/* up Facebook

Dec 31, 2011

ஈழப் பெண்ணின் கதையை சொல்லும் மிதிவெடி!


மிஸ்டிக் பிலிம்ஸ் அவுஸ்ரேலியா சார் பில் அவுஸ்ரேலியா வாழ் தமிழர் ஆனந்த் மையூர் ஸ்ரீநிவாஸ் தயாரித்து இயக்கி யுள்ள ஈழத்தமிழர்களை பற்றிய படம் மிதிவெடி.

இந்த கதை இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்கள் கண்ணிவெடிகலாள் எப்படி பாதித்து கொண்டிருக்கின்றனர் என்பதை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது.

இது சர்வதேச திரைப்பட விழாவிற்கும், உலக சினிமாவிற்கும் கொண்டு செல்லும் நோக்கில் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

திரைக்கதை ஆனந்த் மையூர் ஸ்ரீநிவாஸ். ஒரு ஈழத்து இளம் பெண் கைகுழந்தை யுடன் கண்ணிவெடி நிறைந்த இடத்தில் வந்து மாட்டிக்கொள்கிறாள். அவளை இலங்கை இராணுவ அதிகாரி, விடுதலை ப்புலி உறுப்பினர் என்று சந்தேகப்பட்டு பிடித்து வைத்திருக்கின்றார்கள்.

அந்த ஈழத்து பெண் கண்ணிவெடி நிலத்திலிருந்தும் அந்த இராணுவ அதிகா ரியிடம் இருந்தும் தப்பிக்கிறாளா இல்லை யா என்பதே கதை. இதில் இராணுவ அதிகாரியாக டேனியல் பாலாஜியும், ஈழத்து பெண்ணாக நீலீமா ராணியும் நடித்து உள்ளனர்.

...மேலும்

Dec 30, 2011

தேவதைகள் - கவின் மலர்


நான் சென்னை வந்த புதிது. ஹாஸ்டலில் தங்கி இருந்தேன். சென்னைக்கு வந்த மூன்றாம் மாதத்தில் என் பிறந்தநாள் வந்தது. அப்போது ஈ-காமர்ஸ் கோர்ஸ் படித்துக்கொண்டிருந்தேன். எனக்கு வகுப்பு இருந்ததால் நான் ஊருக்குச் செல்லவில்லை. நினைவு தெரிந்த நாள் முதலாய் அம்மா அப்பாவோடு தான் என் பிறந்தநாளைக் கழித்திருக்கிறேன்.

என் முதல் பிறந்தநாளை அப்பாவும் அம்மாவும் மிக விமரிசையாகக் கொண்டாடியதாகச் சொல்வார்கள். எனக்கும் என் தம்பிக்கும் ஆண்டுதோறும் வரும் பிறந்தநாள் மட்டுமே எங்கள் வீட்டின் பண்டிகை. அப்பா இசுலாமியக் குடும்பத்திலும் அம்மா இந்துக் குடும்பத்திலும் பிறந்தவர்கள். அதனால் எங்கள் வீட்டில் பண்டிகைகள் கொண்டாடுவது என்பதில் பல சிக்கல்கள் உண்டு. அப்பா தனது மாணவப்பருவத்தில் இருந்தே திராவிடர் கழகத்தில் இருந்ததால் மதம் தொடர்பான விஷயங்களுக்கு கடும் எதிரியாக இருந்தார். அதனால் அம்மாவின் தீபாவளி கொண்டாடும் ஆசைக்கு அப்பாவால் நீரூற்றி வள்ர்க்க முடியவில்லை. அம்மா தீபாவளியைக் கொண்டாட முனைவார்கள். அப்பா அதற்கு ஒத்துழைக்க மாட்டார். அதனால் எங்களுக்கு பண்டிகை நாட்களின் சந்தோஷம் என்பது பிறந்தநாளில் கிடைப்பதுதான்.ஆனால் தீபாவளிக்கு எல்லோரும் வெடி வெடிக்கும்போது நாங்களும் சிறுவயதில் வாங்கித்தரக் கேட்டு அடம்பிடித்து வாங்கி வெடித்ததுண்டு. இப்படி ஒரு சூழலில் இருந்ததாலோ என்னவோ அம்மாவும் அப்பாவும் எங்கள் பிறந்தநாளை சந்தோஷமாகக் கொண்டாடுவார்கள்.

எல்லோர் வீட்டிலும் பொங்கலுக்கு வீட்டை சுத்தம் செய்வார்கள் என்றால், எங்கள் வீட்டில் மட்டும் என் பிறந்தநாளுக்கு முன்பும், தம்பியின் பிறந்த நாளுக்கு முன்பும் தான் அம்மாவும் அப்பாவும் விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டை சுத்தம் செய்வார்கள். தஞ்சாவூர் சிலோன் தாசன் பேக்கரியில் முன்பே ஆர்டர் செய்யப்பட்ட கேக்கை முதல் நாள் அன்று சென்று வாங்கிக்கொண்டு வருவோம். மறுநாள் காலையில் கேக் வெட்டி கொண்டாடிவிட்டு அக்கம் பக்கம் வீடுகளில் உள்ளவர்களுக்கெல்லாம் கொடுத்துவிட்டு, பள்ளிக்குக் கிளம்பிச் சென்று அங்கே எல்லோருக்கும் சாக்லேட் கொடுத்துவிட்டு அப்படியே திரும்பி விடுவேன். அன்றைக்கு பள்ளிக்கு விடுமுறை எடுத்துக் கொள்வோம் நானும் தம்பியும். இது ஒவ்வொரு ஆண்டும் தொடரும்!

எனக்கு பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போது கேக் எல்லாம் வெட்டி கொண்டாடுவதற்கு ஏனோ விருப்பமில்லாமல் போனது. அடம்பிடித்து கேக் வெட்டமாட்டேன் என்று சொல்லி கேக்- ஐத் தவிர்த்தேன். ஆனாலும் அந்த நாளின் விசேஷத்தன்மை எங்கள் வீட்டில் அதன்பிறகும் கூட குறையவில்லை. நிச்சயமாக புதுடிரஸ் எடுத்து விடுவோம். இப்படியே பழக்கப்பட்ட நான் சென்னைக்கு வந்து புதிய ஊரில் அம்மா அப்பாவை விட்டுக் கொண்டாடும் முதல் பிறந்தநாள். அன்றைக்கு அப்பா தொலைபேசியில் அழைத்து வாழ்த்து சொல்லத் தொடங்கி முடியாமல் அழுதார். ’’இத்தனை வருஷத்தில் உன்னைப்பிரிந்து இருந்ததில்லையே....ஊருக்கு இன்னைக்கு வந்திருக்கலாம்ல..’’ என்று விசும்பலுக்கிடையே சொல்ல, எனக்கும் அழுகை வந்தது. அம்மாவும் போனில் அழுதார். நான் போனில் அழுவதைப் பார்த்த என் அறைத் தோழிகள் காரணம் கேட்டபோது சொன்னேன். ‘இவ்வளவு ஃபீல் பண்ணுவாங்கன்னு தெரியும்ல உனக்கு. ஊருக்குப் போயிருக்கலாம்ல..?’’ என்றனர் கோரஸாக. ’கிளாஸ் இருக்கு. அதான் போகல’ என்று அவர்களிடம் சொன்னாலும், உள்ளுக்குள் இந்தக் கொண்டாட்டங்களை நான் வெறுக்கத் தொடங்கி இருந்தேன் என்பது தான் முக்கியக் காரணம். ஆனாலும் நான் அம்மாவும் அப்பாவும் கண்கலங்கியதை எண்ணிக் கலங்கினேன். உடனே அம்மாவையும் அப்பாவையும் பார்க்க வேண்டும் போல் இருந்தது. கஷ்டப்பட்டு அந்த நினைப்பைப் புறந்தள்ளினேன். அப்போது என் அறைத்தோழி அகிலா கேட்டாள் ‘உங்க வீட்டில் ரொம்பப் பெரிசா பிறந்தநாளைக் கொண்டாடுவீங்களா?’’ என்று கேட்க, எங்கள் வீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய கதைகளை அறைத்தோழிகளுக்கும் சொல்லி விட்டு வகுப்புக்குப் புறப்பட்டேன்.

அன்றைக்குப் பூராவுமே வகுப்பில் அரைகுறையாகவே கவனித்தேன். அப்பா - அம்மாவும் காலையில் அழுதது அன்றைய நாளை என்னால் உருப்படியாக எதுவும் செய்ய முடியாத நாளாக மாற்றி விட்டது. மாலை வரை அப்பாவின் விழும்பலும், அப்பாவின் தொண்டையிலிருந்து வெடித்துக் கிளம்பிய அழுகையும் மனதைப் பிசைந்தவாறே இருந்தன.நேரே ஹாஸ்டலுக்கு வரப் பிடிக்காமல் எங்கெங்கோ சுற்றிவிட்டு ஏழரை மணியளவில் ஹாஸ்டலுக்கு வந்தேன். மிகவும் சோர்ந்து போய் வந்தபோது பூட்டியிருந்த அறைக்கதவைத் திறக்க, சாவியைத் தேடும் சக்தி கூட அற்றவளாய் இருந்தேன். ஒரு வழியாய சாவியைத் தேடி எடுத்து கதவைத் திறந்தபோது, அறையெங்கும் பரவியிருந்த இருட்டை மேலும் அழகாக்க, கட்டிலின் மேல் வைக்கப்பட்டிருந்த கேக்-ம் அதில் எரிந்து கொண்டிருந்த ஒற்றை மெழுகுவர்த்தியும் என்னை வரவேற்றன. நான் ஸ்தம்பித்து நின்றேன். ‘ஹேப்பி பர்த்டே கவின்’ என்கிற வாசகம் பொறிக்கப்பட்ட அந்த கேக் என்னைப் பார்த்து சிரிக்க அறையில் ஒவ்வொரு இருட்டு மூலையிலிருந்தும் ‘ஹேப்பி பர்த்டே டூ யூ’என்று பாடியபடியே தேவதைகளாய் வெளிவந்த என் தோழிகளைப் பார்த்தபோது எதுவும் புரியாமல் நின்றேன். என் கைகளை எடுத்து தன் கைகளுக்குள் பொத்தியபடி மதுரிமா குழந்தைக்குச் செய்வது போல் என் கைகளைப் பிடித்து கேக்கை வெட்டச் செய்தாள். அவர்கள் எனக்கு ஊட்டி விட, பொங்கி வந்த கண்ணீரோடு சிரித்துக் கொண்டே நானும் அவர்களுக்கு ஊட்ட, வாழ்க்கையின் இன்னொரு பக்கத்தை உணரச் செய்த தருணங்கள் அவை.

சென்ற ஆண்டு 2010, பிறந்தநாளான டிசம்பர் 3 அன்று முழுவதும் நாள் முடிந்து மறுநாள் விடிந்த பின் அப்பாவிடமிருந்து போன்...’’கவின்! எப்படி மறந்தேன் என்றே தெரியவில்லை. நேத்து வாழ்த்து சொல்லவே இல்லை. எப்படி மறந்தேன்னே தெரியலை..அம்மாவும் கூட மறந்துடுச்சு....வயசாயிடுச்சுப்பா எங்க ரெண்டு பேருக்கும்...இல்லையா?’’ என்றார் வேதனை கலந்த ஆற்றாமையோடு. எனக்கு அப்போதும் கண்ணீர் முட்டியது!

இந்த ஆண்டு சரியாய் 12 மணிக்கு அம்மாவும் அப்பாவும் அழைத்தார்கள். ‘போன வருஷம் மாதிரி மறந்துடக் கூடாதுல்ல.. அத்னால நினைச்சுக்கிட்டே இருந்து போன் பண்றோம்”” என்றார்கள்.

அன்றைக்கு நான் சென்னைக்கு வந்த புதிதில் எனக்கு பர்த்டே கேக் வெட்டிய தோழிகள் இன்றைக்கு கல்யாணமாகி, குடும்பம், குழந்தைகள் என்று செட்டிலாகி விட்டார்கள். அவர்களில் ஒருவருடைய வாழ்த்தும் இன்று எனக்குக் கிட்டவில்லை. அவர்களில் சிலர் இப்போது தொடர்பறுந்து எங்கே இருக்கிறார்கள் என்பது கூடத் தெரியவில்லை. அதற்கு அவர்கள் பெண்ணாய்ப் பிறந்ததைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்? பெண்களுக்கு மட்டும்தான் இப்படியான தற்காலிகத் தோழமைகள் அதிகமாக இருக்கின்றன. நிரந்தரமாக்கிக் கொள்ள அவர்களை ஃபேஸ்புக்கில் தேடிக்கொண்டே இருக்கிறேன்.இன்னும் தேடுகிறேன்! தேடுவேன்!
...மேலும்

Dec 29, 2011

கூண்டுக் கிளிகள் - பிரேமலதாகூண்டில் கிளி
படபடத்தது.
சிறகடித்து துடிதுடித்தது.
சிறகில் வண்ணங்கள்
கழுத்தில் அணிகலன்
அணியப்படும் வரை .
பின்
சொன்னதைச்..........
சொல்லத் தொடங்கிவிட்டது.


கூண்டு திறக்கப்பட்டது.
பறந்த கிளி மீண்டும்
வழியறியாது
கூண்டிற்குள் அமர்ந்தது.

சிந்தித்து......சிறகடித்தது
கூண்டைத்தூக்கிப்
பறந்தது.

மலைகளுக்கிடையில்
வெகுஉயரத்திலிருந்து
கூண்டை விடுத்தது
கூண்டுக்கம்பிகள்
உருத்தெரியாமல் சிதறியதைப்
பரவசத்துடன் பார்த்தது.


வழியறிந்தது பறந்தது,
தகர்ப்பதற்குக்.......
கூண்டுகளைத் தேடி.........‘!

...மேலும்

Dec 28, 2011

தீர்ப்பு ...! - ஆர்த்தி வேந்தன்


1975 ஜூன் 12 பிரதமர் இந்திராவின் இல்லத்தில் உள்ள அவரது அலுவலகம். அவரது மூத்த அந்தரங்க செயலாளர் கேசன் அலுவலகத்தில் வைக்கபட்டுள்ள ஒவ்வொரு டெல்லி பிரிண்டர் இயந்திரமாக பதத்துடன் ஓடி பார்த்து கொண்டிருக்கிறார். அறையில் மயான அமைதி.

ஏன்?அன்று முகியமனதோர் செய்தி வரவிருந்தது. அதற்காக தான் கேசன் அமைதியற்று காணப்பட்டார். 1971 நடைபெற்ற நாடாளு மன்ற தேர்தலில் இந்திரா காந்தி தேர்ந்தெடுக்க பட்டது செல்லாது என்று அறிவிக்க கோரி ராஜ் நாராயண் தாக்கல் செய்திருந்த மனு மீது அலகாபாத் நீதிமன்றத்தில் நீதிபதி ஜக் மோகன் லால் சின்கா தனது தீர்ப்பை வழங்க விருந்தார். நேரம் பத்துமணியை நெருங்கி கொண்டு இருந்தது. இன்னும் நீதிபதி அவர்கள் இல்லத்தில் இருந்து கிளம்ப வில்லை என்ற செய்தி கேசவனுக்கு கிடைத்து இருந்தது.

நீதிபதி சின்கா அற்றே மாறுபட்ட ஒரு மனிதர் என்று நினைத்தார் கேசன். ஒவ்வொருவருக்கும் ஒரு விலை உண்டு. ஆனால் சின்காவுக்கு கிடையாது. ஆசை வார்த்தைகளுக்கு மசிய வில்லை. அழுத்தங்களுக்கும் பணியவில்லை.
உ. பி. யை சேர்ந்த இந்திரா காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அலகாபாத் செனட்டரு நீதிபதி சின்காவை சந்தித்தார். பேச்சினிடையே அவர் நீதிபதியை பார்த்து 5 லட்சம் போதுமா என்ட்று சாதனமாக கேட்டார். சின்கா விடையளிகவில்லை. உயர்நீதி மன்றத்தில் அவருடன் பணியாற்றும் சக நீதி பதி ஒருவர் இந்த தீர்ப்புக்கு பின்னர் வெகுவிரைவில் சின்கா உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்பெறுவார் என்று தான் எதிர்பார்பதாக சின்கா விடமே கூறி பார்த்தார். சின்கா எதற்கும் மசியவில்லை.

தீர்ப்பை தள்ளிபோடுவதர்கான முயற்சிகளும் தோல்வி அடைந்தன. உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளார் பிரேம் பிரகாஷ் நாயர் Dehradun யில் அலகாபாத் உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியை சந்தித்தார். பிரதமர் வெளி நாடு சுற்றுபயனத்தை மேற்கொள்ளவிருபதால் அவர் திரும்பி வர வரை தீர்ப்பு தளி வைக்க வேண்டும் என்றும் ஏனென்னில் பாதகமான தீர்ப்பு வெளியாக நேரிட்டால் அது ஒரு இக்கட்டான நிலையை பிரதமருக்கு ஏற்படுத்தி விடும் என்று தலைமை நீதிபதியிடம் நாயர் எடுத்து கூறினார்.

தலைமை நீதிபதி இவ்வேண்டுகோளை சின்காவுக்கு அனுப்பி வைத்தார். மிகவும் எரிச்சலுற்ற நீதிபதி சின்கா உடனடியாக உயர்நீதிமன்ற பதிவாளரை தொலைபேசியில் அழைத்து தீர்ப்பை ஜூன் 12 ஆம் தேதி அன்று வழங்கப்படும் என்று அறிவிக்கையிட சொல்லிவிட்டார். ஏனெனில் ஜூன் 8 அன்று குஜராத் சட்ட மன்ற தேர்தல் நடை பெற விருபாதால் அதனை தீர்ப்பு பாதிக்க பட்டு விடும் என்ற காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை அவர் ஏற்கனமே ஏற்று தீர்ப்பை தள்ளி வைத்திருந்தார்.

நீதிபதிக்கும் அவரது ஸ்டெனோ கிராபரு க்கும் தவிர தீர்ப்பு குறித்த விவரம் எதுவும் கேசனுகோ அல்லது வேறு எவருக்கோ தெரியாது. தீர்ப்பை அறிந்து கொள்ள மத்திய உளவு துறை எடுத்த முயற்சியும் பலனளிகவில்லை. உளவுத்துறையை சேர்ந்த அதிகாரிகள் சிலர் டெல்லி யில் இருந்து அலகாபாத் சென்று நீதி பதி சின்காவின் ஸ்டெனோ கிராபர் நேகி ராம் நிகமுடன் பேசி பார்த்தார். ஆனால் அவர் தனது தலைவரான நீதிபதியை போல் இறுகமானவராக இருந்தார். அச்சுறுத்தல்கள் விட்டு பார்த்தனர். ஆனால் அதற்கு அவர் அஞ்சவில்லை. ஜூன் 11 ஆம் அன்று இரவு ஸ்டெனோ க்ராபரும் அவரது மனைவியும் அவர்களது வீட்டில் இல்லை.( காணாமல் பொய் விட்டனர்) அவர்களுக்கு குழந்தைகள் கிடையாது. காலையில் அவரது வீட்டுக்கு உளவு துறையினர் சென்ற பொது அங்கு எவருமே இல்லாததை கண்டனர். நீதிபதி சின்கா இறை நம்பிக்கை மிகுந்தவர். அவரது வீட்டுக்கு வெளியே ஒரு சாமியார் காணப்பட்ட தாகவும் அவர் எல்லாம் நல படியாக நடக்கும் என்று கூறியதாகவும் பிரதமர் அலுவலகத்துக்கு கிடைத்த தகவல் மட்டுமே நம்பிக்கை தரும் கீற்றாக இருந்தது. அவரும் உளவுத்துறை அதிகாரிகள் பலரும் நீதிபதியின் வீட்டுக்கு அருகில் நின்று பல நாட்களாக காத்து கிடந்தனர். ஆனால் சின்கா தனது ஸ்டெனோ கிராபர் யிடம் என்ன தீர்ப்பை தட்டச்சு செய சொல்லிர்பார் என்று அறிய முடிய விலை. தீர்ப்பின் நடைமுறை படுத்த வேண்டிய பகுதி சின்காவின் முன்னிலையில் ஜூன் 11 ஆம் நாளன்று தான் தட்டச்சு செயப்பட்டது. அவ்வேளை முடிந்தவுடன் நீதிபதி சின்கா தனது ஸ்டெனோ கிராபர் யை கணக்கான இடத்திற்கு போக சொல்லிட்டார்.

நீதிபதி சின்கா தனது முடிவுகளை தன்னிடமே வைத்து கொண்டார். விசாரணை நடைபெற்ற காலங்களிலும் அவரு எந்த விதமான சாய்வு கொண்டவர் என்பதை அறிய கடினமாக இருந்தது. ஒரு தரப்பிடம் இரண்டு கேள்விகள் கேட்பார். அதேபோலவே எர்ஹிர் தரப்பிடம் இரண்டு கேள்விகள் மட்டுமே கேட்பார். விசாரணை நான்காண்டுகள் நடை பெற்றது. 1975 ஆம் ஆண்டு மே 23 வழக்கு விசாரணை முடிவு பெற்றது. அன்றுயில் இருந்து அவர் தனது வீட்டை விட்டு வெளியே வரவே இல்லை அத்துடன் தன வீடில் எந்த தொலைபேசி அழைப்பையும் ஏற்று கொள்ளவில்லை.

நல உயரமும் 54 வயதும் நிறைந்தவரான சின்கா நேரடியாக நீதிபதி வந்தார். அவர் அறையின்னுள் நுழைந்ததும் நீதிமன்ற (பியூன் ) டவாலி நீதிமன்றத்துக்குள் நுழைந்து , 'எல்லாரும் கவனமாக கேளுங்கள். நீதிபதி அவர்கள் ராஜ் நாராயண் அவர்களின் மனுமீதான தீர்பை வழங்கும் பொது யாரும் கைதட்டி ஆரவாரம் செயகூடாது' என்று அறிவித்தார். நீதிபதியின் முன்னால் 258 பக்கம் தீர்ப்பு இருந்தது. இந்த வழக்கு தொடர்பாக எழுதப்பட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்த எனது முடிவுகளை மட்டுமே. நான் படிக்கச் இருகிறேன்.

அதனை தொடர்ந்து,' மனு ஏற்றுகொள்ள படுகிறது' என்று கூறினார். ஒரு கணம் திகைபூட்டும் அமைதி. அடுத்த கணம் கை தட்டல்கள் பிளந்தது. செய்தியாளர்கள் தொலை பேசியை நோக்கியும் உளவுத்துறையினர் தங்கள் அலுவலகம் நோக்கியும் ஓடினர்.
மணி 10 .02 கேசன் தனது அலுவலகதில் உள்ள யு. என். ஐ. செய்தி நிறுவனத்தின் டெலிப்ரின்ட்டர் செய்தியை அடிக்க தொடங்கும் ஒலிகேட்டார். திருமதி காந்தி தேர்தல் செல்லாது என்று செய்தியை கண்டார். எரிச்சல் அடைந்த கேசன் டெல்லி பிரிண்டர் இயந்திரத்தில் இருந்த காகிதத்தை கிழித்தெறிந்து விட்டு பிரதமரை பார்க்க அவர் அறைக்கு சென்றார்.

இந்திரா அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்க முடியாது. தேர்ந்தெடுக்க பட்ட பதவி ஏதும் வகிக்க தடை செயப்பட்டு உள்ளதாகவும் தீர்ப்பு வழங்க பட்டு உள்ளதாகவும் அதற்கு அடுத்த செய்தி வந்தது. .

குறிப்பு: இந்த கட்டுரையை இங்கு வெளியிடுவதன் நோக்கம் காங்கிரஸ் காரர்கள் எந்த நீதியையும் விலை பேச குடியவ்வர்கள். பேரறிவாளன் உட்பட மூவர் மரண தண்டனை விதிக்க சென்னை நீதி மன்றம் இடைகால தடை விதித்திருப்பதை நம்பி தமிழர்கள் ஏமாந்து விட கூடாது என்பதை விளக்கவே குல்தீப் நய்யார் நூலின் இப்பகுதி மீண்டும் தர படுகிறது)
(உலகு பத்திரிகையில் வந்த செய்தி)
...மேலும்

Dec 27, 2011

தமிழர்களின் உரிமைப்போராட்டங்களில் பெண்களின் பங்களிப்பு -காயத்திரி நளினகாந்தன்


தமிழ்தேசியத்திற்கான போரட்டமானது தற்போது அதன் வடிவம் மாற்றயமைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இத்தருணத்தில்; இனப் பிரச்சனைக்கான தீர்வை நோக்கிய நகர்வில் தமிழர்தரப்பில் முழுமையான மனித வளங்கள் உச்சமாக பயன்படுத்தப்பட்டனவா என்ற கேள்வி அவ்வப்போது பல செயற்பாட்டாளர்கள் மத்தியில் அடிக்கடி உருவாகிகொண்டிருக்கும் விடயமாகும். அதிலும் குறிப்பாக பெண்கள் தொடர்பான பார்வை எவ்வாறு அமைந்தது அவர்களின் பங்கு எவ்வாறு இருந்தது எனவும் அவை தற்போது சமூகத்தில் எவ்வாறான அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது என்பது தொடர்பான விடயங்களை இங்கு ஆராய வேண்டியது காலத்தின் தேவையாகும்.

கடந்த காலங்களில் தமிழ்த்தேசியத்தின் பயணம் இருபரிமாணங்களை கொண்டது அதில் ஐனநாயக அரசியல்; மற்றயது ஆயுதப்போராட்டம் இவ்விரு பரிமாணங்களிலும் பெண்கள் தமது பங்களிப்பை கணிசமான அளவு வழங்கினார்கள் என்பதில் மறுபேச்சிற்கே இடமில்லை இருப்பினும் அப்பங்களிப்பு காத்திரமானதாகவும் அது அவர்களின் சமூக விடுதலைக்கும் வழிகோலியதா என்பது சற்று சிந்தித்துதான் பதில்கூறவேண்டும்.

உலகவிடுதலைப்போரட்டத்தின் வரலாற்றிலேயே பெண்கள் ஆண்களுக்கு சமமாக பங்களித்த போராட்டம் எமது போராட்டம் என்பதை யாரலும் மறுக்கமுடியாது.தமிழர் வரலாற்றைப் பொறுத்தவரையில் இது ஒரு முக்கிய புரட்சிகர மாற்றமாகும்.பெண்கள் ஆயுதம் ஏந்தி எதிரிகளை தாக்கி போராட்டத்திற்கு வலுச்சேர்த்திருந்தார்கள்.ஆயினும் விடுதலைப்போராட்ட அமைப்புக்களில் பெண்கள் பங்களிப்புக்கள் சமூகத்தில் எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பது பல காரணிகளில் தங்கியுள்ளது சகல அமைப்புக்களும் ஆண்களின் தலைமையை முதன்மையாக கொண்டிருந்தன.எமது சமூகத்தி;ல் பெண்கள் தொடர்பாக காணப்படும் கருத்தியலை பிரதிபலிக்கும் கருத்தைக் கொண்டவர்களாகவே அவர்கள் காணப்பட்டார்கள.;அவ்வமைப்புகள் பெண்களுக்கான பாத்திரங்களையும் இந்த அடிப்பமையிலே வகுத்திருந்தார்கள் குறிப்பாக ஆவணப்பாதுகாப்பு மக்கள் தொடர்புசாதனங்களின் செய்திகளை கவனித்தல், இராணுவ நடவடிக்கைகளை கண்காணித்தல் ஏனைய ஆண் போராளிகளுக்கு சமைத்தல் செய்திகளை எடுத்துச்செல்ல முதலுதவிப்பயிற்ச்சி பெறுதல் பத்திரிகை விற்றல். உளவுப்பணிகளில் ஈடுபடல் அங்கத்தவர்களைச் சேர்த்தல் என சில பணிகளை வரிசைப்படுத்தலாம்.எந்த ஒரு அமைப்பிலும் முடிவுகளை மேற்கொள்ளக்கூடிய அதிகாரத்தைக் கொண்டவர்களாகவோ அல்லது தலமைத்தாங்கி நடத்தக்கூடிய பதவிகளில் பெண்களை அமர்த்தவில்லை என்பதோடு அதற்கான ஆரம்ப கட்ட முயற்சிகளைக்கூட எடுக்கப்பட வில்லை என்பதையும் சமூக அமைப்புக்களில் புரையோடிக்கிடக்கும் ஆணாதிக்க கட்டமைப்பை அழுத்தமாக இவ்வமைப்புகள் நிறுவியுள்ளார்கள் என்பதற்கு சான்று இன்று சமூகமயமாக்கப்பட்டுள்ள முன்னைநாள் பெண் போராளிகள் வாழ்வியல் முறை நாம் பார்க்கமுடியும்.

அவர்களின் வாழ்வியல் முறைகள் மற்றும் அவர்கள் தற்போது சமூகத்தில் வகிக்கும் வகிபாத்திரம் என்பவற்றை நாம் பார்ப்போம் ஆனால் போராட்டத்தில் பெண்களின் சேர்கையின் அதிர்வுகளை நாம் உணரமுடியும் போரட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தற்போது குறைந்த பட்சம் தமது கிராமங்களில் உள்ள சிவில் அமைப்புக்களையாவது தலமைதாங்க வேண்டாமா? அதற்கு முழுப்பொறுப்பையும் ஏற்பவேண்டியவர்களாக அவர்களை வழிநடத்திய அமைப்புக்களையே சாரும் இவர்கள் பெண்கள் பற்றிய தூரநோக்க சிந்தனையுடன் செயற்பட்டர்ர்களா என்பது இங்கு கேள்விக்குறியே இங்கு பெண்கள் போரட்டத்தில் செய்த பங்களிப்பு மற்றும் தியாகங்களில் எமக்கு விமர்சனம் இல்லை ஆனால் இதன் மூலம் சமூகத்தில் ஏற்பட்ட சமூகமாற்றம் பற்றிய தாக்கம் மிகக்குறுகியது.இதன் துரதிஸ்டம் என்னவென்றால் அவர்களில் பலர் வீட்டு வன்முறையிக்கு முகம் கொடுக்கின்றார்கள் குறிப்பாக கணவனால் அடித்து துன்புறுதப்படுபவர்களாகவும் சமூகத்தில் இலகுவில் பாதிக்கப்படக்கூடியவர்களாகவும் அவர்களுக்கு நடக்கும் வன்முறைகளை தடுக்க முடியாதவர்களாக மௌனித்து நிற்பதை இட்டு நான் வியந்து போனோன்.மேலும் பலர் மனஉறுதியை இழந்தவர்களாகவும் மற்றவர்களில்தங்கிவாழ்பவர்களாகவும் தற்கொலைமுயற்சி செய்பவர்களாகவும் காணப்படுகின்றார்கள்.இருப்;பினும் இவர்கள் போராட்டகாலங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை மேற்கொண்டவர்களுக்கு தண்டனை வழங்கியவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் இவர்களால் இன்று தமக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அடக்கு முறைக்கு எதிராகக் கூட குரல் கொடுக்க முடியாது இருப்பதற்கு காரணம் தமிழ் சமூகத்தில் பெண்கள் தொடர்பான கருத்தியல் மாற்றத்தையோ சமூகப்பார்வையிலோ பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை ஆனால் இவர்கள் காலத்தில் ஏற்பட்ட வன்முறைகளுக்கான தீர்வை தாங்கள் கொண்டிருந்த பலத்தினை அடிப்படையாக கொண்டும் சமூகம் இந்தப்பலத்தின் மீது கொண்டிருந்த பயத்தினாலும் பிரச்சனையை தீர்க்க முடிந்தது. ஆனால் அதோ பெண்கள் இன்று சமூகம் பெண்கள் தொடர்பாக காலம் காலமாக கொண்டிருக்கும் கருத்தியலுக்கு பயந்து இன்று காலம் கடத்துகின்றமை பெண்கள் தொடர்பாக சமூகமாற்றம் ஏற்படுத்தபடவில்லை என்ற கசப்பான உண்மையை காலம் உணர்த்தி நிற்கின்றது.இதற்கு உதாரணமாக மரபு ரீதியற்ற தொழில்களில்(மேசன் தச்சுவேலை இயந்திரம் திருத்துதல் .சாரதி) போரட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் பயிற்சி பெற்றும் அவர்களால் அதனை இன்று ஐPவனோபாயத்தொழில்களாகவும் வருமானத்தை அதிகமாக தரக்கூடிய தொழில்hகவும் செய்யமுடியாது சமூகத்திற்கு பயந்தவர்களகவும் சமூகம் கற்றுத்தந்த சாதாரணபெண்களைப்போல் மரபு ரீதியான தொழில்களையே செய்கின்றார்கள். இதனால் அவர்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்பவர்களாகவும் மற்றையவர்களின் வசை சொல்லுக்கு ஆளானவர்களாகவும் வாழ்கின்றார்கள்.இன்று சமூகசீர்கேடு இடம் பெறுகின்றது என்று அங்கலாய்ப்பவர்கள் இச்சீர்கேட்டிற்கு வறுமையே அடிப்படை என புரிந்தும் பெண்கள் தமதும் தமது குடுப்பத்தினதும் வயிற்றுப்பசியை போக்கவே வஞ்சிக்கப்படுகின்றார்கள் என்பதை தெளிந்து சமூக அக்கறையுடன் செயலாற்றி மரபுரீதியற்ற தொழில்களில் பெண்களை ஈடுவடுத்தவேண்டியது காலத்தின் தேவையாகும்.

அதேபோல் போராட்டத்தில் கற்றுக்கொண்ட பாடத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழ் அரசியலை முன்னெடுக்கும் அரசியல் கட்சிகள் பெண்கள் தொடர்பாக சமூக கருத்தியல் மாற்றத்தை உண்டு பண்ணும் வகையில் செயற்படவேண்டும்.தற்போதை நிலையில்; உயர்மட்ட பேச்சுக்குழுக்களில் பெண்கள் இடம் பெறசெய்யவேண்டும் மேலும் சிவில் சமூக அமைப்புக்ளிலும் பெண்கள் செயற்பாட்டு உறுப்பினர்களாக (யுஉவiஎயவந ஆநஅடிநச)ஆக செயற்படவேண்டும் அதற்காக சந்தர்ப்பம் மறுக்கப்படும் சந்தர்ப்பத்தில் பெண் தலைமைதாங்கும் அரசியல் கட்சிகளை உருவாக்குவது பொருத்தமாகும்.
...மேலும்

Dec 26, 2011

அழிக்கப்படும் நூலகங்களும் வார்த்தையை பின்தொடரும் என் நிழலும் .. - ஆர்த்தி வேந்தன்


அண்ணா நூற்றாண்டு நூலகம் இடம் மாற்றப்படுவது தமிழ்சமூகத்தின் அறிவார்ந்த பகுதியினரின் நெஞ்சங்களைக் கனலச் செய்துவிட்டது. நான் அந்த நூலகத்தின் சிறப்புகளைப் பற்றி இங்கே பேசப்போவதில்லை. அவை ஏற்கனவே பலமுறை பேசப்பட்ட அழிக்க முடியாத உண்மைகள். ஆனால் இந்த செய்தியைக் கேட்டபோது புத்ததகங்கள் என் அந்தரங்க வாழ்க்கையின் எத்தகைய பாத்திரத்தை வகிக்கின்றன என்பதைத்தான் திரும்பத் திரும்ப நினைத்துக்கொண்டேன். அவற்றை மீள நினைத்துக் கொள்வதன் வழியாகவே ஒரு மகத்தான நூலகம் சீர்குலைக்கப்படும் துயரத்தை என்னால் முழுமையாக உள்வாங்க முடியும்.

12 வருடம் கான்வென்ட் டில் படித்ததால் சாப்பிடுவதற்கு முன்பு, படிப்பதற்கு முன்பு, தூங்குவதற்கு முன்பு என்று தனித்தனியாகப் பிராத்தனைகள் சொல்லும் பழக்கம் சிறு வயதில் இருந்து உண்டு. நடுவில் பெரியாரும், கொஞ்சம் வாழ்க்கை அனுபவமும் கடவுள் மீது வைத்திருந்த நம்பிக்கையைப் பறித்துக் கொண்டு போய் விட்டாலும் பிரார்த்தனைகளை முணுமுணுக்கும் பழக்கம் மட்டும் போகவில்லை. கையில் சாப்பாட்டை எடுக்கும் முன்பே our father greatest glory of god என்ற வரி மனதில் ஓடிவிடுகிறது. நாத்திகம் பேசினாலும் பிரார்த்தனைகள் மனதில் ஓடிக்கொண்டேதான் இருக்கிறது. அதில் எந்த நம்பிக்கையும் இல்லை, அர்த்தமும் இல்லை. எல்லாம் பழக்கம் மட்டும்தான். எத்தனையோ முயற்சிகள். எதுவும் கை கூட வில்லை. இப்படி என்னை மீறி எனக்குளே ஒன்று செயல்பட்டுக் கொண்டு இருப்பது என் குற்ற உணர்ச்சியை அதிகரித்தது .என் இயலாமையின் உச்சகட்டமாக இருந்தது. ஆனால் என்னை ஜார்ஜ் எலியட்டின் Mill on the Floss ல் வரும் மாகியுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது ஏதோ ஒரு ஆறுதல் கிடைக்கும். சிறு வயதில் இருந்தே கலக குணம் உடையவளாகி , பெண்மைக்கு உரிய எந்த இலக்கணமும் அவளிடம் இல்லை. அப்பா, குடும்பம், வீடு,தோட்டம் என்று எல்லாம் இருந்த வரைக்கும் அவளின் சுயம் அவளை விட்டுப் போகவில்லை. எல்லாவற்றையும் இழந்து விட்டு முதன் முதலில் சமுகத்தின் சுட்டுஎரிக்கும் பார்வையில் விழும் போது தான் அவள் சுயத்தை இழக்கிறாள். தோற்றம் மாறினாலும், விருப்பத்தை எல்லாம் விட்டுக் கொடுத்து பொறுப்பாக மாறினாலும், அப்பாவின் விருப்பத்திற்கு ஏற்பவே நடந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாலும் , உள்ளுக்குள் அவள் விருப் பத்திற்கும் , சமுதாயத்தின் எதிர்பார்புக்கும் இடையில் போர் நடந்து கொண்டே இருந்தாலும் அவளின் கலக குணம் அவளை விட்டுப் போகவில்லை. அவளை மீறி நடக்கிற ஒரு விஷயம் அது. சிறு வயதில் கற்றுக்கொண்டது. என்னிடம் இருப்பது குறை அல்ல. இயல்பு தான் என்று தெரிந்து கொள்ள ஜார்ஜ் எலியட் 704 பக்கங்கள் எனக்கு த் தேவைப்பட்டது.

அப்பாவின் நெருங்கிய நண்பர் ஒருவர் குடும்பத்துடன் ஊரை விட்டுப் போக வேண்டிய சூழ்நிலை. வியாபாரத்தில் அவரை யாரோ ஏமாற்றி விட்டார். ஆனால் பழி, கடன் எல்லாம் இவருக்கு. ஒரே இரவில் எல்லாம் தலைகீழாக மாறியது. அடுத்து அடுத்து வரும் அவமானமும் கேள்விகளும் கற்பனை செய்தே பாதி உடைந்து போனார். பிரச்சினை தலைக்கு மேல் போனதால் உடனே ஊரை விட்டுப் போக வேண்டியதாயிற்று. தன்னை நம்பி இருப்பவர்களுக்கு தன்னால் முடிந்த வரை செய்து விட்டு அன்று இரவே அவரை ரயில் ஏற்றி விட்டு அடுத்த நாள் எதிர்பார்த்த பிரச்சினைகள், எதிர்பாராத பிரச்சினைகளை சமாளித்து விட்டு இரவு தாமதமாக வந்து இருக்கிறார். அவரை எனக்குத் தெரியும் கம்பீரமான மனிதர் ஒரே நாளில் உடைந்து போனதை நினைத்தால் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.. ஏன் ஊரை விட்டு ஓடணும்? அவர் தவறு செயவில்லை என்றால் இங்கே இருக்க வேண்டியது தானே என்று எல்லோரும் கேட்கும் கேள்வி எனக்கும் தோன்றியது.அப்பா ஒன்றே ஒன்று தான் சொன்னார். 'நல்லா வாழ்ந்தவர்கள் என்றைக்கும் தலை குனியக் கூடாது' என்றார். அப்போது எனக்குப் புரியவில்லை. இப்போது அந்த மனிதரை நினைக்கும்போது எல்லாம் 'வேறு வேறு மனிதர்களில்' வரும் ஜேக்கப் வாத்தியார் ஐயா தான் நியாபகம் வருவார். மிகவும் கம்பீரமாக வாழ்ந்தவர். எப்போதும் அவரைச் சுற்றி மனிதர்கள் இருந்தனர், அவருக்கும் பாராட்டு விழா எல்லாம் நடத்தினர். ஆனால் அவருடைய சர்வீஸ் ரெஜிஸ்டரில் ஏற்பட்ட தவறால் அவருக்குக் கிடைக்க வேண்டிய பணம் வராமல் அவர் மனம் உடைகிறார். பார்ப்பவர்களிடம் எல்லாம் தன்னுடைய சர்வீஸ் ரெஜிஸ்டரைப் பற்றியே பேசுகிறார். எல்லாரும் ஏளனம் செய்து அவரைத் தவிர்க்கின்றனர். அவரைப் பாராட்டிப் பரிசு அளித்தவர்கள் எல்லாம் இப்போது அவருக்கு மரியாதை தருவது இல்லை. கடைசியாக மன நல காப்பகத்தில் அவரை வலுக் கட்டாயமாகச் சேர்த்து விடுவர். தன் மனைவியைக் கூட மறந்து போய் அவரிடமே 'மேடம், என் பொண்ணுங்க கல்யாணம், எனக்கு ஒரு ஆபரேஷன். எல்லாம் நடந்தாகணும் மேடம். கொஞ்சம் யார்கிட்டயாச்சும் சொல்லி உதவி பண்ணுங்க மேடம்’ என்று அவர் சொல்வது மனதைப் பிளந்து விடும். சமூகத்தில் நன்றாக வாழ்ந்தவர்கள் சிறிய சரிவு ஏற்பட்டாலும் அதுவும் பாதி வாழ்கையைக் கடந்த வர்களுக்கு அது எத்தனை பாதிப்பு ஏற்படும்.பாராட்டு விழா, மரியாதை, தொழில் எல்லாம் இருக்கும் போது நம்முடன் இருக்கும் மனிதர்கள் இவற்றை எல்லாம் இழந்தால் இருக்க மாட்டார்கள், வளர்ச்சி எப்படி படிப்படியாக இருக்க வேண்டுமோ அப்படியே தான் வீழ்ச்சியும் இருக்க வேண்டும். திடீர் என்று எலாவற்றையும் இழக்கும் ஒருவர் மனம் எப்படி உடைந்து போகும் என்பது கற்று தந்தது ஜேக்கப் வாத்தியார்தான். அவர்கள் உடைந்து போவதற்குக் காரணம் அவர்கள் நம்பும் கடவுள். அவர் தரும்போது ஒவ்வொன்றாகத் தான் தருவார் ஆனால் எடுக்கும் போது எல்லாவற்றையும் எடுத்துக் கொள்வார். வரட்டுப் பிடிவாதத்தை விட எதார்த்தம் எத்தனை முக்கியம்! 'நல்லா வாழ்ந்தவர்கள் என்றைக்கும் தலை குனியக் கூடாது' என்ற வரிகளின் வலிமையைப் புரிந்து கொள்ள பவா செல்லதுரையின் நான்கு பக்க எழுத்துகள் எனக்குத் தேவை.

பரீட்சையில் fail ஆகும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதைக் கேட்டால் பாவமாக இருக்கும். அப்போது தெரியவில்லை 'பாவப்படுவது' தான் காரணம் என்று. Don 't Call it Suicide ல் பெயர் இல்லாத ஹீரோதான் நினைவுக்கு வருகிறார். அவரால் தன் தம்பி தங்கையைப் போல் படிப்பிலும் மற்றவற்றிலும் சிறப்பாக இருக்க முடியவில்லை. இருப்பினும் அவருடைய அப்பா அவரை நன்றாகவே பார்த்துக் கொள்கிறார். இருப்பினும் ஏதோ ஒரு விரதத்தில் அவர் தற்கொலை செய்து கொள்கிறார். அப்பாவிற்கு ஒன்றும் புரியவில்லை. நாம் நன்றாகத் தானே பார்த்துக் கொண்டோம். பிறகு ஏன் மகன் இப்படி ஒரு முடிவு எடுத்தான் என்று குழம்புகிறார். இறந்து பல வருடம் ஆனாலும் அப்பாவால் மறக்க முடியவில்லை. மகனுக்குத் தேவையானவை எல்லாம் செய்தேன், ஏன் என் மகன் அப்படி செய்தான் என்று நண்பரிடம் கேட்கிறார். அவர் மூலம் அப்பா தெரிந்து கொள்கிறார். மகனுக்கு அன்று தேவைப்பட்டது 'டாலரன்ஸ் அல்ல, லவிங் அக்செப்டன்ஸ் என்று.. ! மனிதனை சகித்துக் கொள்வதற்கும் ஏற்று கொள்வதற்கும் எத்தனை வித்தியாசம்! இதைப் புரிந்து கொள்வதற்கு எனக்கு நிசிம் எசகியலின் 48 பக்கங்கள் எனக்குத் தேவை பட்டது.

கொலை செய்யப்பட்டவன் அனுபவித்த கொடுமை ,வலியை விட கொலை செய்தவனின் மனது அதிகமாக கொடுமையும் வலியும் அனுபவிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள ரஸ்கோல்நிகோவ்......!தேவைப்பட்டான். எத்தனை பெரிய பாரத்தையும் துயரத்தையும் இறக்கி வைக்கலாம். நாம் அனுபவிக்கும் வலியை உணர்ந்துகொள்ள சோனியா போல் ஒருத்தி இருந்தால். குற்றம் புரிந்தவர்களையும் நேசிக்க தஸ்தாயெவ்ஸ்கி யின் 576 பக்கங்கள் உடைய குற்றமும் தண்டனையும் எனக்குத் தேவைப்பட்டது.

கடந்த கால ஏமாற்றங்கள் எதிர்கால எதிர்பார்ப்புகள் இவற்றை எல்லாம் நடுத்தரக் குடும்பத்தினர் சுமக்க முடியாது , அன்றைய தின வாழ்க்கையைப் பற்றி மட்டுமே சிந்திக்க முடியும் என்பதைத் தெரிந்து கொள்ள புதுமைப்பித்தனின் 'ஒரு நாள் கழிந்தது' தேவைப் பட்டது. தன்னை மீறி நடக்கும் ஒரு விபத்துக்கு ஒரு போதும் பெண் பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்பதைத் தெரிந்து கொள்ள ஜெயகாந்தனின் அக்னிப் பிரவேசம் தேவை ப்பட்டது. திருநங்கைகள் நம்மை அதட்டிக் காசு வாங்குவதற்கும் , விபசாரத்துக்கு போவதற்கு நாம் தான் காரணம். சமூகம்தான் அவர்களை அதில் தள்ளி விட்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள எனக்கு 'பால் சுயம்பு வின் ‘திருநங்கை அதிர்ச்சியும் அதிசயமும்' தேவை ப்பட்டன . வீடு, உறவுகள். வாழ்ந்த நாடு எல்லாவற்றையும் வேறு வழி இல்லாமல் விட்டு போனவர்களின் வலியை புரிந்து கொள்ள தமிழ் நதியின் எழுத்துகள் தேவை பட்டது. காதல் தரும் அழகிய உணர்வுகளை அனுபவிக்க தாகூரின்ன் சாருலதா தேவைப்பட்டது. சிறு வயதில் ஏற்படும் காதல், ஊடல், இவற்றை அனுபவிக்க மார்க் ட்வைனின் தாம் சாயர் தேவைப் பட்டது. எத்தனை திமிராகப் பேசினாலும், ஆணைப் போல் சேலையை மடித்துக் கொண்டு நடந்தாலும் பெண்ணும் அவள் உணர்வுகளும் அழக தான் என்பதைத் தெரிந்து கொள்ள ஜமீலா தேவைப்பட்டாள். எத்தனை கொடூரமான மனிதனிடமும் ஒரு ஓரத்தில் மனிதம் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள 'ஒரு மனிதன் பிறந்தான்' என்ற கதை எனக்குத் தேவைப்பட்டது. காதலைப் போன்று அழகான உணர்வு எதுவும் இல்லை என்பதற்கு ரோமியோ ஜூலியட், ஆர்பியஸ் ஆர்பியஸ் வெண்ணிற இரவுகள், ப்ரைடு அண்ட் ப்ரெஜுடிஸ், ஜேன் எயர், வுதேரிங் ஹைட்ஸ் தேவைப் பட்டது. தொலைத்த குழந்தைப் பருவத்தை மீண்டும் மீண்டும் அனுபவிப்பதற்கு லிட்டில் வுமன் தேவைப்பட்டது. வட்டார மொழியின் அழகை ரசிக்க நாஞ்சில் நாடன், உண்மையான புரட்சியைப் புரிந்து கொள்ள சேகுவேரா வின் வாழ்க்கை காவியமும், உண்மையான வறுமையைத் தெரிந்து கொள்ள புதுமைப் பித்தனின் வாழ்க்கை புத்தகமும் எனக்குத் தேவை ப்பட்டது. என்னை முழுமையாக உணரவைக்க, என்னை மகிழ்விக்க, என்னை மீண்டும் மீண்டும் இந்த உலகத்தில் பிறப்பு எடுக்க, புது ஒரு உலகத்திற்குச் செல்ல, என்னை மறப்பதற்கு, என்னுடன் உரையாடுவதற்கு , எல்லாவற்றுக்கும் புத்தகங்களைத் தவிர எனக்கு வேறு துணையில்லை.

(உயிரோசை)
...மேலும்

Dec 25, 2011

கடமை!!!! - ஆர்த்தி வேந்தன்


இன்னும் அரை மணி நேரம் தான் இருக்கிறது. திநகர் போக வேண்டும். எத்தனை தடுமாற்றங்கள்,தடங்கல், யோசனைகள். அனைவர்க்கும் இருக்கும் அதே சந்தேகம் தான். எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே வரும் சந்தேகம் தான். எல்லா நாளும் தீர்மானித்து கொண்டு தான் போகிறேன்.

கதவு ஒழுங்காக பூட்டி இருகிறதா என்று. சுவரு ஏறி குதித்து பூட்டை உடைப்பது பெரிய வித்தை இல்லை என்றாலும் பூட்டை இழுத்து பார்த்தால் தான் திருப்தி. எத்தனை முறை பார்த்தாலும் அதே முகம் ் தான் என்றாலும் மீண்டும் மீண்டும் கண்ணாடியில் முகத்தை பார்ப்பது போல். எதற்கு இத்தனை
பாதுகப்பு? பூட்டியது கதவு மட்டும் அல்ல என்னுடைய சுயம், கோவங்கள், பிரச்சனைகள், விருப்பங்கள். இத்தனையும் தூக்கி கொண்டு உரை ஆற்ற முடியாது.

அப்பாடா காரில் ஏறியாச்சு. காரும் பணமும் இருந்தால் சுகமா? எது எப்படியோ ரோட்டில் நின்றுபுலம்பு வதை விட காரில் கண்ணீர் சிந்துவது வசதி ஆக தான் இருக்கிறது. என்னை மட்டுமே நம்பி வாழ வேண்டும் என்ற பேராசை இருக்கிறது இருந்த போதிலும் அவபோது நம் வாழ்கையும், எதிர்பார்புகளையும், விருபங்களையும் , உதவிகளையும் மற்றவர்கள் மீது திணிக்க தன் வேண்டி இருக்கிறது. ஏன் ் உயிரை அரை மணி நேரம் டிரைவரிடம் பனையவைதேன். குழந்தைகள் இயற்கையோடு ஒன்றி விளையாடுவதை பார்க்க ஆசை ஆக தான் இருக்கிறது அனால் கடமை ஒரு ு பக்கம் இழுகிறது. இன்னும் 15 நிமிடம் தான் 60 59 58 சிக்னலில் எண்கள் ஓடி கொண்டு இருந்தது. முதன் முதலாக ௦ வை பார்த்து நிம்மதி அடைந்தேன். இரண்டு அடி கார் நகர்ந்துது மீண்டும் 60 59 58 அய்யயோ எத்தனை பேரு காத்து இருப்பார்கள்? ஒரு வேலை அவர்கள் கிளம்பி விட்டால்? சீக்கிரம் ஆக போனால் வேற வேலை வெட்டி எதும் இல்லை என்பார்கள். நேரம் கழித்து போனால் திமிர் என்று சொலுவார்கள். நேரதிருக்கு போக வேண்டும் என்றால் அந்த நிகழ்ச்சி கண்டிப்பாக சென்னையில் இருக்க கூடாது.

மீண்டும் ௦.. ஓட்ட பந்தயம் தொடங்கி விட்டது. அனைவர்க்கும் முதலில் போக வேண்டும் என்று பதட்டம்.பாவம் அவருகளுக்கு என கடமைகளோ? சற்றே மேலே பார்த்தேன் கடவுள் கருணை தெரிகிறதா என்று. தெரிந்தது ரோடை கடந்து செல மேலே கட்டிய பாலம் . இத்தனை பரபர பான நேரத்தில் இத்தனை மனிதர்கள் நடுவில் ஒரு பெண்ணும் ஆணும் கை கோத்து கண்களிலும் வார்த்தைகளிலும் பேசி கொண்டு இருந்தன. எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்ற பாரதியின் பாடல் நினைவுக்கு வந்தது. அவர்களுக்கு எது இன்பம் தந்தது என்று தெரியவில்லை. இருவரும் தாங்கள் இயக்கிய உலகத்தில் சந்தோஷமாக இருந்தனர். வெளியே முகம் சுளித்தாலும் உள்ளுக்குள் பொறமை எட்டி பார்த்தது . அவர்களை பார்த்து ஸ்கூட்டரில் தடுமாறி கொண்டு இருந்த கணவர் திரும்பி ஒரு நொடி தன மனைவியை பார்த்த பார்வையில் எத்தனை அர்த்தங்கள். இன்னும் 10 நிமிடம் தான் இருக்கிறது.

கார் போய் கொண்டு இருக்கிறது. குப்பை யில் இருந்து குழந்தைகள் எதோ பொறுக்கி கொண்டு இருந்தன. கல்வி சாலை யில் தேட வேண்டியதை குப்பை யில் தேடி கொண்டு இருந்தார்கள் . ஏன் இந்த நிலைமை? யார் காரணம்? தெரிந்து கொள்ள ஆசை தான். அவர்கள் நிலைமையை மாற்றி இந்தியாவில் அனைவர்க்கும் கல்வி என்று உரக்க சொல்ல ஆசை தான்.. மீண்டும் கடமை இழுக்கிறது. முகத்தை திருப்பி கொண்டு மனசாட்சியை அங்கே யே விட்டு விட்டு புறப்பட்டேன்.

பத்து நிமிடம் தாமதம் ஆக தான் போனேன்
எனக்காக இத்தனை கூட்டமா உடம்பு கொஞ்சம் சிலிர்த்தது. ஒரு முறை தொடக்க வரியை சொலி கொண்டேன். மேடை யை நோக்கி சென்றேன் யாரும் தயாராக இருப்பது போல தெரியவில்லை .அய்யயோ வேற யாரவது வருவாரா? எத்தனை மணி நேரம் அவர் பேசுவார்? அவர் வந்தார். ஆனால் மேடையில் அமரவில்லை. கையில் கேமரா வுடன் வந்தார். புகை படம் எடுக்க ஆரமித்தார். வார்த்தைகளும் சிந்தனைகளும் சென்று அடைய வேண்டும் என்ற நினைப்பு யாருக்கும் இல்லை அடுத்த நாள் பேப்பரில் புகைப்படம் வர வேண்டுமே என்ற கவனம் மட்டும் தான். தெரிந்து இருந்தால் வார்த்தைகளை குறைத்துவிட்டு மேக்கப் யை அதிகபடுதிர்பேன் என்ன இருந்த போதிலும் கடமை யே முதன்மை. ஏன் உரையை தொடங்கினேன் " அனைவர்க்கும் கல்வி, அனைவர்க்கும் சத்து உணவு திட்டத்தை செயல் படுத்திய தலைவரை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அப்துல் கலாம் சொன்னது போல் 2020 யில் இந்திய முன்னேறிய நாடாக இருக்கும் என்பது இந்த ஆட்சி உள்ளவரை எனக்கு சந்தேகம் இல்லை....."
...மேலும்

Dec 24, 2011

ஐ.டி. நிறுவனத்தில் 'சாதி'ப் போட்டி - கவின் மலர்


நவம்பர் 9-ம் தேதி, காலை 9 மணி.

'பேபால்’ என்ற ஐ.டி. நிறுவனத்தின் வாயிலில் திரண்டு நின்றது 'சேவ் தமிழ்’ இயக்கம்! 'பேபால் நிறுவனம் சாதியத்தை வளர்க்கிறது’ என்று அர்த்தம் தொனிக்கும் பேனரைப் பிடித்திருந்த இயக்கத்தினர், அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு துண்டறிக்கைகளைக் கொடுத்தனர். இதைக் கேள்விப்பட்டு ஆடிப்போனது பேபால் நிறுவனம்!

என்ன பிரச்னை?

சென்னைக்கு அருகே சோழிங்கநல்லூரில்இருக்கிறது பேபால் ஐ.டி. நிறுவனம். அது தனது ஆண்டு விழாவைக் கொண்டாட இருந்தது. வழக்கமாக இதுபோன்ற விழாக்களுக்கு முன்பு ஊழியர்கள் மத்தியில் குழுக்கள் அமைக்கப்படும். அந்தக் குழுக்களுக்கு இடையே போட்டிகள் நடத்தி பரிசுகள் அளிப்பதும் வழக்கம். இந்த ஆண்டும் அப்படி கொண்டாட நினைத்தது பேபால் நிறுவனம். அதில் ஒன்றும் தவறு இல்லை. ஆனால் அந்தக் குழுக்களுக்கு 'அய்யர்ஸ் ஆஃப் தமிழ்நாடு’, 'பானர்ஜீஸ் ஆஃப் வெஸ்ட் பெங்கால்’, 'பட்டேல்ஸ் ஆஃப் குஜராத்’ என்று ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சாதிக்களின் பெயர்களை சூட்டியதுதான் பிரச்னை.

இந்தப் பெயர்கள் அடங்கிய பேனர்களை அந்த நிறுவனம் தனது வாயிலில் வைத்திருந்தது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கடந்து செல்லும் பழைய மகாபலிபுரம் சாலையில் அந்த பேனரைக் கண்ட 'சேவ் தமிழ்’ இயக்கத்தினர் கொதித்துப் போய் போராட்டத்தில் இறங்கிவிட்டார்கள்.

உடனே பதறிப்போன பேபால் நிறுவனம், சாலையில் வைக்கப்பட்டு இருந்த பேனர்களை எல்லாம் அகற்றியது. அதோடு, நிறுவன தரப்பில் இருந்து செக்யூரிட்டி பிரிவின் தலைவர் தமிழ் சேவ் இயக்கத்தினரிடம் பேச்சு வார்த்தைக்கு வந்தார். அவரிடம் பேச மறுத்த போராட்ட அமைப்பு, 'ஹெச்.ஆர். டிபார்ட்மென்ட் நபர்கள் வரவேண்டும்’ என்று நிபந்தனை விதித்தது. ஹெச்.ஆர். கார்ப்பரேட் கம்யூனிகேஷன் அதிகாரியான கிருத்திகா செல்போனில் பேசி இருக்கிறார். போராட்டக் குழுவோ, 'அவர் நேரில் வந்து பொது மன்னிப்பு கேட்க வேண்டும். அதை பத்திரிகைகளுக்கு செய்தியாகத் தர வேண்டும்’ என்று நிபந்தனை விதித்தது.

காவல் துறைக்கு தகவல் சொல்லி, லோக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வந்து சேர்ந்த பின்னரே கிருத்திகா ஆர்ப்பாட்டக்காரர்களை சந்திக்க வந்தார். வரும்போதே மன்னிப்புக் கடிதம் எழுதி வந்திருந்தார். ''குறிப்பிட்ட நோக்கம் எதுவும் இன்றியே இந்தப் பெயர்களை வைத்தோம். இந்தியாவில் பல சாதிகளைச் சேர்ந்த மக்கள் ஒன்றாக வாழ்கிறார்கள் என்ற கருத்தின் அடிப்படையில்தான் இப்படி பெயர் வைத்தோம். அதைத் தவறு என்று உணர்கிறோம். பேபால் நிறுவனம் இதற்காக மன்னிப்புக் கேட்கிறது. குழுக்களுக்கு வைத்தப் பெயர்களை மாற்றி அமைக்கிறோம்!'' என்று கிருத்திகா சொன்ன பிறகுதான்
சர்ச்சை ஓய்ந்தது!

நன்றி: ஜூனியர் விகடன்
...மேலும்

Dec 23, 2011

யார் குற்றவாளி ??? - ஆர்த்தி வேந்தன்


'பாலியல் தொழில் யார் குற்றவாளி?' என்ற புத்தகத்தில் படித்தது. சிறுமியின் வாக்குமூலம் :
வயசு என்ன?
பதினாலு

பேரு?
கவிதா

அம்மா..அப்பா?
அப்பா ஒரு அம்மா கூட போய்ட்டாரு. அம்மா வேற ஆளு கூட போயிருச்சு.

இந்த தொழிலுக்கு வர யார் காரணம்?
முன்னால் எங்க சின்னம்மா ராத்ரி எங்கேயோ கூட்டிகிட்டு போய் வாசலே படுக்க வச்சுட்டு உள்ள ஒரு ஆளு கூட இருக்கும். வரும்போது நிறைய பலகாரம் குடுப்பாங்கே இப்ப எங்க சின்னம்மாக்கு உடம்பு சொகம் இல்லை அதனால் நான் அந்த வேலைய செயுரேன்

ஒரு நாளிக்கு எத்தனை பேரு வருவாங்க?
அஞ்சு ஆறு பேரு நான் குவாட்டரு குடிச்சிபேன்

படிக்கிற ஆர்வம் உண்டா?
.ம்ஹீம் .. இந்த வயசுலே எத்தனாவது படிக்க? எங்க டீச்சர் ஒரு தடவை குச்சிய வச்சு அடிச்சிட்டு ஆங்க .. இங்க பாருங்க.. குச்சியில இருந்த ஆணி கிழிச்சு விட்ட தழும்பு கூட இருக்கு. அன்னிக்கு காய்ச்சல் வந்துருச்சு. அன்னில் இருந்து பள்ளி கூடத்துக்கு போகல. இனிமேலும் போக மாட்டேன் அப்பவே இங்கிலீஷ் தெரியல இப்ப எப்பிடி படிக்கிறது?

வீட்டுலே இருந்து படிகிரியா?
(வெட்க்கப்பட்டு) எங்கே நேரம் இருக்கு? காலை யில குடிச்சா போதை தெளிய மதியம் ஆகிரும் பசிக்கும் அப்புறம் சாயுங்காலம் வேற குடிபேன்லே!

உனக்கு ரொம்ப சின்ன வயசு இபடியே இருந்தா உடம்பும் மனசும் பாழாயிடுமே?

அதை எங்க அம்மா அப்பா யோசிச்சிருக்கணும் எங்க பாட்டி செத்து போன்ன பின்னாடி எனக்கு யார் சோறு போட்டாங்க? எங்க சின்னம்மா தான் கவனிதாங்க அவங்களுக்கும் என்னை விட்ட ஆளு இல்லை அதனாலே நான் தான் அவங்களுக்கு எலாம்.

பொதுவா என வித துன்பங்கள் உனக்கு உண்டு?
நிறைய மயக்கமா இருக்கும் போது பணத்தை திருடிர்வாங்க சில சமயம் குடுக்காமலே ஓடிடு வாங்க நான் டிரஸ் போட்டுட்டு போய் கண்டு பிடிக்க நேரம் ஆகி விடும் அதனால எங்க சின்னம்மா முதலே காசு வாங்கிக்கும் அப்புறம் அதிகமா குடிகிறது தால குவாட்டர் அடிச்சாலும் இபோதெல்லாம் போதை வரதில. இதுகே காசு கூட வேணும் அப்புறம் ஒரு தடவை என்கிட்ட ஒரு ஆளு வந்தாரு ரொம்ப இருமல் எனக்கு அருவருப்பா இருந்துச்சு நாபன் மாட்டேன் ன்னு சொன்னேன் அம்மா காசு வாங்கிர்சு அப்புறம் நான் அம்மா கிட்ட சண்ட போட்டு பணத்தை வாங்கி கொடுத்துட்டேன் இப்போ எல்லாம் அப்படி சேயுறது இல்லே

நீ ஏதும் சொல்ல விரும்பிறிய?
ம்ஹீம் .. அம்மா அப்பா இப்படி செய கூடாது அப்படி போனா குழந்தை பெத்துக கூடாது அவளவுதான் .

படிச்சாச்சு. கண்ணீர் விட்டாச்சு. பிராத்தனை செய்தாச்சு .
வேற என்ன பன்றது? பாலியல் தொழில் நிறுத்த வேண்டும் நிறுத்த விடு வாங்களா?? கோவை அரசு மருத்துவமனையில் ஏழை குடும்பத்தினர் தங்களுக்கு எய்ட்ஸ் பரிசோதனை வந்தால் 200 ரூபாய் வாங்கு கிறார்கள் ( இலவச பரிசோதனை என்று போர்டு) ஆனால் பாலியல் தொழில் பண்ணு வோருக்கு இலவசம்!! எங்கே இருந்து கோவையில் பாலியல் தொழில் செய அனுமதி கிடைத்தது?? தெரிந்தும் தெரியாத போலீஸ்.. இவர்களை பரிசோதனைக்கு கூட்டிட்டு வர ஒரு சமுக அமைப்பு வேற!! சமுக அமைப்புகள் ஏன் அவர்களை வெளியே அழைத்து வர கூடாது? அங்கே விருப்ப பட்டு யாரும் இருப்பது இல்லை. அவர்கள் வந்தால் நாம் ஏற்று போமா? அது சரி ஒரு குறத்தி பஸ் யில் நம் பக்கத்தில் உட்காந்தலே எந்தரிச்சு போற நாம், ரயில் பெட்டியில் இடம் இருந்தாலும் உட்கார அனுமதிக்காத நாம் பாலியல் தொழில் செய்த பெண் யை ஏற்றுபோமா? என்ன தான் பன்றது??
மீண்டும் சிறுமியின் வாக்கு மூலத்தை படியுங்கள்.

ஒரு விலை மாது உங்களிடம் வந்தால் வேலை கொடுங்கள். திருநங்கை காசு கேட்டால் கொடு காதிர்கள் முடிந்தால் வேலை கொடுங்கள். குறத்தி இக்கும பக்கத்தில் இடம் கொடுங்கள் முடிந்தால் எதாவது சொலி கொடுங்கள். விலை மாது வை பார்த்தால் வருத்த படா தீர் ஆனால் உன்னால் ஒரு விலை மாது உருவானால் வெட்க படு ................

...மேலும்

Dec 22, 2011

இசைக்குள் இருக்கும் இலக்கியம்.. - ஆர்த்தி வேந்தன்


வார்த்தைகளின் முடிவில் இசை தொடங்குகிறது. உணர்சிகளை. வெளிபடுத்துவதில் சிறந்த கருவி நம் கண்களே. எவன் ஒருவன் மனிதன் கண்களில் இருக்கும் உணர்சிகளை படிகிறானோ அவனே சிறந்த கலைஞன் ஆவான். கண்களில் பிரதிபலிக்கும் மனிதனின் ஆழமான உணர்சிகளை உணர்வுகளை உள்வாங்கி வெளிபடுத்துவதில் இலக்கியத்திற்கும் இசைக்கும் நிகராக எதுவும் இல்லை. அதிலும் உணர்சிகளை இசையில் வெளிபடுத்துவது போன்று கடினமானதும் அதே சமயம் இன்ப மானதும் எதுவும் இல்லை. இசை யில் தெறித்த உணர்வுகள் பல இலக்கியம் உருவாகுவதற்கு காரணமாக அமைந்திற்கு.

பீத்தோவனின் வயலின் பியானோ சொனாட்டா (sonata ) வின் பெயரான தி க்ருத்சர் சொனாட்டா (The Kreutzer Sonata ) என்ற பெயரையே டால்ஸ்டாய் தன்னுடைய நாவலுக்கும் வைக்கிறார். பீத்தோவனின் இசையில் வெளியாகும் அதே உணர்வுகளை நாவலின் மைய கருத்தாக டால்ஸ்டாய் சித்தரித்து உள்ளார். இசை யில் நம் உணரும் உண்மையை நம்மகுள்ளே வைத்து கொள்கிறோம். ஏனோ இலக்கியத்தில் இருக்கும் உண்மைகள் மட்டும் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகுகிறது.நம் முக மூடியை ஒருத்தர் இப்படி கிழித்துவிட்டார் என்ற கோவமா இல்லை நமக்கு மட்டுமே தெரிந்த உண்மையை எல்லாருக்கும் சொல்லிவிட்டாரே என்ற கோவமா என்று தெரியவில்லை. மனிதனின் வீழ்ச்சிக்கு காமம் பொறமை இவை இரண்டு தான் காரணம் என்று சொல்கிறார். கதையில் வரும் பெண் தன் கணவன் அருகில் இருந்தும் புதியதாக ஒருவன் மீது ஏற்படும் காம உணர்வை அவனை பார்த்து இசைக்கும் இசை மூலம் தெரிவிக்கிறார். இந்த காம உணர்வு ஒரு மனிதனை குற்ற உணர்சிக்கு உட்படுத்தி நம்மை வீழ்த்தி விடுகிறது என்பதையும் பின்னால் அவள் இசைக்கும் இசை மூலமே தெரிவிக்கிறார். அவள் இசைக்கு இது தான் அர்த்தம் என்று நாம் புரிந்துகொள்ள முடிவதே அவருடைய வெற்றி. இந்த இசையை அடிப்படையாக கொண்டே உருவான கதை டால்ஸ்டாய் படைப்புகளில் முக்கியமான ஒன்றாகும்.
இசையின் மகதான சக்தியை வெளிபடுத்தும் இலக்கியம் தி சாங் ஒப் திரயும்ப்டன்ட் லவ் (The Song Of Triumphant Love ). வேலரியா என்ற பெண்ணிடம் ஒரு ஓவியனும் இசை கலைஞனும் அவளை காதலிப்பதாக தெரிவிகிறார்கள். அவள் இவர்களில் ஒருவரை திருமணம் செய்துகொள்ள வேண்டும். அவள் ஓவியனை தேர்வு செய்கிறாள். ஐந்து வருடம் பிறகு இசை கலைஞன் மீண்டும் வருகிறான்ஒரு விசித்தரமான இசையை இசைத்து கொண்டே இருக்கிறான். அந்த இசை அவளை கலங்க படுத்துகிறது. கனவுகளின் மாய வலைக்குள் சிக்குகிறாள். தனக்குள் உருவாகும் கரு அவனின் இசையால் உருவானது என்று நம்புகிறாள். மனித உணர்வுகளை விட இசை சக்தி வாய்ந்தது என்பது தான் இந்த கதையின் கரு.

விக்ரம் சேத் யின் அன் ஈகோல் லவ் ( An Equal Love ) ஒரு இசை கலைஞனின் வாழ்கையை காவியமாக சொல்கிறது. அவனின் காதலியை தொலைத்த பிறகும் எல்லா வலிகளையும் கடந்த பிறகும்அவனுக்கு துணையாக இருப்பது தன்னுடைய இசை. தன் காதலிக்கு நிகரானது இசை இந்த இசையே தன் வாழ்கையின் மிக பெரிய வரம் என்றும் அதுவே அவனுக்கு போதுமானது என்று சொல்வதோடு கதை முடிகிறது.

இலக்கியத்துக்கும் இசைக்கும் உள்ள தொடர்பை கண்டு வியந்தது உண்டு இந்த புத்தகத்தை படித்த பிறகு இசைக்கும் பெண்ணுக்கும் உள்ள பிணைப்பை பற்றி வியந்தேன். தன் காதலியும் இசையும் ஒன்று என்று சொல்வது எத்தனை கவித்துவமாக உள்ளது. இசை என்றைக்கும் மகிழ்ச்சியை மட்டும் தராது. சில இசை துயரத்தின் உச்சகட்டதிர்கே நம்மை அழைத்து சென்று விடும். சில இசை மாறாக மகிழ்ச்சயின் நுனியில் நம்மை ஊஞ்சல் ஆட செய்யும். துயரத்தின் காரணம் எதுவாக இருக்கோ அதுவே நமக்கு மருந்தாகவும் அமைகிறது. பெண்ணும் அப்படிதானே.. இசை இல்லாத உலகம் எப்படி கற்பனை செய்து பார்க்க இயலாதோ அது போல் தான் பெண் இல்லாத உலகமும். நீங்கள் விட வேண்டும் என்று நினைத்தாலும் முடியாது.. உலகம் முழுவதும் இசை யால் சூழ்ந்து உள்ளது. கடல் அலைகளின் இசை, தென்றல் வீசி செல்லும் இசை. உங்களுக்கு தெரியுமா பெண்ணின் இதய துடிப்பை விட சிறந்த இசை உலகில் எதுவும் இல்லை. பாப் மார்லி பீதோவன் இவர்கள் எல்லாம் தந்த அத்தனை உணர்வுகளின் கலவையும் ஒரே நொடியில் தர கூடியவை தான் பெண்ணின் இதய துடிப்பு.. அவளின் உடலை மறந்து உணர்வுக்கு செவி சாய்த்து, அவள் மௌனமாக இசைத்து கொண்டிருக்கும் இசையை கேளுங்கள்.. அன்பு, காதல், நம்பிக்கை, பிரிவு, துயரம், மகிழ்ச்சி, வெறுமை, , பொறுமை, நட்பு, பரிசம், கருணை, தாய்மை, கண்ணீர், புன்னகை, வெற்றி, தோல்வி, பிறப்பு, இறப்பு, வெளிச்சம், இருள், கனவு, உண்மை, பொய், ரௌத்திரம், காமம் இவை எல்லாம் பெண்மை என்ற மொழின் சொற்களை கொண்டு இசைத்தால் வரும் இசை தான் பெண்ணின் இதய துடிப்பு. பெண்ணை வெறும் உடலாக மட்டும் பார்பவர்கள் உலகின் மிக சிறந்த இசையை கேட்காதவர்கள். தி ஸ்டோரி ஒப் அன் வீபிங் கேமல் (The Story of an Weeping Camel ) என்ற படத்தில் வரும் ஒட்டகம் தன் குழந்தை ஒட்டகத்திற்கு பால் கொடுக்க மறுக்கும். பின்பு தாய்மை யை வெளிபடுத்தும் ஒரு இசையை கேட்டு அது உருகி தன் குழந்தை ஒட்டகத்தின் பக்கதில் போய் பால் தரும் காட்சி மிகவும் உருக்கமாக இருக்கும். இசைக்கு இருக்கும் அதே சக்தி தான் பெண்ணுக்கும் ஒருமுறை அவளின் இசையை கேட்டுபாருங்கள் உங்கள் பாரம் குறையும் கல் மனது உருகும்.

இசையும் பெண்ணும் ஒன்று என்பதால் எனவோ இவை அதிகமாக ஆண்கள் மூலமே பேச படுகின்றது. அவர்களாகவே அதிகம் நேசிக்கவும் படுகின்றது. இசை உலகத்தின் உயிர் ஆக இருப்பது பெரும் பாலும் ஆண்களே. நான் நேசிக்கும் பாப் மார்லி யில் இருந்து ரசிக்கின்ற ரஹ்மான் வரை எல்லாம் ஆண்களே. பீதோவன், அமதேஎஸ் மொசார்ட் , பீட்டர் ஈளிச், அந்தோனியோ விவல்டி, ஒர்லாண்டோ கிப்போன்ஸ். இவர்கள் மறைந்தாலும் இவர்கள் படைத்த இசை நம்முடன் பயணம் செய்து கொண்டே தான் உள்ளது. மிக சிறந்த இசையை படைத்தது ஆணாக இருந்தாலும் அதற்கு மூல காரணம் பெண்ணே.உலகின் மிக சிறந்த கவிதைகளை தந்த ஷேக்ஸ்பியர் , நெருடா, பிரௌனிங் இவர்களின் எழுத்துக்குள் பெண் புதைந்து உள்ளது போல் இசை கலைஞர்களின் படைப்புக்கு காரணமாக பெண் ஒருவள் இருந்து இருக்கிறாள். இவர்களின் வாழ்கை வரலாறை படித்து பாருங்கள் இவர்களது படைப்பை போலவே அழகா இருக்கும். சக்தி இல்லை என்னில் சிவன் இல்லை என்று அன்று இலக்கியத்தில் சொன்னது எத்தனை உண்மை. சக்தி என்பதன் பொருள் பெண். பெண் இல்லை என்றால் உலகம் இல்லை. இதுதானே இசையும் சொல்கிறது. இசையோடு இணைந்தவர்கள் மட்டுமே பெண்மையை போற்ற முடியும் இலக்கியத்திற்குள் விழுந்தவர்கள் மட்டுமே பெண் மனதின் ஆழத்தை அறிய முடியும்.

(உயிரோசை)
...மேலும்

Dec 21, 2011

மக்களின் மனிதன்...! - ஆர்த்தி வேந்தன்


மக்களின் மனிதன் நாவல் அல்ல நடக்கும் இடமும், இடம்பெறும் பெயர்களும் கற்பனைகள் என்ற போதிலும் இது கதை இல்லை. இதில் எந்த அழகியலும் கற்பனைகளும் இல்லை . இந்த புத்தகத்தை பற்றி நாம் இங்க பேசுவதற்கு இரண்டு முக்கிய காரணம் உண்டு ஒன்று அறிவு பூர்வமானது மற்ற நாட்டின் அரசியலையும் அவர்களின் இலக்கியத்தை தெரிந்து கொள்வதன் அவசியம். மற்றொன்று இந்த புத்தகம் 100 % நம் நாட்டு அரசியலுடன், அவர்களின் தலைவர்களை நம் தலைவருடனும், அந்த மக்களின் மனநிலையை நம் நாட்டு மக்களுடன் ஒப்பிட்டு பார்க்கலாம். இந்த கதையை நான்கு வரிகளில் சொல்லிவிடலாம். இந்த கதை ஆசிரியராக பணிபுரியும் ஓடிலி என்பவரால் சொல்ல படுகிறது. தனக்கு ஆசிரியராக இருந்த நங்கா என்பவர் இப்போது கலாச்சார முதல்வர் ஆக இருக்கிறார். ஓடிலி க்கு வெளி நாட்டிற்கு போய் பட்டம் பெற்று இங்கு வர வேண்டும் என்று ஆசை அதை பூர்த்தி செய்வதற்காக நங்கா வுடன் செல்கிறார். நங்கா வின் பணமும் பலமும் ஓடிலியின் காதலியை மயக்குகிறது. ஓடிலியை ஏமாற்றி நங்காவுடன் செல்கிறாள். நங்காவை வெறுக்க தொடங்கிய ஓடிலி நங்கா வுக்கு எதிராக எதிர் கட்சி ஆன மாக்ஸ் என்பவரிடம் இணைந்து கொள்கிறார். முதல் தேர்தலில் வெற்றி பெறமாட்டார்கள் என்ற எதார்த்தத்தை புரிந்து கொள்கிறார்கள். இருந்த போதிலும் அவர்களின் கட்சி அமைப்பு நங்காவுக்கு பயத்தை அளிக்கிறது.

மாக்ஸ் கொல்லபடுகிறார். பிறகு தங்களுக்குள் நடக்கும் அற்ப சண்டைகளை ராணுவம் தனக்கு சாதகமாக மாற்றி கொண்டு நாட்டை கைப்பற்றுகிறது. இந்த புத்தகத்தை பற்றி ஒரே பொதுவான கருது சீநு ஆச்சுபோ ஒரு சிறந்த அரசியல் விஞ்ஞானி என்று. அவர் சொன்னதை போல் நைஜீரியா ராணுவத்தால் கைப்பற்ற பட்டது இந்த புத்தகத்தின் வலிமை கதை யில் அல்ல. இந்த கதை யின் ஆழத்தை நமக்கு புரிய வைப்பது கதை சொல்ல அவர் தேர்ந்தெடுத்த உத்தி. satire என்ற சொல்லப்படும் ' 'நையாண்டி தாக்குதல் ' அழகாக சீநு ஆச்சுபோ கையாண்டு உள்ளார். நங்கா என்ற கலாச்சார முதல்வர் ஓடிலி பணிபுரியும் பள்ளி க்கு வருகை தருவது யில் இருந்து தான் கதை தொடங்கு கிறது. அவரை வரவேற்க மாணவர்களும் ஆசியர்களும் வரிசையில் நிற்க சொல்லி பள்ளி முதல்வரால் கட்டாய படுத்த படுகின்றனர். அவர்களின் மரியாதையை தெரிவிக்கும் வகையில் அறிவற்ற அப்பாவி மக்கள் தங்களை முடமாகும் வரை நடனமாடி கொண்டும் துப்பாக்கி மருந்துகளை வெடி பதற்கும் காத்து இருப்பார்கள். இது தானே நம் ஊரிலும் நடக்கிறது. நம்முடைய நலனுக்காக தான் போராட வருகிறோம் என்று சொல்லி கொண்டு நம்முடன் நின்று ஒரு நிமிடம் கூட பேச நேரம் இல்லாத தலைவர்களை வரவேற்க நாம் என்ன எல்லாம் செய்கிறோம். அடுத்த நேரம் சாப்பிடுவதற்கு வழி இல்லை என்ற நிலைமையில் கூட, துப்பாக்கி மருந்து யின் விலை கூட உயர்ந்து இருக்கும் நிலைமையிலும் அவர்கள் தலைவர்களை வரவேற்பது அவசியம் என்று கருதுகின்றனர். நம் அடிப்படை வசதியை கூட இப்போ குறைத்து கொள்ள வேணும் என்ற நிலையில் கூட நாம் இன்றும் எதற்கும் உபயோக படாத banner களையும் போஸ்டர் களையும் அடித்து கொண்டே தானே இருக்கிறோம்.

நங்கா தான் இதில் ' மக்களின் மனிதன்' என்று அழைக்கபடுகிறார். அவரை எளிதில் சந்தித்து விடலாம் என்பதால் மக்களின் மனிதன் என்று அழைக்க படுகிறார். அன்றைக்கு அவரின் பேச்சும் அவாரே அமைகிறது. அரசியல்வாதி எப்படி இருக்க வேண்டும் என்ன செய வேண்டும் என்ன செய கூடாது என்பதை சொல்கிறார். இப்படி ஒரு அரசியல்வாதியா என்று நாம் முழுவதாக வியப்பதற்கு முன்பே அவர் யின் சுயம் தெரிய வருகிறது. தன் சமூகத்தை வளர்பதற்காக ஒதுக்கப்பட்ட பணத்தில் நான்கு மாடி கட்டடம் காட்டி அதை வாடகைக்கு விடுகிறார். இங்கயும் அது தானே நடக்கிறது நம் வாழ்வை முற்றிலும் மாற்ற போவது போல் வறுமையை முற்றிலும் ஒழித்துவிடுவது போல், கல்வி நிலையை மேலும் உயர்த்து வது போல் பேசிவிட்டு கடைசியில் இருப்பதையும் குறைத்து தானே விடுகிறார்கள் . மக்கள் நலனுக்காக ஒதுக்கபடுவது எல்லாம் அவர்கள் நலனுக்கு தானே உபயோக படுகிறது. தேர்தலில் வெற்றி பெறுவதற்கான எல்லா வழியையும் நங்கா கற்றுகொள்கிறார். அவரின் மிக பெரிய ஆயுதம் மக்களின் நம்பிக்கை தான். எதை பேசினால் மக்களுக்கு பிடிக்கும் எதை அவர்கள் தவிர்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு அதை மட்டுமே மக்களிடம் பேசுகிறார்.இப்படியான ஒரு உணர்ச்சி அரசியல் தானே நம்மிடமும் உள்ளது.

புரட்சி பொதுமக்களால் ஏற்படாது அறிவு ஜீவி ஒருவரால் தான் நடக்கும் என்று சொல்கிறார். கார்ல் மார்க்ஸ் பொது மனிதனோ ரஷ்யன் ஒ அல்ல.அந்த ஒருவர் தான் மக்களின் மனிதன். அப்படிப்பட்ட ஒருவர் நம் சமூகத்தில் இருக்கிறாரா என்பது தான் கேள்வி. அறிவிஜீவிகள் என்று யாரும் இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால் உணர்வுகள் இல்லாத அறிவு என்றைக்கும் ஆபத்தானது தான். ஒரு பக்கம் தொழில் நுட்பத்தையும் விஞ்ஞானத்தையும் முன்னிலை படுத்தி மக்கள் பிரச்னையை அலட்சிய படுத்தும் அறிவு ஜீவிகள் இன்னொரு பக்கம் வெறும் உணர்ச்சி அரசியல் பேசும் தலைவர்கள். என்ன ஒரு அவலம்!

தலைவர்களின் சுயநலம் மட்டும் ஒரு நாட்டின் வீழ்ச்சிக்கு காரணம் ஆக முடியாது. மக்களுக்கு தெளிவான சிந்தனை யும் ஒற்றுமையும் இல்லாத பட்சத்தில் நிச்சயம் நல்ல நாடாக இயங்க இயலாது. ஒரு எழுத்து தாளராக தன் கடமையை சீநு ஆச்சுபோ செய்து இருகிறார். தன் கடமையை எழுத்துடன் மட்டும் நிறுத்தவில்லை அவர் மக்களுடன் வாழ்ந்தார். அவர்களுக்காக போராடினார்.

ஒருமுறை நெல்சன் மண்டேலா விடம் ஒருவர் கேட்டார் 'இன்னும் உங்கள் நாட்டில் இத்தனை அடிமைகள் இருக்கிறார் களே அவர்களுக்கு நீங்கள் என்ன செய்ய போகிறிர்கள் என்று அதற்கு அவர் சொன்னார், தான் அடிமை என்று யார் உணர்ந்து இருகிறார்களோ அவர்களை தான் என்னால் காப்பாற்ற முடியும். அடிமை என்றே உணராதாவனை என்னால் எதுவும் செய முடியாது என்று. நாம் வாழ்ந்து கொண்டு இருப்பது அடிமை வாழ்கை என்பதையும், நம் அரசியல் நிலையையும் , நம் கனவுகளையும் வாழ்க்கையையும் தலைவர்களிடம் ஒப்படைத்து விட்டு நல்லது நடக்கும் என்று எதிர்பார்ப்பது இழிவை நோக்கி தான் செல்லும் என்பதை புரிந்து கொள்வதற்கு இந்த புத்தகம் அவசியமே. இதனின் அவசியத்தை முழுவதாக உணர்ந்ததால் தான் எஸ் போ அவர்கள் இதை தமிழ் யில் மொழி பெயர்த்து உள்ளார். தமிழ் யில் இப்படி வெளிப்படையான அரசியல் விமர்சனகளும் அதனின் விளைவுகளையும் வெளிபடுடும் புத்தகம் உள்ளதா என்பது சந்தேகம் தான். நம்முடைய சமூகத்தில் மக்களின் மனிதன் யார் என்பது இன்னுகேள்வி குறியாக இருப்பது வருத்தத்துக்கு உரிய விஷயமே. ஆப்ரிக்கா வில் எல்லாருக்கும் இந்த புரிதலும் தெளிவும் இருந்ததா என்றால் நிச்சயம் இல்லை தான். எல்லா எழுத்தாளர்களும் இத்தனை வெளிபடையாக மக்களின் பிரச்னையை முன்வைத்தார்களா என்றால் அதுவும் இல்லை தான். ஆனால் சீநு ஆச்சுபோ செய்தார். ஒரு புத்தகத்தால் புரிதலும் மாற்றமும் ஏற்படுமா என்றால் நிச்சயம் ஏற்படும் என்று தான் சொல்ல வேண்டும். ஒரு பெரியார், ஒரு மார்க்ஸ், ஒரு மதர் தெரேசா தான் இருந்தார்கள். ஒலிம்பிக்ஸ் யில் கூட ஒருவர் கையில் தான் தீ பந்தம் இருக்கிறது. ஆனால் அந்த தீ யின் வெளிச்சம் எல்லாருக்கும் தரபடுகிறது. சீநு ஆச்சுபோ என்ற ஒருவர் எழுத்து புரட்சி செய்து மாற்றத்தை ஏற்படுத்தியது போல் நம் மொழியிலும் இப்படி ஒரு புரட்சி ஏற்படும், நமக்கும் ஒரு மக்களின் மனிதன் கிடைப்பார் என்ற நம்பிக்கையில் புத்தகத்தை மூடுகிறேன்.
...மேலும்

Dec 20, 2011

காந்தியின் அரிஜன் யார்? - புதிய மாதவி


இந்திய தேசத்தின் தந்தை என்றழைக்கப்படும் மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள் தன் பிள்ளைகளில் மூன்றில் ஒரு பங்கினருக்கு அதாவது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு 'ஹரிஜன்' என்ற பெயர் சூட்டி மகிழ்ந்தார். எப்போது இந்தப் பெயர் சூட்டினார்? ஏன்? அவர் சொல்வது போல கடவுளின் குழுந்தைகள் என்ற பொருள்படும் காரணத்தினாலேயே மட்டுமே இந்தப் பெயரைச் சூட்டினார் என்றால் இந்திய தேசத்தின் தந்தையைப் பாராட்டுவது அப்படி ஒன்றும் குற்றமில்லை!

சிவஜன், விஷ்ணுஜன் என்றெல்லாம் அழைக்கவில்லை. சரி அவருக்கு மட்டுமல்ல வடக்கே வர வர கைலாச மலையில் சிவன் பார்வதியுடன் வசிப்பதாக கதை இருந்தாலும் கூட சிவனுக்கு வடக்கே மவுசு இல்லை. அதனால் தானோ என்னவோ சிவபிரானின் 64 அவதாரங்களும் நம்ம தமிழ்நாட்டைச் சுற்றியே நடந்திருக்கிறது!

காந்தியும் ஹேராமும் மரணத்தில் கூடப் பிரிக்க முடியாதவர்கள் என்று ஒரு கதை எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கற்பனையும் நம்மிடம் உண்டு. (காந்தி குண்டடிப் பட்டவுடன் 'ஹேராம்' என்றெல்லாம் ஒன்றும் சொல்லவில்லை என்கிறார் காந்தியின் உதவியாளர். ஆனால் உண்மையை விட இந்த கற்பனை சுகமாக இருப்பதால் அப்படியே வரலாறும் எழுதப்பட்டுவிட்டது!!) அந்தளவுக்கு ஹேராமுடன் கலந்து கரைந்துபோனவர் காந்தி. அதற்காகவாவது "ஹேராம் ஜன் அல்லது ஸ்ரீராம் ஜன்" என்றாவது பெயர் சூட்டி இருக்கலாமே! அபபடி பெயர் சூட்டி இருந்தால் கூட அவர் சொல்லியிருப்பது போல உண்மையாகவே ஒடுக்கப்பட்ட மக்களை கடவுளின் குழந்தைகளாகவே நினைத்திருப்பார் என்று அவர் பற்றிய பிற விமர்சனங்களை ஒதுக்கி வைத்துவிட்டு நாமும் ஏற்றுக்கொள்ளலாம்!

இன்னும் சிலர் விஷ்ணுஜன், ஹேராம் ஜன், ஸ்ரீராம் ஜன் என்றாலும் ஹரிஜன் என்றாலும் ஒன்றுதான்! திருமாலின் திருநாமங்கள் விஷ்ணு, ஸ்ரீராம், ஹரி என்று ரொம்பவும் அறிவுஜீவித்தனமாக பதில் சொல்லக் கூடும்! அவர்களிடம் எல்லாம் ஒரே ஒரு கோரிக்கை தான். இனிமேல் ஹரிஜன் என்று சொல்லாமல் ஸ்ரீராம் ஜன் என்று தான் அழைக்கவேண்டும் என்று சொல்லிப் பாருங்களேன்! அவ்வளவு தான்... அவர்களுக்கு கோபம் வரும். ...

ஆனால் இதை எல்லாம் விட்டுவிட்டு 'ஹரிஜன்' என்று பெயர் வைத்தார் பாருங்கள்... அங்கே தான் உதைக்கிறது! அதுவும் அவர் அந்தப் பெயரை வைத்த காலமும் சூழலும்.

24-09-1932ல் புனா ஒப்பந்தத்திற்குப் பின் இதைச் செய்திருக்கிறார். இந்தக் காலகட்டத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் இரட்சகனாக தன்னைக் காட்டிக்கொள்ள வேண்டும் அதே நேரத்தில் ... "என்னை எதிர்த்தாயா... இரு இரு நீ யார் தெரியுமா?" என்று ஒடுக்கப்பட்டவனின் முகத்தில் அடிக்கிறமாதிரி அவனுக்கு உரைக்கிற மாதிரி சொல்ல வேண்டும் என்ற ஆதிக்க சாதி மனோபாவம்!

30-09-1932 அகில இந்திய தீண்டத்தாகதவர்கள் சங்கத்தை ஆரம்பித்தார். பின் அந்தச் சங்கத்தின் பெயரை 'தீண்டத்தகாதவர்களின் சேவகன்'என்று அழைத்தார். மீண்டும் அதே சங்கத்தை "ஹரிஜன் சேவா சங்க்" என்றழைக்கத் தொடங்கினார். 11-02-1933ல் 'ஹரிஜன்' என்ற பெயரில் வாத இதழ் ஒன்றையும் ஆரம்பித்தார்.

காந்தி ஹரிஜன் என்ற சொல்லை நரசிங் மேக்த்தா பாடல்களிலிருந்து தான் எடுத்துக்கொண்டார் என்பதும் காந்தி நரசிங் மேத்தாவின் பக்திப்பாடல்கள் மிகுந்த ஈடுபாடுக்கொண்டவர் என்பதும் திரிவேதி, சச்சின்கேட்கர் போன்ற பல்வேறு எழுத்தாளர்களின் பதிவுகள் மூலம் தெரியவருகிறது. காந்தியும் அதை மறுக்கவில்லை. அவரே அதை ஏற்றுக்கொள்கிறார்.

"குஜராத்தின் புகழ்பெற்ற கவிஞர் தன் பாடலில் பயன்படுத்திய இச்சொல் தலித்துகளுக்குப் பொருத்தமானதாக இருப்பதாக தான் கருதுவதால் பயன்படுத்தியதாகவும் ஒத்துக்கொள்கிறார். (on the strength of its having been used by the first known poet saint of gujarat, i felt it to be acceptable and started using it)

பக்தி இலக்கிய வரலாற்றில் வட இந்தியாவில் அதிலும் குறிப்பாக காந்தியின் சொந்த மாநிலமான குஜராத்தில் மிகவும் முக்கியமானவர் நரசிங்மேக்த்தா. சாதி வேறுபாடுகளைக் கடந்து அனைத்து மக்களிடமும் தன் பக்திப் பாடல்களைப் பாடித்திரிந்தவர். வறுமையில் வாழ்ந்தவர். அவர் பயணத்தில் ஒருநாள் ஜூனாகாட் (junagadh) பகுதியில் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட மக்கள் /நாகர்கள் அவரை நிந்தித்து இகழ்ந்து பேசி திருப்பி அனுப்பிவிட்டார்கள். ஆனால் கிர்நார் மலையடிவாரத்திலிருக்கும் தாமோதர் கோவிலுக்கு அவர் சென்றபோது அங்கிருந்த ஒடுக்கப்பட்ட மக்கள் கிருஷ்ணாவின் மீது பாடல்கள் பாடும்படி அவரிடம் கேட்டுக்கொண்டார்கள். மிகுந்த மகிழ்ச்சி அடைந்த நரசிங்மேக்த்தா அவர்களுக்காக தன் பஜன் பக்திப் பாடல்களைப் பாடினார். அதைக் கேட்ட அம்மக்கள்,

"ஓ மேக்த்தா..
நீ அற்புதமான மனிதன்..
சாதிகளைக் கடந்தவன்
பணத்திற்கு மயங்காதவன்
உயர்வு தாழ்வு உனக்கில்லை"

என்று போற்றினார்கள்.

அப்போதுதான் அவர் தன் பாடலில் ஹரிஜன் என்ற சொல்லைப் பயன்படுத்தினார். சாதியத்தை முன்னிறுத்தி வாழும் தன் சாதி மக்களைக் கேலியும் கிண்டலுமாக

"ஆமாம்.. நாங்கள் அப்படித்தான்...
நாங்கள் அப்படித்தான்
நாங்கள் கெட்டவர்கள், கேடுகெட்டவர்கள்..
நாங்கள் இழிந்தவர்கள்,
உலகில் இழிவினும் இழிவானவர்கள்
ஓ நாங்கள் அப்படித்தான் .. நாங்கள் அப்படித்தான்
நீங்கள் சொல்வது போல
நாங்கள் அப்படித்தான்!

ஹரிஜனை விலக்கி வைக்கும் பிறவிகள்
பிறப்பின் பலனை எல்லாம் இழந்தவர்கள்
நாங்கள் அப்படித்தான்
நீங்கள் சொல்வதுபோல
நாங்கள் அப்படித்தான்"

(who ever distance themselves from harijans
have wasted their births!
we are like that - yes we are like what you say!)

இந்தப் பாடலில் ஹரிஜன் என்ற சொல்லை நரசிங் புதிதாக உருவாக்கினார் என்று சொல்வதற்கில்லை. ஏனெனில் அவருக்கு முன்பே சமூகத்தில் ஹரிஜன் என்ற சொல் வழக்கில் இருந்தது. அதுவும் குறிப்பாக தகப்பன் பெயர் அறியாத தேவதாசிகள் பெற்ற குழந்தைகளைச் சுட்டும் சொல்லாக இருந்தது.

எல்லம்மா கோவிலில் கடவுளுக்கு நேர்ந்துவிடும் பெண்குழந்தைகள்/தேவதாசிகள் பெற்றெடுக்கும் குழந்தைகள் ஹரிஜன் என்றழைக்கப்பட்டார்கள். எனக்குத் தெரிந்து கர்நாடகம், மராத்திய மாநிலம் பகுதிகளில் இன்றும் எல்லம்மா வழிபாடும் பெண் குழந்தைகளை நேர்ச்சியாக தேவதாசிகளாக விடும் வழக்கம் ஒடுக்கப்பட்ட சாதி சமூகத்தில் மட்டுமே இருக்கிறது.

ஹரிஜன் என்ற சொல்லை காந்தி தெரிவு செய்தவுடன் அப்போதே அதற்கு சலசலப்பு ஏற்பட்டது. ஆனால் 'என்னைப் பொறுத்தவரை அந்தச் சொல் மற்றவர்கள் நினைப்பதை எல்லாம் விட மிகவும் ஆழமானக் கருத்தைத் தருகிறது" என்று தன்னிலை விளக்கம் கொடுத்தார். (யங் இந்தியா 06 ஆக 1931)

ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்கள் தங்களின் எதிர்ப்பை மிகவும் உறுதியாக வெளிப்படுத்திய சூழலில் தற்செயலாக ஒரு கேள்விக்கு பதில் சொல்லும் போது "தீண்டாத்தகாதவர்களை கடவுளின் குழந்தைகள், ஹரிஜன் என்றழைப்பது என் இலட்சியம். அதற்காகவே மற்றவர்களும் அப்படித்தான் அழைக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை" என்று சொல்லியிருப்பதை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டியிருக்கிறது.

(incidently in responding to a question, Gandhiji said that it was his ambition to call the untouchables as Harijans but he added that there was no compulsion on others to call them so> ref: CWMG Vol.LVII pg 42/44)

காந்தி ஹரிஜன்களுக்கு சேவை செய்வதாக பேசியதும் எழுதியதும் எம்மாதிரியான தொண்டுள்ளத்தின் வெளிப்பாடு என்பதை அறிந்திருந்த போதிலும் காந்தி ஆரம்பித்த ஹரிஜன் சேவா சங்கத்தில் அம்பேத்கரும் ஓர் உறுப்பினராக சொற்ப காலம் இருந்திருக்கிறார் என்பதை மறுப்பதற்கில்லை.

பல்வேறு சூழல்களில் காந்தியுடன் விவாதங்களையும் போட்டிகளையும் அம்பேத்கர் தவிர்க்கவே முயற்சி செய்திருக்கிறார். ஆனால் அதற்கான வாய்ப்புகளை எப்போதும் இந்துமதமும் அதன் காவலர்களும் கதவைச் சாத்தி மறுத்திருக்கிறார்கள். அதாவது, காந்திக்கு அவர் தன்னளவில் ஒரு வாய்ப்பைக் கொடுத்தார் என்றுதான் சொல்லவேண்டும்.

அச்சேவா சங்கத்தின் மீது அம்பேத்கர் கொண்டிருந்த கருத்துகள் அதன் செயல்பாடுகளின் மூலம் உறுதியான சூழலில் சங்கத்திலிருந்து விலகினார். அம்பேத்கருடன் மேலும் பல ஒடுக்கப்ட்ட மக்கள் ஹரிஜன் சேவா சங்கத்திலிருந்து வெளியேறினார்கள். கொஞ்ச கால்த்திற்குப் பின் ஹரிஹன் சேவா சங்கத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் உறுப்பினராக அனுமதிக்கப்படவில்லை! அதற்கு காந்தி சொன்ன விளக்கம்

"சாதி இந்துக்களின்/உயர்சாதி மக்களின் மனநிலையை மாற்றுவதே ஹரிஜன் சேவா சங்கத்தின் நோக்கம்" என்றார்.

அம்பேத்கர் சொன்னது போல அச்சேவா சங்கமும் காந்தியால் ஹரிஜன்கள் என்று அடையாளப்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மிகவும் மேலோட்டமான சேவைகளை மட்டுமே செய்தது. அதாவது சேரிகளைத் தூய்மைப்படுத்துதல், சேரிக்குழந்தைகளைக் குளிப்பாட்டுவது, சேரி மக்களுக்கு தனிக் கிணறு, சாலை, தனிக்கோவில், தனி சுடுகாடு ஆகிய வசதிகளைச் செய்து கொடுத்தல், சேரிக்குழந்தைகளுக்கு பஜன் பாடல்களைக் கற்றுக்கொடுத்தல் இத்தியாதி..

அதாவது ஒடுக்கப்பட்ட மக்கள் எப்போதும் இந்தமத அடையாளத்தை, இந்து சமூகத்தை விட்டு விலக முடியாத பந்தத்தை காந்தி தன் ஹரிஜன் என்ற பெயர் சூட்டலின் மூலம் கட்டமைத்துக்கொள்ள முயற்சி செய்திருக்கிறார்.

ஹரிஜன்களுக்கான சமூக உரிமைகள் குறித்தோ சமவாய்ப்புகள் குறித்தோ அவர் நம்பிய வர்ணாசிரம இந்துமதக் கொள்கையிலிருந்து பேசுவதோ யோசிப்பதோ சாத்தியமில்லை. இதைச் சுட்டிக்காட்டிய தருணங்களில் எல்லாம் காந்தி அதற்கான நியாயங்களையொ யதார்தங்களையோ உணர்ந்து கொள்ளவும் முயற்சிக்கவில்லை.

"அடுத்தப் பிறவி என்ற ஒன்று இருந்தால் நான் ஹரிஜனாக பிறக்க விரும்புகிறேன்" என்று காந்தி சொன்னதைத் தலையில் வைத்துக் கொண்டாடினார்கள் காந்தியவாதிகள். அது ஏன் அடுத்த பிறவி? இந்தப் பிறவியில் மகாத்மா ஹரிஜனாக முடியாது என்பது காந்திக்கே தெரியும். அவருடைய காந்திய தேசத்தின் ஹரிஜன்கள், பிறப்பின் மூலமே அந்த அடையாளத்தைப் பெறுகிறார்கள் என்பது.

ஹரிஜன் என்ற சொல்லின் பயன்பாடு இந்தியாவில் உத்திரபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் அதிக அளவில் இருந்தது. பகுஜன் சமாஜ்வாடி அரசியல் கட்சியின் வளர்ச்சிப்பாதையில் ஹரிஜன் என்ற சொல் வழக்கொழிந்து தலித் என்ற சொல் இடம்பெறலாயிற்று.

இந்திய சட்டமைப்பிலும் ஹரிஜன் என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. Scheduled caste, scheduled tribes என்ற சொற்கள் மட்டுமே இடம் பெறுகின்றன. அதனால் தான் ராஜஸ்தானில் தலித் மனித உரிமை மையத்தைச் சார்ந்த மிம்ரோத் என்பவர் பத்திரிகைகளில் தலித்துகளை இழிவுபடுத்தும் நோக்கில் வழக்கிலிருந்த ஹரிஜன் என்ற சொல்லை ஒடுக்கப்பட்ட மக்களைக் குறிக்கும் சொல்லாக பயன்படுத்தக் கூடாது என்று என்று ராஜஸ்தான் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவருக்கு கோரிக்கை வைத்தார்.

பலவருடங்கள் கழித்து உள்துறை அமைச்சகம் "ஹரிஜன்" என்ற சொல்லைப் அரசு துறைகளில் பயன்படுத்தக் கூடாது என்று எல்லா அரசு அலுவலகங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியது.

தமிழ்நாட்டில் ஹரிஜன் சேவா சங்கம் ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டது. ராஜாஜி போன்றவர்கள் இதில் சேர்ந்து செயல்பட்டிருக்கிறார்கள். காந்தியின் தாக்கம் தமிழ்நாட்டில் அதிகம் என்றாலும் கூட இந்த ஹரிஜன் என்ற சொல் தாழ்த்தப்பட்ட மக்களிடம் எவ்விதமான செல்வாக்கையும் பெறவில்லை. காந்தியவாதிகள் மட்டுமே தாழ்த்தப்பட்டவர்களை ஹரிஜன் என்று சொல்வதில் ஒருவிதமான மகிழ்ச்சியை அனுபவித்தார்கள் எனலாம்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மற்றவர்கள் கொடுத்த அடையாளங்கள் எல்லாம் அவர்களைக் கடவுளின் குழ்ந்தைகளாக்கியதே தவிர அவர்களை ஒத்த சமவாய்ப்புகளும் சம உரிமைகளும் கொண்ட சகமனிதர்களாக பார்க்கவே மறுத்தது. இந்த வரலாறுகளை எல்லாம் அறிந்து கொள்ளும்போதுதான் அயோத்திதாசர் பண்டிதர் தன் பத்திரிகைக்கு பள்ளன், பறையன், அருந்ததியன், ஒடுக்கப்பட்டவர்ன், தாழ்த்தப்பட்டவன், கீழ்சாதி, அடிமை இத்தியாதி எந்தப் பெயர்களையும் வைக்காமல் "தமிழன்" என்று பெயர் வைத்ததன் உன்னதம் புரிகிறது. சாதிய எதிர்ப்பு தங்களைச் சாதி கடந்தவர்கள் என்று சொல்லிக்கொண்டதுடன் தாங்கள் யார் என்ற தேடலுக்கு வழிவகுத்தது. அதனால் தான் அயோத்திதாசர் ஆங்கிலேய அரசு ஒடுக்கப்ப்ட்ட மக்களை டிப்ரஸ்டு க்ளாஸ் என்றழைப்பதை எதிர்த்து 1911ல் நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது 'இந்தியன் புத்திஸ்டு' என்று பதிவு செய்யும்படி எழுதுகிறார். திராவிட பவுத்தம் என்ற புதிய சொல் தொடரை உருவாக்கினார்..

திராவிட பவுத்தர், தமிழ் பவுத்தர் என்ற அடையாளங்கள், இந்திய சாதியவாதிகளுக்கு மாறான பிரதிநிதித்துவம், ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்கள், அதன் பின் தந்தை பெரியாரின் பங்களிப்பு என்ற தமிழ்நாட்டு சூழலில் காந்தியின் ஹரிஜன் எடுபடவில்லை!

நன்றி - கீற்று 
...மேலும்

Dec 19, 2011

கருப்பாயி என்ற நூர்ஜஹான் நாவலை முன்வைத்து… - எச்.முஜீப் ரஹ்மான்


அண்மையில் அன்வர் பாலசிங்கம் கருப்பாயி என்கிற நூர்ஜஹான் என்ற நாவலை வெளியிட்டுள்ளார். அந்த நாவல் கடந்த பல நூற்றாண்டுகளாக நிலவி வந்த கற்பிதங்களை கேள்விக்குட்படுத்துகிறது. இஸ்லாம் சமநிலை சமுதாயம் என்றும் இஸ்லாத்தில் மதம் மாறினால் ஜாதி, ஜாதியம், தீண்டாமை ஒழிந்துவிடும் என்ற அபத்தவாதங்களை தவிடு பொடியாக்குகிற விதம் மதமாற்றத்தினால் இஸ்லாமியரான அன்வர் பாலசிங்கம் தீண்டாமை எல்லாவிததிலும் தொடருவதாக இருக்கிறதே ஒழிய மதமாற்றத்தால் பெரிய விமோசனம் ஒன்றுமில்லை என்பதை அழுத்தமாக தமது நாவல் மூலமாக பதிவு செய்துள்ளார். இதை முஸ்லிம்கள்(உயர்ந்த ஜாதி) எதிர்க்க கூடும். 

தமிழகத்தில் தலித்தியத்தின் பாய்ச்சல் மற்ற இந்திய பரப்பில் இருந்து சற்றே வித்தியாசபட்டிருந்ததை இத்தருணத்தில் நினைத்துப் பார்க்கவேண்டியிருக்கிறது. தலித் தான் தலித் இலக்கியத்தை உருவாக்கமுடியும் என்பதை அன்வர் பாலசிங்கம் நிரூபித்துள்ளார். மீன்காரதெரு நாவல் மூலமாக முதன்முதலில் தலித் பிரச்சனையை ஜாகிர்ராஜா துவங்கிவைக்க தற்பொழுது தலித்முஸ்லிம் பிரச்சனை பூதாகாரமெடுத்திருக்கிறது. ஹெச்.ஜி.ரசூல் தலித் முஸ்லிம் என்ற நூலை அண்மையில் வெளியிட்டுள்ளது இந்தசூழலுக்கு பொருத்தமானதாக இருக்கிறது. நான் தலித்முஸ்லிம் என்ற இணையத்தின் வாயிலாக தலித் முஸ்லிம் பிரச்சனைகளை பல ஆண்டுகளாக பதிவு செய்து வருகிறேன். ஆக தலித்தியத்தின் பாய்ச்சல் வேகப் பட்டிருக்கிறது.

புறப்படு நீயும் இஸ்லாத்தை நோக்கி என்று சூளுரைத்த கொடிக்கால் சேக் அப்துல்லா தொடங்கி பெரியார் தாசன்வரை பல தலித் தலைவர்களும் இஸ்லாமாக மதம் மாறி வாதபிரதிவாதங்களை தமிழ்சூழலில் களமெடுத்து கொடுத்தாலும் தலித்முஸ்லிம் பிரச்சனைகளை கண்டும்காணாமல் தான் இருந்து வருகிறார்கள். அஸ்கர் அலி எஞ்ஜினியர் வெளியிட்ட Changing Gods: Rethinking Conversion in India என்ற நூலில் மதமாற்றம் குறித்து அதிகமாகவிவாதித்து இருப்பார். ஆனால் அவரும் தலித்முஸ்லிம் பிரச்சனைகளை விவாதிக்காதது வியப்பாக இருக்கிறது. ஆக முஸ்லிமாக மாறிய தலித்தலைவர்களானாலும் சரி இஸ்லாமிய ஆய்வாளர்களும் சரி திட்டமிட்டு தலித் பிரச்சனையை மறைத்துவிடுகின்றனர்.இந்த நாவலைப் பற்றி அன்வர் தனது முன்னுரையில் சொல்லும் போது ''சுதந்திரம் என்பது (மதமாற்றம்) வெற்றுப் பெயர் மாற்றத்தினாலோ, பண்பாடு கலாச்சாரங்களை மாற்றிக் கொள்வதாலோ வருவதில்லை என்பதின் ஆகப் பெரிய படிப்பினைதான் இந்த நாவலுக்கான மூலக்கரு'' என்பது தான் தலித்முஸ்லிமின் முக்கிய பிரச்சனை என்பது தெளிவாகிறது.

காமட்சிபுரம் கிராமத்தில் மதம் மாறிய தலித்துகள் மதம் மாறிய பிறகும் தீண்டதாகதவர்களாக தான் அப்பகுதியை சுற்றிவாழுகின்ற உயர்ஜாதி இந்துக்களும் ஏனையோரும் ஏன் முஸ்லிம்களும் நடத்துகின்றனர் என்றும் மதம் மாறிய காரணத்தால் முதிர்கன்னிகளாக பல பெண்களுக்கு திருமண வாய்ப்பு மறுக்கப்ப்டுகிறது. ஏனைய முஸ்லிம்கள் பெண்கொடுப்பதையோ எடுப்பதையோ இப்பகுதி மக்களிடம் கொடுக்கல்வாங்கல் செய்யவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகும் இப்பகுதி மக்களின் உணர்வுகளுக்கு என்ன பதில் என்ற விதமாக கருப்பாயி என்கிற நூர்ஜஹான் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்து விடுகிறாள். அந்த மரணத்தை விவாதிக்கும் விதமாக தொடங்கும் நாவலில் தலித் முஸ்லிம்களின் காத்திரமான பிரச்சனைகள் விவாதிக்கப்படுகிறது. அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக அவர்களது வாழ்க்கை விவாதிக்கப்படுகிறது. என்ன தீர்வு முன்வைக்கப்படுகிறது. என்று நாவல் மதம் மாறிய தலித்துகளின் இதுவரை திறக்கப்படாத பக்கங்கள் திறக்கப்பட்டிருக்கிறது. நாவல் வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் புது திசைவழிகளை காண்பித்து தருகிறது.

பதிவு ஒன்று

மீனாட்சிபுரம் மதம் மாற்றம் நடந்த போது மதம் மாறிய உமர் என்பவரின் நேர்காணல் இங்கு முன்வைக்கப்படுகிறது. மதம் மாறுவதற்குரிய நிர்பந்தம் ஏன் ஒடுக்கப்பட்ட மக்காளுக்கு ஏற்படுகிறது என்பதை ஆயிரம் ஆராய்ச்சியாளர்கள், அறிவுஜீவிகள் விவாதம் செய்வது அய்வர் யானையை வர்ணித்த கதைபோலச் செய்தாலும் அந்த மக்களை நேரில் கண்டு அவர்கள் சொன்னதை அப்படியே வெளியிட்டுள்ளோம்!

நோய் நாடி, நோய் முதல் நாடுவதே உயர்ந்த சிகிச்சை முறை; நோயின் கொடுமையால் அவதியுற்று அழுகின்றவனை அடித்து மாற்ற முயற்சிப்பது பலன் தருமா? வாசகர்களே முடிவு செய்யட்டும்!

இந்து மதத்திலிருந்து முஸ்லிம் மதத்துக்கு மாறியுள்ள உமர்செரீப் கூறியதாவது:

உமர்செரீப்: இங்கே வந்த மணியன் கேட்டார், "நீங்க பெரியார் கொள்கைக்காரங்கறீங்க; இந்த மதத்திலும் சாமி கும்பிட வேண்டியது தானே இருக்கிறது? பின் ஏன் மதம் மாறினீங்கன்னு கேட்டார்." நாங்க சொன்னோம், "இந்து மதத்திலே சாதி இருக்குது. இங்க சாதி வித்தியாசம் இல்லை. எனக்கு கடவுள் மறுப்பு கொள்கை இருக்கலாம். ஆனல், எல்ல இடத்திலும் உன் சாதி என்னன்னு தானே கேக்கறாங்க என்று சொன்னேன்!

ஆசிரியர்: அதுக்கு மணியன் என்ன சொன்னார்?

உமர்செரீப்: அதுக்கு அவர் ஒண்ணும் சொல்லல்லே.

ஆசிரியர்: உங்களுக்கு இந்த எண்ணம் திடீர்னு தோணுச்சா? இல்ல கொஞ்ச நாளாவே இருந்ததா?

உமர்செரீப்: 20 வருஷத்துக்கு முன் எங்க தகப்பனார் அப்படி மாறணும்னு ஏற்பாடு பண்ணினார். ஆனா சில பெரியவங்கள்லாம் தடுத்து நிறுத்திட்டாங்க.

இப்ப நாங்கள்லாம் படிச்சவங்க. 10, 20 பேர் செர்ந்து இதிலேயே இருப்பதா? அல்லது ஒரு 50 வருஷம் கழித்தாவது விமோசனம் உண்டா அப்படீன்னு யோசிச்சோம். இன்னும் 50 வருஷம் கழிச்சும் நமக்கு தாழ்த்தப்பட்டவங்கற முத்திரை மறையாது என்று உணர்ந்த பிறகு தான் மதம் மாற முடிவு செய்தோம்.

ஆசிரியர்: நீங்க படிச்சவங்கன்னு சொன்னீங்க; அதுவரைக்கும் படிச்சிருக்கீங்க?

உமர்செரீப்: பி.ஏ. வரை படிச்சிருக்கேன்.

ஆசிரியர்: எந்தக் காலேஜில்?

உமர்செரீப்: ஸ்ரீவைகுண்டம் காலேஜ்ல.

ஆசிரியர்: சரி, இவ்வளவு படிச்சிருக்கீங்க. உங்களுக்கு சலுகைகள்லாம் கிடைச்சிருக்குமே!

உமர்செரீப்: ஆமா கிடைச்சது.

ஆசிரியர்: உங்களுக்கு தாழ்த்தப்பட்டவங்க அப்படீங்கறதனாலதான் இந்த சலுகையெல்லாம் கிடைச்சது. அப்போ இந்தச் சலுகையெல்லாம் கிடைக்காதுன்னு தெரிஞ்சு தானே மாறுனீங்க?

உமர்செரீப்: ஆமா! தெரிஞ்சு தான் மாறுனோம். சலுகை கிடைக்காட்டிலும் பரவாயில்லை தாழ்த்தப்ப்ட்டவன் என்கிற முத்திரையில்லாம இருந்தால் போதும் என்று மாறினோம்.

இப்போது ஏன் இந்த முடிவு?

ஆசிரியர்: இதுக்கு முன்னால் இந்தக் கொடுமைகள்லாம் அனுபவிச்சுக்கிட்டுதானே இருந்தீங்க? இப்ப எப்படி திடீர்னு இந்த முடிவுக்கு வந்தீங்க?

உமர்: நாங்கள் கொடுமை அனுபவிச்சாலும் பரவாயில்லை எங்க வருங்கால சந்ததியாவது நல்லா இருக்கட்டுமென்றுதான் இந்த முடிவுக்கு வந்தோம். வருங்கால சந்ததி மற்றவர்களோடு சரி சமமாக மானத்தோட இருக்கணும்னுதான் இந்த முடிவுக்கு வந்தோம். ஏது மரியாதை?

ஆசிரியர்: நீங்க பி.ஏ., வரைக்கும் படிச்சிருக்கீங்களே அதுக்காகவாவது கிராமத்தில் மரியாதை காட்டமாட்டார்களா?

உமர்: எங்கே காட்டுறங்க? இல்லையே!

ஆசிரியர்: உங்க சாதியாரைத் தவிர, பிற சாதியார் மரியாதை காட்டறாங்களா?

உமர்: எங்க காட்டறாங்க?. வெள்ள வேட்டி, வெள்ள சட்டை மோட்டுகிட்டு போனாலே, அதோ போறான் பாரு வெள்ள வேட்டி கட்டிக்கிட்டு, படிச்சுப்புட்டானாம் அப்படீன்னு கிண்டல் செய்றாங்க. டிபார்ட்மெண்டில கூட படிச்சாலும் பட்டம் பெற்றாலும் துவேஷம் தான் பண்றாங்க.

ஆசிரியர்: இங்க பொருளாதாரத்தில் எப்படி? தொழில் முறை என்ன?

உமர்: இங்க பெரும்பாலும் விவசாயம் பண்றாங்க; எல்லாருக்குமே சொந்ததைடங்கள் இருக்கு.

ஆசிரியர்: நீங்க யாராவது தினக் கூலிகளாக இருக்கீங்களா?

உமர்: தினக்கூலிகளும் பத்து இருபது பேர் இருக்காங்க. அவங்கலும் மதம் மாறியிருக்காங்க.

துவேஷமே காரணம்

ஆசிரியர்: மற்ற கிராமத்திலே இருக்கிற தாழ்த்தப்பட்டவங்களை விட, குறிப்பா திருநெல்வேலி பக்கத்தில் இருக்கிறவங்க படிப்புத்துறையில் முன்னேறுனவங்க பொருளாதாரரீதியில் எடுத்துக்கிட்டாலும் மற்றவங்களைவிட நல்ல நிலையில் இருக்கிறீங்க. அப்படி இருந்தும் உங்களுக்கு இந்த எண்ணம் தோண வேண்டிய அவசியமென்ன?

உமர்: துவேஷம் தான் காரணம். மனித உரிமை தான் வேண்டும். படிப்பு பரவப்பரவ மக்களுக்கு பகுத்தறிவு உண்டாகுது. அப்போது இதுல இருக்கிறதனால என்ன நன்மைன்னு சிந்திக்கிறாங்க. நம்மை மனுசனா மதிக்காத சாதியில ஏன் இருக்கணும்? நம்மை மதிக்கிற மதத்துக்கு போயிடலாமேன்னு நினைக்கிறாங்க.

ஆசிரியர்: நீங்க பெரியார் கூட்டங்களையெல்லாம் கேட்டிருக்கீங்கள்ள, அந்தக் கொள்கையில் நம்பிக்கை உண்டா?

உமர்: ஆமா!

ஆசிரியர்: இருந்தாலும் நீங்க இளைஞர்கள், உங்க சமுதாயத்தில் இருக்கிற பெரியவங்க என்ன நினைக்கிறாங்க? அவங்க மதம் மாற ஆதரவா இருந்தாங்களா?

உமர்: நாங்க எந்தப் பெரியவங்களையும் அணுகவில்லை; எல்லாம் இளைஞர்கள் தான். ஆனா எங்க ஊர் பெரியவங்களும் மதம் மாறியிருக்காங்க.

ஆசிரியர்: இங்கு மொத்தம் எத்தனை குடும்பங்கள் மதம் மாறியிருக்கு?

உமர்: மொத்தம் 300 குடும்பத்தில் 210 குடும்பங்கள் மதம் மாறியிருக்காங்க.

ஆசிரியர்: ஒரு குடும்பத்துக்கு எத்தனை பேர்?

உமர்: சராசரி 5 பேரு.

ஆசிரியர்: அப்ப ஒரு ஆயிரம் பேர் இருக்கும்.

உமர்: ஆமாம்! முக்கியமானவரை மறப்பதா?

ஆசிரியர்: இப்ப சாதாரணமா தீண்டாமையினால தொந்தரவு, சுயமரியாதையில்லாம நடத்தப்படுவது, நமக்கு படிச்சும் கவுரவம் இல்லை இது மாதிரி தொந்தரவு இருக்குது.

இந்து மதத்தில் தீண்டாமையெல்லாம் அனுசரிக்கிறது இல்லைன்னு சங்கராச்சாரி சொல்றாரே? மதாச்சாரியார்கள் அப்படி சொல்லியும் நடைமுறையில் இங்க இருக்கறவங்க கடைபிடிக்கறதில்லையேன்னாலும் நமக்கு சங்கராச்சாரி தானே முக்கியம்! அவுங்கள விட்டுட்டு எப்படி போறதுன்னு நீங்க நினைக்கலியா?

உமர்: இந்து மதம்னு ஒண்ணு இருக்கத்தான் செய்யுது; இல்லேன்னு சொல்லல. இங்கே தாழ்த்தப்பட்டவங்களுக்கு எந்தப் பயனும் கிடையாது. தாழ்த்தப்பட்டவன் இந்துவா இருக்கிறதில அர்த்தமேயில்லை.

ஏன்னா, அவங்க "சாதி இந்து'ன்னு வைச்சுக்கிறாங்களே தவிர "அரிஜன்' என்பதை அப்படியே தான் வைச்சிருக்காங்க. அதை மாத்தலியே.

அவங்க அன்னைலேயிருந்து இன்னைய வரைக்கும் ஒரு "அரிஜனை' இந்துவா ஏத்துகிறதில்ல.

ஆக முடியாது

இவன் தான் அவங்களோட போயிடுறானே தவிர இவனை அவுங்க ஒத்துக்கறதில்ல. இங்கே கலவரம் நடக்குதுன்னா சாதி "இந்து'க்களுக்கும் "அரிஜனனு'க்கும் தான் சண்டைன்னு சொல்றானே தவிர இந்துக்கும் இந்துக்கும் சண்டேன்னு சொல்றதில்ல. அப்படியிருக்கும் போது எப்படி "அரிஜன்' இந்து ஆக முடியும்?

ஆசிரியர்: சமஸ்கிருதத்தில் சாதி இந்துக்களுக்கு வர்ணஸ்தர்கள் மற்றவர்களுக்கு ஈழவர்களையும் சேர்த்து அவர்ணஸ்தர்கள் என்று சொல்கிறார்கள். அந்த அவர்ணஸ்தர்களுக்கும் கீழே எல்லோருக்கும் கீழே கடைசியாக தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலை வைத்துள்ளனர்.

இப்ப சங்கராச்சாரியார் துக்ளக் பேட்டி மற்ற செய்திகளை எல்லாம் பார்த்து விட்டு தலைவர்கள்லாம் வந்தாங்களே, உங்களை வந்து பாக்கலியா?

உமர்: சந்திக்கலிங்க.

ஆசிரியர்: வாஜ்பேயி எல்லாம் வந்தாரே, வந்து பாக்கலியா? நியாயமாக உங்கள தானே வந்து சந்திக்க வேண்டும்?

உமர்: அவரு ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தோட போனாரே தவிர எங்களை வந்து சந்திக்கல. மதம் மாறாதவர்களைக் கூட போய்ச் சந்திக்கல. ஒரு கூட்டத்தைப் போட்டாங்க! இஸ்லாம் மதத்தைப் பத்தி தாக்கித் தாக்கி பேசினாங்க.

'மதம் மாறாதே' 'மதம் மாறாதே'!

'அரபு நாட்டுப் பணத்துக்கு அடிமையாகாதே'

அப்படீன்னு இன்னும் மோசமான வார்த்தைகளால திட்டினாங்க. அப்புறம் முடிச்சுட்டு போயிட்டாங்க.

ஆசிரியர்: மற்றவங்க யாரும் சந்திக்கலயா?

உமர்: வாஜ்பேயை நாங்களா போய் சந்திச்சோம். "இந்த மதக் கொடுமையினால் தான் நாங்க மதம் மாறினோம். இருக்கிறவங்களுக்காவது கொடுமையில்லாம நடத்துவீங்களான்னு? கேட்டோம்.

ஆசிரியர்: அதுக்கு என்ன சொன்னாரு?

உமர்: அவரு உடனே பேச்சை முடிச்சிக்கிட்டு போயிட்டாரு. போயி அங்க என்ன சொல்லி விட்டாருன்னா, "இஸ்லாம் மதத்துக்கு போனவங்கள்லாம் தாய் மதத்துக்குத் திரும்பப் போறாங்கன்னு" சொல்லிட்டுப் போயிட்டார்.

இஸ்லாம் மதத்துக்கு மாறியது ஏன்?

ஆசிரியர்: சரி இந்து மதத்தில் கொடுமையிருக்கிறதினாலே மதம் மாறினீர்கள். எத்தனையோ மதங்கள் இருக்க ஏன் இஸ்லாம் மதத்துக்கு மாறினீர்கள்?

உமர்: இந்து மதத்தை விட்டா கிறிஸ்தவ மதம் இருக்கிறது. நாங்கள்லாம் இஸ்லாம் மதத்துக்கு மாறனும்கிறதுக்கு முன்னாடி ஒரு 50 குடும்பங்கள் கிறிஸ்தவர்களாக மாறினார்கள்.

கிறிஸ்தவ மதம் மாறினால்....

ஆசிரியர்: எத்தனை வருஷத்திற்கு முன்பு?

உமர்: சுமார் 20 வருஷத்திற்கு முன்னாடி, அங்க தாழ்த்தப்பட்டவன் தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவனாக இருக்கிறானே தவிர தாழ்த்தப்பட்டவன் நாடார் கிறிஸ்தவனுக்கு பெண் கொடுப்பதே நாடார் கிறிஸ்தவன். தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவனுக்குப் பெண் கொடுப்பதோ இல்லை. அங்க சாதி அப்படியே இருக்கிறது. ஆனால் இஸ்லாம் மதம் அப்படி இல்லை. யார் ஒருவன் அல்லாவைத் தொழுகிறானோ அவன் எல்லாமே முஸ்லிம் தான். அங்க தீண்டாதவன் என்ற வித்தியாசம் கிடையாது.

'ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!'

பதிவு இரண்டு

2002 ஆம் ஆண்டில் ஒரியண்டல் லாங்குமென்ஸ் லிமிடெட் புத்தக கம்பெனியினரால் வெளியிடப்பட்டுள்ள "Vishwa Hindu Parishad and

Indian Politics" என்ற ஓர் ஆங்கில நூல் இதன் ஆசிரியர் "மஞ்சேரி காட்ஜு" என்ற அய்தராபாத் பல்கலைக் கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்துறையின் விரிவுரையாளரான ஓர் அம்மையார். இங்கிலாந்து நாட்டில் உள்ள School of Oriental and African Studies என்ற லண்டன் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து பி.எச்.டி பட்ட ஆய்வினை இந்த தலைப்பில் மேற்கொண்டு செய்தார். அது தான் மேலே காட்டிய நூலாக வெளிவந்துள்ளது.

அந்நூலில் மூன்றாவது அத்தியாயத்தில், "Translation to Mass Activism" தீவிரதன்மை கொண்ட மக்கள் இயக்கமாக(வி.இ.ப) மாற்றம் என்ற தலைப்பில் உள்ள ஒரு பகுதி கீழே தரப்படுகிறது.

In February 1981 Meenakshipuram, a village in Tirunelveli District of Tamil Nadu with a population of 1,300 almost all of whom were "Untouchables", became a centre of controversy when large&scale conversions to Islam were reported. For the VHP and its associate organizations, the Meenakshipuram conversions were not an outburst of local grievances, but "a small experience of an old conspiracy to destroy Hindus, Hinduism and Hindusthan," financed by petrodollars.

It was reported that around 1,000 of 1,250 untouchables had converted to ISLAM, a step to protest against the denial of social equality. The rules of social conduct were laid down by the high&caste Thevars, and their infringement prompted harsh retaliation. Conversions to ISLAM had taken place in 1980&81 in some adjoining areas, but they did not provoke much of an outcry from the VHP or any other HINDU outfit, this was probably because the number was not as great as in Meenakshipuram, and also because bitter intercaste relations prevented reaction on the part of higher castes. The conversions in these areas seem to have been a reaction to the social and political humiliation suffered by the untouchables at the hands of the higher castes like the Thevars.

The incident was communally interpreted by the RSS and VHP as 'an act performed by several thousand Muslims, both men and women, from the surrounding areas, who invaded the village and forced the Harijans to convert.' It seems clear, however, that the VHP could not reconcile itself to the issues which were brought to the fore by the Meenakshipuram mass conversions, despite, the linkages it had drawn in its early years between casteism (rules of purity and pollution) and conversions.

The agenda of social reform contained in the original charter had become overshadowed. The VHP's socially privileged and conservative character had much to do with this. That continued oppression by the high&caste HINDUS could lead to a point when untouchables would make a total break from the HINDU fold was something that had little place in the VHP social understanding. This understanding also denied agency to the socially depressed classes, who of their own volition, could detach from a community and join another.

It is this break that a conservative upper&caste HINDU seemed unable to bear and accept&primarily because, it can well be argued, this reveals a store of embarrassments and uncovers many unpleasant facts within HINDU society structured by Brahminical Hinduism(Raj 1993:233).The Meenakshipuram episode was widely publicized by the VHP and other organizations like the HINDU Munnani and the Arya Samaj, after which, it is reported, seven of the converts reconverted to Hinduism(Khan 1991:49). The VHP floated the Sanskriti Raksha Yojana(Programme to Protect Culture) immediately after the incident. In November and December 1982, it launched the Jana Jagrana Abhiyana(Campaign for People's Awakening) to "warn" the HINDUS about "the international conspiracy to devour Hinduism". During this campaign the VHP managed to collect some funds from the public as donations.

However, apart from making monetary contributions people generally remained indifferent to the issue. The 1980s thereafter saw the VHP preoccupied with planning and holding campaigns, conferences and processions at a regional level for "national integration".

The issue of religious conversion was much hyped, and was projected as a grave threat to national security and integrity. State intervention was demanded by the VHP to supplement its efforts to check the activities of Christian missionaries.

இதன் தமிழாக்கம்:

தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் 1300 மக்கள்தொகை கொண்ட ஒரு சிற்×ர் மீனாட்சிபுரம். அங்கே வாழ்ந்து வந்தவர்களில் பெரும்பாலோர் தீண்டத்தகாதவர்களே. அவர்களில் பெரும் எண்ணிக்கை கொண்டவர்கள் 1981 பிப்ரவரியில் இஸ்லாம் மதத்திற்கு மாறினர். அதனால் ஒரு முரண்பாட்டின் மையமாக அது ஆயிற்று.

விசுவ இந்து பரிசத், அதன் தோழமை அமைப்புகளைப் பொறுத்தவரை, இந்தத் திடீர் மத மாற்றத்திற்கான காரணம் உள்ளூர் குறைபாடுகளின் வெளிப்பாடு இல்லை. ஆனால், எண்ணெய் வள நாடுகளால் நிதி உதவி அளிக்கப்பட்ட, இந்துக்களை, இந்து மதத்தை, இந்துஸ்தானத்தை அழிக்கும் ஒரு பழைய சதித்திட்டத்தின் ஒரு பகுதியே இந்த மதமாற்றங்கள் அன அவை கருதின. சமூகத்தில் சமத்துவம் மறுக்கப்பட்டதை எதிர்க்கும் ஒரு நடவடிக்கையாகவே இங்கிருந்த 1,250 தீண்டத்தகாதவர்களில் அ,000த்துக்கும் மேற்பட்டோர் இஸ்லாத்திற்கு மதம் மாறினர் என அறிவிக்கப்பட்டது.

சமூகத்தில் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்னும் விதிகளை உயர்சாதியினரான தேவர்கள் வகுத்தனர்; அந்த விதிகளை மீறுதல் கடுமையான எதிர்விளைவையே உருவாக்கிற்று. 198081 இல் இப்பகுதியைச் சுற்றியிருந்த சில இடங்களிலும் இஸ்லாத்திற்கு மதமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் இந்த மதமாற்றங்கள் வி.இ.ப. அல்லது மற்ற இந்து அமைப்புகளிடமிருந்து எந்தவிதப் பெருங்கூச்சலையும் எழுப்பவில்லை. ஏனெனில் மீனாட்சிபுர மதமாற்றங்கள் போல பெரும் எண்ணிக்கையிலான மதமாற்றங்கள் அல்ல அவை. மேலும் உயர் ஜாதியினரிடையே கசப்பு மிகுந்த (சாதிகலப்பு) உறவுகளும் உயர்சாதியினரின் எதிர்ப்பைத் தடுத்தன. தேவர் போன்ற உயர்சாதியினரிடம் தீண்டத்தகாத மக்கள் சமூக அளவிலும் அரசியல் நிலையிலும் பட்ட அவமானங்களின் எதிர்விளைவே இந்த மதமாற்றங்கள் எனத் தோன்றுகிறது.

மீனாட்சிபுரத்தைச் சுற்றியுள்ள சிற்×ர்களில் இருந்து ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட பல ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள் இந்த ஊர்களுக்குள் நுழைந்து, மதமாற்றத்திற்கு ஆதிதிராவிடரைக் கட்டாயப்படுத்தினர் என்பதாக இந்த நிகழ்ச்சிக்கு ஆர்.எஸ்.எஸ்., வி.இ.ப. போன்றோர் மதக்கண்ணோட்டத்துடன் விளக்கம் அளித்தனர். கடந்த காலங்களில் இங்கு நிலவிய தூய்மை, தீட்டு போன்ற கடுமையான ஜாதி வெறித்தனத்திற்கும், இந்த மத மாற்றங்களுக்கும் இடையே உள்ள தொடர்பை ஒப்புக்கொள்ள இயலாத வி.இ.பரிசத்தினால், மீனாட்சிபுரம் மதமாற்றங்கள் வெளிக்கொணர்ந்த பிரச்சினைகளை ஏற்றுக்கொள்ளவோ, எதிர்கொள்ளவோ இயலவில்லை என்றே தோன்றுகிறது.

இந்த மதமாற்றங்களுக்குப் பின்னணியில் உள்ள சமூக சீர்திருத்தம் என்னும் செயல்திட்டம் இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டது. சமூக அளவில் உரிமைகள் பலவற்றைப் பெற்றுள்ள, பிற்போக்கு மனப்பான்மை கொண்ட வி.இ.பரிசத்தின் பங்கு இவ்வாறு இருட்டடிப்பு செய்யப்பட்டதில் பெரிதாகும். உயர்ஜாதி இந்துக்கள் தொடர்ந்து தீண்டத்தகாத மக்களை ஒடுக்கி, கொடுமைப்படுத்திக் கொண்டே வருவது, இந்து மதத்திலிருந்தே முற்றிலுமாகத் தங்களை அவர்கள் துண்டித்துக் கொள்ளும் ஒரு நிலைக்கு வழி வகுக்கவே செய்யும். இந்த சமூக நிலையை வி.இ.ப. சிறிது கூடப் புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை. இத்தகைய சமூகச் சூழ்நிலையை வி.இ.ப. சரியாகப் புரிந்து கொள்ள இயலாமற் போனதன் காரணமாக, ஒரு சமூகத்தினர் தாங்களாகவே இந்து மதத்திலிருந்து விலகி, மற்றொரு மதத்தில் சேர்ந்து கொள்வதைத் தவிர வேறு எந்த வழியும் அற்றவர்களாகவே சமூக அளவில் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆகிவிட்டனர்.

இந்து மதத்துடனான தங்களது தொடர்பை இவ்வாறு அவர்கள் துண்டித்துக் கொண்டதை பிற்போக்கு மனப்பான்மை கொண்ட உயர்ஜாதி இந்துக்களால் ஏற்றுக் கொள்ளவோ, பொறுத்துக்கொள்ளவோ இயலாமல் போனது என்றே தோன்றுகிறது. இத்தகைய மதமாற்ற நிகழ்ச்சிகள் பெரும் அளவிலான தர்மசங்கடங்களை உருவாக்கும் என்பதும், இந்து சமூகத்தினுள் பார்ப்பனர்களின் இந்துக் கோட்பாட்டினால் ஏற்பட்டுள்ள ஜாதி அமைப்பு முறையின் விரும்பத்தகாத உண்மைகள் பலவற்றை வெளிப்படுத்தும் என்பதும் இதன் காரணங்களாக இருக்கக்கூடும் என்ற வாதமும் சரியாகவே தோன்றுகிறது.(ராஜ்: 233)

வி.இ.ப. மற்றும் இந்து முன்னணி, ஆர்ய சமாஜம் போன்ற அமைப்புகளால் மீனாட்சிபுரம் மதமாற்ற நிகழ்ச்சிக்குப் பரவலான விளம்பரம் அளிக்கப்பட்டது. அதன்பின், மதம் மாறியவர்களில் 7 பேர் மறுபடியும் இந்து மதத்திற்கு மாறியதாக அறிவிக்கப்பட்டது.(கான் அ991 : 49)

இந்த நிகழ்ச்சிக்குப்பின் கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் சமஸ்கிருத ரட்சக யோஜனா என்ற அமைப்பை வி.இ.ப. தொடங்கியது. 1982 நவம்பர், டிசம்பர் மாதங்களில் மக்களின் விழிப்புணர்வுக்காக ஜன ஜக்ரண அபியானா என்ற அமைப்பையும் அது தொடங்கியது. இந்து மதத்தை அழிக்கும் அனைத்துலக சதித்திட்டத்தைப் பற்றி இந்துக்களுக்கு எச்சரிக்கை அளிப்பதே இதன் நோக்கம். இந்தப் பிரசாரங்களின் போது நன்கொடையாகப் பொதுமக்களிடமிருந்து ஓரளவுக்கு நிதி திரட்டிக் கொள்ளவும் வி.இ.பரிசத்தால் முடிந்தது. என்றாலும், நன்கொடை அளிப்பதற்கு மேலாக மக்கள் இந்தப் பிரச்சினை பற்றி அதிக அக்கறையோ, கவலையோ காட்டவில்லை.

தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்திப் பிரச்சாரக் கூட்டங்களும், மாநாடுகளும், பேரணிகளும் நடத்துவதில் 1980ஆம் ஆண்டுக்குப் பின் வி.இ.ப. தன்னை ஈடுபடுத்திக் கொண்டது. மதமாற்றப் பிரச்சினை பெரிதுபடுத்தப்பட்டு, தேசிய பாதுகாப்புக்கும், ஒருமைப்பாட்டுக்கும் ஒரு பெரும் அச்சுறுத்தலாகக் காட்டப்பட்டது. கிறிஸ்தவ மத அமைப்புகளின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் அரசின் தலையீட்டை வி.இ.ப. கோரியது.

பார்ப்பனீய ஆதிக்கம் ஆட்டம் கண்டுவிடுகிறது என்பதற்காகவே அவர்கள் மதமாற்றத்தை அதுவும் சுமார் 100 கோடி மக்கள் கொண்ட நாட்டின் தென்கோடியில் எங்கோ ஒரு சிறு கிராமத்தில் ஏற்பட்டதை ஒரு பெரும் பூகம்பமாகக் கருதி, தங்கள் அமைப்பைப் பலப்படுத்தி, இன்று பகிரங்கமாக 'திரிசூலம்' வழங்கி, வன்முறையை வெளிப்படையான ஆயுதமாகக் கையாளுகின்றனர்.

பதிவு மூன்று

இந்திய முஸ்லிம்களிடையே நிலவும் சாதி தீண்டாமை குறித்து ஆய்வு செய்து, மசூத் ஆலம் ஃபலாஹி அளித்த நேர்காணல்..

கேள்வி: இந்திய முஸ்லீம்களிடையே சாதியம் என்ற பிரச்சினையை ஆய்வு செய்வதில் நீங்கள் எவ்வாறு அக்கறை காட்டத் தொடங்கினீர்கள்?

பதில்: பீகார் மாநிலத்திலுள்ள சீத்தாமரி என்ற சிறு கிராமத்தைச் சேர்ந்தவன் நான். கிழக்கு உத்திரப்பிரதேசத்திலுள்ள மவுனத் பான்ஜன் என்ற ஊரில் எனது பள்ளிப் படிப்பை நான் முடித்தேன். பின்னர், இஸ்லாமிய உயர் கல்வி பெறுவதற்காக, ஆஜம்கார் மாவட்டத்தின் பிலாரியாகன்ஜ் எனும் ஊரிலுள்ள ஜாமியா உல்ஃபலா மதரசாவுக்குச் சென்றேன். 1999ஆம் ஆண்டில் ஃபசிலத் கல்வியை முடித்த நான், இளங்கலை பட்டப்படிப்புக்காக அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். அதன்பின்னர், புதுடெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து முதுகலைப் பட்டம் பெற்றேன்.

1996ஆம் ஆண்டில், ஜாமியா உல்ஃபலாவில் நான் மாணவனாக இருந்தபோது, “''குரானைப் பற்றிய ஓர் அறிமுகம்'' என்ற ஒரு வார கால நிகழ்ச்சியை ஜமாத்இஇஸ்லாமிஹிந்த் என்ற அமைப்பு உத்திரப்பிரதேச மாநிலம் முழுவதும் ஏற்பாடு செய்திருந்தது. இதன் ஒரு பகுதியாக, முஸ்லிம்கள் அல்லாதோர் வாழும் பகுதிகளில் இஸ்லாமிய மதம் பற்றி விளக்குவதற்காக ஜமாத் தலைவர்கள் சென்றனர். குறிப்பாக, தலித்துகள் வாழும் பகுதிகளில் அவர்கள் கவனம் செலுத்தினர். இஸ்லாத்தின் பொதுக்கருத்தான சமூக ரீதியிலான சமத்துவம் பற்றி தலித்துகளிடம் அவர்கள் பேசினர்.

ஹக்கிம் அப்துர்ரவூஃப் என்ற மூத்த ஜமாத் தலைவர், பிலாரியாகன்ஜ்இல் உள்ள தலித்துகள் வாழும் சேரிப் பகுதிக்கு வந்தார். நான் படித்துக் கொண்டிருந்த மதரசாவும் இந்த ஊரில்தான் இருந்தது. இஸ்லாம் சமத்துவத்தைப் போதிக்கும் மதம் என்றும் சாதி, தீண்டாமை ஆகிய இழிவுகளுக்கு ஒரே தீர்வு இஸ்லாம்தான் என்றும் தலித்துகளிடம் அவர் கூறினார். தலித்துகள் இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொண்டு மதம் மாறுவார்களானால், முஸ்லிம்கள் அவர்களைக் கட்டித் தழுவி வரவேற்பார்கள் என்றும் அவர் கூறினார்.

அவ்வாறு அவர் பேசிக் கொண்டிருந்த போது, ஒரு தலித் இளைஞர் எழுந்து நின்று, அவரை நோக்கி, “இஸ்லாம் என்பது சமத்துவத்தைப் போதிக்கும் மதம் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால், உங்களுடைய முஸ்லிம் சமுதாயம் சாதிகள் மலிந்ததாகவே இருக்கிறது. இந்தப் பகுதியில் உள்ள முஸ்லிம்கள் தமது சாதிக்கு வெளியில் திருமணம் செய்து கொள்வதில்லை; மற்ற பகுதிகளிலும் அநேகமாக இதே நிலைமைதான். இந்நிலையில், தலித்துகளாகிய நாங்கள் முஸ்லிம்களாக மதம் மாறினால், எங்களுடன் யார் மணஉறவு வைத்துக் கொள்வார்கள்? எங்களுடன் சமமாக அமர்ந்து யார் உணவருந்துவார்கள்?'' என்று கேட்டார்.

அந்த இளைஞரின் வாதம், எனது நெற்றிப் பொட்டில் தாக்கியதைப் போலிருந்தது; என்னைச் சிந்திக்கத் தூண்டியது. அவர் கூறியது பெருமளவு உண்மை என்பது எனக்குத் தெரியும். அது முதற்கொண்டு, சாதிய அமைப்பின் வரலாறு பற்றிய பல்வேறு நூல்களை நான் படிக்கத் தொடங்கினேன். பல்வேறு இந்திய உலேமாக்களின் நூல்களையும் நான் ஆழ்ந்து படித்தேன். இந்த உலேமாக்கள், அவர்களது சீடர்கள் பலராலும் மிகச் சிறந்த அறிஞர்கள் என்று பெரிதும் மதிக்கப்பட்டவர்கள். மௌலவி அகமத் ரசாகான் பரேல்வி, மௌலவி அஷ்ரப் அலி பரூக்கி தான்வி முதலான இத்தகைய அறிஞர்களின் நூல்களையும் நான் படித்தேன்.

இந்த உலேமாக்களில் பலரும், பிறப்பு அடிப்படையிலான சாதிய மேன்மையை நடைமுறையில் ஆதரித்து வாதிடுவோராக இருப்பதைக் கண்டேன். இந்தச் சாதியக் கருத்தாக்கத்தின் அடிப்படையில், குரானுக்கு முற்றிலும் எதிரான வகையில் இவர்கள் ஃபத்வா வழங்கியுள்ளதை கண்டறிந்தபோது நான் பெரிதும் அதிர்ச்சியடைந்தேன். அரபு மொழியில் காஃபா என்றழைக்கப்படுவதன் கருத்தாக்கத்தைத் துணையாதாரமாகக் கொண்டு, சாதியப் படிநிலை வரிசைப்படி, குழுக்களுக்கிடையே சாத்தியப்படும் மணஉறவுகளைப் பற்றிய விதிகளை அவர்கள் முன்வைத்துள்ளனர்.

இதன்படி, அரபுத் தோற்றுவாயிலிருந்து வந்த முஸ்லீம்கள் (சையத்துக்கள், ஷேக்குகள்), அரபுத் தோற்றுவாய் அல்லாதவர்களைவிட அதாவது அஜாமி முஸ்லிம்களைவிட உயர்வானவர்கள். அரபுத் தோற்றுவாயிலிருந்து வந்தவர் என உரிமை பாராட்டும் ஒரு ஆண், அஜாமி முஸ்லிம் பெண்ணை மண முடிக்கலாம். ஆனால் அஜாமி முஸ்லிமாக உள்ள ஒரு ஆண், அரபு வழித்தோன்றலான ஒரு முஸ்லிம் பெண்ணை மணமுடிக்க முடியாது. இது போலவே பத்தான் முஸ்லிம் ஆணொருவன், ஜுலாஹா (அன்சாரி), மன்சூரி (துனியா), ராயின் (குன்ஞ்ரா), குரைஷி (காஸி) இனப் பெண்ணை மண முடிக்கலாம். ஆனால், அன்சாரி, ராயின், மன்சூரி, குரைஷி ஆகிய இனக்குழுவைச் சேர்ந்த எந்தவொரு முஸ்லிம் ஆணும், பத்தான் முஸ்லிம் பெண்ணை மணமுடிக்க முடியாது. ஏனென்றால் இந்தச் சாதிகள் அனைத்தும் பத்தான்களுக்குக் கீழானவை இவ்வாறாக இந்த உலேமாக்கள் வாதிட்டனர். ஒருவர் தமது சொந்தச் சாதியிலேயே திருமணம் செய்து கொள்வதுதான் சாலச் சிறந்தது என்று உலேமாக்களில் பலரும் நம்பினர்.

இஸ்லாமைப் பற்றிய எனது புரிதலுக்கு முற்றிலும் நேரெதிரானதாக அவர்களுடைய கருத்துக்கள் இருந்தன. அவர்களை முழுமையாகப் புரிந்து கொள்ள, அவர்களுடைய நூல்கள் எனக்குப் பெரிதும் உதவின. இந்தியாவில் உள்ள பல உலேமாக்கள் சாதிய அமைப்புக்குத் தவறாக இஸ்லாமியத் தன்மை வழங்குவதன் மூலம் அல்லது மதரீதியில் இசைவாணை வழங்குவதன் மூலம் சாதியத்தை நியாயப்படுத்த முயற்சிக்கின்றனர். இதை அறிந்த போது நான் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானேன். இந்து மதத்தில் இன்னமும் நீடித்து வரும் சாதிய நடைமுறையிலிருந்து இது வேறுபட்டதல்ல. ஏனென்றால், இந்துமதம்தான் சாதிய வேறுபாட்டுக்கும் சாதிய ஒடுக்குமுறைக்கும் மதரீதியாக இசைவாணை வழங்குகிறது.

சாதியம் பற்றிய எண்ணற்ற இந்திய உலேமாக்களின் நூல்களைப் படித்த பிறகு, ஜமாத்இஇஸ்லாமி தலைவரிடம் அந்த தலித் இளைஞர் முன்வைத்த கேள்வி கிட்டத்தட்ட முழுமையாக சரியானதுதான் என்பதை நான் புரிந்து கொண்டேன். சாதிய அமைப்பை நியாயப்படுத்துவதற்கு இத்தகைய உலேமாக்கள் இஸ்லாமிய மார்க்கத்தை இப்படித் தவறாக வியாக்கியானம் செய்வார்களானால், இஸ்லாம் மதத்துக்கு மாறுவது பற்றி எந்த தலித் அக்கறையோடு பரிசீலிப்பார்? இந்த மௌலவிகளால் திரித்து முன்வைக்கப்படும் இஸ்லாமிய மார்க்கத்தை எந்த தலித் ஏற்றுக் கொள்வார்?

இந்திய முஸ்லிம்களிடையே சாதியம் என்ற பிரச்சினையானது, ஏதோ இந்து மதத்தின் தாக்கத்தினால் மட்டும் ஏற்பட்டதல்ல; சாதிய அமைப்பை இஸ்லாமிய சட்டம் அல்லது ஷரீஅத் இன் ஓர் அங்கம் எனத் தவறாகக் கருதும் பெரும்பாலான இந்திய உலேமாக்களின் செல்வாக்கும் இதற்குக் காரணமாகும். இஸ்லாமிய மார்க்கத்தை முற்றிலும் தவறாக வியாக்கியானம் செய்வதன் மூலம் இந்த மௌலவிகள் இஸ்லாத்துக்கு எவ்வளவு பெரிய இழுக்கைக் கொண்டு வந்துள்ளனர் என்பதை உணர்ந்தபோது, நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.

கேள்வி: முஸ்லிம்களிடையே சாதிய பாரபட்சம் என்ற பிரச்சினையைப் பற்றி நீங்கள் எவ்வாறு எழுதத் தொடங்கினீர்கள்?

பதில்: சாதியையும் சாதிய பாரபட்சம் இழிவுபடுத்துதலையும், அப்பட்டமாக நியாயப்படுத்தி, மதரீதியில் சட்டபூர்வமாக்குவதற்கு இந்த உலேமாக்கள் முயற்சித்ததை அறிந்தபோது, இதைப் பற்றி எழுதுவது முக்கியத்துவம் வாய்ந்ததென நான் உணர்ந்தேன். இந்தப் பிரச்சினையைப் பற்றி எழுத முற்பட்டபோது, ஜாமியா உல்ஃபலாவில் பணியாற்றிய மௌலவி அனீஸ் அகமது சித்திகி ஃபலாஹி மதானி என்ற எனது மதிப்புக்குரிய ஆசிரியர், எனது சிந்தனையில் தாக்கத்தை ஏற்படுத்துபவராக இருந்தார். அவர் எங்களுக்கு மதங்கள் குறித்த ஒப்பீடு என்ற பாடத்தைக் கற்பிப்பவராக இருந்தார். படிநிலையாக உள்ள சாதிய அமைப்பு முறையை இந்திய முஸ்லீம்கள் எவ்வாறு இஸ்லாத்தின் உள்ளார்ந்த ஆன்மீகமாக மாற்றிவிட்டார்கள் என்பதையும், இந்து மதத்தின் தாக்கம் இதற்கு ஓரளவுக்குக் காரணமாக இருந்தது என்பதையும் அவரிடமிருந்து நான் கற்றுக் கொண்டேன்.

இருப்பினும், முஸ்லிம் பத்திரிகைகளில் இந்தச் சாதியப் பிரச்சினை பற்றி அபூர்வமாகவே விவாதிக்கப்படுகிறது. இந்தப் பிரச்சினையைப் பற்றி அவை முற்றாக மௌனம் சாதிக்கின்றன. இந்தியாவிலுள்ள பெரும்பாலான முஸ்லிம் பத்திரிகைகள் சுயநலவாதிகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன; வெளியிடப்படுகின்றன. மதரசாக்களில் அளிக்கப்படும் குறுகிய கண்ணோட்டமுடைய பயிற்சியின் காரணமாக, உண்மையிலேயே அவர்கள் விரும்பினாலும் கூட, இத்தகைய பிரச்சினைகளைப் பற்றி எழுத இயலாத நிலையிலேயே உலேமாக்கள் உள்ளனர்.

மேலும், இந்திய உலேமாக்கள் பெரும்பாலும் ஹனாஃபி மரபில் பயிற்றுவிக்கப்பட்டவர்கள். சாதி அடிப்படையிலான பாரபட்சம் காட்டுவதற்கு இந்த ஹனாஃபி மரபானது, மதரீதியில் புனித இசைவைத் தவறாகக் கற்பித்து வருகிறது. பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து இது நடந்து வருகிறது. ஹனாஃபி மரபுவழி சார்ந்த அறிஞர்களின் படைப்புகளைப் பரிசீலித்தால் இது தெளிவாகத் தெரியும்.

இதனால்தான், மிக மோசமாகப் புறக்கணிக்கப்பட்டும் மிகப் பெருமளவுக்கு விவாதத்திற்குரியதுமான இச்சாதியப் பிரச்சினையைப் பற்றி எழுதும் தார்மீகக் கடமை எனக்கிருப்பதாக நான் உணர்ந்தேன். எனவே “இந்தியாவில் முஸ்லிம்களும் தீண்டாமையும்'' என்ற தலைப்பில் பல கட்டுரைகளை நான் தொடர்ச்சியாக எழுதினேன். அலிகாரைச் சேர்ந்த இஸ்லாமிய அறிஞரும் ஜமாத்இஇஸ்லாமியின் மூத்த தலைவர்களுள் ஒருவருமான டாக்டர் ஃபஸ்லுர் ரஹ்மான் ஃபரிடி என்பவரை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் “ஜிந்தகிஇநவ்'' என்ற பத்திரிகையில் இவை வெளியாயின. பேரன்பு கொண்ட டாக்டர் ஃபரிடி இவற்றை வெளியிட்டு உதவினார். சாதிய பாரபட்சம்இழிவுபடுத்தலுக்கு மதரீதியில் இசைவாணை வழங்கும் உலேமாக்களைக் கடுமையாக விமர்சிப்பவையாக எனது சில கட்டுரைகள் இருந்தன.

கேள்வி: இந்தக் கட்டுரைகளின் மூலம் நீங்கள் வாதிட்டு நிலைநாட்ட முயற்சித்தது என்ன?

பதில்: இந்திய முஸ்லிம்களிடையே சாதி மற்றும் சாதிய அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள் நிலவுவதற்கான வரலாற்றுக் கண்ணோட்டத்தை அளிக்க நான் முயற்சித்தேன். இந்தியாவில் சாதிகளின் தோற்றம், சாதியை அடிப்படையாகக் கொண்ட பார்ப்பன மதத்தின் வளர்ச்சி; பவுத்தம், சீக்கியம், பக்தி இயக்கம் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு சாதிய எதிர்ப்பு இயக்கங்களின் பாத்திரம்; இந்தியாவில் இஸ்லாமிய மதம் பரவுதல்; குறிப்பாக, இஸ்லாத்தின் சமூக சமத்துவம் காரணமாக, அதன்பால் ஈர்க்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சாதிகளிடையே இஸ்லாமிய பரவுதல் ஆகிய இவை பற்றி நான் ஆய்வு செய்தேன்.

மறுபுறம், இந்திய வரலாற்றில் “இஸ்லாமிய ஆட்சி' என்று சொல்லப்படும் காலத்தில் எழுதப்பட்டு வெளியான நூல்களிலிருந்து பல்வேறு மேற்கோள்களை முன்வைத்து, முஸ்லிம் மன்னர்களும் பொதுவில் இஸ்லாமிய மேட்டுக்குடி ஆளும் கும்பல்களும் சாதிய அமைப்பை எவ்வாறு கட்டிக் காத்தனர் என்பதை நான் விளக்க முயற்சித்தேன். இந்துக்களில் “உயர்சாதியினர்' என்று சொல்லப்படுபவர்களுடன் கள்ளக்கூட்டு சேர்ந்து, இந்து மற்றும் முஸ்லிம் மக்களில் “கீழ் சாதியினர்' என்று சொல்லப்பட்டவர்களை எவ்வாறு ஒடுக்கினர் என்பதையும் நான் எடுத்துக் காட்ட முயற்சித்தேன்.

இந்த முஸ்லிம் மன்னர்களும் மேட்டுக்குடி ஆளுங்கும்பலும் கீழ்ச் சாதியினர் அல்லது ரஸில் சாதியினர் என்று சொல்லப்படுவர்களை அவர்கள் இந்துக்களானாலும், முஸ்லிம்களானாலும் கல்வி கற்க அனுமதித்ததில்லை; தங்களது அரசவைகளில் நுழையக்கூட அனுமதித்ததில்லை. இவை இந்து மற்றும் முஸ்லிம்களில் உயர்சாதியினருக்கு மட்டுமே என்று ஏகபோக உரிமை கொண்டாடினர். இந்த உண்மைகளை, முல்லா அப்துல் காதிர் பாவாயுனிஇன் “''முன்டாகாப் அல்தாவாரிக்'', மௌலவி சய்யத் ஜியாவுதீன் பார்னிஇன் “''தாரிக்இஃபிரோஸ் ஷாஹி'', குன்வர் மொகம்மத் அஷ்ரப்இன் “''இந்துஸ்தானி மாஷ்ரா அக்த்இஉஸ்தா மெய்ன்'' ஆகிய நூல்கள் மிகத் தெளிவாகவே நிரூபித்துக் காட்டுகின்றன. இந்த மன்னர்களுக்கும் மேட்டுக்குடி ஆளுங்கும்பல்களுக்கும் இஸ்லாத்தைப் பற்றி முழுநிறைவாகத் தெரியாது. இஸ்லாமிய மார்க்கம் போதிக்கும் சமத்துவத்துக்கு அவர்கள் செவி சாய்த்ததுமில்லை.

இல்டுமிஷ், பால்பன் ஆகியோர் துருக்கிய அடிமை வம்சத்திலிருந்து வந்த சுல்தான்களாவர். அவர்களாவது சாதிய விவகாரங்களில் வேறுபட்டு நடந்திருக்க வேண்டுமென நாம் கருதலாம். ஆனால், அவர்களும்கூட கீழ்சாதியினர் என்றழைக்கப்பட்ட முஸ்லிம்களை அரசாங்கப் பணிகளில் அனுமதிக்க மறுத்தனர்.

இஸ்லாமிய அரசுகள் என்று சொல்லப்பட்ட அரசவைகளில் இருந்த எண்ணற்ற அறிஞர்களும் உலேமாக்களும் பராணி, ஃபரிஷ்டா இன்னும் இவர்களைப் போன்றவர்களும் “கீழ்' சாதி அல்லது ரஸில் சாதி முஸ்லிம்கள் மீதான சாதிய ஒடுக்குமுறைக்கு மத ரீதியாக இசைவாணை வழங்கவே முயற்சித்தனர். ரஸில் (கீழ்) சாதியினர் என்றழைக்கப்பட்டவர்கள், அஷ்ரஃப் (மேல்) சாதியினர் என்றழைக்கப்பட்டவர்களுக்குச் சேவை செய்வதற்கென்றே இறைவனால் படைக்கப்பட்டவர்கள் என்றுகூட பராணி வாதிட்டுள்ளார். கீழ் சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்றழைக்கப்பட்டவர்களின் குழந்தைகள் தமது முன்னோர்களின் பரம்பரைத் தொழிலை மட்டுமே செய்ய வேண்டும் என்று அவர் கூறினார். இதற்கு மாறாக, தமது குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்க எவராவது துணிந்து செயல்பட்டால், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

“குரான், தொழுகை, நோன்பு ஆகியவற்றுக்கு அப்பால், மேலான அறிவை ரஸில் என்ற ழைக்கப்படும் கீழ் சாதியினருக்கு அளிக்கக் கூடாது; இவ்வாறு செய்வது நாய்கள், பன்றிகளின் முன்பு விலையுயர்ந்த முத்துக்களைப் பரப்பி வைப்பதைப் போன்றதாகும்!'' இவ்வாறு மக்தும் ஜஹானியான்இஜஹாங்கஷ்ட் என்றழைக்கப்பட்ட சையத் ஜலாலுதீன் புகாரி என்ற பிரபலமான சூஃபி அறிஞர் பகிரங்கமாக அறிவித்துள்ளார். இதைப் பற்றி காஸி சஜ்ஜத் ஹுசைன் தனது “சிராஜுல் ஹேதயா'' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். மது அருந்துபவர்கள், கந்து வட்டிக்காரர்கள் மட்டுமின்றி, நாவிதர்கள், பிணம் கழுவுபவர்கள், சாயத் தொழிலில் ஈடுபடுபவர்கள், தோல் பதனிடுபவர்கள், செருப்பு தைப்பவர்கள், வில் செய்பவர்கள், சலவைத் தொழிலாளிகள் முதலானோருடன் சேர்ந்து மேல்சாதி முஸ்லிம்கள் உணவருந்தக்கூடாது என்று இந்த பிரபலமான சூஃபி அறிஞர் வலியுறுத்தியதாகவும் தெரிய வந்துள்ளது. இவர் தமது வாதத்துக்கு வலுவூட்டுவதற்காக, இறைத்தூதர் முகமது நபிகளார் கூறியதாக ஒரு போலியான மரபை சான்றாதாரமாகக் கற்பிதம் செய்துக் காட்டியுள்ளார்.

மேல் சாதியினர் என்று கூறப்படுபவர்களுக்கு அடிமைச் சேவகம் செய்வதற்காகவே கீழ் சாதியினர் கடவுளால் படைக்கப்பட்டுள்ளனர் என்ற பார்ப்பனக் கோட்பாட்டைப் போன்றதுதான் இந்தக் கருத்து. பார்ப்பனர்களின் வேத நூலான மனுதர்மத்தின் நேரடி நகலைப் போன்றதுதான் இது! இதனால்தான் சாதிய பாரபட்சத்தை உயர்த்திப் பிடிக்கும் இத்தகைய உலேமாக்களை “மனுவாதிகள்'' என்று நான் அழைக்கிறேன். ஒடுக்கப்பட்ட சாதிகளிடம் பார்ப்பனர்கள் எத்தகைய மனப்பான்மையைக் கடைபிடிக்கிறார்களோ, அதிலிருந்து இந்த உலேமாக்களின் மனப்பான்மையை வேறுபடுத்திப் பார்க்கவே முடியாது.

“மாபெரும்' மொகலாயப் பேரரசரான அக்பர், ரஸில் சாதியினர் என்றழைக்கப்படுவோருக்குக் கல்வி அளிக்கப்பட்டால், பேரரசின் அடித்தளமே ஆட்டங்கண்டுவிடும் என்று பிரகடனப்படுத்தியுள்ளதாக அப்துல் காதிர் படாயுனி தனது “முன்டகாப்அல்தாவாரிஹ்'' நூலில் குறிப்பிட்டுள்ளார். பேரரசர் ஒளரங்கசீப்இன் ஆணைப்படி தொகுக்கப்பட்ட “ஃபடாவாஇஆலம்கிரி'' என்ற ஹனாஃபி சட்டவியல் கருத்துரைத் தொகுதியில் “கீழ்' சாதியினர் பற்றி இதேபோன்ற கருத்துக்கள் காணப்படுகின்றன. கடைசி மொகலாயப் பேரரசரான பகதூர்ஷா ஜாஃபரும் இவற்றிலிருந்து வேறுபட்டவராக இல்லை.

பல நூல்களைத் தேடிப்படிக்கும்போது, 24.5.1857 நாளிட்ட “டெல்லி உருது அக்பர்''இல் ஒரு செய்தி அறிக்கையைக் கண்டேன். அது பின்வருமாறு கூறுகிறது: பிரிட்டிஷாருக்கு எதிரான எழுச்சியைத் தொடர்ந்து 500 பேர் கொண்ட படையொன்றைக் கட்டியமைக்க தயாரிப்புகளை மேற்கொள்ளுமாறு மாமன்னர் பகதூர்ஷா ஆணையிட்டார்; ஆனால், அந்தப் படையினர் அஷ்ரஃப் (மேல்) சாதியினராக இருக்க வேண்டும்; “கீழ்' சாதியினர் எவரும் அதில் இருக்கக் கூடாது என்று குறிப்பாக உத்தரவிட்டார். இதிலிருந்து தெரிவது என்ன? இந்தியாவில் “இஸ்லாமிய' ஆட்சிக் காலத்தின் “பொற்காலம்' என்று மிகப் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம் எழுத்தாளர்கள் சளைக்காமல் ஏற்றிப் போற்றிய காலத்தின் நிலைமையே இதுதான். சாராம்சத்தில் இப்பொற்கால ஆட்சிகள், மனுவாத முஸ்லிம்கள் மற்றும் இந்து மேட்டுக்குடியினரின் ஆட்சிகளாகவே இருந்தன. இந்துக்கள், முஸ்லிம்கள் ஆகிய இரு பிரிவுகளிலும் இருந்த “கீழ்' சாதியினர் என்று சொல்லப்படும் மக்களை, இந்த மேட்டுக்குடி கும்பல் ஆதிக்கம் செலுத்தி ஒடுக்கினர் என்பதே உண்மை.

பல மன்னர்களும், உலேமாக்களும் சாதிய அமைப்பின் ஆதரவாளர்களாக இருந்த போதிலும், அவர்களில் சிலர் இதற்கு எதிராகவும் இருந்துள்ளனர். எடுத்துக்காட்டாக, சுல்தான் முகமது காஸ்நவி தமது அடிமையான அயாஸ் என்பவரை பஞ்சாபின் ஆளுநராக நியமித்தார். ஹஜ்ஜம் எனப்படும் நாவிதர் சாதியைச் சேர்ந்த இந்துவான திலக் என்பவரைத் தமது தலைமைத் தளபதியாக நியமித்ததுடன் “ராஜா'' என்ற பட்டத்தையும் அவர் வழங்கினார். சுல்தான் சகாபுதீன் கோரி, தமது அடிமையான குத்புதீன் ஐபக் என்பவரை இந்தியாவில் தனது ஆளுநராக நியமித்தார். ஐபக், தனது அடிமையான சம்சுதீன் அல்டுமிஷ் என்பவரை குவாலியர், புலந்த்சாகர், படாயுன் ஆகிய பகுதிகளுக்கான ஆளுநராக நியமித்தார்.

சுல்தான் அலாவுதீன் கில்ஜி, பல உயர் பதவிகளில் சையதுகள் மற்றும் அஷ்ரஃப் என்றழைக்கப்பட்ட “மேல்' சாதியினரை அமர்த்திய போதிலும், தனது வேலையாளான மாலிக் உத்துஜ்ஜார் ஹமீதுத்தீன் முல்பானி என்பவரைத் தலைமை நீதிபதியாக (காஸி உல் காஸட்) நியமித்தார். குஜராத்தின் புர்வா எனப்படும் சாமர் சாதியைச் சேர்ந்தவரும் இஸ்லாமிய மதத்துக்கு மாறியவருமான மாலிக் காபூர் என்பவரைத் தனது தலைமை அமைச்சராகவும் அவர் நியமித்தார். சுல்தான் முகமது பின் துக்ளக், சுல்தானா ரஸியா, சுல்தான் குத்புதீன் முபாரக் ஷா கில்ஜி ஆகியோரும் “கீழ்' சாதியினர் என்று கூறப்படுபவர்களை உயர் பதவிகளில் அமர்த்தினர்.

கேள்வி: இந்திய வரலாற்றின் இடைக்காலத்தைச் சேர்ந்த “மனுவாதி உலேமாக்கள்'' என்று உங்களால் அழைக்கப்படுபவர்கள், பார்ப்பனர்களைப் போலவே சாதிய பாரபட்சத்தை ஈவிரக்கமின்றி உறுதியாக உயர்த்திப் பிடித்த போதிலும், கீழ் சாதியினர் என்று கூறப்படும் கோடிக்கணக்கான இந்துக்கள் இஸ்லாமிய மதத்தை எப்படி ஏற்றுக் கொண்டனர்?

பதில்: இதற்கான காரணம், சாதிய பாரபட்சம் இந்துக்களிடம் இருப்பதைவிட, முஸ்லிம்களிடம் எப்போதும் கடுமை குறைவாக இருப்பதேயாகும். மேலும், இஸ்லாமிய மார்க்கத்தில் சாதிக்கு மதரீதியில் எப்போதுமே இசைவாணை கிடையாது என்பது இன்னொரு காரணமாகும். இந்திய முஸ்லிம்கள் மத்தியில் சாதி வேறுபாடுகள் பலமாக நீடித்து வந்துள்ள போதிலும், தீண்டாமை என்பது நடைமுறையில் அவர்கள் அறியாத விசயம்தான். இருப்பினும், மத்திய காலத்தைச் சேர்ந்த பல இஸ்லாமிய மன்னர்கள் கீழ்வர்க்கத்தினரை தமது அரசவைகளில் அடியெடுத்து வைக்க அனுமதித்ததில்லை; அல்லது, அப்படி ஒரு சிலர் அனுமதித்தாலும், அவர்கள் வாய்திறந்து பேசுவதற்கு அனுமதித்ததில்லை. ஏனெனில், அவர்கள் “புனித' மற்றவர்களாக “அசுத்த'மானவர்களாகக் கருதப்பட்டனர் என்று பிரபல வரலாற்று ஆசிரியரான கன்வர் மொகம்மத் அஷ்ரஃப், தனது “இந்துஸ்தானி மாஷ்ரா அக்த்இஉஸ்தா மெய்ன்'' நூலில் குறிப்பிடுகிறார்.

கேள்வி: “இஸ்லாமிய" ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த “மேல்" சாதி முஸ்லிம் எழுத்தாளர்களும் உலேமாக்களும் சாதிய அமைப்புக்கு மதரீதியாக இசைவாணை வழங்க முயற்சித்திருக்கலாம். ஆனால், அதற்குப் பிந்தைய காலத்தில் இந்த நிலையிலிருந்து நிச்சயம் சில மாறுதல்கள் ஏற்பட்டிருக்க வேண்டுமே?

பதில்: இப்போது அந்த விசயத்துக்கு நான் வருகிறேன். “ஜிந்தகி இ நவ்'' இதழுக்கு நான் எழுதிய சில கட்டுரைகளில், காலனிய ஆட்சிக் காலத்தில் இருந்த பிரபலமான உலேமாக்கள் பற்றியும், இப்போதைய சமகால இந்தியாவிலுள்ள உலேமாக்கள் மற்றும் உலேமாக்களின் அமைப்புகள் பற்றியும் நான் பரிசீலித்தேன். பாரெல்விஸ், தியோபண்டிஸ், ஹல்இஹதித், ஜமாத்இஇஸ்லாமி, அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் போன்ற அமைப்புகளைப் பரிசீலித்தேன். குறிப்பாக, திருமண உறவு பற்றிய விசயங்களில், இவர்கள் சமூக சமத்துவம் அல்லது காஃபா பற்றிய கருத்தாக்கத்தை எப்படிக் கையாண்டனர் என்பதைப் பரிசீலிப்பதில் நான் கவனத்தைக் குவித்தபோது, அவர்களுக்கிடையில் வியப்பிற்குரியதொரு கருத்தொற்றுமை நிலவுவதைக் கண்டேன்.

சாதியைச் சட்ட சம்மதம் கொண்டதாக்குவதற்கு காஃபா பற்றிய கருத்தாக்கத்தைத் தமது ஹனாஃபி மரபில் பாரெல்விஸ் மற்றும் தியோபண்டிஸ் அமைப்பினர் பயன்படுத்துகின்றனர். அஷ்ரப் சாதியினர் என்று சொல்லப்படுபவர்களின் மேன்மையையும் ரஸில் சாதியினர் என்று சொல்லப்படுபவர்களின் தாழ்நிலையையும் இவர்கள் சட்ட மரபாக்குகின்றனர். சமூகத் தகுதி பற்றிய விசயத்தில் ஹனாஃபி மரபினர் மிகவும் கறாராக இருக்கின்றனர். எனவே, காஃபா பற்றிய விசயத்தில் பிறப்பு அல்லது குடும்பத்தை (நஸ்ப்) அடிப்படையாக்குகின்றனர். ஹனாஃபி சிந்தனை மரபு உருவான ஈராக்கைச் சேர்ந்த குஃபாவில் சமூக ஏற்றத்தாழ்வுகள் மலிந்திருந்ததும், அவற்றை அது நியாயப்படுத்த முனைந்ததும் இதற்குக் காரணமாக அமைந்திருக்கலாம். சன்னி சட்டப்பள்ளியைப் பின்பற்றுகின்ற அராபிய மையத்துக்கு வெளியில் உருவாகி வளர்ந்த ஷஃபி, ஹன்பாலி போன்ற மரபுகளும் இதே கருத்தைத்தான் கொண்டுள்ளன.

ஆனால், இமாம் ஷஃபி, இமாம் அகமது பின் ஹன்பால் ஆகிய இருவரும் பிறப்பு அடிப்படையிலான காஃபாவுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டதாகவும் சொல்லப்படுகிறது. பிறப்பு அல்லது குடும்பத்தை அடிப்படையாக்குவதற்கு நேர்மாறாக, மாலிகி சிந்தனைப் பிரிவு விதிவிலக்காக நிமிர்ந்து நிற்கின்றது. காஃபாவைத் தீர்மானிப்பதில் பிறப்பை ஒரு காரணியாகக் கொள்ளாமல், கடவுட்பற்றையே அடிப்படைக் காரணியாக மாலிகி சிந்தனைப் பிரிவு கருதுகிறது. இதுதான் உண்மையான இஸ்லாமிய அளவுகோலாகும். மாலிகி சிந்தனைப் பிரிவைத் தோற்றுவித்தவரான இமாம் மாலிக் உண்மையான இஸ்லாமிய போதனையின் மையமான மெதினாவில் வாழ்ந்தது ஒருவேளை இதற்குக் காரணமாக இருக்கலாம்.

ஹனாஃபி மரபினர் தமது பெரும்பாலான மதரசாக்களில் பிறப்பு அடிப்படையிலான காஃபா என்ற மடமையை இன்னமும் போதித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். நான் பயின்ற மதரசாவில் சாதி என்பது இஸ்லாமியத் தன்மையற்றது என்றும், அதை நாம் தகர்க்க வேண்டும் என்றும் நாங்கள் போதிக்கப்பட்டோம். ஆனால் தியோபண்டி மரபு மதரசாக்களில், பிறப்பை அல்லது குடும்பத்தை (நஸ்ப்) அடிப்படையாகக் கொண்ட காஃபா என்ற பொருளில், “''சாதி என்பது இஸ்லாமியத் தன்மையுடையது'' என்று கற்பிக்கப்படுகிறது. இதற்குக் காரணம் என்னவென்றால், இந்தியாவிலுள்ள மிக அதிக எண்ணிக்கையிலான பாரம்பரிய மதரசாக்கள், இந்த விசயத்தில் இஸ்லாமிய மார்க்கத்துக்கு உண்மையானவையாக இல்லாமல், ஹனாஃபி சட்டவியல் விதிகளின் அடிப்படையில் போதிப்பவையாக இருப்பதுதான். இதற்கு நீண்ட நெடிய பாரம்பரியம் உள்ளது.

18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஷா வலியுல்லா, இந்தியாவின் பிரபலமான முன்னணி இஸ்லாமிய அறிஞர்களுள் ஒருவர்; சன்னி பிரிவைச் சேர்ந்த சிந்தனை மரபினர் பலர், இவரைப் பெரிதும் மதித்தனர்; இவர் பிறப்பு அடிப்படையிலான காஃபாவை உறுதியாக ஆதரித்து உயர்த்திப் பிடித்தவராவார். காஃபா என்பது ஒருவரின் இயற்கையிலேயே உள்ளார்ந்து உறைந்திருப்பது என்றும், தமது சொந்த காஃபாவுக்கு வெளியில் மணஉறவு கொள்வதானது, கொலை செய்வதை விடவும் அபாயகரமானது என்றும் அவர் தனது “ஹுஜ்ஜாத்துல்லா அல் பாலிகா'', “ஃபிக்இஉமர்'' ஆகிய நூல்களில் குறிப்பிட்டுள்ளார். இறை தூதருடன் இருந்த அவரது சகாக்களில் பலர் அடிமைப் பெண்களை மணந்த பல நிகழ்வுகள் இஸ்லாமிய வரலாற்றில் காணப்பட்ட போதிலும், இந்த அறிஞர் அதைப் பொருட்படுத்தவில்லை. இறைதூதர் நபிகளார், தமது அத்தை மகளான ஜைனப் பிந்த்இஜஹாஷ்க்கு விடுவிக்கப்பட்ட தனது அடிமையான சையத்ஐ மணமுடித்து வைத்தார். தனது மாமன் மகளான ஜுபா ஏ பிந்த்இஜுபைர்க்கு நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்த மிக்தாத் என்பவரை மணமுடித்துள்ளார்.

தீவிர ஹனாஃபி ஆதரவாளர்களான தியோபண்டி மரபினர், பிறப்பு அடிப்படையிலான காஃபா என்ற கருத்தாக்கத்தைத் தீவிரமாக ஆதரித்துச் செயல்படுத்துவோராக உள்ளனர். “தியோபண்ட் இயக்கமும் சஹரான்பூர் முஸ்லிம்களும்'' என்ற நூலின் பாகிஸ்தானிய ஆசிரியரான குலாம் முஸ்தஃபா, அதில் பின்வரும் முக்கிய விசயத்தைச் சொல்லியுள்ளார். தியோபண்ட் மதரசாவை நிறுவியவர்களில் ஒருவரும், ஷேக் சாதியைச் சேர்ந்தவருமான மௌலவி காசிம் நானோத்வி, நான்கு சாதியினரை மட்டுமே இறைவன் தமது மதத்துக்குச் சேவை செய்யப் படைத்துள்ளார் என்று அறிவித்துள்ளாராம்; சையத், ஷேக், மொகல், பத்தான் ஆகியவையே இந்நான்கு சாதிகளாம்!

தியோபண்டி மரபைச் சேர்ந்த மற்றொரு நூலாசிரியரும், தியோபண்ட் மதரசாவின் முதல் முஃப்தியுமான மௌலானா அஸிசுர் ரஹ்மான் உஸ்மானி, பின்வரும் முக்கிய விசயத்தைச் சொல்கிறார். அஷ்ரஃப் சாதியைச் சேர்ந்த ஒரு பெண், தனது தந்தை, பாட்டன் போன்ற தனது ஆண் காப்பாளனின் (அவ்லியா) அனுமதியின்றி, ரஸில் சாதியைச் சேர்ந்த ஒரு ஆண்மகனைத் திருமணம் செய்வாரானால், அந்தத் திருமணம் உண்மையிலேயே நடந்ததாகக் கருத முடியாது; எனவே, அந்தத் திருமணத்தை முறிப்பது (ஃபஸ்க்இநிக்காஹ்) என்ற பிரச்சினைக்கே இடமில்லை என்று அவர் அறிவிக்கிறார். தியோபண்ட் மதரசாவால் வெளியிடப்பட்ட “ஃபடாவா இ தார்உல்உலும் தியோபண்ட்'' என்ற தியோபண்டி ஆணைகளின் (ஃபத்வா) தொகுப்பில் இந்த விசயம் கூறப்பட்டுள்ளது.

அவர் வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் அவருடைய வாதத்திலிருந்து தெரிவது என்னவென்றால், இத்தகைய மண உறவுகளில் பிறக்கும் குழந்தைகள் முறைகேடாகப் பிறந்தவர்கள்; இத்தம்பதியினரும் ஒழுக்கக் கேடானவர்கள்; இவர்களுக்கு இஸ்லாமிய சட்டப்படி, நூறு கசையடி தரப்பட வேண்டும்! இருப்பினும், ஒரு “கீழ்' சாதிப்பெண் தனது நெருங்கிய ஆண் காப்பாளனின் (அவ்லியா) அனுமதி இல்லாமலேயே “மேல்' சாதி ஆண்மகனைத் திருமணம் செய்து கொள்ள இந்த உஸ்மானி அனுமதித்திருப்பார் என்பதை நாம் துணிந்து கூற முடியும். உண்மையில், இது பார்ப்பனிய மனோபாவத்தையும் அதேபோல முஸ்லிம்களிடம் உள்ளார்ந்து ஆழப்பதிந்துள்ள மூத்த குல ஆணாதிக்கத்தையும் வெளிப்படுத்துவதாகவே உள்ளது.

தியோபண்டி மரபைச் சேர்ந்த இன்னுமொரு இஸ்லாமிய அறிஞரான மௌலவி முகம்மது சகாரியா சித்திகி என்பவர், இன்றைய உலகின் மிகப் பெரிய இஸ்லாமிய இயக்கமான தப்லிஹி ஜமாத் இன் தலைமைச் சித்தாந்தவாதியாவார். “''மெய்யான சமயப் பணிகளின் நற்பேறுகள்'' என்ற தமது நூலில் அவர், “முஸ்லிம்களின் ஒரு குழு, மெக்காவுக்குப் புனிதப் பயணம் (ஹஜ்) அல்லது வேறிடத்துக்குப் பயணம் மேற்கொள்ளுமானால், அவர்கள் தம்மில் ஒருவரைத் தலைவராக (அமிர்) நியமிக்க வேண்டும்; இந்தக் குழுவில் குரைஷி (சைய்யத் அல்லது ஷேக்) சாதியைச் சேர்ந்தவர் எவராவது இருப்பின், அவரையே தலைவராக நியமிப்பது சிறந்தது'' என்று கூறுகிறார். அவர் முஸ்லிம்களை அஷ்ரஃப் (“மேல்' சாதி) என்றும் அர்ஸல் (“கீழ்' சாதி) என்றும் வகைப்படுத்தியுள்ளார். பாகிஸ்தானின் முதலாவது அரசாங்க முஃப்தியாக (முஃப்திஇஆஜம்) பின்னாளில் அமர்த்தப்பட்ட தியோபண்டி முஃப்தி முகம்மது ஷஃபி உஸ்மானி எழுதிய, “நிஹாயத் அல்அராப் ஃபிகாயத் அல்நஸ்ப்'' என்ற சர்ச்சைக்குரிய சாதி பற்றிய நூலையும் இவர் ஆதரித்தார். தியோபண்டி உலேமாக்கள் பலராலும் ஆதரிக்கப்பட்ட இந்த நூலில், அஷ்ரஃப் சாதிகள் என்றழைக்கப்பட்ட நான்கு வகை சாதிகளைச் சேர்ந்தவர்களுக்கு இறுதித் தீர்ப்பு நாளில் இறைவன் தனிச்சிறப்பாகக் கருணை காட்டுவார் என்று இந்த உஸ்மானி கூறியிருக்கிறார். முஃப்தி முகம்மது ஷஃபி உஸ்மானி தமது இந்த நூலில், சக தியோபண்டி அறிஞரான அகமத் உஸ்மானி என்பவரின் ஒரு கட்டுரையும் இடம்பெறச் செய்திருந்தார். அந்தக் கட்டுரையில், “கீழ்' சாதியினர் என்றழைக்கப்பட்டவர்கள் கல்வி கற்கத் தொடங்கியதால்தான் எல்லாவகையான இடர்ப்பாடுகளும் ஆரம்பித்தன என்று அகமது உஸ்மானி எழுதியிருக்கிறார்!

இன்னுமொரு முன்னணி தியோபண்டி அறிஞரான மௌலவி அஷ்ரஃப் அலி ஃபரூக்கி தான்வி என்பவர், முஸ்லிம் நெசவாளர்களைச் சிறுமைப்படுத்தும் சொற்களில் குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம் நெசவாளர்கள் தொழுகை செய்வது பற்றி தனது “அல்ரஃபிக் ஃபிசவாய் அல்தாரிக்'' நூலில் அவர் எள்ளி நகையாடினார். முஃப்தி முகம்மது ஷஃபி உஸ்மானி என்பவரின் “நிஹாயத் அல்அரப் ஃபிகாயத் அல்நஸ்ப்'' என்ற நூலை ஆதரித்து, அவர் எழுதி “வாஸ்லஸ் சபாப் ஃபி ஃபாஸ்லின் நஸ்ப்'' என்ற தனது நூலில் நெசவாளர் சாதியினரை வெறுப்புடன் “ஜுலாஹா'' என்று குறிப்பிட்டார். அன்சாரிகள் (“உதவி செய்பவர்கள்'') என்று நெசவாளர்கள் தம்மை அழைத்துக் கொள்வதை அவர் கண்டனம் செய்தார்.

இவ்வாறு அவர்கள் தம்மை அழைத்துக் கொள்வது, ஒருவர் தமது குடும்ப மரபை அல்லது பரம்பரையை மாற்றிக் கொள்ளும் செயலாகும்; மெக்காவிலிருந்து மெதினாவுக்குச் சென்று அங்கு இறைதூதர் வாழ்ந்தபோது அவருக்கு உதவி செய்த மெதினாவைச் சேர்ந்த அன்சார்களின் வழித்தோன்றல்கள் என்று உரிமை பாராட்டுவதாகும்; இது தவறானதும் தடை செய்யப்பட்டதுமாகும் என்று தான்வி வாதிட்டார். தமது வாதத்துக்கு வலுசேர்க்க, இறைதூதர் கூறியதாக ஒரு வழிவழிச் செய்தியை இட்டுக்கட்டி கூறினார். தனது தந்தையைத் தவிர வேறொருவருக்கு மகன் என்று உரிமை பாராட்டும் ஒருவன் விண்ணுலகை அடையமாட்டான் என்பதே இறைதூதர் கூறியதாகச் சொல்லப்படும் அந்த வழிவழிச் செய்தியாகும்.

ஷப்பிர் அகமது ஹக்கீம் என்ற முஸ்லிம் அறிஞர், தான்வியின் “மசாவத்இ பகார்இ ஷாரியத்'' என்ற இன்னொரு நூலிலிருந்து ஒரு மேற்கோளை எடுத்தாண்டுள்ளார். ஜுலாஹாஸ் (நெசவாளர்கள்), நயிஸ் (நாவிதர்கள்) ஆகியோரைத் தூய முஸ்லிம்கள் தமது இல்லங்களில் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று தான்வி அதில் வாதிடுகிறார். மேலும், சைய்யது சாதி தந்தைக்கும் சைய்யது அல்லாத தாய்க்கும் பிறக்கும் குழந்தை தூய சைய்யது தம்பதியினருக்குப் பிறக்கும் குழந்தையைவிட சமூகத் தகுதி குறைந்தது என்று தான்வி “பாஹிஸ்டி ஜேவார்'' என்ற தனது நூலில் வன்மத்தோடு வாதிடுகிறார். இதே விசயத்தைத்தான் பிராமணர்கள் ஏற்றிப் போற்றும் மனுவும் தனது மனுதர்ம சாஸ்த்திரத்தில் (மனுஸ்மிருதி) சொல்லியிருக்கிறார்! சைய்யதுகள், ஷேக்குகள், மொகல்கள், பத்தான்கள் ஆகியோர் “மரியாதைக்குரிய மேல்குடி' (ஷரிப்) சாதியினர் என்றும், எண்ணெய் பிழிபவர்கள் (டெலி), நெசவாளர்கள் (ஜுலாஹா) ஆகியோர் “கீழ்' சாதிகள் (ரஸில் அக்வம்) என்றும் “இம்தாத் உல்ஃபடாவா'' என்ற தனது நூலில் தான்வி அறிவித்தார்.

இவர், இஸ்லாத்துக்கு மதம் மாறிய அராபியர் அல்லாதவர்களை “நவ்முஸ்லிம்கள்'' என்று குறிப்பிடுகிறார். காந்தானி முசல்மான் எனப்படும் பாரம்பரியமாக உறுதிப்படுத்தப்பட்ட முஸ்லிம்களின் திருமண உறவுக்கான காஃபாவுக்கு, நவ்முஸ்லிம்கள் கருதத்தக்கவர்களே அல்ல என்று இவர் வாதிடுகிறார். பத்தான்கள் அரபுவழி வந்தவர்கள் அல்ல என்பதால் அவர்களும் நவ்முஸ்லிம்கள்தாம் என்கிறார். அரபுவழி வந்தவர்களான சையத்துகள், ஷேக்குகளின் காஃபா வேறானது; எனவே அவர்களுடன் நவ்முஸ்லிம்களான பத்தான்கள் கலப்பு மணம் புரியக்கூடாது என்று எச்சரிக்கிறார்.

அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியத்தின் முதலாவது தலைவரும், தியோபந்த் மதரசாவின் துணைவேந்தருமான மௌலவி காரி மொகம்மது தய்யீப் சித்திகி என்பவரும்கூட, சாதியத்தின் ஆதரவாளராக இருந்தார். இவை எனது ஆய்வில் நான் கண்டறிந்த உண்மைகளாகும்.

***

மதம் மாறுவது என்று முடிவு செய்த அண்ணல் அம்பேத்கார் இஸ்லாத்தை ஆய்வு செய்து இஸ்லாத்திலும் ஜாதியம், தீண்டாமை கடைப்பிடிக்கப்படுகிறது என்று கூறி புத்தமதத்தை தேர்வு செய்தார். மறக்கப்பட்ட பல வரலாற்று உண்மைகளை மறுவாசிப்பு செய்கிற போது தீண்டாமை என்பது குறிபிட்ட இன, மொழி, சமய, பிராந்திய எல்லைகளை மீறி இந்திய சமூக அமைப்பில் நீக்கமற வியாபகமாய் செயல்ப்பட்டுக் கொண்டிருக்கிறது. மதம் மாறினாலும் கோலம் மாறாத தலித்துகளின் மாற்று செயல்திட்டம் தான் என்ன?

இந்த நாவல் முன்வைக்கிற பிரச்சனைகள் கண்டும் காணாமலும் சென்று விட முடியாத வகையில் விவாவதிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது. தலித்தியம் இன்னும் அதிகமாக செயல்படவேண்டியதன் அவசியத்தை இந்த நாவல் உணர்த்துகிறது.உண்மையாக சொன்னால் இதை வைதீக முஸ்லிம்களும், நவீன முஸ்லிகளும் ஏற்க்க போவதில்லை. தொடர்ந்து அவர்கள் இஸ்லாம் எங்கள் இனிய மார்க்கம் என்று அரைத்த பல்லவியையே அரைப்பார்கள்.ஆனால் எங்களை போன்ற சிலரும் தலித்தியத்தை பேசாமல் போனால் நாளைய தலைமுறைக்கு வரலாற்று தவறை செய்தவராகவே இருப்போம். கருப்பாயி என்ற நூர்ஜஹான்கள் உருவாகாத சமூகத்தை உருவாக்குவதில் இந்த எழுத்துக்கள் பயன்பட்டால் அதை பெரும் பாக்கியமாகவே கருதுகிறேன்.

நன்றி - மாற்று 
...மேலும்

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்