/* up Facebook

Jan 5, 2012

மாற்றங்களை எதிர்ப்போம்..! - ஆர்த்தி வேந்தன்


மாற்றத்தை விரும்பி வோட்டுப் போட்ட மக்கள் அனைவருக்கும் எதிர்பார்ப்பை மீறிய அதிர்ச்சியளிக்கும் மாற்றத்தையே இன்று வரை கண்டு வருகின்றனர். ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தால் அதற்கான தேவையை விளக்குவதும் அரசின் கடமை. விளக்கம் தருவது மட்டும் நிறுத்தாமல் அதற்கான தீர்வோ அல்ல ,மாற்று வழியை யோ தருவது தான் சிறந்த அரசு. ஆனால் இது எதையுமே நம் அரசிடம் இருந்து எதிர்பார்ப்பது நிச்சயம் ஏமாற்றத்தையும் வெறுப்பையும் தான் தரும். செயலகத்தை அரசு மருத்தவமனையாக மாற்றியது இருக்கட்டும் இப்போது நூலத்தை மருத்துவமனை ஆக மாற்றுவதாக இருக்கட்டும் எந்த ஏற்கக்கூடிய காரணமும் சொல்ல வில்லை. அவர்கள் ஆயிரம் விளக்கம் தந்தாலும் அதற்கு ப்பின் இருக்கும் அரசியலும் உள் நோக்கமும் நமக்கு தெரிந்த விஷயமே.

108 ஆம்புலன்ஸ் சேவையில் பல குற்றச்சாட்டுகள் இருந்ததன. அதில்பணி புரிந்தவர்கள் செய்த ஊழல் இன்னும் வெளிபடையாக வராத செய்தி. அதை நிறுத்தியதற்கு அவர்களிடம் காரணங்கள் இருந்தாலும் அதற்கான மாற்று வழியை இன்று வரை செயயவில்லை. இதை எல்லாம் ஒரு விதத்தில் புரிந்து கொள்ள முடிந்தாலும் அரசு கொண்டு வரும் சில மாற்றங்கள் மட்டும் இன்னும் குழப்பமாகவும் அர்த்தமற்றதாகவும் இருக்கிறது. அதில் முக்கியமான ஒன்று நாணயங்களின் வடிவத்தை மாற்றுவது.

1 ரூபாயை 50 பைசாவின் வடிவத்திலும், இரண்டு ரூபாயை 1 ரூபா வடிவத்திலும் கொண்டு வருவதற்கான அவசியம் என்ன? அப்படி என்ன வறுமை அரசுக்கு என்று தெரியவில்லை. இந்த மாற்றம் குழப்பத்தையும் பிரச்சினையும் மக்களுக்கு தரும். குழப்பம் அதிகமாக வருவது கண்டக்டர் களுக்கும் பேருந்தில் பயணம் செய்வோர்களுக்கும். 1 ரூபாயைத் தந்து விட்டு நமக்கே சந்தேகம் வந்து விடும், 1 ருபாய் தான் தந்தோமாஇல்லை 50 பைசா என்று. இந்த வடிவத்தை மாற்றியதை முக்கியமாகத் தெரிவிக்க வேண்டியது கண்டக்டர் களிடமே. நம்முடைய இந்த அவசர உலகத்தில் அவர்களிடம் வாதாடுவதற்கோ சண்டை இடு வதற்கோ நம் யாருக்கும் தெம்பு இருப்பதாகத் தெரிய வில்லை. இது மிகவும் சாதாரண விஷயமா இருக்க கூடும். அப்படியே இருந்தாலும் கூட வடிவத்தை மாற்றியதற்கான காரணத்தைச் சொல்ல வேண்டும் குறைந்தபட்சம் மாற்றிவிட்டோம் என்ற தகவலையாவது தெரிவிக்க வேண்டும். வடிவ மாற்றத்தால் பிரச்சினைக்கு நேரிடும் நபர்கள் பார்வை அற்றவர்கள். இந்த உலகத்தில் நாம் படைக்கும் ஒவ்வொன்றுக்கும் காரணம் உண்டு. ஒவ்வொரு வடிவத்துக்கும் ஒரு அர்த்தமும் உண்டு. பார்வையற்றவர்கள் கடைகளில் பொருட்களை வாங்குவதைப் பார்த்து உள்ளேன். கடைக்காரன் சொல்லும் பணத்தை சரியாக தருவதும் சரியான மீதி ப்பணத்தையும் வாங்கிச் செல்வதும் பல நாட்கள் எனக்கு வியப்பாகவே இருந்தது. சில்லறையைத் தொட்டு பார்த்து அதன் வடிவத்தை வைத்து 50 பைசா 1 ரூபா அல்லது இரண்டு ருபாய் என்று கண்டுபிடிப்பது சுலபம் தான். ஆனால் நோட் களைத் தொட்டு பார்த்து எப்படி கண்டுபிடிகிறார்கள் என்று வியப்பாகவே இருந்தது. 10 ரூபாய் ,20 ரூபாய், 50 ரூபாய் நோட்டுகளுக்கு ஒன்றும் பெரிய வித்தியாசம் இல்லை. அதன் அளவில் அதாவது நீளத்தில் மட்டும் சிறிய வித்தியாசம் உண்டு ஆனால் அதை வைத்து மட்டும் கண்டுபிடிப்பது என்பது கொஞ்சம் கடினம் தான். பிறகு தான் தெரிந்தது அதில் உள்ள அர்த்தம்.

பார்வைற்றவர்களுக்கும் நமக்கும் எழுத்து வடிவம் வேறு வேறு. அவர்களுக்கு ஆன குறி ஒவ்வொரு நோட்டிலும் உள்ளது. 10 ரூபாய் நோட்டில் ஒரு புள்ளியும் 20 ரூபாய் நோட்டில் செவ்வகமும் 100 ரூபாய் நோட் டில் சிறிய முக்கோணமும் 500 ரூபாய் நோட்டில் வட்டமும் இருக்கிறது. இதை வைத்தே அவர்கள் தெரிந்து கொள்கிறார்கள். பக்கத்தில் இருப்பவரிடம் கேட்டு தெரிந்து கொள்வது இன்னும் சுலபம் என்றாலும் கூட அவர்கள் யாரையாவது சார்ந்தே இருக்க வேண்டிய கட்டாயத்தை இது தடுக்கிறது. இப்போது வடிவத்தை மாற்றுவதனால் பார்வை உள்ளவர்களே சில நேரங்களில் குழம்புவது உண்டு. பார்வையற்றவர்கள் என்ன செய்வார்கள்? எதற்கு இந்தத் தேவை இல்லாத மாற்றம்? யாரு நலனுக்காகஆக இந்த மாற்றம்?

மாற்றங்கள் தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருந்தாலும் எந்த ஒரு மாற்றமும் ஆக்கபூர்வமான மாற்றத்தையே கொண்டு வர வேண்டும். ஆனால் நாம் இன்று எதிர் நோக்கும் மாற்றமோ அழிவை நோக்கியே போகிறது. எத்தனை பொறுப்பற்ற ஆட்சியின்கீழ் நாம் உள்ளோம். இந்தியாவில் சில்லறையின் மதிப்பீடு 50 பைசாவில் இருந்தே ஆரம்பிக்கிறது. 10 பைசா, 25 பைசா செல்லுபடி ஆகாது. ஆனால் RBI யின் வெப்சைட் படி இது எல்லாம் செல்லு படி ஆகும். காரணம் ,கடைசியாக update செய்யப்பட்டது 2004 ஆம் வருடத்தில்! அதற்கு பிறகு கொண்டு வர பட்ட எந்த ஒரு மாற்றத்தையும் அறிவிக்க வில்லை. மக்களின் நலனைக் கருதாமல் வெறும் அரசியல் லாபத்திற்காக மட்டும் கொண்டு வரும் எந்த மாற்றமும் பயன் அளிக்காது. இப்படி எல்லாவற்றிலும் அலட்சியமாக இருக்கும் அரசு க்கு மிக பெரிய ஆயுதம் நம்மிடம் இருக்கும் பிரிவு ,ஒத்துழைப்பு இல்லாதது.

அரசு கொண்டு வரும் எந்த ஒரு மாற்றத்தின் பிரச்சினைக்கும் இரண்டு பிரிவு உண்டு. ஒன்று அதை ஆதரிப்போர், இன்னொன்று அதை எதிர்ப்போர். கூடங்குளம் விஷயத்தில் இதை நாம் நன்றாக அறியலாம். இதை கூட ஓரமாக ஒரு விதத்தில் என்னால் சகித்துக் கொள்ள முடிகிறது. பாவம்இ அவர்களுக்கு அப்துல் கலாம் மீது அசைக்க முடியாத நம்பிக்கை! அவரே சொல்லி விட்டார் அணுமின் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று அப்புறம் ஏன் நீங்கள் இப்படி எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள் என்று என்று கேட்கும் சில பேரிடம் அறியாமை தெரிகிறது. ஆனால் நூலகம் இடம் மாற்றுவதைக் கூட ஆதரிக்கும் சிலரை என்ன செய்வது என்றே தெரிய வில்லை..நூலகத்துக்கு எதற்கு இத்தனை பெரிய இடம், மருத்துவமனையாக இருந்தால் பயன்படுமே என்று சொல்லும் அறிவாளிகளிடம் என்ன சொல்லுவது? அவர்களுக்கும் இதில் ஏதோ அரசியல் நன்மைகள் இருக்கிறதோ என்றே நினைக்கத் தோன்றுகிறது. அரசு எந்த மாற்றத்தை கொண்டு வந்தாலும் இரண்டு பிரிவுகள் இருப்பது அரசு எதிர்பார்த்தது தான். மாற்றத்தை எதிர்ப்பவர்கள் போராளியாக தெரிய மாட்டார்கள். அவர்கள் மற்றொரு கூட்டம் ஆகவே அவர்களுக்குத் தெரியும். ஒன்று கூடி குரல் தரும்போது புரட்சி ஏற்படும்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகக் குரல் தந்தால் அரசு அதன் பாதையில் சென்று கொண்டே இருக்கும். நாம் இங்கு குரல் தந்து கொண்டே இருக்க வேண்டியது தான். மக்களிடம் ஒற்றுமை வரும்வரைக்கும், சுயநலத்திற்கு இடம் கொடுக்கும் அதிகாரிகளும் மக்களும் உள்ள வரை அரசு தனது அடாவடி யான மாற்றத்தை கொண்டு வரத்தான் செய்யும். இருக்கும். மாற்றங்களை கொண்டுவந்து புதிய தொரு உலகத்தைப் படைக்க வில்லை என்றாலும் அரசு கொண்டு வரும் மாற்றங்களை எதிர்த்து, இருக்கும் உலகத்தையாவது காப்பாற்றுவோம்.

(உயிரோசை)

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்