/* up Facebook

Sep 2, 2011

ருசிக்காக நச்சுப் பொருளைச் சேர்ப்பதா? - மருத்துவர் என்.கங்கா


1908ல் டோக்கியோவைச் சேர்ந்த கிகுனே இகடா என்பவரே வாசனைப் பொருளுக்குக் காரணமான குளுடாமிக் அமிலத்தை (Glutamic Acid) கண்டுபிடித்தார். 1956ல் ஜப்பானைச் சேர்ந்த அஜினோமோட்டோ என்ற கம்பெனி இதை வியாபார ரீதியாக தயாரிக்க ஆரம்பித்தது. அன்று முதல் போட்டோ காப்பி, Xerox என்ற கம்பெனி பெயருடன் தவறாக அழைக்கப்படுவது போல MSG அஜினோமோட்டோ என்று நாமகரணம் செய்யப்பட்டு விட்டது.

இதில் 78% லி குளுடாமிக் அமிலம் 22% சோடியம் உள்ளது. குளுடோமேட் என்பது பால், பால் பொருள்கள், கறி, மீன் மற்றும் பல காய்கறிகளில் காணப்படும் ஓர் இயற்கையான அமினோ அமிலம். நமது உடலில் கூட இது உற்பத்தி செய்யப்படுகிறது. நமது மூளை வளர்ச்சிக்குத் தேவையான குளுடதயான் மற்றும் காமா அமினோ புட்ரிக் அமிலம் போன்றவற்றை நமது உடல் தயாரிக்க இது உதவுகிறது. மிகச்சிறு அளவுகளில் இது மூளை நரம்புகள் வேலை செய்ய உதவுகிறது. அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே! MSG மட்டும் விதி விலக்கா என்ன? அதிக அளவில் இதைச் சேர்த்துக் கொண்டால் மூளையின் ஹைப் போ தலாமஸ் என்ற முக்கியமான ஒரு பகுதியை பாதித்து விடுகிறது.

எந்தெந்த பொருள்களில் அதிகம் உள்ளது?

பதப்படுத்தப்பட்ட பல உணவு வகைகள்,

உரங்கள்,

பூச்சிக் கொல்லிகள்,

பயிர் வளர்ச்சி ஊக்கிகள்

சோயா புரதத்தால் தயாரிக்கப்படும் பற்பல பொருள்கள் (உ.ம்) சோயா சாஸ்

கார்ன், மால்ட்

ஈஸ்ட்

பார்லி மால்ட்

சூப் பவுடர்கள்

பல சமயங்களில் உணவில் இது சேர்க்கப்படுகிறது. உணவுப் பொருள்களைப் பதப்படுத்தும் பல முறைகளின் போது (உ.ம்) (Hydrolysis, Enzymalysis, Fermentation) இயற்கையாக வெளியாகி உணவில் தானாக சேருகிறது.

பல வகை (Fast Food) வகைளில் (MSG) சேர்க்கப்படுகிறது! பிட்சா, பர்கர், ப்ரைடு ரைஸ், நூடுல்ஸ் வகை போன்ற நிறைய உணவு வகைகளில் (MSG) சேர்க்கப்படுகிறது. பெரிய ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் முதல் வீதியோரக் கடைகளில் விற்கப்படும் உடனடி உணவுகளில் இது கலக்கப்படுகிறது. வெறும் ருசிக்காக மட்டும்!

மனிதனுக்கு (MSG)யால் ஆபத்தா?

நமது உணவுப் பழக்க வழக்கங்களின் கட்டுப்பாடு நமது மூளையில் உள்ள ஹைபோதாலமஸ் என்ற பகுதியில் உள்ளது. MSGன் வாசனையால் ஹைபோதாலமஸ் தூண்டப்படுகிறது. இன்சுலின், அட்ரினலின் போன்றவை சுரப்பதையும் அதிகப்படுத்துகிறது. இவை அதிகமாக உணவு சாப்பிடத் தூண்டுபவை. எனவே, அதிக உணவால் எடை கூடுகிறது. அடிக்கடி சாப்பிட வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது. மூளையில் சிரோடோனின் என்ற பொருளின் அளவு குறைந்து தலைவலி, மனச்சோர்வு, உடல் சோர்வு மேலும் உணவுக்கு ஏங்குதல் போன்றவை ஏற்படுகிறது. MSG நமது உணவில் உள்ள துத்தநாகத்துடன் சேர்ந்து துத்தநாகம் உடலில் சேர்வதைக் குறைக்கிறது. Zinc குறைபாடு ஏற்படுகிறது. Zinc குறைவால் மூளையில் டோபாமன் அளவு குறைந்து, அதன் விளைவாக, ஞாபக சக்தி குறைந்து, கவனக் குறைவு, திட்டமிட்டு செயல்படும் திறன் குறைவு என்று பட்டியல் நீளுகிறது. அதிகமான குளடாமில் அமிலம் உயிரின் முக்கிய அணுவான DNA என்ற மூலப் பொருளைப் பாதிக்கிறது. இது உடனடியாக நடப்பதில்லை. பாதிப்பின் அறிகுறிகள் வெளிப்படுத்துவதில்லை. மெது மெதுவாக தொடர் பாதிப்பு ஏற்படுகிறது. உடல் எடை அதிகரிப்பு, நடத்தை விபரீதங்கள், கவனக்குறைவு போன்றவை அதிகரிக்கிறது.

MSGயின் தாக்கம் மனிதர்களுக்கு சோதனைச் சாலை எலி போன்றவற்றை விட சுமார் 5 மடங்கு அதிகம்! அதிலும் கருவில் உள்ள சிசுக்களுக்கும், சிறு குழந்தைகளுக்கும் பாதிப்பு மிக அதிகம். தாயின் ரத்தம் மூலம் கருவில் உள்ள குழந்தையின் மூளையைத் தாக்கி மூளை வளர்ச்சியைப் பாதிக்கிறது. தீவிரவாதச் செயல்கள், உணர்ச்சிகள் நிலையில்லாமை, கவனக்குறைவு ஆகியவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

எந்த அளவு MSG பாதுகாப்பானது?

ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இதன் பாதிப்பு வேறுபடுகிறது. பாதிக்கும் அளவு, நேரம் போன்றவையும் வேறுபடுகிறது. MSG கலந்த உணவைச் சாப்பிட்ட சில நிமிடங்கள் முதல் 23 நாட்களுக்குப் பிறகு கூட அறிகுறிகள் ஏற்படலாம்.

வயிற்று வலி, மூட்டு வலி, நாக்கு வீங்குதல் போன்றவை உடனடியாகத் தெரியும். நரம்பு செல்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றன.

அமெரிக்காவின் உணவு மருந்து கட்டுப்பாடு நிறுவனம் (US FDA) தினம் 3 கிராம் வரை MSG பாதுகாப்பானது என்று நிர்ணயித்துள்ளது. ஆனால் சிலருக்கு 1 கிராமுக்கு குறைவாக உணவில் சேர்த்தாலே நச்சு அறிகுறிகள் வெளிப்படுகின்றன.

1968ம் ஆண்டு சீனாவிலிருந்து வெளியான ஒரு மருத்துவக் குறிப்புதான் MSGன் நச்சுத் தன்மையை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. ஒரு சீன உணவகத்தின் உணவு சாப்பிட்ட 20 நிமிட நேரத்தில் கை, கால்கள் மரத்துப் போய், முகத்தில் ஒரு துடிக்கும் உணர்வு, கழுத்து மற்றும் நெஞ்சில் வலியோடு ஒரு பிடிப்பு ஏற்பட்டிருக்கிறது. இவை 2 மணி நேரத்தில் குறைந்து விட்டது. அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் 2 மணி நேரத்தில் நல்ல நிலைமைக்கு வந்து விட்டாலும் ஏதோ ஓர் இனம் தெரியாத பாதிப்பு இருந்ததை உணர்ந்துள்ளார்கள். இதற்கு (Chinese Restaurant Syndrome) என்றே பெயரிடப்பட்டது.

சட்ட ரீதியாக

USFDA இயற்கை வாசனை, பதப்படுத்தப்பட்ட புரதம் அல்லது யீஸ்ட் என்று பெயரிட்டு உபயோகப்படுத்தலாம் என்று அனுமதி அளித்திருப்பது வியப்பைத் தருகிறது MSG என்று லேபிளில் குறிப்பிட வேண்டிய கட்டாயம் இல்லை?

தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரத்தைப் பார்த்து ஆசைக்காக வாங்கி சாப்பிடும் Noodlesல் மிகவும் அதிகமாக MSG உள்ளது. எனவே, குழந்தைகள் இதன் தாக்கத்திற்கு மறைமுகமாக ஆளாகிறார்கள். Fast Food மையங்களில் விற்பனையாகும் அனைத்து உணவு வகைகளிலும் MSG உள்ளது. வாசனை மற்றும் ருசிக்காக அந்த உணவு சாப்பிடும் இன்றைய வளர் இளம்பருவத்தினர் தங்களுக்கு ஏற்படப் போகும் ஆபத்தை உணராமல் ஆடிப்பாடிக் கொண்டு, உண்டு களித்துக் கொணடிருப்பது வேதனைக்குரிய விஷயம். சில நிறுவனங்கள் MSG சேர்க்கப்படாமல் துரித உணவுகளைத் தயாரித்து அதை லேபிளில் குறிப்பிடுகின்றன.

நமது சமூக, பொருளாதார பண்பாட்டு வாழ்க்கை முறையுடன் ஒத்துப் போகும் பற் பல உணவுகளில் வாசனை மற்றும் ருசியை அதிகரிக் கும் பொருட்கள் இருக்கும் போது வீணான, ஆபத்தான ரசாயனப் பொருட்களில் மேல் மோகம் ஏன்? இது தெரிந்தா? தெரியாமலா? இதன் விளைவு? நம் எதிர்காலச் சந்ததியினரின் ஆரோக்கியத்துக்கு ஆபத்து என்பதை எல்லோரும் உணர வேண்டும். குறிப்பாக, உணவுப் பொருட்கள் தயாரிப்பவர், உணவு வகைகளை விற்பவர்கள் சிந்திக்க வேண்டும்.

Let your food be your medicine என்கிறார் ஹிப்போகிரடிஸ்.

சிந்திப்போம், செயல்படுவோம்!

நன்றி - கீற்று

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்