/* up Facebook

Nov 4, 2011

அபிவிருத்தியில் இலங்கை பெண்களை தரப்படுத்தல் - தில்லைஆண்டுதோறும் பெண்களின் முன்னேற்றம் பெண் உரிமையாளர்களின் கவனிப்பை பெற்று இருப்பது போலவே பெண்களுக்கு எதிரான வன்முறைகளின் அதிகரிப்பும் இலங்கையில் அதிகளவு கவனிப்பை பெற்றுள்ளது .

பெண்களுக்குச் சிறந்த இடம் வழங்குவதை விட பெண்கள் மிதான ஒடுக்குமுறைகளே நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது .
பொருளாதார நோக்கத்தை மட்டுமே இலாபமீட்டலாக கொண்ட இலங்கை அரசு பெண்களின் நீதி ,பாதுகாப்பு ,சுகாதாரம் ,அரசியல் உரிமை போன்றவற்றை தமது நீண்ட விவாதங்களுக்கோ ,உரையடல்களுக்கோ எடுத்துக்கொள்வதில்லை.

அன்னியச்செலவானியின் அதிகரிப்பை துரிதப்படுத்த வெளிநாட்டுத் தொழில்வாய்ப்பைப் பெற்றுச் செல்லும் பெண்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்கு போதுமான எந்த நடவடிக்கைகளையும் இதுவரை சட்டரீதியாக நடைமுறைப்படுத்த முன்வராததோடு ஆங்காங்கு வெளிவரும் சம்பவக்களுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க எத்தனிப்பது பெண்களின் நலனுக்கு ஆபத்தானது மட்டுமல்லாது ஒருசில வேளைகளில் அவ்வாறான நடவடிக்கைகள் பலனற்றும் போய்விடுகிறது .

அதே போன்று இலங்கையின் தோட்டத்துறைகளில் நீண்ட பல ஆண்டுகளாக வேலைசெய்யும் பெண்களுக்கு ஆண்களுக்கு நிகரான சம்பளமோ ,அந்தஸ்தோ கொடுக்கப்படுதில்லை அந்தப் பெண்கள் ஏனைய இலங்கைப் பெண்களுடன் ஒப்பிடும் போது மிக மிக குறைந்த வாழ்க்கைப் பொருளாதாரத்தை பெறுபவர்களாவே இன்றுவரை இருக்கின்றனர் இந்த நிலைமை அரசு மற்றும் தனியார் கம்பனிகளின் மிக மோசமான பொருளாதாரச் சுரண்டலுக்கு தொடர்ந்தும் வலுச்சேர்க்கின்றது.

மேலும் இலங்கையின் ஏற்றுமதி இறக்குமதிப் பொருளாதாரத்தின் மிகப் பெரும் துறையாக வளர்ந்துவரும் ஆடைத்தொழிற்ச்சலையில் வேலை செய்யும் இளைஞர் யுவதிகளுக்கு அவர்களின் தொழில் பாதுகாப்பு குறித்த எந்த வகையான சட்டபூர்வ உரிமைகளும் வழங்கப்படவில்லை, அதற்கான சட்ட ஏற்பாடுகளோ அரசியல் அமைப்பு யோசனைகளோ இதுவரை முன்வைக்கப்படவில்லை.இவ்வாறான நிலைமைகளால் தொழில்புரியும் இடத்தில் சம்பளப் பிரச்சனைகள் எழும்போது சரியான நீதி கிடைக்காமல் போவதோடு இளைஞர்களிடத்தில் விரக்திநிலை உருவாகி மேலும் சமூகத்தில் சீரழிவை தோற்றுவிக்கும், நாட்டில் நடைபெறும் இளவயதுத் திருமணங்கள் குடும்பத் தகராறுகளுக்கு இட்டுச் செல்வதோடு நாளடைவில் விவாகரத்துக்கும் வழிகோலுகின்றது இதனால் இளம் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் .

இதற்கிடையில் இந்த மூன்று துறைகளில் உள்ள பெண்களைத் தவிர கிராமப்புறங்களில் சாதாரண குடும்பங்களில் வாழும் பெண்கள் தினமும் குடும்ப வன்முறைகளால் அதிகம் பதிக்கப்படுகிறார்கள் மிக மிக குறைந்த வருமானத்தில் தினமும் கூலிவேலைக்குச் செல்லும் ஆண் பெண்களையும் குழந்தைகளையும் தாராளமாக அடிக்கலாம் எனவும் அதைத் தடுக்கின்ற சட்டம் யார் கையிலும் இல்லை எனவும் தன்னுடைய உழைப்பில் வாழ்வதால் தனது அனைத்து அதிகாரங்களையும் வன்முறை களையும் தாங்கிக் கொள்ள வேண்டும் எனவும் விரும்புகிறான் இவ்வாறு அவஸ்தைப்படும் சாதாரண பெண்களின் அபிவிருத்தியை கருத்தில் கொண்ட சுயபொருளாதார வேலைத்திட்டங்களை அரசு கவனத்தில் கொண்டதாக இல்லை தேர்தல் காலங்களில் மட்டுமே இந்த குடும்பங்களின் வாக்குகள் அரசுக்குத் தேவையாக உள்ளது .

மேலும் நோக்கும்போது பொருளாதார சுமையை ஏற்றுள்ள நகர்ப்புறப் பெண்கள் அதிகார அரசின் கட்டற்ற விலைவாசி அதிகரிப்பால் மிகப்பெரிய வாழ்க்கை போராட்டத்தை எதிர்கொள்வதோடு கணவன் மனைவி இருவரும் வேலைக்குப் போக வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளனர் இதனால் குழந்தைகளின் கல்வி மற்றும் பாதுகப்பு கேள்விக்குறியாகவே உள்ளது .ஊடகங்களில் நாளாந்தம் குழந்தைகள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படும் செய்திகள் அதிகரித்தவண்ணமுள்ளது .

பெருப்பாலும் ஆண் தலைமைத்துவ குடும்ப பாரம்பரியத்தை கொண்ட இலகையில் குடும்பத்தைப் பராமரிக்கும் பொருளாதாரப் பொறுப்பு ஆண்களுக்கு உரியது. எனினும்,அபிவிருத்தி நிபுணர்களும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் பெண்கள் மீதான பாராபட்சம் பொருளாதார அபிவிருத்திக்குப் பெரும் தடையாக உள்ளதை சுட்டிக்காட்டுகின்றமை விவாதத்திற்குரியது.

கீழ்நிலையில் உள்ள நாடுகள் பெண்கள் மீது விதிக்கும் கலாசாரக் கட்டுப்பாடுகள் நீண்ட காலத்தில் அந்நாடுகளின் பொருளாதார அபிவிருத்தியைப் பாதிப்பதாகக் கருதப்படுகின்றது. பெண்கள் தொடர்ந்தும் வறுமையில் வாடுவதற்கான காரணங்களில் ஒன்றாக கலாச்சார கட்டமைப்பு காட்டப்பட்டுள்ளது. அவ்வாறான இறுக்கமான கலாச்சாரக் கட்டமைப்புள்ள எந்தவொரு நாடும் பாரிய பொருளாதார முன்னேற்றத்தை அடையவில்லை என்பது விவாதத்திற்குரியது.

பெண்கள் சமூகக் கட்டுமானத்திற்கு ஆற்ற வேண்டிய பணி குடும்ப வாழ்விலிருந்தே தொடங்குகின்றது என்ற உண்மையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் அதை நாம் புறக்கணிக்க முடியாது ஆண்-பெண் இரு சாராரும் சமூகத்துக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் அதை யாரும் மறுக்க முடியாது .ஆயினும், பெண்களை அறிவூட்டுதல், சமூகப் பொருளாதார அபிவிருத்தியை மேலும் துரிதப்படுத்தும் எனும் கருத்தை நாம் ஏற்றுக்கொள்ள முடியும். அதேவேளை, பெண்கள் உலகில் ஒடுக்கப்படுகிறார்கள் என்பதற்கு கலாசார/பண்பாட்டு மாறுபாடுகளை மட்டும் நாம் குற்றம் சுமத்துவது பொருத்தமற்றது.

பல 100 ஆண்டுகளுக்கு முன்பாக பல நாடுகள் பெண்களைப் பாராபட்சமாகவே நடத்தி வந்தது. ஆனால், இன்றும் பெண்களுக்கு எதிரான கலாசார ஏற்றத்தாழ்வுகள் இந்நாடுகளில் காண்பிக்கப்படுகின்றன. சில நாடுகளில் ஏற்றத்தாழ்வுகள் மிகவும் குறைவாகவே உள்ளன. ஆனால், பெண்கள் போதியளவு அறிவூட்டப்பட்டுள்ளதோடு சமூக விழிப்பையும் பெற்றுள்ளனர்.
இவை அனைத்தையும் விட இலங்கையில் காலனித்துவத்தின் விளைபொருளான கல்வி ,சொத்தின்மை, சமூகஅறிவீனம், சமூக விழிப்பின்மை போன்ற காரணிகளும் பெண்களின் அபிவிருத்திக்குத் தடையாக உள்ளது, அத்தோடு நீண்டகால போரின் காரணமான வறுமை பெண்களின் பின்னடைவுக்கான பொறுப்பு என்பதையும் அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் , பெண்களின் அபிவிருத்தியை வெறும் வாழ்தலுக்கான உரிமை மட்டுமே என்ற கண்ணோட்டத்தில் நோக்காது அதற்க்கான சமூகப் பின்னணி யுடன்தான் நாம் பார்க்க வேண்டும்.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்