/* up Facebook

Dec 11, 2011

பெண்களின் உடல்சார்ந்த மொழி - பவளசங்கரி


பெண்களின் உடல்சார்ந்த மொழியை இலக்கியமாகக் கொடுக்கும்போது, வாசகர்கள் விரும்பிப் படிக்கிறார்களே, அது குறித்த மாற்றுக்கருத்து ஏதேனும் உண்டா?”

திருமதி கமலாதேவி அரவிந்தாஷன் அவர்களிடம் ஒரு மலையாளக் கருத்தரங்கில் கேட்கப்பட்ட மேற்கண்ட கேள்விக்கு, அவர் அளித்த நச்சென்ற பதில்கள் மிக வெளிப்படையானதும் மற்றும் மிக யதார்த்தமானதும் கூட!

”இவள்--புதுமை என்பதால் மட்டும் வாசகர்கள் விரும்பிப் படிக்கவில்லை.
பெண்களின் உடல்மொழி சுவாரஸ்யம் என்பதாலும் படிக்கிறார்கள். அதுவே சொல்லப்படும் விதத்தில் சொல்லும்போது, நடையழகின் லயத்துக்காகவும் ,வாசிப்பு சுவாரஸ்யத்துக்காகவும் கூடத்தான் வாசிக்கிறார்கள். பெண்மொழியில் உடல் பற்றிய பார்வை, நடை எப்படி விழுந்திருக்கிறது என்றறியும் ஆவலுக்காகவும் தான் வாசிக்கிறார்கள் ” - என்ற கமலாவின் வாதம் ஏற்றுக் கொள்ளும்படியாகவே இருந்தாலும்,

இந்த அவருடைய பதில் வெறும் மேலோட்டமான வெளிப்பூச்சு சாகசம் அல்ல என்பதை அடுத்து வரும் ஆய்வுகளில், தன் ஆழ்ந்த சிந்தனையின் மூலம் நிரூபித்துள்ளார், இந்த கொஞ்சு தமிழ் நாயகி.

நூற்றாண்டுகால பெண் எழுத்தாளர்களை வெகு லாவகமாக, மூன்று காலகட்டங்களாகப் பிரித்து, கிருபை சத்தியநாதன் முதல் கனகலதா வரை பல்வேறு பெண் எழுத்தாளர்களின் எழுத்துக்களின் ஊடே சென்று அலசி ஆய்ந்துள்ள விதம் சுவாரசியம்.

conservative feminism, modernism, இவையனைத்தும் பற்றி நல்ல தெளிவான சிந்தை உடையவராயினும், தேவையற்ற கிரீடத்தைத் தூக்கி அணிவிப்பவராக இல்லாமல், logical bias என்பதே துளியும் தீண்டாமல், அணுகியிருக்கும் இவரின் ஆய்வு அற்புதம்............

ஆண்களின் பார்வையில் பெண்மை என்ற தலைப்பில் அமரர் சிட்டி, நா.கண்ணன், ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், அகிலன், ப்ரபஞ்சன், குஷ்வந்த் சிங், இலா வின்செண்ட்,இப்படி பல்வேறு எழுத்தாளர்களின் பல் வேறு பரிமாணங்கள் கொண்டு ஒரு சிறுகதையின், இலக்கணம், இலக்கியம், என்பதெல்லாம் மீறி நல்ல வாசிப்பு அனுபவத்துடன், மன நிறைவையும் அளிக்கக் கூடிய சிறுகதையை பாகுபடுத்திக் காட்டியுள்ள பாங்கு வெகு நேர்த்தி கமலம்.

”இன்று வெகுஜன பத்திரிகைகளில் இலக்கியம் படைக்கும் எழுத்தாளர்கள் பலரும் கவனிக்கத்தவறும், அல்லது கைவிடும் உத்தி உருவகம். ஒரு சிறுகதைக்கு, உத்தி, உள்ளீடு, எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம், புனைவியல் இலக்கியத்துக்கு உருவகம்.” - என்பதற்கான ஒப்புக் கொள்ளும்படியான வாதம் இன்றைய அரை வேக்காட்டு எழுத்தாளர்களுக்கு அழகான அறிவுரை.

சிந்து மொழி, காஷ்மீரி மொழி தமிழ் மொழி, கன்னடம் தலித் இலக்கியம் இப்படி பல்வேறு கலாச்சார அடிப்படையில் சிறுகதைகளை ஆய்வு செய்தாலும், நல்ல சமுதாய நோக்கம் கொண்ட சிறுகதையே நிலைத்து நிற்கக் கூடியவை என்பதற்கான ஆதாரங்களும் அளித்துள்ளார், இந்த ஆய்வாளர்.

கோதை நாயகி, லட்சுமி, கிருத்திகா, வைதேகி, என்று இவரின் ஆய்வுகளின்
பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

” சமூகப்பிரக்ஞையை அலசுவதும், மண்ணின் விழுமியம் கோலோச்ச எழுதுவதும், மட்டுமல்ல இலக்கியம். .தன்னுடைய சிந்தனையை வாசகர்களிடையே, கதையாடலாகக் கொண்டு வரும்போது, சமகாலப் பிரக்ஞையை, கதைமாந்தர்களின் உணர்வுகளோடு,, அப்படியே உள்வாங்கி எழுதும்போதுதான் , அந்த எழுத்து வாசகனைச் சென்றடைகிறது.” - ஒரு நல்ல சிறுகதைக்கான இலக்கணம் இதைவிட வேறு ஏதானும் இருக்குமா என்பது ஐயமே.........

இன்றைய சூழலின், பெண் விடுதலை, அவர்தம் ஆழ்ந்த சிந்தனை, நவீனத்துவம், கற்பு என்பதற்கான தெளிந்த வியாக்கியானம், இப்படி எந்த ஒரு சிறிய துகளும், இவர் பார்வையில் தப்பிக்கவில்லை.............HATS OFF TO YOU KAMALAM!!!

அன்புடன் பவளசங்கரி

நன்றி / கமலகானம்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்