/* up Facebook

Dec 14, 2011

விண்ணில் பறந்த முதல் கறுப்பினப் பெண்! - - பேரா.சோ.மோகனா


அக்டோபர் 17ம் நாள் !

மா கரோல் ஜெமிசன், விளா திமிர், பால் பெர்னியா, எர் னஸ்ட் குட்பாச்டார்,ராபர்ட் ,வெர்ஸ்வொர்த்,மேக்னட் கேஸ்தாப், பால் பேர்ட் , மற்றும் ஜொஹான் பிரடெரிக் மெக் கேல் என ஏராளமான விஞ்ஞா னிகள் பூமியை முதல் முறை யாக தழுவிய தினம், முத்த மிட்ட தினம் இது. அவர்களுள் மிகவும் இளையவர் மா கரோல் ஜெமிசன். இவர் ஒரு பொறியா ளர், விஞ்ஞானி, மருத்துவர், ஆசிரியர் மற்றும் வானவியலா ளர். டாக்டர் கரோல் ஜெமிசன் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி யில் பரந்து விரிந்த அனுபவம் உள்ளவர். அறிவியலின் பின் னணியில் விசாலமான அனு பவம் பெற்றிருந்த ஜெமிசன், ஆப்பிரிக்கன், ஆப்பிரிக்க-அமெரிக்கன் பற்றிய படிப்பி லும் வல்லவர்.ஆங்கிலம், ரஷ்ய மொழி, ஜப்பானிய மொழி மற் றும் ஸ்வா`ஹிலி மொழியைச் சரளமாக பேசும் திறமையாளர். அத்துடன் நடனத்திலும் சிறந்து விளங்கினார்.

அக்டோபர் 17ம் நாள், 1956 -ம் ஆண்டு, டெக்காடூர் என்ற இடத்தில் பிறந்தார் ஜெமிசன்.

வாழ்வில் எதனையாவது சாதிக்கவேண்டும் என்ற மனத் திண்மையும் , அதீத ஆர்வமும் உள்ளவர் ஜெமிசன். எனவே மீண்டும் பொறியியல் படிக்க விண்ணப்பித்தார். அத்துடன், நாசாவுக்கும் விண்வெளியில் பயணிக்க விருப்பம் தெரிவித்து ,அந்த திட்டத்திலும் விண்ணப் பித்தார். முதலில் அவரது விண் ணப்பம் மறுக்கப்பட்டது. மீண் டும் 1987-ல் நாசாவுக்கு விண் ணப்பித்தார் . அப்போது அங்கு வந்திருந்த 2000 மனுக் களில் 15 பேர் மட்டுமே தேர்ந்தெ டுக்கப்பட்டார்.அவர்களில் ஒருவராக ஜெமிசன் இருந்தார். பின்னர் ஜெமிசன் வெற்றி கர மாக விண்வெளியாளருக்கான பயிற்சியை முடித்தார். அதன் பின்,1988 ல் நாசாவின் விண் வெளி ஓடத்தில் பறந்தார். விண் வெளியில் பறந்த 5 கறுப்பினத் தவர்களில் இவரும் ஒருவர். ஆனால் விண்ணில் பறந்த முதல் கறுப்பினப் பெண் என்று சரித்திரம் படைத்தவர் இவர் மட்டும்தான்.

வான்வெளி அறிவியலுக் கும், பொறியியலுக்கும் ஏராள மான உதவிகளைச் செய்துள் ளார் ஜெமிசன். எஸ்டிஎஸ் 47 என்ற விண்வெளி ஆய்வகத் தின், அறிவியல் தூதுக்குழு வின் சிறப்பாளராக இருந்தார். இது ஜப்பானுக்கும் அமெரிக் காவுக்கும் இடையிலுள்ள ஒரு கூட்டுறவு இணைப்புக் குழு வாகும்.1992 செப்டம்பர் 12 ம் நாள் வானில் விண்வெளியாள ராகப் பறந்து சாதனை நிகழ்த் தினார். இந்த குழு 8 நாள் பயணத்திட்டத்தில், 127 முறை நம் பூமியை வட்டமடித்து சுற் றியது.அந்த வான்வெளி பய ணத்தில் ஜப்பானியர் 44 பேரும், மற்றும் அமெரிக் காவைச் சேர்ந்த உயிரி அறிவி யல் மற்றும் சோதனை க்கான கருவிகளும் கொண்டு செல் லப்பட்டன.

அந்த பயணத்தில் ஜெமி சன், பறக்கும்போது மனிதர் களின் எலும்பு செல்களில் ஏற் படும் மாற்றம் குறித்தும் ஆராய்ச்சி தேடல் பொறுப்பில் இருந்தார். எட்டாவது நாள் விண்வெளி யில் பறக்கும்போது,சுழியன் ஈர்ப்பு விசையில் ( ஷ்நசடி பசயஎவைல) விண்வெளி நோயும், எலும்பு இழப்பும் நிகழ்ந்துள்ளது என்று கண்டுபிடித்தார். ஜெமிசன் தனது முதல் விண்வெளி பறப் பில், 190 மணி, 30 நிமிடம் 23 நொடிகள் வானில் பறந்தார். அது மட்டுமல்ல, விண்வெளி யில், விண்ணூர்தியில் பறந்த முதல் கறுப்பின/ஆப்பிரிக்க, அமெரிக்கப் பெண் இவர் மட் டும் தான். ஆனால் 1993 ல் நாசா வை விட்டு வெளியேறினார். வளர்முக நாடுகளுக்கான தொழில்நுட்பம் தயாரிக்கும் நிறுவனத்தில் இயக்குநராகச் சேர்ந்தார்.ஜெமிசன் தனது வாழ்க்கையை மிகவும் அர்த்த முள்ளதாக மாற்றியிருக்கிறார். மக்களுக்கு உழைப்பதில் செல விட்டு அதில் மகிழ்வை, நிம் மதியைக் காண்கிறார் ஜெமி சன்.

நன்றி - மாற்று 

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்