/* up Facebook

Jan 5, 2013

வானூரில் தலித் பெண் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை :
தருமபுரியில் குச்சிக் கொளுத்தி வைத்தியர் ஏற்றிய வெறியிலிருந்து இறங்காமல், தொடர்ந்து பாலியல் தொடர் கொலைகளை செய்வதில் பாட்டாளி வன்னியர்களின் இறங்கி விட்டார்கள். காலத்தின் கோலத்தில் மக்களை குணப்படுத்த வேண்டிய மருத்துவர் பிணவறை காவலனாய் அவதாரம் எடுத்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், வானூர் (புதுச்சேரிக்கு அருகில் உள்ளது) ருக்மணிபுரத்தை சேர்ந்தவர் சேகர் தையல் தொழிலாளியாக இருக்கிறார். அவரது மகள் கல்கி (16) வானூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். நேற்று முன்தினம் (03.01.2013) வீட்டில் வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார். மறுநாள் காலையில் செய்ய வேண்டிய சிற்றுண்டிக்கு அரிசியை ஊறவைத்துவிட்டு, வாசலில் கோலம் போட்டு கொண்டிருக்கும்போது இயற்கை உபாதை உந்தவே தனது தம்பியிடம் சொல்லிவிட்டு, வீட்டின் பின்புறம் உள்ள சவுக்கு தோப்புக்கு இயற்கை உபாதையை கழிக்கச் சென்றிருக்கிறார். அப்போது நேரம் மாலை 3.10 மணி.

மாலை 4 மணியான பிறகு மகள் வீடு திரும்பாததில் சந்தேகம் அடைந்த தாயார் தேன்மொழி, தந்தை சேகர், தம்பி, பாட்டி மற்றும் சிலருடன் பதட்டத்துடன் தேடியிருக்கிறனர். தேடியபோது அங்கு சென்று பார்த்தபோது சவுக்கு மரத்தில் 15 அடி உயரத்தில் துப்பட்டாவால் மாணவி கல்கி தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உட்னே பிணத்தை தந்தையும் மகனும் பிறரின் உதவியுடன் கிழே இறக்கி அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கே இருந்தவர்கள் கல்கி முன்பே இறந்துப் போய்விட்டதாக தெரிவிக்கின்றனர். 

பின்னர் பிணத்தை வீட்டிற்கு கொண்டு வந்து காவல்துறைக்குத் தகவல் கொடுக்கின்றனர்.
கடமை தவறாத காவல் துறையினர் அந்த பெண் தற்கொலை செய்துக் கொண்டாள் என்ற அடிப்படையில் புகார் மனுவை கேட்கின்றனர். இது குடும்பத்தினருக்கு சந்தேகத்தை உருவாக்கியிருக்கிறது. அதுவுமின்றி சடலத்தைனை பிணக்கூறு ஆய்வு செய்ய கனகசெட்டிக்குளத்தில் உள்ள பிம்ஸ் என்ற தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கே தற்கொலை செய்துக் கொண்டார் கல்கி என சான்றிதழ் வாங்க காவலர்கள் முயற்சி செய்துள்ளனர். 

இந்த விவரங்களை அறிந்த உள்ளுர் விடுதலைச் சிறுத்தைகளின் தோழர்கள் களத்திற்கு சென்று மக்களைத் திரட்டி மறியலில் ஈடுபட்டனர். அப்போது பேச்சு வார்த்தைக்கு வந்த காவல்துறையினர் மற்றும் வானூர் தாசில்தார் குமாரபாலன் ஆகியோரை முற்றுகையிட்டனர். இதனிடையே அரசு மருத்துவமனையில் பிணக்கூறாய்வு பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறி மாணவியின் சடலத்தை வாங்க மறுப்பு தெரிவித்தனர் அதனால் அரசு மருத்துவமனையில் பிணகூறாய்வு செய்ய ஒத்துக்கொண்டனர். வழக்கை கொலை வழக்காக பதிவு செய்யவும் உறுதியளித்தனர். 

உடற்கூராய்வு செய்ததில் தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலை செய்துக்கொள்ளும் போது உருவாகும் எந்தவிதமான பாதிப்புகளும் இல்லை. தொண்டை குழாய் உடைவது, சிறுநீர் கழித்திருப்பது என எந்த சான்றுகளும் கிடைக்கவில்லை. எனவே தற்கொலையல்ல, கொலை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் காவல்துறை மெத்தனமாக இருக்கிறது.

கல்கி ஏன் கொலை செய்யப்பட்டார் என்பதற்கான முதல் தகவல்கள் இப்போது கிடைத்துள்ளன. இயற்கை உபாதையை கழிக்கச் சென்ற கல்கியை மூன்று பேர் கொண்ட கும்பல் கடத்தியிருக்கிறது. பாலியல் பலாத்காரம் செய்ய, அதை எதிர்த்து கல்கி கடுமையாக போராடியிருக்கிறார். அதனால் அவரை கொலை செய்திருக்கின்றனர்.

பின்னர், கொலை செய்யப்பட்ட கல்கியின் உடலை 15 அடி உயரத்தில் சவுக்கு மரத்தில் ஏற்றி கட்டிவிட்டு கயவர்கள் தப்பிவிட்டனர். கொலையில் தொடர்புடைய மூவரும் வன்னியர்கள் என்பது தெரிய வந்துள்ளது. அதில் ஒருவர் மீது ஏற்கெனவே கொலை வழக்கு நிலுவையிலுள்ளது. 

இந்நிலையில் இன்று (05.01.2013) கல்கியின் உடலை அவரின் குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர். எனினும் கல்கியின் கொலைக்கு எதிராக மாணவ மாணவியர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். வானூர் பதட்டத்தில் இருக்கிறது. போராட்டம் தொடரும் என விடுதலைச் சிறுத்தைகள் அறிவித்துள்ளனர்.
அப்பாவி தலித் பெண்ணான கல்கி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது நமது மனதை கனக்க வைக்கிறது. கொலையாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அவர்களை காப்பாற்ற துடித்த அதிமுக பொருப்பாளர்கள் மக்களால் விரட்டியடிக்கப்பட்டனர் என்பது கூடுதல் செய்தி.

குச்சிக் கொளுத்தை வைத்தியரின் தொலைநோக்கு அப்பாவி வன்னியர்களுக்கும் அவப்பெயரை உருவாக்கத் தொடங்கியுள்ளது. வன்னியர்கள் என்ற சாதி தனது திமிரினால் கொலைகாரச் சாதியாக மாறிவிட்டது என்ற பழியைச் சுமக்கிறது என்று வரலாறு பதிவு செய்துக் கொள்ளும். 

-சன்னா

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்