/* up Facebook

Jun 15, 2011

மன்னிப்பை யாசித்துக் கொண்டு…….. - நடேசன்


நமக்குத் தெரிந்த காலங்களில் நடந்த ஆயுதப்போராட்டங்களில் பெண்களின் பங்கு மிகக்குறைவாக இருக்கும். பாலஸ்தீனம், வியட்னாம் போராட்டங்களில் ஆண்களுக்கு பெண்களின் பக்கபலம் இருந்தாலும் ஒரு சில உதவியான பங்கேற்பாக மட்டுமே இருந்தது. காரணம் சமூகத்தின் உற்பத்தியும் உருவாக்கமும் பெண்களில் இருந்து தொடங்குவதால் பெண்கள் நேரடி அழிவில் இருந்து காலம் காலமாக பாதுகாக்கப்பட்டனர்.

இலங்கைத் தமிழ் போராட்ட இயக்கங்களில் ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியும் ஆரம்பத்தில் பெண்களை அவர்களின் விருப்பத்துடன் உள்வாங்கியபோது மற்ற இயக்கத்தினரால் விமர்சி;க்கபட்டது. ஆனால் அந்த இயக்கம் விடுதலைப்புலிகளால் அழிக்கப்பட்டபோது அந்தப் பெண்களை அந்த இயக்கத்திலிருந்த பலர் திருமணம் செய்தார்கள். இவர்களில் ஏராளமானவர்கள் வெளிநாடுகளில் தஞ்சமடைந்து வாழுகிறார்கள். அவர்களை என்னால் நட்புடன்; பார்க்;க முடிந்தது. ஆனால் இப்பொழுது விடுதலைப் புலி இயக்க பெண்களை பார்க்கும் போது அந்த ஈழ மக்கள் புரட்சிகர முன்னணி இயக்கத்தின் ஆண் தோழர்களை மரியாதையுடன் நினைத்துப் பார்க்கிறேன். பத்மநாபாவின் தலைமையில் வளர்ந்ததால் அந்த இயக்கத் தோழர்களுக்கு தோழமை உணர்வும் பெண்களுடன் பழகும் இயல்பும் வளர்க்கப்பட்டது.

90 களின் பின் விருப்பத்தின பேரிலும் பலாத்காரமாகவும் விடுதலைப்புலிகள் பலதரப்பட்ட வயதுப் பெண்களையும் சேர்த்துக்கொண்டபோது ஆண்கள் பெண்களிடம் எந்தவிதமான புரிந்துணர்வையும் வளர்க்கவில்லை. பெண்களை நடமாடும் கொலைக்கருவிகளாக உருவாக்கியது மட்டும்தான் நடந்தது. தற்கொலை அல்லது மற்றவரை கொலை செய்தல் ஆகிய இரண்டு தொழிலுக்கு மட்டுமே தயாராக்கப்பட்டார்கள்

இப்படியாக நடேசன், இளம்பரிதி போன்றவர்களால் பிடிக்கப்பட்டு கொலைக்கருவிகளான பொட்டன் போன்றவர்களால் உருவாக்கப்பட்ட பெண்களைப் பற்றி கேள்விப்பட்டதும் எனக்கு அதிரச்;சியாக இருந்தது. இப்பெண்களில் பலர் போரற்ற இக்காலத்தில் நிர்க்கதியான மனநிலையுடன் சமூகத்தின் விளிம்பில் வாழுகிறார்கள்

விடுதலைப் புலிகளுக்கு இவ்வளவுகாலமும் ஆயுத உதவி செய்த அறிவுக் கொழுந்துகளுக்கும் இன்னும் பணம் சேகரிக்கும் பாதர் இம்மானுவேல் ;போன்றவர்களுக்கும் வாழ்கையில் வேலை ஏதும் செய்யாது மக்கள் பணத்தில் நாடு கடந்த ஈழம் கோரும் ஆதரவாளர்களுக்கும் இன்னும் தமிழ்தேசியத்தை கொண்டலையும் தமிழ் ஊடக குஞ்சுகளுக்கும் நான் குறிப்பிடும் இந்தத் தகவல்கள் சமரப்;பணம்.

யாழ்ப்பாணத்தில் நான் சந்தித்த ஊடகவியலாளர் சொன்னது.

வெளிநாட்டில் இருந்து ஒருவர் சாவகச்சேரியில் உள்ள மீள்குடியேற்றப்பட்ட பெண் விடுதலைப்புலி உறுப்பினரை சந்திக்க சென்றபோது அந்தப் பெண் அவசரமாக வெளியே வந்து ‘ஏன் தயங்குகிறீர்கள்? உள்ளே வாருங்கள். இதற்குத்தான் எல்லோரும் வருவது’ என்றாராம்

வந்தவர் மேலும் தயங்கியதைப் பார்த்து விட்டு அந்தப் பெண் மீண்டும், ‘எல்லோரும் இதற்குத்தானே வாரது. நீங்கள் அப்பா அனுப்பிய ஆள்தானே.’ என்றாராம்.

‘இல்லை. நான் வெளிநாட்டில் இருந்து வந்தனான். இங்கே மீள் குடியேற்றப்பட்டவர்கள் இருப்பதாக அறிந்து என்னால் முடிந்த உதவியை செய்யவந்தனான்’ என்றார் வெளிநாட்டிலிருந்து வந்தவர்.

“என்னை மன்னிக்கவும். நான் உங்களை வேறு நோக்கத்துடன் வந்தவராக நினைத்தேன். என்னை மன்னித்து கொள்ளவும்” எனக்கூறிய படி அந்த இளம் பெண் அழத்தொடங்கினாள.; அவளது கையில் சில ரூபாய் நோட்டுகளை திணித்து விட்டு அந்த வெளிநாட்டு நபர் சங்கடத்துடன் வெளியேறினார்.

எனது நண்பர் சூரியகுமார் பொறியியலாளர் . இலண்டனில் இருந்து இலங்கைக்கு சென்று கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக அங்கிருந்து தன்னால் முடிந்த பணிகளைச்செய்கின்றார்

நெடுத்தீவில் ஒரு அரசியல்கூட்டம் நடந்த போது இவரும் போனார் . கூட்டம்
நடந்த போது சிறிது தூரத்தில் ஒரு இளம்பெண் கவலையோடு கைத்தடியுடன் இருந்தாள். அந்தப் பெண்ணை அருகில் சென்று பாரத்;தபோது இரண்டு கால்களும் இல்லை என்பது சல்வார் கமிசுக்குகீழ் தெரிந்த பொய்பாதங்களில்; தெரிந்தது.
என்ன என விசாரித்த போது இயக்கத்தில் இருந்தகாலத்தில் கால்களை இழந்தேன். இப்பொழுது வேலை எதுவும் இல்லை. மிகவும் துன்பப்படுகிறேன். எனச்சொன்னார்.

நண்பர் சூரியகுமார் பதினைந்து கடைகளில் ஏறி அந்தப்பெண்ணுக்கு வேலை தேடியபோது ஒரு யாழ்பாண மருந்துச் சாலை உரிமையாளர் ‘ஊன்;று கோல் இல்லாமல் வேலைக்கு வரவேண்டும்; என நிபந்தனை வைத்தார்.

அந்த நிபந்தனைக்கு ஏற்ப அந்தப் பெண் வேலைக்குச் சேர்ந்தாள். ஆனால் மூன்று மாதத்தில் வேலையை விட்டுவிட்டு மீண்டும் நெடுந்தீவுக்கு சென்று விட்டாள்.

மீண்டும் அவளைச்சந்தித்து விசாரித்த போது இரண்டாயிரம் ரூபாய் மாதம் தந்தார்கள் . அதில் யாழ்ப்;பாணத்தில் வசிக்க முடியாது. எனவே ஊருக்கு வந்து விட்டேன் என்றாள் அந்தப் பெண்

யாழ்ப்பாணத்துக்கு போகும் வழியில் வவுனியாவில் உயர் இராணுவ புலன் விசாரணை அதிகாரியை சந்தித்தபோது அவர் சொன்னார்:-

‘டொக்டர் நாங்கள் பெரிய மனிதாபிமான பிரச்சினையொன்றிற்கு முகம் கொடுக்கிறேம். எமக்கு உதவமுடியுமா?’

‘சொல்லுங்கள்’

‘யாழ்ப்பாணம் வவுனியா இவை இரண்டும் இராணுவ வீரர்கள் வந்து இறங்கி மீண்டும் தெற்கு நோக்கிச் செல்லும் பிரதான நகரங்கள். இங்கே விபசாரத்தொழிலில் தவிர்க்கமுடியாமல் ஈடுபடும் பெண்கள் பற்றிய தகவல்கள் வந்துள்ளன. இவர்களில் பலர் சரணடைந்து விடுவிக்கப்பட்டவர்கள் என்பதுதான் கவலைக்குரியது.

‘இவர்களை நீங்கள், ஏன் அழைத்து விசாரணை செய்ய முடியாது?’

இராணுவ வீரர்களின் உடல் ஆரோக்கியத்தை கவனிப்;பதும் அவர்கள் ஊடாக இராணுவ இரகசியங்கள் வெளியேறாமல் பார்ப்;பதும்தான் எமது முக்கிய பணிகள். .மேலும் இந்தப் பெண்களை விசாரணை செய்வதன் மூலம் எம்மால் என்ன செய்யமுடியும்? . இவர்கள் தமது வாழ்க்கையை நடத்துவதற்காக இதைச்செய்கிறார்கள்.’ இவர்களைப்பற்றிய சகல விபரங்களும் தர முடியும்.

பெண்கள் விடயமானதால் மற்றவர்ளுடன் கலந்து பேசிப்பார்க்கிறேன் எனக் கூறிவிட்டு கனத்த இதயத்துடன் அந்த இராணுவ அதிகாரியிடம் இருந்து விடைபெற்றேன்

கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக சென்னையில் அகதிகளுக்கு சேவை செய்யும் செல்வநாயகம் சந்திரகாசன் அவர்களை யாழ்ப்;பாணம் அரசாங்க அதிபரின் காரியாலயத்தில் தற்செயலாக சந்தித்தபோது இதைப்பற்றி பிரஸ்தாபித்தேன்.

அவர் சொன்னார். அந்தப்பெண்களுக்கான நிவாரணப்பணிகளை மிகுந்த அவதானத்துடன் செய்யவேண்டும். தனிப்பட்டவர்களை விளம்பரப்படுத்தாமல் இதை செய்யவேண்டும். அவர்களுடைய சீவியத்துக்குக்கு உதவி செய்யும் போது அவர்களுக்கான தொழில் பயிற்சிகளை வழங்கலாம். அத்தகைய மனிதாபிமானப்பணிகளின்; மூலமே அவர்களை மீட்க முடியம.;

நான் அறிந்த இந்த விடயங்களை வெளிபடுத்துவது சரியா? தவறா? இல்லையா என்று எனக்குள் பலதடவைகள் கேட்டுவிட்டுதான் இந்த விடயத்தை எழுதுகிறேன்.

இந்த ஈழ ஆயுதப் போராட்டம் முடிவுக்குவந்தது பலருக்கு துன்பமாக இருக்கிறது. தொடர்ச்;சியாக மாதம் மூவாயிரம் டொலர் பெற்றுக்கொண்டு விடுதலைப்புலிகளுக்கு பணம் சேகரித்தவர்களும் பின்னர், சேகரித்த பணத்தில் இருபது வீதம் எடுத்தவர்களுமாக பொதுப்பணத்தில் வாழ்ந்த பலருக்கு இந்த போர் இல்லாதது பெருங்குறை. தூரத்து இடி முழக்கமாக இதைப் பார்த்து ஈழத்தமிழன் புறநானூறு படைக்கிறான் என தங்களுக்குள் புல்லரித்துக்கொண்ட மற்றவர்களையும் உசுப்பேத்திக் கொண்டிருக்கும் தென் இந்திய அரசியல்வாதிகள், கவிஞர்களுக்கு இத்தகவல்களை கொண்டு செல்ல வேறுவழியில்லை.

பாதிக்கப்பட்ட பெண்களின் நிலையை வெளி உலகத்திற்குத் தெரிவிக்க வேறுவழி இல்லாமல் இந்த விடயத்தை எழுதுகிறேன் அவர்களிடம் ஆத்ம ரீதியாக மன்னிப்பை யாசித்துக் கொண்டு.

ஏதாவது உதவி மற்றும் ஆலோசனைகளுக்கு எனது மின்னஞ்சல்

uthayam@optusnet.com.au

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்