/* up Facebook

Jan 4, 2012

சேலையும் வேட்டியும் பெண்களும்தானா கலாசார சீரழிவின் அடையாளங்கள்!!


யாழ் அரச அதிபர் தனது மாவட்டத்தில் பெண்கள் மீதான வன்முறையின் அதிக ரிப்பைப் பற்றி சொன்னாலும் சொன்னார், இப்பொழுது ஊடகங்கள் யாவும் யாழ் மாவட்டத்தில் நிகழும் ‘கலாசாரச் சீரழிவு’ பற்றி ஒப்பாரி வைக்கத் தொடங்கி விட் டன! மொபைல் போன்கள் மூலம் ஆபா சக் காட்சிகள் பார்க்கக்கூடிய தொழில் நுட்பம் தொடங்கி, இன்றைய இளந் தலை முறையினர் கண்டதே காட்சி கொண்ட தே கோலம் என்கின்ற தத்துவத்திற் கமைய நடப்பதுவரை எல்லாமே விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது. அதெல் லாம் சரி, ஆனால் கலாசாரம் என்றவுடனேயே குறிப்பாக பெண்களின் பாலியல் நடத்தைகளும் அவர்களின் ஆடை அலங்காரங்களும் மட்டும்தான் எடுத்தாளப் படும் விடயங்களாக வருவதன் காரணம் என்ன?

எந்த சமூகத்திலும் பெண்கள்தான் அச்சமூகத்தின் கலாசாரச் சின்னங்களாகக் கருதப்பட்டு வந்திருக்கிறார்கள். மக்கள் அமர்ந்திருக்கும் ஒரு பொதுச் சபையில், யார் சிங்கள ஆண்கள், யார் தமிழ் ஆண்கள், யார் முஸ்லிம் ஆண்கள் என்று கூற எமக்கு அனேகமாகக் கஷ்டமாக இருக்கும். ஆனால் யார் சிங்களப் பெண்கள், யார் தமிழ்ப் பெண்கள் யார் முஸ்லிம் பெண்கள் என்பதை அவர்களின் உடைகள், அலங்காரங்கள் என்பவற்றைக் கொண்டு இலகுவாக அடையாளம் காட்டி விட லாம். தமிழ்க்கலாசாரம் பாதுகாக்கப் படவேண்டும் என்பவர்கள் தமிழ்ப் பெண்கள் சேலை அணிய வேண்டும் என்று அந்தக் கொப்புக்குத் தாவுவார்களே தவிர, ஆண்கள் வேஷ்டி உடுக்க வேண்டும் என்று சொல்லுவதில்லையே. அடுத்து குடும்பங்கள் உடைந்து கொண்டு போவதும் கலாசாரச் சீரழிவாகப் பார்க்கப் படுகிறது. இப்படி ஆராய்ந்து கொண்டு போனால், பெண்கள் பழமையின் சின்ன மாக இருக்க வேண்டும் என்று அவர்கள் நடையுடை, பாலியல் நடத்தை, சுதந்திர மாகத் திரிகின்ற இயல்பு, தமக்கென சுயாதீனமான எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பண்பு என்பவற்றின் மீது சமூகம் இடும் கட்டுப்பாடுகளே இந்த வகையான கலா சாரக் கதைகள் என்பதை உணர்ந்து கொள்ளலாம். எனவேதான் கலாசாரப் பாதுகாப்பிலும் பெண்களின் உடைகளும் அவர்களின் ‘கற்பும்’ மையப்பொருளாக அடங்கியிருப்பதைக் காணலாம்.
ஆனால் கலாசாரம் என்பதன் வரைவிலக்கணமோ தனியே பெண்களைப் பற்றி யது அல்லவே. ஒரு நிறுவகம், அல்லது ஒரு நிறுவனம், அல்லது ஒரு குழு மனி தர்கள் தமக்குள் கொண்டிருக்கும் பொதுமையான கண்ணோட்டங்கள், விழு மியங்கள் மற்றும் நடத்தை முறைகள் அனைத்தினதும் கூட்டான வெளிப் பாடுகளே கலாசாரம் எனப்படுகின்றது. ஒரு மக்களின் மொழி, பொருளாதார நடவ டிக்கைகள், உபயோகிக்கும் பொருட்கள், உணவு முறைகள், அவர்களின் பழக்க வழக்கங்கள், பாரம்பரியங்கள் ஆகியன கலாசாரத்தின் அடையாளங்களாகின்றன. இவற்றில் குறிப்பாக மொழி கலாசாரத்தின் முக்கிய அடையாளமாகின்றது. மொழி மூலந்தான் ஒரு குழுவினது பொது விழுமியங்கள் உணர்த்தப்படுகின்றன, அதன் பாரம்பரியங்கள் பாதுகாக்கப்படுகின்றன. எனவேதான் இந்த வரை விலக் கணத்தின் அடிப்படையில், தமிழ் மக்களின் கலாசாரம் எங்கெங்கெல்லாம் சீரழிந் து கொண்டு போகின்றது என்பதைப் பார்ப்போம்.

இன்று மூலை முடுக்கெல்லாம் இன்டர்நஷனல் பாடசாலைகள் முளைத்து விட்ட ன. ஆங்கிலேயர் அல்லது அமெரிக்கர்களினது பாடவிதானங்களை ஆங்கில க்கல்வி மூலம் கற்பிப்பதுதான் இந்த இன்டர்நஷனல் பாடசாலைகளினது நோக்க மாகும். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லையென்று தங்கள் பிள்ளைகளை இந்த வகையான இன்டர்நஷனல் பாடசாலைகளில் சேர்த்துவிடும் பெற்றோர் களின் அதிகரிப்பாலேதான் இன்று இன்டர்நஷனல் பாடசாலைகளுக்குக் கிராக்கி அதிகரித்து விட்டது. உலக மொழிகளில் ஒன்றாக ஆங்கிலம் இருக்கின்ற சூழலில் ஆங்கில மொழியறிவு என்பது முக்கியமானதுதான். ஆனால் அதற்காக, தாய்மொழியில் கல்வியை மறுப்பதனால் எங்களது எதிர்கால சந்ததியினர் தமிழி ல் எழுதப்பேசத் தெரியாமல் வளரப்போகிறார்களே. எங்களது இதிகாசங்கள் இலக் கியங்கள் இவையொன்றும் தெரியாமல் ஆங்கிலத்தில் சிந்திப்பவர்களாக மாறப் போகிறார்களே. பிரயோகிக்கப்படாமல் போவதால் தமிழ் மொழியின் வளர்ச்சி குன்றப்போகிறதே. இதையெல்லாம் பற் றிக் கவலைப்படாது தமிழ் மொழிப் பற்று இன்றி சமகாலச் சமூகம் மாறிக்கொண்டு வருவது முதல் தரக் கலாசாரச் சீரழி வாகும்.

அடுத்து, எங்களது வெளிநாட்டு மோக த்தை எடுத்துக் கொள்ளுவோம். எந்த இளைஞர் யுவதியைக் கேட்டாலும் அனேகமாக அவர் எங்காவது வெளி நாட்டுக்கு ஓடுவதற்கு ஸ்பொன்சருக்குக் காத்திருப்பவராக இருப்பார். பொருளா தாரத் தேவைகள் இருக்கின்றன என்கின்ற காரணத்தினால் லண்டன் கனடா என்று போகின்றவர்கள்கூட எப்படியும் அங்கேயே செட்டிலாகத்தான் பார்ப் பார்கள். பிஆர், கிரீன்கார்ட் என்று அவர்களின் கனவு நீண்டு கொண்டே போகும். அங்கு பெற்றோல் ஷெட்டில் கூலி வேலை செய்தாலும் அவர்களுக்குப் பரவாயில்லை. இங்கு பெரிய அலுவலர் பதவிகளைக்கூட இராஜினாமாச் செய்து விட்டு ஓடத் தயாராவார்கள். அவர்களின் பிள்ளைகள் அங்குள்ள கலாசாரத்தில் ஊறியவர்களாக தமிழ் தெரியாதவர்களாக வளரப் போகிறார்கள். அதைப் பற்றியும் அக்கறை கிடையாது. வெள்ளைக்காரன் நாட்டின் மீதான மோகம் கொண்டு, தாய் நாட்டினை இழிவாகக் கருதும் காலனித்துவப்படுத்தப்பட்ட அடிமைச் சிந்தனையுடன் உலவுவது கலாசாரச்சீரழிவின் உச்சக்கட்டம் எனலாம்.

அடுத்து எங்கள் பழக்கவழக்கங்களை எடுத்துப் பார்ப்போம். வீட்டுக்கு வரும் உறவினர்களை சிறப்பாக உபசரிப்பது எங்கள் கலாசாரம் என்று நாங்கள் நம்பிக் கொண்டிருந்த காலம் இப்பொழுது மலையேறிவிட்டது. இப்பொழுதெல் லாம் வீடுகளுக்குப் போனால் நிச்சயம் டிவியில் ஒரு சீரியல் ஓடிக்கொண்டி ருப்பதைக் காணலாம். விருந்தினர் வந்ததற்குப் பிறகும் டிவி அணைக்கப்படாது. அவர்களை இருத்தி விட்டு வீட்டுக்காரர்கள் டிவி பார்ப்பதும் இடைக்கிடை ஓரிரண்டு வார்த்தைகள் பேசுவதுமாக காலம் கடக்கும். சீரியல் நேரம் முடிய, ஏதாவது தேனீர் குடித்து விட்டு வந்தவர்கள் கிளம்ப வேண்டியதுதான். வந்த விருந்தினர் களைக் கவனித்து அவர்களுடன் அளவளாவியிருக்க முடியாமல் டிவி மோகத் தில் மூழ்கியிருக்கும் கலாசாரச் சீரழிவை என்னென்பது.

தமிழ் சாப்பாட்டுக் கடைகளைப் போய்ப் பாருங்கள். அசுத்தத்தின் உச்சக்கட்டமாக இருக்கும். அவற்றின் சமையலறைகள் ஒரு கேவலம். தமது மூக்கையும் கை யால் சிந்தி வியர்வையையும் துடைத்து விட்டு சாப்பாட்டையும் கையால் அளை ந்து கொண்டிருக்கும் கடைச்சிப்பந்திகள் அடுத்த கேவலம். வடை, தோசை, இடி யப்பம் என்று எல்லாவற்றையும் கையால் போட்டுத்தான் தருவார்கள். கரப்பான் பூச்சிகள் வேறு ஓடித் திரியும். கழிவறைகளைப் பற்றிச் சொல்லத் தேவை யில்லை. நாங்கள் சாப்பிடும் இடங்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என்று உறுதி பூண்டு அதற்கேற்ற முறைகளில் எமது உணவு வர்த்தக நிலையங்களைச் சொல்லி மாற்றுவதற்குக்கூட வக்கில்லாத எங்கள் கலாசாரத்தைப் பற்றிச் சொல் லத் தேவையில்லை. காசு கொடுப்பவர்கள் நாங்கள்தானே. சுத்தம் பேணா விட்டால் இங்கு சாப்பிட மாட்டோம் என்று எல்லோரும் ஒரேயடியாகச் சொன் னால் போதும். ஆனால் அப்படி உணவுச் சுத்தம்கூட அவசியமில்லாத கேடு கெட்ட கலாசாரத்தைச் சேர்ந்தவர்களாக மாறி விட்டோமே.

எங்கள் ஊர்களில் புத்தகக் கடைகள் வைத்திருப்பவர்களைக் கேட்டுப் பாருங் கள். மூக்கால் அழுவார்கள். அந்த அளவு க்கு காசுக்கு புத்தகங்கள் வாங்குபவர் களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போவதைக் காண லாம். தெரிந்த எத்தனை வீடுகளில் புத்தக அலமாரிகள் இருக்கின்றன என்று எண் ணிப் பாருங்கள் பார்ப்போம். வாசிப்பு என்பது எங்கள் சிந்தனைகளைப் பண் படுத்தும் ஒரு முக்கியமான நடவடிக்கையாகும். புதிய தகவல்களைத் தரு கின்றது, கருத்துத் தெளிவினை ஏற்படுத்துகின்றது, எமது மொழியறிவை விருத்தி செய்கின்றது. புத்தகம் வாசிக்காத இழிவான கலாசாரத்தில் நாம் இருந்து கொண்டு பிறகு வேறெதைப் பற்றி வியாக்கியானம் செய்ய முடியும்? இதே போலத்தான் நாங்கள் வேலையைப் பற்றிக் கொண்டுள்ள மதிப்பீடும். எனக்கு நல்ல வேலை கிடைத்திருக்கடா, அவ்வளவாக ஒரு வேலையும் செய்யத் தேவையில்லை அலுவலகத்தில் சும்மா இருக்கலாம் என்று புளுகுவார்கள். வேலை செய்யாமல் இருப்பதுதான் நல்ல வேலை என்று நினைக்கும் எங்கள் இழி கலாசாரத்தை எப்படி மாற்றுவது?

இப்படி எங்கள் சமூகத்தின் கலாசாரச் சீரழிவின் இன்னும் பல முக்கிய காரணிகளை நாங்கள் பிட்டுப் பிட்டு வைக்கலாம். முதியோர்களை நாம் மதித்துப் போற்றும் பாங்கு, நேர்மையை மேலாக மதிக்கும் பண்பு என்று எவ்வளவோ. இதையெல்லாம் விட்டு விட்டு பெண்ணியம் பேசுபவர்களைக் கண்டால் மட்டும் சும்மா கலாசாரத்தை இழுக்கும் இழிவான கலாசாரத்தை நாம் மாற்றுவோம்.

2 comments:

எஸ் சக்திவேல் said...

>இப்பொழுதெல் லாம் வீடுகளுக்குப் போனால் நிச்சயம் டிவியில் ஒரு சீரியல் ஓடிக்கொண்டி ருப்பதைக் காணலாம்.

இதுபற்றி என் நண்பர் ஒருவரின் அனுபவம். சிட்னியிலிருந்து ஊர் போனார். ஆசையுடன் ஒரு உறவினரைப் பார்க்க "அடுத்த செவ்வாய்க்கிழமை 6 மணிக்கு வரட்டே.." என்று கேட்டார்". "ஐயோ செவ்வாய் 6 மணிக்கு மட்டும் வேண்டாம்" என்றார்; இவர் 'எதேனும் அலுவலோ ?" என்று கேட்க "அண்ணி சீரியல்" பார்கவேண்டும் என்றாராம். நண்பர் பிறகு அவரைச் சந்திக்கவில்லை.

ஜெகதீஸ்வரன் நடராஜன் said...

காலத்திற்கு தகுந்தது போல எல்லாம் மாறிக்கொண்டே இருக்கும். வெறும் கூச்சலால் சேலையை மீண்டும் பெண்கள் எடுத்து கட்டிவிடிப் போவதில்லை. கிராமங்களில் எப்போதே வயல்வெளியில் வேலை செய்யும் பெண்கள் நைட்டி அணிந்துவர துவங்கிவிட்டனர். இனி உடையை ஒன்றுமே செய்ய முடியாது.

தொலைக்காட்சியும், கைப்பேசியும் இன்று கலாச்சார சீரழிவாக எண்ணலாம். வருங்கால தலைமுறை அவற்றுடனே வளருவதால் அதனை தவறாக நினைக்காது. எனவே அதனையும் தடுக்க முடியாது

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்