/* up Facebook

Jun 14, 2011

பொஸ்னியாவை போல இலங்கையிலும் போரின் போது பெண்கள் மீது துஸ்பிரயோகம் : போல் நியூமன்


பொஸ்னியாவை போன்று இலங்கையிலும் பெண்கள் போரின் போது பிரதான இலக்குகளாக துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக நியூமேன் என்பவர் தெரிவித்துள்ளார்.

போல் நியூமேன், இலங்கையின் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்தோர் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பிலான பெங்களுர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த கலாநிதியாவார்.

அத்துடன், இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற நிரந்தர தீர்ப்பாயத்தின் நான்கு பேச்சாளர்களில் ஒருவருமாவார்.

எனினும் உலக நாடுகள், இலங்கையின் வடக்கு கிழக்கில் பெண்கள் மீது படையினரால் மேற்கொள்ளப்பட்ட துஸ்பிரயோகங்களை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று நியூமன் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு தமது அறிக்கையில் இலங்கைப் படையினர் இறுதி யுத்தத்தின் போது பொதுமக்களை குறிப்பாக பெண்களை காப்பாற்ற தவறிவிட்டது என்பதை சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்காக போரின் போது பெண்கள் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டமையை அது குறிப்பிட்டுள்ளது.

எனினும் இலங்கையின் அதிகாரிகள் இந்த செய்திகளை பொய்யானது. அடிப்படையற்றது என்று கூறிவருகின்றனர்.

இலங்கையில் முன்னர் இடம்பெற்ற இனமுறுகல் மற்றும் வன்முறை சம்பவங்களை கொண்டு புதிய பாடங்களை கற்றுக்கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ள நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு பெண்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இதன்போது சரணடைந்தவர்கள் குறிப்பாக பெண்கள் பலர் காணாமல் போனதாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற போர் காரணமாக சுமார் 80 வீதமான பெண்களும் சிறுவர்களுமே பாதிக்கப்பட்டனர்.

இதேவேளை, விசாரணைகளை மேற்கொண்டு வரும் நல்லிணக்க ஆணைக்குழுவிலும் 8 ஆண்கள் இருக்கும் நிலையில் ஒரு பெண் மாத்திரமே அங்கம் வகிப்பதாக போல் நியூமன் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே அந்தக்குழுவால் பெண்களின் பாதிப்புக்களை புரிந்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பவதே அவரின் வாதமாக அமைந்துள்ளது.

பிரித்தானிய செனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய போர்க்குற்ற காட்சிகளின் போது பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் மதிப்பீட்டின்படி வடக்கு, கிழக்கில் மாத்திரம் 90 ஆயிரம் தமிழ்ப்பெண்கள் கணவர்மாரை இழந்துள்ளனர்.

இதன் காரணமாக அவர்கள் ஆண்கள் மேற்கொள்ளும் கடினமான பணிகளை மேற்கொண்டு தமது குழந்தைகளை காப்பாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை தவிர, வடக்கு, கிழக்கின் குடிப்பரம்பலை மாற்றுவதற்காக, சிங்கள படைவீரர்கள் இளம் தமிழ் யுவதிகளை திருமணம் செய்ய அரசாங்கம் ஊக்கமளித்து வருகிறது.

இது பொஸ்னியாவிலும் மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன் தாய்லாந்தை போன்று சுற்றுலாத்தலங்களை தமிழர் பிரதேசமான வடக்கிலும் அமைக்க அரசாங்கம் முயற்சித்து வருகிறது.

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிப் பெண்களையும் ஆண்களையும் தொடர்ந்தும் இலங்கைப் படையினர் அவர்களின் வீடுகளுக்கு சென்று கிரமமாக அவதானித்து வருகின்றனர்.

புனர்வாழ்வுக்கு பின்னரும் அவர்கள் முன்னாள் போராளிகள் என்ற முத்திரை குத்தப்பட்டு இந்த அவதானிப்பு இடம்பெற்று வருகிறது.

இந்தநிலையில் இவ்வாறான சம்பவங்களை விசாரணை செய்ய இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை பொறிமுறை தேவை என்று போல் நியூமன் வலியுறுத்தியுள்ளார்.
நன்றி - தமிழ்வின்

1 comments:

சூர்யகதிர் said...

Please see the link below.

http://www.channel4.com/programmes/sri-lankas-killing-fields/4od#3200170

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்