/* up Facebook

Dec 7, 2011

சர்வதேசரீதியாக அதிகரித்து வரும் பெண்களுக்கெதிரான வன்முறைகள் - காயத்திரி நளினகாந்தன்

பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாது ஒழிக்கும் சர்வதேச வாரத்தில் உலகில் உள்ள பெண்களில் நூற்றுக்கு முப்பது பேர் ஏதாவது ஓரு காரணத்தினால் ஏதாவது ஒரு வகையில் பாலியல் துன்புறுத்தல் அல்லது வன்முறைக்கு உள்ளாகின்றனர் என்பது அண்மைக்கால ஆய்வு ஒன்று கூறுகின்றது. இன்நிலைமையானது பெண்களின் உரிமைகள் மற்றும் மனித உரிமைக்கான அபிவிருத்தியின் செயற்பாடுகள் பூச்சயத்தில் இருந்து மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டியுள்ளது என மனித உரிமை செற்பாட்டாளர்களின் கருத்தாகின்றது.இன்நிலையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்கும் சர்வதேச தினமாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் நவம்பர் 25 திகதியில் இருந்து டிசம்பர் 10 திகதி வரை அதாவது மனித உரிமைகள் தினம் வரை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினமாகப்பிரகடனம் செய்திருக்கின்ற இத்தருணத்தில் யாழ் அரசாங்க அதிபர் திருமதி இமேல்டலா சுகுமாரின் பெண்கள் வன்முறைதொடர்பான அறிக்கையும் திருகோணமலை பெண் ஆசிரியாரின் கொலையும் இலங்கையில் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளின் வடிவங்களை பறைசாற்றி நிற்பதோடு மட்டும் இன்றி வன்முறைகளை ஒழிக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைபற்றியும் ஆராயவேண்டியது காலத்தின் தேவையாகும்.

டொமினிக்கன் குடியரசில் 1960 நவம்பர் 25 இல் மிராபெல் சகோதரிகள் என அழைக்கப்படும் மூன்று சகோதரிகள் அவர்களின் அரசியல் செயற்பாடுகளுக்காக அந்நாட்டின் அன்றைய ஆட்சியாளர்களால் படுகொலை செய்யப்பட்டனர்.சமூகத்தில் பாதிக்கப்படும் பெண்களுக்கெதிராகவே இவர்கள் சிறப்பாகக் குரல் கொடுத்தவர்கள் “மறக்கமுடியாத வண்ணத்துப் பூச்சிகள்” என்று பின்னர் உலகில் பெயர் பெற்ற இந்த சகோதரிகள் இலத்தீன் அமெரிக்காவில் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கொடுமையின் சின்னமாக மாறினார்கள்.அவர்கள் படுகொலை செய்யப்பட்ட தினத்தையே ஐக்கிய நாடுகள் சபை பெண்களுக்கெதிரான வன்முறைகளை ஒழிக்கும் தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது.அன்றைய தினத்தைத் தொடர்ந்து 16 நாட்களுக்கு பாலியல் வன்முறைகளுக்கு எதிரான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்கு உலகளாவிய ரீதியில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.இந்தச் செயற்பாடுகள் சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10 ஆம் திகதி வரை தொடரும்.
“பெண்களுக்கு எதிரான வன்முறைகள் என்று சொல்லும்; பொழுது உலகில் நாகரீகமான சமுதாயம் என்று எதுவுமேயில்லை” என கோபி அனான் ஒரு முறை வருத்தம் தொனிக்க சொல்லி இருந்தார்.
பெண்களுக்கெதிரான வன்முறை அவர்களின் உடல் ரீதியாகவோஇ உளரீதியாகவோ ஏற்படுத்தப்படும் துன்புறுத்தல் ஆகும் இதில் பல வன்முறைகள் பெண் என்ற காரணத்தால் சமூகம் ஏற்றுக்கொண்டு நியாயப்படுத்துவவைகளே அதிகமானவை. பல குறிப்பாக வீட்டு வன்முறைகள்இபாலியல்பலத்காரம் பாலியல்சுரண்டல்கள் பாலியல் துஸ்பிரயோகம் என்பன சமூகத்தினால் அங்கிகரிக்கப்பட்டவையாகவே இன்னமும் எமது சமூகத்தில் காணப்படுகின்றது.
இன்நிலை தெற்காசியா நாடுகள் பலவற்றின் பாரீய பிரச்சனையாகப்பார்க்கப்படுகின்றது.அதன் விளைவாக பெண்கள் மட்டும் இன்றி ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பாரிய பின்;னடைவை ஏற்படுத்தியுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. பெண்களுக்கெதிரான வன்முறை உலகில் ஒரு பெரும் பிரச்சினையாக இருக்கின்றபோதிலும் அதனை பெருமளவுக்குப் பொருட்படுத்தாத தன்மையும் அதற்கான முக்கியத்துவத்தை உணர்ந்து செயற்பாடுகளை மேற்கொள்ளதா நிலையுமே காணப்படுகின்றது.

குறிப்பாக போர் இடம்பெறும் இடங்களில் பெண்களை போர் ஆயுதமாக பாவிக்கப்படுவது பாரதூரமான பெண்களுக்கு எதிரான வன்முறையாகும்.அரச படைகள் அல்லது ஆயுதமேந்திய குழுக்கள் பாலியல் பலாத்காரதில் ஈடுபடுதல் அல்லது விபச்சாரத்திற்கு உட்படுத்துதல் மற்றும் நிர்வாணமாக கொலை செய்தல் போன்றன போர்பாலியல் குற்றங்கள் என சர்வதேச மனிதாபிமான சட்டம்(ஐவெநசயெவழையெட ர்ரஅயnவையசயைn டயற) கூறுகின்றது.இக்குற்றங்கள் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யும் உரிமையை பாதிக்கப்பட்டவர்க்கு வழங்குகின்றது எனவே உலகில் எந்த மூலையிலும் யுத்தத்தின்போது பாலியல் துன்புறுத்தலை இராணுவம் அல்லது ஆயுதக்குழுக்கள்மேற்கொண்டாலும் உள்நாட்டுப்பொறி முறைகள் ஊடாக நீதிவேண்டி செல்லவேண்டிய அவசியமில்லாது நேரடியாக சர்வதேச நீதிமன்றத்திற்கு செல்லும் உரிமையை பாதிக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச சட்டம் வழங்குகின்றது.
இருப்பினும் உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஒரு பெண் வீதம் இராணுவத்தினரால் வன்முறைக்குட்படுத்தப்படுகின்றார்கள் என ஆய்வு ஒன்று கூறுகின்றது. கொங்கோவில் இடம் பெற்ற போரில் யுவிரா எனும் இடத்தில் ஒவ்வொரு நாளும் 40 பெண்கள் வீதம் 2002 ஆம் ஆண்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர்இ உகண்டாவில் 1994 ஆம் ஆண்டு இடம்பெற்ற இனவன்முறையில் 5 லட்சம் வரையிலான பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாகியிருக்கின்றனர்.மேலும் ஈராக்கில் அமெரிக்கப்படையினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண்கள் தகவல்களின்படி 600 பேர் என்று சொல்லப்படுகிறது.

இலங்கையை பொறுத்த வரையில் யுத்தத்தினால் பாலியல் வல்லுறவுக்குட்பட்டவர்களின் சரியான கணக்கெடுப்பு சரியான தகவல்களை வெளிக்கொணராத நிலையிலும் கணிசமான அளவு பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது வெளிப்படையாகும் மேலும் இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறையின் வடிவம் குடும்பம் சமூகம் அரசு மற்றும் இராணுவம் என வன்முறையின் பரப்பு அகன்று விரிந்து காணப்படுகின்றது. பெண்களுக்கு எதிரான வன்முறைச்சம்பவங்கள் முன்னைய காலங்களைவிட மிகக்கூடுதலாக கடந்த வருடம் அதிகரித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.பெண்களுக்கு எதிரான வன்முறைச்சம்பசங்கள் கடந்த வருடம் 1398 ஆக பதிவு செய்யப்பட்டுள்ள அதேநேரம் இரத்தினபுரி மாவட்டத்தில் ஆகக்கூடுதலான சம்பவங்களும் மன்னார் மாவட்டத்தில் மிகக்குறைவான சம்பவங்களும் இடம் பெற்றுள்ளதாக பொலிஸ்தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பெண்களுக்எதிரான வன்முறை தொடர்பாக பல சட்;டங்கள் உள்நாட்டிலும் சர்வதேசரீதியாகவும் உருவாக்கப்பட்டு செயற்படுத்தப்படும் வேளையிலும் வன்முறைகளை குறைப்பதற்கான பொறிமுறைகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உருவாக்கப்பட்டபோதும் பல செயற்திட்டங்கள் நாடளாவி ரீதியாகவும் தெற்காசிய ரீதியாகவும் செயற்படுத்தினாலும் இன்று வரை பெண்களின் நிலையில் குறிப்பிடத்தக்கமாற்றங்கள் உருவாகாது இருப்பதற்கு பலகாரணங்கள் உண்டு அவையாவன பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழி;த்தல் தொடர்பான செயற்பாடுகள் சமூகமட்டத்தில்குழுக்களிடையே கொண்டு செல்லப்படுவதற்கான சரியான மார்க்கம் கட்டியெழுப்பப்படவில்லை என்பதை யாராலும் மறுக்க முடியாது மேலும் செயற்பாட்டளார்களுக்கு இடையில் சரியான ஒருங்கிணைப்பு(ஊழழசனiயெவழைn) காணப்படாமை போன்றன முக்கியமானவையாகும்.
எது எவ்வாறு இருப்பினும் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்கவேண்டுமாயின் பெண்கள் தொடர்பாக சமூகம் கொண்டுள்ள படிமம் மாற்றியமைக்கப்படவேண்டும்.அம்மாற்றம் ஒவ்வொரு மனிதனின் நடத்தை மற்றும் மனப்பாங்கில் உள்ளாந்த மனமாற்றம்(ளநடக வசயளெகழசஅயவழைn) வரவேண்டும்.அப்போது தான் நிலையான அபிவிருத்திக்கு சாத்தியாமான சமூகத்தைக்கட்டியெழுப்ப முடியும் என்பதே யதார்த்தமாகும் எனவே பெண்கள் அமைப்புக்கள் சமூகமட்டத்தில் இவ்விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமாகவும் வன்முறையாளர்களை சமூகம் அடையாளம்கண்டு சட்டத்தின் முன் தண்டனை வழங்க காத்திராமன நடவடிக்கைகள் மேற்கொள்வதன் மூலமாகவே பெண்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்கு கொண்டுவரமுடியும்.


தினக்குரல் 04.12.11 பிரசுரிக்கப்பட்டது

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்