/* up Facebook

Oct 12, 2011

பெண் விடுதலை சிந்தனைக்கும் செயற்பாட்டிற்குமான முதற் சஞ்சிகை திருக்கோணமலை மாதர்மதி மாலிகை -காயத்திரி நளினகாந்தன்இன்று பெண்விடுதலைக்கான சிந்தனைகளும் செயற்பாடுகளம் பல்வேறு வடிவங்களில் உருப்பெற்று இருக்கும் வேலையில் ஈழத்தை பெறுத்தமட்டில் பெண்விடுதலை சிந்தனைகளும் செயற்பாடுகளும் 19ம் நூற்றாண்டின் ஆரம்ப பகுதில் பலமாக இடப்பட்டுள்ளது என்பதற்கு ஆதரமாக ஈழத்தின் முதற்சஞ்சிகையாக மாதர்மதி மாலிகை சான்று பகிர்கின்றது.

ஈழத்தின் பெண் விடுதலைக்கான சிந்தனைகளும் செயற்பாடுகளும் ஆங்கிலேயரின் வருகையின் பின் ஏற்பட்ட அரசியல் சமூக மாற்றங்களால் ஏற்பட்ட தாக்கத்தால் வந்த மேலும் பலம் பெற்றது அத்தோடு தமிழகத்தோடு நம்மவர் ஏற்படுததிக்கொண்ட தொடர்களும் மேற்கூறப்பட்ட சிந்தனை வளர்ச்சியிலும் செயற்பாட்டிலும் திருக்கோணமலைப் பிரதேசம் முதன்மையிடம் பெற்றுள்ளது என்று கலாநிதி செ.யோகராசா தமது கட்டுரையான “ஈழத்தின் பெண் விடுதலைச்சிந்தனை வளர்ச்சியிலும் செயற்பாட்டிலும்” என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.ஞானம் மலர் 2004 இதை நோக்கும் போது பெண்விடுதலை சிந்தனைக்கும் செயற்பாட்டிற்குமான முதல் முதல் வெளிவந்த சஞ்சிகையான திருகோணமலை மாதர் மதிமாளிகை” என்றால் அது மிகையாகாது.

மாதர் மதிமாலிகை திருக்கோணமலை மாதர் ஜக்கிய சங்கத்தால வெளிக்கொணரப்பட்ட ஓரு சஞ்சிகையாகும்.திருக்கோணமலை மாதர் ஜக்கிய சங்கம் 1919 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. இச்சங்கம் 1930 ஆம் ஆண்டுவரை செயற்பட்டதாக ஊகிகக முடிகின்றது இதுவே ஈழத்தில் பெண்விடுதலைக்கும் விழிப்புணர்ச்சிக்கும் தோன்றிய முதற்சங்கம்.
மாதர் ஜக்கிய சங்கத்தின் ஆரம்பகால குழுவின் தலைவியாக ஸ்ரீமதி அ.விசாலாட்சிஅம்மாள் பிள்னையும் உபதலைவியாக ஸ்ரீமதி சு.தங்கம்மாள்இஸ்ரீமதி நர்.நீலயதசி ஆகியோரும் காரியதரிசியாகளாக ஸ்ரீமதி ப.கு.மதுராம்பிகை ஸ்ரீமதி.கு. தெய்வநாயகி ஆகியோரும் தனாதிகாரியாக ஸ்ரீமதி.அ.பாக்கியமும் செயற்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. இச்சங்கத்தின் செயற்பாடுகளைப்பற்றிக் கூறும் போது “மாதந்தோறும் மகிழ்ந்து குழுமினர்இ தீதங்கோட்டித்தெளிந்துரையாடினர்.வாதஞ் செய்தனர்.வாக்கு நிரப்பினர் போதம் எய்தினர் புண்மை அகற்றினர்.புண்மை அகற்ற இந்தியாவிலிருந்து அறிஞ்ர்கள் எ.கு.திரு.விக.திருமகள் ருக்குமணி)வந்து போயுள்ளனர்.ஆண்டு நிறைவு விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டன.
திருக்கோணமலை மாதர் ஐக்கிய சங்கத்தின் செயற்பாடுகள் காலத்தால் மறந்துபோகாமல் இருக்க மறைந்து போகாமல் இருக்க அவ்வேளை ஆண்டு மலர்களும் வெளியிடப்பட்டன.அவ்விதம் வெளியிடப்பட்ட மலரே “மாதர் மதி மாலிகை” ஆகும்.

மாதர்மதி மாலிகையின் அட்டைப்படங்கள் ஒவ்வொன்றும் வீணை ஏந்திய சரஸ்வதியின் உருவம் வௌ;வேறு தோற்றங்களில் இடம்பெற்றிருந்தமை காணக்கூடியதாக இருந்தது.ஒவ்வொரு இதழின் ஆரம்பப் பக்கங்களிலும் மாதர் இலக்கிய சங்க வாழ்த்துப்பாக்களும் இறுதிப்பக்கங்களின் சங்கத்தின் ஆண்டு நிறைவு விழா வாழ்த்துக்களும் அறிக்கைப்பத்திரங்களும் இடம் பெற்றுள்ளன.வாழ்த்துப்பாக்கள் எழுதியோருள் மூவர் குறிப்பிடத்தக்கவர்கள் ஒருவர் பத்மாசினி மேலும் மதார் மதி மாலிகை யின் இலட்சியம் நேரடியாகப் பெண்கள் தொடர்பான விடயங்களில் மட்டுமன்றி அவர்களது அறிவு வளர்ச்சிக்கு உகந்த ஏனைய விடயங்களிலும் கவனம் செலுத்தி அறிஞர் பெருமக்கள் எழுதும் கட்டுரைகளைப்பிரசுப்பதுமேயாகும்.

இன்று பரவலாக அறியப்படாத சுவாமி விபுலானந்தர் மா பீதாம்பரம் புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை முதலானோரும் தமிழ் நாட்டு அறிஞர்கள் சிலரும் மாதர் மதி மாலிகையில் தமது எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளனர். மாதர் மதி மாலிகை வருகை பெண்ணிய செயற்பாட்டுக்கு ஒர் மைக்கல்லாக அமைந்திருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை (இவ் இதழ் பற்றிய தகவல்களை எமக்கு தந்துதவியா அமரர் சித்தி அமரசிங்கம் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்).

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்