/* up Facebook

Dec 14, 2012

போராடும் கூடங்குளம் பெண்கள் கோவையில் உண்ணாவிரதம்தொழில் அமைப்புகள் கூடங்குளம் அணு உலையை
உடனடியாக திறக்க வேண்டும்
என அறிவித்துள்ளப் போராட்டத்தை மறு பரிசீலனை செய்து
அப்போராட்டம் கைவிடப்படவேண்டுமென மன்றாடி
கூடங்குளம் பெண்கள் கோவையில் உண்ணா நிலைப் போராட்டம்
நாள்: 15.12.2011. காலை 9மணி முதல் 5மணி வரை,
காந்திபுரம் தமிழ் நாடு ஹோட்டல் அருகில்

பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ்த் தேசிய இயக்கங்கள், தலித் உரிமை அமைப்புகள், சூழலியல் ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளைச் சார்ந்த அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பினர் கோவையிலிருந்து கூடங்குளம்வரை மோட்டார் வாகனப் பரப்புரை செய்து போராடும் மக்களுக்கு நேரடி ஆதரவு தெரிவித்துவிட்டு திரும்பியுள்ளனர்.

போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க கூட்டமைப்பினர் கூடங்குளம் சென்றிருந்த நேரத்தில் கோவையில் உள்ள தொழில் அமைப்புகள் மின்பற்றாக்குறையைத் தீர்க்க கூடங்குளம் அணு உலையை உடனே திறக்கவேண்டும் என அரசை வலியுறுத்தி அறிவித்துள்ளப் போராட்டச் செய்தியைக் கேட்டு கூடங்குளம்  அணு உலையைச் சுற்றியுள்ள மக்கள் தங்கள் அதிர்ச்சியையும் ஆழ்ந்த வருத்தத்தையும் தெரிவித்துள்ளனர்.

மின்சாரம் தேவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அணு உலைகளை நிறுவுவதற்காக கைகொள்ளப்படவேண்டிய தேச, சர்வதேச அணுசக்திக் கட்டுப்பாட்டு நிறுவனங்களால் முன்வைக்கப்பட்டுள்ள அறிவியல் மற்றும் சட்ட மரபுகளை முழுமையாகப் புறந்தள்ளிவிட்டு அமைக்கப்பட்டிருக்கும் அணு உலைகளால் எவ்வாறு பாதுகாப்பாக இயங்க முடியும் என்பதை கோவை தொழில் அமைப்புகள் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் என்ற வேண்டுகோளை அவர்கள் விடுத்துள்ளார்கள். ஜப்பானின் புக்குஷிமா அணு உலை விபத்திற்குப் பிறகு பிரச்சினையை சமாளிக்க முதல் வாரத்தில் செலவிடப்பட்ட தொகை தமிழ்நாட்டின் தற்போதைய ஐந்தாண்டுகளுக்கான பட்ஜெட் தொகை என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். விபத்து ஏற்பட்டால் அதனால் ஏற்படப்போகும் தொழில் துறை பின்னடைவுகளில் தொழில்துறைகளுக்கான கூடுதல் வரி என்பது உலகளவில் நடந்துள்ள அனைத்து அணு உலை விபத்துகளும் நமக்கு உணர்த்தும் செய்தியாகும்.  மின்சாரம் வேண்டும் என்பதற்காக, அணு சக்தித் துறை அதிகாரிகளின் அசிரத்தை நடவடிக்கைகளால் தவறான இடத்தில் கட்டப்பட்டுவிட்ட இந்த அணு உலைகளின் பாதுகாப்பை முழுமையாக உறுதிப்படுத்தும் சீரிய ஆய்வுகள் இன்று அவசியமாகிறது. அவ்வாய்வுகளின்றி அவற்றை உடனடியாகத் திறக்கச் சொல்வதென்பது எதிர்காலத்தில் நம்மால் அனைத்து விதங்களிலும் சமாளிக்க முடியாத பிரச்சினையாக அது மாறிவிடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதை கோவைத் தொழில்துறையினர் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.   அதுமட்டுமின்றி மக்களின் உயிரையும் வாழ்வாதாரத்தையும் தலைமுறை தலைமுறையாய் அழிக்கும் அணு உலையை, பிற மாநிலங்கள் வேண்டாம் என் புறக்கணித்த அணு உலையை அபாயகரமான பகுதியான கூடங்குளத்தில் தொடங்குவது தென் தமிழகத்திற்கே ஆபத்தானதாகும்.
கூடங்குளம் பெண்கள்
 மின்பற்றாக்குறையைப் போக்க தமிழகத்தில் தற்போதுள்ள மின் உற்பத்தியே தமிழகத்தின் அடிப்படைத் தொழில்/விவசாயத் தேவைகளுக்கு போதுமானது. மேலும், அதிக மின்தேவைகளுக்கு பாதுகாப்பான மாற்று வழிமுறைகளை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். இவ்வாறிருக்க, குறிப்பாக கூடங்குளம் இடிந்தகரை மற்றும் சுற்றியுள்ள லட்சக் கணக்கான மக்களின் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் தலைமுறை தலைமுறையாக அழிக்ககூடியது அங்கு நிறுவப்படவுள்ள அணு உலையும் அதன் அமைவிடமும் என்பதை விளக்குவதற்கும் இக் காரணத்தினால் கோவைத் தொழில் அமைப்பினர் தம் போராட்டத்தினை மறுபரிசீலனை செய்து அப்போராட்டத்தைக் கைவிட வேண்டும் என மன்றாடியும் அப்பகுதிகளிலிருந்து 500க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ள கோவை வருகின்றனர்.
கூடங்குளம் பெண்கள்
15.12.2011 அன்று நடக்கவிருக்கும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அணு சக்தி எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் தலைமைத் தாங்கி நடத்திவைப்பார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமுதாயத் தலைவர்கள், சூழலியல் ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆதரித்து திரளாகப் பங்கேற்க உள்ளனர். இக்கூட்டத்தில் பங்கு பெறும் கூடங்குளம் பெண்களும் குழந்தைகளும் அணு உலை ஆபத்து பற்றிய விரிவான விளக்கங்களை தருவார்கள். இதில் பங்கு பெறும் பெண்களில் சிலர் தொழில் நிறுவனத் தலைவர்களைச் நேரடியாகச் சந்தித்து தம் துயரங்களைப் எடுத்துச் சொல்வார்கள்.

இப்போராட்டத்திற்கு பொது மக்களும் திரளாக கலந்துகொண்டு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அணு உலை எதிர்ப்புக் கூட்டமைப்பு, கோவை
15, சரசுவதி குடியிருப்பு, 3வது தெரு, கணபதி புதூர் 3வது தெரு, கோவை: 641006
மின்னஞ்சல்: antinuke.kovai@gmail.com; வலைத்தளம்: http://antinukekovai.blogspot.com
ஒருங்கிணைப்பாளர்கள்: கு.இராமகிருட்டிணன் (9443822256); பொன்.சந்திரன். (9443039630)

...மேலும்

Dec 12, 2012

பாலியல் தொழில் பாலியல் தொழில் சட்டமாக்கல் தொடர்பாக அறிக்கை

பாலியல் தொழில் பாலியல் தொழில் சட்டமாக்கல் தொடர்பாக தெரிவித்த சர்மிளா செய்ய்யித்திற்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட தாக்குதலுக்கான கண்டன அறிக்கை


2012 கார்த்திகை மாதம் 20ஆம் திகதி தென்மாகாண சபையின் ஆளும்கட்சி உறுப்பினரான அஜித் பிரசன்ன அவர்களால் நாட்டில் உல்லாசப் பயணத்துறையை மேம்படுத்த பாலியல் தொழில் சட்டபூர்வமாக்கப்பட வேண்டும் எனக் கேட்டிருந்ததாக சில ஊடகங்கள் குறிப்பிட்டிருந்தன.

திரு. பிரசன்ன அவர்கள் தனது கருத்துத் தொடர்பாக தெளிவாக இருக்க வேண்டும். பாலியல்துறை இலங்கையில் குற்றமாக்கப்படாமலிருந்தாலும் பொது இடங்களில் அநாச்சாரமாக நடந்து கொள்வதும் விபச்சார விடுதிகளை நடாத்துவதுமே சட்டரீதியற்றது.

அவர் இந்த இரண்டாவதாக குறிப்பிட்டவற்றை கருதியிருந்தால் எல்லாவகையான பாலியல் தொழிலையும் சட்டமாக்குவது தொடர்பாக (ஒரு
விவாதத்திற்குறிய விடயமான போதும்) பாலியல் தொழிலாளர்கள் நிறுவனங்கள் மாத்திரமன்றி உலகெங்கிலுமுள்ள பெண் உரிமை செயற்பாட்டாளர்களும் பரிந்துரை செய்து வருவதனைக்

குறிப்பிட விரும்புகிறோம். இருந்த போதிலும் பாலியல் துறையில் ஈடுபடும் பெண்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கிலும் அவர்களின் சுய விருப்புகளை பாதுகாக்க வழிவகுக்கும் வகையிலும் பாலியல்
தொழிலை சட்டரீதியாக்கல் அல்லது குற்றமற்றதாக்கல் போன்ற நடவடிக்கைகளை ஊக்கப்படுத்த வேண்டும்.

சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக அல்லது அந்நிய செலாவணியை அதிகரிக்கும் நோக்கில் சட்டரீதியாக்குவது என்பது பிழையாக வழிநடத்துவது
மற்றுமன்றி பாலியல் தொழிலில் ஈடுபடுவோரின் உரிமைகள் பாதிப்புக்குள்ளாக்குவதற்கான ஆபத்தான நிலையை அதிகரிக்கச் செய்யும். அதனால் நாங்கள் திரு அஜித் பிரசன்னவினால் பரிந்துரை செய்யப்பட்ட பாலியல் தொழிலை சட்டரீதியாக்க எடுத்த அணுகுமுறையானது பெண்களின் உடலை ஒரு போகப்பொருளாக ஆக்கும் ஆபத்தான நிலையை ஏற்படுத்தும் என்பதனால் அதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

அதேவேளை 2012 கார்த்திகை மாதம் 20ஆம் திகதி மட்டக்களப்பு ஏறாவூரைச் சேர்ந்த பெண் உரிமை செயற்பாட்டாளரான சர்மிளா செய்யித் BBC தமிழோசைக்கு வழங்கிய நேர்காணலின் போது பாலியல் தொழிலை இலங்கையில் சட்டமாக்கினால் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு பாதுகாப்புக் கிடைக்கக்கூடும் என அவரது அபிப்பிராயத்தைக் குறிப்பிட்டிருந்தார். அவர் தெரிவித்த கருத்தானது முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் விமர்சிக்கப்பட்டதுடன் அவர் தனது குழந்தையுடன் தலைமறைவாகிச் செல்லுமளவிற்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. ஏறாவூரிலிருக்கும் அவரது குடும்பமும் அச்சுறுத்தப் பட்டுள்ளதோடு சர்மிளாவின் தங்கை நடாத்தி வந்த முன்பள்ளிக்கூடமும் 2012 மார்கழி மாதம் 22ஆம் திகதி தீக்கிரையாக்க முயற்சிக்கப்பட்டுள்ளது. சர்மிளாவுக்கும் அவரது குடும்பத்திற்கும் ஏற்படுத்தப்பட்ட அச்சுறுத்தல்களை வன்மையாகக் கண்டிக்கின்றோம். அது பொதுக் கொள்கையுடன் தொடர்புபட்ட பிரச்சினைகள்
தொடர்பாக சுதந்திரமாக ஒருவரது கருத்து தெரிவிக்கும்  உரிமையை (இலங்கை அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள உரிமை) இழிவுபடுத்துவதாகவே அமையும். விவாதங்கள் மற்றும் கருத்து முரண்பாடுகள் தவிர்க்க முடியாததோடு அது இத்தகைய சிக்கல் வாய்ந்த பிரச்சினைகளின்போது வரவேற்கத்தக்கது.

அவரது கருத்தானது ஆதிக்கக் கருத்துக்கு (Dominant point) மாற்றமானது என்ற காரணத்தினால் ஒருவரை மௌனமாக்கும் வகையில் அச்சுறுத்துவது என்பது
ஜனநாயக நாட்டில் எதிர்பார்க்க முடியாத ஒன்றாகும். முக்கியமாக சர்மிளாவை விமர்சிக்க மதத்தையும் கலாசாரத்தையும் சம்பந்தப்படுத்திய சில தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் முயற்சியை கண்டிக்கிறோம்.

அத்தகைய முயற்சிகள் சட்டத்திற்கு அமைவில்லாத வன்முறையை அவருக்கெதிராக கட்டவிழ்த்துவிடுவதை தூண்டுவதாக அமையும். அவ்வாறு அச்சுறுத்துவதற்காக மதத்தையும் கலாசாரத்தையும் சந்தர்ப்பவாதத்தனமாகவும் ஆயுதமாகவும் பயன்படுத்துவது அர்த்தமிக்க மற்றும் அறிவுபூர்வமான கலந்துரையாடல்களுக்கு தடையாக அமைவதோடு நமது நாடு போதுமானளவு அனுபவப்பட்ட குறுகிய மனப்பான்மை மற்றும் மேலாதிக்கம் போன்றவற்றை வளர்ப்பதாக அமையும்.

சர்மிளாவின் நலன் மற்றும் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக அதற்காகப் பொறுப்புள்ள கணட்ட் ன அறிக்கை தேசிய மற்றும் மாகாண ரீதியுள்ள அரசாங்க அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கிறோம். அவ்வாறே சர்மிளாவும் அவரது குடும்பத்தாரும் இதற்கு மேலும் அச்சுறுத்தல்களுக்கு இலக்காகாமல் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சமூகத் தலைவர்கள் குறிப்பாக முஸ்லிம் சமூகத்திலுள்ளவர்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.

அவ்வாறே பெண்களின் உடம்பைப் போகப்பொருளாக மாற்றுவதற்கான சட்ட திருத்தங்கள் ஏற்படுத்தக் கோருவதைத் தவிர்க்குமாறு மாகாண சபை போன்ற
பொறுப்பு வாய்ந்த அதிகார சபைகளிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

அமைப்புகள்

1. பாதிக்கப்பட்ட பெண்கள் ஒன்றியம் (AWF) -அக்கரைப்பற்று
2. பெண்கள் ஆய்வு நிலையம் (CENWOR) கொழும்பு
3. மனித உரிமை மற்றும் அபிவிருத்திக்கான நிலையம் (CHRD)
4. மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் (CPA) கொழும்பு
5. ஈக்குவல் கிரௌண்ட் EQUAL GROUND
6. மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியம் (MWDF)
7. முல்லைத்தீவு மாதர் அபிவிருத்தி மற்றும் புனர்வாழ்வு ஒன்றியம் (MWDRF)
8. பெண்கள் செயற்பாட்டு முன்னணி (WAN)
9. முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகம் (MWDT)
10. தன்னார்வத் தொண்டு மற்றும் பெண்கள் அபிவிருத்தி நிறுவனம் (VSDOW - TRINCOMALEE)
11. அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டணி (WCDM)– மட்டக்களப்பு
12. பெண்களுக்கான கல்வி மற்றும் ஆய்வு நிலையம் (WERC) பெயர்கள்
13. குமுதினி சமுவெல்
14. பாரா ஹனீபா
15. மைத்திரீ விக்ரமசிங்ஹ சுதந்திர ஆய்வாளர்
16. ஜானக்கீ செனவிரத்ன
17. சூளனி கொடிக்கார முரண்பாட்டு கற்கைகளுக்கான சர்வதேச நிலையம்
18. நிமல்க்கா பர்னான்டோ
19. சியாமளா சிவகுருநாதன்
20. சியாமளா கோமஸ்
21. சச்சினி பெரேரா
22. ரசிக்க மென்டிஸ்
23. சிறீன் அப்துல் சறூர்
24. சரளா இமானுவெல்
25. சித்ரலேகா மௌனகுரு
26. ப்ரியா தங்கராஜா சட்டம் தொடர்பான ஆய்வாளர்
27. ரஜனி சந்திரசேகரம் ஆலோசகர் GBV DESK போதனா வைத்தியசாலை யாழ்ப்பாணம்
28. வாசுகி ஜெயசங்கர் - பெண்கள் உரிமை செயற்பாட்டாளர் மட்டக்களப்பு
29. ப்ரேமா கமக்கே
30. ஹர்மன் குமார
31. செறீன் சேவியர் மனித உரிமை இல்லம்
32. காயத்ரி டிவகலால
33. ஏ.யூ குணசேகர
34. எம். ரஹ{மான்
35. முத்துக்கிரு~;ணன் சர்வானந்தா
36. மகாலக்சுமி குருசாந்தன்
37. ஜென்ஸிலா மஜீத்
38. சொர்ணலிங்கம்
39. பீ. என். சிங்கம்
40. எம். கணேசன்
41. லக்ஸான் டயஸ் சட்டத்தரணி
42. பீ. பீ. சிவப்பிரகாசம்
43. ருக்கி பர்னான்டோ
44 நவரஞ்சனி நடராஜா
45. பவானி பொன்சேகா
46. மிராக் ரஹீம்
47. ஜுவைரியா மொஹிடீன்
48. றமீஸா கான்
49. ஸர்மிளா ஹனீபா
50. ஜொவிட்டா அருளானந்தம்
51. ஏ. ரேணு
52. டீ. உயன்கொட
53. பிரான்ஸிஸ் சொலமன்டைன்
54. ஜே. கருனேந்திரா மூன்றாம் கண் நண்பர் வட்டம்
55. ஜெயச்சித்ரா வேலாயுதம்
56. கே.எஸ். இரத்னவேல் சட்டத்தரணி
57. குகநிதி குணச்சந்திரன்
58. லக்ஸ்மன் எப். பீ. குணசேகர
59. மாலா லியனகே
60. மங்களா சங்கர்
61. மரிஸ்ஸா டீ சில்வா
62. மலிசா யாப்பா
63. எஸ். இதயராணி
64. செல்வி திருச்சந்திரன்
65. சுமதி சிவமோகன்
66. துசாரி மடஹபொல
67. மெகாரா டீகல்
...மேலும்

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்