/* up Facebook

Oct 4, 2011

யுத்தமும் பெண்கள் தலமைதாங்கும் குடும்பங்களின் நிலையும் -காயத்திரி நளினகாந்தன்


இலங்கையில் யுத்தம் முடிவடைந்து 2 ஆண்டு கடந்த நிலையில் யுத்தத்தினால் ஏற்பட்ட விளைவுகளும் வேதனைகளும் இன்னும் எமது மக்களால் அனுபவிக்கப்பட்டு கொண்டு இருக்கிறார்கள் என்றால் அது மிகையாகது இதிலும் குறிப்பாக பெண்களின் நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது இவர்கள் யுத்ததின் போதும் யுத்தினான் பின்னருமான பாதிப்புகள் என வேறுபடுத்திபார்க்க முடியும் அதில் யுத்ததின் பின்னார் அவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் என்று பார்க்கும் போது விசேடிமாக கணவனை இழந்து குடும்பங்;களை தலமைதாங்கும் பெண்களின் நிலை அதிகரிப்பால் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளும் இதனால் இவர்கள் சமூகத்தில் மிகவும் மோசமான நிலையில் பாதிக்கப்படும் இலக்கு குழுவாக அடையாளம் காணவேண்டிய தேவையும் இவர்கள் எதிர்நோக்கும் பிரச்;;;;சனை பால் உடனடித்தீர்வுக்கான சம்பந்தப்பட்ட தரப்பு செயற்படவேண்டிய காலம் ஆகவும் பார்க்கப்படுகின்றது.

இன்று வடக்கு கிழக்கில் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் எண்ணிக்;கை கணிசமாக வரை அதிகரித்துள்ளது இது யுத்ததின் பின் பல மடங்கு அதிகரித்துள்ளது அண்மைகால ஆய்வின்படி கிழக்குமாகணத்தில் மட்டும் 39000 யுத்த விதவைகள் ஆக்கப்பட்டுள்ளர்கள் இவர்களின் இதில் 70மூ மானவர்கள் 18 வயதிற்கும் 40 வயதிற்கும் உட்பட்டவர்கள் இளவயது உடையவர்கள் 60மூ மானவர்கள் 2 தொடக்கம் 3 பிள்ளைகளின் தாய்மார்கள் என கிழக்குமாகணசபையினால் அண்மையில் வெளியிட்ட ஆய்வு ஒன்று கூறுகின்றது இவ்வாறு தமது கணவனை இழந்த பெண்கள் தமது குடும்பங்களை தலைமை தாங்கிக் கொண்டு நடாத்திவருகின்றார்கள் இவர்கள் ஏனைய பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை விட மாறுபட்ட நிலையில் பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றார்கள் என்பது அவர்களின் அனுபவபகிர்வு மூலமாக அறியக்கூடியதாக உள்ளது. வடக்கு கிழக்கில் யுத்ததின் பின்னதாக பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்கள் அதிகரித்த நிலையில் அவர்கள் முகம் கொடுக்கும் சமூக பொருளாதார காலச்சாரப் பிரச்சனைகள் தாக்கங்கள் 2 நிலையில் விளைவுகளை ஏற்படுத்து கின்றது என்பதே உண்மை அதில் கணவனை இழந்து தனித்து தனது குடும்பத்தினை கொண்டு நடாத்தும் போது ஏற்படும் பிரச்சனைகளும் அதன் மூலம் அவளின் நேரடியான பாதிப்புகளும் அதன் விளைவும் என்ற ஓரு நிலையும்இ மற்றயது இதன் விளைவால் அவர்கள் சார்ந்த சமூகம் எதிர்நோக்கும் சவால்கள் என இரு கோணத்தில் பார்க்க முடியும்.

எமது சமூகத்தில் பெண்கள் பொதுவாக இலகுவில் பாதிக்கப்படக்கூடியவர்கள் (vulnarablr group) என்ற நிலை உள்ளது. இதற்கு காரணம் சமூகம் நிலை நிறுத்திகொண்டிருக்கும் பால்நிலை பாகுபாடு அதாவது ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே நிலவும் சமசந்தர்ப்பம் சமவாய்ப்பு சமவளப்பகிர்வு என்பனவற்றில் காட்டுகின்ற அசமத்துவ தன்மை அதாவது கல்வி உணவு தொழில் சொத்து பொறுப்புக்கள் போன்றவற்றில் 2ம் தரத்தில் வைத்து பார்க்கப்பட்டதன்; விளைவாக பெண்கள் நிலை பலவீனம் அடைந்துள்ளது இப்படியாக ஏற்கனவே பலவீனப்படுத்தப்பட்டு இருக்கும் பெண்கள் யுத்தத்தினால் மேலும் பலவீனப்படுத்தப்பட்டு இருக்கின்றார்கள் குறிப்பாக குடும்பம் எ;ன்ற கட்டமைப்புகளையெல்லாம் யுத்தம் சிதைத்து விட்டது. இதுவரைகாலமும் அவர்களுக்கு இருந்து வந்த குடும்ப அணைப்பு சமூகப்பாதுகாப்பு ஆண்உழைப்பாளிகளின் ஆதரவு எல்லாமே நொடிப்பொழுதுகளில் அவர்கள் வாழ்வை விட்டகன்றன அங்கு உதித்த புதிய வாழ்க்கைக்கு எமது பெண்கள் தயாராக இருக்கவில்லை. இதனால் தமது குடும்கங்களுக்குத் தேவையான பொருளாதாரத்தளங்களை அமைப்பது முதல் அவர்கள் பிள்ளைகளின் உளத்தேவைகளைக் கவனிப்பது வரை பலவிதமான பாத்திரங்களை தனியாட்களாக வகிக்க முயன்று தத்ததளித்துக் கொண்டிருக்கின்;றனர்

இவர்கள் குடும்பத்தின் வருமானம் ஈட்டவேண்டிய பாரிய பொறுப்பு சுமத்தப்படுவதால் தங்களின் இயலுமைக்கேற்ற தொழிலை தேடிக்கொள்கின்றனர் குறிப்பாக வீட்டு வேலை , கூலித்தொழில் போன்ற முதலீடுகள் இல்லாத தொழில்களை மேற்கொள்கின்றர்கள்.; இதனால் போதிய வருமானம் ஈட்ட முடியாத நிலையினால் அவர்களது குடும்பம் மேலும் வறுமைநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது இது மட்டுமின்றி இவர்கள் பல்வேறு பட்ட பாலியல் தோந்தரவுகள், பாலியல் சுரண்டல்களுக்கும் முகம்கொடுக்கின்றார்கள்

மேலும் யுத்தசூழ்நிலையின் போது கணிசமான பெண்களின் கணவன்மார் கடத்தப்பட்டும் காணமல்போயும் உள்ளதால் இவர்களின் நிலை பற்றி உறுதியாக தெரியாதும் உள்ளதால் இவர்களுக்கான இறப்பு சான்றுதல் பெறுவதி;ல் பாரிய சிக்கலை எதிர்நோக்கியுள்ளார்கள் இதனால் மனைவி தன்னை அடையாளப்படுத்தக்கூட முடியாத நிலையில் உள்ளனர். இவ்வாறன சூழ்நிலையில் தான்பட்ட அனுபவங்களை எம்மோடு பகிரும் எனக்கு வயது 26 எனக்கு 2 பிள்ளைகள் இறுதிக்கட்டயுத்தத்தில் காயப்பட்டு புல்மோட்டைக்கு கொண்டு வந்த எனது கணவர் இன்று வரை எந்தவித தகவல்களும் இல்லை பிள்ளைகளுடன் நான் தனியாகத்தான் வாழ்கின்றேன். பள்ளிக்கூடத்தில் சமைக்கப்போகின்றேன். கணவனின் நிலைபற்றி தெரியாததால் நான் விதவையா இல்லையா என்பது கூட எனக்கு தெரியாது இதனால் அரசாங்கத்தினால் கிடைக்கும் எந்தவித உதவியும் எனக்கு கிடைக்கவில்லை ஏனைய எந்த உதவிகளும் இன்றி கஸ்டப்பட்டுகொண்டு இருக்கின்றேன் மூத்த பிள்ளை பள்ளிக்கூடம் போகின்றார் நான் அன்றாடம் உழைத்து தான் குடும்பத்தை பார்க்கின்றேன் எனது வாழ்க்கையே இருண்டு போய்விட்டதாக நினைக்கின்றேன். என்னமாதிரியே பல பெண்கள் இங்கு இருக்கின்றார்கள் என்றவாறு தனது நிலையை கூறினார்.

இவ்வாறு பல பெண்கள் தமது அடையாளம் தெரியாத நிலையிலும் மேலும் சமூகப்பாதுகாப்பு இன்றியும் பாதிக்கப்பட்டுள்ளர்கள் என்பது இப்பெண்ணின் அனுபவத்தில் இருந்து புலப்படுகின்றது எனக்கு வயது 32 வன்னியில் “செல்” பட்டு கணவன் காலமானர் எனக்கு 2 பிள்ளைகள் நாங்கள் முகாமில் இருக்கும் போது ஒருவடன் பழக்கம் ஏற்பட்டது என்னையும் பிள்ளைகளையும் பார்த்துக்கொள்வேன் என்று கூறினார் முகாமில் இருக்கும் வரை என்னுடன் இருந்தார் எங்களை ஊருக்கு அனுப்பும் போது எங்களை விட்டு போய்விட்டர் ஊருக்கு வரும் போது நான் 3 மாத கர்ப்பிணி அதன் பின் நான் பட்ட அவமானங்களும் சோதனைகளும் வாய்விட்டு சொல்;;;ல முடியாது தற்போது பிள்ளைக்கு ஒரு வயது இதுவரை பதிவு வைக்கப்படவில்லை. எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை அவமானம் ஒரு புறம்இ பிள்ளையின் எதிர்காலம் பற்றிய கவலை ஒரு புறமாக தவிக்கின்றேன்.ஊருல இருக்கிறவர்கள் எனக்கு உதவியாக இருக்கின்;ற சில ஆண்களால் எனக்கு தொந்தரவு சிலவேளைகளில் இருக்கின்றது.இவரின் மறுமணம் பற்றி கேட்டபோது சரியான துணை அமையும் போது தான்மறுமணம் செய்யமுடியும் எனக் கூறினார் என்னைப்போல் நிர்க்கதியாக நிற்கும் பெண்களுக்கு ஆதரவு தரஒருவரும் இல்லை என்பதால் ஒழுங்கான வருமானம் இன்றி கஸ்டப்பட்டுகொண்டு இருக்கின்றேன் இதுவரைக்கும் எமக்க உதவிசெய்ய யாரும் முன்வரவில்லை என தனது ஆதங்கத்தை கூறினார்.

வேலியே பயிரை மேய்வது” போல் பாதுகாப்பு கொடுக்கவேண்டியவர்களே பெண்களை ஏமாற்றி துஸ்பிரயோகம் செய்யும் அவலநிலை ஏற்பட்டுள்ளது என்பது வேதனையான வெட்கப்படவேண்டிய விடயமாகும்.மேலும் இவ்வாறாக தனித்;து வாழும் பெண்களை பாதுகாக்கவேண்டிய பாரிய பொறுப்பு எமது தமிழ் சமூகத்தின் மேல் சுமத்தப்பட்டுள்ளது இவ்வாறு நிர்க்கதியாக நிற்கும் பெண்களின் சமூகப்பாதுகாப்பை உறுதிசெய்து அவர்களுக்கு பக்க துணையாய் ஆதரவு அளிக்கப்பட்டால் மாத்திரமே இவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த முடியும். குறிப்பாக இவர்களின் குழந்தையின் எதிர்காலமும் இதில் தங்கியுள்ளது அவர்களின் கல்வி உடநலம் உளநலம் என்பன அடங்கும் மேலும் ஒருவர் தனது அனுபவத்தை பகிர்கின்றார்
எனக்கு வயது 24 திருமணமாகி ஒரு பிள்ளை கணவன் யுத்தத்தில் இறந்து விட்டார் முகாமில் இருந்து வந்த எனக்கு புதிய இடம் புதிய ஆட்கள் எனக்கு எனது எதிர்காலத்தைப்ற்றிய கவலை தனிமையில் இருந்து யோசிப்பேன் வருமான பெறக்கூடிய தொழில்கள் எதுவும் இல்லை எனக்கு அடிக்கடி உடல்நலம் பாதித்து வைத்தியாசாலைக்கு சென்று மருந்து எடுத்தும் பலன் இல்;;லை இப்போழுது உளநலம்பிரிவில் சிகிச்சை எடுக்கின்றேன் என தன் நிலையை விபரிக்கின்றார்.

உடனடியாக இவர்களின் சமூகப்பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய தேவை எமக்கு உள்ளது இதை செய்யத்தவறும் பட்ச்சத்தில் தமிழ்சமூகம் பாரிய சாவல்களை எதிர்நோக்கவேண்டிய நிலை ஏற்படும் குறிப்;பாக சட்டரீதியான ஆவணங்களை பெற்றுக்கொள்வதிலும் பாதிக்கப்பட்டவர்களின் உளநலனை பேண வேண்டிய நிலையிலும் உள்ளது. மீள்குடியேற்றம் மீள அபிவிருத்தி செய்யும் அதே வேளை இவ்வாறான சமூகப்பிரச்சனைகளிலும் அக்கறை காட்டி விதவைகளின் மறுவாழ்விற்கு வழி செய்ய வேண்டியது எமது கடமையும் சமூகத்தினது கடமையும் ஆகும்.

சமூகமான தன்கொண்டுள்ள கலாச்சார விழுமியங்களை பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எதிரானஆயுதமாக பயன்படுத்தாது அவர்களின் உள உடல் மற்றும் அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கலாச்சார விழுமியங்களில் மாற்றங்களை கொண்டு வருவவே தற்போது தமிழ் சமூகம் செய்யவேண்டிய நடவடிக்கையாகும்.இதன் மூலமே அவர்களையும் சமூகத்தில் இணைத்து வாழும்போது அவர்கள் வாழ்வும் மலரும் இவர்கள் தொடர்பாக தமிழ் சமூகம் எதிர்நோக்கும் சாவல்களும் குறையும்.

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்