/* up Facebook

Oct 11, 2011

யாழ்ப்பாண கலாச்சாரம் சீரழிகிறதா ?? - தேவகெளரியாழ்ப்பாண கலாசாரம் சீரழிகிறது!
தடம் மாறும் யாழ்ப்பாண கலாசாரம்!
இத்தகைய தலைப்புகளில் பல்லேறு கட்டுரைகளை இணையங்களில் காணமுடிகிறது.அதை பல்வேறு பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் மீள் பிரசுரம் செய்தும் வருகின்றன.யாழ்ப்பாணம் பற்றிய இன்றைய முக்கிய செய்தியாக பாரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது.
பலரும் படித்து கேலியும் கிண்டலுமாக அபிப்பிராயம் முன்வைப்பதும் நடக்கிறது.போரினால் அடைபட்டுக்கிடந்தவர்களுக்கு சுதந்திரம் வந்ததும் இப்படி தவறாக பயன்படுத்துகின்றனர் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.இதில் முக்கியமாக எடுத்தாளப்பட்டவை இளைஞர்களின் காதல் விவகாரம்ääகருக்கலைப்புääபெண்களின் ஆடைகள்ääஇளைஞர்களின் களியாட்டங்கள் என்பனவே.

இதெல்லாம் ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் இருக்கிறது. அதனால் இது ஒன்றும் புதிதில்லை.யாழ்ப்பாணம் ஒன்றும் புனித பூமியில்லை என்று சொல்வோரின் கருத்துக்களையும் நாம் இங்கு கவனத்தில் எடுக்கிறோம். ’கனகி புராணம்’; (மாவிட்டபுர தேவதாசி மீது நட்டுவச்சுப்பையனார் படிய படல்) கலாசாரமும் யாழ்ப்பாணத்திற்கே உரியது.

அதேநேரம் இன்றைய நவீன ஊடகங்களின் வருகையும் இதை பூதாகரமாக்கியுள்ளது என்பதும் உண்மைதான். யாழ்ப்பாண கலாசாரம் மீது ஆழ்ந்த கரிசனை கொண்டு எழுதப்பட்ட கட்டுரைகளாக இவை தெரியவில்லை. போரின் கோரக்கைகள் சிதைத்து தள்ளிய மனிதர்கள் வாழும் யாழ்ப்பாணமும் வன்னியும் உங்கள் ‘யாழ்ப்பாண கலாசாரத்துக்குள் அடங்கியிருக்கிறது.

ஒரு நீண்ட யுத்தத்திற்கு பின்னால் உருக்குலைந்துள்ள சமூகத்தை எப்படி நோக்க வேண்டும் என்ற பொதுப்புத்தியுடன் நாம் நடக்கிறோமா?ஒரு ஊடகவியலாளர் என்ற ரீதியில் இத்தகைய கட்டுரைகளுக்க பின்னால் எமக்கு இருக்கக்கூடிய நோக்கு என்ன?இந்த விடயங்களை சிந்திக்காமல் யார்மீது வன்மம் தீர்க இத்தகைய கட்டுரைகள்?

காதலர்களின் சல்லாபம்ääஇளம் பெண்களின் கருக்கலைப்புääகுடி கும்மாளம்ääபெண்களின் ஆடை இவைகள் பற்றித்தான் அதிகமாகப் பேசப்படுகின்றன.

காதலர்களின் சல்லாபமும் இளம்பெண்களின் கருக்கலைப்புபற்றியும் எழுதும் போது பெருமளவில் பெண்கள் மீதான கோபமும் கீழ்தரமான பார்வையும்தான் கட்டுரைகளில் விஞ்சிநிற்கிறது.ஆண் பெண் வீதியில்நின்று கதைத்தாலே கலாசார சீரழிவு என்று பேசிய சமூகம் பின்னாளில் ஆணும் பெண்ணும் பொதுதளத்தில் வேலை செய்ய இறங்கியபோது வாய் மூடி மௌனமானது மட்டுமல்லாமல் ஆண் பெண் சேர்ந்து பேச சமூகத்தில் எவ்வளவோ விடயங்கள் இருக்கின்றன என ஒத்துக்கொண்டது.இன்று ஆண் பெண்ணை ஒரு இடத்தில் பார்த்தால் ஐயோ..ஐயோ….கலாசாரம் சீரழியுது..என்ற கூச்சல்.

இந்தியாவில் விடுதலைப் போராட்டத்தில் தீவீரமாக ஈடுபட்ட பெண்களை அங்கு சுதந்திரம் கிடைத்தபின் ‘சரி இனி நீங்கள் உங்கள் வீடுகளில் போய் வேலைபாருங்கள்’ என்றனராம்.பொது வேலைக்காக தங்கள் வாழ்க்கையை 10 ää20 வருடங்கள் அல்லது அதற்கும் மேலாக அர்ப்பணித்த அவர்கள் பொது தளத்தில் ஊடாடிய அவர்களுக்கு அந்த பொது தளத்தில் வாழ்வாற்கான அனுமதி மறுக்கப்பட்டது. வீடுகளில் குடும்ப அலகையும் அமைக்க முடியாத அந்த பெண்களுக் பொது தளத்தில் வேலைகளை உருவாக்கி கொடுக்க வேண்டிய பொறுப்பு சமூகத்தினுடையது.இந்த அனுபவம எங்களுக்கும் இருத்ககிறது.சிறைகளிலும் விடுதலையானோரும் அங்கஙகளை இழந்தோரும் தங்கள் வாழ்வாதாரங்களைத் தேடி கையறு நிலையில் நிற்கின்றனர்.அவர்களுக்கான ஆற்றுப்படுத்தலை எப்படி நாம் முன்வைக்க போகிறோம்?

இவர்கள் ஒரு புறம் இருக்க இந்த போருக்குள் பிறந்து சிறுபராயத்தை தெலைத்து மொட்டவிழும் காலத்தினுள் இருக்கும் நம் இளைஞர் கூட்டம் இப்போது கொஞ்சம் பயமின்றி நடமாட தலைப்பட்டுள்ளனர்.

அவர்களின் அந்த மனத்தளவிலான சுதந்திரத்தில் முக்கியமாக இருப்பது வீட்டுக்கு வெளியில் நண்பர்களுடன் அளவளாவுதல் இதில் காதல் ஒன்றும் புதிதல்ல.தனிநபர் உணர்வுகளை சமூகத்தில் வெளிப்படுத்துவது பற்றிய அறிதலை முழுமையாக இழந்தவர்கள் அவர்கள்.சமூகத்தின் ஒரு அங்கமாக தம்மை நினைப்பதை விட தனிநபர்களாகவே தம்மை காத்துக்கொண்டவர்கள்.அவர்களின் செயற்பாடுகள் மிகச்சுதந்திரமானதாக இரு;க்கும்.ஆனால் காலம் இடம் அறிந்த இங்கிதங்களை அவர்கள் முற்றாக இழந்தவர்களல்ல.கோயில்களை அசிக்கப்படுத்தும் காம ஜோடிகள் என்ற ஒரு கட்டுரையும் பார்த்தேன்.அது புதுமைப்பித்தனின் பொன்னகரமாக கூட இருக்கலாம்.


புhலியல் தொழில் அதிகரித்திருப்பதாகவும் சில கட்டுரைகள் கூறின.இதை எல்லாவற்றையும் ஒட்டுமொத்த யுhழ்ப்பாண கலாசார சீரழிவுக்கான அசிங்கங்களாக பார்க்காமல் இந்த நிலைகளுக்கான பின்புலம் பற்றிய அறிதலில் இருந்து புதிய நிலைகளை எதிர்கொள்ளவேண்டும் என நினைக்கிறேன்.ஏற்கனவே தமிழ் சமூகத்தில் ஆண்களின் தொகையை விட பெண்களின் தொகை விகிதாசாரப்படி மிக அதிகமாக உள்ள நிலையை ஆய்வொன்றின் மூலம் முன்வைத்திருந்தேன்இஅதில் குறிப்பிட்டது போல் தமிழ் சமூகத்தில் கலாசார மீள் கட்டுமானம் அவசியம் என்பதை மீண்டும் முன்வைக் விரும்புகிறேன்.2000 ஆண்டு சுமைகளுடன் இன்னும் ஓட முனைந்தால் அழிவுதான் மிஞ்சும்.மீட்டெடுத்தல் என்பது கூட கலாசாரத்திற்கு பொருந்தாது.காலசாரம் என்பது - அதன் எல்லா கூறுகளும ;- ஒடாத குட்டை நீரல்ல.

எம்.எஸ்.ரி.கௌரி

(24.07.2011 அன்று தினக்குரலில் வெளியானது .)

2 comments:

KANA VARO said...

ஓகோ!

mathini suhanthan said...

i know jaffna problems
1948 before
females educated who are in high class or Criterion society, the ladies ware premier leaders the tamils group
1980s
the tamil women were affected by the other males
who are armed males or dominated then they forced to liberation activities
this times our tamil group had been divided as 3
1 take the armed and libir tion
2 still living that era
3 displaced to go other place such as overseas
today
all peoples meet each other
interglacial complex on the them
this is news in current but change shortly
suhanthan mathini

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்