புதுக்கோட்டையில் பள்ளி மாணவி அபர்ணா கொலை வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடக் கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுக்கோட்டை டவுன் சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் கலைக்குமார். இவர் புதுக்கோட்டை பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் அபர்ணா(15). இவர் புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.ஸி., படித்து வந்தார்.
கடந்த மார்ச் ஒன்பதாம் தேதி(9-3-11 பிற்பகலில்) வீட்டுக்குள் தனியாக இருந்த மாணவி அபர்ணாவை கழுத்தை நெரித்து படுகொலை செய்த மர்ம நபர்கள் பிணத்தை கயிற்றால் கட்டி தொங்கவிட்ட பின் வீட்டுக்குள் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றனர். மாவட்டம் முழுவதும் பெரும்பரபரப்பை ஏற்படுத்திய இந்த துணிகர சம்பவம் நடந்து ஐந்து மாதமாகியும் இதில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீஸாரால் அடையாளம் காண முடியவில்லை.இதைக் கண்டித்தும், வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் இந்த ஆர்பாட்டம் நடந்தது.
29-7-11 இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மாதர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் நடந்த ஆர்பாட்டத்துக்கு DYFI மாவட்டத் தலைவர் அன்பழகன் தலைமையுரையாற்றினார். மாநில செயலாளர் வேல்முருகன் ஆர்ப்பாட்டத்தை துவக்கிவைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ., லாசர், மாவட்டச் செயலாளர் சின்னத்துரை, நகரச்செயலாளர் கவிவர்மன், மாதர் சங்க மாவட்டத் தலைவர் பூமயில், DYFI மாநிலத் தலைவர் முத்துக்கண்ணன் உட்பட பலர் கண்டன உரையாற்றினர்.ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான சங்க உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
நன்றி - சூரியன் டிவி
0 comments:
Post a Comment