/* up Facebook

Jan 31, 2012

ஆடு ஜீவிதம்...! - ஆர்த்தி வேந்தன்


உள்மனதில் பதிந்து உள்ள அத்தனை துயரங்களும் மேலோங்கி வந்தது உண்டு, எனக்கு மட்டுமே சொந்தம் என்று நம்பிக்கொண்டு இருந்த ரகசியங்கள் எல்லாம் வெட்ட வெளிச்சதில் வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தது உண்டு, இத்தனை நாட்களாக இப்படி ஒருவருடன் நான் வாழ்ந்து வந்து இருகிறேன் என்று ஆச்சிரிய பட்டதுண்டு, உலகம் இத்தனை அழகானதா என்று வியந்து வியந்து ரசித்தது உண்டு, வாழ்கையின் கடைசி நிமிடம் போல் உருகி உருகி காதலித்தது உண்டு, என்றுமே நேராத எப்போதோ நேர்ந்த இழப்புகளை நினைத்து விதியை நொந்து கொண்டது உண்டு, காரணம் இல்லாமல் ஏதோ ஒன்றை மனதுக்குள் கற்பனை செய்து கொண்டு சிரித்தது உண்டு, கண்ணீர் வற்றும் வரை அழுதது உண்டு, எல்லாவற்றையும் வெறுத்தது உண்டு, எல்லாவற்றையும் நேசித்தது உண்டு, பெயர் சூட்ட முடியாத உணர்வுகள் பிறந்தது உண்டு, உலகத்தின் அத்தனை சந்தோஷத்தையும் ஒரே நொடியில் கையில் தூக்கியது உண்டு, வெறுமை மட்டுமே நிரம்பியது உண்டு இப்படி பல அனுபவங்களை தந்து உள்ளது புத்தகங்கள். புத்தகங்கள் மூலம் பல முறை ஜனனம் சந்தித்து இருகிறேன் சில முறை மரணம். ஆனால் இதுவரை உணராத ஒரு அனுபவம், சற்றும் எதிர்பாரா ஒரு மாற்றம்- என் துயரங்கள் எல்லாம் மறைந்து போனது, நான் என்றைக்கும் அலட்சியமும், வெறுப்பும் காட்டும் கடவுள் மீது ஒரு ஈர்ப்பு வந்து உள்ளது. என் மனம் முழுவதும் நிரம்பி உள்ளது நஜீப்...! ஒரு மனிதன் இத்தனை துயரத்தை சந்திக்க முடியுமா? இத்தனை சந்தித்தும் வாழ வேண்டும் வாழ்ந்து கொண்டுஇருக்கும் நஜீப் க்கு எத்தனை நம்பிக்கை! எத்தனை பெரிய கஷ்டங்களும் தீவரமான வேதனைகளும் கால ஓட்டத்தில் வாழ்க்கையின் அம்சம் ஆகவே மாறிபோகும் என்பது நஜீப் யின் வாழ்கை அனுபவம். இந்த புரிதல் யாருக்கும் எளிதில் வந்து விடாது.

அவரின் இழப்புகள் எல்லாம் ஒன்றுகூடி அவருக்கு கற்று தந்தது இது. நஜீப் ஏன் வாழ்வதற்கு ஜெயிலை தேர்ந்து எடுக்கிறார் பசி உடலை வாட்டி எடுத்தாலும் ஏன் ஆட்டு கறியை மட்டும் தொடுவது இல்லை என்ற கேள்வி காண பதில் அவர் இதுவரைக்கும் வாழ்ந்த வாழ்கை . 200 பக்கங்களில் பென்யாமின் நஜீப் யின் வாழ்க்கையை சித்திரமாக தந்து உள்ளார். வாழ்கையை பற்றிய அப்பட்டமான உணர்ச்சி குவியல் தான் புத்தகம் முழுவதும் நிரம்பி உள்ளது. மனதில் பல கனவுகளும் எதிர்பார்புகளும் அழகான கற்பனைகளும் சுமந்து கொண்டு கேரளாவில் இருந்து gulf க்கு செலும் நஜீப் யின் வாழ்க்கை பாதை பலர் கடந்து சென்றதாக இருக்க கூடும் ஆனால் எத்தனை நாள் பயணம் செய்தார்கள், எத்தனை பேர் நம்பிக்கையை மட்டும் வைத்து வாழ்ந்தார்கள் எத்தனை பேர் மீண்டும் வந்தார்கள் என்பது கேள்வி குறிதான். நம்முடைய கனவுகள் பெரும்பாலும் கற்பனைகள் மட்டுமே நிரம்பி உள்ளது நமக்கு தெரியாத ஒரு விஷயத்தையோ இல்ல பார்காத ஒரு இடத்தையோ தான் அதிகமாக நினைக்கிறோம். நம்முடைய ஆசைகள், கனவுகள் எல்லாம் ஒரு கற்பனை உலகத்தில் இருந்து தான் உருவாகிறது. சொர்க்கம் போல் உள்ளது, சொர்க்கம் போன்ற அனுபவம் என்று நாம் அடிக்கடி சொலுவது எல்லாம் நாம் யாரும் சொர்கத்தை நேரில் பார்காத காரணத்தில் தான்.. அருகில் இருப்பதை அலட்சிய படுத்துவதும் தொலைவில் இருபதின் மீது ஈர்ப்பு வருவது மனித இயல்பு தான். நமக்கு தெரியாத விஷயங்களை பற்றியும் எங்கோ நடக்கும் விஷயங்களை குறித்தும் விளையாட்டா கூட கனவு கண்டு விடாதிர்கள், என்றோ ஒரு நாள் அது உங்கள் வாழ்வின் யதார்த்தமாகி விட்டால், அப்போது அதை நேருக்கு நேராக பார்பதற்கு கூட இயலாத விதத்தில் அது அத்தனை பயங்கரமாக இருக்க கூடும் என்பது தான் நஜீப் நமக்கு தரும் எச்சரிக்கை.

நிஜ வாழ்க்கைக்கும் கனவுக்கும் உள்ள வித்தியாசம், கனவு வை அடைந்து விட்டோம் என்று நம்பும் தருணத்தில் கனவு அந்நியமாகி போவது போல் வேதனை எதுவும் இல்லை. சுய வாழ்கையை யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாமல் தமக்குள்ளே முடங்கிபோகும் பரிதாப ஜீவனாய் வருகிறார் ஹமீது. பாதி வழி யிலே முடிந்து போகும் வாழ்கை தான் எத்தனை!

உலகதில் எந்த துயரத்தையும் தாங்கி கொள்ளலாம் அதை பகிர்ந்து கொள்வதற்கு ஒருவர் இருந்தால் ஆனால் சில நேரங்களில் நம்மை நன்கு புரிந்தவர்களும் நம்மை நேசிகிரவர்களுக்கு கூட நம் நிலைமை சொல்ல தயங்குவது உண்டு நம்முடைய சந்தோஷமே அவர்களுடைய சந்தோஷம் உலகம் என்று இருபவர்களுக்கு நம்முடைய துயரத்தை மறைத்து நம் நேசிபவரை சந்தோஷ படுத்துவது ஒரு மேலோட்டமான சுகம் ஆனால் மனதை கிழிக்கும் துயரம். நஜீப் அவருடைய சைனு க்கு அனுப்ப முடியாத எழுதிய கடிதங்கள் கூட அப்படி தான். கடிதம் முழுவதும் பொய், எழுதி முடித்து விடு தேம்பி தேம்பி அழுவார் அந்த அழுகை மட்டுமே உண்மை யாரும் படித்து பார்காத உண்மை.

பாலைவனத்தின் வாழ்க்கை முறைகளும் ஆட்டு உடைய ஆண்மையை வெட்டும் கொடூரமும் பார்த்து அதிர்ச்சி அடைந்தது ஒரு பக்கம். நான் மிகவும் வியந்தது சாப்பிட ஆகாரமில்லை, தண்ணீரில்லை, துணி இல்லை, படுக்க ஓரிடம் இல்லை, கூலி இல்லை, வாழ்கை இல்லை, கனவுகள் இல்லை, ஆசை இல்லை உயிர் மட்டுமே எஞ்சி இருக்கும் நிலையில் கூட அல்லா மீது இருக்கும் நம்பிக்கை மட்டும் குறைய வில்லை. கடவுள் இருக்கிறார் என்று நம்பிய காலத்தில் கூட தடுக்கி விழுந்தால் கடவுள் மீது கோவபடுவது உண்டு. அல்லா மீது கோவபடுவதற்கு எல்லா நாயமான காரணங்கள் இருந்தும் அவர் அல்லா மீது நம்பிக்கை வைத்து உள்ளார். எல்லாவற்றுக்கும் கடவுள் கடவுள் என்று கூப்பிடுவர் மீது கோவமும் சில சமயம் எரிச்சலும் வரும் ஆனால் நஜீப் ஒவ்வொரு முறையும் அல்லா அல்லா என்று அழைக்கும் போது இல்லாத அல்லா மீது எனக்கு ஒருவிதமான ஈர்ப்பு தான் ஏற்படுகிறது! அல்லா இத்தனைநேசத்துக்கு உரியவரா! வியப்புக்கு அவரே விடையும் தருகிறார் 'பசுஞ் சோலையில் மெய் மறந்து வாழும் பாக்கியம் பெற்றவர்களே.. உங்களை பொறுத்தவரை பிராத்தனைகள் வெறும் பிரசங்கள் ஆகவும் சடங்குகள் ஆகவும் இருக்கலாம் ஆனால் எனக்கோ அது தான் வாழ்கையின் கடைசி அச்சாணி '

அரைசாண் வயிற்றுக்காக வீட்டையும் நாட்டையும் பிரிந்து மணல் காட்டுக்கு போய் அகப்பட்டு கொண்ட நஜிப் ஸ்பரிசம் , வாசனை, அன்பு, ஆசை என்ற மனித நிலை முற்றிலுமாக பரி கொடுத்து விட்டு ஆடுகிடையில் ஒரு ஆடுஆகவே மாறி போன அவலம் தான் நஜீப்.

அந்த வாழ்கையை வெறுத்த போதிலும் ஒவ்வொரு நொடியும் தப்பிக்க நினைத்த போதிலும் அதற்கான சந்தர்பம் வரும் போது ஆடுகளை விட்டு பிரிய மனம் இல்லாமல் ஏதோ ஒன்று தடுப்பது அழகிய உணர்ச்சி குவியல். சந்தர்பங்களுக்காக காத்து இருப்பது அந்த சந்தர்பம் வந்து கதவை தடும போது பயன்படுத்த விருப்பமின்றி விரகத்தில் மூழ்குவது போன்ற வாழ்க்கையின் முரண்பாடுகளை நம் மனதை விட்டு போகாத படி பதிவு செய்து உள்ளார் பென்யாமின்.

மனிதனின் இயலாமைகள், விலங்குகளின் புரிதல்,எதிர்பாரா நேரத்தில் வரும் உதவி, ஒரு நாளில் வாழ்கை மாறி போகும் விசித்திரம், வாழ்க்கையின் முரண்பாடுகள் இவற்றை எல்லாம் நஜீப் மூணு வருஷம், நாலு மாசம், ஒன்பது நாட்களில் கற்று கொண்டார் நாம் வெறும் 240 பக்கங்களை படித்து தெரிந்து கொண்டோம் இதுவும் வாழ்க்கையின் ஒரு விசித்ரம் தான்.. நஜீப் வேர் ஒருவர் விசாவில் தான் gulf யில் வந்து இறங்கினார் அது constuction கம்பெனி யில் வேலை செய்வதற்கான விசா .ஆனால் பாலைவனத்தில் வசிக்கும் ஒரு அர்பாபு ஆடு மேய்பதற்காக அவரை கூட்டிசென்று விட்டார். வேறு ஒருவர் விதியில் தான் தல்லபட்டு இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்வதுற்கு அவர் அவரின் இயல்பை கூட இழக்க வேண்டிய தாயிற்று. புத்தகத்தை மூடிய பிறகும் நஜீப் மீண்டும் மீண்டும் உயிர் பெற்று கொண்டே இருக்கிறார். என் துயரங்கள் முழுவதும் அழித்துவிட்டு அவருடைய வாழ்க்கை சுவடுகள் மட்டுமே நிரம்பி உள்ளது.

ஆடு ஜீவிதம்- வித்தியசமான வாசக அனுபவம் மட்டும் அல்ல வாழ்கை பாடம் கூட- மனித உணர்சிகளின் குவியல். உயிர்மை பதிப்பகத்தின் ஆடு ஜீவிதம் (தமிழ் யில் -எஸ்.ராமன்) தமிழில் சமீபத்தில் வெளி வந்த ஒரு முக்கிய நாவல்.
(உயிரோசை)
...மேலும்

Jan 28, 2012

எர்னெஸ்த்தோ ச்சே கெ’பாராவைக் கொலை செய்தல் - வசுமித்ர, முன்னுரை கொற்றவை

சேகுவேரா
நனவிலி மனதின் உணர்வுகளை இரக்கமின்றி வெட்ட வெளிச்சமாக எழுதிய வசுமித்ரவிடமிருந்து மற்றுமொரு பரிணாமம் ‘எர்னெஸ்த்தோ ச்சே கெ’பாராவைக் கொலை செய்தல்’ எனும் இந்தக் கவிதை தொகுப்பு. அரசியல் கவிதைகள் என்று சொல்லக்கூடிய வகையில் பெரும்பாலான கவிதைகள் இருக்கின்றது. அத்தோடு ’கவிதை’ வடிவம் பற்றிய மார்க்சியம் மற்றும் பின் நவீனத்துவ பார்வைக் கொண்ட விமர்சனம், கவிஞனுக்குரிய சமூக பொறுப்பு என தற்காலத்திய தமிழ் ’இலக்கியச்’ சூழலையும் கவிதையின் வாயிலாக உரையாடலுக்கு உட்படுத்தப்படுகிறது. சந்தைப்படுத்திக் கொண்டு ‘கவிதைத் தொழில்’ செய்யத் தெரியாத கவிஞர்களின் நிலை குறித்த கவிதைகள், வாசக மனதில் கவிதை குறித்தான சந்தேகத்தைப் பீய்ச்சி அடிக்கவல்லது.

கவிதை என்பதை வெறும் மொழியின் விளையாட்டாக, மொழி ஆளுமையின் வெளிப்பாடாக மட்டும் கருதி விட இயலுமா? அது சரியானதாக இருக்குமா என்பது ஐயமே. எந்த ஒரு படைப்பும், கண்டுபிடிப்பும் மக்களுக்கு பயன் அளித்தல் வேண்டும், அது எந்த சமூகக் குழுவின் பிரதிநிதியாக செயல்படுகிறது என்பது முக்கியமானது, துன்பப்படும் மக்களின் சார்பாக இல்லாத ஒரு படைப்பு “பூர்ஷுவா”த் தன்மை நிறைந்தது என்று மார்க்சியம் வழிகாட்டுகிறது. மனம் சார்ந்தப் பணிகளை செய்யும் எழுத்தாளர்கள் தங்களின் கலகக் குரல்கள் மூலமும், சமூக கருத்தாக்கங்களை கேள்விக்குட்படுத்துவதன் மூலம் அத்தகையதொரு பயன்பாட்டு எல்லையைத் தொடுகின்றனர்.

அவ்வகையில் வசுவின் கவிதைகள் கலகக் குரலாக இருக்கிறது எனச் சொல்வேன். முந்தைய இரண்டு தொகுதிகளின் தலைப்புகளும் அதற்கொரு சான்று. சமூகமானது கருத்தாக்கங்களின் மூலம் “கட்டுக்குள் வைத்திருக்கும்” உணர்வுகளை கவிதைச் சொற்களாக்கி அதன் பொருளை மீட்டுருவாக்கம் செய்யும் முயற்ச்சி. அது பேசிய தனிமை, ஏமாற்றம், அனாதைத் தனம், கரமைதுன அனுபவம், கள்ளக்காதல், ஒரு பால் உறவு எனும் உணர்ச்சிகள் வெறும் தனிமனித உணர்வு என்று ஒதுக்கிவிட இயலாதவையாக இருந்தன. யாரோ ஒருவர் தன் அவலங்களைப் பகிர்ந்து கொள்கிறார், அதிர்ச்சியுறும் அல்லது உச்சுக் கொட்டும் தாக்கத்தோடு முடிக்கிறார் என்று ரசித்து விட்டு அல்லது நிராகரித்து விட்டுச் செல்வது என்பதைத் தாண்டி வேறு ஒரு அனுபவத்தை, உரையாடலை தொடங்கி வைப்பதாக முந்தையக் கவிதைத் தொகுதிகள் இருந்தன.

அந்தப் படைப்பு வகையிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாய் இருக்கிறது இந்தக் கவிதைத் தொகுப்பு. கூட்டுச் சமூக மன உணர்வுகளை, அரசியல் அறம், கவிதை அறம், கவிஞர்களின் அறம் என பல்வேறு தளங்களை தொட்டுச் செல்கிறது. ச்சே கொபாராவைக் கொலை செய்தல், நூலகத்திற்கு செல்லும் வழியில், ஒரு துண்டுச் சதை எனும் தலைப்பின் கீழ் வரும் கவிதைகள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. பிரமிளுக்கும், ஐயப்பனுக்கும் எழுதப்பட்ட கவிதையானது மனதை உலுக்கும் தன்மையைக் கொண்டுள்ளதோடு, சமூகமானது அத்தகைய ஆளுமைகளை கைவிடும் அவலத்தையும் பிரிதிபலிக்கிறது. கைவிடப்பட்ட சொற்களின் நிம்மதி எனும் கவிதை சொற்களின் அரசியலை எள்ளல் தன்மையோடும், தத்துவார்த்த பின்புலத்தோடும் விமர்சிக்கிறது. சொற்களின் அரசியல் மற்றும் அதன் அதிகாரம் குறித்து இத்தொகுப்பில் நிறைய எழுதியிருக்கிறார் வசுமித்ர. ஒருவகையில் அது காலத்தின் அவசியமாகவும் இருக்கிறது.

இயல்புக்கப்பாற்பட்ட பிம்பங்களும், குறியீடுகளும் நிரம்பிய கவிதைகள் வசுமித்ரவினுடையது. ஒரு கவிதைத் தொகுப்பு முன்னுரையில் கவிதை வரிகள் குறித்து பொருள்விளக்கம் கொடுத்து எழுதுவதென்பது அந்த கவிதை வரிகளின் மேல், வாசக அறிவு நிலை மேல் அதிகாரம் செலுத்துவது போலாகக் கூடும். தொகுப்பிலிருந்து சில வரிகளை மேற்கோள்களாகக் காட்டி இவை இன்ன தத்துவத்தினை, பாணியை, குறியீடுகளை, சிந்தனைகளை, காட்சிகளை கொண்டுள்ளது என்று சொல்வது கவிதையின் அர்த்தங்களைப் பிடுங்கி சட்டகம் இட்டு கண்காட்சியில் காட்சிக்கு வைப்பது என்பதாக உணர்கிறேன். .

ஓவியர் பாப்லோ பிக்கசோ ‘அரூப ஓவியங்களை’ப் புரிந்துக் கொள்வதைப் பற்றி பின் வருமாறு கூறியிருக்கிறார்:

எல்லோரும் ஓவியத்தைப் புரிந்துக் கொள்ள முயல்கிறார்கள். ஏன் அவர்கள் பறவையின் பாடல்களை புரிந்துக் கொள்ள முயற்சி செய்யக் கூடாது? ஏன் அவர்கள் ஒரு இரவை, ஒரு மலரைக் காதலிக்கின்றனர், இப்படியாக மனிதரை சூழ்ந்திருக்கும் அனைத்தையும் அதை புரிந்து கொள்ளும் முயற்சியின்றி விரும்புகின்றனர். ஆனால் ஒரு ஓவியத்தைப் பொருத்தவரை, புரிந்துகொண்டேயாகவேண்டும் என்று விரும்புகின்றனர். அவர்கள் புரிந்துக் கொள்ளட்டும் ஒரு ஓவியன் தேவையிலிருந்து பணி புரிகிறான் என்று, இயற்கையில் உள்ள எத்தனையோ வசீகரிக்கும் பொருள்கள் விளக்கம் கூற முடியா தன்மையில் உள்ளன. அவ்வுலகில் அவனும் ஒரு மிகச்சிறிய தனிமம் அவ்வளவே. ஒரு ஓவியத்தை விளக்க முயற்சிப்பவர்கள் பெரும்பாலான நேரங்களில் தவறான தண்டவாளத்தில் பயணிக்கின்றனர். கெர்த்ருதே ஸ்டையின் மிகுந்த குதூகலத்துடன் ஒருமுறை என்னிடம் சொன்னாள், இறுதியாக என் ஓவியத்தைப் புரிந்துக் கொண்டதாக: மூன்று இசைக் கலைஞர்கள். அது ஒரு “ நிழற்படம்”

படைப்பாளிக்கு படைப்புக்களைத் தருவதோடு வாசகரின் ரசனையை ஆரோக்கியமாக மாற்றியமைக்கும், அறிவு நிலையை உயர்த்தும் பொறுப்பும் இருக்கிறது என்று சொல்லும் வசு தன் கவிதைகள் மூலம் அத்தகைய ஒரு சூழலை வாசகருக்கு உருவாக்கித் தருகிறார் என்றே நான் சொல்வேன்.

(எர்னஸ்டோ சேகுவேரா என்று உச்சரிக்கப்படும் Ernesto Che Guvera, எர்னெஸ்த்தோ செ’கெபாரா என்று ஸ்பானிய உச்சரிப்பில் வருகிறது. வெளியீடு: உயிர் எழுத்து) 

...மேலும்

Jan 27, 2012

பெண்...! - ஆர்த்தி வேந்தன்


பெண் வயது 23 ஆண் வயது 28 10 பொருத்தமும் சரி ஆக இருந்தது. ஆகஸ்ட் 22 கல்யாணம். இருவரும் IT கம்பெனி யில் வேலை செய்கிறார்கள். காலை 9 மணிக்கு ஆபீஸ் யில் இருந்து ஆக வேண்டும். இரவு எத்தனை மணி ஆகும் என்று குறிபிட்டு சொல்ல முடியாது. இருவரது ரசனையும் ஆர்வமும் ஒரே மாதிரி ஆக தான் இருந்தது இருந்தபோதிலும் அவர்களின் வித்தியாசங்களை இருவரும் ரசித்து மதிப்பு அளித்தது உறவை இன்னும் அழகாக ஆகியது. கூட்டு குடும்பத்தில் இருந்து வந்ததால் புதிய உறவுகளை சமாளிப்பது தாரா வுக்கு பெரியதாக இல்லை. அவளின் கல கல என்ற பேச்சும் புன்னகையை எப்போதும் இதழில் பூசி கொண்டிருக்கும் முகத்தையும் அனைவர்க்கும் பிடித்து இருந்தது.

ஆபீஸ் யில் இருக்கும் போது அக்காவிடம் இருந்து போன் வந்தது. மீட்டிங் postpone ஆயிர்ச்சு. 10 மணி ஆகிவிடும். நல்ல நாளிலே அவர் சிக்கிரம் வர மாட்டார் இன்னைக்கு வேற சனி கிழமை சொல்லவே வேண்டாம். நீ போய் கிருஷ்ணா வை கூபிட்டு வந்துரு. சரி அக்கா என்று போன் யை வைத்தவள் வேலையை சீக்கிரமாக முடித்து விட்டு கிளம்பினாள். ஸ்கூட்டி டே கேர் சென்டர் க்கு போனது . உள்ளே இருந்து ஆயம்மா வந்தார். யார் வேண்டும்? கிருஷ்ணா என்று சொன்னாள். உங்களை நான் இதற்கு முன்னாடி பார்த்தது இல்லையே என்று ஆயம்மா குழப்பத்துடன் கேட்டார். என் கணவனின் அண்ணன் பையன் தான் கிருஷ்ணா என்றாள். ஒ அப்படியா கிருஷ்ணா குறும்பு ஜாஸ்தி. எல்லா குழந்தைகளையும் கடித்து வைக்கிறான். மற்ற குழந்தைகள் கொண்டுவரும் சாப்பாடு தான் சாப்டுகிறான். அவனுக்கு முட்டை ரொம்ப பிடிக்கிறது. நாளையில் இருந்து முட்டை டிபன்யில் வைத்து கொடுங்கள். காதில் ஏதோ புண் போல சொரிஞ்சுகிட்டே இருக்கான். டாக்டர் கிட்டே காமிங்கள் என்று ஆயம்மா சொன்னார். தாரா எதுவும் பேசவில்லை. கிருஷ்ணா வாட்சமன் அண்ணா க்கு ஒரு முத்தம் கொடுத்து விட்டு தன்னுடன் இருக்கும் எல்லாருக்கும் bye சொலிவிட்டு கிளம்பினான்.

கிருஷ்ணா வை hospital க்கு கூட்டி சென்றாள்.தயக்கத்துடன் உள்ளே சென்றாள். காதில் புன் என்று நினைகிறேன் என்றாள். காதை check செய்து விட்டு எத்தனை நாளாக உள்ளது என்று கேட்டார். தாரா முழித்தாள். எதுக்கு தான் உங்களுக்கு எல்லாம் குழந்தை யோ என்று இன்னும் என்னமோ முனுமுனுத்து கொண்டே மாத்திரை எழுதி கொடுத்தார். கை படாமல் பார்த்து கொள்ளுங்கள் எல்லா இடத்துக்கும் பரவ ஆரமித்திடும். இந்த ointment யை தடவி விடுங்கள் சரி ஆக போயிரும் என்று டாக்டர் சொன்னார். தாரா கிருஷ்ணாவை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாள்.

இரவு எல்லாம் தூக்கமே இல்லை. எதை யோ யோசித்து கொண்டே இருந்தாள். புரண்டு புரண்டு படுத்தாள். ஆயம்மா சொன்னதை நினைத்து பார்த்தாள். கிருஷ்ணா குட்டி க்கு முட்டை பிடிக்கும் என்று அவளுக்கு இன்று வரை தெரியாது. ஆயம்மா எத்தனை தெரிந்து வைத்து உள்ளார். கிருஷ்ணா தூங்கி தான் தாரா பல நாட்கள் பார்த்து இருக்கிறாள். சண்டே மட்டும் தான் விடுமுறை. அன்றைக்கு ஒரு நாள் தான் நிம்மதியாக தூங்க முடியும். வீட்டில் எல்லாரும் அன்றைக்கு late ஆக தான் எழுவார்கள். வீட்டை சுத்தம் செய்து மற்ற வேலைகள் எல்லாம் சரி ஆக இருக்கும். என்றைகாவது வெளியே போவது உண்டு. தன் கடந்த கால வாழ்கையை நினைவு படுத்தி பார்த்தாள். இரவு எப்போதும் ஒன்றாக தான் உட்காந்து சாப்பிடுவார்கள். அண்ணனிடம் சண்டை போட்டது விட்டு கொடுத்தது. அவளுக்கு அப்படியே அப்பா வின் குணம் என்று சொலுவார்கள். அவளின் mannerisms அம்மா வை போல் இருக்கும். டே கேர் சென்டர் என்று ஒன்னு அவள் கேள்வி பட்டது இல்லை. டாக்டர் சொன்ன வார்த்தைகள் முகத்தில் பளார் என்று அறைந்தது போல இருந்தது. இபோ இருக்கும் சூழ்நிலையில் வேலையை விட முடியாது. இன்னும் இரண்டு வருடம் சம்பாரிச்சு சேமிக்க வேண்டும்.ஏதோ தெளிவு பெற்றது போல எழுந்தாள். தனக்குள்ளே சொல்லி கொண்டாள். இன்னும் இரண்டு வருடம் பிறகு தான் குழந்தை என்று. அரவிந்த் என்றைக்கும் தாரா வின் சிந்தனையிலும் செயல்களிலும் நம்பிக்கை உள்ளவன். அவனுக்கும் தாரா சொல்வது சரி என்றே பட்டது. தன்குழந்தை எதுவும் இழக்க கூடாது. மற்றவரிடம் ஒப்படைத்துவிட்டு எங்கையோ வேலை செய்வது அவனுக்கும் இஷ்டம் இல்லை.

இரண்டு வருடம் பிறகு...
அரவிந்த்... சும்மா சும்மா சொல்கிறேன் என்று கோவபடாதே. நல்லது கெட்டது என்று எங்க சென்றாலும் எல்லாரும் கேட்கிறார்கள். ஏன் இன்னும்......?? நாலு பேரு நாலு விதமாக பேசுகிறார்கள். சாந்தி அத்தை போன் பன்னார்கள் அவர்களுக்கு தெரிந்த டாக்டர் இருக்கிறார். நாம் தாரா வை கூபிட்டு போலாம்.. தடார் என்று அரவிந்த் எந்திரித்தான். கோவத்தில் முகம் சிவப்பானது. அவன் தனிப்பட்ட விஷயத்தில் தலையிடுவது அவனுக்கு பிடிக்காது. சாந்தி அத்தை ஆக இருந்தாலும் சரி அம்மாவாக இருந்தாலும் சரி. எனக்கு எல்லாம் தெரியும் உங்கள் வேலை யை பாருங்கள் என்று வாசலை நோக்கி சென்றான். சமையலறையை கடந்து செலும் போது வேலைகாரி சமையல் காரனிடம் பேசி கொண்டு இருந்தது அவன் காதில் விழுந்தது. என்ன படித்து என்ன பிரயோஜனம் முதலாளி அம்மா எவ்வளவு ஆசை ஆக இருந்தார் அரவிந்த் ஐயா ஒரு பேர குழந்தையை கொடுப்பார் என்று இப்படி வெளியே தலை காட்ட முடியாமல் செய்துவிட்டாளே. ஏதோ IT கம்பெனி ஆம். பிள்ளை பெற்று கொண்டா அழகு கெட்டு விடும் என்று பயம் போல. தாலியை கூட வெளியே தெரியாதுபோல் தான் போட்டு இருக்கிறாள். முதலாளி அம்மா க்கு வேற வயசு ஆயிர்சு இவளுக்கு எதாவது அக்கறை இருக்கிறதா.. என்ன பொன்னோ.. பெண் புத்தி பின் புத்தி என்று சரி ஆக தான் இருக்கிறது.

ஐயோ! எவ்வளவு சுலபமாக பழமொழிகள் நமக்கு வாயில் வருகிறது. அதிலும் பெண்ணை பற்றி என்றால் சொல்லவே வேண்டாம் சரளமாக சொல்லி கொண்டே போவோம். பழமொழியை சொன்னவர் என்ன நினைத்து சொன்னார் என்று யாருக்கும் தெரியாது ஆனால் நாம் அதற்கு கொடுக்கும் interpretations அட அட டா எல்லாம் நம் வசதிக்கு ஏற்பதை போல் மாற்றி கொள்கிறோம். பெண் புத்தி பின் புத்தி என்று அடிகடி சொல்லி நான் கேட்டு உள்ளேன். ஒரு தப்பான என்னத்தை வர வைக்கும் இந்த பழமொழிக்கு இப்படியும் அர்த்தம் உள்ளது. பின் என்றால் பின்னாடி என்ற வார்த்தையின் சுருக்கம் அதன் படி பார்த்தால் பின்னாடி நடக்க கூடிய விஷயத்தை முன்பே அறிந்து அதன்படி செயல்படுவதன் காரணத்தால் பெண் புத்தி பின் புத்தி என்று சொல்வர்.

பெண்களை இழிவுபடுத்தும் பழமொழிகளுக்கும் விளம்பரங்களுக்கும் குறைச்சலே இல்லை. பெண்கள் கூந்தல் தான் நீளம் மூளை குட்டை என்று அறிஞர் காலமிக் சொல்லி இருக்கிறார் என்று நண்பர் ஒருவர் கூறினார். அளவு என்னவாக இருந்தால் என்ன இருப்பதை உபயோகம்படுதினா போதாதா. அறிவான பெண்களை பட்டியல் இடுவது ஒன்றும் கஷ்டம் யே இல்லை. என்ன பட்டியல் தான் நீண்டு கொண்டே போகும்.

இன்னொரு பழமொழி உண்டு. ஆத்திரம் எனபது பெண்களுக்கு எல்லாம் அடுப்பறை வரைதானே. ஒரு ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் அடங்குதல் முறைதானே. எனக்கும் இதில் சந்தேகம் இருந்தது உண்மையாக இருக்குமோ என்று குழந்தை போராளி என்ற புத்தகத்தை படிக்கும் வரையில் தான் என் சந்தேகம்.

ஒரு பெண் வாழ இன்னொரு பெண் பொறுக்கமாட்டாள். எத்தனை வருடங்களாக நாம் இதையே சொல்லி கொண்டு இருப்போம். சோமாலி மாம் என்ற பெண்ணை பற்றி படியுங்கள் இந்த பழமொழி எவ்வளவு அபத்தமாக உள்ளது என்று தெரியும். தனக்கு நேர்ந்த கொடுமைகள் எந்த பெண்ணுக்கும் வர கூடாது என்று பல தடைகளை தாண்டி இன்றும் போராடி கொண்டு இருக்கிறார்.

பெண் தீமை செய்வதில் ஆண்களை விட அறிவாளி. ஆண்கள் தரும் பாலியல் தீமையை விட என்ன தீமை செய்தார்கள் என்று தெரியவில்லை. கோவம் என்று சொல்வதில் விருப்பம் இல்லை. ரௌத்திரம் என்பதே சரி. ரௌத்திரத்தில் தீமையை கண்டு குரலை உயர்த்தி எதாவது சொன்னால் பெண் க்கு கிடைக்கும் பெயர் திமிர் பிடித்தவள் மரியாதை தெரியாதவள். இன்றும் ஆணின் அறிவு அதிகாரம் பெண்ணின் அறிவு அகங்காரம் என்று தான் நம்புகிறோம்.

அட்டதனை உண்டி உதவாதாள் இல்வாழ்பேய் என்று நாலடியார் பாடல் வரி உண்டு. கணவனுக்கு சாதம் பரிமாராதவள் பேய் ஆம். ஏன் கணவனுக்கு கை இல்லையா போட்டு சப்பட வேண்டியது தானே.. சாதம் பரிமாரதவள் பேய் என்றால் குடித்து விட்டு வீட்டுக்கு வரும் கணவன் என்னவாம்? ஈன்று புறந்தருதல் என் தலை கடனே சான்றோன் ஆகுதல் தந்தை கடனே என்று எப்போதோ படித்த நியாபகம். ஒரு உயிரை படைப்பது அற்புதமான ஒன்று. சொலுவதற்கு வார்த்தைகள் இல்லை.. பெருமையாகவே நினைகிறேன்.. ஆனால் அதை கடமை என்று சொல்ல வேண்டாம்.. குழந்தை இல்லாத பெண்ணுக்கும் தாய்மை உணர்வு இருக்கிறது. அடுத்த வரி ஆண் ஆதிக்கத்தின் உச்சகட்டம். குழந்தையை சான்றோரு ஆக்குவது தந்தையின் கடமை மட்டும் தான் னா? தாயின் பங்களிப்பு அவசியம். பெட்டை கோழி கூவி பொழுது விடியாது. அதாவது பெண் ஒருத்தி யாள் குடும்பம் ஓடாது. அப்பாவின் உழைப்பால் தான் குடும்பம் ஓடுகிறது என்பது உண்மை ஆனால் நான் இன்று எனக்கு தேவையான எல்லா வற்றையும் வாங்கி கொள்வதற்கு அம்மாவின் சேமிப்பு என்பதும் உண்மை.

நான் கேள்விப்பட்ட சில வரிகள். பெண்கள் இரண்டு வகை ஒன்று அழகானவர்கள் இன்னொன்று அழகு என்று நம்பி கொண்டிருபவர்கள். எந்த கண்ணாடியும் பெண்களை அழகு இல்லை என்று சொன்னது இல்லை. கண்ணாடிக்கு தெரிந்தது கூட மனிதனுக்கு தெரியவில்லையே. .. உருபுகளை பார்த்து பெண்ணிடம் பேசுவதும் அதை மட்டுமே பெண் என்று நினைக்கும் கொடூரமான சிந்தனை தான் அருவருப்பை தரும் அசிங்கம்.. பெண்ணுக்கு உரிய உணர்வுகள் தான் பெண்ணை அழகுபடுத்து கிறது.. அவளின் ஆழமான கனவுகளும் கற்பனைகளும் வலிகளும் உணர்வுகளும் பெண்ணுக்கு என்றும் அழகு தான்.. நான் ஆண்களின் blog சில படித்துள்ளேன் ..அதில் அவர்களின் படைப்புகளில் தனிமையில் என்ன செய்வார்கள் என்று குறிபிட்டு உள்ளார்கள்.. அவர்களின் தனிமை பாதி காமம் தான் நிரப்புகிறது. . இல்லை என்று சொல்லலாம் இல்லவே இல்லை என்று சொல்ல முடியாது.. தனிமையில் இலக்கியமும் ஓவியமும் படைக்கும் ஆண்களும் இருகிறார்கள்.. ஒரு பெண்ணின் தனிமை உலகத்தில் உள்ள அத்தனைஅழகுகளையும் மறைத்து வைத்து உள்ளது.. இசை ஓவியம் இலக்கியம் சிற்பம் எல்லாம் ஒன்று கூடினால் எப்படி இருக்கும் அப்படி தான் அவளின் தனிமையும். பல நாட்கள் கண்ணீர் தான் நிரப்பும் இருந்தும் அது அழகு தான்.. தனிமையில் அவள் சிந்தும் கண்ணீரை பாதுகாத்தால் உலகு க்கு இன்னொரு கடல் கிடைக்கும் .ஒரு நொடியில் எத்தனை சிந்தனைகள் எத்தனை கனவுகள் எத்தனை பயணங்கள்.. எல்லாம் பெண்ணுக்கு தனிமையில் சாத்தியமே.. அவள் அவளை யே ரசிப்பதும் அவளையே கோவித்துகொள்வதும் பைத்தியகார தனம் இல்லை பெண்மைக்கு உரிய சில குணங்கள்.. அவள் சொல்ல விரும்பும் வார்த்தைகளும் கேட்க விரும்பும் வார்த்தைகளும் அவள் மிகவும் விரும்பிய நாட்களையும் மீண்டும் மீண்டும் நினைத்து எல்லா உணர்வுகளுக்கும் உயிர் கொடுக்கும் அற்புதமான ஒன்று பெண் தனிமையில் சாத்தியமே.. கிழிந்து போன கடிதங்கள் எல்லாம் அவளின் விரல்கள் பட்டு பட்டு உயிர் பெறுகிறது.. வெறுமையான சுவரும் அவளின் கிறுக்கல் களால் இலக்கியம் ஆகிறது.. பெண்கள் கண்ணாடி முன் நின்றாள் அவளுக்கு நேரம் மறந்து விடும் ஆண் கிளம்புவதற்கு 5 நிமிடம் போதுமாம்.. .ம்ம்ம் உங்களை நீங்களே ரசித்து பாருங்கள்.. கண்ணாடியும் காதல் கொள்ளும் என்று எதையாவது கற்பனை செய்து கொள்ளுங்கள் ஒன்றும் தவறு இல்லை..  

வாழ்கையை அழகுபடுத்து வது அழகான பொய்கள்தான்.. அவளின் மௌனத்துக்கு 1000 பக்கங்கள் உரை எழுதலாம்.. நான் இன்றும் பெரிதாக ரசிப்பதும் வியப்பதும் பெண்ணின் உணர்வுகள்தான்.. It is wonderful to be a woman….. Dostoevosky எப்படி அத்தனை உணர்வுகளையும் ஒரே புத்தகத்தில் அடைத்து உள்ளாரோ அப்படி தான் பெண்களின் மனதும் .. ஆழம் அதிகம்.. Dostoevosky யை படித்து விட்டு மனநிலை எப்படி இருக்கும் என்று ஒவ்வரு வரியும் படித்தவர்களுக்கு தெரியும்.. கொஞ்சம் பைதியம் பிடித்தது போல் இருக்கும் .. அதே உணர்வு தான் அந்த ஆழத்தை தொடும் போதும் .இத்தனை உள்ளவர்கள் எப்படி அழகாக இல்லாமல் இருக்க முடியும்? இந்த உணர்வுகள் எதுவும் இல்லை என்றால் அழகு இல்லை என்று சொலுங்கள் ஒத்து கொள்கிறேன்.. உருபுகளை கடந்து உணர்வுகளை பாருங்கள் எல்லா பெண்களும் அழகாக தான் தெரிவார்கள்.

ஆட்டோ வில் சில வரிகள் .. சீறும் பாம்பை நம்பு சிரிக்கும் பெண்ணை நம்பாதே.. அப்படியே ஆட்டோ வை ஒரு முறை ஆவது உதைத்து விட்டு போகணும் போல இருக்கும். இன்னொரு வரி ஆட்டோ வில் அடுப்பு ஊதும் பெண்ணுக்கு எதுக்கு கல்வி என்று cigarette ஊதும் ஆணுக்கு எதுக்கு கல்வி யோ அதே வெங்காயத்திற்கு தான் கிழே எழுத வேண்டும்.

பெண் ஒரு புதுமை தேவை இன்றி திறந்தால் தன்னை மட்டும் இன்றி உலகத்தையே அழித்து விடுவார்கள். நான் இலக்கியத்தில் மிகவும் ரசிக்கும் நபர் ஜெயந்தஸ்ரீ mam ரசிக்கும் எழுத்துகள் குட்டி ரேவதி லீனா மணிமேகலை. இவர்கள் எல்லாம் இன்று புதுமை படைத்தது கொண்டு இருகிறார்கள்.. அதனால் இனி மாற்றி கொள்வோம் புதுமை யை திறந்தால் அழிவு இல்லை அது படைப்பு..

கடைசியாக ஒன்று ஆவதும் பெண்ணாள் அழிவதும் பெண்ணாள் என்று சொல்வர்.. உண்மை ஆவதும் பெண்ணாள் கெட்டது அழிவதும் பெண்ணாள்...!

...மேலும்

Jan 25, 2012

தவறான முகவரியிடப்பட்ட நாட்குறிப்பும் எனது நான்கு நாட்களும்..; - மயூ மனோ


1...
இலையுதிர்காலத்தின் மாலைப் பொழுதுகளில் மழை பெய்வது வழமைதான் என்று தெரிந்துகொண்டே குடைகொண்டுவராமல் தெருவில் இறங்கிய என்னை என்ன செய்யட்டும். என் குடையை யாரோ இரவல் வாங்கிய நினைவு. யாரென்பதுதான் நினைவில்லை. எலிசபெத் ஆக இருக்கவேண்டும். அவர்தான் கால்நோவுக்கென்று பிசியோதெரபிக்கும் வீட்டுக்குமாக அலைந்து கொண்டிருக்கிறார். எலிசபெத் எங்கள் முதியோர் இல்லத்தில் வந்திணைந்த இந்த ஐந்தாறு வருடங்களில் அவர் இப்படி அவதிப்படுவது இதுவே முதல்முறை. நான் எல்லோருக்கும் சீனியர்; இந்த வருடம் மார்கழி வந்தால் பதினாறு வருடங்களாகப் போகின்றன. இப்படி ஒரு விடுமுறை காலத்தில்தான் வந்து சேர்ந்தேன். மகள் அமெரிக்காவும் மகன் ஆஸ்திரேலியாவுமாக சென்று சேர்ந்தபின் நானும் அவரும் இங்கிருந்து இரண்டு எட்டில் போய்விடக்கூடிய அந்தத் தொடர்மாடியில்தான் இருந்தோம். ஐப்பசி மாதம் போல இருந்தாப்போல அவரும் போனவுடன் என்னை வற்புறுத்தி இங்கே சேர்த்தது மகள்தான். வீட்டில் தனியே இருக்க பயம், தனிமை என்றெல்லாம் சொல்லிக் கொண்டுவந்து விட்டுவிட்டாள். அவள் சொன்னதும் நியாயந்தான். இங்க வந்த பிறகுதான் இப்படி என் வயதொத்தவர்களைக் காண முடிந்தது.

ஆனால் நான் ஒரு இளம் பெண்ணையும் இதன் பலனாய் சந்தித்தேன். என் நர்சிங் ஹோமிலிருந்து சிறு தொலைவில் இருந்தது அந்தக் கோப்பிக் கடை. கனடாவின் அடையாளங்களில் ஒன்று. எப்போதாவது அங்கு சென்று சூப் அல்லது ஏதாவது உணவுப் பதார்த்தங்கள் வாங்கி அங்கேயே அமர்ந்து அருந்திவிட்டு வருவது என் வழக்கம். அப்படியொரு நாளில்தான் அவளை நான் கண்டேன்.

அன்று அந்தக் கடையில் கூட்டமில்லை. நான் மட்டும் தான் அப்போது சாப்பாடு வாங்கப் போயிருந்தேன். சிலவேளைகளில் வரிசை நீண்டிருக்கும். ஏற்கனவே கடைக்கு வந்தவர்களில் என் வயதொத்த முதியவர்களும், சில மாணவப் பருவத்தவர்களும் அங்கங்கே அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தனர். பொதுவாக இப்படியான கடைகளை சிலர் தங்கள் உத்தியோக சந்திப்பு அல்லது பிரத்யேக சந்திப்புக்கு வார இறுதிகளில் பயன்படுத்துவார்கள். அப்படியும் இரண்டு மூன்று பேரைக் காணக் கிடைத்தது. எனினும் மழை அடித்துப் பெய்யும் ஞாயிறு மாலை என்பதால் வழமையாக வரும் கூட்டத்தைக் காணக் கிடைக்கவில்லை. கடைக்குள் நிறைந்திருந்த மழைக் குளிரும், இயந்திரங்கள் பிறப்பிக்கும் செயற்கை வெப்பமும் சேர்ந்த மிதமான சூடு எனக்குப் பிடித்திருந்தது.

கண்ணாடிக் கதவிலும், கண்ணாடி யன்னல்களால் கட்டப்பட்ட சுவர்களிலும் வழிந்தோடும் இந்த மழையை வேடிக்கை பார்த்தவாறு நிற்கும் அவளுக்கு வயது பதினேழு அல்லது பதினெட்டு இருக்கும். அவள் புதிதாகத்தான் வேலைக்கு சேர்ந்திருக்கவேண்டும். நான் ஒரு மாதம் மகள் வீட்டில் தங்கப் போனபோது வந்து சேர்ந்திருக்கலாம்.

"ஹாய்..;"
"குட் ஈவினிங்.., உங்களுக்கு எவ்வாறு உதவ வேண்டும்?.."

ஆயிரம் தடவைகள் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு அவளின் உணர்வின்றி வெளி விழும் வார்த்தைகள். ஒரு வித அவசரத்தில் வந்து விழுந்த ஆங்கில வார்த்தைகளின் உச்சரிப்புக்குள் அவளது சொந்த நாட்டைக் கண்டு பிடிக்க முற்பட்ட அறிவை நினைத்து சிறிதாய் புன்னகைத்தவாறே அவளை ஏறிட்டேன்.

அழகிய பெண்தான் அவள். திருத்தப்பட்ட புருவங்கள். நீண்ட மூக்கின் வலது பக்கத்தில் வெள்ளியிலான சிறு வளையம் அணிந்திருந்தாள். ரோஸ் நிற உதட்டுச் சாயத்துக்குள் துருத்திக் கொண்டு தெரிந்தது இடது மேலுதட்டிலிருந்த சிறு மச்சம். பல் ஒரு வித செம்மஞ்சள் நிறம். அவளது வேலைத்தளத்தின் சீருடையின் மேற்சட்டை பச்சையில் மண்ணிற சிறு கட்டங்களை கீறிய துணியில் தைக்கப்பட்டிருந்தது. மண்ணிற நீள் காற்சட்டை அணிந்திருந்தாள். அடர்ந்த சுருள் கூந்தலை கொத்தாகப் பிடரி அடியில் சேர்த்துக் கட்டியிருந்தாள். தலையில் போட்டிருந்த ஹேர் நெட்டின் துவாரங்களுக்கு உள்ளாகவும் அதன் மேல் அணிந்திருந்த தொப்பியை மீறியும் தலை முடி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. கன்னத்துப் பூனை முடிகள் தொப்பிக்குள் அடங்க மறுத்து சுருண்டு கிடந்தன.

"உனது பெயர் என்ன?"
"பௌஷிகா"
"நல்லதொரு பெயர்"
"நன்றி, நீங்கள் இன்னும் உங்களுக்கு என்ன வேண்டுமென்று சொல்லியிருக்கவில்லை."

அப்படியே அவளுடன் பேசிக் கொண்டிருக்கவேண்டுமென்றும் தோன்றியது.

"உனக்குப் பிடித்த குக்கி வகை சொல்லு?"

அவளது புருவம் ஓரத்தில் நெளிந்தது. இப்படியான கேள்விகளும் அவளுக்குப் பழையவைதான். ஆயிரம் தடவைகள் இல்லாவிடினும் சில நூறு தடவைகள் கேட்கப்பட்டிருக்கக்கூடிய கேள்வி. கேட்டுச் சலித்த கேள்வியுங்கூட. இதழ்களைப் பிரிக்காமல் புன்னகைத்தாள். பிறகு யோசிப்பவளாகத் தலையை சாய்த்தவள் அப்படியே "உங்கள் தெரிவு என்ன என்று வினாவினேன்.!" என்றவாறு மௌனமானாள்.

"உனக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டேன்." அவள் சிறிதாய் புன்னகைத்துக் கொண்டு அப்படியே நின்றாள்.


"ம்ம்..கிறீம் மஷ்ரூம் சூப் இருக்கிறதா?"
"ஆம், அதனுடன் எதை விரும்புகிறீர்கள்? சிறு பாண் அல்லது சீஸ் பிஸ்கட்?"
"சீஸ் பிஸ்கட்.;"
"சரி, வேறு ஏதாவது அருந்த விரும்புகிறீர்களா? கோப்பி அல்லது ஜூஸ்?"
"இல்லை, ஒரு கப் தண்ணீர் தர முடியுமா?"
"நிச்சயம் தருகிறேன், நீங்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்லப் போகிறீர்களா?"
"இல்லை, இங்கிருந்து அருந்தப் போகிறேன்."
"நல்லது, உங்களது தொகை மூன்று டொலர்களும் எழுபத்திநான்கு சதங்களும்."
"நன்றி."
"இது உங்களது மீதிப்பணம். இந்தத் தட்டுகளில் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். இதோ நீங்கள் கேட்ட தண்ணீர். அந்தப் பகுதியிலிருக்கும் பெண்ணிடம் உங்கள் உணவைப் பெற்றுக் கொள்ளுங்கள். உங்கள் நாள் நல்லதாகட்டும்."
"நன்றி, உன்னுடையதும், வருகிறேன்."

இந்த நீண்ட உரையாடலுக்குப் பின் அவள் களைத்துப் போனது போல தோன்றியது. முகத்தசைகளூடு ஒரு ஆயாசம் பரவித் தணிந்தது. அவள் அந்த உத்தியோகத்தில் திறம்பட இயங்குபவளாக இருந்தாள். நெடுநாளைய பயிற்ச்சியும், தொடந்த அனுபவங்களும், பல்வேறுபட்ட வாடிக்கையாளர்களை உபசரித்த பண்பும் அவள் முக பாவனைகளுக்கும், உதடு சிந்தும் மொழிக்கும், கைகளுக்கும் ஏன் உடலின் ஒவ்வொரு அசைவுகளுக்கும் ஒருவித அலட்சியத்தைத் தந்துவிட்டிருந்தது. அந்த அலட்சியம் அவளுடலில் ஒருவித அழகையும் கிளர்த்திவிட்டிருந்தது. கோப்பி சேகரிக்கப் பயன்படுத்தப்படும் கண்ணாடிக் கேத்திலை எடுத்து தண்ணீர்த் தொட்டியில் குழாயின் திருக்கை இரு விரல்களால் நெட்டித் தள்ளி ஓடும் தண்ணீரில் பிடித்து ஒரு சுற்று சுற்றிக் கழுவி மீண்டும் கோப்பியை சேகரிக்கும் இடத்தில் வைத்து கோப்பி தயாரிக்கும் இயந்திரத்தின் பொத்தானை அழுத்திவிட்டாள். பின் தாமதிக்காது ஏலவே பயன்படுத்திய பேப்பர் கப்களின் அளவுகளையும், கப் மற்றும் மூடிகளின் எண்ணிக்கைகளையும் மனதில் குறிப்பவள் போல அவற்றை உற்று நோக்கிவிட்டுத் திரும்பி அவை அடுக்கப்பட்ட தட்டிலிருந்து ஒவ்வொன்றாக எடுத்து அவற்றை மீள அடுக்கத் தொடங்கினாள். அவளின் செயற்பாடுகள் எல்லாமே அவளைப் பார்த்துக் கொண்டிருக்கவே சொல்லின. இவ்வாறு பலதரப்பட்ட வேலைகளை சில நிமிடங்களுக்குள் செய்துகொள்ளும் அவளது முகத்தில் எந்தவித உணர்சிகளும் இல்லை. சில நொடிகளுக்கு வந்து செல்வதாக நான் உணர்ந்த புன்னகையும் என் கற்பனைதானா? உண்மையில் அழகிதான் அவள். அழகாக இருப்பதற்குத் தான் எடுத்துக்கொண்ட முயற்சிகள் எல்லாம் தன் அலட்சிய பாவத்தால் வெகு இயல்பாகவே அழகாகக் காட்டப்படுவதை அறிந்தோ அறியாமலோ புன்னகைக்கும் அழகி.

நான் சூப்பைத் தட்டில் வைத்துக் கொண்டு அந்தப் பகுதியிலிருந்து நகர்ந்து கண்ணாடி யன்னலோரம் இருந்த மேசையொன்றில் தெருவையும் கடையின் வரவேற்புப் பகுதியையும் பார்ப்பதாக அமர்ந்து கொண்டேன். சூடான கிறீம் மஷ்ரூம் சூப்பை மழையையும் தெருவையும் வேடிக்கை பார்த்தபடி அருந்துவது அற்புதமாக இருந்தது. கிறீம் மஷ்ரூம் சூப் எனக்குப் பிடித்தமானது. இருந்துவிட்டு இப்படி வெளியில் வந்து சாப்பிடும்போது பலவேளைகளில் கிடைக்காது. எந்த சூப் எந்த நாள் கிடைக்குமென்று ஒரு அட்டவணை வைத்திருந்தார்கள். ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த சூப் கிடைக்குமென்று எனக்குத் தெரியும். அதுவும் சில வேளைகளில் தீர்ந்துவிடும்.

அவள் இப்போது கையுறையணிந்த கையில் நீல நிற ஈரத்துண்டோடு மேசைகள் இருந்த பக்கம் வந்து கொண்டிருந்தாள். ஏற்கனவே அமர்ந்து சாப்பிட்டவர்கள் விட்டுப் போன தட்டுக்களை எடுத்துக் கொண்டு சிந்தியிருந்த கோப்பி மற்றும் சாப்பாட்டு மிச்சங்களையும் துணியால் ஒதுக்கி வழித்துத் துடைத்து மேசையை சுத்தம் செய்தவாறே நகர்ந்து கொண்டிருந்தாள். அவளது கண்களும் கைகளும் கால்களும் ஒருவித துரித லயத்தில் இயங்கின.

"சூப் மிகவும் நன்றாக இருந்தது.."
"நன்றி.."

அவள் என் மேசையைத்தாண்டி சென்று மற்ற மேசைகளை சுத்தப்படுத்தி முடித்தாள். பின் துடைப்பத்தையும் ஷவலையும் எடுத்து வந்து அங்கங்கு சிந்திக்கிடந்த குப்பைகளை கூட்டியள்ளத் தொடங்கினாள். இந்த இளங்குமர்ப் பருவத்தில் இருக்கும் பெண்ணை நான் அறிந்து கொள்ளவேண்டுமென்று தோன்றியது. அவள் பருவங்களைத் தாண்டி வந்துவிட்ட எனக்கும் அவளுக்குமிடையே காலம் வருடங்களாக, இடங்களாக, நினைவுகளாக, கனவுகளாக மல்லாந்து கிடந்தது.

மழை இப்போது லேசாகத் தூறிக் கொண்டிருந்தது. புதிதாக வருபவர்களின் காலணிகள் அள்ளி வரும் மண்ணையும், சேறையும் மீண்டும் மீண்டும் துடைக்க வேண்டி இருந்தது. அவள் சோர்வடையாதவளாக வெளி வருவதும் வாசல் பகுதியை ஈரத்துணி கொண்டு துடைத்துவிடுவதுமாக இயங்கிக் கொண்டிருந்தாள். அவளும் இன்னொரு பெண்ணுமே வேலை செய்துகொண்டிருந்ததால் இவளுக்கும் வேலை அதிகம் இருந்தது போலத் தோன்றியது.

நான் கைதுடைத்த பேப்பரை குப்பைத்தொட்டிக்குள் போட்டுவிட்டு சூப் கோப்பையையும் கரண்டியையும் வெறுந்தட்டையும் குப்பைத்தொட்டிக்கு மேலே அவற்றின் இடத்தில் வைத்துவிட்டு பழைய இடத்திலேயே வந்தமர்ந்தேன். அவற்றை பௌஷிகா எடுத்துப்போனாள்.

2...

தலையும் வாலும் இல்லாமல் தொடங்கிய அந்த நாட்குறிப்பை இருபகலும் ஒரு இரவுமாய் வைத்துக் குழம்பிக் கொண்டிருக்கிறேன். இது பரிசாய்க் கிடைத்த நாட்குறிப்பு என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஏன் நானே இன்னமும் நம்பவில்லை. உண்மையைச் சொல்லப் போனா எனக்கு முதலில அந்தப் பரிசை என்ன செய்வதென்றே தெரியவில்லை. நேற்றைக்கு முந்திய தினம் இரவு பதினொரு மணி வேலை தொடங்க என்று பத்து நாற்பதுக்கு கடைக்குப் போனால் கூட வேலை செய்யும் அரூஜ் தான் இதைக் கொண்டுவந்து தந்தாள். கூடவே ஒரு நமுட்டுச் சிரிப்பும். அவள் சிரித்தற்கும் காரணம் இருக்கு. நானும் இதுவரை யாருக்கும் பரிசு கொடுக்கிறதில்லை. யாரும் எனக்கும் தருவதில்லை. இதில வேற தினமும் மாலை கடைக்கு வரும், பக்கத்துப் பீட்சா கடையில் வேலை செய்யும் தமிழ் பெடியனை டேட்டிங் செய்யும்படி அரூஜ் அறிவுறுத்தத் தொடங்கிவிட்டிருந்தாள். அவள் அந்தப் பரிசு அவனிடமிருந்து வந்திருக்கலாம் என்று நினைத்து சிரித்ததில் தவறொன்றும் இல்லைத்தான்.

சரி, இப்ப பரிசுக்கு வருவோம். பரிசென்றால் பெரிதாக ஒன்றுமில்லை, ஒரு நாட்குறிப்பு. கிறிஸ்மஸ் காலங்களில் நான் வேலை செய்யும் கடையின் வரவேற்புப் பகுதியில் ஒரு பையைத் தொங்கவிடுவோம். அதில் கிறிஸ்மஸ் தாத்தா பரிசைக் கொண்டுவந்து போடுவார் என்பது ஐதீகம். உண்மையில் அவர் போடுறதில்லை என்பது எனக்குத் தெரிவதுபோல உங்களுக்கும் தெரிந்திருக்கும். கூட வேலை செய்யும் யாராவது இல்லை நெடுங்கால வாடிக்கையாளர்களில் யாராவது தங்களுக்குப் பிடித்த பணியாட்களின் பெயரை மட்டும் எழுதி அவர்களைப் பற்றி எந்தவொரு குறிப்பும் இல்லாமல் அந்தப் பைக்குள் போட்டு விடுவார்கள். இதில் அவர்களுக்கும் பரிசைப் பெற்றுக் கொள்பவர்களுக்கும் ஒரு சந்தோசம். இந்தக் கோப்பிக் கடையில் வேலை செய்யத் தொடங்கிய இரண்டு வருடங்களில் எனக்குக் கிடைத்த முதலாவது பரிசு இதுதான். யார் எண்டு தெரியேல ஒரு டைரியைக் கொண்டு வந்து போட்டிருக்கினம். அதுவும் வெற்று டைரி என்றால் பரவாயில்லை. முழுக்க எழுதிய முடிந்துகொண்டிருக்கும் அந்த வருடத்துக்கான டைரி. முதலில திறந்து படிக்கக் கூடாது என்றுதான் நினைத்தேன். பிறகு படித்தால் என்ன என்று தொடங்கி இப்போது கீழே வைக்க முடியாத அளவுக்கு சுவாரஸ்யமானதாக ஆகிவிட்டிருந்தது. யாரோவொரு வயோதிபப் பெண்ணின் நாட்குறிப்பு. பௌஷிகா என்ற பெயரோடு எங்கள் வேலைத்தளத்தில் யாரும் இல்லை. அவர் சொல்லும் வர்ணனைகளுடனும் யாரையும் பொருத்திப் பார்க்க முடியவில்லை. அரூஜ் கொஞ்சம் பொருந்தி வருகிறாள். ஆனால் அவள் ஒரு நாளும் பகலில் வேலை செய்வதில்லை. அவளுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் இரவு வேலை. நான் மாறி மாறி இரவும் வார இறுதிகளில் பின்னேரமுமாய் வேலை செய்வேன்.

என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை. இதைப்பற்றி எனது மேலாளருக்கு சொல்ல நினைத்துவிட்டுப் பேசாமல் இருந்துவிட்டேன். அவரும் மற்றவர்களும் சேர்ந்து டைரியை வாங்கி நான்காய் கிழித்து குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுவார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆக இதை ரகசியமாகவே வைத்துக் கொண்டேன். எனக்குப் பரிசு வந்திருந்த செய்தி பரவியிருந்ததால் சொந்தக் காசில் ஒரு டைரியை வாங்கி எனக்குக் கிடைத்த பரிசென்று காட்ட வேண்டியதாகப் போய்விட்டது. அதுவும் நல்லதுதான். இல்லாவிட்டால் இதை எழுதும் சந்தர்ப்பமும் எண்ணமும் வாய்த்திருக்காது. நான் எனது வேலை முடிய என் வீட்டுக்கு எதிர்த் திசையில் போகும் பஸ்ஸில் ஏறி அமர்ந்துகொண்டேன். மூன்று நிறுத்தங்கள் போனதும் ஒரு கோப்பிக் கடை வரும். அதுவும் எங்களுடையது போலத் தான். ஆனால் வேறு முதலாளி. அங்கு சென்று சேரவேண்டிய டைரி எனக்கு வந்து செர்ந்துவிட்டதோ என்ற சந்தேகம் எனக்குள் வலுப்பெற்றுவிட்டிருந்தது. கடைக்குள் நுழைந்து அங்குமிங்கும் பார்த்துவிட்டு ஒரு ஓரமாக அமர்ந்துகொண்டேன். கடையில் வரிசை வாசல் வரை முட்டிக் கொண்டு நின்றது. வேலையாட்கள் அங்குமிங்குமாய்ப் பாயாத குறையாக இயங்கிக் கொண்டிருந்தனர். இப்படிப் பாயாத குறையாக இயங்குவதற்கும் காரணம் இருக்கு. எவ்வளவு குறைந்த நேரத்தில் வாடிக்கையாளர் சேவையைப் பெற்றுக் கொள்கிறார் என்ற அடிப்படையிலேயே குறித்த கடையின் தரவரிசை மேம்படுத்தப்படும். தரவரிசையை மேம்படுத்த எங்கோ இருந்தவாறு நிறுவனமும், வீட்டிலிருந்தவாறு முதலாளியும், கடை அறைக்குள் இருந்தவாறு மனேஜரும், கூடவே நின்றவாறு மேலாளரும் பணியாட்களை நோண்டிக் கொண்டிருப்பார்கள். மாகாண அரசால் கட்டாயம் வழங்கப்பட வேண்டுமென்று அறிவிக்கப்பட்ட அடிப்படை சம்பளத்துக்குத்தான் இவ்வளவு பாய்ச்சலும்.

இபப்டி வேறு ஒரு கடையில் வந்து அமர்ந்து கொண்டு என்னைப் போல வேலை செய்யும் இன்னொரு மனித ஜென்மத்தைப் பார்த்துக் கொண்டிருப்பது எனக்கே சகிக்கவில்லை. ஆனால் வேறு வழியில்லை. கொஞ்சமாகக் கூட்டம் குறைந்தால் டைரியில் சொல்லப்பட்ட வர்ணனைகளுடன் ஒத்துப்போகும் பெண் இருக்கிறாளா இல்லையா என்பது தெரியும். ஏற்கனவே மூன்று பேரை லிஸ்டிலிருந்து எடுத்துவிட்டேன். வீட்டில் போய்த் தூங்கினால் நாளை இரவு வேலைக்கு வரும்போது களைப்பாக இருக்காது. ஆக வெட்டி வேலை செய்துகொண்டு இப்படி அமர்ந்திருப்பதைத் தவிர அந்தப் பரிசு எனக்கு ஒன்றையும் தரவில்லை. டைரியை அப்படியே குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டுப் போய்விடுவோம் என்றால் இன்னும் முடிக்காத பக்கங்களும், எனக்கு அனுமதிக்கப்படாத வேறொருவரின் டைரியைப் படித்துக் கொண்டிருக்கும் குற்றவுணர்ச்சியும் அப்படிச் செய்யாதே என்று சொல்லிக் கொண்டிருந்தன. நான் வரிசை காணாமல் போகும் வரை காத்திருக்கத் தொடங்கினேன்.

- இன்னொரு பதிவில்...;
...மேலும்

Jan 24, 2012

யார் அந்த நாலு பேர்??? - ஆர்த்தி வேந்தன்


விடிந்த பிறகும் இப்படி தூங்கினா வீடு எப்படி விளங்கும் ஏழு மணிக்கு பொம்பள பிள்ள இப்படி படுத்து தூங்கினா ஊரு என்ன பேசும் எந்திரி. விடிந்த பிறகும் தூங்கறதுனால தான் சனி நம்மை பிடித்து ஆடுது. கனவுகளையும் போர்வையையும் உதறி விட்டு காலை அர்ச்சனைகளை கேட்டு கொண்டே எழுந்தாள். இரவு கழட்டி வைத்த clip யை தேடி பார்த்தாள் கிடைக்க வில்லை. தலை விரி கோலமாக எழுந்து நடந்தாள்.இப்படி முடியை விரித்து போட்டு இருந்தால் வீடு விளங்குமா காதில் விழாதது போல் தண்ணீர் பாட்டில் யை எடுக்க கை நீட்டினாள். குளிக்காமல் தொடாதே என்ன பெண்ணோ நாளைக்கு வேற வீட்டுக்கு போன எங்கள தான் எல்லாரும் சொலுவாங்க. போய் குளித்து விட்டு வா. இவர்களிடம் பேசி ஒரு பயனும் இல்லை என்று தெரியும். டிரஸ் யை எடுத்து கொண்டு தன் குளியல் அறையை எட்டி பார்த்தாள். ஹீட்டர் off யில் இருந்தது.

அண்ணனின் அறைக்கு நகர்ந்தாள். எத்தனை முறை சொலி இருகிறேன் இந்த அரைகுறை டிரஸ் யை எல்லாம் hostel லே விட்டு வா என்று. ஹாலில் அப்பாவும் மாமாவும் உள்ளார் வயதுக்கு வந்த பெண் இப்படி டிரஸ் யை போட்டு இருந்தால் நாலு பேறு என்ன சொலுவாங்க. இங்கயே குளி. வெயில் காலத்தில் எப்படி தான் அப்றோம் டிரஸ் போடுறது. இவர்கள் சொன்ன மாதிரி போட்டால் வேர்த்தே சாக வேண்டியது தான். இவர்களுக்கு எங்க புரியபோகிறது என்று நினைத்து கொண்டே குளியல் அறைக்குள் நுழைந்தாள். தனிமை எங்க கிடைத்தால் என்ன மகிழ்ச்சி தான். உலகத்திலே மிக பெரிய பூவும் நீயடி சினஞ்சிறு நதியும் நீயடி என்று பாடல் வரிகளை பாடி கொண்டே குளித்தாள் பல நாட்கள் இல்லை பல வருடம் கழித்து இன்று குடும்பத்துடன் வெளியூர் செல்கிறாள். குடும்பத்துடன் திருனாளர் கோவில்கு சென்று அங்கு இருக்கும் குளத்தில் குளித்தால் பிடித்த சனி போயிருமாம்! வெளியூர் எங்கியாவது சென்று ஓய்வு எடுத்து வாருங்கள் என்று டாக்டர் சொன்னது எல்லாம் காதில் விழவில்லை. எங்கியாவது வெளியே போக கூடாதா என்ற ஏக்கம் கண்ணில் இருந்தது தெரியவில்லை.

யாரோ ஒருவன் ஏழரை சனி கோவில் குலத்தில் குளித்தால் போய்விடும் என்று சொனதால் இந்த திடிர் முடிவு. காரணம் எதுவாக இருந்தா என்ன சனல் ஓர சீட், தொட்டும் தொடாமலும் நம்மை கடந்து செலும் காற்று இசையுடன் கலந்த நீண்ட பயணம் நினைக்கவே சந்தோஷமாக இருந்தது. குளியல் அறையில் இருந்து வெளியே வரும் போது முகத்தில் சந்தோஷம் இல்லை. பதற்றத்துடனும் வலியுடனும் படுகையில் உட்காந்தாள். உயிர் போகிற மாதிரி வலி. மாத மாதம் வருகிற வலி என்றாலும் வலி வலி தான். தாங்கிகொள முடிய வில்லை. சொல்வதா வேண்டாமா என்று யோசித்து கொண்டே இருந்தாள் உடம்பு வலியை கூட பொறுத்து கொள்ளலாம் இவர்கள் கொடுக்கும் மன வேதனை தாங்க முடியாது,.

.ம்ம்ம் வலியும் பயமும் தான் முகத்தில் எழுதி ஒட்டி இருக்கே எப்படி மறைப்பது. ஏன் இப்படி உட்காந்து இருக்கே? அம்மா.............. உடனே சத்தம்.. ஐயோ.. அவர் சொன்ன மாதிரியே தடங்கல் வந்து விட்டது. இப்படி ஆகிவிட்டதே.. கடவுளே உனக்கு ஒரு முறை சொன்னா புரியாதா? தூரம் ஆனா படுக்கையை தொடாத. போய் பெட் ஷீட் யை துவை. அது தீட்டு. வலிக்குது மா.. இதுக்கு தான் ஒழுங்கா சாப்டனும் எல்ல வேலையும் செயனும். வீடு முழுவதும் தீட்டு ஆகாதே. தம்பி ஓடி வந்தான் .. ஏய்.. வெளியே போ அக்கா க்கு உடம்பு சரி இல்லை. புரிந்தும் புரியாமலும் வருத்ததுடன் வெளியே சென்றான். அவமானமாக இருந்தது. அப்பாவையும் தம்பியையும் தான் முக்கியமாக குளத்தில் குளிக்க சொலி இருக்கிறார். கார் யில் என் பக்கத்தில் உட்காந்து கொள். அவர்களை தொடதே. ஏற்கனமே நமக்கு நேரம் சரி இல்லை. தீட்டு வேற எதையும் தொடாதே பாவம் வந்து சேரும். தொட்டால் பாவமா?? கோவமும் வேதனையும் ஒன்றை ஒன்று மோதி கொண்டு வந்தது . அத்தை மாமவின் காதில் ஏதோ சொன்னார். ஒரு பார்வை பார்த்தார். சங்கடம் கோவம் அழுகை எதையும் காமிக்க முடியவில்லை.

பயணத்தை ரசிபதற்கு முடியவில்லை. கோவில் வந்தது. தீட்டு என்றால் அவர்கள் சாமிக்கு காது கேட்காது போல். கோவில் க்கு போக கூடாது. அப்படியே குதித்து ஓடிவிடலாம் போல் இருந்தது அவளுக்கு.

அப்பாவும் தம்பியும் குளித்து விட்டு வந்தனர். அவளின் அந்த தனிமை சந்தோஷத்தை கொடுக்க வில்லை. அவமானமும் ஏன் தான் பெண்ணாக பிறந்தோமோ என்ற வருத்தத்தை மட்டுமே தந்தது. அம்மா பெரு மூச்சு விட்டார் நம்மை பிடித்த சனி எல்லாம் இன்றோடு போயாச்சு. சனி போச்சாம். குளித்து விட்டு துணியை அங்கயே போடு விட்டு வரணுமாம் இல்லை என்றல் சனி நம்முடனே வந்து விடுமாம்.

வீடு வந்தது. அவளுக்கு தனி தட்டில் சாப்பாடு. தீட்டு என்பதால் மற்றவருடைய தட்டை தொட கூடாது. அம்மா வின் குரல் மீண்டும் சனியை விட்டு விட்டு வந்து விட்டோம்.

எந்த சனியை?? ஜாதகத்தில் இருக்கும் சனியை. இவர்களின் மனதில் இருக்கும் சனியை எங்கே விட போகிறார்கள்?? கேட்க தோன்றியது.. வலி தாங்க முடியவில்லை. . அவளுக்கு என்றே காத்து கொண்டு இருந்தது இருட்டு அறை.

தீட்டு. வீட்டுக்கு தூரம், விட்டு விலங்கு, மாத விலக்கு.. பெண் உடலில் இயற்கையாக நிகழும் உதிரபோக்கு க்கு எத்தனை பெயர்...

தாழ்வு மனப்பான்மை, பதற்றம், கவலை , அசதி, கோவம், எரிச்சல், தூக்க மின்மை, தனிமை விரும்புதல், இது எல்லாம் இயற்கையாக வருவது இல்லை. இதில் பெரிய பங்கு மூட நம்பிகைகள் கொடுப்பது. மாத மாதம் இதனை ஒரு பெண் அனுபவித்தால் அவளின் மன நிலை எப்படி இருக்கும்.

ஒன்று புரியவில்லை ஏன் எல்லா மூட நம்பிக்கைகளும் பெண்களை சார்ந்து யே உள்ளது? பெண் தலை விரித்து இருந்தாள் ஆகாது சத்தமாக சிரித்தால் ஊரு பேசும். பொட்டு வைக்கா விட்டால் நல்லது இல்லை.. தனக்கு விருப்பமான டிரஸ் யை போடுவதற்கு

கூட சுதந்திரம் இல்லை.. நாலு பேர் நாலு விதமா பேசுவாங்கலாம். இந்த நாலு பேருக்குஆக எத்தனை compromise இனி வரைக்கும் அந்த நாலு பேரு யார் என்று தெரிய வில்லை. யாராவது தெரிந்தால் சொலுங்கள்.

அந்த நாலு பேரை நான் கண்டிப்பாக பார்க்க வேண்டும்.
நாம் பின்பற்றி வரும் பல நம்பிக்கைகள்! அந்த நாள் பேரு ஆக தான். கணவன் இறந்த பிறகு வெள்ளை புடவை கட்டி கொள்வது நாம் மற்றவர்க்கு கணவன் இறந்த பிறகும் தூய்மையாக இருகிறேன் என்று சொல்வதர்காம். நாம் தூய்மையாக இருக்கிறோம் என்று நமக்கு தெரிந்தால் போதாதா? ஏன் அந்த நாலு பேருக்கு தெரிய வேண்டும்? குங்குமம் வைப்பது மற்றவர்க்கு நம்முடைய இரத்தம் சுத்தமாக உள்ளது என்று தெரிவிபதற்கு ஆம். குங்குமம் வைப்பது ஒன்றும் கஷ்டம் இல்லை. பிடித்து இருந்தால் மட்டும் வைத்து கொளலாமே எதற்கு மற்றவர்க்கு ஆக வைக்க வேண்டும்? காலில் மெட்டி போடுவதற்கான காரணம் கேட்டால் சிரிபதா அழுவதா தெரிய வில்லை. மெட்டி யை போட்டு பெண் நடந்தால் அவள் எதிர் யில் வரும் ஆண் அவளின் மெட்டி யை பார்த்து அவள் இன்னொரு ஆணுக்கு உடையவள்?! என்று தெரிந்து கொள்வதற் ஆம்.

இப்படி பல அந்த முகம் தெரியாத நாலு பேருக்கு தான் செய்து கொண்டு இருக்கிறோம். பெரியவர்கள் எல்லாம் காரணத்தோட தான் சொலி இருப்பார்கள் என்று மட்டுமே தெரியும் என்ன காரணம் என்று கேட்டால் தெரியாது. அப்படியே ஒன்று இரண்டு கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதத்தை படித்து உளறி னாலும் மனது ஏற்று கொள்ள மறுகிறது. எதற்கு ஏற்று கொள்ள வேண்டும்? நமக்கு பிடிகாத ஒரு செயலை ஏன் செய வேண்டும்? ஆறு மணிக்கு மேல் நகம் வெட்ட கூடாது என்று சொல்கிறார்கள். அந்த காலத்தில் கரண்ட் இல்லை ஆறு மணிக்கு மேல் இருட்டு ஆக இருக்கும் நகம் வெட்டும் போது சப்பாடுக்குள் விழுந்து விட்டால் அதனால் சொலி இருக்கலாம் இப்ப என்ன கேடு நகம் வெட்டு வதால் என்ன ஆக போது? எளவு வீட்டுக்கு போய் வந்தால் தீட்டு ஆமா. என்ன எளவோ. பின் பக்கமாக வந்து குளித்து விட்டு தான் வீட்டுக்குள் வர வேண்டுமாம். அந்த காலத்து எளவு வீடு பழைய படத்தில் பார்த்து இருப்போம். இறந்த உடம்பை கட்டி பிடித்து நெஞ்சில் அடித்து கொண்டு மைக் செட் வச்சு ஒப்பாரி பாட்டு பாடி இருக்கும். நோய் வந்து இறந்த உடம்பை கட்டி பிடித்தால் கிருமிகள் வருவதற்கு வாய்ப்பு உண்டு அதனால் குளித்து விட்டு வர வேண்டும் என்று சொன்னார்கள். இபோ நிலைமை அப்படியா இருக்கு.. தொட வேண்டும் என்று நினைத்தால் கூட தொட முடியாது. உடம்பு நிம்மதியாக ஐஸ் பாக்ஸ் யில் இருக்கும். அழுவது கூட நாகரிகம் இல்லை என்று யோசிக்கும் கேடு கெட்ட காலத்தில் வாழ்கிறோம். இருந்தாலும் தீட்டு தீட்டு தான் குளித்து விட்டால் தீட்டு போயிரும் என்று நம்புகிறார்கள்.

பத்து பொருத்தமும் சரி ஆக இருந்தால் கல்யாணம் பணிக்கலாமாம். என்ன கொடுமை.. அந்த பத்து பொருத்தம் பார்த்து சொல்வது பொன்னையும் பையனையும் பற்றி எதுவும் தெரியாத ஒரு ஜோசியக்காரர்! நம்மையும் நம் உணர்வுகளையும் மதிக்கும் ஒருவனை மணந்தால் தப்பு.. ஏனோ அந்த ஒருவனும் ஒருத்தியும் ஒரே ஜாதி ஆக இருப்பது இல்லை.. கலப்பு திருமணம் செய்தால் நாலு பேரு எதாவது சொல்வார்கள்! கலப்பு என்றால் என்ன. இரண்டு முற்றிலும் வேறுபட்ட ஒன்று சேர்வது. அப்படி என்றால் மழை வர வேண்டும் என்று மனிதனுக்கு கழுதை யை திருமணம் செய்து வைகிறார்கள்! அல்லவா அது தான் கலப்பு திருமணம், வேறு ஒரு ஜாதி பெண்ணும் வேறு ஒரு ஜாதி பையனும் கல்யாணம் செய்வது கலப்பு திருமணம் அல்ல.

விடிந்த பிறகு தூங்கினால் வீடு விளங்காதாம். நைட் ஷிபிட் போவர்கள் வீட்டில் எல்லாம் நல்லதே நடந்தது இல்லையா? கோவில் க்கு வெளியே பிச்சை எடுபவர்களுக்கு பிரசாதம் கொடுக்க மனம் இல்லை கார் யில் வந்து இறங்குபவர்களை கூபிட்டு பிரசாதம் என்று கொடுத்து அனதானம் செய்துவிட்டோம் என்று பெருமை கொள்கிறோம்.

ஒரே ஒரு வாழ்கை தான் உள்ளது அதற்கு எதுக்கு இத்தனை வரையறைகள். பெண்களை எப்படி தான் நினைக்க வேண்டும் என்று கேட்டால் தாகூர் உடைய வரிகள் தான் பதில் I am Chitra. No goddess to be worshipped, nor yet the
object of common pity to be brushed aside like a moth with
indifference.

அந்த நாலு பேருக்கு ஆக வாழ்ந்தது போதும்! இனி எனக்கான வாழ்கை வாழ ஆசை. சின்ன சின்ன ஆசை என்று கவித்துவமாக பொய் எல்லாம் இல்லை. எல்லாம் பெரிய ஆசை தான். எனக்கு பிடித்த உடை அணித்து கொள்ள வேண்டும், எனக்கு தோன்றும் போது மட்டும் பொட்டு வளையல் செயின் எல்லாம் போட்டு கொள்ள வேண்டும். என் தலையன்னை உடன் உரையாடல் முடிந்த பிறகே எந்திரிக்க வேண்டும். செயகூடாது என்று பட்டியல் இட்டு சொல்வது எல்லாத்தையும் செய்து பார்க்க வேண்டும். கடந்த கால நினைவுகளையும் கனவுகளையும் மனதில் சுமந்து கொண்டிருக்கும் போது யாரவது பார்த்து திட்டுவார்கள என்று பயம் இல்லாமல் தனிமையில் சிரிக்க வேண்டும். அழுக வேண்டும் என்று நினைக்கும் போது அழுக வேண்டும் . பெண்கள் இரவு நேரத்தில் நடப்பது நல்லது இல்லையாம், இருக்காலம். எத்தனை வருடமாக என் சனல் வழியாக ரசித்து கொண்டே இருப்பது. பார்வைகள் மட்டுமே பரிமாற்றி கொள்கிறோம். முகத்தை பார்க்க வேண்டும் என்று ஆசை.. முழு நிலவில்.. அமைதியான இரவில் கொட்டும் மழை யில் நடக்க ஆசை...... எல்லோரும் முன் அப்பாவை கட்டி அணைத்து முத்தம் கொடுக்க வேண்டும் என்று ஆசை.. யாரிடமும் சொல்லாமல் இசையும் புத்தகமும் மட்டும் துணை யாக கொண்டு பயணம் செல வேண்டும்.. படிப்பை விட்டு விட்டு சிற்ப கலை கற்று கொள்ள ஆசை.. இன்னும்... இன்னும்...இன்னும்..

ஆனால் அந்த நாலு பேருக்கு யார் பதில் சொல்வது????

...மேலும்

Jan 23, 2012

"வாசிப்புத்தான் என்னை எழுத்துலகில் நிலைக்க வைத்திருக்கின்றது" :எச். எப். ரிஸ்னா

எச். எப். ரிஸ்னா

பதுளை மாவட்டத்தின் தியத்தலாவையைந் சேர்ந்த படைப்பாளி எச். எப். ரிஸ்னா, ஹலால்தீன்- நுஹா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியாவார். கவிதை, சிறுகதை, விமர்சனம் ஆகிய துறைகளில் ஈடுபாடு காட்டிவரும் இவர் 'குறிஞ்சி நிலா' என்ற புனைப்பெயரிலும் எழுதுவதுண்டு. சமீபகாலமாக தனியார் நிறுவனமொன்றில் பகுதி நேர கணனி வடிவமைப்பாளராகவும் கடமையாற்றி வருகிறார்.

'பெஸ்ட் குயின் பவுண்டெஷன்' என்ற இலக்கிய அமைப்பின் உப தலைவராகவும், 'பூங்காவனம்' சஞ்சிகையின் துணை ஆசிரியராகவும் இருந்துவருமிவர் 'முற்போக்குக் கலை இலக்கியப் பேரவை' 'இலங்கை முஸ்லிம் கலைஞர் முன்னணி' ஆகிய இலக்கிய இயக்கங்களிலும் அங்கத்துவம் வகிக்கின்றார்.

சுமார் 250 கவிதைகள், 40 சிறுகதைகள், 30 விமர்சனங்கள் என்று படைப்புக்களை எழுதிக் குவித்திருக்கும் படைப்பாளி எச். எப். ரிஸ்னா. 2004 இல் எழுத்துலகில் கால் பதிக்கின்றார். மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் 'காத்திருப்பு' என்ற தலைப்பிலான தனது முதல் கவிதை பிரசுரக் களம் கண்டது. அதனைத் தொடர்ந்து இலங்கையில் முன்னோடிப் பத்திரிகைகளிலும் இலங்கை, இந்தியா சஞ்சிகைகளிலும் இவரது படைப்புக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

நீங்கள் எழுத்துத்துறைக்குள் வருவதற்கான காரணம் என்ன?

நான் சிறு வயதிலிருந்தே வாசிப்பதில் அதிக நாட்டம் காட்டி வந்திருக்கின்றேன். தரம் மூன்றில் நான் கல்வி கற்கும் போதே 'பூங்கா' என்ற சிறுவர் சஞ்சிகையில் கட்டுரைகள் எழுதியிருந்தேன். 'பிஞ்சு' தினமுரசில் வெளிவரும் 'பாப்பா முரசு' அதே போல் இன்னும் பல சிறுவர் கதைப் புத்தகங்களை என் பெற்றோர் வாங்கித் தருவார்கள். விளையாடுவதிலும் பார்க்க வாசிப்பதில்தான் என்னுடைய சிறு வயது காலம் கழிந்தது. தரம் எட்டில் கல்விபயிலும் போது சிறு சிறு கவிதைகளை எழுதத் துவங்கினேன்.

இக்காலப் பகுதியில் ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் இன்னும் பலரினதும் நூல்களை வாசிகசாலையில் பெற்று வாசித்திருக்கிறேன்.

உயர்தர தமிழ்ப்பாடத்திலும் கூட செய்யுள் இலக்கியத்தைத்தான் அதிக ஆர்வம்கொண்டு வாசிப்பேன். இவ்வாறு வாசிப்பதிலேயே என் வாழ்வு கழிந்ததால் எனக்குள்ளும் எழுத வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றுக்கொண்டிருந்தது. எனினும் கல்வி நடவடிக்கைகளில் மூழ்கியிருந்ததால் அந்த எண்ணம் உயர்தரம் படித்து முடித்த பின்னர்தான் ஈடேறியது.

உங்கள் சிறுகதைகளினூடாக சமூகத்துக்குள் ஏற்படுத்தக் கூடிய மாற்றங்களில் எதை இலக்காகக் கொள்கின்றீர்கள்?

உண்மையில் நான் ஆரம்ப காலங்களில் எழுதிய பல சிறுகதைகள் அக நிலை சார்ந்த விடயங்களை உள்ளடக்கியதாகத்தான் எழுதப்பட்டிருந்தது. தொடர் வாசிப்பினால் பல சிறுகதை முன்னோடிகளின் கதையாடல்களில் என்ன கருவை எடுத்தாள்கின்றார்கள் என்று புரிந்தது. பின் வந்த நாட்களில் நான் எழுதிய 'கனவுகள் உயிர் பெறும் நேரம்', 'கண்ணீர் தீயாகிறது', மேதின விடுமுறை', 'முடிவிலிப் பயணங்கள்' போன்ற சிறுகதைகள் சமூகம் சார்ந்த பிரச்சினைகளை பிரதிபலிப்பனவாக எழுத்தப்பட்டன.

மூத்த சிறுகதை ஆசிரியர்கள் அவற்றை சிலாகித்துப் பேசினார்கள். மேற்குறிப்பிட்ட என் சிறுகதைகளில் நான் கையாண்டிருக்கும் பிரச்சினைகளின் கருவானது என்னோடு இருப்பவர்கள் அனுபவித்த துன்பங்களின் மறு வடிவம் என்றும் கூறலாம். ஆகவே, அந்த நிலையில் இருக்கும் வாசகர்கள் குறிப்பிட்ட என் சிறுகதைகளை வாசித்து ஆறுதல் அடைவார்களேயானால் அந்த பின்னணியைத்தான் என் படைப்பினூடாக நான் ஏற்படுத்தும் மாற்றமாகக் கருதுகிறேன். அந்த ஆரோக்கியமான மாற்றம்தான் என் இலக்காகக் காணப்படுகிறது.

விமர்சனங்களை எப்படி ஏற்றுக்கொள்ள வேண்டும்?

விமர்சனங்கள் என்பது படைப்பாளிக்கான ஊன்றுகோல் என்றுதான் கூறுவேன். என்னைப் பொறுத்தவரை எழுத்தாளர்களின் படைப்புகள் விமர்சனம் செய்யப்படாமல் இருக்குமேயானால் அவர்களது படைப்பை வாசகர்கள் படிக்கவில்லை என்றுதான் அர்த்தம். விமர்சனமானது எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் விமர்சனம், எதிர்மறை விமர்சனம் என இரண்டு வகையாகப் பிரித்து நோக்கப்படுகிறது.

இதில் ஊக்குவிக்கும் விமர்சனங்களைப் பற்றி நாம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. ஒரு எழுத்தாளனுக்கு 'என் படைப்பு தரமாக இருப்பதால்தான் விமர்சனம் செய்யப்படுகிறது' என்ற தலைக்கனம் வந்துவிட்டால் அவன் எழுதும் மற்றப் படைப்புக்கள் தரமற்றதாகிவிடக் கூடும். அதேபோல் எதிர்மறையான விமர்சனங்களைக் கண்டிப்பாக நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஏனெனில், அவை எம்மைப் புடம் போட்டுக் கொள்ளவும;, சுட்டிக்காட்டப்பட்ட பிழைகளை சீர் செய்து எமது படைப்புகளை செம்மைப்படுத்தி செறிவாக்கிக் கொள்ளவும் வழி கோலும். இதில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விடயம் என்னவென்றால், காழ்ப்புணர்ச்சி காரணமாக முன்வைக்கப்படும் எதிர்மறையான விமர்சனங்களை நாம் கண்டு கொள்ளக் கூடாது என்பதுதான்.

இலங்கையின் நாவல் படைப்பு பற்றி என்ன கூறலாம்?

நாவல் என்ற அடிப்படையில் நோக்கும் போது இன்று நாவல்களை எழுதுவதிலும் பார்க்க சிறுகதைகளை எழுதுவது இலகுவானது என்ற கருத்து நிலவுகிறது. நேரமின்மை பிரச்சினையால் அவதிப்படும் பலருக்கு அவ்வப்போது ஒரு சிறு கதையையோ, கவிதையையோ வாசிப்பது பெரும் சிரமமாக இருக்காது.

நாவல்களில் சில அத்தியாயங்களை எழுதி வைத்து விட்டுமற்ற அத்தியாயத்தைத் தொடங்குகையில் அது சம்பந்தமான விபரங்களை சேகரிக்க வேண்டியிருக்கும். ஒரு சமூகப் பிரச்சினையை சிறுகதையில் சொல்ல முடிந்தால் அது பாராட்டுக்குரியதாகிறது. ஆனால், நாவலில் ஒரே விடயம் திரும்பத்திரும்பச் சொல்லப்பட்டால் வாசிக்க கஷ்டமாகிறது.

குறிப்பிட்ட சிலர் எழுதும் நாவல்களை வாசிக்கும் போது இடையில் அந்த நாவலை மூடிவைத்துவிட்டு வேறு அலுவல்களைப் பார்க்க மனம் வராது. அந்தளவுக்கு சுவாரஷ்யமாக விடயங்களை உள்ளடக்கியிருப்பார்கள். அலுப்புத் தட்டாத முறையில் எழுதி வாசகனை திருப்திப்படுத்துகிற நுணுக்கங்களைக் கொண்டு அவர்களின் எளிய சொல்லாடலில் நாவல் முழுவதும் ரசித்து வாசிக்கக் கூடிய மனப்பான்மை தோன்றும்.

இந்திய எழுத்தாளர்களின் புனைவுகள் பற்றிய உங்கள் பார்வையும், பதிவும் எப்படி?
இந்திய சஞ்சிகைகள் பலதை நான் வாசித்திருக்கிறேன். இந்திய எழுத்தாளர்களின் படைப்புகள் ஒரே விடயத்தை மறைமுகப்படுத்தி கதையை வளர்த்துச் செல்வதாக அமைந்திருக்காது. சொல்ல வந்த கருத்தை பிரசாரங்கள் போலன்றி நேரடியாகவே சொல்லிவிடுவார்கள். அந்தப் படைப்பு ஜனரஞ்சகமான முறையில் எழுதப்பட்டிருக்கும்.

அவர்களின் எழுத்து நடை இரசனைக்குரியது. வித்தியாசமான, அழகான சொற்களைப் பிரயோகித்திருப்பார்கள். சுஜாதாவின் விஞ்ஞான சிறுகதைகளைப் போல் நான் வேறு படைப்புகளைப் படித்தது கிடையாது. அதுபோல பட்டுக்கோட்டை பிரபாகரின் துப்பறியும் நாவல்களும், எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஜெயகாந்தனின் சிறுகதைகளில் நான் பல நுணுக்கங்களைக் கண்டு வியந்திருக்கிறேன்.

சந்திப்பு:

எம். எம். எம். நூறுல்ஹக்

சாய்ந்தமருது - 05

நன்றி: http://thinakaran.lk/vaaramanjari/2011/05/01/?fn=s1105012
...மேலும்

Jan 22, 2012

ebay.in எதிர்ப்பு - மேலும் சில தகவல்கள்ஈபேவுக்காதரவாக ink-shop-india நிறுவனத்தின் பதில்:

அன்புடன் கொற்றவை,

தேவையிற்ற சர்ச்சைகளை கிளப்ப முய்ற்சிக்காதீர்கள். ஈபே பெரும் பணிகளை செய்து வருகிறது. அவர்களின் ஊக்கத்தை முடக்காதீர்கள். ஓய்வு நேரங்களில் வேறு ஏதாவது பயனுள்ள வேலையைப் பாருங்கள்.


எனது பதில்:

Hello, ink-shop-india (3710)

உங்களது ‘ஸ்டார்’ மதிப்பீட்டையும், உங்கள் கருத்தையும் பார்க்கும்போதே உறுதியாக தெரிகிறது, ஈபேயை உங்களை ’விற்பதற்காக’ மன்னிக்கவும்... ‘உங்கள் பொருட்களை’ விற்பதற்காக....பயன்படுத்தி வருகிறீர்கள் என்று...எனக்கு / குழுவுக்கு அறிவுரை கூறுவதற்கு பதில் நீங்கள் அதை தொடரலாம்...எப்படி அவ்வளவு உறுதியாக உங்களுக்கு தெரியும்...எனக்கு ஓய்வு நேரம் இருக்கிறதென்று....

நாங்கள் ஈபேயை எதிர்த்து வருகிறோம், இன்ன்க் ஷாப்பை இல்லை....சரியா? அவர்கள் எங்களுக்கு பதில் சொல்லட்டும்..

உங்கள் பொருளற்ற கருத்துக்கு இனிமேல் பதில் எதிர்பார்க்காதீர்கள்....எனக்கு இந்த விவகாரம் குறித்து செய்வதற்கு நிறைய இருக்கிறது.


· உங்களை விற்பது என்பது ஆணாதிக்க பார்வையில் சொல்லப்படும் உடல் விற்பனையல்ல.... முதலாளிகளிடம் மண்டியிடும் அடிமைச் சிந்தனை என்று பொருள் கொள்ள வேண்டும்.

இது தவிர ஈபே தளத்தில் வெளியிட்டுள்ள ‘பாலியல்’ விற்பனையாகும் என்ற பரிந்துரையையும் பார்க்க நேர்ந்தது.http://reviews.ebay.com/Sex-sells-
eBay-style-using-gender-to-your-advantage?ugid=10000000001832065

பெண்களின் மனவோட்டம் பற்றிய குறைவான, ஆணாதிக்க மனப்பான்மையையே அது வெளிக்காட்டுகிறது Sex sells - eBay style; using gender to youradvantage : eBay Guides - பாலியல் விற்கும் - ஈபே பாணி: பாலின அடையாளத்தை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்துங்கள்..... என்பதே அது...

இவ்வெதிர்ப்பு சம்பந்தமான அணைத்து ஆவணங்களையும் அவர்களின் தொடர்பு முகவரிக்கு மென் கடிதமாக அனுப்பியுள்ளேன். அடுத்து நேரடியாக சென்று கொடுக்கப்படும்...குர்கானில் உள்ள அவர்கள் தலைமை அலுவலகத்திற்கும் கடிதம் அனுப்பப்படும்... தொடர்ந்து அவர்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறேன். உதவிகள் தேவை...இம்முயற்சி குறித்து உங்கள் தளங்களில் பதிவு செய்து ஆதரவு கோருங்கள்.

கைழுத்திடுங்கள்...நன்றி...


...மேலும்

Jan 21, 2012

வாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.'நாங்கள் இருவரும் குருணல் மருந்தை குடித்து உயிரை விடுகின்றோம். எங்கள் இருவரது உடலையும் ஒரு பெட்டிக்குள்ளாக வைத்து ஒரு ரோட்டுக்கரை சுடலையில எல்லாரும் பார்க்கும் படியாக தாட்டு கல்லை கட்டி எங்கட பெயரை எழுதி விடவும். நாங்கள் இருந்த வீட்டுக்கோலுக்குள்ளே எங்கள் உடல்களை வைத்து எடுக்க வேண்டும் வீட்டுக்கு நேரேயே பந்தல் போடவேண்டும்இது எங்கள் ஆசை இதை நிறைவேற்றி வையுங்கள்'

இது ஒன்றும் சினிமாவிற்காகவே அல்லது தொலைக்காட்சி நாடகங்களுக்காகவே எழுதப்பட்ட ஒரு வசனமே அல்ல மாறாக மரணத்தறுவாயில் நின்று வாழ்விழந்த ஒரு முன்னாள் போராளியின் இறுதி மூச்சுக்கணங்களில் வெளி வந்த மனக்குமுறல்கள்.

கடந்த 16ம் திகதி முள்ளியவளை பால்பண்ணை முறிப்பு என்ற இடத்தில் நிரஞ்சன் 29 வயது , சங்கீதா 27 வயது என்கின்ற இரு இளம் குடம்பம் தற்கொலை செய்து கொள்ள முதல் எழுதிவைத்த மரணசாசனக்கடித்தத்தில் அமைந்திருந்த வசங்களே அவை.

ஆனால் உங்களுக்கு தெரியாத ஒன்றையும் இன்று முழு மக்களையும் ஆக்கிரமித்து நிர்கின்ற ஊடக யாம்பவான்கள் உங்களுக்கு மறைக்க முனைகின்ற ஒரு செய்தியை வெளிப்படையாக சொல்லி வைக்கின்றோம். தற்கொலை செய்து கொண்டவர் ஒரு முன்னாள் போராளி அதுவும் ஒரு காலை போரில் இழந்த அவர் புனர்வாழ்வு பெற்று திரும்பி தனது வாழ்க்கையை வாழ முடியாமல் வாழ்க்கையை பிடிக்காமல் தனது வாழ்கைத்துணையுடன் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர்

இவர்கள் எழுதிய கடித்தில் முதலாவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ள விடயம் என்ன தெரியுமா? 'எனக்கு இந்த வாழ்க்கை வெறுத்து விட்டது' அந்தளவிற்கு என்ன நடந்ததென்று உங்களால் ஊகிக்க முடியாது என்று எனக்கு தெரியும் ஆனால் நாம் இங்கு கண்ணாராக் கண்டதையே மட்டும் உங்களுக்கு சொல்லுகின்றேன்.

முன்னாள் பேராளிகள் என்று சொல்லும் போது அவர்கள் யார்? இன்று தழிழ் தேசியம், விடுதலை, தழிழ்ஈழம் என்று வெளிநாடுகளில் இருந்து மக்களின் பணத்தை கொள்ளையிட்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கும் புலிபிணாமிகளின் வியாபாரத்திற்காக தங்கள் வாழ்க்கையை ஆகுதியாக்கிய அப்பாவி இளைஞர்கள் மட்டுமல்ல இன்று நம் மனங்களில் துயில் கொண்டிருக்கும் அந்த ஜீவன்களின் நினைவுகளைச் சுமந்தவர்களால் யுத்தகளத்தில் நின்று இறுதி கணம் வரை பேராடியவர்கள்

பல்வேறு காரணங்களால் இவர்கள் இராணுவத்திடம் சரணடையவேண்டிய நிலை இவர்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். ஆனால் இராணுவத்திடம் சரணடைந்தபோதும் ஏன்? சரணடைய முன்னர் கூட பலர் தாம் செத்து விட்டதாகவே எண்ணி களத்தில் மயக்கமடைந்தவர்கள், இராணுவ வைத்தியசாலைகளில் உயிருடன் இருந்தபோது ஆச்சரியத்தோடு பார்த்தவர்கள், இவ்வாறு பல சந்தர்ப்பங்கள் இவர்களுக்கு இருந்தது தற்கொலை செய்து கொள்வதற்கு. யுத்தகளத்தில் எல்லாம் முடிந்தது என்று இவர்கள் நினைத்திருந்தாலோ அல்லது வாழ்க்கை வெறுத்து விட்டாலோ இவர்கள் அங்கு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம். அல்லது புனர்வாழ்வின் நடவடிக்கைகள் நடைபெற்றபோது வாழ்வு வெறுத்திருந்தால், அங்கு ஒரு இராணுவத்தை கொலை செய்து விட்டு தற்கொலை செய்திருக்கலாம் ஆனால் அப்போது தற்கொலை செய்ய தோன்றாத இவர்களுக்கு இப்போது இதைச் செய்திருக்கின்றார்கள் என்றால் இதற்கு யார் காரணம்.

வாழ்வதற்கு மிகுந்த ஆ ர்வத்துடன் தனது மனதுக்கு பிடித்தவர்களை கைப்பிடித்தவர்கள் ஏன் இவ்வாறு செய்து கொண்டனர்? இதற்கு புலம்பெயர் புலிப்பினாமிகள் பொறுப்பாளிகள் அல்லரா?

நாம் நாட்டிலே எஞ்சியிருக்கிற போராளுகளுக்கு உதவுகின்றோம் என இன்றும் வசூலிக்கின்றவர்கள் , அதைச் செய்திருந்தால், இக்கொலை நடத்திருக்குமா? புலி முத்திரையை வைத்துக்கொண்டு பணம் கறக்கும் அந்த பணப்பிசாசுகள் என்ன? செய்கின்றனர் என்று உங்களுக்கு தெரியுமா? உங்களது பணத்தை தங்கள் தங்கள் சொந்த வாழ்க்கைக்காகவும் தங்கள் மனைவி பிள்ளைகளது வாழ்க்கைக்காகவும் செலவு செய்கின்றனர்.

என்ன நம்ப முடியவில்லையா? கேணல் ரமேஷின் மனைவியை நாட்டை விட்டு வெளியே கொண்டு போவதற்கு செலவான கோடி ரூபாய்கள் எத்தனை தெரியுமா? ஆவ்வாறு புலித்தலைவர்களின் குடம்பங்களை வெளியே கொண்டுபோவதற்கு எத்தனை கோடிகள் தெரியுமா? ஏன் இவர்கள் மாத்திரம்தான் போராளிகளா? ஏன் இந்த ஓரநீதி வழங்களை சமமாக எப்பபோது பங்கிடப்போகின்றார்கள்.

துமிழர் புனர்வாழ்வு கழகத்தின் பணம் எங்கே போனது? ரி.ஆர்.ஆர். ஒ வின் பொறுப்பாளர் ரெஜியின் மனைவி இன்று முகாமிலிருந்து வெளியே கொண்டு போகப்பட்டு தென்னாபிரிக்காவில் உள்ள ஒரு செகுசு பங்களாவில் தங்கி இன்பம் அனுபவித்துக்கொண்டிருக்கின்றார். முக்களின் பணத்தை கொண்டு ரிஆர்ஓ ரெஜி அவன் மனைவியை பாதுகாத்துள்ளான். இவனால் இங்கே உள்ள பாவப்பட்ட ஜீவன்களுக்காக ஒரு ரூபாயைக்கூட ஒதுக்க முடியவில்லை.

இன்று புலிகளின் சொத்து எனப்படும் மக்கள் சொத்தை யார் அனுபவிக்கின்றனர், புலம்பெயர் தேசத்து பினாமிகளும், இங்கிருந்து தப்பியோடிய அதேவர்க்கத்தைச் சேர்ந்த கயவர்களுமாக இணைந்து அனுபவிக்கின்றனர். இந்தப்பணங்கள் யாருடைய பணங்கள் புலிகளுடையதா? இல்லை உங்களுடையது நீங்கள் உண்டியலிலும் சாப்பிடாமல் உங்களை வருத்தி கொடுத்த பணங்கள். இப்போது வன்னி மக்களுக்கு, முன்னாள் போராளிகளுக்கு என்று ஒரு தொகை பணத்தை உங்களிடம் கேட்கின்றனர். ஆனால் இங்கு நான் சந்தித்த எந்த போராளியும் இவர்களிடமிருந்து ஒரு பைசா கிடைத்ததாக தெரிவிக்கவில்லை.

இங்கு ஒரு முன்னாள் பேராளி மட்டுமல்ல யுத்தினால் பாதிக்கப்பட்ட மக்களும் நாளாந்த கஞ்சி குடிக்க முடியாமல் என்ன செய்வது யாராவது ஒரு தொழில் செய்ய உதவி செய்ய மாட்டார்களா ? என்று அரச சார்பற்ற நிறுவனங்களின் பக்கம் ஒடித்திரிவதும் அரசாங்கம் கொடுக்கும் சின்ன சின்ன உதவிகளையும் பெற்று கொண்டு வயிற்றை கழுவிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் இவர்கள் தங்களின் பெயரால் அங்கே பிச்சை எடுப்பதை அறிகின்றபோது கொதித்து எழுகின்றனர்.

இந்த தூபாக்கிய நிலையில் தமிழ் ஊடகங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றது? தமிழ் தேசியக் கூத்தமைப்பின் நாடாளுமன்ற ஊறுப்பினர்கள் பாராளுமன்றில் குமுறல்! சீற்றம்! என்று தலையங்கங்கள் போட்டு செய்தி வெளியிட்டு மக்களை இன்றும் ஏமாற்றி பிழைத்து;ககொண்டிருக்கின்றன.

இவர்களுக்கு சாவின் விளிம்பில் நின்று பேராடிக்கொண்டிருக்கும் மக்களின் உணர்வுகள் புரியாது. அரசாங்கம் முன்னாள் போராளிகள் மீதான உடும்பு பிடியை ஒரளவு தளர்த்தி அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இவற்றை வெளிநாடுகளில் இருந்து ஒரு சில புலிப்பயங்கரவாதிகளும் அவர்கள் பினாமிகளும் இன்றும் புலி பூச்சாண்டி காட்டியும் போர்க்குற்றம் என்ற புதிய புலுடாவை காட்டியும் ஏமாற்றிக்கொண்டிருக்கின்றனர்

இவர்களுக்கு நீங்கள் இன்னமும் நிதி உதவி செய்யத் தான் போகின்றீர்களா? புலியை அழித்தொழி என்று அரசின் பின்னால் நின்ற நாடுகள் இன்று அரசாங்கத்தை எந்தளவு தண்டிக்கும் என்று சிந்திப்பீர்களா? இல்லவே இல்லை. அவர்கள் நம்மை வைத்து தங்கள் சுயலாப நலன்களை செய்து முடித்துக்கொண்டு செல்கின்றனர். நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு பணத்தையும் இங்குள்ள முன்னாள் போராளிகளுக்கு கொடுங்கள் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுங்கள் அவர்கள் வாழ்வார்கள் உங்களையும் வாழ்த்துவார்கள்

நீங்கள் செய்கின்ற எல்லாவற்றையும் ஒரு முறை மட்டும் சிந்தித்து செயல் படுத்துங்கள் இன்று ஒரு போராளிக்கு மட்டும் வாழ்க்கை வெறுத்த கதையை நாம் உங்களுக்கு சொல்லியிருக்கின்றோம் ஆதாரங்களுடன் ஆனால் சாவின் விளிம்பில் எத்தனையோ முன்னாள் போராளிகள் அங்கவீனர்களாகவும் வாழ்விழந்தவர்களாகவும் இருக்கின்றனர். இவர்களுக்காக தமிழ் தேசியக் கூத்தமைப்பினரும் சரி நாடுகடந்த தழிழீழ அரசும் சரி எதையும் செய்யவில்லை மாறாக தாங்களும் தங்கள் குடும்பங்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். சிந்தியுங்கள் சிந்தியுங்கள் தேச விடுதலைக்காய் தம் உயிரை துச்சமாய் எண்ணியவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள் இல்லை. முல்லைத்தீவில் இடம்பெற்ற தற்கொலை நாளை தழிழ் பிரதேசங்கள் எங்கும் இடம்பெறும் நீங்களும் அதற்கு பாத்திரவாளிகளாயிருப்பீர்கள்

புலம்பெயர் தேசத்திலே இலங்கை அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற ஒவ்வொரு நிகழ்வும் இங்குள்ள மக்களின் வாழ்வை சிக்கலில் தள்ளும் செயலே. மரத்தால விழந்தவனை மாடு ஏறி மிதிக்கிற நிலை தான். தொடர்ந்தும் கண்காணிப்பு சந்தேகப்பார்வை என்ற நிலைக்குள் இம்மக்களை தள்ளுகின்ற செயல்களே.

இந்த மரணத்திற்கு என்ன சொல்லப்போகின்றனர் வாழ்க்கை வெறுத்தது எங்கே வெறுத்தது ? வெளியே வந்த போது தான் வெறுத்திருக்கின்றது. வேளியே வந்து தனது வாழ்வினை ஆரம்பித்த அந்த அங்கவீனனை இந்த முடிவுக்கு புலம்பெயர் புலிகள் கொண்டு சென்றார்களா? உள்ளே இருந்தபோது வெறுத்திருந்தால் வெளியே வந்து திருமணம் செய்திருக்க மாட்டான்.

இவ்வாறு வெளியே வந்தவர்கள் தமது வாழ்வினை தொடர்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதுவரை செய்தது என்ன? ஊள்ளே உள்ளவர்களை விடுதலை செய்வதற்கு குரல் கொடுக்கிறோம் கதைக்கிறோம் என்கின்றவர்கள், வெளியே வந்துள்ளவர்களுக்கு என்ன செய்கின்றனர். இவர்களை சீண்டத்தகாதவர்களாக ஒதுக்குகின்றனர். இதுவே இந்த விரக்திக்கு காரணம்.

இறுதியாக இவர்கள் எழுதி வைத்த கடிதங்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக தொடர்சியாக தகவல்கள் வெளிவரும்.

...மேலும்

Jan 20, 2012

நாம் பேசிக்கொண்டிருந்தபோது பெய்திராத மழை - நூல் வெளியீடு


மயூ மனோவின் "நாம் பேசிக்கொண்டிருந்தபோது பெய்திராத மழை" - நூல் வெளியீடு

...மேலும்

Jan 19, 2012

சில்க் ஸ்மிதா – ரூப் கன்வர்: ஒரு தற்கொலை! ஒரு கொலை!!


கற்பையும் விபச்சாரத்தையும் போற்றும் இந்து மதமும், இந்திய சமூகமும்தான் இந்த இரண்டு பெண்களின் மறைவுக்கு காரணம் என்றால் சண்டைக்கு வருவீர்களா? பதட்டப்படாமல் இந்த கட்டுரையை படியுங்கள்.

முன்னுரை:

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிப்பதாகக் கூறும் “டர்ட்டி பிச்சர்” படம் சமீபத்தில் வெளியானதும் ரசிகர்களும், படைப்பாளிகளும் ஆளுக்கொரு உச்சு கொட்டி விட்டு சிலுக்கை நினைத்துக் கொண்டார்கள். சுமிதாவை தற்கொலைக்குத் தூண்டிய திரையுலகம் இன்றும் அப்படித்தான் இயங்குகிறது. சுமிதா தற்கொலை செய்வதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்னால் ராஜஸ்தானில் ரூப் கன்வர் எனும் பெண்மணி உடன்கட்டை ஏற்றிக் கொல்லப்பட்டாள். அந்தக் கொலை வழக்கில் யாரும் குற்றவாளி என்று நிரூபிக்கப்படவில்லை. ரூப் கன்வரை ஆண்டு தோறும் தொழும் காட்டுமிராண்டித்தனமும் இன்றும் குறையவில்லை. கற்பையும் விபச்சாரத்தையும் போற்றும் இந்து மதமும், இந்திய சமூகமும்தான் இந்த இரண்டு பெண்களின் மறைவுக்கு காரணம் என்றால் சண்டைக்கு வருவீர்களா? பதட்டப்படாமல் 1997-இல் எழுதப்பட்ட இந்த கட்டுரையை படியுங்கள்.

- வினவு
_____________________________________________

”இந்தப் பாரம்பரியம் எங்கள் உயிரினும் மேலானது. உடன்கட்டையேறி உயிர் துறக்கும் விதவையானவள், உடலில் எத்தனை மயிர்க்கால்கள் உள்ளனவோ அத்தனை ஆண்டுகள், 3 கோடி ஆண்டுகள் சொர்க்கத்தில் வாழ்வாள்.”

உடன் கட்டையேற்றும் பழக்கத்துக்கு எதிராக பிரிட்டிஷ் பிரபு பெண்டிங் கொண்டு வந்த சீர்திருத்தச் சட்டத்தை விலக்கிக் கொள்ளக் கோரி மன்னர்களும், 120 பார்ப்பனப் பண்டிதர்களும் கை ஒப்பமிட்டு அளித்த மனுவில் கண்டுள்ள வாசகம் இது. விதவை வாழ்க்கையின் துன்பங்களையும், கட்டுப்பாடுகளையும் ஒப்பிடும்போது ‘சிறிது நேரம் சிரமப்பட்டாலும்’ போய்ச் சேர்ந்து விடுவதே ஒரு பெண்ணுக்கு நல்லது என்ற உண்மையையும் அந்த மனுவில் அவர்கள் குறிப்பிடத் தவறவில்லை.

தமது விருப்பத்துக்கு விரோதமாக ஒரு பெண்ணை உடன்கட்டையேற்றக்கூடாது என்று கூறிய அந்தச் சட்டம் நடைமுறையில் அமல்படுத்தப்பட்ட விதத்தை- உடன்கட்டையேறும் காட்சியை – எஸ்.ஸி. போஸ் (1881) கூறுகிறார்;

”நான் சிறுவனாக இருந்தபோது அத்தை உடன் கட்டையேறிய காட்சியை அழுது கொண்டே அம்மா என்னிடம் கூறியிருக்கிறாள்.

சவ ஊர்வலம் சுடுகாட்டை அடைந்தது. போலீஸ் இன்ஸ்பெக்டர் அத்தையிடம் வந்து உடன்கட்டையேற வேண்டாம் என்று எடுத்துச் சொன்னார். பயனில்லை. கொஞ்சம் தள்ளி நின்று என்ன நடக்கிறது என்று கண்காணிக்கத் தொடங்கினார். சிதையை 7 முறை சுற்றிவருமாறு புரோகிதர்கள் அத்தையிடம் கூறினர். ஒவ்வொரு சுற்று வரும்போதும் அவளுடைய கால்கள் தள்ளாடத் தொடங்கின. மயக்கமடையத் தொடங்கினாள். இன்ஸ்பெக்டர் மீண்டும் ஒரு முறை அத்தையிடம் வந்து பேசினார். அவளுக்கு எங்கே கேட்டிருக்கும்?

பிறகு அத்தையை சிதையின் மீது ஏற்றி கணவனின் பிணத்துக்கு அருகில் படுக்க வைத்தனர். ஒரு கையை கணவனின் தலைக்குக் கீழும், இன்னொரு கையை அவன் மார்பின் மீதும் வைத்து அணைத்தபடி படுத்திருந்தாள். ஹரி…. ஹரி… என்ற முனகல் அவள் வாயிலிருந்து கேட்டது.”

”பெண்ணே எழுந்திரு, உன் கணவன் இறந்து விட்டான். நீ அவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் முடிந்தன. இந்த உலகத்தில் உன் வாழ்க்கையைத் தொடர வந்துவிடு” என்று யாரேனும் ஒருவர் அந்த நேரத்தில் சொல்ல வேண்டும் என்பது சம்பிரதாயம். யாரும் சொல்லவில்லை.

”அத்தையின் மீது உடனே விறகுகளை அடுக்கினார்கள். தடியான ஒரு ஆள் விறகுகளை ஒரு அமுக்கு அமுக்கினான். சிதையைச் சுற்றியிருந்த மூங்கில்கள் சடசடவென எரியத் தொடங்கின. ஒரு உடலும், இன்னொரு உயிரும் சாம்பலாகும் வரை சுற்றியிருந்தவர்களின் கத்தல் ஓயவில்லை.”

வார்த்தைகளால் விவரிக்க முடியாத இந்தக் கொடூரத்தை, கட்டாயப்படுத்தி நிறைவேற்றும் உரிமையை மன்னர்களும், புரோகிதக் கும்பலும் மன்றாடிக்கேட்டபோதும் பெண்டிங் செவிசாய்க்கவில்லை.

புரோகிதர்கள் தங்கள் மனுவில் குறிப்பிடாமல் விட்ட ஒரு சம்பிரதாயத்தை பெண்டிங் குறிப்பிட்டார். ”உடன் கட்டையேறும் தாயை உயிருடன் கொளுத்துவது மகனின் கடமை. ஒரு வேளை அவள் குழந்தையில்லாத இளம் விதவையாக (சிறுமியாக) இருந்தால், தன்னை யார் கொளுத்தவேண்டும் என்பதை அவள்தான் கூறவேண்டும்” என்பதே அந்த சம்பிரதாயம்.

சதிமாதாவாக ரூப் கன்வர்
ரூப் கன்வருக்கும் மகன் இல்லை. அவளுக்குத் திருமணமாகி ஒரு ஆண்டு கூட ஆகவில்லை. எனவே அவளை உயிருடன் கொளுத்தும் பொறுப்பை மைத்துனன் ஏற்றுக் கொண்டான். சுற்றிலும் நூற்றுக்கணக்கான ராஜாபுத்திரர்கள் நின்று ‘சதிமாதா கி ஜெய்’ என்று ஆர்ப்பரிக்க அவன் ரூப் கன்வருக்குத் தீ வைத்தான். தீயின் நாக்குகள் தன்னைத் தீண்டத் தொடங்கியதும் அவள் சிதையிலிருந்து தப்பி ஓட முயற்சித்தாள். ஆனால் கையில் வாளுடன் சிதையைச் சுற்றி நின்ற ராஜபுத்திர இளைஞர்கள் அவள் தப்பிவிடாமல் பார்த்துக் கொண்டார்கள்.

இவையெல்லாம் பம்பாய் பத்திரிகையாளர் குழுவொன்று சம்பவம் நடந்தவுடனே தியோரலா சென்று நேரில் திரட்டிய செய்திகள். ரூப் கன்வருக்கு போதைமருந்து கொடுத்திருந்தார்கள் என்பதும் அவர்கள் முன்வைத்த ஒரு குற்றச்சாட்டு.

சுடுகாட்டுக்குப் பெண்கள் செல்வது ‘இந்து’ பாரம்பரியம் இல்லையே. ரூப் கன்வர் ஏன் சென்றாள்? அவளை புடவை, நகைகள் அணிவித்து அலங்கரித்தவர்கள் யார்?

அவளை உடன்கட்டை ஏற்றுவதற்கு முன்னால் அவளுடைய பெற்றோருக்குக் கூட செய்தி தெரிவிக்காததன் மர்மம் என்ன? என்று பல கேள்விகள் எழுப்பப் படுகின்றன. எனினும் கண்ணால் கண்ட சாட்சிகள் யாரும் இல்லையென்ற காரணத்தால் நீதிமன்றம் குற்றவாளிகளை விடுதலை செய்துவிட்டது. போலீசு தரப்பு சாட்சிகளே தங்கள் கூற்றை மறுத்து விட்டதால் வழக்குக்கு எந்த ஆதாரமும் இல்லையென்று தள்ளுபடி செய்துவிட்டார் நீதிபதி.

”நீதி வென்றது. ஒரு வேளை அவர்கள் தண்டிக்கப்பட்டிருந்தால் இந்திய ராணுவத்தின் ‘ராஜபுத்திரர் ரெஜிமென்ட்’ கலகத்தில் இறங்கியிருக்கும்” என்று எச்சரிக்கிறார்கள் தியோரலாவின் ராஜபுத்திரர்கள்.

”இதுவரை 8 ‘சதி’ வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டோருக்காக ஆஜராகியிருக்கிறேன். எல்லாவற்றிலும் நான்தான் ஜெயித்தேன். யாரும் தண்டிக்கப்பட்டதில்லை” என்று மார்தட்டுகிறார் குற்றவாளிகளுக்கு ஆஜரான வழக்கறிஞர்.

”குற்றவாளிகளைத் தப்பவிடுவதற்காக போலீசு திட்டமிட்டே வழக்கில் ஏகப்பட்ட ஓட்டைகளை உருவாக்கி வைத்திருந்தது” என்று குற்றம் சாட்டுகிறார்கள் மகளிர் அமைப்பினர்.

”நீதிபதி மனம் வைத்திருந்தால் குற்றவாளிகளைத் தண்டிக்கும் வாய்ப்பு இந்த வழக்கிலேயே இருந்தது” என்று முனகுகிறார்கள் அரசு வழக்கறிஞர்கள்.

”மகளிர் அமைப்பினர் சொன்னதைக் கேட்டு இதைக் ‘கொலை வழக்கு’ என்று பதிவு செய்ததுதான் தவறு. ”தற்கொலைக்குத் தூண்டுதல்” என்ற குற்றப்பிரிவில் வழக்கு போட்டிருந்தால் ரூப்கன்வர் கொளுத்தப்பட்ட போது அங்கே வேடிக்கை பார்த்தவர்கள் உள்ளிட்டு எல்லோரையும் உள்ளே தள்ளியிருக்கலாம். ‘சதி ஊர்வலத்தில் பங்கேற்பவர்களும் தற்கொலையைத் தூண்டும் குற்றத்தை செய்தவர்களே’ என்று கூறும் உயர்நீதிமன்றத் தீர்ப்பொன்று ஏற்கனவே உள்ளது ”என்று புது வியாக்கியானம் தருகிறார்கள் டெல்லி வழக்கறிஞர்கள்.

”தியோரலா சம்பவத்துக்குப் பிறகு ‘சதி’க்கெதிராகக் கொண்டு வரப்பட்ட சட்டம் ரொம்பக் கடுமையானது. ‘சதியை ஆதரிப்பவர்கள் உள்ளிட்டு எல்லோரையும் இச்சட்டத்தின் மூலம் தண்டித்துவிட முடியும். எனவே இனி குற்றவாளிகள் தப்ப முடியாது” என்கின்றனர் ராஜஸ்தான் அதிகார வர்க்கத்தினர்.

ஆனால் ரூப் கன்வர் கொளுத்தப்பட்ட இடம் சதி ஸ்தல் என்ற புனிதத் தகுதியுடன்தான் இருந்து வருகிறது. ரூப் கன்வர் கொளுத்தப்பட்ட நாளில் ஆண்டு தோறும் ‘சுன்ரிமகோத்ஸவ்’ என்ற விழா நடத்தப்பட்டுதான் வருகிறது. முதல் ஆண்டு விழாவில் ராஜஸ்தான் பா.ஜனதா முதல்வர் செகாவத் பங்கேற்றார்.

‘பாரம்பரியமிக்க’ தலைப்பாகையுடன் கையில் வாளேந்திய ராஜபுத்திர இளைஞர்கள் தங்கள் குலப்பெருமையை நிலைநாட்டும் அடுத்த சதிமாதாவைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

______________________


சில்க் ஸ்மிதா
தமிழ்த் திரையுலகம் அடுத்த சில்க் ஸ்மிதாவைத் தேடிக்கொண்டிருக்கிறது. கற்பும் விபச்சாரமும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்தானே!

கொலையா தற்கொலையா என்ற ஆராய்ச்சி இங்கேயும் தொடர்கிறது. இருப்பினும் தற்கொலைதான் என்று கோப்பினை மூடிவிட்டது காவல்துறை. தற்கொலை என்றே வைத்துக்கொண்டால் ரூப் கன்வரைத் தற்கொலைக்குத் தூண்டிய குற்றவாளிகளைப் பிடிக்க முடியாதது போலவே, ஸ்மிதாவைத் தற்கொலைக்குத் தூண்டிய குற்றவாளிகளையும் பிடிக்க முடியவில்லையாம்.

ஆனால் இறந்த மறுநாளே ஸ்மிதா உயிர்த்தெழுந்தாள்- பத்திரிகைகளிலும், திரையரங்குகளிலும். ஆனால் இப்பொழுதும் அவளுக்கு முழு ஆடையை அனுமதிக்க பத்திரிகைகள் தயாராக இல்லை. இருப்பினும் எல்லோரும் கண்ணீர் வடிக்கத் தவறவும் இல்லை. அது வேசியைச் சாகக் கொடுத்த விடுதிக்காரியின் கண்ணீர். தரகுக் காசை இழந்த தரகனின் கண்ணீர். அவளுடன் கழித்த நாட்களை எண்ணி வாடிக்கையாளன் வடிக்கும் கண்ணீர். கண்ணீர் வற்றியது. தற்கொலைக்கு யார் காரணம் என்று கண்டுபிடிக்கப் போதிய ஆதாரமில்லாததால், எது காரணம் என்ற உளவியல் ஆய்வில் இறங்கினார்கள்.

”ஸ்மிதாவுக்குப் போதிய படிப்பறிவு இல்லை அதுதான் காரணம்” என்றார் நடிகை சுகாசினி. இனி கல்வியறிவு இல்லாத யாரையும் கவர்ச்சி நடிகையாக்கக் கூடாது என்றுதான் கோடம்பாக்கத்தின் முடிவோ! அல்லது விபச்சாரம், அவமானம், ஆணாதிக்கம், முகத்துதி, துரோகம், நடிப்பு, நயவஞ்சகம் போன்ற திரையுலகின் அத்தனை இழிவுகளையும் தாங்கிக் கொண்டு உயிரோடிருப்பதற்குத் தேவையான அறிவைக் கல்வி அளித்துவிடுமா?

இதே- நியாயத்தை ரூப் கன்வருக்கும் பொருத்தலாம். தீயில் வெந்தது அவளுடைய மூடநம்பிக்கையின் விளைவு என்று வழக்கை முடித்து விடலாம். அதைத்தான் ராஜபுத்திரர்களும் விரும்புகிறார்கள். ”உடன் கட்டைப் பழக்கத்திற்காக இந்து மதத்தை ஏன் சாடுகிறீர்கள்? எல்லோருமா உடன் கட்டை ஏறுகிறார்கள்” என்று கேட்கிறார்கள் இந்து சனாதனிகள். ”ஸ்மிதாவின் தற்கொலைக்காகத் திரையுலகத்தை ஏன் குற்றம் சொல்கிறீர்கள், எல்லோருமா தற்கொலை செய்து கொள்கிறார்கள்?” என்பதுதான் சுகாசினி வகையறாவின் வாதம். சாக்கடையைக் குற்றம் சொல்லாதீர்கள். கொசுவர்த்தி வைத்துக் கொள்ளுங்கள். எத்தனை கிருமிகளுக்கும், புழுக்களுக்கும் இந்தச் சாக்கடை வாழ்வளிக்கிறது!

ஸ்மிதா போன்ற கல்வியறிவற்றவர்கள் எதிர்காலத்தில் தற்கொலை செய்துகொள்ளாமல் தடுக்க தாய்லாந்தின் முன்னுதாரணத்தைக் கோடம்பாக்கமும் பின்பற்றலாம். தாய்லாந்தில் எயிட்ஸ் நோயைக் கொண்டு வந்தவர்கள் அமெரிக்கர்கள்தான் என்பதால் லட்ச ரூபாய் கொடுத்தாலும் அமெரிக்க வாடிக்கையாளரை அனுமதிக்க மாட்டோம் என்கிறார்களாம் தாய்லாந்தின் படிப்பறிவற்ற விலைமாதர்கள். கல்வியறிவற்ற விலை மாதர்களால் தோன்றியுள்ள இந்த நெருக்கடியைச் சமாளிக்க அவர்களுக்கு ‘எயிட்ஸ் கல்வி’ அளிக்கும் பொருட்டு விளக்கப் படங்களுடன் கூடிய கையேடு ஒன்றை வெளியிட்டுள்ளதாம் ஒரு தொண்டு நிறுவனம்.

அமெரிக்கர்கள்தான் எயிட்ஸ் பேர்வழிகள் என்பது தவறு. யார் வேண்டுமானாலும் அப்படி இருக்கலாம். எனவே அமெரிக்கர்களை மட்டும் புறக்கணிப்பது தவறு. நாம் எச்சரிக்கையாக இருப்பதும், ஆணுறையைப் பயன்படுத்தச் சொல்வதும்தான் தீர்வு என்கிறது அந்த எயிட்ஸ் ‘கல்வி’ நூல். எயிட்சுக்கெதிரான அமெரிக்கப் பிரச்சார முழக்கமும் இதுதான்; ”விளையாடுங்கள், வேண்டாமென்று சொல்லவில்லை; ஆனால் பாதுகாப்பாக விளையாடுங்கள்”

இதைத்தான் சுகாசினியும் சொல்கிறார். ஆனால் தியோரலாவின் ராஜபுத்திரர்கள் கேட்கிறார்கள், ”பாதுகாப்பாகக் கொளுத்துவது எப்படி?”

___________________________________________

...மேலும்

Jan 18, 2012

இந்திரா கோஸ்வாமி : அசாமியர்களின் மூத்த சகோதரி - யுவபாரதி


"என் சொந்த அனுபவங்களிலிருந்தே எழுதுகிறேன்; அவ்வனுபவங்களுக்கு என் கற்பனையால் உருக் கொடுக்கிறேன்; அவ்வளவுதான்" என்றவரும், அசாமியர்களால் தங்களின் அன்புக்குரிய மூத்த சகோதரி (பாய்தேவ்) என்று அழைக்கப்பட்டவருமான, ஞானபீடப் பரிசு பெற்ற எழுத்தாளர் இந்திரா கோஸ்வாமி கடந்த நவம்பர் 29 அன்று காலமானார். பெண்கள் மற்றும் விளிம்பு நிலையினர் மீது நிகழ்த்தப்படும் சுரண்டல்களைச் சமரசமற்று எழுத்தில் பதிவுசெய்து வெளிப்படுத்தியதால், பழமைவாதிகளாலும் ஆதிக்கசக்திகளாலும் தொடர்ந்து தூற்றப்பட்டார். மக்களால் நேசிக்கப்பட்டார்.

1942-ஆம் ஆண்டு ஒரு வசதியான அசாமிய வைணவப் பிராமணக் குடும்பத்தில் பிறந்த இந்திரா கோஸ்வாமி, ஒன்றுபட்ட அசாமின் தலைநகராக இருந்த ஷில்லாங்கின் (தற்போது மேகாலயா மாநிலத்தின் தலைநகர்) பைன் மவுண்ட் பள்ளியில் தன் பள்ளிக்கல்வியும், குவாஹாத்தி காட்டன் கல்லூரியில் அசாமிய இலக்கியத்தில் பட்டமும் பெற்றார். கல்லூரியில் பயின்ற காலத்திலேயே, இவரது முதல் சிறுகதைத் தொகுதி வெளிவந்தது. ஒரு பாலம் கட்டும் பணிக்காக அசாம் வந்திருந்த, மைசூரைச் சேர்ந்த மாதவன் ராயசம் ஐயங்கார் என்ற பொறியியலாளரை 1962-இல் காதல் திருமணம் செய்து கொண்டார். கணவரது பணிநிமித்தம் அவருடன் மத்தியப் பிரதேசம், காஷ்மீர் மாநிலங்களுக்குப் பயணமானார் இந்திரா. இம்மாநிலங்களில் அவர் கண்ட அனுபவங்கள் பின்னாளில் அவரது இரு பெரும் நாவல்களில் வெளிப்பட்டன. திருமணமான இரு ஆண்டுகளுக்குள், காஷ்மீரில் நடந்த ஒரு விபத்தில் அகால மரணமடைந்தார் மாதவன்.

கணவரின் மரணம் இந்திராவைப் பெருமளவில் பாதித்தது. அசாமிய வைணவப் பிராமணக் குடும்பங்கள் "ஸத்ரா" எனும் மத நிறுவனங்களுக்குக் கட்டுப்பட்டவை. ‘ஏகசரண தர்மம்’ எனும் பெயரில் தீவிர வைணவத்தைப் போதிக்கும் ஸத்ராக்கள் இறுக்கமான சமூகக் கட்டளைகளிட்டு நடைமுறைப் படுத்துபவை. இத்தகைய ஒரு குடும்பச் சூழலில், இளம் விதவையான இந்திரா பெற்ற அனுபவங்கள் அவரைத் தீராத மன அழுத்தத்திற்கு உள்ளாக்கின. தற்கொலை முயற்சிகளுக்குத் தூண்டின. ஒருமுறை, தம் வீட்டிற்கு அருகிலிருந்த கிரினோலின் அருவியில் பாய்ந்து தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டார். பின்பும் பலமுறை, தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இத்தற்கொலை முயற்சிகள் அவரது உடல்நிலையில் - குறிப்பாக நரம்புகளில் - நிரந்தரமான பாதிப்புகளை ஏற்படுத்தின. தமது மன அழுத்தம் மற்றும் தற்கொலை முயற்சிகள் குறித்து, 1988-இல் வெளிவந்த தமது முடிவுறா சுயசரிதை (ஆத லேக்கா தஸ்தாவேஜ் : The Unfinished Autobiography) எனும் நூலில் விவரித்துள்ளார் இந்திரா கோஸ்வாமி.

மன அழுத்தத்திலிருந்து விடுபடும் முகமாக, கோல்பாறா சைனிக் பள்ளியில் ஆசிரியையாகப் பணியில் சேர்ந்த இந்திரா, 'மாமொணி ராய்சொம் கோஸ்வாமி' என்ற புனைப்பெயருடன் எழுத்துக்குத் திரும்பினார். படிப்பையும் தொடர்ந்தார். "நான் வாழ்வதற்காக மட்டுமே எழுதினேன்; எழுதி இருக்காவிடில் நான் வாழ்ந்திருக்கவே முடியாது" என்று தான் தீவிரமாக எழுதவந்தது குறித்துப் பின்னாளில் குறிப்பிட்டார் அவர்.

மத்தியப் பிரதேசத்தின் தொழிலாளர் பிரச்சினைகளை மையமாக வைத்து 'துருப்பிடித்த வாள்' (மாமொரே தொரா தரேவால்:The Rusted Sword) என்ற நாவலையும், காஷ்மீரில் செனாப் நதி மீது குழாய் பதிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட தொழிலாளர்கள் மீது நிகழ்த்தப்பட்ட சுரண்டல்களை வெளிப்படுத்தும் 'செனாப் நீரோட்டம்' (செனாபொர் ஸ்ரோத்:The Chenab's Current) என்ற நாவலையும் எழுதினார். 'துருப்பிடித்த வாள்' நாவலுக்காகவே 1983ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது பெற்றார் இந்திரா கோஸ்வாமி.

ஆய்வுப் பணிக்காக உத்தரப் பிரதேச மாநிலம் பிருந்தாவனுக்குச் சென்ற இந்திரா, அங்கு விதவைகளுக்கான இல்லத்தில் தங்கி, தம் ஆய்வில் ஈடுபட்டார். ‘ராதா ஸ்வாமிகள்’ எனும் பெயரில் இளம்பெண்கள் ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளும் வறுமை மற்றும் பாலியல் சுரண்டல்களை வெளிப்படுத்துவதான தமது புகழ்பெற்ற 'நீலகண்டி பிரஜா' (Blue Necked Braja) எனும் நாவலை எழுதினார். இயல்பான பாலுணர்வுகளுக்கும் மதக் கட்டளைகளுக்கும் இடையில் துயருறும் இளம் விதவைகளின் அவதியையும் வெளிப்படுத்தினார். அந்நாவலின் மூலம், புராணக் கண்ணனோடு இணைத்துப் புகழப்படும் பிருந்தாவனத்தின் காணச் சகிக்காத மற்றொரு முகத்தை உலகுக்குக் காட்டினார். சனாதனிகளின் கடும் எதிர்ப்பையும் சந்தித்தார். அந்நாவலின் செளதாமினி எனும் பிரதானக் கதாபாத்திரம் தன்பிம்பமே என்றும், தன் கணவர் இறந்தபின் தான் சந்தித்த மோசமான அனுபவங்களே செளதாமினி என்றும் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டார் இந்திரா கோஸ்வாமி.

பிருந்தாவனத்தில் அவர் இருந்த காலத்தில் பல்வேறு இராமாயணப் பிரதிகளைப் படிப்பதில் ஈடுபட்டார். பின்னாளில் இந்தி மொழியின் துளசி ராமாயணத்தையும், அசாமிய மொழியின் மாதவ (கந்தளி) ராமாயணத்தையும் ஒப்பிட்டு, "இராமாயணம் - கங்கையிலிருந்து பிரம்மபுத்திராவுக்கு' (Ramayana : From Ganga to Brahmaputra) எனும் நூலை எழுதினார். இந்நூலுக்காக ஃபுளோரிடா சர்வதேசப் பல்கலைக்கழகத்தின் விருதையும் பெற்றார்.

பின்னர், தில்லி பல்கலைக்கழகத்தில் அசாமிய மொழி விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்த இந்திரா கோஸ்வாமி, பின்னாளில் அத்துறையின் தலைவலாகவும் ஆனார். அவரது இலக்கிய வாழ்வின் மிகச் சிறந்த காலம் எனப்படுவது தில்லியில் இருந்த காலமே. அவரது இரு பெரும் இலக்கியப் படைப்புகளான 'அந்துப் பூச்சியால் அரிக்கப்பட்ட யானையின் அம்பாரி', 'இரத்தம் தோய்ந்த பக்கங்கள்' ஆகிய நாவல்களை அப்போதே எழுதினார். 'அந்துப் பூச்சியால் அரிக்கப்பட்ட யானையின் அம்பாரி' (தந்தாள் ஹதிர் உனே கோவா ஹெளதா:The Moth eaten Howdah of Tusker) எனும் நாவல் அசாமியப் பிராமணக் குடும்பங்களில் நிலவும் ஆணாதிக்கத்தையும், பெண்கள் படும் துன்பங்களையும், ஸத்ரா கட்டளைகளால் அசாமிய பிராமண விதவைகள் படும் துயரங்களையும் விவரிக்கிறது. இந்நாவலால் அவர் தமது சாதியினரிடமிருந்து பெரும் எதிர்ப்புகளைச் சந்தித்தார்.

'இரத்தம் தோய்ந்த பக்கங்கள்' (தேஜ் ஆரு துளிரே துஸரித பிருஷ்டா:Pages Stained with Blood) என்ற நாவல் இந்திரா காந்தி படுகொலையை அடுத்து, 1984-ஆம் ஆண்டு தில்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரங்களைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டது. தில்லியில் கலவரம் தீவிரமாக நடைபெற்ற முக்கியப் பகுதிகளில் ஒன்றான சக்திநகரில் குடியிருந்தவர் என்ற வகையில் கலவரத்தை நேரில் கண்ட சாட்சியானார் இந்திரா கோஸ்வாமி. கலவரம் நடைபெற்ற ஒவ்வொரு பகுதிக்கும் சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்தார். கலவரத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டதும், தில்லியின் சிவப்பு விளக்குப் பகுதி எனப்படுவதுமான ஜி.பி.ரோட்டின் பாலியல் தொழிலாளர்களையும் நாவலில் முக்கியப் பாத்திரங்களாக்கினார். அக்கலவரத்தின் விளைவு தொடர்பாக, ஒரு நேர்காணலில் 'தத்தம் கணவர்களை ஒரு சேர இழந்து தவித்த பெரும் எண்ணிக்கையிலான இளம் விதவைகளின் கதறலை இதுபோல் எங்கும் காணமுடியாது' என்று குறிப்பிட்டார்.

இந்திரா கோஸ்வாமியின் குறிப்பிடத்தக்க மற்றொரு படைப்பு 'சின்னமஸ்தாவிடமிருந்து வந்தவன்' (சின்னமஸ்தார் மனுத்தோ:The Man from Chinnamasta). இது இந்தியாவின் முக்கியமான சக்தி பீடங்களில் ஒன்றான, அசாமிலுள்ள காமாக்யா கோவிலில் மிருகங்களைப் பலியிடும் ஆயிரம் ஆண்டுப் பழக்கத்தை விமரிசிக்கிறது. இந்நாவல் ஒரு பிரபல அசாமிய இதழில் தொடராக வெளிவந்த போது, அவ்விதழின் ஆசிரியரும், இந்திரா கோஸ்வாமியும் தாந்திரீகர்களால் மிரட்டப்பட்டனர். 'ஒரு தாய்க் கடவுளை இரத்தத்துக்குப் பதிலாக, மலர்களால் வழிபடுங்கள் என்பதுதான் நான் சொல்ல வந்தது' என்று இது குறித்துக் குறிப்பிட்டார் இந்திரா.

சாகித்திய அகாதமி விருது மட்டுமின்றி, பாரத் நிர்மாண் விருது (1989), கதா தேசிய விருது (1993), ஞானபீட விருது (2000), நெதர்லாந்து நாட்டின் பிரின்ஸ் கிளாஸ் விருது (2008) உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர் இந்திரா கோஸ்வாமி. மேற்கு வங்கத்திலுள்ள இரவீந்திர பாரதி பல்கலைக்கழகம், அருணாசலப் பிரதேசத்திலுள்ள ராஜீவ்காந்தி பல்கலைக்கழகம், இந்திராகாந்தி தேசிய திறந்த நிலைப் பல்கலைப்பழகம் ஆகியவை அவருக்கு 'டாக்டர்' வழங்கிச் சிறப்பித்தன. 'சதையும் வலியும்' (Pain and Flesh) என்ற ஒரு கவிதைத் தொகுப்பும் வெளியிட்டுள்ளார். இவரது வாழ்வு ஜானு பரூவா எனும் இயக்குநரால் 'மூடுபனியிலிருந்து வரும் சொற்கள்' (Words from the Mist) என்ற பெயரில் திரைப்படமாக்கப்பட்டுள்ளது. இவரது பெரும்பாலான நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

1947 முதல் அசாமில் தனிநாடு கேட்டு இயங்கிவரும் அமைப்புகளுக்கும், நடுவண் அரசுக்கும் இடையிலான பிரச்சினைகளால் அமைதி இழந்திருக்கும் அசாமியர்களைக் கண்டு மிகவும் வருந்திய இந்திரா கோஸ்வாமி, இருதரப்பும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுச் சிக்கல் தீர்க்கப்படவேண்டும் என்பதில் பெரிதும் கவனம் கொண்டார். 2002-ஆம் ஆண்டில் இச்சிக்கலைச் சுமுகமாகத் தீர்ப்பதில் அரசு அக்கறையற்றிருப்பதைச் சுட்டிக் காட்டி தமக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதையும் புறக்கணித்தார். கடந்த கால் நூற்றாண்டு காலமாக இப்பிரச்சினையில் அரசு தரப்புக்கும் அசோம் ஐக்கிய விடுதலை முன்னணிக்கும்(ULFA) இடையே ஒரு இணக்கத் தூதராய்ச் செயல்பட்டுவந்தார். இவரது முன்முயற்சியின் காரணமாகவே, இரு தரப்பும் கலந்து பேசும் விதமாக மக்கள் ஆலோசனைக் குழு (People's Consultative Group) உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த ஓராண்டு காலமாகவே குவாஹாத்தி மருத்துக்கல்லூரி மருத்துவமனையின் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த இந்திரா கோஸ்வாமியை உறவினர், நண்பர்கள் மட்டுமல்லாது, பலதரப்பட்ட அசாமிய மக்களும் அவ்வப்போது வந்து உடல்நலம் குறித்து அறிந்து வந்துள்ளனர். கடந்த செவ்வாயன்று காலை அவர் காலமான செய்தி தெரியவந்த போது, "மாமொணி பாய்தேவ் எழுதிய கதைகளை வாசித்தறியாத அசாமியர்களும் கூட, ஒவ்வொருவரும் அறிந்திருக்கும் வாய்மொழிக் கதை போல, அவரது வாழ்க்கைக் கதையை அறிந்திருப்பர்" என்று ஒருவர் கூறியது பொய்யில்லை.

நன்றி - கூடு 
...மேலும்

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்