக்கு மாறின.திருமதி லொக்வூட் சில காலம் விடுதிப் பாடசாலையை கவனித்து வந்தார். அவர் ஒரு பயிற்றப்பட்ட தாதியாய் இருந்தமையால் சேவை அவரை எந்நேரமும் காத்திருந்தது.இவரால் மனையியற் கூடம் திறந்து வைக்கப்பட்டது. சில காலம் இவர் பழைய மாணவியர் சங்கத் தலைவியாய் இருந்தார்.


எமது பாடசாலை மாணவர்களின் நலன் கருதி நடாத்தப்படும் சேவைகள்

வங்கிச் சேவை

மாணவரின் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்குடன் ஹற்றன் நஷனல் வங்கி மக்கள் வங்கி இலங்கை வங்கி தேசிய சேமிப்பு வங்கிகளில் வைப்பு வைப்பதற்கு குறிப்பிட்ட வங்கி ஊழியர்கள் பாடசாலைக்கு வந்து நேரடியாக மாணவரிடம் பணத்தை வங்கிகளில் சேர்க்க ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் உயர்தர மாணவர்கள் அவ் வங்கி உத்தியோகத்தர்களுடன் இணைந்து ஒரு வங்கியின் நடைமுறைகளைக் கற்கவும் வாய்ப்பளிக்கப்படுகின்றது.

புலமைப் பரிசில் கொடுப்பனவு.

தரம் 5 புலமைப்பரிசிலில் சித்தியடைந்த மாணவர்களின் புலமைப் பரிசில் உரிய காலத்தில் கிடைக்க அவர்களின் வரவு விபரம் ஒழுங்காக காலகிரமத்தில் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டு பணம் பெறப்பட்டு மாணவர்களிற்கு கொடுக்கப்படுகின்றது. அத்துடன் மாணவரின் பெற்றோரின் விருப்பிற்கேற்ப அவர்கள் விரும்பும் வங்கியில் இப் பணம் வைப்பில் இடப்படுகின்றது.

தேசிய அடயாள அட்டை தபால் திணைக்கள அடயாள அட்டை பாடசாலை அடயாள அட்டை

தரம் 6ல் சேரும் மாணவர்களிற்கு பாடசாலை அடயாள அட்டைகளும் தரம் 9 10ல் தபால் திணைக்கள அடயாள அட்டைகளும் தரம் 11ல் தேசிய அடயாள அட்டைகளும் உரிய காலத்தில் பெற்றுக் கொடுக்கப்படுகின்றன.

போக்குவரத்து பருவ காலச் சீட்டுக்கள்

ஒவ்வொரு வகுப்பு மாணவரிடமும் இருந்து உரிய காலத்தில் பணம் சேகரிக்கப்பட்டு கோண்டாவில் போக்குவரத்துச் சபைக்கு இனுப்பப்பட்டு பருவகாலச் சீட்டுக்கள் பெற்றுக்கொடுக்கப்படுகின்றன.

வீதிப் போக்குவரத்து.

வாகன விபத்துக்கள் ஏற்படாமல் மாணவர்கள் பாடசாலைக்கு வரும் போது வீதியைக் கவனமாகக் கடந்து வர நலன்புரிச் சங“க படைப் பிரிவு மாணவர்கள் வீதிப் போக்குவரத்துப் பொலிசாருடன் இணைந்து கடமை புரிகிறார்கள். வீதிப் போக்குவரத்து விதிகள் பேணப்பட வேண்டுமென மாணவர் ஒன்றுகூடும் நேரங்களில் வலியுறுத்தப்படுகின்றன.

வறிய மாணவர்களிற்கு உதவி. 

பிசி நாதன் பலமைப் பரிசில் நிதியம் மூலம் ஒவ்வொரு வருடமும் வாணிவிழாக் கொண்டாட்டத்தின் போது வசதி குறைந்த குடும்பத்தைச் சேர்ந்த நன்கு படிக்கும் 20 மாணவர்களிற்கு தலா 3000 பணம் வழங்கப்படுகின்றது. அத்துடன் பாடசாலைக் கழகங்களும் தமது சின்னம் சூட்டும் வைபவத்தில் சில வசதி குறைந்த மாணவர்களை இனங் கண்டு கற்றல் உபகரணம் வழங்கி உதவிபுரிகின்றன.

வழிகாட்டல் ஆலோசனைச் சேவை

எமது பாடசாலையில் கல்வி அமைச்சின் விதந்துரைப்பின் படி வழிகாட்டல் ஆலோசனைச் சேவைக்கென ஓர் ஆசிரியர் விடுவிக்கப்பட்டுள்ளார். இன்றைய காலகட்டத்தில் குடும்பங்களின் சீரழிவு குடும்ப பொருளாதார நிலை நாட்டில் நடைபெறும் வன்முறைகளினால் ஏந்படும் பாதிப்பு இயற்கை அனர்த்தங்கள் காரணமாக மாணவர் பல்வேறு விதமான நெருக்கடிகளிற்கு உள்ளாகின்றனர். இந்த உள நெருக்கடிகளுடன் பாடசாலைக்கு வரும் பிள்ளைகள் தமது உள நெருக்கடிகளை வகுப்பறைகளிலும் பாடசாலையிலும் தமது நடத்தைகள் மூலமாக வெளிப்படுத்துகின்றனர். இவர்கள் கற்றலில் ஈடுபடுவதும் குறைவாகவுள்ள நிலையில் வகுப்பாசிர்யர்கள் பாடஆசிரியர்களால் இனங்காணப்பட்ட இவர்களது பிரச்சனைகளை வழிகாட்டல் ஆலோசனைச் சேவை ஆசிரியர் அறிந்து அவர்களிற்குத் தேவையான ஆலோசனைகளையும் வழங்கி உதவிகளையும் வழங்கி வகுப்பறையில் ஏனைய மாணவர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாகக் கற்பதற்கான உதவியை செய்வார்.

முகாமைத்துவக் குழு-2009

அதிபர் திருமதி. க. பொன்னம்பலம்
பிரதி அதிபர் திருமதி ரா. முத்துக்குமாரன் 
உப அதிபர் திருமதி. ஜெயபாலன்
திருமதி. அ. தவறஞ்சிற் பகுதித் தலைவர்கள் செல்வி. ம.டொ.செபஸ்ரியாம்பிள்ளை செல்வி. த. புண்ணியமூர்த்தி திருமதி். வி. புஸ்பனாதன். 
திருமதி. பா. உதயகுமார்
திருமதி. க. கருணாநிதி 

மகளிர் பாடசாலை எதிர்ப்பு மறைந்தது.
வரலாறு பேசுகிறது*** மகளிர் பாடசாலைகளுக்கு ஏற்பட்ட எதிர்ப்பு ஏறக்குறைய முற்றாக மறைந்து விட்டது. பெண்கல்வியின் தேவையும் பெறுமதியும் இப்பொழுது நன்றாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. செல்வி ஈகொட் வரும்போது 27ஆக இருந்த மாணவியர் எண்ணிக்கை விலகும்போது 34ஆக உயர்ந்திருந்தது. இவர் 1878ல் தென்னாபிரிக்கா சென்றார்.

அடுத்த அதிபர் “செல்வி பெனி”, ஓர் ஆர்மோனிய வாத்தியக் கருவியை மாணவியருக்குக் கொடுத்து, பாடலைப் பாடத்திட்டத்திலும் சேர்த்தார். இவர்காலத்திலே “கல்விக் கொள்கை 1880” நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆறு வகுப்புக்கள் எட்டாயின. ஆசிரியர்களுக்குச் சான்றிதழ் கேட்கப்பட்டது. இன்னும் பல விதிகள். இவற்றைக் கண்டு அச்சங் கொண்ட போதிலும், பின்னர் அவை பயனுடையவை எனத்தெரிந்து கொண்டனர். மேலதிக அறைகள் கட்டப்பட்டன. ஆயினும் நெடுங்காலத்திற்கு எண்கோண இல்லத்திலும் சபை இல்ல விறாந்தையிலும் வகுப்புக்கள் நடைபெற்றன. செல்வி பெனி 1881இல் வேம்படியை விட்டகன்று திருமதி தொம்சன் ஆனார்.
1882ல் செல்வி கில்னர் அதிபராக நியமிக்கப்பட்டார். பெண் அதிபர்கள் தமிழ் மொழிப் பரீட்சையிற் சித்தி பெறுதல் வற்புறுத்தப்பட்டது. மாணவியரை ஆர்மோனியம் வாசிக்கப் பழக்கினார்; அன்பால் மாணவரை ஆட்கொண்டார்; மாணவர் எண்ணிக்கை 1884ல் 112 ஆகியது; வேம்படி “இந் நாட்டின் முதலாவது மகளிர் விடுதிப் பாடசாலை” என்ற பெயரையும் பெற்றது. ஆசிரியரின் மாதாந்த சம்பளம் – தலைமை ஆசிரியர் 30/=, பயிற்றப்பட்ட ஆசிரியர் 10/=, பயிற்றப் படாத ஆசிரியர்கள் 3/=, 2.50/=, 1/=. 1886ல் ஆசிரியர் பயிற்சிப் பாடசாலை இரண்டு மாணவிகளுடன் உதயமானது. ஐந்து வருட சேவையின் பின் 1887ல் இவர் தாய்நாடு சென்றார். அவர் அடுத்த வருடம் மீண்டும் வந்து திருமதி ரெஸ்ராறிக் ஆகி நெடுங்காலம் எம்மிடையே வாழ்ந்தார். இவ் வருடத்தலேயே செல்வி மெரிகின் அதிபரானார். இரண்டு வருடங்களுக்கு மேல் அங்கே நிற்க அவரது உடல் நலம் இடக் தரவில்லை. ஒரு நாள் அதிகாலை, ஒரு விடுதி மாணவி பேயைக் கண்டு பயந்து அலறிவிட்டார். அவர் மட்டுமல்ல, அந்தப் படுக்கையறையிலிருந்த அத்தனை மாணவியரும் அவ்வாறே கண்டனர். விறாந்தையில் தலைமயிர் பாதி கருமை, பாதி வெண்மையாக வெள்ளை ஆடையுடன், மெலிந்த ஒர் உருவம் அங்குமிங்குமாகத் திரிந்த்து. சபைத் தலைவர் வண.றிக்கும் அவரது பாதிரியாரும் ஓடோடி வந்தனர்.

அதன் பின்பே தெரிய வந்தது செல்வி மெரிகின் தமிழ் படிக்கிறார் என்பது. தமிழ் மொழிமொழியைக் கற்பதில் அவருக்கிருந்த ஆர்வம் அலாதியானது. 1888ல் செல்வி மெரிகின் தாய்நாடு சென்றார். பின்னர் திருமதி கிளாக் ஆனார். றிக் தம்பதியாரும் தாய்நாடு சென்றனர். செல்வி அன்னீ ஸ்ரிபென்சன் அதிபராக நியமிக்கப்பட்டார். சில மாதங்களில் வண.ஜீ.ஜெ.ட்றிமர் . சபைத் தலைவராகி 30வருடங்கள் கடமையாற்றினார். இக் காலம் முழுவதும் (1890-1920) திருமதி ட்றிமர் வேம்படிப் பிள்ளைகளின் பாதுகாவலராயிருந்தார்.

முன்னால் அதிபர்கள்.

வேம்படியின் முதற் பெண் அதிபர் செல்வி.ருவீடி (1839-1841) ஆவார். இவருக்குப் பிறகு இப்பாடசாலையின் நிர்வாகப்பொறுப்பை பாதிரியார்கள் ஏற்றுக்கொண்டனர்.

வேம்படி மகளீர் உயர்தரப் பாடசாலையின் அதிபர்கள்.

1. செல்வி.இ.பீ.இறெசன் (1897-1902, 1910-1921)
உயர்தரப் பாடசாலையின் முதலதிபர் செல்வி.இறெசன் ஆவார். இவர் அனைவராலும் விரும்பப்பட்ட சிறந்ததொரு கணித ஆசிரியை. இங்கிலாந்திற்குச் சென்ற இவர் 8 வருடங்களின் பின் 1910ல் மீண்டும் இப்பாடசாலையுடன் இணைந்து கொண்டார். மாணவர் விடுதியை மேற்பார்வை செய்வதற்கும் பாடசாலைகளைப் பயிற்றுவிப்பதற்கும் பொறுப்பாயிருந்தார். அனைவராலும் விரும்பப்பட்ட இவர் “ஆசைஅம்மா” என அழைக்கப்பட்டார்.

2. செல்வி.லில்லி ஹால் (1901-1902)
செல்வி.இறெசனுக்குப் பதிலாக செல்வி.லில்லி ஹால் 1901ல் அனுப்பப்பட்டார். ஆனால் ஒரு வருடத்தின் பின் மட்டக்களப்புக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றார். இவர் இங்கிருந்த போது, செல்வி.ஜெ.மலின்சன் மாணவர் விடுதியைப் பொறுப்பேற்கும் வரை மாணவர் விடுதியை மேற்பார்வை செய்தார்.

3. செல்வி.ஜெ.மலின்சன் (1902-1904)
செல்வி.ஜெ.மலின்சன் 1901ம் ஆண்டின் பிற்பகுதியிலேயே இங்கு வருகை தந்து மாணவர் விடுதியைப் பொறுப்பேற்றார். செல்வி.லில்லி ஹால் இப்பாடசாலையை விட்டு நீங்கிய பின் செல்வி.மொஸ்க்ரோப் வருமட்டும் உயர்தரப் பாடசாலையையும் மேற்பார்வை செய்தார். 1904 பங்குனியில் இக்காடுக்கு(இந்தியா) இடமாற்றம் பெற்றுச் சென்றார்.

4. செல்வி.ருத் மொஸ்க்ரோப் (1903-
இவர் 1903ல் செல்வி.லில்லி ஹால்க்குப் பதிலாக அனுப்பப்பட்டார். இவரின் காலத்தில் “ஒரு முழுப் பெண்ணை உருவாக்கல்” எனும் கூற்று முன்வைக்கப்பட்டது. 1வது பழைய மாணவர் ஒன்றிணைப்பு நடைபெற்றது. இவர் விரைவில் வங்காளத்திற்கு இடமாற்றம் பெற்றுச் சென்றார்.

செல்வி.வோட்சன் (1905-1907)

திருமதி.ஏ.ராஜரட்ணம் (1981-1989)
இவருடைய காலம் அபாயம் நிறைந்த்தொரு யுத்த காலமாகும். யாழ் பட்டிணம் பாலைவனமாகக் காட்சியளித்த போதும் இவர் தனித்திருந்து வேம்படி வளாகத்தையும், கட்டடங்களையும் பராமரிப்பதிலும் பாடசாலை உபகரணங்களைப் பாதுகாப்பதிலும் தன் காலத்தைச் செலவிட்டார். இவரது அர்ப்பணிப்பு இருந்திராவிடின் வேம்படி பாரிய வீழ்ச்சி காண நேரிட்டிருக்கும். இவர் குறித்து வேம்படியாளின் மழலைகள் பெருமைப்படுகின்றனர்.

செல்வி.ஆர்.ராஜரட்ணம் (1989-1993)
ஆசிரியராயிருந்து அதிபரான இவர் பல்வேறு சவால்களையும் வென்றார். வேம்படி வரலாற்றில் அதிகபடியான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்த அதிபர் இவராவார். பிரச்சினை நிறைந்த காலப்பகுதியாயிருந்த போதிலும் சிறந்த சேவையை நல்கினார். எமது மகுடவாசகத்தின் உண்மைத்தன்மையை முன்னெடுத்துச் சென்றார். இவர் சிறந்த உயிரியல் பாட ஆசிரியராகவும், சிறந்த பேச்சாளராகவும் விளங்கினார்.

திருமதி.ஆர்.ஸ்கந்தராஜ் 
திருமதி. கமலேஸ்வரி பொன்னம்பலம்

மாணவர் தொகை. 2007 2008 2009
06-11 வரை - 1248 1383 
12-13 வரை - 753 432
மொத்தம் - 2001 1815 

ஆசிரியர் தொகை. 2007 2008 2009
விஞ்ஞான கணிதப் பட்டதாரிகள் - 19 19
கலைப் பட்டதாரிகள் - 20 19
வர்த்தகப் பட்டதாரிகள் - 05 05
மனையியல் - 01 00
விசேட பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் - 46 57
மொத்தம் - 91 100

சில வரலாற்றுத் தகவல்களுக்காக - முகநூல் வழியாக பெற்றுக்கொண்ட இக்கட்டுரையை மீள்பதிவு செய்கிறது பெண்ணியம்.
...மேலும்

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்